19 July 2010

மீனவ நண்பன்தமிழர்களே தமிழர்களே
தயவு செய்து
என்னைக் கடலில் தூக்கிப் போட்டுவிடாதீர்கள்..
சிங்கள இராணுவம் 
சுட்டு விடும் 
பின் பிணமாகத்தான் மிதப்பேன்! படம் - அதிஷா

16 comments:

ஆதிமூலகிருஷ்ணன் said...

இதென்ன கெட்ட பழக்கம், போட்டோவெல்லாம் புடிக்கிற.? போட்டோ புடிச்சா இப்பிடித்தான் கவிதையெல்லாம் எழுதத்தோணும், அப்புறம் நேரா கீழ்ப்பாக்கம்தான். :-))

Manion said...

செம நறுக்குன்னு இருக்கு!
செம்மொழி காவலர் மஞ்சள் துண்டுல நாண்டுகிட்டு சாகலாம்!
அவர் மானமுள்ள தமிழனா இருந்தால்!

க‌ரிச‌ல்கார‌ன் said...

சூப்ப‌ர் க‌விதை ந‌ன்றி அதிஷா

விக்னேஷ்வரி said...

புகைப்படம் அழகு.

Anonymous said...

\\Blogger Manion said...

செம நறுக்குன்னு இருக்கு!
செம்மொழி காவலர் மஞ்சள் துண்டுல நாண்டுகிட்டு சாகலாம்!
அவர் மானமுள்ள தமிழனா இருந்தால்!\\

உங்க ஜெயலலிதா தன் தோழியோட ஜலக்ரீடை செஞ்ச போது செத்து போனானே 150 தமிழன் தமிழச்சி அப்ப நாண்டுகிட்டு செத்து போயிருக்க வேண்டியது தானே....போய்யா வெங்காயம்..என்னவோ கருனாநிதியே டுப்பாக்கி எடுத்து போய் சுட்டது மாதிரி பேச வந்துட்டானுங்க வெங்காயம்.

VELU.G said...

நல்லாயிருக்குங்க

முகிலன் said...

கலைஞரை எல்லாம் சிங்கள ராணுவம் சுடாது. அவர்களுக்குத் தமிழர்கள் மட்டும் தான் எதிரியாம் 

ச.முத்துவேல் said...

இதுவரைக்கும் நல்லாத்தானே போயிட்டிருந்தது.இப்படி உசுப்பேத்தி, உசுப்பேத்தியே..

நல்லதோ, கெட்டதோ எல்லாப் புகழும் அதிஷாவுக்கே.

கே.ஆர்.பி.செந்தில் said...

கலைஞரை பேசியவுடன் கோபம் பொத்துக் கொண்டு வருகிறதே பெயரில்லா நண்பனுக்கு..

தலைவர் கலைஞர் விமர்சனத்துக்கு பயந்தவரா என்ன? இன்னொரு கடிதம் எழுதுவார்..

கட்டுமரமாக வருவேன் என்றாரே கடலில் தூக்கி போடுங்கள் பாப்போம்..

குசும்பன் said...

:))) போட்டையே அடிச்சு நொறுக்குறானுங்க, கட்டுமரத்தை என்ன செய்வானுங்க:)))

அரைகிறுக்கன் said...

என்னைக் கடலில் தூக்கிப் போட்டுவிடாதீர்கள்..

//Blogger கே.ஆர்.பி.செந்தில் said...
கட்டுமரமாக வருவேன் என்றாரே கடலில் தூக்கி போடுங்கள் பாப்போம்..//

ஏங்க விட மாட்டீங்களா அதையும். அவருதான் சொல்றாரே விட்டுடுங்க.கடலையும் நாறப் பண்ணனுமா என்ன?

ஒரிஜினல் "மனிதன்" said...

எரிமலையாய், சுடுதனலாய்,இயற்கைக்கூத்தாய், எதிரிகளை நடுங்கவைக்கும் கொடுவாளாய்,இனமான தீப்பந்தப்பேரொளியாய்,இறைவனுக்கேமறுப்பு சொன்ன இங்கர்சாலாய் பிறந்திட்டான் நம்தலைவன் நமக்கெல்லாம் அண்ணனாக, அறிவு மன்னனாக.

குமுறும் எரிமலை, கொந்தளிக்கும் கடல்,நடமாடும் டைம்பாம் அண்ணன் சாமான் தலைமையில் அகண்ட தமிழகம் அமைக்க அனைத்துப்பதிவர்கள் மற்றும், கணிணி வழி மட்டுமே புரட்சி படைக்க துடிக்கும் கலகக்காரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அல்லும் பகலும் அயராது பாடுபடுவோம்.

தமிழ்த்தேசியம் நிச்சயம், அகண்ட தமிழகம் இலட்சியம்.ஜெய் சீமான்.

raashidsite said...

தரைமேல் பிறக்கவைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான் என்ற ஒரு பாடல் போதும் மீனவர்களின் கண்ணீர் கதை சொல்ல.
ஒரு சாண் வயிற்றை வளர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம்.
வேறுஎன்ன செய்வது !! ஒன்று மட்டும் உறுதி அப்பாவி மீனவ சாது மிரண்டால் கடல் கொள்ளாது, சிங்கள் வெறியனும் தாங்க மாட்டான் !!

udhavi iyakkam said...

இதைப்படித்த பின்பு
கடிதத்தை விட்டு கைபேசியையாவது எடுப்பாரா?

உஜிலாதேவி said...

சூப்ப‌ர் க‌விதை

மகிழ்நன் said...

ஒரு பிரதி கருணாநிதிக்கு அனுப்பி வையுங்கள்