19 January 2010

ஆயிரத்தில் இருவர்!

சில படங்கள் உங்களை வியப்பில் ஆழ்த்தும். சில உங்களை தூங்கச்செய்யும். சிலவற்றை உங்களால் ஜீரணிக்க முடியாது. குப்பைகள் எப்போதும் குப்பைகள்தான். ஆனால் மிகச்சில படங்களே குப்பை என்று ஒதுக்கி விட இயலாமலும் ஆஹா என்று சிலாகிக்க முடியாமலும் , படம் முடிந்த பின்னும் அதுகுறித்த நினைவுகளால் வாட்டும் அல்லது அசைபோடச்செய்யும். ஆயிரத்தில் ஒருவன் கடைசி கேட்டகிரி. நான் கடவுள் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும். பலரை கடுப்படித்தாலும் கடுமையான முயற்சி. தன் அத்தனை பலத்தையும் கொண்டு மோதி இருக்கிறார் செல்வராகவன் என்னும் ஒற்றை மனிதர்.

படத்தின் கதை கொஞ்சம் பொன்னியின் செல்வன் கொஞ்சம் இன்டியானா ஜோன்ஸ் , நிறைய லாரா கிராப்ட் , மம்மி, பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் மற்றும் நம் காதுல பூ என பயணிக்கிறது. அது விஷயமல்ல. மேட்டரே திரைக்கதைதான். முதல் பாதி அட்வெஞ்சர். இரண்டாம் பாதி போர். இரண்டையும் ஒரு இடத்தில் முடிச்சு போட வேண்டிய கட்டாயம். அதற்கு மாய மந்திர தந்திர யட்சினி பட்சினிகளை உபயோகித்துள்ளார். செல்வராகவன் சறுக்கியது அங்கேதான். பேரரசு படங்களில் வருவதைப்போல முதல் பாதி காமெடி இரண்டாம் பாதி ஆக்சன் என்கிற அதே பாணிதான். ஆனால் இது கொஞ்சம் வித்தியாசம். இரண்டு பாதிகளும் தனித்தனி அத்தியாயங்களாக மிகச்சிறந்த அனுபவங்களைத் தருகிறது. டபுள் ட்ரீட். சேர்த்து பார்க்கும் போதுதான் உச்சி மண்டையில் சுர்ர்ர்ர்.

கார்த்தி பாத்திரப்படைப்பு அற்புதம். படம் முழுக்க அடிவாங்குகிறார். ரொமான்ஸிலும் சீரியஸ் காட்சிகளிலும் நிறைவாய் செய்திருக்கிறார். எம்.ஜி.ஆர் ரசிகராக கைகளில் எம்.ஜி.ஆர் பச்சை குத்திக்கொண்டு ஆரம்ப காட்சிகளில் செய்யும் அலப்பறை அசத்தல் ரகம். ஆன்ட்ரியா இன்னொரு சோனியா அகர்வால் போல் இருக்கிறார். படம் முழுக்க கண்களில் சோகம் அப்பிக்கொண்டு திரிகிறார். அழகம் பெருமாளுக்கு புதுப்பேட்டை தலைவர்,கற்றது தமிழ் வாத்தியார் மாதிரியான பாத்திரங்கள் ஓகே! மிலிட்டரி ஆபீஸர்லாம் கொஞ்சம் டூமச். ரீமாசென் நிறைய காட்டினாலும் நன்றாக நடித்திருக்கிறார். சந்திரமுகி ஜோதிகா லெவலில் இல்லையென்றாலும் பல இடங்களில் உடல்மொழியில் கவர்கிறார்.

பார்த்திபன்!. இந்த பாத்திரத்தில் அவரைத்தவிர வேறு யாரும் சிறப்பாய் பொருந்த மாட்டார்கள். முரட்டுத்தனமான பாத்திரத்தை ஊதித்தள்ளியிருக்கிறார். இசை பல இடங்களில் இரைச்சலாக. உன் மேல ஆசதான்.. தனுஷ் என்றொரு பாடகர் பாடியுள்ளாராம். நல்ல எதிர்காலம் உண்டு. வசீகரிக்கும் குரல். இசையும் துள்ளல். கலை இயக்குனர் கைகளுக்கு முத்தமிடலாம். அட்சர சுத்தமான செட் அமைப்புகள். கிராபிக்ஸும் அங்கனமே!. கடற்கரை காட்சி தவிர. தொழில்நுட்பத்தில் ஹாலிவுட்டை நெருங்கிக்கொண்டிருக்கிறோம். அதிலும் அந்த மெகா உருண்டை சண்டைக்காட்சி மூனு D எபெக்ட்.

படத்தில் பல இடங்களில் லாஜிக் மீறல்கள் என்று வரலாற்று ஆய்வாளர்களும் புத்திஜீவிகளும் கூக்குரல் எழுப்பி வருகின்றனர். எனக்கு அதெல்லாம் எதுவும் தெரியவில்லை. தெரியாது. பிரதான பாத்திரங்களுக்கு பைத்தியம் பிடிப்பது, அதற்கான காரணம் சரியாக சொல்லப்படவில்லை. அதற்கு பின் கிழவரிடம் நிர்வாணமாக நிற்பது , அவர் கையை தூக்கி விளக்கு பிடித்து பார்ப்பது,மேலும் சிலபல மந்திரக்காட்சிகள் என காரணம் தெரியாமல் வருகின்றனவற்றை தவிர மற்றவை ஓகேதான். படத்தை மிக நுணுக்கமாக பார்த்து நொட்டை சொல்வதில் விருப்பமில்லை. வேட்டைக்காரனிலும் அசலிலும் இத்யாதிகளிலும் அப்படி பார்த்து சொல்லலாம் , தமிழ் கூறும் சினிமா உலகம் தப்பிப்பிழைக்கும். நல்ல முயற்சிகளில் நொட்டை சொல்வது மேட்டிமைத்தனத்தை முன்னிருத்தலாமே தவிர அஞ்சு பைசாவுக்கு பிரயோசனப்படாது!திரைக்கதை முதல் பாதியில் மின்னல் வேகத்தில் பயணிக்கிறது. இரண்டாம் பாதி மனதை தைக்கிறது. புரண்டவன் கண்ணுக்கு உருண்டதெல்லாம் ஷகிலா என்பதைப்போல , எதைப்பார்த்தாலும் நம் மக்கள் ஈழப்பார்வையை முன்வைக்கத் துவங்கியுள்ளனர். எப்போதும் சிலருக்கு ஈழமக்களின் வேதனை மனதை தைத்திருப்பது புரிகிறது. ஆனால் ஒரு இனம் மற்றொரு இனத்தால் அழிக்கப்படுகிறது, ,,,, ,,,, ,,,.. படத்தின் கரு அதுதான். அண்மையில் வெளியான அவதாரும் அவ்வகையே! ஈழத்தில் மட்டுமல்ல ஆப்பிரிக்க கண்டத்தில் பல நாடுகளிலும் நிகழ்ந்து வரும் கொடுமை. இது இன்று நேற்றல்ல ஆதி காலத்திலிருந்து ஒவ்வொரு காலகட்டத்திலும் தொடர்கிற ஒன்று. மனிதர்களிடம் மட்டுமல்ல மிருகங்களிடமும் அங்கனமே. இந்த படத்திற்கும் ஈழத்திற்கும்,     காக்காய் உட்கார பனம்பழம் விழுந்தது போல சில காட்சிகள் நெருக்கமாய் தெரிந்திருக்கலாம். மற்றபடி யாதொரு தொடர்பும் இருப்பதாய் யாமறியேன் பராபரமே!. இடைவேளையில் முகம் தெரியாத நண்பர் செக்ண்ட் ஆப் பாருங்க பிரபாகரன் கதைய எடுத்துருக்காங்க என்றார். எனக்கு பிரபாகரனும் தெரியவில்லை ஈழமும் தெரியவில்லை. ஒடுக்கப்படும் இனத்தின் அழுகுரலைத்தவிர.

தாய் ஒருத்தி மார்பை பிதுக்கி ரத்தம் வழிவதை காட்டும் காட்சி கண்களை கரைக்கும் கவிதை. ;நெல்லாடிய நிலமெங்கே பாடலும். இயக்குனரின் உழைப்புக்கும் வித்தியாசமான கதைக்களத்தினை கையாண்ட விதத்திற்குமே பாராட்டலாம். மீண்டும் மீண்டும் மொக்கையான பார்முலாக்களில் சிக்காமல் தொடர்ந்து இது போல அடித்த ஆட வாழ்த்துக்கள். ஸ்பீல்பெர்க்கின் ஜீராசிக் பார்க்,இன்டியானா ஜோன்ஸ் போன்ற படங்கள் ஹாலிவுட்டிற்கு மிகப்புதிதான யுக்திகளுக்கான வரவேற்பை உறுதி செய்தவை. டிரெண்ட் செட்டர் என்றும் கூறலாம். இதுவும் அவ்வகையே! இதற்கு முன் ஹேராம் இது போன்ற முயற்சி. நிச்சயம் ஹேராமைப் போலவே அதிக உழைப்பு இந்த படத்திலும் இருக்கிறது.

திரைக்கதையை எளிமையாக்கியிருந்தால் அனைவருக்குமே பிடித்திருக்கும். படம் ஓடுமா என்பது கேள்விக்குறிதான். நிச்சயம் வரவேற்கத்தக்க முயற்சி. எனக்கு பிடித்திருக்கிறது. இன்னொரு முறை பார்க்க வேண்டும், ரீமா சென்னிற்காகவும் செல்வராகவனுக்காகவும்!36 comments:

KaveriGanesh said...

அதிஷா,

உங்களின் கருத்தை முன்மொழிகிறேன், நிச்சயம் வரவேற்க வேண்டிய படம்.

தர்ஷன் said...

ஆமோதிக்கிறேன்
ஆக நுணுகி தவறுகளைக் கண்டு பிடித்துக் குற்றம் சொல்வதைத் தவிர்க்கலாம்.

ஜோ/Joe said...

அது!

நந்தா said...

// படம் முடிந்த பின்னும் அதுகுறித்த நினைவுகளால் வாட்டும் அல்லது அசைபோடச்செய்யும். ஆயிரத்தில் ஒருவன் கடைசி கேட்டகிரி. //

எனக்கும் அப்படியே. முழுதும் வழி மொழிகிறேன்.

தண்டோரா ...... said...

அதிஷா! செல்வாவின் இடது கண் துடிப்பதற்கு சோனியாவின் வலது புஜம் காரணமாயிருக்கலாமா?

தண்டோரா ...... said...

வலது கண் என்று திருத்தி கொள்ளவும்.மற்றபடி விமர்சனம் தூள்.அந்த ராணீத்தேனியின் “ரீ”ங்காரம்.. சான்ஸ்லெஸ்

பரிசல்காரன் said...

நல்ல விமர்சனம்.

வாழ்க!

மணிகண்டன் said...

நல்ல ரிவ்யூ. ரீமாசென் படம் இன்னும் ஒண்ணு ரெண்டு போட்டு இருக்கலாம். மத்தபடி இங்கே தியேட்டர்ல வந்தா நிச்சயமா பார்க்கவேண்டிய படம் ! வேட்டைக்காரன் தான் உடனடியா ரிலீஸ் ஆகுது :)-

வெற்றி said...

// பரிசல்காரன் said...

நல்ல விமர்சனம்.

வாழ்க!//

அதே அதே!!

ramasamy kannan said...

நல்ல விமர்சனம்.

வாகீசன் said...

படம் பார்க்க வேண்டும் என்ற ஆவலை எதிர்மறை விமர்சனங்கள் வெகுவாகக் குறைத்துவிட்ட நிலையில் உங்கள் விமர்சனம் மீண்டும் படம் பார்க்கத்தூண்டுகின்றது. ஏனோ நம்மவர்களுக்கு வரலாற்றில் எதிர்மறையான கற்பனை கதைகளை விரும்புவதில்லை. எல்லாப் படத்திலும் ஏதொ விதத்தில் லாஜிக் (அதற்கு என்ன தமிழ்?) மீறல் இருக்கும் ஆனால் இந்தப் படத்தில் சில மீறல்களை விமர்சனங்களில் படித்தபோது அவற்றைச் சின்ன விசயமாக கருதமுடியவில்லை. உதாரணமாக, வரட்சி, பட்டினியால் நரமாமிசம் உண்பதாக் கூறுவதாகவும், ஆனால் அங்கு பூக்கள் நன்றாக பூத்திருப்பதாகவும், நல்ல மழை பெய்வதாகவும் காட்டப்படுவதாகவும் படத்தில் வருவது ஒரு பெரிய ஓட்டை என்றே படம் பார்க்காமல் நான் நினைக்கின்றேன். ஆனால் படம் பார்த்தபின் நான் வேறு மாதிரி நினைக்கக்கூடும். உங்களின் பல விமர்சங்கள் என் கருத்தோடு ஒத்துப் போவதால் நானும் இப்படத்தை ரசிக்கக்கூடும். நன்றி.

துபாய் ராஜா said...

நியாயமான, நடுநிலையான விமர்சனம்.

Dr.Rudhran said...

i shall see and then tell

butterfly Surya said...

சோனியாவின் வலது புஜம்., அந்த கவிதாயினியின் கண்கள், ரீமாவின் etc., etc.,

தண்டோரா அடங்க மாட்டிங்களா.??

butterfly Surya said...

அதிஷா.. அருமை..

Raja Subramaniam said...

good review...

Dinesh said...

Nalla vimarsanam panni irukeenga...Nichayam indha muyarchigal varaverka pada vendiyadhu thaan...

||| Romeo ||| said...

\\தனுஷ் என்றொரு பாடகர் பாடியுள்ளாராம். நல்ல எதிர்காலம் உண்டு. வசீகரிக்கும் குரல்.//

உனக்கு செம குசும்புதாயா..

தராசு said...

வாழ்க வளமுடன்.

அதி பிரதாபன் said...

//ஆன்ட்ரியா இன்னொரு சோனியா அகர்வால் போல் இருக்கிறார்.//
ஓஹ்ஹோ.... ரைட்டு.

//பார்த்திபன்!. இந்த பாத்திரத்தில் அவரைத்தவிர வேறு யாரும் சிறப்பாய் பொருந்த மாட்டார்கள். //
இது கொஞ்சம் ஓவர். பார்வையும் நடிப்பும் மட்டும் போதாது. ஆடும்போதும், போரில் ஓடும்போதும் கூட நல்லாயிருக்கவேண்டும். அது பார்த்திபனிடம் விடுபட்டுவிட்டது. பார்த்திபன் இடத்தை சரியாக பூர்த்திசெய்யவில்லை என்றே நான் கருதுகிறேன்.

மற்ற கருத்துக்களுடன் ஒத்துப்போகிறேன்.

KaveriGanesh said...

தனுசிடம் பேசினேன், அவர் பாடிய பாடல் மிகவும் நன்றாக இருப்பதாக தெரிவித்தேன், பிரபல பாடகர்களின் குரல் இருப்பதாக தெரிவித்தேன்.

சும்மா சொல்லாதீங்க என்றார். நான் உண்மையாக மனதறிந்து சொல்கிறேன் என்றேன். மிகவும் மகிழ்வுற்றார்.

ரகசிய சிநேகிதி said...

Let me Watch it 1st athisha..
Then will comment ur review .. ok.

damildumil said...

படம் வாந்தியாம்,லாஜிக் வேற நிறைய இடத்துல இடிக்குதுன்னு விஜய் ஃபேன்ஸ் பேசிக்குறாங்க.

அதிஷா said...

//படம் வாந்தியாம்,லாஜிக் வேற நிறைய இடத்துல இடிக்குதுன்னு விஜய் ஃபேன்ஸ் பேசிக்குறாங்க.//

டமால் டுமீல் போலிகளை நம்பாதீர்கள். இந்திய அரசின் தரச்சான்றுப்பெற்ற ஒரே விமர்சனம் அதிஷாவின் விமர்சனம். ஐஎஸ்ஓ 9001 பெற்றது. வேறெங்கும் கிளைகள் இல்லை.

Sabarinathan Arthanari said...

நிச்சயம் வரவேற்க வேண்டிய படம்.
நன்றி
http://sabaritamil.blogspot.com/2010/01/blog-post.html

Anbu said...

\\\\\\\அதிஷா, January 20, 2010 2:05 PM

//படம் வாந்தியாம்,லாஜிக் வேற நிறைய இடத்துல இடிக்குதுன்னு விஜய் ஃபேன்ஸ் பேசிக்குறாங்க.//

டமால் டுமீல் போலிகளை நம்பாதீர்கள். இந்திய அரசின் தரச்சான்றுப்பெற்ற ஒரே விமர்சனம் அதிஷாவின் விமர்சனம். ஐஎஸ்ஓ 9001 பெற்றது. வேறெங்கும் கிளைகள் இல்லை.\\\\\\\\

:-))))))))))))))))

கும்க்கி said...

போலிகளை நம்பாதீர்கள். இந்திய அரசின் தரச்சான்றுப்பெற்ற ஒரே விமர்சனம் அதிஷாவின் விமர்சனம். ஐஎஸ்ஓ 9001 பெற்றது. வேறெங்கும் கிளைகள் இல்லை...

இதை மட்டும் ரசித்தேன் குருவே...

" உழவன் " " Uzhavan " said...

நீங்க சொல்றதும் கரெக்ட்தான் பாஸ்...
 
//ஆன்ட்ரியா இன்னொரு சோனியா அகர்வால் போல் இருக்கிறார்//
 
பிரச்சனையே இதுதானே :-)

Nikanth Karthikesan said...

"இரண்டாம் பாதி போர்."
போர் == War
போர் != Bore

This could be mis-quoted! :)

SurveySan said...

//ஆயிரத்தில் ஒருவன் கடைசி கேட்டகிரி/// இது ரைட்டு.

//இன்னொரு முறை பார்க்க வேண்டும், ரீமா சென்னிற்காகவும் செல்வராகவனுக்காகவும்! // இதுவும் ரைட்டு. ஆனா, டிவிடியில் :)

சீனு said...

//ஆக நுணுகி தவறுகளைக் கண்டு பிடித்துக் குற்றம் சொல்வதைத் தவிர்க்கலாம்.//

நுணுக்கமாகவெல்லாம் வேணாம். வெளிப்படையாகவே கேட்கலாம்.

வேட்டைக்காரன் போன்ற படங்களிலெல்லாம் லாஜிக் பார்ப்பதில்லை. இதுக்கு மட்டும் ஏன் பார்க்கிறீர்கள் என்கிறார்கள்? செல்வா தான் க்லோஸ்டு டு ரியாலிட்டி ஸ்டைல்ல தானே படம் எடுக்கிறவர். அதனால அவருகிட்ட லாஜிக் எதிர்பாக்குறதுல என்ன தப்பு? இல்லை, நானும் ஒரு மசாலா படம் டைரக்டர் என்பதை ஒத்து கொள்ளலாமில்ல?

சோழர்களை அதற்கு இவ்வளவு கேவலமாக காட்டவேண்டும்? ஒரு துண்டு நரமாமிசத்திற்கு அலைபவர்களாக? என்னதான் 800 வருடங்களுக்கு முன் ஓடி ஒளிந்து வாழ்பவர்களானாலும் அவர்கள் என்ன நாகரீகமற்றவர்களாகவா இருப்பார்கள்?

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நாட்டுப்புறவியல் பேராசிரியரும் மக்கள் வழக்காறுகள் ஆய்வாளருமான முனைவர் சுந்தரேசன் ஜு.வி.யில் கேட்டிருப்பது சரி தான் என்று தோன்றுகிறது.

"உலகுக்கு கலாசாரத்தை, பண்பாட்டை கற்றுக் கொடுத்தவர்கள் நமது சோழப் பேரரசர்கள். தேர்தல், குடவோலை முறை, சிற்பம், ஓவியம், நில அளவை என்று நாகரிகத்தின் உச்சத்தைத் தொட்ட அவர்களைப் போய் காட்டுமிராண்டிகளாக, உருவகப் படுத்தியிருக்கிறார்கள். ஒன்றாம் நூற்றாண்டிலேயே மரக்கலம் கட்டி கடல் கடந்து வெளிநாட்டுக்குப் போய் வாணிபம் செய்தவர்களை, கிட்டத்தட்ட வழிப்பறிக் கொள்ளையர்கள் போல சித்திரித்திருக்கிறார்கள். கி.பி. 1000-மாவது வருடத்தில் ராஜராஜன் வாழ்ந்த சிறப்பான வாழ்க்கையை, சோழ தேசத்து மக்களின் செழிப்பை... பாடாத இலக்கியங்கள் இல்லை. இன்றைக்கும் அந்த கலை தாகத்துக்கான விசுவரூப சாட்சியாக நிற்கிறது தஞ்சை பெரிய கோயில். அப்படி இருக்கும்போது அவனுக்கு பிறகு வந்த சோழ அரசர்கள் அந்த முன்னேறிய நாகரி கத்தின் வழித் தோன்றல்களாகவே இருப்பார்கள் என்பதைப் புரிந்துகொண்டு, அதன்படிதானே கதை புனைய வேண்டும்? ஆனால், இந்தக் கதையில் வரும் சோழ மன்னனும், சோழ தேசத்து மக்களும் எங்கோ ஓரிடத்தில் பதுங்கியிருந்து கொண்டு கொடிய காட்டு வாழ்க்கை வாழ்கிறார்கள். ஊருக்கெல்லாம் சோறு அளித்த சோழர்கள், ஒரு துண்டு இறைச்சிக்கு அடித்துக் கொண்டு சாகிறார்கள். அமுதூட்டிய முலையை அவிழ்த்து, அதில் பாலுக்கு பதில் ரத்தம்தான் வருகிறது என்று பிழிந்து காட்டி, ஒரு துண்டு இறைச்சி வாங்கிச் செல்கிறாள் ஒரு சோழ தேசப் பெண். எதிரியையும் மன்னித்த மாண்புடைய சோழர்கள், அகப்படும் பெண்களை எல்லாம் துகிலுரிப்பவர்களாக சித்திரிக்கப்பட்டுள்ளனர்."

மேலும் சில காட்சிகளை தவிர்த்திருக்கலாம் என்பது தன் என்னைப்போன்றவர்களின் ஆதங்கம். ரீமா நின்று கொண்டு ஒன்னுக்கு அடிப்பது, முலையை அவிழ்த்து ரத்தம் காட்டுவது, தலைகள் நசுங்குவது போன்றவற்றை தவிர்த்திருக்க முடியாதா? அருமையான கதையை சரியாக எடுக்கவில்லை என்பது தான் உண்மை.

மற்றபடி இப்படிபட்ட படங்கள் வருவதை யாரும் தடுக்கவில்லை. அதை சொல்லியவிதம் தான் சரியில்லை. செல்வாவின் படங்கள் பெரும்பாலும் ஒரு சைக்கோத்தனமாக தான் இருக்கிறது. கொஞ்சம் அந்த ஸ்டைலை மாற்றிகொள்ளலாம், இல்லையா?

சந்தோஷ் = Santhosh said...

ஆதிஷா,
படத்தில் ஒரு இடத்தில் அவர்கள் ஒரு ஒலியை கேட்பார்கள் அதற்கு பிறகு பைத்தியம் பிடிச்சது போல் அலைவார்கள் அதற்கு காரணம் நமது செவிகளில் ஒரு அளவை தாண்டிய ஒலியை கேட்டால் மூளை குழம்பிவிடும். இது அறிவியல் பூர்வமான உண்மை குதற்மலாபே போன்ற சித்திரவதை தளங்களில் இது போன்ற சித்திரவதைகள் மிகப்பிரபலம்..

twitter_karthi_kamahade said...

I agree with சீனு ...

I too did not like this movie.. Maybe... I do not know how to appreicate this movie like you.. technically or tamilway..

but, I will tell you,people like me are more in Tamilnadu and only very less people can understand such movies.

I liked Hey-Ram and watched it twice... Atleast story was easy digestable..

I liked few scenes, most of it in first half.. Second half...only "SET" I liked..not story..

Who said Parthiban acted well?
He is FIT to act(??) only for Shakeela.... Can he take one movie without double meaning?

Anyone like Nasaer or Virumandi actor Pasupathy would have acted better than this..

Anyways, opinios always differ with people ... I also likes your style of writting review..

sweet said...

padam superp, aanal hey ram nalla irukku-nu sonnadhu golden comedy

chanthuru said...

karthi....
ithelam nasar , pasupathi nala acter than ...parthipan mathri ila oki.....