02 June 2010

இசைராஜாவிற்கு பிறந்தநாள்இரவு பதினோறு மணிக்கு மேல் , சில்லுனு காத்து வீச , தன்னந்தனியாக பைக்கில் விபத்து நேர்ந்துவிடாத வேகத்தில் வண்டி ஓட்டியபடி , காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு ‘செந்தூரப்பூவே.. செந்தூரப்பூவே சில்லென்ற காற்றே!’ , அதைத்தொடர்ந்து ‘இதழில் கதை எழுதும் நேரமிது.. இன்பங்கள் அழைக்குது’ , அதைத்தொடர்ந்து ‘ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் கண்ணோ.. ராஜ சுகம் தேடிவர தூதுவிடும்..’ , பொசுக்கென வீடு வந்துவிடும். வேலை முடிந்து அவ்வளவு தாமதமாக வீட்டிற்குச் சென்றாலும் , ஏன்டா இவ்ளோ சீக்கிரம் வீடு வந்துச்சு , ச்சே இன்னும் மூணு பாட்டு கேட்ருக்கலாமோ என்று பலநாள் என்னை ஏங்கவைத்தவர் இளையராஜா.

எனக்கு சில வருடங்கள் முன்புவரை இளையராஜாவை வெறும் மொக்கை இசைமையப்பளராகவும் , வெறும் டப்பாங்குத்து , கிராமத்துப்பாட்டுக்காரன் என்கிற அளவில்தான் பரிச்சயம். என் இசை அறிவு சூன்யம். ஏ.ஆர்.ரஹ்மானே என்னுடைய ஆதர்சனம். எப்போதும் பூங்காற்றிலே உன் சுவாசத்தில், மூழ்கி கிடப்பேன். ரஹ்மானின் துள்ளலில் ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி ஊர்வசி என்று தலைசுழல ஆடிக்கொண்டிருப்பேன். இளையராஜா ரசிகர்களிடமும் சண்டையிட்டிருக்கிறேன். என்னையா பெரிய புடலங்கா இளையராஜா அவரால ரஹ்மான் மாதிரி பாலிவுட்டுல கலக்க முடிஞ்சுதா? உலக இசைனா தெரியுமா.. எப்ப பார்த்தாலும் டன்டனக்க டனக்குனக்கா தானே! என்று ஏளனம் பேசியிருக்கிறேன். உண்மையில் இளையராஜா விவாதப்பொருளல்ல உணர்வு என்பது அப்போது எனக்கு தெரிந்திருக்கவில்லை. அதை உணர இயலாத வயதும் காரணமாய் இருந்திருக்கலாம்.

உணர்வுகள் கோர்க்கும் அவருடைய இசையை உணரும் தருணம் , என் காதலியிடமிருந்தே தொடங்கியது. என் காதலியுடனான ஒவ்வொரு நிகழ்வுக்கும் அவரிடம் ஒரு இசை இருந்தது. அவருடைய இசையில் என் காதலுக்கான தருணங்கள் நிரம்பிக்கிடந்தன. என்ன சத்தம் இந்த நேரம்.. எந்த நேரத்திலும் மனதோடு அப்பிக்கொண்ட இசை அது. இப்போதும் மௌனராகத்தின் பீஜிஎம் என்னுள் கலந்து விட்டிருக்கிறது. துள்ளல் இசைக்கும் அந்த படத்திலேயே இன்னொரு பீஜிஎம் வைத்திருப்பார். அவள் கோபப்பட்டு கன்னம் சிவந்த போது உண்டாகும் அழகை இளையராஜாவின் பாடல்களில் மீட்டெடுத்தேன். அவளுடைய செல்ல சீண்டல்களும் , முத்தகங்களும் எல்லாமே புதைந்திருந்தது அந்த இசையில். உதாரணம் அழகிய கண்ணே உறவுகள் நீயே!

இதோ திருமணமாகிவிட்டது.. இப்போதும் மெட்டிஒலி காற்றோடு என்னை நெஞ்சை தாலாட்டுகிறது!. மண்ணோடு கலந்த என் இசையாக ராஜாவின் இசையை பார்க்கிறேன். இன்றும் என்னுள் இறங்கி ஏதேதோ செய்து கொண்டிருக்கும் அந்த இசை எப்படி என்னை ஆக்கிரமித்த்தென்று என்னால் சொல்லிவிட முடியாது! அது எங்கு தொடங்கியதாக இருந்தாலும்.. ஆக்கிரமிப்பு முழுமையானது.

இளையராஜாவை விமர்சிப்பவர்கள் என்ன காரணங்களைச் சொன்னாலும் அவருடைய இசையையோ அவருடைய திறமையையோ யாராலும் விமர்சிக்க முடியாது! எத்தனை ஆயிரம் பாடல்கள்.. எத்தனை மெட்டுக்கள்.. ராஜாவைப்பற்றி ஏதேதோ எழுதிவிட்டேன் போதும்.

ரஹ்மானிடமிருந்து என்னை பிரித்த நாட்களில் ஓவர்நைட்டில் இளையராஜா என்னை ஆக்கிரமித்துவிடவில்லை. கொஞ்ச கொஞ்சமாக ஸ்லோ பாய்சனைப்போல என் உடலெங்கும் பரவி இதோ இப்போது என் முழுக்க ராஜாவின் இசை எப்போதும் , அழும் போதும் சிரிக்கும் போதும்..

இன்று இசைராஜாவிற்கு எத்தனை வயதென்று தெரியவில்லை. இன்று பிறந்தநாளாம்! வணங்குகிறேன்.

நிறைய பாடல்கள் பிடித்தாலும், எனக்கு நிறைய பிடித்த அவருடைய ஒரு  இசைமாதிரி ஒன்று!

27 comments:

தமிழ் அமுதன் said...

good one..!

Anonymous said...

எல்லாம் சரிதான், ‘ஆவாரம்பூவு, ஆறேழு நாளா’ பாட்டுமட்டும் அவர் இசையமைச்சது இல்லை :)

- குறை கண்டுபிடித்தே பெயர் வாங்குபவன் ;)

Unknown said...

மாற்றிவிடுகிறேன் .. அது நரசிம்மன் என்பவர் இசையமைத்ததாம்.. இப்போதுதான் பக்கத்துசீட்டு தோழர் கன்பார்மினார். மாற்றிவிடுகிறேன். சுட்டிக்காட்டிய சொக்கனுக்கு தன்யாவாதலு!

எல் கே said...

nice one sir

மணிகண்டன் said...

Good one Athisha. By the way, which lover were you talking about ?

Unknown said...

@மணி

எந்த காதலியைப்பற்றிச்சொல்ல.. காதலி என்று ஒருமையில் நான் எழுதியிருந்தாலும் என் உணர்வுகளை போல அதுவும் பன்மையே! ;-)

சிவாஜி சங்கர் said...

பதிவிற்கு நன்றி அதிஷா.. :)

இசை ஞானி 1943ல் தேனி பண்ணை புறத்தில் பிறந்தவர்..
பெற்றோர்: டேனியல் ராமஸ்வாமி, சின்னத்தாய்

அய்யாவிற்கு என் வாழ்த்துக்களும் வணக்கங்களும் :)

Unknown said...

டாக்டர் புருனோ வாழ்த்து சொல்வாரா ?

கவின் மலர் said...

நன்றி அதிஷா!

அந்த உதிரிப்பூக்களுக்கும் தான்
நெகிழ வைக்கும் இசை. இதைத்தான் நான் என் பேஸ்புக்கில் போடலாம் என்று எண்ணினேன். தேடுகையில் ‘மெட்டி ஒலி’ உடனே கிடைத்ததால் அதைப் போட்டேன்.

இங்கு வந்து பார்த்தால் உஙக்ள் இடுகையிலும் ‘மெட்டி ஒலி’ வந்திருக்கிறது.

Bruno said...

ராகதேவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

1992 வரை அவர் இசையமத்தது போல் மேலும் 20 வருடங்கள் இசையமைத்து ஆஸ்கார் பல பெற வேண்டும் !!

Unknown said...

நானும் வாழ்த்துகிறேன்.ராஜா ரசிகறா??முதுகு வலிக்க ராஜா இசைப் பதிவு போடறேன்.
பின்னூட்டம் போடறது கிடையாது.

(உங்கள் பதிவுகளை எந்தத் திரட்டியும் திரட்டக் கூடாது என்று ஆர்டர்...ஆர்டர்...ஆர்டர்...)

ஏம்பா... அதிஷா! என்னுள்ளே என்னுள்ளே(வள்ளி)பாட்டின் வீணை வெர்ஷன், ராஜபார்வை வயலின் சோலோ(வழக்கமான சோலோ அல்ல) வெர்ஷன் அனுப்பிச்சேன். இன்னிக்கு வரைக்கும் ஒரு பதிலையும் காணும்.

உங்கள் profileலில் இருக்கும் சுட்டிக் குழந்தையின் படத்தைப்பார்த்துக்கொண்டே”அழகிய கண்ணே” பாட்டு ஓடுகிறது.

ஜெய் said...

// இளையராஜா விவாதப்பொருளல்ல உணர்வு என்பது அப்போது எனக்கு தெரிந்திருக்கவில்லை. அதை உணர இயலாத வயதும் காரணமாய் இருந்திருக்கலாம். //

எனக்கும் இதே அனுபவமே.. முன்பு எனக்கு பட்டிக்காட்டு இசையாக தெரிந்ததெல்லாம் இப்போது, தேனாய் இருக்கிறது..

ஜெய் said...

// 1992 வரை அவர் இசையமத்தது போல் மேலும் 20 வருடங்கள் இசையமைத்து ஆஸ்கார் பல பெற வேண்டும் !! //

நான் ரஹ்மான் ரசிகன்தான்.. ஆனால், ராஜா 1992-க்கு பின்னும் மெருகேறிக்கொண்டேதான் இருக்கிறார் நண்பரே..

பலபாடல்களை நாம்தான் கேட்பதில்லை என எனக்கோரு வருத்தம்..
உதா: ‘எனக்கு பிடித்த பாடல்’ (படம்: ஜூலி கணபதி)
http://www.youtube.com/watch?v=KRClU3hUf34
காற்றில் வரும் கீதமே.. (படம்: ஒருநாள் ஒரு கனவு)
http://www.youtube.com/watch?v=ER062n90_K8
அந்த பாட்டுக்கு வரி எழுத வாலியும், ராஜாவும் பேசியது இங்கே இருக்கிறது.. கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்.. கேட்டுப்பாருங்கள்.. http://www.youtube.com/watch?v=QKu1SbSxrZU

கோபிநாத் said...

இசைஞானிக்கு இங்கையும் என்னோட மனமார்ந்த வணக்கங்கள் ;))

Subbaraman said...

Nandraaga irunthathu..Ithu varaikum Thalapathiyil vara "Sundhari kannal oru sethi" paadalil varum Isai karuvigalin korvaiyai edhilum kettadhu illai.

Pinnani Isaiyilum Thalaivar than munnani!!

மேவி... said...

சின்ன வயசிலிருந்தே தனிமையில் வளர்ந்தவன் நான்..... அப்பொழுதெல்லாம் ராஜாவின் இசையே எனக்கு துணை.

நான் காதலிக்கவில்லை ....ஆனால் சில நேரங்களில் என்னை கோவபடாமல் வைத்திருப்பது ராஜா சார் தான் ...


இதையெல்லாம் விட கோபுர வாசலிலே பட டைட்டில்/தீம் மியூசிக் கேட்டு பாருங்க

Ganesan said...

இப்பொழுதாவே வழிக்கு வந்தாயா?

மங்குனி அமைச்சர் said...

இன்று பிறந்தநாளாம்! வணங்குகிறேன்.
///

me to

Anonymous said...

Athisha,Kavinmalar,

Either "Azhakia kanne" or "metti oli" is Raja's no.1 song.I am still undecided for more than 10 years.

Raashid Ahamed said...

பண்ணைபுரத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒரு இசை மாமேதை, இசை ஞானி, மேஸ்ட்ரோ,இன்னிசைச்சக்கரவர்த்தி இளையராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்தை அதிஷாவோடு தெரிவிப்பதில் பெருமையடைகிறோம் !! இந்த இசை ஞானியின் நிறைய பாடல்கள் ஜெம்ஸ் எனலாம். கண்ணதாசன் இளையராஜா கூட்டணியில் உருவான பாடல்களை கேட்டுப்பாருங்கள் எத்தனை அழகானவை ! மூன்றாம் பிறை, தியாகம், எனக்கு பிடித்த சில பாடல்கள் - செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் (முள்ளும் மலரும்) >>இதைவிட ஒரு அழகான பாடல் தமிழ் திரையில் இதுவரை வந்ததில்லை வரவும் முடியாது என்பது என் தனிப்பட்ட கருத்து<< , கோவில் மணி ஓசைதன்னை (கிழக்கே போகும் ரயில்), பொன்னாரம் பூவாரம் (பகலில் ஒர் இரவு) சோலைக்குயிலே காலைக்கதிரே (பொண்ணு ஊருக்கு புதுசு), இந்த படத்தில் வரும் ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டிவருது என்ற பாடலுக்காக என் 9வது வயதில் ஞாயிற்றுக்கிழமை எப்போது வரும் என்று தவம் கிடந்திருக்கிறேன். இலங்கை வானொலியில் ஒரு நிகழ்ச்சியில் 5வாரங்கள் நம்.1 இடத்தில் இருந்தது. மேலும் பல படங்களின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் அவற்றுள் சில: 16 வயதினிலே, முள்ளும் மலரும், கிழக்கே போகும் ரயில், நிறம் மாறாத பூக்கள், காற்றினிலே வரும் கீதம், பொண்ணு ஊருக்கு புதுசு, ஜானி, ரோசாப்பூ ரவிக்கைக்காரி, கன்னிப்பருவத்திலே, நதியை தேடிவந்த கடல், ஏணிப்படிகள், மீண்டும் கோகிலா, தர்ம யுத்தம், ப்ரியா (இதில் தான் ஸ்டீரியோ இசை தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டது) இப்படி நூற்றுக்கணக்கில் சொல்லலாம்.

Anonymous said...

hey,
me too die hard fan of raja.. but sorry to say.. the bgm of mouna raagam was inspired or copied from http://www.youtube.com/watch?v=dGjk8JPu-Ns&feature=related

btw.. this info was provided by one of the arr fan :D

Anonymous said...

Nice post

ஷர்புதீன் said...

where is my old comment for this article?
i will go to consumer court athisha....
:)

கொற்றவை said...
This comment has been removed by the author.
ROSAVASANTH said...

/சில வருடங்கள் முன்புவரை இளையராஜாவை வெறும் மொக்கை இசைமையப்பளராகவும் , வெறும் டப்பாங்குத்து , கிராமத்துப்பாட்டுக்காரன் என்கிற அளவில்தான் பரிச்சயம். என் இசை அறிவு சூன்யம். ஏ.ஆர்.ரஹ்மானே என்னுடைய ஆதர்சனம். ... இளையராஜா ரசிகர்களிடமும் சண்டையிட்டிருக்கிறேன். என்னையா பெரிய புடலங்கா இளையராஜா அவரால ரஹ்மான் மாதிரி பாலிவுட்டுல கலக்க முடிஞ்சுதா? உலக இசைனா தெரியுமா.. எப்ப பார்த்தாலும் டன்டனக்க டனக்குனக்கா தானே! என்று ஏளனம் பேசியிருக்கிறேன். உண்மையில் இளையராஜா விவாதப்பொருளல்ல உணர்வு என்பது அப்போது எனக்கு தெரிந்திருக்கவில்லை. அதை உணர இயலாத வயதும் காரணமாய் இருந்திருக்கலாம்./

யானையை பார்த்த குருடன் மாதிரி உங்களுக்கு மூக்கோ வாயோ அகப்பட்டு அத பத்தி பேசிட்டிருக்கீங்க. இளயராஜா இசையை முழுமையாக உணர இன்னும் 100 வருஷம் வேணும். உங்களுக்கும் எனக்கு அந்த பாக்கியம் இல்லை.

Anonymous said...

முதல் பாதி முழுவதும் எனது எண்ணங்களே ;))))

Anonymous said...

மீதி பாதிக்கு நான் காதலிக்கவும் இல்லை திருமணமும் ஆக வில்லை ;))