28 December 2009

2009 - வினோத் to அதிஷா - வழி - எழுத்து!

வினோத் என்கிற அடையாளத்தை முழுமையாக இழந்து முழுக்க அதிஷாவாகவே மாறிவிட்டிருக்கிறேன். ஆண்டின் துவக்கத்தில் குமுதம் வெளியிட்ட டாப் டென் வலைப்பூக்கள் பட்டியலில் ஏழாமிடம் கொடுத்திருந்தனர். அட நமக்கும் எழுத வருகிறதோ என்று நினைக்க வைத்த நொடி அதுதான். என்னுள் இருந்த அதிஷாவை எனக்கு அறிமுகம் செய்து வைத்த நிகழ்வும் அதுதான். எனக்குள் இருந்த எழுத்துக்காரனின் அறிமுகத்தோடு துவங்கியது 2009.

சுஜாதாவைப் போல் எழுத முடியவில்லையே என்று இந்த ஆண்டில் கவலைப்பட்டிருக்கிறேன். தேவையில்லை , நான் என்னைப்போல் எழுதினாலே போதும் என்று உணர்ந்த ஆண்டு. எனக்கான எழுத்து நடையை நான் தேடத்துவங்கிய ஆண்டு. என் வாழ்நாளில் இந்த ஆண்டில்தான் அதிகம் வாசித்திருக்கிறேன்.  கிட்டத்தட்ட 40 பெரியசைஸ் புத்தகங்கள். 25 சின்ன புத்தகங்கள். 40க்கும் மேல் குட்டி புத்தகங்கள். எண்ணிக்கையில்லா சிறுகதைகள். கொஞ்சம் இலக்கியம். மற்றபடி எப்போதும் போல நிறைய சினிமா.. மினிமம் 500.

2010ல் நிறைய புத்தகம், குறைந்த சினிமா பார்ப்பது என முடிவெடுத்திருக்கிறேன். ஊர் சுற்றுவது எனக்கு மிகவும் பிடிக்கும். மிகச்சில இடங்களையே சுற்ற முடிந்திருக்கிறது. அடுத்த ஆண்டில் நிறைய சுற்ற வேண்டும். ஒரு கடுமையான காதல் தோல்வியை சந்தித்தேன். அதிலிருந்து விடுபட ஏதேதோ செய்தாலும் எழுத்து பெருமளவில் உதவியது. நண்பர் கிருஷ்ணனின் மரணமும் , ஈழத்தமிழர் படுகொலைகளும் , முத்துகுமாரின் மரணமும் பெரிதும் பாதித்தது.

இந்த ஆண்டின் துவக்கத்தில் புகைப்பிடிப்பதை விட்டுவிட தீர்மானித்திருந்தேன். பின் அந்த தீர்மானத்தை விட்டு விட்டேன்.அது இந்த ஆண்டும் தொடரும் என்றே நம்புகிறேன். தினமும் புகைக்கும் சிகரட்கள் போல நண்பர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்திருக்கிறது. அதில் யார் நண்பர் யார் எதிரி என்று தெரியாத அளவுக்கு வளர்ந்திருக்கிறது. முகத்திற்கு முன்னால் சிரித்து பேசிவிட்டு முதுகில் குத்துகிற நண்பர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது. நண்பர்கள் என்று சொல்லிக்கொண்ட பலரும் கண் முன்னே என்னை அவமானப்படுத்தியிருந்தனர். என்னை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காத அந்த நண்பர்கள் சகவாசத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நல்லது கெட்டது தெரியாமல் எல்லோரிடமும் ஒரே மாதிரி பழகும் என்னுடைய குணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று இந்த ஆண்டு கற்றுக்கொடுத்துள்ளது. வரும் ஆண்டில் அந்த அநண்பர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் விலகியிருக்க எல்லாம் வல்ல இலச்சி மலை ஆத்தா எனக்கு அருள் புரியட்டும்.

கெட்ட நண்பர்கள் எண்ணிக்கை கூடியது போல நல்ல நண்பர்கள் எண்ணிக்கை கூடியதாகத் தெரியவில்லை. ஒற்றை இலக்கங்களில் எண்ணிவிடலாம். லக்கி வீழும் போதும் எழும் போதும் என்னோடு எப்போதும் இருந்த என் நிழல். என் நிழலைப்பற்றி நானே பேசுவது சரியாக இருக்காது. மணிகண்டன்,ஜ்யோவ்ராம் சுந்தர்,பைத்தியக்காரன் சிவராமன் என பலரும் எப்போதும் என் வளர்ச்சியில் மகிழ்ந்தது மனநிறைவை அளித்தது. அவர்களுடைய நெருக்கம் என்னை இன்னும் மேம்படுத்தும்.

பதினைந்து வருடமாக தந்தை இல்லாமல் வாழ்ந்த எனக்கு இந்த ஆண்டு தந்தையைப் போல் ஒருவர் கிடைத்திருக்கிறார். பத்தி பத்தியாக என் எழுத்தை மட்டுமல்ல, என் வாழ்க்கையையும் உயர்த்துகிற அந்த மனிதர் இந்த ஆண்டில் எனக்கு கிடைத்த பொக்கிஷம். என் விளையாட்டுத்தனத்தையும் போக்கிரித்தனத்தையும் குறைத்து என்னை முழுமையாக மாற்றிக்கொண்டிருக்கிறார். அவரது பெயரை சொல்லும் அளவுக்கு இந்த ஆண்டில் எனக்கு தகுதி இருப்பதாய் தெரியவில்லை.

எட்டு வருட கடுமையான மார்க்கெட்டிங் வாழ்க்கை முடிவுக்கு வந்திருக்கிறது. இப்போது நான் பத்திரிக்கையாளன். இன்னும் ஓரிரு மாதங்களில் எழுத்தாளன் ஆகிவிடுவேன். அடுத்தவருட இறுதிக்குள் சில புத்தகங்களை நிச்சயம் எழுதிவிட தீர்மானித்திருக்கிறேன். நல்ல பத்திரிக்கையாளன் என்று பேர் எடுக்க வேண்டும். அதற்காக நிறைய உழைக்க வேண்டியிருக்கிறது. சிகரட் பழக்கத்திற்கு ஒப்பான பதிவுப்பழக்கத்தையும் குறைத்துக்கொள்ள தீர்மானித்திருக்கிறேன். எழுதத் தெரியும் ஆனால் எங்கே எழுதுவது என்று திக்குத் தெரியாமல் அலைந்தவனுக்கு விளையாடி மகிழ அருமையான இடமாக இருந்தது பதிவுலகம. எந்த வாய்ப்புகளுக்காக ஏங்கினேனோ அத்தகைய வாய்ப்புகள் இப்போது கிடைத்திருக்கின்றன. அதை எனக்குப் பெற்றுத்தந்தது பதிவுலகம்தான். என்னைப்போல் பதிவுலகில் பலருக்கும் அந்த வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்.

அதிரடியான முடிவுகளால் சில மாதங்களில் என் வாழ்க்கை சூழலே மாறிப்போயிருக்கிறது. நிறைய சம்பாத்தியம் , சுகமான வேலை எல்லாவற்றையும் துறந்து எழுத்தை நம்பி என் கேரியரை மாற்றிக்கொண்டிருக்கிறேன். இதனால் என் அம்மாவுக்கு நிறைய வருத்தங்கள் இருந்தாலும், அந்த முடிவு நல்ல முடிவாகவே இருக்கும் என்று நம்புகிறேன்.


இந்த ஆண்டில் எனக்குள் இருந்த எழுத்துக்காரன் வெளிப்பட்டு என்னை மாற்றியது போல அடுத்த ஆண்டு எனக்குள்ளிருந்து எவன் வெளிப்பட்டு என்ன செய்யப்போகிறானோ? என்கிற அச்சமிருந்தாலும் எப்போதும் போல எது நடந்தாலும் நிச்சயம் நல்லதே நடக்கும் என்கிற நம்பிக்கையோடு 2009ற்கு விடையளிக்கிறேன்!

புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கு!

41 comments:

சுவாசிகா said...

வாழ்த்துகள் அதிஷா..

வரும் ஆண்டு உங்களுக்கு வளமாகவும், நலமாகவும் அமையும் :)

அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me

Prakash said...

ஒரு பொருட்டாகக் கூட மதிக்காத//

வலி நிறைந்த வார்த்தைகள் .

நீங்கள் நினைத்தது போல் மக்களுக்கான எழுத்தாளனாக கடுமையாக உழைத்து வளர மனமார்ந்த வாழ்த்துகள்

அரவிந்தன் said...

அன்பின் அதிஷா,

வரும் ஆண்டில் உன்னுடைய புத்தகங்கள் தமிழ் பதிப்புலகில் ஒரு புதிய புரட்சியை எற்படுத்தும்.

முழு நேர பத்திரிக்கையாளனாக வெற்றியடைய வாழ்த்துக்கள்!!!

அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்

Unknown said...

வினோத்க்கு இந்த2010ம் சிறந்த வருடமாக அமைந்து ஒரு மிகச்சிறந்த பத்திரிக்கையாளராக வர வாழ்த்துக்கள்...!

ஹேப்பி நீ...யூ இயர்...

பின்னூட்ட ரிலீசர் said...

வாழ்த்துகள் தோழர்!

சரக்கடிக்கும் போட்டோவை போட்டதற்காக கண்டனங்களும், டேபிளில் சரக்கு இருந்ததை மறைத்த உங்கள் புத்திசாலித்தனத்துக்கு பாராட்டுகளும்...

//முகத்திற்கு முன்னால் சிரித்து பேசிவிட்டு முதுகில் குத்துகிற நண்பர்கள் //

கடந்த ஆண்டில் இருந்து இதுமாதிரி மொள்ளமாறிகளிடம் இருந்து விலகி நிற்க கற்றுக்கொண்டேன். நேரில் பார்த்தால் சிரித்து குலாவுவதும், பின்னால் சென்று முதுகில் குத்துவதுமான இந்த கேட்டகிரி ஆட்களிடம் பேச்சுவார்த்தை கூட வைத்துக்கொள்ளாமல் புறக்கணித்தால் மனநிம்மதி நிச்சயம்!

sriram said...

அன்பின் வினோத் (நான் ஒருவனாவது உன்னை அப்படி விளிக்கிறேன்)
வளர வாழ்த்துக்கள், வருட இறுதியில் நேரில் பாக்கும் போது 2 புத்தகமாவது நீ எழுதியிருக்க வேண்டும்.

உன்னை மதிக்காதவர்களைப் பத்தி - அவனுங்களை லூஸ்ல விடு ஃப்ரெண்ட். எதிரிகளை சமாளி, துரோகிகளை ஆண்டவன் பாத்துப்பான்...

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

☀நான் ஆதவன்☀ said...

நல்லதே நடக்கும். அடுத்த ஆண்டில் நினைத்தது நடக்க வாழ்த்துகள்

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் அதிஷா :)

Anbu said...

வாழ்த்துக்கள் அண்ணா..

குசும்பன் said...

2010க்கு வாழ்த்துக்கள்!

//எப்போதும் போல எது நடந்தாலும் நிச்சயம் நல்லதே நடக்கும் என்கிற நம்பிக்கையோடு //

வாழ்த்துக்கள்!

கிரி said...

வாழ்த்துக்கள் அதிஷா. அனுபவங்கள் உங்களை மேலும் பக்குவமடைய செய்ய வேண்டுகிறேன்.

சுந்தரராஜன் said...

:)

ILA (a) இளா said...

வாழ்த்துகள் அதிஷா!

Vasanth said...

//அதில் யார் நண்பர் யார் எதிரி என்று தெரியாத அளவுக்கு வளர்ந்திருக்கிறது. //

சில (அல்லது பல) சமயம் அது நம்முடைய எதிர்பார்ப்பை பொருத்தது. நண்பர்களை தேர்ந்தெடுப்பதை தாமதமாகுங்கள், எதிரிகள் கண்ணில் தெரிவர்.
PS: I am new to this blog world and yours is the first tamil blog I read and then no stopping to my search to tamil blogs. all the best aathisha.
பார்த்தணக்கு எப்படி கிளியின் கண் மட்டும் தெரிந்ததோ அப்படியே இலக்கை நன்கு நோக்குபவனுக்கு மற்றவை தெரியாது. வாழ்க உங்கள் கலை சேவை (?!)

பீர் | Peer said...

வாழ்த்துக்கள் அதிஷா... புத்தாண்டிற்கும் :)

கணேஷ் said...

ஆல் தி பெஸ்ட்...

Thamira said...

வாழ்த்துகள் தோழா.! என்ன ஓவர் சென்டிமென்டாக இருக்கிறதே.!

வினோத் கெளதம் said...

வாழ்த்துக்கள் அதிஷா புதுவருடம் உங்கள் எண்ணம் போல் அமைய..

நாதஸ் said...

Best Wishes !!!

All the Best Sir !

இராஜ ப்ரியன் said...

தல வருகிற ஆண்டில் நீங்கள் ஏழு புத்தகம் எழுதுவிர்கள் என் நம்புகிறேன் ................. இனி வரும் எல்லா ஆண்டுகளும் உங்களுக்கு இனியதாகவே அமையும். என்னுடைய புத்தாண்டு மற்றும் வெளிவர இருக்கின்ற புத்தகங்களின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் ...

Raju said...

ஃப்ரீயா வுடு மாமேய்...!
ஹேப்பி நியூ இயர்.

Cable சங்கர் said...

மேலும் எல்லா விதத்திலும் சிறக்க வாழ்த்தும் உங்களின் நண்பன்..

எறும்பு said...

வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்!
;)

Anonymous said...

வாழ்த்துக்கள் அதிஷா !

ananku said...

ஒரு நல்ல நடிகர் படத்தில் நடிப்பதில்லை. கதாபாத்திரமாகவே வாழ்வதுதான் உண்மையான நடிப்பு. நம்ம நடிகர் திலகம் இங்கதான் சறுக்கினார். என்னமா நடிச்சிருக்கார் பாருடான்னு சொன்னா அது ஒரு நடிகனுக்கு பாராட்டு இல்லை. அதுபோலத்தான் computer graphics (CG)-ம். jurasic park படம் பாத்துட்டு வந்த யாருமே CG பத்தி பேசவேயில்லை. ஆனா அவதார் படம் பாத்தவங்க சொல்றது இதுதான். CG சூப்பரில்ல. இது உண்மையில ஒரு பாராட்டு இல்லை. இதுதான் சாதாரண படத்துக்கும் வெற்றிப்படத்துக்கும் உள்ள வித்தியாசம்.

ananku said...

ஒரு நல்ல நடிகர் படத்தில் நடிப்பதில்லை. கதாபாத்திரமாகவே வாழ்வதுதான் உண்மையான நடிப்பு. நம்ம நடிகர் திலகம் இங்கதான் சறுக்கினார். என்னமா நடிச்சிருக்கார் பாருடான்னு சொன்னா அது ஒரு நடிகனுக்கு பாராட்டு இல்லை. அதுபோலத்தான் computer graphics (CG)-ம். jurasic park படம் பாத்துட்டு வந்த யாருமே CG பத்தி பேசவேயில்லை. ஆனா அவதார் படம் பாத்தவங்க சொல்றது இதுதான். CG சூப்பரில்ல. இது உண்மையில ஒரு பாராட்டு இல்லை. இதுதான் சாதாரண படத்துக்கும் வெற்றிப்படத்துக்கும் உள்ள வித்தியாசம்.

கடைக்குட்டி said...

நேத்துதான் லக்கியோட 2009 என்னை பாதித்தது..இன்னைக்கு நீங்க,.,.

கடக்க வேண்டிய தூரம் இன்னும் நிறய இருக்கு.. பாதை தேர்ந்தெடுத்தாச்சு..பயணம் சுகமாக அமைய வாழ்த்துக்கள்.. :-)

Unknown said...

vazthukal...da, unnudaya thedal intha thuraiyil neraivere nan kadhavulidam vendikolkiren..anbhudan Senthilnathan (TIF)

Unknown said...

/-- நிறைய சம்பாத்தியம் , சுகமான வேலை எல்லாவற்றையும் துறந்து எழுத்தை நம்பி என் கேரியரை மாற்றிக்கொண்டிருக்கிறேன். --/

இந்த மாற்றம் உங்களுக்கு பல இனிய தருணங்களை அடுத்த ஆண்டு கொடுக்கும் என்று நம்புகிறேன். வாழ்த்துக்கள் வினோத்.

Kavin Malar said...

மனதின் அடி ஆழத்திலிருந்து எழுதியிருப்பது போல் தெரிகிறது. உணர்வுபூர்வமான எழுத்து.

..அருண்.. said...

Nothing can be changed by changing the face..

But

Everything can be changed by facing the change..

Face the change and try to change whatever you want..

ரொம்ப மொக்கை ஆயிடுச்சோ...?
Sorry..

வாழ்த்துக்கள்...

வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் said...

உண்மையான உணர்வுகளை அழகாக உங்களின் பேனாவால் கசியவிட்டு இருக்கிறீர்கள் . அற்புதமான பகிர்வு வாழ்த்துகள் நண்பரே !!!

2010 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

வணங்காமுடி...! said...

எழுத்தின் வழியே நீங்கள் பயணித்ததை, விவரித்த விதம் அருமை. டெம்ப்ளேட் கண்களுக்கு குளிர்ச்சி.

2010-ம் ஆண்டு அனைவருக்கும் வெற்றிகரமான ஆண்டாக அமைய, எல்லாம் வல்ல இறையைப் பிரார்த்திக்கிறேன்.

butterfly Surya said...

வாழ்த்துகள் வினோத்.

பல சிகரங்களை தொட வேண்டும்.

இனிய ஆண்டாய் மலரட்டும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள் வினோத்
வரும் ஆண்டு உங்களுக்கு நலமாகவும் அமையும் :)

Karthik said...

ஹாய் அதிஷா.. நான் இத சொல்லியே ஆகணும்.. டெம்ப்ளேட் அவ்ளோ அழகு..:)

இந்த வருஷம் உங்களுக்கு செம யா இருக்க வாழ்த்துக்கள்!!

Ayyanar Viswanath said...

அதிஷா,
/ நிறைய சம்பாத்தியம் , சுகமான வேலை எல்லாவற்றையும் துறந்து எழுத்தை நம்பி என் கேரியரை மாற்றிக்கொண்டிருக்கிறேன்/

துணிச்சலான முடிவுதான். பொறாமைப்பட வைக்கும் முடிவும் கூட. வாழ்த்துக்கள்

Suresh said...

ALL THE BEST VINOD..

--PONNIAH

Unknown said...

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

Ronin said...

Athisha,

Read your blog after a while..Its nice that you are pursuing new interests in your career..It requires an unique and macho(for a lack of a better word) persona to be a risk taker(Consumer Marketing'il, they are called as innovators, as against adopters and followers)..And it requires boring discipline and commitment to pursue them...Admire and respect your courage..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

வாழ்த்துக்கள் அதிஷா !

'பத்திரிக்கை' என்பதை,
'பத்திரிகை' என்று எழுதுங்கள்.
(உங்கள் திருமண அழைப்பு பதிவிலும்
மாற்றவும்)