Pages

23 February 2011

நடுநிசிநாய்கள்



சைக்கோ த்ரில்லர் , என்பது முடிவாகிவிட்டது. அடுத்தது என்ன? வுட்றா வண்டிய பர்மா
பஜாருக்கு.. இருக்கறதுலயே நல்ல ஹாலிவுட் படமா கிலோ பதினைஞ்சுனு பத்து கிலோ அள்ளி போட்டுகிட்டு, வண்டிய நேரா லாண்ட் மார்க் பக்கம் வுட்டா, முப்பது பர்சென்ட் தள்ளுபடியில சிட்னி ஷெல்டன்,டான்பிரவுன் மாதிரி நிறைய பேர் வேர்வை சிந்தி ரத்தம் சிந்தி எழுதினது கிடைக்கும். எடுத்துக்கோ எடுத்துக்கோ கிடச்ச வரைக்கும் எடுத்துக்கோ!. வீட்டுக்கு வந்து எல்லாத்தையும் மிக்ஸிலவுட்டு அரைச்சு ஒரு கரண்டி உப்பு சேர்த்தா வந்தே வந்திருச்சே சைக்கோ த்ரில்லர்! படத்துக்கு பேரு வித்தியாசமா வைக்கணுமே.. பசுவைய்யாவோ கொசுவைய்யாவோ எழுதின புக்கு பேரு லான்ட் மார்க்ல பார்த்தோமோ.. இன்னா? த்தா நடுநிசி நாய்கள் , செம டைட்டில்.. அதையும் சேர்த்துக்கோ! படத்துல மியூசிக் கெடையாதுனு பில்டப்ப ஏத்து... பிச்சுகிட்டு போகும் படம்.

நடுநிசி நாய்கள். கௌதம் பீட்டர் மேனனின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் புத்தம் புதிய திரைப்படம். சினிமாவில் காமம் மூன்று வகைப்படும். கவர்ச்சி,ஆபாசம்,வக்கிரம். இந்தப்படம் பல இடங்களில் வக்கிரத்தைத் தாண்டுகிறது. அதாவது தொப்புள் காட்டினால் கவர்ச்சி, மார்பகம் காட்டினால் ஆபாசம்.. நடுநிசிநாய்கள் வக்கிரம் என்றால் என்னவென்று புரிய வைக்கிறது.

படத்தின் கதைக்காக மல்லுக்கட்டாமல், சிட்னி ஷெல்டனின் டெல் மீ யுவர் ட்ரீம்ஸ் என்னும் ஆங்கில நாவலில் கொஞ்சம் , கதை பிரதான பாத்திரமான மீனாட்சி அம்மாவை ஹிட்ச் காக்கின் சைக்கோவிலிருந்தும், பிரதான பாத்திரமான வீராவை சைலன்ஸ் ஆப் தி லாம்ப்ஸிலிருந்தும், கொஞ்சம் சிகப்பு ரோஜாக்கள், கொஞ்சம் அந்நியன் (அந்நியனே டெல்மீ யுவர் ட்ரீம்ஸ்தான்) , கொஞ்சம் மூடுபனி. ஒட்டுமொத்தமாக பல படங்களின் பிரபலமான காட்சிகளை ஒருங்கிணைத்து சுட்டபடம் வேண்டுமா சுடாத படம் வேண்டுமா என படமெடுத்திருக்கிறார் பீட்டர் மேனன். இது சர்வ நிச்சயமாக சுட்டபடம்தான். அதிலும் மிக வக்கிரமாக எடுக்கப்பட்ட சுட்டபடம். (ஏற்கனவே கேமரா ஆங்கிள் கூட மாற்றாமல் டிரெயில்ட் படத்தை சுட்டு பச்சகிளி முத்துசரம் என்றெடுத்தவர்தானே!)

படம் முழுக்க யாராவது ஆவ்... ஊவ் என்று காது கிழிய கத்தினாலே அது த்ரில்லர் படமாகவிடும் என பீட்டர் மேனன் நினைத்திருக்கலாம். காது ஜவ்வு பிய்ந்து போகுமளவுக்கு ஒரே இரைச்சல். சைலன்ஸ் ஆப் தி லாம்ப்ஸ்,சைக்கோ படங்களை பார்த்து பிட்டடித்தவர் அந்தப்படங்களில் வெறும் மௌனத்தின் மூலமாகவும் சலனமில்லாத காட்சிகளாலுமே திகிலை உண்டாக்கியிருப்பதை காணலாம். ஸ்டேன்லி குப்ரிக்கின் ஷைனிங் திரைப்படத்தில் நீண்ட வரான்டாவில் குட்டி சைக்கிள் ஓட்டும் சின்னப்பையனின் காட்சியை மட்டும் யூடியுபில் தேடிக்கண்டுபிடித்து பார்க்க பீட்டர் மேனனுக்கு பரிந்துரைக்கிறேன்.

படம் முழுக்க யாராவது யாரையாவது வன்புணர்ச்சி செய்துகொண்டேயிருக்கின்றனர். ஒருகட்டத்தில் தியேட்டரில் நாமும் வண்புணரப்படுகிறோமோ என்கிற சந்தேகமே வந்துதொலைக்கிறது. அதிலும் டாவின்சி கோட் நாவலிலிருந்து சுட்டது, நாயகனின் அப்பா கூட்டுக்கலவியில் முகமூடி போட்டுத்திரியும் காட்சி..

இன்செஸ்ட் கதைகள் நமக்கு புதிதல்ல, அவை எப்போதும் இணையத்திலும்,பிட்டுபுத்தகங்களிலும் இருந்தவைதான். ஆனால் பிட்டுபுத்தகமெழுதுபவனுக்கும் தோன்றாத அப்பா-மகன் இன்செஸ்டை வக்கிரபுத்தி கொண்ட ஒருவரால் மட்டுமே சிந்தனை செய்ய முடியும்.

தமிழகத்தில் ஏ சர்டிபிகேட் படங்களை வயதுவந்தோர் மட்டுமே பார்க்கின்றனர் என நீங்கள் நம்பினால் தியேட்டர் பக்கமே போகமால் திருட்டு டிவிடியில் படம் பார்ப்பவராக இருக்க கூடும். இது வயது வந்தோருக்கான படமாக இருந்தாலும், தியேட்டரில் நிறைய குழந்தைகளை பார்க்க முடிந்தது. அப்பா-மகன் இடையேயான செக்ஸ் காட்சிகள் படம் பார்க்கும் குழந்தைகளின் மனதை எந்த அளவுக்கு பாதிப்பை உண்டாக்கும் என்பது , குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறைக்கு எதிராக படமெடுத்த பீட்டர் மேனனுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். இப்படம் லட்சம் பேரில் இரண்டு பேரை பாதித்தால் அதன் பாதிப்பு என்னவாக இருக்கும். இதை பார்த்து ஓஓ குழந்தைங்கள கூட அதுக்கு யூஸ்பண்ணிப்பார்த்தா என்ன என்கிற நினைப்பு உண்டானால் அதற்கு யார் பொறுப்பு?

என்ன பாஸ், ஊரு உலகத்துல இல்லாததையா காட்டிட்டோம் என்று கேட்பவர்களே! ஊரு உலகத்தில் தினமும் லட்சம் பேர் சுய இன்பம் அனுபவித்துக்கொண்டிருக்கிறான், லட்சம் பேர் தினமும் கழிவறையில் முக்கிக்கொண்டிருக்கிறான் அதையெல்லாம் அச்சு அசலாக காட்ட முடியுமா?

இந்த படம் ஆபாசமாக இருந்து தொலைத்திருந்தாலோ நான்கு பிட்டு சேர்த்து வெளியாகியிருந்தாலோ யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. அதுபோல வாரந்தோறும் நான்கு படங்கள் வெளியாவதும், அது வெளியானதே தெரியாமல் தியேட்டரைவிட்டு ஓடுவதும் சகஜமான ஒன்றுதான். ஷகிலா திரைப்படங்கள் பார்த்து யாரும் கொலைகாரனாகிவிடுவதில்லை.

ஆனால் இந்த பீட்டர் மேனன் தன் வக்கிர சிந்தனைகளை நல்ல படம் என்கிற போர்வையில் வெளியிட்டமையைத்தான் கண்டிக்கிறோம். இதை பார்க்கும் பெற்றோரின் மனநிலை என்னபாடுபடும். பெற்றோரை விட்டுத்தொலையுங்கள். லட்சம் பேரில் ஒரு பையன் இப்படம் பார்த்து இதை செய்து பார்த்தால் என்ன.. நல்லாருக்கும் போலருக்கே என நினைத்தால் என்னவாகும்.. பீட்டர் மேனனின் படம் அதை கன கச்சிதமாக செய்கிறது. கற்பழித்து பாருங்கள் சுவையாக இருக்கும், கொலை செய்து பாருங்கள் இன்பம் கிடைக்கும் என்கிற செய்தியை பெத்தடின் இல்லாமலேயே உங்கள் மூளைக்குள் செலுத்துகிறது.

பிட்டுப்படங்களில் ஒருவழக்கமுண்டு, படம் முழுக்க உடல் உடல் உடல் மட்டுமே நிறைந்திருக்கும். ஆனால் கிளைமாக்ஸில் ‘’இந்த பெண்கள் இப்படியானதற்கு யார்காரணம், ஏய் ஆண்கள் சமுதாயமே பெண்களை விட்டுவிடுங்கள்’’ என்று ஒரு குரல் அறிவுரை சொல்லும்.. நடுநிசிநாய்களிலும் இறுதிக்காட்சியில் இந்தியாவில் இத்தனை குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர்.. பிளா பிளா.. என்று ஏதேதோ பேசுகிற ஒரு குரலும் அதையே நினைவூட்டி எரிச்சலூட்டுகின்றன. இந்தப்படத்தில் நான்கு இடங்களில் படுக்கையறை காட்சிகள் இணைத்து வெளியிட்டால் ஷகிலா படங்களுக்கு இணையாக சக்கை போடு போடலாம்.

சென்சார் போர்டில் பார்வையில்லாதவர்களும் காதுகேளாதவர்களும்தான் அமர்ந்து படம் பார்த்திருக்க வேண்டும். வக்கிரமான காட்சிகளும், அறுவருப்பான வசனங்களும் படம் முழுக்க.. சாம்பிளுக்கு ஒன்று.. எங்கிட்ட நல்ல சாமான் இருக்கு பாக்கறீயா! என்று ஹீரோ பேசுகிறார். இத்திரைப்படத்தை இனி எந்த இந்திய தொலைகாட்ச்சிகளில் யாராவது முதல்முறையாக ஒளிபரப்பி தொலைத்தால் வீட்டுக்குள்ளேயே இவ்வக்கிரம் புகுந்துவிடும் ஆபத்துள்ளது.

பீட்டர் மேனன் வேண்டுமானால் தாகம் எடுத்தால் கோக்கும் பீரும் ஏன் மூத்திரத்தினையும் குடித்து கொண்டிருக்கும் வக்கிரம் பிடித்த சமூகத்தில் நீங்கள் வாழலாம். அதை அவர்களுக்காகவே திரைப்படமாக்கியிருக்கலாம்.

என்ன செய்ய எங்களுக்கு தாகமெடுத்தால் நாங்கள் இன்னமும் தண்ணீரைத்தான் குடிக்கிறோம்!