ஏழைங்கன்னாலே நெம்ம தமிழ்சினிமா காரவீகளுக்குத்தான் ரொம்ப பிரியம். எப்படியாவது அவங்க கண்ணீர தொடச்சி அவங்க வாழ்க்கைல ஒரு டார்ச் லைட்டையாவது அடிக்கோணும்னு ரெம்ப காலமா கஷ்டப்பட்டுகிட்டு இருக்காங்க. அறுபது வருஷத்துக்கு மொன்னால வந்த மலைகள்ளன்ல தொடங்கி ரெண்டு வருஷம் முன்னால வந்த சிவாஜி வரைக்கும் ஏழைங்க ஏன் ஏழைங்களா இருக்காங்கனு சொல்லிட்டே இருக்காங்க. இந்த ஏழைங்களுக்கு பிலிம் காட்டியே பல சினிமாக்காரங்க பணக்காரங்க ஆகிருக்காங்க.
அந்த வரிசைல நேத்தும் ஒரு படம் ரிலீஸாகிருக்கு. கந்தசாமி. கறுப்பு பணத்தையெல்லாம் கொண்டு போய் வெளிநாட்டுல பதுக்கி வக்கிறாங்க அதான் இந்தியா ஏழை நாடா இருக்கு. அதெயல்லாம் இங்க கொண்டு வந்துட்டா போதும் எல்லாஞ்சரியாகிடுமாம். பணக்காரங்க கிட்ட இருக்கற காசெல்லாம் ஏழைக்கு கிடைச்சிட்டா போதும் நாட்டுல எல்லாரும் சமம்தானு தாணு பல நூறு கோடி செலவளிச்சு சொல்லிருக்காரு. பாவம் தாணு பரம ஏழை போலருக்கு.
ச்சே என்னே உயர்ந்த உள்ளம். ஏழைங்க மேல என்னே பரிவு.. ச்ச்ச்சுச்சுசுசுசு..
ஒரே இஸ்கூல்ல படிச்ச பயலுவ வேற வேற அரசாங்க உத்தியோகத்தில இருந்துகிட்டு அது மூலமா நாட்டையே ஆட்டிப்படைக்கிற பெரிய பணக்காரங்க... ஓகே ஓகே கூல் நீங்க ரமணானு மனசுக்குள்ள நினைக்கிற எனக்கு கேக்குது. அதேதான்.
அந்த பணக்காரங்க கிட்டருந்து எடுத்த காச ஏழை மக்களுக்கு குடுக்கறாரு. அதுக்கு டெக்னிக் என்னானா போருர் முருகன் கோயில் மரத்துல உங்க கொறைய எழுதி போட்டா போதும். கந்தசாமி உங்க பிரச்சனைய சோல்வ்,... ஓகே ஓகே கூல் இது அந்நியன் மாதிரி இருக்கா.. அதான் இல்ல ஏன்னா அதுல வெப்சைட்ல போடுவாங்க இதுல கைல எழுதி மரத்துல கட்டுவாங்க டிபரன்ஸ் புரியுதா!
அப்புறம் ஸ்பைடர்மான்,பேட்மான் அதாங்க சிலந்தி மனிதன் , வௌவால் மனிதன் மாதிரி இவரு ஒரு சேவல்மான் (COCK-MAN ). இங்கிலீசுல சொன்னா அமெரிக்காகாரன் சிரிப்பான். விக்ரம் சேவலாட்டமே கொக்கரக்கோனு நல்லா காமெடியா பண்றாரு.. லேடீஸ் கெட்டப்ல வந்து டேன்ஸ்லாம் ஆடறாரு. நடிக்கதான் அவ்ளோவா வாய்ப்பில்ல. சும்மா விக்ரம் நிறைய உழைச்சாருனா என்னத்தா உழைச்சாருனுதான் தெரியல. ஒரு வேள நாலு வருஷம் ஒரு படத்தில நடிக்கறதுக்கு பேரு உழைப்பாருக்கும் போல.
சுரேயானு ஒரு பொம்மனாட்டி. நல்லா படம் பூரா பாப் கட்டிங் பண்ணிகிட்டு நெஞ்சு இடுப்பு வயிறு தொப்புள்னு ஏழைகளுக்கு ஹெல்ப் பண்றாங்க. சாரி ஏழைகளுக்கு ஹெல்ப் பண்ற விக்ரம லவ் பண்றாங்க. ஆனா பாவம் அவங்களயும் அவங்க குரலையும் சிங்க் பண்ணா ஏதோ பிளஸ்டூ பையன கூட்டியாந்து லேடிஸ் வேசம் போட்டு நடிக்க வச்ச மாதிரி இருக்கு.
சுசி கணேசன் சின்னதா ஒரு பாத்திரத்தில வராரு. சின்ன பாத்திரம்னா கிண்ணம் , ஸ்பூன் , டம்ளர் மாதிரி. பாவம்!
வடிவேலு எப்பவும் போல நல்லா அடிவாங்குறாரு. பாவமா இருக்கு.
அவரோட இயக்கம்? அவருக்கு படம் எடுக்கவரலைனு எவன் சொன்னான். அவருக்கு படம் எடுக்க வரும் ஆனா வராது. பாவம்ங்க கொஞ்சம் ஓவரா படம் எடுத்துட்டாரு. மொக்கையா ஒரு கதை , அதுக்கு பல கோடி ரூவா பட்ஜெட்டு. மனசுக்குள்ள ஷங்கருனு...!. அதுக்காக ஷங்கர் படத்தோட கதையவேவா படமா எடுக்கணும். சுசி கணேசன் பாவம்.
படம் பூரா கேமரா நம்ம முகத்தில பிளாஷ் அடிச்சுகிட்டே கிடக்குற எஃபெக்ட்டு. எடிட்டிங்னு ஒரேடியா ஒரு ஒரு சீனையும் ஓவரா எடிட்டிடாடய்ங்க போல. ஆனாலும் பின்னாடி சீட்டு ஆயாவுக்கு கண்ணு அவிஞ்சி போற அளவுக்கா. பாவம்யா மக்க பொழச்சு போகட்டும் விட்டுருங்க!
படம் பூரா செம மியூஜிக். தேவி சிரி பிரசாத் நல்லா பண்ணிருக்காப்ல. ஆனா வேற படத்துக்கு இப்படி பண்ணிருக்கலாம். இந்த படத்துல இது ஓட்டல.
போனவாரம் உலகப்படம் பார்த்து கெட்டுப்போன ஒருத்தர் படம் பாத்து நொந்தேன். இந்தவாரம் ஹாலிவுட் படம் பார்த்து கெட்டுப்போன ஒருத்தர் படம் பார்த்து... ம்ம் விதி வலியது.
படம் பார்த்துட்டு வெளிய வரும்போது கேர்ள்பிரண்டு திட்டிகிட்டே வந்துச்சு. ஏன்மா இப்படி திட்ற பாவம் எவ்ளோ காசு செலவழிச்சு கஷ்டப்பட்டு உழைச்சு படம் எடுத்துருக்காய்ங்கனு சொன்னேன். உழைச்சிட்டா போதுமானு கேட்டா..! ஐயாம் கப்சிப்.
இதே ரேஞ்சுல இன்னும் மூணே படம். தமிழ்சினிமாவ ஆண்டவானலயும் காப்பத்த முடியாது. அம்புட்டுதான்.
கந்தசாமி - ஹிஹி.. பாவம் தாணு!
பின் குறிப்பு - மத்தபடி கலைப்புலி தாணுவுக்கு எங்கருந்துதான் இவ்ளோ பணம் வருதோ தெரியல. எவ்ளோ அடி வாங்குனாலும் தாங்குறாரு. ஏற்கனவே பல பேருகிட்ட வாங்கியும் புத்தியில்லாத மனுசன். ரொம்ப்ப்ப்ப்ப நல்லவரு போல.. ம்ம்..
23 comments:
/
போருர் முருகன் கோயில் மரத்துல உங்க கொறைய எழுதி போட்டா போதும். கந்தசாமி உங்க பிரச்சனைய சோல்வ்,... ஓகே ஓகே கூல் இது அந்நியன் மாதிரி இருக்கா.. அதான் இல்ல ஏன்னா அதுல வெப்சைட்ல போடுவாங்க இதுல கைல எழுதி மரத்துல கட்டுவாங்க டிபரன்ஸ் புரியுதா!
/
இப்ப புரிஞ்சது, இப்ப புரிஞ்சது
:)))))))))
கமல் வச்ச ஆப்பிலேயே காணமல் போயிடுவாருன்னு பார்த்தால், நீங்க சொல்றபடி எவ்வளவு அடிச்சாலும் தாங்குற நல்லவர்தான் போல ... ;)
உங்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்( அடுத்து ஆயிரத்தில் ஒருவன் பார்த்து கோடியில் ஒருவன் போல நொந்து போங்க)
உங்களைப் போல ஒருவன்
கந்தசாமி பார்த்து ரெம்ப நொந்த சாமி ஆகிட்டீங்க போல இருக்கு. அப்பிடியே நம்ம வலைபதிவு பக்கம் வந்தீங்கன்னா Inglourious Bastards பத்தி பதிவு எழுதியிருக்கேன். வந்து படிச்சு பாருங்க பாஸ்... நல்ல வேலை. 12 டாலர் மிச்சம்...
thaanuva paavamnnu neenga solla koduththeengale oru vela athuthaan avara vizaama kaappaaththuthu..... panam
உங்களுக்கு என் பதில் http://sshathiesh.blogspot.com/2009/08/blog-post_21.html
எக்ஸ்கியுஸ் மீ மிஸ்டர் நொந்தசாமி , சரக்கு அடிக்கலாம் கம் வித் மீ. ஹாட்டோ பீரோ நீங்களே காசு கொடுத்திடுங்க
நெஸ்ட்டு ஆதவன் வருது.. அதுவும் மொக்கையா தாண் இருக்கும்னு எதிர்பார்க்குறேன்... விமர்சனங்கள் தான் இன்னைக்கு ஹாட்டா?
//சுசி கணேசன் சின்னதா ஒரு பாத்திரத்தில வராரு. சின்ன பாத்திரம்னா கிண்ணம் , ஸ்பூன் , டம்ளர் மாதிரி. பாவம்!//
ஹைய்யோ ஹைய்யோ....இது டாப்:-))))
போரூர் எங்கேப்பா இருக்கு? குறை எழுதிக் கட்டலாமுன்னு இருக்கேன்... முதல்லே இதமாதிரிப் படங்கள் எடுக்கறதை நிப்பாட்டுங்கன்னு.
//வெளிய வரும்போது கேர்ள்பிரண்டு திட்டிகிட்டே வந்துச்சு.//
யாரோட கேர்ள்பிரண்டு?!!!
http://blogeswari.blogspot.com/2009/08/kandasamy.html
kozhai saami
தாணுவுக்கு பணம் எங்கயிருந்து வருதுன்னு உங்களுக்கு உண்மையிலேயே தெரியாமத்தான் கேக்கறீங்களா......புலியைபபத்தி சிங்கம் போல் கர்ஜிக்கும் அந்த உயரமான அரசியல்வாதியின் துட்டு தான் என்று உலகமே பேசுதே சாமி
தாணுவுக்கு பணம் எங்கயிருந்து வருதுன்னு உங்களுக்கு உண்மையிலேயே தெரியாமத்தான் கேக்கறீங்களா......புலியைபபத்தி சிங்கம் போல் கர்ஜிக்கும் அந்த உயரமான அரசியல்வாதியின் துட்டு தான் என்று உலகமே பேசுதே சாமி
//மத்தபடி கலைப்புலி தாணுவுக்கு எங்கருந்துதான் இவ்ளோ பணம் வருதோ தெரியல. எவ்ளோ அடி வாங்குனாலும் தாங்குறாரு. ஏற்கனவே பல பேருகிட்ட வாங்கியும் புத்தியில்லாத மனுசன். ரொம்ப்ப்ப்ப்ப நல்லவரு போல.. ம்ம்.. //
"தாணு பாவம்! அவர் பாவம்! இவர் பாவம்!" இப்படி சொல்லி சொல்லி பாவப் பட்ட கூட்டம்தான் நமது கூட்டம்.
சொல்லப் போனால் இவர்களில் யாருமே பாவம் இல்லை.
இவர்கள் போட்ட பணம் எல்லாமே இங்கிருந்துதான் எடுக்கப் பட்டது.
மேலும் இன்றைய தேதியில் உள்ள சந்தை பிரமாண்ட வீச்சின் அடிப்படையில் பார்க்கும் போது, படத்தின் வசூல் செலவை விட குறைவாக இருக்கும் என்று எடுத்த எடுப்பிலேயே சொல்ல முடியாது. ஏகப்பட்ட ப்ரிண்டுகளின் உபயத்தால், சில நாட்கள் படம் ஓடினால் கூட, அதுவும் தியேட்டரில் பாதி கூட்டம் மட்டுமே இருந்தாலும் கூட ஏராளமான வசூல் உண்டு. முதல் வாரம் 40-50 சதவீதம் வசூல் இருந்தாலே மும்பையில் அது ஒரு பெரிய ஹிட் படம்.
மேலும் பெரிய அளவில் நஷ்டப் படுபவர்கள் சினிமா துறையில் அடுத்த படமெல்லாம் எடுக்க முடியாது. எதிர்பார்த்த லாபம் கிடைக்க வில்லை என்று வேண்டுமானால் குறைபட்டு கொள்ளலாம். அவ்வளவுதான்.
உண்மையில் பாவப் பட்ட ஜனங்கள் யார் தெரியுமா?
இவர் படம் நன்றாக இருக்கும் என்று, (இன்றைய விலைவாசியில் ஏகப் பட்ட பணம் செலவு பண்ணிக் கொண்டு) படம் பார்க்கும் ரசிகர்கள்தான்.
ரசிகர்களாவது சில முறை தப்பித்து விடுகிறார்கள்.
ரசிகர்களை விட பாவப் பட்ட ஜனங்கள் யார் தெரியுமா?
இன்று தமிழ் படங்கள் இருக்கும் நிலைமையில், ஒவ்வொரு படத்தையும் கண்டிப்பாக பார்த்து அதுவும் முதல் நாளே பார்த்து, அவற்றை பற்றி விமர்சனம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ள திரை விமர்சகர்கள்தான் எல்லாரையும் விட பாவப் பட்ட ஜனங்கள்..
அதே சமயம் திரை விமர்சகர்கள் ஒரு வகையில் பாராட்டப் பட வேண்டியவர்கள்.
பலரது கைகாசையும் மிச்சப் படுத்துகின்றனரே?
மிக்க நன்றி.
:-)
கந்தசாமி அதிரடியான அழகான அதிவேகமான காதலுடைய கதையுடைய கருத்துடைய சூப்பர் ஹிட் திரைப்படம்
இதெல்லாம் டூபே கந்தசாமி பிலோபே
//ரசிகர்களை விட பாவப் பட்ட ஜனங்கள் யார் தெரியுமா?
இன்று தமிழ் படங்கள் இருக்கும் நிலைமையில், ஒவ்வொரு படத்தையும் கண்டிப்பாக பார்த்து அதுவும் முதல் நாளே பார்த்து, அவற்றை பற்றி விமர்சனம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ள திரை விமர்சகர்கள்தான் எல்லாரையும் விட பாவப் பட்ட ஜனங்கள்.. //
இப்ப நீங்க என்ன சொல்றீங்க
//அதே சமயம் திரை விமர்சகர்கள் ஒரு வகையில் பாராட்டப் பட வேண்டியவர்கள்.
பலரது கைகாசையும் மிச்சப் படுத்துகின்றனரே?//
சரி சரி
கீச்சிட்ட தல.. சூப்பரு..
சத்தியமா சூப்பர் உண்மையான மெட்டர் நீங்க சொன்னது தான் என் மனசிலும் பட்டது நீங்க நல்லா நகைச்சுவையாவே சொல்லிடிங்க என்ன செய்ய பார்த்துட்டு நொந்து போனேன்... ஓவர் லைடிங் எடிடிங் எல்லா காட்சியிலும் சில காட்சியில் வெள்ளை கலர் அப்படி ஓவர் பிரைட்...
சங்கர் மாதிரி செய்யுறேனு ... இப்படியா அடுத்தவர் காசுல மஞ்ச குளிக்கிறது இயக்குனர் அவ்ங்க சொந்த காரங்க பார்த்து பெருமை பட அவருக்கும் அந்த பிளையிட்ல பிசினஸ் கிளாஸ் சீன்ஸ் வெஸ்ட் ஆப் நம்ம மணி
ஆமா சுசி நைட்டோடு நைட்டு உட்காந்து ஒரு பேட்மேன் படம் பார்த்த சூட்டோட நம்ம முருகன் கந்தசாமியை மையமா வச்சி எடுத்துடாரு
ஒரு திர்ல் இல்லை
//மத்தபடி கலைப்புலி தாணுவுக்கு எங்கருந்துதான் இவ்ளோ பணம் வருதோ தெரியல. எவ்ளோ அடி வாங்குனாலும் தாங்குறாரு. ஏற்கனவே பல பேருகிட்ட வாங்கியும் புத்தியில்லாத மனுசன். ரொம்ப்ப்ப்ப்ப நல்லவரு போல.. ம்ம்.. //
இந்த படம் பார்க்க எனக்கு எங்க இருந்து பணம் வந்தது தெரியுமா?
கொடுமைடா சாமி
tataindiaxenon@gmail.com
Tata Safari Kanthaswamy Contest
participate in kandasamy contest and win free tickets to paris www.safarikanthaswamy.com
//tataindiaxenon@gmail.com
Tata Safari Kanthaswamy Contest
participate in kandasamy contest and win free tickets to paris www.safarikanthaswamy.com//
யாரோ எல்லா பதிவுலேயும் இப்படி தப்பா சொல்றாங்க. நம்பாதீங்க
Padam super! ivar vimarsantha nambatheenga!
Padam super! ivar vimarsantha nambatheenga!
Post a Comment