19 December 2009

ஓடு ஓடு... வரான் பாரு..வேட்டைக்காரன்!

ஓடு ஓடு... வரான் பாரு..வேட்டைக்காரன்!

முதலில் படத்தின் ரிசல்ட்! பின்னர் விமர்சனம்.

படம் மரணமொக்கை!. இப்படி ஒரு படம் தமிழில் எடுக்கப்படுவது இரண்டாயிரத்து இருநூற்றி முப்பத்தைந்தாவது முறையாக இருக்கலாம். திரைப்படம் எத்தனை மொக்கையாக இருந்தாலும் அதை தட்டி ஓட்டி பெண்டு நிமிர்த்தி டிங்கரிங் வேலை பார்த்து முரட்டுத்தனமாக விளம்பரம் செய்து எப்படியாவது ஹிட்டாக்கி காசு பார்த்து விடுவார்கள். இந்த படத்தையும் ஓட வைத்து விடுவார்கள். இந்த படம் ஓடும். வசூலை அள்ளும். சுயூர் சூப்பர் ஹிட் ஆனால் படம் மரணமொக்கை.


சில ஆண்டுகளுக்கு முன் மதுரையின் சினிப்பிரியா தியேட்டரில் ஏதோ ஒரு விஜய் பட ரிலீஸ். பட்டாசுகளும் பிளக்ஸ் பேனர்களும் பேண்டு வாத்தியங்களுமாக அதிரிபுதிரியாக இருந்தது. பிளாக்கில் டிக்கெட் கிடைக்குமா என சுற்றிக் கொண்டிருந்தேன். கேட் வாசலில் பாவமாக சிறுவன் ஒருவன் நின்று கொண்டிருந்தான். முகத்தில் சோகம் அப்பியிருந்தது. என்னடா தம்பி டிக்கட் கிடைக்கலயா? என துக்கம் விசாரித்தேன். டிக்கட் கிடைக்காதவன் சோகம் இன்னொரு டிக்கட் கிடைக்காதவனுக்குத்தானே தெரியும், ஆனால் அவனோ அதெல்லாம் ஒன்னுமில்லண்ணே! என்றான். ஏன்டா அப்புறம் ஏன் இப்படி இருக்க என்றேன், எங்க தல படம் இந்த வாட்டி வரல வந்துச்சுன்னா இதைவிட இன்னும் நூறு மடங்கு தூள் பண்ணனும்ண்ணே என்றான்.

இப்படிப்பட்ட இளம் ரசிகர்கள் இருக்கும் வரை ஒரு வேட்டைக்காரன் அல்ல லட்சம் வேட்டைக்காரர்கள் தமிழ்கூறும் நல் உலகில் அன்றாடம் ரிலீஸ் ஆகிக்கொண்டேதான் இருக்கப்போகின்றனர். அதனால் அதுகுறித்து சமூக அவலக் கவலைகளின்றி திரைப்படம் குறித்து மட்டும் பேசுவோம்.

படத்தின் கதை உய்யாலா உய்யலாலா! சம்பவாமி யுகே யுகேவென ரவுடிகளை அழிக்க அவதாரம் எடுக்கும் ஹீரோ பற்றியதுதான். அதற்காக ஒரு சென்டிமென்ட்.கொஞ்சம் காமெடி. நிறைய மசாலா. நிறைய தலைவலி எல்லாம் சேர்த்து நம் டவுசரை அவிழ்க்கின்றனர். சம்பவாமி யுகே யுகே என்பது நிஜமாக இருந்தால் இப்படி படம் எடுத்து டார்ச்சர் கொடுக்கும் இயக்குனர்களை அழிக்க கிருஷ்ண பகவான் இன்னொரு முறை அவதாரம் எடுக்கலாம். முடியல!

ஹீரோ விஜய். இன்னும் நான்கு படம் இப்படியே நடித்தால் நாட்டு மக்கள்தொகை பெருமளவில் குறைந்து இந்தியா வல்லரசாகிவிடும். தோளை குறுக்கிக்கொண்டு கையை கும்பிடுவது போல் கோர்த்து என்னங்கண்ணா சொல்லுங்கண்ணா என்று மூக்கில் பேசி காமெடி பண்ணுகிறார். தன் சின்னகண்களை அகலமாய் திறக்க முயற்சித்து புருவம் உயர்த்தி ஏய் நேனு எவரு தெலுசா என அடித்தொண்டையில் சவால் விடுகிறார். கெட்டப்பெல்லாம் மாற்றிக்கொண்டு நன்றாக நடனமாடுகிறார். அந்த பிரவுண் ஹேர்ஸ்டைல் சகிக்கலை. படம் முழுக்க பாட்ஷா ரஜினி போலவே நடந்து ‘கொல்’கிறார். படம் முழுக்க பகவதி படத்தில் ஏற்கனவே போட்டிருந்த அதே கோட்டைப்போட்டுக்கொண்டு அதை போல புலிஉறுமுது புலி உறுமுது என நடக்கிறார். சேம் கோட் நமக்கு சேம் பிளட்! சாரி விஜய் பெட்டர் லக் நெக்ஸ்ட் பிலிம்!

ஹீரோயின் அனுஷ்கா , பாதி படம் வரைக்கும் விரைப்பாக அலைகிறார். பின்னர் ஆடுகிறார். ஓடுகிறார். அழுகிறார். இப்போதெல்லாம் நாயகிகள் காமெடி டிராக் போல உபயோகப்படுத்தப்படுகின்றனர். முதல் பாதி காமெடிக்கு யூஸ்ஃபுல்லாக ஏதோ பண்ணியிருக்கிறார். படத்தின் இரண்டாம் பாதியில் ஏதோ செய்யப்போகிறார் என மிகவும் எதிர்பார்த்த வில்லன் , விஜயை பயமுறுத்துகிறேன் பேர்வழி என ஏதேதோ செய்கிறார். விஜய் விரைப்பாக அதைபார்த்துக்கொண்டிருக்கிறார். பயம் வரலையாம்! நமக்கு சிரிப்புதான் வருகிறது. வில்லன் கோஷ்டி சீரியஸாக செய்வதெல்லாம் நல்ல காமெடி கலாட்டா! சண்டைக்காட்சிகளிலும் காமெடிக்குப் பஞ்சமில்லை.

படத்தின் ஆங்காங்கே குட்டிகுட்டியாக நல்ல வசனங்கள் வந்து விழுகின்றன. அடிக்கிற சுனாமியில் அல்வாத்துண்டு கிடைத்தால் அனுபவிக்கவா முடியும்! படத்தின் பெரும் பகுதி ஏவிஎம் ஸ்டுடியோவிலேயே செட் போட்டிருப்பார்கள் போல பாட்ஷா காலத்து செட்டு! இன்னும் கொஞ்சம் செலவழித்திருக்கலாம்.

ஏவிஎம் தயாரிப்பாம். ம்ம்!

வில்லுவிற்கும் குருவிக்கும் எவ்வளவோ தேவலாம். க்யூட் விஜய்க்காக ஒரு முறை பார்க்கலாம். மற்ற படி விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் அப்பாவி ஜனங்களுக்குத்தான் திண்டாட்டம்! சிவ சம்போ!

***

35 comments:

வழக்கறிஞர் சுந்தரராஜன் said...

ஹ்ம்ம் :)

pattapatti said...

இந்திய தொலைக்காட்சியிலே , முதன்முறையாக திரைக்குவந்து சிலமணி நேரங்களே ஆன
புத்தம் புதிய படம் "வேட்டைக்காரன் " உங்கள் சன் டீவியில் இன்று இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும்...

Patta Patti said...

இந்திய தொலைக்காட்சியிலே , முதன்முறையாக திரைக்குவந்து சிலமணி நேரங்களே ஆன
புத்தம் புதிய படம் "வேட்டைக்காரன் " உங்கள் சன் டீவியில் இன்று இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும்...����

KULIR NILA said...

Nalla irukku Vimarsanam

Neenga thana Puthiya Thalaimurai Nirubar

குசும்பன் said...

//அடிக்கிற சுனாமியில் அல்வாத்துண்டு கிடைத்தால் அனுபவிக்கவா முடியும்!//

எப்படிய்யா எப்படி? முடியல:)

நாஞ்சில் பிரதாப் said...

மி த பர்ஸ்டா...

விமர்சனம் தூள்... இந்தபயபுள்ள விஜய் அடங்கமாட்டுறானே... ஹேட்ரிக் தோல்வி கொடுத்த மருத்துவர் விஜய் வாழ்க.... சிவசம்போ...

நொந்தகுமாரன் said...

படம் மரண மோக்கை. க்யூட் விஜய்க்காக பார்க்கலாம்.

படத்தை விட உங்க கமெண்ட்ஸ் தாங்கல!

♠புதுவை சிவா♠ said...

"க்யூட் விஜய்க்காக ஒரு முறை பார்க்கலாம்"

:-))))))))

பேநா மூடி said...

ஹா...., ஹா... இப்டி எல்லாரும் கும்மி எடுக்குறீங்க...

Tech Shankar said...

s u p e r

//எங்க தல படம் இந்த வாட்டி வரல வந்துச்சுன்னா இதைவிட இன்னும் நூறு மடங்கு தூள் பண்ணனும்ண்ணே என்றான்.

பரிசல்காரன் said...

படத்தை விடுங்கள் அதிஷா.

//அடிக்கிற சுனாமியில் அல்வாத்துண்டு கிடைத்தால் அனுபவிக்கவா முடியும்! //

இந்த விமர்சன வரிகள் உங்கள் எழுத்து என்ன உயரத்துக்கு போயிருக்கிறதென பறைசாற்றுகிறது. மிக ரசித்தேன்.

மதுரைநண்பன் said...

படத்தில கதை இருக்கா ?

senthils said...

"விஜய்: நா அடிச்சா தாங்கமாட்ட, நாலு மாசம் தூங்கமாட்ட....
ஒரு குரல்: டேய், நீ அடிச்சாக்கூட பரவால்லடா! நீ நடிச்சாத்தாண்டா தாங்கவும் முடியல, தூங்கவும் முடியல..!".

அரைத்த மாவையே திரும்ப அரைக்கும் வேட்டைக்காரன் அட்டர் பிளாப்பு.

வில்லு,குருவி லிஸ்டுல வேட்டைக்காரன்.


விஜய் மாறவில்லை. மாறவும் போவதில்லை.
படமும் ஓட போவதில்லை.

டப்பா படம்.குப்பை படம்

மதுரைநண்பன் said...

படத்தில கதை இருக்கா ?

மதி said...

"விஜய்: நா அடிச்சா தாங்கமாட்ட, நாலு மாசம் தூங்கமாட்ட....
ஒரு குரல்: டேய், நீ அடிச்சாக்கூட பரவால்லடா! நீ நடிச்சாத்தாண்டா தாங்கவும் முடியல, தூங்கவும் முடியல..!".

ரொம்ப சூப்பர். இவன் ஒரு தூங்கு மூஞ்சி, இவனெல்லாம் தமிழ் நாடு ஸ்டாராக்கும், கிழிஞ்சது

Anonymous said...

okho nee poonul party

கார்க்கி said...

நாஞ்சில் பிரதாப்.. ஹாட்ரிக் தோல்வியையே மூன்று முறை அடித்து ஹாட்ர்க் செய்தவர் யாரென்பது உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

arun said...

Vijay s waste Tamil cinema....Thanks for ur review...........

sweet said...

ரசிகர்களின் பார்வையில் வேட்டைக்காரன்

விஜய் ரசிகன்: படம் செம சூப்பர். விஜய் நோ சான்ஸ். விஜய் பண்ற காமெடி எல்லாம் பட்டய கிளப்புது. ஐநூறு நாள் கண்டிப்பா ஓடும்.


அஜித் ரசிகன்: என்னய்யா படம் இது? கையால குத்தி கல் உடைக்கிறார்??? அந்த அருவியில் குதிக்கிற சீன் நல்ல காமெடி!!! சாமிகிட்ட மட்டும் தான் சாந்தமா பேசுவாராம். எனக்கு என்னமோ போன படங்களில் கிடைச்ச ஆப்பு தான் இப்போ அவரை சாந்தமா பேச வச்சு இருக்குனு தோணுது. அசல் வரட்டும். வேட்டைக்காரன் சட்னி ஆகிடுவான். பாருங்க.


ரஜினி ரசிகன்: தலைவரை காப்பி அடிக்குறதை இவர் நிறுத்த போவது இல்லை என்பதை நிரூபிக்கும் இன்னொரு படம். விஜய் தம்பி ஆட்டோ ஓட்டினா பாட்ஷா ரஜினி ஆகிட முடியுமா? கால கொடுமை.

கமல் ரசிகன்: எலி வேட்டைக்கு சாரி, புலி வேட்டைக்கு போறவன் எல்லாம் மருத நாயகம் ஆகிட முடியுமா? வரட்டும். அப்போ தெரியும் யார் மாஸ் என்று?


சூர்யா ரசிகன்: டான்ஸ் மட்டும் ஆடினால் போதுமா? நடிக்க வேண்டாமா? அரைச்ச மாவு புளிச்ச வாசம் அதான் இந்த வேட்டைக்காரன்


சராசரி சினிமா ரசிகன்: படம் மொக்கை தான். ஆனால் வில்லு, குருவிக்கு எவ்வளவோ மேல்.
போக்கிரி படம் கிளைமாக்ஸ் தவிர்த்து பத்து தடவை பார்த்து இருக்கேன். அது நல்லா இருந்தது. ஆனால் இதுல ஏதோ ஒண்ணு பெருசா குறைஞ்சு போச்சு. முதல் பாதி போர் அடிக்காம போச்சு. ரெண்டாம் பாதி காதுல மட்டும் இல்லை காலுக்கும் சேர்த்து பூ சுத்துறாங்க.
ஆனா படம் நல்லா ஓடும். தெனவாட்டு படத்தை ஓட வச்ச சன் டிவிக்கு இதை ஓட வைக்கிறது என்ன பெரிய கஷ்டமா?

அதி பிரதாபன் said...

எவன்யா அது ’மருத்துவர்’ விஜய்னு கெளப்பிவிட்டது?

Anonymous said...

\\எங்க தல படம் இந்த வாட்டி வரல வந்துச்சுன்னா இதைவிட இன்னும் நூறு மடங்கு தூள் பண்ணனும்ண்ணே என்றான்.//
இப்படியே மாறி மாறி இவர்களை இன்னும் வளர்த்து விடுவதால் இது போன்ற கலைக் கொலைகள் அதிகரிக்க தான் செய்யும் . இவர்களும் இது போன்ற மொக்கை படங்களை நிறுத்த போவதில்லை .


/அடிக்கிற சுனாமியில் அல்வாத்துண்டு கிடைத்தால் அனுபவிக்கவா முடியும்!/
nice lines....
எப்படியோ சுனாமியிலிருந்து தப்பித்து வந்து விட்டீர்கள் . அல்வாவை விட்டு தள்ளுங்கள்

புவனா said...

நா உங்க கிட்ட இருந்து இன்னும் எதிர் பார்த்தேன். கொஞ்சமா தான் திட்டி இருக்கீங்க... ரொம்ப நல்லவரு பாப்பு நீங்க..

அண்ணாமலையான் said...

படம் மரணமொக்கை!.”
நல்ல வேளை காசு தப்பிச்சுது...(டிவில போடற அன்னிக்கு இருக்கவே இருக்கு டாஸ்மாக்...)

அடலேறு said...

தொழில்நுடபம் பத்தி சொல்லலயே. ஒளிப்பதிவு எப்படி இருக்கு?

வில்லங்கம் said...

மத்த விஜய் படங்களுக்கு இந்த படம் பரவாயில்லை.. முதல் பாதி ஓ கே ரெண்டாவதுதான் கொஞ்சம் கடி...
ஆஞ்சனேயா, திருப்பதி பரமசிவன் ஏகனுக்கு இது ரொம்ப பரவாயில்லைனு தோனுது.

butterfly Surya said...

Athisha, R U OK..??

SENTHILKUMARAN said...

இந்திய தொலைக்காட்சியிலே , முதன்முறையாக திரைக்குவந்து சிலமணி நேரங்களே ஆன
புத்தம் புதிய படம் "வேட்டைக்காரன் " உங்கள் சன் டீவியில் இன்று இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும்...

SENTHILKUMARAN said...

விமர்சனம் தூள்... இந்தபயபுள்ள விஜய் அடங்கமாட்டுறானே... ஹேட்ரிக் தோல்வி கொடுத்த மருத்துவர் விஜய் வாழ்க.... சிவசம்போ...

SENTHILKUMARAN said...

"விஜய்: நா அடிச்சா தாங்கமாட்ட, நாலு மாசம் தூங்கமாட்ட....
ஒரு குரல்: டேய், நீ அடிச்சாக்கூட பரவால்லடா! நீ நடிச்சாத்தாண்டா தாங்கவும் முடியல, தூங்கவும் முடியல..!".

ரொம்ப சூப்பர். இவன் ஒரு தூங்கு மூஞ்சி, இவனெல்லாம் தமிழ் நாடு ஸ்டாராக்கும், கிழிஞ்சது

மேடேஸ்வரன் said...

தனக்கென்று ரசனை ஏதும் உருவாகாத சிறுவர்களின் ஏகோபித்த வரவேற்பு விஜய்க்கு இருக்கிறதென்பதை யாராலும் மறுக்க முடியாது. அவர் பேசும் பன்ச் வசனங்களும், போடும் ஆட்டமும் குழந்தைகளை குதூகலிக்கச் செய்கின்றன.
இவர் பரவசமாக, நவரசமாக நடிக்க மாட்டார், நடிக்கவும் தெரியாது, நடித்தாலும் நாம் பார்க்க முடியாது. ஆகவே ,சிறுவர்களுக்கான நிரந்தர நடிகராக விஜய் இப்படியே இருந்துவிட்டு போகட்டும் ,விடுங்கள்.

மேடேஸ்வரன் said...

தனக்கென்று ரசனை ஏதும் உருவாகாத சிறுவர்களின் ஏகோபித்த வரவேற்பு விஜய்க்கு இருக்கிறதென்பதை யாராலும் மறுக்க முடியாது. அவர் பேசும் பன்ச் வசனங்களும், போடும் ஆட்டமும் குழந்தைகளை குதூகலிக்கச் செய்கின்றன.
இவர் பரவசமாக, நவரசமாக நடிக்க மாட்டார், நடிக்கவும் தெரியாது, நடித்தாலும் நாம் பார்க்க முடியாது. ஆகவே ,சிறுவர்களுக்கான நிரந்தர நடிகராக விஜய் இப்படியே இருந்துவிட்டு போகட்டும் ,விடுங்கள்.

SENTHILKUMARAN said...

விஜய் மாறவில்லை. மாறவும் போவதில்லை.
படமும் ஓட போவதில்லை.

டப்பா படம்.குப்பை படம்

SENTHILKUMARAN said...

ஒரு தூங்கு மூஞ்சி, இவனெல்லாம் தமிழ் நாடு ஸ்டாராக்கும், கிழிஞ்சது

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஓடு ஓடுன்னு அவங்களே சொல்லியும் வலுவில போய் சிக்கிட்டேன், நானும்.!

Pudumadam said...

Sometime your coments not nuetral