23 February 2011
நடுநிசிநாய்கள்
சைக்கோ த்ரில்லர் , என்பது முடிவாகிவிட்டது. அடுத்தது என்ன? வுட்றா வண்டிய பர்மா
பஜாருக்கு.. இருக்கறதுலயே நல்ல ஹாலிவுட் படமா கிலோ பதினைஞ்சுனு பத்து கிலோ அள்ளி போட்டுகிட்டு, வண்டிய நேரா லாண்ட் மார்க் பக்கம் வுட்டா, முப்பது பர்சென்ட் தள்ளுபடியில சிட்னி ஷெல்டன்,டான்பிரவுன் மாதிரி நிறைய பேர் வேர்வை சிந்தி ரத்தம் சிந்தி எழுதினது கிடைக்கும். எடுத்துக்கோ எடுத்துக்கோ கிடச்ச வரைக்கும் எடுத்துக்கோ!. வீட்டுக்கு வந்து எல்லாத்தையும் மிக்ஸிலவுட்டு அரைச்சு ஒரு கரண்டி உப்பு சேர்த்தா வந்தே வந்திருச்சே சைக்கோ த்ரில்லர்! படத்துக்கு பேரு வித்தியாசமா வைக்கணுமே.. பசுவைய்யாவோ கொசுவைய்யாவோ எழுதின புக்கு பேரு லான்ட் மார்க்ல பார்த்தோமோ.. இன்னா? த்தா நடுநிசி நாய்கள் , செம டைட்டில்.. அதையும் சேர்த்துக்கோ! படத்துல மியூசிக் கெடையாதுனு பில்டப்ப ஏத்து... பிச்சுகிட்டு போகும் படம்.
நடுநிசி நாய்கள். கௌதம் பீட்டர் மேனனின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் புத்தம் புதிய திரைப்படம். சினிமாவில் காமம் மூன்று வகைப்படும். கவர்ச்சி,ஆபாசம்,வக்கிரம். இந்தப்படம் பல இடங்களில் வக்கிரத்தைத் தாண்டுகிறது. அதாவது தொப்புள் காட்டினால் கவர்ச்சி, மார்பகம் காட்டினால் ஆபாசம்.. நடுநிசிநாய்கள் வக்கிரம் என்றால் என்னவென்று புரிய வைக்கிறது.
படத்தின் கதைக்காக மல்லுக்கட்டாமல், சிட்னி ஷெல்டனின் டெல் மீ யுவர் ட்ரீம்ஸ் என்னும் ஆங்கில நாவலில் கொஞ்சம் , கதை பிரதான பாத்திரமான மீனாட்சி அம்மாவை ஹிட்ச் காக்கின் சைக்கோவிலிருந்தும், பிரதான பாத்திரமான வீராவை சைலன்ஸ் ஆப் தி லாம்ப்ஸிலிருந்தும், கொஞ்சம் சிகப்பு ரோஜாக்கள், கொஞ்சம் அந்நியன் (அந்நியனே டெல்மீ யுவர் ட்ரீம்ஸ்தான்) , கொஞ்சம் மூடுபனி. ஒட்டுமொத்தமாக பல படங்களின் பிரபலமான காட்சிகளை ஒருங்கிணைத்து சுட்டபடம் வேண்டுமா சுடாத படம் வேண்டுமா என படமெடுத்திருக்கிறார் பீட்டர் மேனன். இது சர்வ நிச்சயமாக சுட்டபடம்தான். அதிலும் மிக வக்கிரமாக எடுக்கப்பட்ட சுட்டபடம். (ஏற்கனவே கேமரா ஆங்கிள் கூட மாற்றாமல் டிரெயில்ட் படத்தை சுட்டு பச்சகிளி முத்துசரம் என்றெடுத்தவர்தானே!)
படம் முழுக்க யாராவது ஆவ்... ஊவ் என்று காது கிழிய கத்தினாலே அது த்ரில்லர் படமாகவிடும் என பீட்டர் மேனன் நினைத்திருக்கலாம். காது ஜவ்வு பிய்ந்து போகுமளவுக்கு ஒரே இரைச்சல். சைலன்ஸ் ஆப் தி லாம்ப்ஸ்,சைக்கோ படங்களை பார்த்து பிட்டடித்தவர் அந்தப்படங்களில் வெறும் மௌனத்தின் மூலமாகவும் சலனமில்லாத காட்சிகளாலுமே திகிலை உண்டாக்கியிருப்பதை காணலாம். ஸ்டேன்லி குப்ரிக்கின் ஷைனிங் திரைப்படத்தில் நீண்ட வரான்டாவில் குட்டி சைக்கிள் ஓட்டும் சின்னப்பையனின் காட்சியை மட்டும் யூடியுபில் தேடிக்கண்டுபிடித்து பார்க்க பீட்டர் மேனனுக்கு பரிந்துரைக்கிறேன்.
படம் முழுக்க யாராவது யாரையாவது வன்புணர்ச்சி செய்துகொண்டேயிருக்கின்றனர். ஒருகட்டத்தில் தியேட்டரில் நாமும் வண்புணரப்படுகிறோமோ என்கிற சந்தேகமே வந்துதொலைக்கிறது. அதிலும் டாவின்சி கோட் நாவலிலிருந்து சுட்டது, நாயகனின் அப்பா கூட்டுக்கலவியில் முகமூடி போட்டுத்திரியும் காட்சி..
இன்செஸ்ட் கதைகள் நமக்கு புதிதல்ல, அவை எப்போதும் இணையத்திலும்,பிட்டுபுத்தகங்களிலும் இருந்தவைதான். ஆனால் பிட்டுபுத்தகமெழுதுபவனுக்கும் தோன்றாத அப்பா-மகன் இன்செஸ்டை வக்கிரபுத்தி கொண்ட ஒருவரால் மட்டுமே சிந்தனை செய்ய முடியும்.
தமிழகத்தில் ஏ சர்டிபிகேட் படங்களை வயதுவந்தோர் மட்டுமே பார்க்கின்றனர் என நீங்கள் நம்பினால் தியேட்டர் பக்கமே போகமால் திருட்டு டிவிடியில் படம் பார்ப்பவராக இருக்க கூடும். இது வயது வந்தோருக்கான படமாக இருந்தாலும், தியேட்டரில் நிறைய குழந்தைகளை பார்க்க முடிந்தது. அப்பா-மகன் இடையேயான செக்ஸ் காட்சிகள் படம் பார்க்கும் குழந்தைகளின் மனதை எந்த அளவுக்கு பாதிப்பை உண்டாக்கும் என்பது , குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறைக்கு எதிராக படமெடுத்த பீட்டர் மேனனுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். இப்படம் லட்சம் பேரில் இரண்டு பேரை பாதித்தால் அதன் பாதிப்பு என்னவாக இருக்கும். இதை பார்த்து ஓஓ குழந்தைங்கள கூட அதுக்கு யூஸ்பண்ணிப்பார்த்தா என்ன என்கிற நினைப்பு உண்டானால் அதற்கு யார் பொறுப்பு?
என்ன பாஸ், ஊரு உலகத்துல இல்லாததையா காட்டிட்டோம் என்று கேட்பவர்களே! ஊரு உலகத்தில் தினமும் லட்சம் பேர் சுய இன்பம் அனுபவித்துக்கொண்டிருக்கிறான், லட்சம் பேர் தினமும் கழிவறையில் முக்கிக்கொண்டிருக்கிறான் அதையெல்லாம் அச்சு அசலாக காட்ட முடியுமா?
இந்த படம் ஆபாசமாக இருந்து தொலைத்திருந்தாலோ நான்கு பிட்டு சேர்த்து வெளியாகியிருந்தாலோ யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. அதுபோல வாரந்தோறும் நான்கு படங்கள் வெளியாவதும், அது வெளியானதே தெரியாமல் தியேட்டரைவிட்டு ஓடுவதும் சகஜமான ஒன்றுதான். ஷகிலா திரைப்படங்கள் பார்த்து யாரும் கொலைகாரனாகிவிடுவதில்லை.
ஆனால் இந்த பீட்டர் மேனன் தன் வக்கிர சிந்தனைகளை நல்ல படம் என்கிற போர்வையில் வெளியிட்டமையைத்தான் கண்டிக்கிறோம். இதை பார்க்கும் பெற்றோரின் மனநிலை என்னபாடுபடும். பெற்றோரை விட்டுத்தொலையுங்கள். லட்சம் பேரில் ஒரு பையன் இப்படம் பார்த்து இதை செய்து பார்த்தால் என்ன.. நல்லாருக்கும் போலருக்கே என நினைத்தால் என்னவாகும்.. பீட்டர் மேனனின் படம் அதை கன கச்சிதமாக செய்கிறது. கற்பழித்து பாருங்கள் சுவையாக இருக்கும், கொலை செய்து பாருங்கள் இன்பம் கிடைக்கும் என்கிற செய்தியை பெத்தடின் இல்லாமலேயே உங்கள் மூளைக்குள் செலுத்துகிறது.
பிட்டுப்படங்களில் ஒருவழக்கமுண்டு, படம் முழுக்க உடல் உடல் உடல் மட்டுமே நிறைந்திருக்கும். ஆனால் கிளைமாக்ஸில் ‘’இந்த பெண்கள் இப்படியானதற்கு யார்காரணம், ஏய் ஆண்கள் சமுதாயமே பெண்களை விட்டுவிடுங்கள்’’ என்று ஒரு குரல் அறிவுரை சொல்லும்.. நடுநிசிநாய்களிலும் இறுதிக்காட்சியில் இந்தியாவில் இத்தனை குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர்.. பிளா பிளா.. என்று ஏதேதோ பேசுகிற ஒரு குரலும் அதையே நினைவூட்டி எரிச்சலூட்டுகின்றன. இந்தப்படத்தில் நான்கு இடங்களில் படுக்கையறை காட்சிகள் இணைத்து வெளியிட்டால் ஷகிலா படங்களுக்கு இணையாக சக்கை போடு போடலாம்.
சென்சார் போர்டில் பார்வையில்லாதவர்களும் காதுகேளாதவர்களும்தான் அமர்ந்து படம் பார்த்திருக்க வேண்டும். வக்கிரமான காட்சிகளும், அறுவருப்பான வசனங்களும் படம் முழுக்க.. சாம்பிளுக்கு ஒன்று.. எங்கிட்ட நல்ல சாமான் இருக்கு பாக்கறீயா! என்று ஹீரோ பேசுகிறார். இத்திரைப்படத்தை இனி எந்த இந்திய தொலைகாட்ச்சிகளில் யாராவது முதல்முறையாக ஒளிபரப்பி தொலைத்தால் வீட்டுக்குள்ளேயே இவ்வக்கிரம் புகுந்துவிடும் ஆபத்துள்ளது.
பீட்டர் மேனன் வேண்டுமானால் தாகம் எடுத்தால் கோக்கும் பீரும் ஏன் மூத்திரத்தினையும் குடித்து கொண்டிருக்கும் வக்கிரம் பிடித்த சமூகத்தில் நீங்கள் வாழலாம். அதை அவர்களுக்காகவே திரைப்படமாக்கியிருக்கலாம்.
என்ன செய்ய எங்களுக்கு தாகமெடுத்தால் நாங்கள் இன்னமும் தண்ணீரைத்தான் குடிக்கிறோம்!
Subscribe to:
Post Comments (Atom)
44 comments:
:( Rightu..!
அந்தக் கடைசிப் பஞ்ச் அருமை பாஸ், இது மாதிரி நீங்க நிறைய எழுதணும். "தாகமெடுத்தால் நாங்கள் எல்லாம் இன்னும் தண்ணீர் தான் குடிக்கிறோம்"
என்ன மச்சி நல்லா இருக்கா இல்லையா? பொட்டுல அடிச்ச மாதிரி சொல்ல வேண்டியது தானே! அந்த மானங்கெட்டவன் படத்துக்கு எல்லாம் இவ்ளோ பெரிய விமர்சனமா?
என்ன மச்சி நல்லா இருக்கா இல்லையா? பொட்டுல அடிச்ச மாதிரி சொல்ல வேண்டியது தானே! அந்த மானங்கெட்டவன் படத்துக்கு எல்லாம் இவ்ளோ பெரிய விமர்சனமா?
// நாமும் வண்புணரப்படுகிறோமோ என்கிற சந்தேகமே வந்துதொலைக்கிறது. //
ஹி ஹி ஆசை தோச அப்பள வடை!
இவ்வளவு பிச்சனை ஆனதற்கு பின்னாடி கூட மனிதர் தன்னுடைய கடிதத்தில் "I Stand by This Film" என்று தானே சொல்கிறார். அவரு திருந்த மாட்டார் பாஸ். இதுக்கு ரெண்டாம் பாகம் வேற இருக்காம்.
ஒடுங்க, ஒடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மள நோக்கி வந்துட்டு இருக்கு, ஒடுங்க.
கிங் விஸ்வா
தமிழில் தமிழ் காமிக்ஸ் உலகம் - வாண்டுமாமாவின் மகத்தான படைப்பு - புலி வளர்த்த பிள்ளை
நீங்க சொல்ற திரைப்படங்கள், புத்தகங்கள் இதெல்லாம் அறியாதவங்களுக்கு புதுசா தானே இருக்கும்...
fantastic review athisa....
//இத்திரைப்படத்தை இனி எந்த இந்திய தொலைகாட்ச்சிகளில் யாராவது முதல்முறையாக ஒளிபரப்பி தொலைத்தால் வீட்டுக்குள்ளேயே இவ்வக்கிரம் புகுந்துவிடும் ஆபத்துள்ளது. //
அருமையான கண்டிப்பு
சமூக உணர்வுள்ள வரிகள்..
ரைட்டுண்ணே..
சென்சார் போர்ட் மெம்பர் யாருனு தெரிஞ்சா, அரை அடி உயரத்துக்கு சிலை வைக்கலாம்னு இருக்கேன்..
பார்த்து ஏதாவது டொனேட் பண்ணுங்க ..ஹி..ஹி
// வண்டிய நேரா லாண்ட் மார்க் பக்கம் வுட்டா, முப்பது பர்சென்ட் தள்ளுபடியில சிட்னி ஷெல்டன்,டான்பிரவுன் மாதிரி நிறைய பேர் வேர்வை சிந்தி ரத்தம் சிந்தி எழுதினது கிடைக்கும்.//
அவங்க எதுக்கு பாஸ் அவ்வளவு செலவெல்லாம் பண்றாங்க! அப்படியே பக்கத்துல மூர் மார்க்கெட்டுக்குள்ள புகுந்தா ரூ:100/-க்குள்ள புத்தம் புதிய பைரேட்டட் காப்பி கிடைக்குமே!
தலைவர்,
அ.கொ.தீ.க.
Nice
அந்தக் கடைசிப் பஞ்ச் அருமை பாஸ், இது மாதிரி நீங்க நிறைய எழுதணும். "தாகமெடுத்தால் நாங்கள் எல்லாம் இன்னும் தண்ணீர் தான் குடிக்கிறோம்"
இப்பேர்பட்ட (ரிப்பேரான) படங்களுக்கு சென்சார் அனுமதி அளிக்கிறது என்றால் - old boy / wrong turn / hostel / போன்ற horror படங்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டியது தானே. (ஓ தப்பு தப்பு வெளிநாட்டு படங்களை திருடி தான் இவங்க வாழ்க்கையே ஓடுது). எனக்கு ஒரு கேள்வி. இந்த கேடு கேட்ட கழிசடை படத்தின் மூலமாக பீடர் மேனன் சமுதாயத்திற்கு என்ன சொல்ல வருகிறார். இதே படத்தை கேரளாவில் வெளியிடுவாரா ?
வன்முறை / புணர்ச்சி / காமம் என்ற சொற்களை சொல்லவே நா கூசி நாம் நடுங்கும் போது, அதையே அப்பட்டமாக காட்டும் இவனை போலுள்ள ஜந்துக்களை என்னவென்று சொல்வது. மேனன் அய்யாவுக்கு கலைமா(மா)மணி கொடுத்தாச்சா ?
இந்த படத்தை ஆதரிப்போருக்கு - நாங்க சமுதாய காவலர்களாகவே இருந்துட்டு போறோம். என்ன அன்னார் சொன்ன மாதிரி இன்னமும் தண்ணி தான் குடிக்கிறோம் சோறு தான் திங்குறோம்.
மிக நல்ல எழுத்து.
'நியூ' படத்தை தடை செய்ததைப்போல இந்த கருமத்தையும் தடை செய்யவேண்டும். அட்லீஸ்ட் தொலைக்காட்சி வழியாக நம் வீட்டிற்குள்ளாவது வராமல் இருக்கும்.
ivlo pesureengaley bossu.. neenga oru padamedukkarathu...
எந்திரன், நந்தலால முதல் நடுநிசி வரைக்கும், அதற்கு முன்னும் அனைத்துப் படங்களும் எதோ ஒரு வகையில் அந்நிய நாட்டுப் படங்கள் தழுவல்களே ! எந்திரனை ஆகா ஓகோவென கொண்டாடிய நம் தமிழ் சமூகம் இதனை எதிர்க்க என்னக் காரணம்?
படம் ஹிட்ச்கோக்கில் இருந்து சுடப்பட்டதாலா ! இல்லை
படம் முழுக்க சத்தம் அதிகமாக இருப்பதாலா ! இல்லை
படம் முழுக்க வன்புணர்ச்சியைக் காட்டுவதலா ! இல்லை
காரணம் ... தமிழ் சமூகம் எப்போதுமே யதார்த்ததில் நடக்க முடியாததைக் காட்டுவது தான் சினிமா எனப் பழக்கப்பட்டக் கூட்டம்...
யதார்த்தில் நடப்பதைக் காட்டினால் எப்படிங்க ஏற்றுக் கொள்வது?
குழந்தைகள் வன்புணர்ச்சியை மையமாக வைத்து எடுத்தப் படம் என்பதால் எனதுப் பாராட்டுகள்... ஆனால் திரில்லர் என்றப் போர்வையில் இப்படி எடுத்தது துளியும் நன்றாக இல்லை....
குழந்தைகள் வன்புணர்ச்சியை மையமாக வைத்து இன்னும் பல படங்கள் வந்தால் நான் ஆதரிப்பேன்...
தந்தையே - மகனை வன்புணர்ச்சி செய்வது நம் நாட்டில் நடப்பவை தான்..
அத்தகைய கொடுங்கோலர்களை தண்டிக்க நம் சமூகம் என்னத்தைப் பிடுங்கி விட்டது.
ஒன்றுமில்லை... பெண் நடிகைகளின் அல்குல் முடியை பிடுங்கத் துடிக்கும் மானம் கெட்ட சமூகம்.......... . . .
பேசப்படாத ஒரு கருவை திரையில் காடியதுக்கு மேனனக்கு ஒரு சபாஷ் ! மற்றப்படி படம் - not so good ....
is it the mistake of the parents or the mistake of gautham menon... for bringing the kids to theatre to watch a A movie. who are you to tell what movie he has to take. it is his freedom. can you tell me the movie u like the most. i will show resemblances of the same in another movie. i accpet what u said about derailed, i dont know ur profession.. are you inventing daily ?? are you not using a process or machine or whatever invented by others... so what are you doing daily... copying others work or modifying it according to ur needs and getting salary.... so everyone in this world is using others resources...
nice review
nach....
நாம் கதையைப் பற்றி கூறவில்லை.அது எடுக்கப்பட்ட விதமே பிழை எங்கிறோம்.ஒரு படத்தின் கதை அது படமாக்கப்படும் விதத்திலேயே மக்களை சென்றடைகிறது.
கடசில மெசேஜ் சொல்றவன் எதுக்காக படத்த பிட்டு பட ரேஞ்சுக்கு எடுக்கனும்.
குழந்தைகள் வன்புணர்ச்சி செய்யப்படுகிறார்கள், அப்பன் மூலமோ சுப்பன் மூலமோ. அச்சமுண்டு அச்சமுண்டு என்று ஒரு படம். இதே மாதிரி சப்ஜெக்ட் தான். அதை அந்த இயக்குனர் எவ்வளவு நேர்த்தியாகவும், ஆபாசமில்லாமலும் கையாண்டிருக்கிறார் என்பதை பாருங்கள். பீட்டர் மேனனை ஆதரிக்கும் மெட்ரோ மொக்கைகளே. நாங்கள் படத்தின் கருவை எதிர்க்கவில்லை. அதை படமாக்கிய விதத்தை தான் கண்டிக்கிறோம்.
வக்கிரம் பிடித்தவர்களுக்காக வ்க்கிரம் பிடித்தவன் உருவாக்கிய படம்
அப்பன் பையன வன்புணர்வு செய்வானாம். ஆனா அவன் பொம்பளையா பாத்து ரேப் பண்ணுவானாம். லாஜிக்கா பார்த்தா அவன் சைகோ ஹோமோவா இல்ல இருக்கணும். ஹோமொவெல்லாம் சைக்கோவான்னு கேக்காதீங்க. அப்படி நான் சொல்லல. ஆங் அப்படிஎடுத்தா படம் ஓடாதப்பு. த்தா. நாங்க எல்லாம் சீன் படம் பாக்குற கோஷ்டி தான். அதுக்காக கண்ட கருமத்த எல்லாம் ஏத்துக்க முடியாது. இதுக்கு கொஞ்சம் பேர் வக்காலத்து. த்தூ. போய் சாவுங்கடா. இதுல கொஞ்சம் பேர் சமூகத்த குறை சொல்லி வேற பின்னூட்டம். த்தா #$#$!^*%#@#
"படத்துல மியூசிக் கெடையாதுனு பில்டப்ப ஏத்து... பிச்சுகிட்டு போகும் படம்."
--பிச்சுகிட்டு போச்சு தியெட்டர விட்டு..பாஸூ படம் அட்டர் பிளாப்..கலைஞர்..டிவியும்..விஜய் டிவியும் வாங்கின காசுக்கு கூவராங்க..அவ்வளவுதான்.
அருமை அதிஷா.
எந்தளவுக்கு நீ பாதிக்கபட்டிருந்தால் ,இப்படி எழுத முடிகிறது என உணர்கிறேன்.
http://powrnamy.blogspot.com/2011/02/blog-post_25.html
கேபிள் அழைக்கிறார் - மீனவர் பிணங்களுக்கு மத்தியில் கூத்தடிக்க பதிவர் சந்திப்பு
கோணல் பார்வை. பல படங்கள்ல இருந்து காட்சிகளை ஒற்றெடுத்துருக்காரு, வரையறை இல்லாம விளிம்பு நிலைல இருந்து அளந்துருக்காருன்னு சொன்னா ஒத்துக்கலாம். அவருடைய சிந்தனையே கோணல்ன்றதெல்லாம் மதிப்புரையா ஏத்துக்க முடியலை. நான் படம் பார்த்த அரங்குல (அறைலன்னுதான் சொல்லணும், ரொம்பவே சின்னது) ஆண்களும் பெண்களும் நிறைந்திருந்தார்கள். படத்தை முடிங்கடான்னு அடிக்கடி குரல் கேட்டது. கொஞ்சம் வறட்சியான காட்சிகள், தேவைக்கும் கூடுதலா நெருங்கி நிற்கும் ஒளிப்பதிவு.. இன்னும் நிறைய ஆங்கிலப் படங்கள் பாத்தாத் தான் ஒன்ற முடியும் போல. படம் சிறப்பா வரலை. ஆனா, மாறுபட்ட முயற்சி.
திட்டுனீங்கன்னா அஞ்சல்ல வாங்கிக்கிறதுக்கு.. கி..கி...கி
அதிஷா இது விமர்சனமே இல்லை !! செருப்படி !! என்னைப்போல நிறைய ரசிகர்கள் சார்பா அடிச்சிருக்கீங்க !! இது போன்ற கேடு கெட்ட படங்கள் சமுதாயத்துக்கு பேராபத்தை விளைவிக்கக்கூடியவை. எதை வேண்டுமானாலும் எடுத்து காசாக்க வேண்டும் என்று நினைப்பவன் எதிர்ப்பை பார்த்து பயப்படவேண்டும். இதை ஒரு டிவியில் வேறு கலந்துரையால் நடந்தது. அவர்களால் முன்னால் ஏற்பாடு செய்யப்பட்டவர்கள் போன்செய்து ஆகா ஓஹோ என புகழ்ந்து தள்ளி விட்டார்கள். இது போன்ற வெட்கம் கெட்டவர்ளால் தமிழ் நாட்டு கலாச்சாரம் மிக மோசமான நிலையை அடையும்.
@raja: over smart!!..wish u watch this movie alone with ur son or ur dad man.
"who are you to tell what movie he has to take"
what is this.? He doing Movie review as his passion.. so he doing it with his perspective. why u not asking the same question for other movie reviews?
Content is not wrong.., his poor and bad making is criticized here.
i dont understand. why do you say it is vulgar? why do you expect everyone should think like you? as long as there is freedom of expression, everyone will express irrespective of likes and dislikes of others. the problem is you are not prepared and that is your problem. make yourself deserving to critisize before doing so. your review is very childish and autocratic. you are living in a dreamworld it suppose.wake up.
I cant accept this.. See the movie as movie.. dont mess with ur life..
NICE RE-VIEW ATHISHA...
நாட்டில் நடப்பதைத்தான் காட்டுகிறோம், சினிமா எடுக்கிறோம் என சொல்லும் மலம் தின்னி பயல்களுக்கு, கணவனும் மனைவியும் , ஆணும் பெண்ணும் கூடும் நிகழ்வு எல்லா வீட்டிலும் தான் நிகழ்வது. உன் வீட்டில் உன் பெண்டாடியுடன் நீ கூடிகளிப்பத்தையும் வண்ண விளக்குகள் வைத்து படமெடுத்து திரையில் காட்ட முடியுமா??? வியாபாரம் . காசு உண்டாக்க வேண்டும் என்றால் உன் வீடு பெண்களை கூட்டி கொடுங்கலடா. நாதாரி நாய்களா, எச்சைகலைகளா. சினிமா எடுப்பவன் எல்லாம் என்ன பெரிய புடிங்கிகளா, அவனுக்கு வக்காலத்து வாங்கி சூத்து சொரியுன் நாய்களா. மானம் கெட்ட பிறவிகள்.
மிக்க நன்றி உங்களுடைய விமர்சனத்திற்கு , இந்த படத்தை பற்றி தூக்கி பிடித்து கொண்டு பேசுபவர்களுக்கு நீங்கள் செருப்பால் அடித்து இருகிர்கள் , இந்த பின்னோட்டம் முலம் நானும் அவர்களை அடித்தாக எண்ணிக்கொள்கிறேன் , மிக்க நன்றி உங்களுக்கு
நான் சொல்ல விழைந்தவை, உங்கள் எழுத்துக்களாக...இறுதி வரிகள் அருமை...அனானி இட்ட அச்சமுண்டு அச்சமுண்டு படம் பற்றிய கருத்துடன் நான் ஒத்துப் போகிறேன்...
inga irukara romba kevalamana comments a vida padam onum mosamillai..
naagareegatha pathi ivlo pesriye?? epdi pesanum nu theriyatha da ungalukellam???
நேற்றைக்கு ஒரு நண்பரோட ஜெமினி பிரிட்ஜ் கிட்ட இருக்கிற பார்க் ஹோட்டல் போயி வந்தேன். சந்திப்பு முடிய, கொஞ்சம் கால தாமதம் ஆகிவிட்டது. இரவு பன்னிரண்டரை இருக்கும், அந்த ஹோட்டல் பாரிலிருந்து புல் மப்பில், வெளி வந்த ஆண்களும் பெண்களும் எல்லாருமே நடு நிசி நாயிகள் மாதிரி தான் இருந்தார்கள்.
இந்த மாதிரி நிகழ்வுகள் தமிழகத்தில் நடக்க வாய்பில்லை என்று சொல்லுவதெல்லாம், முழு பூசிநிக்காயை சொத்துல மறைக்க முயலும் கதை தான்!
நேற்றைக்கு ஒரு நண்பரோட ஜெமினி பிரிட்ஜ் கிட்ட இருக்கிற பார்க் ஹோட்டல் போயி வந்தேன். சந்திப்பு முடிய, கொஞ்சம் கால தாமதம் ஆகிவிட்டது. இரவு பன்னிரண்டரை இருக்கும், அந்த ஹோட்டல் பாரிலிருந்து புல் மப்பில், வெளி வந்த ஆண்களும் பெண்களும் எல்லாருமே நடு நிசி நாயிகள் மாதிரி தான் இருந்தார்கள்.
இந்த மாதிரி நிகழ்வுகள் தமிழகத்தில் நடக்க வாய்பில்லை என்று சொல்லுவதெல்லாம், முழு பூசிநிக்காயை சொத்துல மறைக்க முயலும் கதை தான்!
அண்ணா ரொம்ப திட்டித் தீத்துட்டீங்க. அப்படி என்ன கௌதம் மேனன் மேல கோபம்? ஓரளவிற்கு நல்ல விதமாகவே எடுத்து இருக்கார். இதுல ரொம்ப முக்கிய நாம கவனிக்க வேண்டியது இதுல வந்த எல்லா நிகழ்ச்சியும் உண்மையில் மிக சமீபத்தில் சென்னைக்கு அருகாமையில் நிகழ்ந்தவை. டெல்லில ஒரு அப்பா அவருடைய குழந்தையையே 18 வருஷத்திற்கு ஒரே ரூமுல போட்டு அடிச்சி வச்சி உடலுறவு கொண்டது நிவில் இல்லையா? அல்லது இன்றளவும் கோர்ட்டுல நடந்துகிட்டு இருக்கும் கேசான நித்தாரி கேஸ் ஞாபகம் வரலியா? சென்னைக்கு அருகாமையில நடந்த, நடக்கின்ற கொலை காசுகள் பல. பெற்றோர்கள் சிறிது விழிப்பாய் இருக்கட்டும் என்ற எண்ணத்தில் எடுத்து இருக்கார்.
ஆமாம் நீங்கள் சொல்வது நிஜம், பல இடங்களில் இது வக்கிர அளவுக்கு வந்துள்ளது உண்மை, தன தாய் போன்ற பெண்ணிடம் உடலுறவு கொள்ள முயற்சிப்பது, அது சமயம் வருகின்ற வக்கிர சப்தங்கள் கொஞ்சம் ஓவர் ரகம் தான். அதற்காக படத்தில் உள்ள நல்ல ஒளிப்பதிவு, நல்ல படத்தொகுப்பு போன்றவற்றை பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே...
விகடனில் இந்தப் படத்திற்கான விமர்சனம் என்னவென்று அறிந்துகொள்ள ஆசை ( நான் அந்தப் புத்தகத்தை அட்டைப் படம் பார்ப்பதோடு சரி!)
http://tamilbirdszz-naalikai.blogspot.com/2011/03/blog-post_13.html
போய்ப்பாருங்க ...... என்ன நடக்குதெண்டு
மாயா
முக்கியமாக படத்தில் காட்டப்பட்டது மகன் தனது வளர்ப்பு தாயுடன் உடல் உறவு வைத்துக் கொள்வது. அம்மா மீது மகன் கொள்ளும் ஈர்ப்பு படத்தில் காட்டப்பட்டுள்ளது. இது நடக்கவே நடக்காத காரியம் அல்ல.
Post a Comment