12 January 2010

சந்தை,மந்தை,மேதைமை!‘’ங்கோத்தா என் புக்க பத்தியாடா தப்பா சொன்ன.. ங்கொய்யால உன் சங்க அருத்துருவேன், நான் எப்பேர்ப்பட்ட புடுங்கி எழுத்தாளன் தெரியுமா! என் புக்க பத்தியே கிண்டல் பண்றீயா! பாரதியாருக்கு அப்புறம் நான்தான்டா தமிழ்ல பெரிய எழுத்தாளன்’’ என்று யாரோ ஒரு பிரபல எழுத்தாளர்(கள்) யாரோ, என்னைப்போல் ஒரு அப்பாவி வாசகனை மிரட்டிக்கொண்டிருந்தார்.தனர்.

புத்தகசந்தையின் துவக்கமே இப்படித்தான் பயங்கர டெரராக ஆரம்பித்தது. இந்த முறை எண்ணிலடங்காத அளவுக்கு பல புதிய எழுத்தாளர்கள் உருவாகியிருந்தனர். பலரையும் நேரில் சந்தித்து பேச முடிந்தது. இதில் பலர் மற்றும் சிலர் கவிதைனா அடுத்த கண்ணதாசன், புனைவுனா அடுத்த புதுமைபித்தன் என்கிற இறுமாப்புடன் அலைந்து கொண்டிருந்தது வேடிக்கையாக இருந்தது. போலவே... பேச்சிலும்.

நண்பர் ஒருவர் சிறுகதை தொகுப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார் , அதை இன்னொரு நண்பருக்கு பரிந்துரைத்திருந்தேன். அவர் ஒரு முதன்மையான வாசகர், படித்துவிட்டு ஒன்னு ரெண்டுதான்பா தேறும் மத்ததெல்லாம் ரொம்ப அமெச்சூர் தனமா இருக்கு, இன்னைக்கு எழுத்தாளன் ஆகணும்னு ஆசைப்படறவங்க அதுக்காக காத்திருக்கறதே இல்ல, எழுத ஆரம்பிச்சதும் , காசிருந்தா போதும். உடனே சொந்த செலவுல இப்படி புக்க போட்டு அடுத்தவங்களுக்கு சூனியம் வைக்க ஆரம்பிச்சிடராங்க , சிறுகதை தொகுப்பு போடறதுனா கொறைஞ்சது நாற்பது ‘நல்ல’ கதையாவது வச்சுகிட்டு போடணும், சும்மா இருக்கறதையெல்லாம் அள்ளிப்போட்டுறக் கூடாது’’ என எனக்கு அட்வைஸ் செய்யத் தொடங்கிவிட்டார். காசிருப்பவன் கம்மர்கட்டு சாப்பிடுகிறான் என்னைப்போல காசில்லாதவன் வெறும் வாயைத்தானே மெல்ல முடியும். போகும் போது ஒன்றை மட்டும் உறுதியாக சொல்லிவிட்டுப் போனார் , எந்த படைப்பா இருந்தாலும் அதுக்குனு ஒரு அடிப்படை உழைப்பு இருக்கணும்ல அதுதான் உன்னைமாதிரி ஆளுங்ககிட்ட மிஸ்ஸிங்னாரு! உரைத்தது. நல்ல வேளையாக அடுத்த ஐந்து வருடங்களுக்காவது எனக்கு சிறுகதை தொகுப்பு , பெருங்கதை தொகுப்பெல்லாம் போடுகிற ஆர்வமில்லை , போலவே அதற்கான அனுபவமும் , வாசிப்பும், திறமையும், உழைப்பும் இல்லை என்றே நம்புகிறேன்.

சந்தையில் செக்கு மாடு போல சுற்றி சுற்றி வந்ததில் இந்த முறை அதிக சேல்ஸ் எப்போதும் போல சமையல் , சுயமுன்னேற்றம் , ஜோதிட புத்தகங்கள்தான். அப்துல்கலாம் நன்றாக விற்கிறார் என்றார் நக்கீரர். கிழக்கில் ராஜிவும் மாவோயிஸ்டுகளும் நன்றாக விற்றதாம். தலையணை சைஸ் ஜெமோ புத்தகங்கள் கூட நன்றாக விற்றதாக தமிழினியில் அமர்ந்திருந்த நண்பர் கூறினார். அவர் ஒரு ஜெமோவின் அதி தீவிர ரசிகர் அப்படித்தான் கூறுவார் , எனக்கு நம்பிக்கையில்லை. சாரு சுழற்றி அடித்திருக்கிறார். அவரிடம் ஆளாளுக்கு ஆட்டோகிராப் வாங்குவதைப் பார்த்து கடுப்பாகி நானும் உயிர்மையிலிருந்து ஒரு புத்தகத்தை வாங்கி கையெழுத்துக்கேட்டேன். புத்தகத்தை வாங்கிப்பார்த்துவிட்டு சிரித்தார். அது உயிர்மையின் போன வருட ஜனவரி இதழ். (அந்தக்கடையில் குறைந்த விலைக்கு கிடைக்கிற ஒரே புத்தகம் அதுதான் , என்னைப்போல் ஏழை வாசகன் என்ன செய்வான்) ஆனாலும் பெருந்தன்மையோடு அதிலேயும் கிறுக்கிக்கொடுத்தார்.

க.ந.சு , ல.சா.ரா , நாகராஜன், சுரா, மௌனி, தர்மு சிவராமு, பிரமிள், பிச்சமூர்த்தி என்று பழைய பிரபலங்களின் புத்தகங்களின் விற்பனை படு மட்டம் என்றார் நண்பர். பல பிரபல புனைவு எழுத்தாளர்களின் நூல்கள் எதுவும் அதிகம் விற்றதாக தெரியவில்லை. பல இலக்கிய கடைகளிலும் கடைக்காரர் கூட்டம் முண்டியடித்தாலும் அதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு கடலை சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். புத்தக சந்தையில் எங்கே தேடினாலும் ஈக்கள் இல்லை.
இந்த ஆண்டு புனைவுகளை விட கட்டுரைகளே அதிகம் விற்று தீர்ந்திருப்பதாக பாரதி புத்தகாலயத்திலிருந்து செய்திகள் கிடைத்தது. நண்பர் நர்சிம்மின் அய்யனார் கம்மா 600 பிரதிகள் விற்றதாக நண்பர் நர்சிம் சொன்னார். இணையத்தின் பலம்! நட்பே நலம். அகநாழிகையின் மற்ற புத்தகங்கள் எப்படி விற்றன, மாதவராஜின் பதிவர்கள் படைப்புகள் எப்படி விற்றது , தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொன்னால் மகிழ்வேன்.

என்னைப்போன்ற அதீத மேதைமை கொண்ட சிறுவர்கள் படிப்பது அம்புலிமாமா. அவர்களுடைய கடையில் , தமிழ் தவிர மற்ற பிராந்திய மொழிகளில் புத்தகங்கள் கிடைத்தது.

அப்பா எனக்கு ஒரு குர்ஆனும் பகவத் கீதையும் திருவருட்பாவும் வாங்கிக் கொடுத்தார். மூன்றையும் படித்து பாராயணம் செய்து தினமும் ஒப்பிக்க சொல்லி இருக்கிறார். அப்போதாவது நான் திருந்துவேன் என்கிற நம்பிக்கை. ;-)

சுஜாதாவின் தலைமை செயலகம் மலிவு விலையில் , ரோட்டில் பழைய புத்தக கடையில் கிடைத்தது. விலை ரூ.16. பாரதி புத்தகாலயத்தில் நிறைய குட்டி புத்தகங்கள் ரூ.5 , ரூ.10 என்கிற விலைகளில் கிடைத்தது. நிறைய வாங்கி வைத்துக்கொண்டேன். லிச்சி ஜூஸ் குடித்தேன். கிருஷ்ணா சுவீட்ஸில் பால் கொழுக்கொட்டையும் அம்மணி கொழுக்கட்டையும் தின்றேன். (உபயம் – நண்பர்)
நடுவில் ஒரு பதிவர் சந்திப்பு நிகழ்ந்தது. மதியம் சோறு கூட தின்னாமல் பேய்த்தனமாக சுற்றிக்கொண்டிருந்தேன். வந்தவர்கள் யார் என்ன பேசினார்கள் தெரியாது. பசி கண்ணை மறைத்து விட்டது. அப்போது கவிஞர் கென் கொடுத்த நான்கு முறுக்கு + ஒரு பாக்கெட் வறுத்த கடலைக்கும் என் நன்றி. அமிர்தமாக இருந்தது. பதிவர் சந்திப்பு நிறைவாய் முடிந்தது. நண்பர்கள் பலரையும் பார்த்தேன். பார்த்தேன்.

சகோதரர் சிவராமன் ஜெயமோகன் புத்தகங்கள் சில வாங்கிக் கொடுத்தார். படிக்க முயற்சித்து வருகிறேன். படித்து முடித்து உயிரோடிருந்தால் அதைப்பற்றி எழுதுகிறேன். (ஜெமோவுக்கு தண்டனை கொடுப்பதாக இருந்தால் அவர் எழுதிய புத்தகங்களில் ஒன்றே ஒன்றை கொடுத்து படிக்க வைத்து கொடுமைப் படுத்தலாம்). உயிர்மையில் மனோஜூடன் நண்பர் வளர்மதியை சந்தித்தேன். என் மேல் கடுமையான கோபத்திலிருக்கிறார் போலிருக்கிறது. பேசவில்லை. எனக்கு அவர்மேல் எந்த கோபமோ அல்லது வெறுப்போ காழ்ப்புணர்ச்சியோ இல்லை. என் நண்பர்களுக்கிருக்கலாம். அதியமானை சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் இயலவில்லை. வா மணிகண்டனோடு நிறைய உரையாட முடிந்தது. நல்ல அனுபவம்.

மற்றபடி பட்டியலிட்டு பீத்திக்கொள்ளும்படிக்கு ஏதும் புத்தகங்கள் வாங்கவில்லை என்பதே உண்மை. வாங்கியிருந்தாலும் பட்டியலிடவேண்டும் என்கிற முனைப்பும் இல்லை.

31 comments:

Hari said...

ippadi kuda bloggr la podalam po irruku

Vaa.Manikandan said...

அப்பு, மற்ற எழுத்தாளர்களை பற்றித் தெரியவில்லை. ல.ச.ரா புத்தகங்கள் ஐந்திணை, வானதியில் மட்டுமே இருந்தன. ஐந்திணையில் sold out. வானதியில் நான்கு புத்தகங்கள் மட்டுமே ஓரிரண்டு பிரதிகள் இருந்தன. எதற்கும் இன்னொரு முறை உறுதி படுத்திக் கொள்ளலாம்.

லதானந்த் said...

என்னை ஒருத்தர் நெம்பக் கோவமாக்கேட்டார். “என்னங்க புத்தகச் சந்தைக்குப்போகலையா?”
“தேவையற்ற ரோம நீக்கம் செய்ய வேண்டி இருந்ததால் போகவில்லை” எனப் பதில் சொன்னேன்.

யுவகிருஷ்ணா said...

பின்னூட்ட மொள்ளமாறித்தனம்! :-)

- பின்னூட்ட ரிலீசர்

குசும்பன் said...

டக்குன்னு பார்த்தா பா.ரா டோண்டு மாதிரியிருக்கிறார் :)))

கணேஷ் said...

:)

பின்னோக்கி said...

லிஸ்ட் போடலைன்னு சொல்லியே, பதிவுக்குள்ள ஆங்காங்கே வாங்கின புத்தகத்தின் பெயரை ஒளித்து வைத்தது, ரசிக்கும் படியாக, உங்களின் எழுத்துத் திறனை காட்டியது.

தராசு said...

அப்ப திண்டுக்கல் தொடர் இனிமே எழுத மாட்டிங்களா????

Raju said...

\\டக்குன்னு பார்த்தா பா.ரா டோண்டு மாதிரியிருக்கிறார் :)))\\

அட, ஆமாயா..!

Romeoboy said...

\\நண்பர் நர்சிம்மின் அய்யனார் கம்மா 600 பிரதிகள் விற்றதாக நண்பர் நர்சிம் சொன்னார். இணையத்தின் பலம்! நட்பே நலம்//

ரொம்ப சந்தோஷமா இருக்கு இந்த படிக்கும் போது.

sathishsangkavi.blogspot.com said...

சரியா சொல்லி இருக்கறீங்க சார்...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..

அக்னி பார்வை said...

இனிமேல் சென்னையிலோ தமிழ்நாட்டிலோ குப்பைகள் இருக்காது அனைத்தையும் புத்தகமாக மாற்றும் வித்தையை பதிப்பாளர்கள் கண்டுபிடித்துவிட்டனர்..

ஆடுமாடு said...

போட்டோல இருக்கிறது பா.ராவா?
எப்படியிருந்தவரு இப்படியாயிட்டாரு!

Anonymous said...

கமல் - பயோகிராபி புத்தகம் எப்படி தலைவா? நீங்க படித்து விட்டீர்களா? விற்பனை எப்படி?

Unknown said...

அனானி நண்பரே!

கமல் புத்தகம் விலை அதிகம். வாங்கலாம் என்கிற மனம் மட்டுமே போதுமா! அடுத்த மாத சம்பளத்தில் வாங்கி படித்துவிட்டு நிச்சயம் எழுதுகிறேன்

ILA (a) இளா said...

ஹமாம் மாதிரி எழுதியிருக்கீங்க.

ILA (a) இளா said...

//டக்குன்னு பார்த்தா பா.ரா டோண்டு மாதிரியிருக்கிறார்//
குனிஞ்சு கும்பிட்டா குனியமுத்தூர் குற்றாலம் பக்கமாம்.

Ilan said...

அதிஷா, நல்ல பதிவு .BTW, தருமு சிவராமு மற்றும் பிரமிள் இருவரும் ஒருவர்தான்.

RADAAN said...

பிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...
எங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...
www.radaan.tv

http://radaan.tv/Creative/DisplayCreativeCorner.aspx

Anonymous said...

/// ஜெமோவுக்கு தண்டனை கொடுப்பதாக இருந்தால் அவர் எழுதிய புத்தகங்களில் ஒன்றே ஒன்றை கொடுத்து படிக்க வைத்து கொடுமைப் படுத்தலாம் ///

:-))))))))))))

Anonymous said...

//சாரு சுழற்றி அடித்திருக்கிறார்//

அதிஷா சாருவின் அதி தீவிர ரசிகர் அப்படித்தான் கூறுவார். எனக்கு நம்பிக்கையில்லை :-)

மணிகண்டன் said...

***
என்னைப்போன்ற அதீத மேதைமை கொண்ட சிறுவர்கள்
***

இன்னும் தலைமுடி வளரலையே! சிறுவர் இல்லை குழந்தை :)-

Unknown said...

எதுத்தாப்புல நித்தியானந்தர் ஆசி தந்தாராமே, போவலியா ?

"உழவன்" "Uzhavan" said...

நானும் இந்த ஜனவரி இதழ்னு நினைச்சி, போன ஜனவரி உயிர்மை இதழை வாங்கிட்டேன். 10 ரூபானு சொல்லும்போதுதான் டவுட்டே வந்து திரும்பக் கொடுத்திட்டேன் :-)

Unknown said...

அட! நம்ம பாரா.Poorman"s சாருவா?எங்களுக்கும் குறி சொன்னாரு.

Anonymous said...

எப்ப ப்ளாக்ல எழுதுறத விடுவே

ஜோதிஜி said...

உங்களின் எதார்த்தமான இந்த பங்களிப்பு, இன்னும் பல மாதங்களுக்கு மனதில் நின்றுகொண்டு இருக்கும். போன தலைப்பு எழுத்துரு சிறப்பாக இருந்தது. இந்த தலைப்பு படிக்க சற்று கடினமாக இருந்தது.

தேவியர் இல்லம் திருப்பூர்

Anonymous said...

ஒன்னு ரெண்டுதான்பா தேறும் மத்ததெல்லாம் ரொம்ப அமெச்சூர் தனமா இருக்கு
நர்சிம்மின் அய்யனார் கம்மா 600 பிரதிகள் விற்றதாக நண்பர் நர்சிம் சொன்னார்.
Romba nutpama kindal panrathu appadinna ithaana :-)

ஆயிரத்தில் ஒருவன் said...

உஷார்>>>>>>>>>>>>>


ஆயிரத்தில் ஒருவன் = 50/100

நாணயம் = 20/100

குட்டி = -50/100

தெலுகு ஆர்யா பார்த்தவர்கள் குட்டி படம் பார்த்தா "BLOOD" கண்டிப்பாக உஷார்.
-பாதிப்பு அடைத்தவன் "SAME BLOOD"

கே.பாலமுருகன் said...

//நானும் உயிர்மையிலிருந்து ஒரு புத்தகத்தை வாங்கி கையெழுத்துக்கேட்டேன். புத்தகத்தை வாங்கிப்பார்த்துவிட்டு சிரித்தார். அது உயிர்மையின் போன வருட ஜனவரி இதழ்//

மிக யதார்த்தமாக நிகழ்ந்த நகைச்சுவை நண்பரே.புத்தக கண்காட்சிக்கு வருவதாக இருந்தது ஆனால் இயலவில்லை. பகிர்விற்கு நன்றி

Anonymous said...

suriyagraganam pathi onnumpodaliyaa

Niraya vishayam irruku