22 September 2009

ராஜபக்சே புரொடக்சன்ஸ்!ராஜபக்சே புரொடக்சன்ஸ்!


கொழும்பு நகரம். அமைதியாய் இயங்கிக்கொண்டிருக்கிறது. அந்த சராசரி ( காமன் மேன்! ) எப்போதும் போல காய்கறிகள் வாங்கிக்கொண்டு நகரின் மையத்தில் இருக்கும் பலமாடிக்கட்டிடத்தின் மொட்டைமாடியில் அமர்ந்து கொள்கிறான். கமிஷனருக்கு போன் போடுகிறான். ஊருக்குள் பல இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் , அதை நீக்க வேண்டுமானால் தமிழ்தீவிரவாதிகளான குட்டி,ஜெகன், தங்கமணி என்னும் மூவரையும் அவர்களுக்கு வெடிகுண்டு சப்ளை செய்த லசந்தே (சிங்களவர்) ஐயும் உடனடியாக தன்வசம் ஒப்படைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கிறான்.

_______________

____________

__________________

கதையின் நடுவில் என்னவாயிற்று என்று தெரிந்து கொள்ள உன்னைப்போல் ஒருவன் ( கமல் நடித்தது தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்தி ரிமேக் ஒரு முறை பார்க்கவும் )

ஒரு வழியாக பேச்சுவார்த்தை முடிந்து தமிழ்த்தீவிரவாதிகளும் அவர்களுக்கு உதவிய ஒரு சிங்களவனும் காமன் மேனிடம் ஒப்படைக்க ஆளில்ல விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். கூடவே கருணா என்றொரு நல்ல தமிழ் போலீஸும், இன்னொரு நல்ல சிங்கள போலீஸும் உடன் செல்கின்றனர்.

செல்லும் வழியில் கருணாவிடம் ஜெகன், ‘நம்ம இனம் எப்படிலாம் அழிஞ்சுருச்சு.. இனப்படுகொலை பண்றாங்க. இதுவரைக்கு இரண்டு லட்சம் பேர் செத்துட்டாங்க. நம்ம இனத்த அழிச்ச சிங்களவனோட சேர்ந்து எங்கள காட்டிக்குடுத்துட்டியே’’ என்றெல்லாம் வீரவசனம் பேசுகிறார். அமைதியாய் அமர்ந்திருக்கிறான் கருணா. முகம் மட்டும் கடுமையாய் இருக்கிறது.

‘’ஞாபகம் இருக்கா 1983 யூலைப்படுகொலை.. ‘’ என்று தொடர்கிறான் ஜெகன்.

‘’யோவ் அதையே எத்தனை வருஷத்துக்கு சொல்லிட்டு அலைவீங்க வேற ஏதாவது புதுசா சொல்லுங்க ‘’ என்று நக்கலடிக்கிறார் பின்னால் அமர்ந்திருக்கும் காமெடி சிங்களவர். (இந்த இடத்தில் நீங்கள் சிரிக்க வேண்டும் , தியேட்டரில் அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர்.)

கருணா எதுவும் பேசாமல் வருகிறான். கருணா மூவரை காமன்மேன் சொல்லும் வேனில் ஏற்றிவிட்டு ஜெகனை மட்டும் பிடித்து கொள்கிறான். மூவரும் வேன் வெடித்து சாகின்றனர்.
மீதி ஒரு தமிழ்தீவிரவாதி மட்டும் எஞ்சி நிற்கிறான். அவனையும் கொல்லச்சொல்லுகிறான் காமன்மேன்!, அவனை தமிழ் போலீஸே மனமார மகிழ்ச்சியோடு கொல்லுகிறான்.

‘’1992ல நடந்த குண்டுவெடிப்புல ஒரு குழந்தை செத்துருச்சு அதனாலதான் இவங்களை கொல்லணும்னு சீட்டுகுலுக்கிபோட்டு முடிவு பண்ணேன், இது தமிழன் சிங்களவன்ற பிரச்சனை இல்ல தீவிரவாதம்ங்கற பிரச்சனை.. சிங்களவன் பண்ணாலும் தமிழன் பண்ணாலும் கொலை கொலைதான்’’ என்கிறான் காமன்மேன்.

தியேட்டரே அதிர கைத்தட்டுகிறது. பார்த்துக்கொண்டிருந்த இரண்டே இரண்டு தமிழனைத்தவிர!

************

அதனால் தீவிரவாதம் ஓழிக!

30 comments:

Karthikeyan G said...

அருமை! அட்டகாசம்!! அபாரம்!!!WONDERFUL!!!!

சிவக்குமரன் said...

சீச்சி.....ச்சே

thamilmullai said...

உண்மையான, விமர்சனம்

அரவிந்தன் said...

தம்பி நெத்தியடி விமர்சனம்

அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அதிஷா, தூள்!

Vetri said...

யோவ் உம்ம பார்வையே தனிதான்!

பரிசல்காரன் said...

//பார்த்துக்கொண்டிருந்த இரண்டே இரண்டு தமிழனைத்தவிர!
//

:-))

அஹோரி said...

காமெடி பீசு கருணாநித்ய விட்டுடீங்களே.

தர்ஷன் said...

ம்ம் அருமை
கமலை குறை சொல்ல முடியுமா அதிஷா
அவர் செய்தது "முந்திய நாவினான் உரையின்படி" அல்லவா

ஆனாலும் அந்த தீவிரவாதி தன மனைவியை பற்றி கூறும் போதான நையாண்டி காட்சியமைப்பு தேவைதானா இன்னமும் அருவருப்பாய் உணர்கிறேன். கமலுக்குள் இத்தனை தீவிரமான ஒரு இந்துத்துவா இருப்பதாய் எண்ணவே இல்லை.

மேலோட்டமாக வாசிக்கையில் ஒரு பகடி போலிருக்கும் தங்கள் பதிவு பல விதமான எண்ணங்களை கிளர்த்தும் வல்லமை கொண்டுள்ளது.
Superrrrrrr

பித்தனின் வாக்கு said...

இனம், மதம், மொழி என்று எதன் பெயரில் வந்தாலும் தீவிரவாதம் தீவிரவாதம் தான் என்ற கருத்து அபாரம். நல்ல பதிவு.

Sanjai Gandhi said...

பெரிய எழுத்தாளரா வருவதற்கான அத்தனைத் தகுதிகளும் இருக்குய்யா.. வாழ்த்துகள்..

யுவகிருஷ்ணா said...

:-)

ARV Loshan said...

இஸ்லாமிய தீவிரவாதம் எம் போராட்டம் ஒப்பிடுவது சரியா என்று தெரியவில்லை..

இந்தியா என்பதற்குள் முளைவிட்ட தீவிரவாதம் தனி நாட்டுக்கா உரிமைக்கா?
இலங்கையில் 'இருந்த' நிலை வேறு..

தீவிரவாதம் என்பதன் வரைவிலக்கணம் வேறு.. புரிந்துகொள்ளுங்கள் அதிஷா..
நான் கமலை இந்தியராகத் தான் படத்திலே பார்த்தேன்..
அவரது பார்வையில் மீனம்பாக்கமும்,கோவையும் குண்டு வெடிப்பிலே ஒன்று தான்..

நீங்கள் சொன்ன கதைக்கு ஆகா ஓகோ போடுபவர்களுக்கும் இலங்கை நிலவரம் புரியவில்லை போலும்..

Anonymous said...

Dear Athisha,

Enga eppadi ellam yosikeeringa.

Good one.

Cheers
Christo

ஆதிரை said...

ஈழப் போராட்டம் பலருக்கு ஊறுகாய் போன்றது... தேவைப் படுகின்ற தருணங்களில் அரசியல்வாதிகள் தொடக்கம் எல்லோரும் தொட்டுக்கொள்கின்றார்கள். :(

☀நான் ஆதவன்☀ said...

என்ன தான் இருந்தாலும் ஈழப் போராட்டத்தை தீவரவாதத்தோடு ஒப்பிட்டது சரியில்லை :(

தர்ஷன் said...

லோஷன் , நான் ஆதவன் ஆகியோர் இஸ்லாமிய அடிப்படை வாதமும் ஈழ உரிமைப் போராட்டமும் ஒன்றாக பார்க்கப்பட்டதாக கருதி விட்டனர்.
இதை இலங்கை நிலவரத்துடன் தொடர்பு படுத்தியதாய் நான் பார்க்கவில்லை
தமிழருக்கு ஒன்று என்றவருடன் பதறிப் போகிறாயே ஒரு இஸ்லாமியனின் அவலத்தை நக்கல் செய்து மனிதாபிமானமின்றி சிரித்து மகிழ்கிறோமே என்பதாக இருக்கலாம்.
லோஷன் அண்ணா கமல் ரசிகன் என்பதை சற்றே மறந்து விட்டு சொல்லுங்கள் அந்த காட்சியை உங்கள் இஸ்லாமிய நண்பர்கள் உடனிருக்க உறுத்தலில்லாமல் பார்க்க முடியுமா.

பீர் | Peer said...

அதிஷா, உங்க ஸ்டைல் யுனீக்...

//தர்ஷன் said...
....தமிழருக்கு ஒன்று என்றவருடன் பதறிப் போகிறாயே ஒரு இஸ்லாமியனின் அவலத்தை நக்கல் செய்து மனிதாபிமானமின்றி சிரித்து மகிழ்கிறோமே என்பதாக இருக்கலாம்.
லோஷன் அண்ணா கமல் ரசிகன் என்பதை சற்றே மறந்து விட்டு சொல்லுங்கள் அந்த காட்சியை உங்கள் இஸ்லாமிய நண்பர்கள் உடனிருக்க உறுத்தலில்லாமல் பார்க்க முடியுமா.//

சரியான கருத்து, தர்ஷன்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சூப்பர் அப்பு...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சூப்பர் அப்பு...

கே.பாலமுருகன் said...

உன்னைப் போல ஒருவனை மீண்டும் மாற்று தளத்தில் வைத்து புனைவு செய்திருக்கிறீர்கள்.

காட்டமான விமர்சனம்தான். வாழ்த்துகள்

Unknown said...

excellent

Pot"tea" kadai said...

கலக்கல்!

சுகுணாதிவாகர் said...

சூப்பர் தலைவா!

Anonymous said...

நல்லா இருக்கு ரம்ஜான் பிரியாணி! !!!!
புலிகள் நடுத்தெருவில் குண்டு வைத்தார்களா ? இன்றும் மூன்று லட்சம் தமிழ்ர்கள் முகாம்களில் kidnapper ராஜபக்சே பிடித்து வைத்திருக்கிறார். (பிள்ளை பிடிப்பவர்கள் காசு குடுத்தால் விடுவிப்பது போல விடுவிக்கவும் செய்கிறார்கள் ) ஒரு பேச்சுக்கு புலிகளும் ஒரு ஐந்து சிங்கள கிராமங்களை கிட்னாப் செய்து வைத்திருந்தால் இன்று இத்தனை தமிழ்ர்கள் முகாம்களில் இருந்து விடுவிக்க முடிந்திருக்கும். கொழுமப்பு துறைமுகத்திற்கும், பயணிகள் விமான நிலையங்களுக்கும் , டூரிஸ்டு ஹோட்டல்களுக்கும் குண்டு வைத்திருந்தால் இருபது வருடம் முன்பே சிறிலங்காவின் பொருளாதாரம் மொத்தமாக அழிந்திருக்கும். மரபுப் போர் தோல்வி அடைகிறது. பயங்கரவாதம் வெற்றி பெறுகிறது. இன்று இதுதான் உண்மை.

-aathirai (ullal)

Anonymous said...

லோசனை வழிமொழிகிறேன்.
இஸ்லாமியத்தீவைரவாதத்தையும் இனப்போராட்டத்தையும் வல்லரசுகள் மட்டுமல்ல உங்களைப்போன்ற புத்திஜீவிகளும் ஒன்றாகப்பார்க்கிறீர்கள்.

Anonymous said...

-தீவிரவாதம் என்பதன் வரைவிலக்கணம் வேறு.. புரிந்துகொள்ளுங்கள் அதிஷா..-

LOSHAN சொன்னது தான் சரி அதிஷா. எம் போராட்டம் என்று குண்டுகள் வெடிக்கப்பண்ணலாம். சொந்த மக்களையே மண்மூட்டையாக்கி யுத்தம் செய்து பலி கொடுக்கலாம். தப்பியோடும் சொந்த மக்களை துரோகிகள் என்று சுட்டு கொல்லலாம். தப்பேயில்லை. இது ஈழப் போராட்டம்.

Anonymous said...

nalla naatham varra madiri kusu vittuttu, ethavathu alagana heroine or ponnuga dance adura secene parakira anubavam eppadi erukkum?

Please fwd this to Una Thana.. he may try and post his experience in his blog!

ஊர்சுற்றி said...

ஐயகோ... படம் இன்னும் பார்க்கவில்லையே!

இடுகை சூப்பர்!

Anonymous said...

machaan.. konnuttae... (bangalore aasaami)