21 January 2010

இன்பம்,மகிழ்ச்சி,சந்தோசம்,களிப்பு,பூரிப்பு இத்யாதிகள்!(படத்தை சொடுக்கி பெரிதாக்கியும் பார்க்கலாம்)

திண்டுக்கல் அருகில் இருக்கும் பெயர் மறந்து போன ஒரு சின்ன கிராமத்தில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டம். வார்த்தைகளில் எழுத முடியாத நிறைவான நிகழ்வு. அதனால் இந்த படமும் இரண்டு வரிகளும்தான்.


***


அமீரிடம் உதவி இயக்குனராக பணியாற்றும் நண்பர் மோகன் , என்னுடைய சிறுகதை ஒன்றை  குறும்படமாக்கியுள்ளார். கலைஞர் தொ.காவில் ஒளிபரப்பாக இருக்கும் குறும்படப்போட்டியில் அது திரையிடப்படவுள்ளது. எனக்கு போட்டுக்காண்பித்தார். என் கதையை விட அருமையாக எடுத்திருந்தார். அடுத்த மாதம் சிடி தருவதாக கூறியுள்ளார். கதை - அதிஷா என டைட்டிலில் வந்த போது மெய்ஜில்லிர்ப்பு. அடுத்த சுற்றுக்கும் இன்னொரு கதை கேட்டிருக்கிறார். எழுதிக்கொண்டிருக்கிறேன்.

***


இப்போதெல்லாம் பெயர் மறதி அதிகமாகிவிட்டது. பல நண்பர்களையும் நேரில் சந்தித்தாலும் அவர்களுடைய பெயர் சட்டென நினைவுக்கு வர மறுக்கிறது. காரணம் என்னவாக இருக்கும் என யோசிக்கிறேன். எதைக்குறித்து யோசிக்கிறேன் என்பதும் சமயங்களில் மறந்து போகிறது. சில நாட்களுக்கு முன் என் பெயரே மறந்து போய் கால்மணிநேர கடுமையான சிந்தனைக்கு பின் நினைவுக்கு வந்தது. நமக்கு நன்கு அறிமுகமாக நண்பராக இருந்தாலும் சமயங்களில் நேரில் சந்திக்கும் போது யார் இவரு ஏன் நம்மள பாத்து சிரிக்கிறாரு என்று யோசிக்க ஆரம்பித்து விடுகிறேன். இது என்ன மாதிரி வியாதி என்று தெரியவில்லை. மருத்துவர் ருத்ரனிடம் ஒரு அப்பாய்ன்ட்மென்ட் வாங்கிவிட உத்தேசமாக இருக்கிறேன். ஆனாலும் ஆகாத நண்பர்களை(?) சந்திக்கும் போது இது போன்ற மறதிகள் மகிழ்ச்சியையே அளிக்கின்றன.

***

அடுத்த மாதம் எனக்கு நடக்கபோகிற ஒரு நிகழ்வு மகிழ்ச்சியானதா  இல்லை வருத்தம் தரக்கூடிய துன்பியல் சம்பவமா  என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் நடக்க இருக்கிறது. முறையான அறிவிப்புகளை விரைவில் வெளியிட வேண்டும். எது நடந்தாலும் கோவையிலேயே நடக்கக் கடவது என்ற என்னுடைய பாட்டி சாபம் பலிக்கப்போகிறது. எது நடந்தாலும் நண்பர்கள் அனைவரும் நிச்சயம் வருவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

***

கி்ழக்கு மொட்டைமாடியில் எப்படியாவது நாலு பேரை இந்த ஆண்டில் எழுத்தாளாரக்குவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் பெரியவர் ஒருவர் சென்ற வாரம் பயிற்சி முகாம் ஒன்றை நடத்தினார். நிறைய அறி்வுரைகள் ஐடியாக்கள் கூறினார். வந்திருந்த பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். நானும். நல்ல முயற்சி. அடிக்கடி இது போன்ற பயிற்சிப்பட்டறைகள் நடத்தினால் என்னைப்போன்ற சிறுவர்களுக்கு உபயோகமாக இருக்கும். உடல்நலக்குறைவோடு அத்தனைபேரிடமும் பேசிய அந்த பெரியவரை நினைத்து சந்தோசப்படுவதா வருத்தப்படுவதா பெருமைப்படுவதா தெரியவில்லை.

***

பூனைக்குட்டிக்கவிதை
புரியவில்லை என் வீட்டு பூனைக்கு

அம்மா எத்தனை முறை கொன்றழித்துவிட்டாள்

போன முறை ஏழு

அதற்கு முன் எட்டு

இந்த முறை ஆறு

ஒன்றொன்றாய் கொல்ல சோம்பேறித்தனம்

சின்னகிண்ணத்தில் ஒரு துளி விஷம்

அம்மா அடித்துவிடுவாள் அரைசதம்

பூனையும்

புரியவில்லை என் வீட்டு பூனைக்கு

இன்னமும் இரவுகளில் புணர்ச்சி வெறியில்

பிதற்றிக்கொண்டு திரிகிறது இரவெல்லாம்

புரட்சி செய்யத்தெரியாத புரட்டுப் பூனை

****


28 comments:

நிலாரசிகன் said...

படம் அருமை. அந்த புன்னகையும்.
அடுத்த மாத "நிகழ்விற்கு" இப்போதே வாழ்த்துகள் அதிஷா :)

அரவிந்தன் said...

//அடுத்த மாதம் எனக்கு நடக்கபோகிற ஒரு நிகழ்வு மகிழ்ச்சியானதா இல்லை வருத்தம் தரக்கூடிய துன்பியல் சம்பவமா என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் நடக்க இருக்கிறது.//

வாழ்த்துக்கள்!!! அதிஷா..

அன்புடன்
அரவிந்தன்
பெங்களூர்

Unknown said...

மீ தி first ..., வாழ்த்துக்கள் தல...,

sathishsangkavi.blogspot.com said...

பூனைக்குட்டி கவிதை கலக்கல்...

அறிவிலி said...

பதினாறு பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகள்.

Vijayashankar said...

//சில நாட்களுக்கு முன் என் பெயரே மறந்து போய் // :-)

புனைபெயரால் வந்த குழப்பம்!

வாழ்த்துக்கள் அதிஷா. மெயிலில் ஸ்கேன் பண்ணி கார்டு போடுங்க!

Anonymous said...

een eppothum periyavar enru azhaikireergal? avrukku Mudirntha thotram,vayathu 39 thanam.

Unknown said...

/-- ஆனால் நிச்சயம் நடக்க இருக்கிறது. --/

Be happy... hearty wishes, whatever it has to be...

குசும்பன் said...

பூனையை வைத்து புனைவு எழுதிவிட்டதால் இனி நீங்களும் பின்நவினத்துவ வியாதி ஆளுதான்!

மணிகண்டன் said...

All the very best for your married life. After marriage, you would be happiness personified.

So, don't write rubbish like thunbaiyal and all.

Nice post. Keep writing after the marriage too.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அய்.அண்ணன் மாட்டப் போறாங்க..
டும்... டும்... டும்...

வாழ்த்துக்கள்...

செ.சரவணக்குமார் said...

நல்ல பகிர்வு.

Romeoboy said...

சந்தோஷமான நிகழ்வுக்கு என்னை அழைப்பு உண்டா ??

முரளிகண்ணன் said...

வாழ்த்துக்கள் அதிஷா கதைக்கும், திருமணத்துக்கும்.

வால்பையன் said...

குழந்தைகள் அழகு!

நடுவில் இருக்கும் பச்சைப்பனியன் தாத்தா யாரு!?

Ganesan said...

அதி,

உனக்கு திருமணமா? இந்த சின்ன வயதிலயா?

வாழ்த்துக்கள்.

கார்க்கிபவா said...

/KaveriGanesh said...
அதி,

உனக்கு திருமணமா? இந்த சின்ன வயதிலயா//

அவர் என்ன அறுபதாம் கல்யாணமா பண்றாரு? பார்த்து(?) சொல்லுங்கண்ணா

வெற்றி said...

திருமண வாழ்த்துக்கள்...!!!

Anonymous said...

//இப்போதெல்லாம் பெயர் மறதி அதிகமாகிவிட்டது. பல நண்பர்களையும் நேரில் சந்தித்தாலும் அவர்களுடைய பெயர் சட்டென நினைவுக்கு வர மறுக்கிறது. காரணம் என்னவாக இருக்கும் என யோசிக்கிறேன். எதைக்குறித்து யோசிக்கிறேன் என்பதும் சமயங்களில் மறந்து போகிறது. சில நாட்களுக்கு முன் என் பெயரே மறந்து போய் கால்மணிநேர கடுமையான சிந்தனைக்கு பின் நினைவுக்கு வந்தது. நமக்கு நன்கு அறிமுகமாக நண்பராக இருந்தாலும் சமயங்களில் நேரில் சந்திக்கும் போது யார் இவரு ஏன் நம்மள பாத்து சிரிக்கிறாரு என்று யோசிக்க ஆரம்பித்து விடுகிறேன். இது என்ன மாதிரி வியாதி என்று தெரியவில்லை.//

I’m a Manager in a reputed software organization. I was literally shocked by the above paragraph. Not sure, what driven behind this for you (personality concerns??), but in my case it is very true. I’m currently in US and returning from recent India trip, I do have the same problem. There are situations when very familiar faces ran into me and it takes few minutes to recollect their name (some times not able to).

Hey – incase any medical specialist read this post, would you throw some light here?

கோவி.கண்ணன் said...

//அடுத்த மாதம் எனக்கு நடக்கபோகிற ஒரு நிகழ்வு மகிழ்ச்சியானதா இல்லை வருத்தம் தரக்கூடிய துன்பியல் சம்பவமா என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் நடக்க இருக்கிறது. முறையான அறிவிப்புகளை விரைவில் வெளியிட வேண்டும். எது நடந்தாலும் கோவையிலேயே நடக்கக் கடவது என்ற என்னுடைய பாட்டி சாபம் பலிக்கப்போகிறது. எது நடந்தாலும் நண்பர்கள் அனைவரும் நிச்சயம் வருவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது.//

என்ன தம்பி போருக்கு போகப் போகிறாயா ?

:)

☀நான் ஆதவன்☀ said...

புகைப்படம் அழகு. உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத புகைப்படமாக இது இருக்கும்.

அடுத்த மாதம் நடக்கும் நிகழ்விற்கு வாழ்த்துகள்.

மணிஜி said...

//அடுத்த மாதம் எனக்கு நடக்கபோகிற ஒரு நிகழ்வு மகிழ்ச்சியானதா இல்லை வருத்தம் தரக்கூடிய துன்பியல் சம்பவமா என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் நடக்க இருக்கிறது.//

அப்ப கைகளுக்கு மறைவில் வேலையிருக்காது.

gulf-tamilan said...

'துன்பியல் சம்பவம்'நடக்க வாழ்த்துக்கள்!!! :)))
குறும்படம் blogல் போடுங்க நாங்களும் பார்க்கிறெம்

K.R.அதியமான் said...

அன்புத்தம்பி அதிஷா,

வாழ்த்துக்கள் : கதைக்கும், திருமணத்துக்கும்.

"உழவன்" "Uzhavan" said...

வாழ்த்துகள் :-)

எம்.எம்.அப்துல்லா said...

மறதி :)

வெள்ளிநிலா said...

அதிசா வல்லாரை கீரை சாப்பிடுங்கள்
வாழ்த்துக்கள்

Sanjai Gandhi said...

சகோதரி திருமதி அதிஷாவுக்கு அனுதாபங்கள்.. யோவ். அங்கயும் கவிதை கதை சொல்லி பயமுறுத்தாம இருங்க..:)