24 August 2011

மணி ஐயரும் சுசிலா மாமியும்!


மாம்பலம் மாமி மெஸ்ஸில் தயிர் சாதம் சாப்பிடுவதை விடவும் பேரின்பம் வேறெதிலும் கிடைத்திடாது. தோழருக்கு மாமிமெஸ் தயிர்சாதமும் வடுமாங்காவும் போதும் வெறெதுவும் வேண்டாம். அப்படியாகப்பட்ட ஒரு மதியவேளை தயிர்சாதம் முடித்து திநகர் முப்பாத்தம்மன் கோயில் பக்கமாக பைக்கில் போய்க்கொண்டிருந்த போது அந்த போஸ்டர் கண்ணில் அகப்பட்டது!


(படத்தை கிளிக் செய்து பெரிதாக பார்க்கலாம்)

சகோ.இரா.மணி ஐயர் – மனந்திருந்திய பூசாரி என்கிற அந்த மஞ்சள் வண்ண போஸ்டரை கண்டதுமே.. வண்டி பிரேக் அடித்து நின்றது. அருகில் போய் பார்த்தால் ஏதோ சுவிஷேச அழைப்பு போஸ்டரை போல இருந்தது. அதேதான்! ஆஞ்சநேயருக்கும் அல்லேலுயாவுக்கும் என்னய்யா சம்பந்தம் என்பது புரியாமல் அதை ஒரு புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டேன். மாம்பலம் மாமிகளை கவர் பண்ணி மதமாற்றம் பண்ண புது டெக்னிக் யூஸ்பண்றாய்ங்க போலருக்கே பாஸு என பேசிக்கொண்டோம்.

ஆனால் சில நாட்களுக்கு முன் பம்மலில் ஒரு வேலையாக பயணம் செய்து கொண்டிருந்தபோது கண்ணில் பட்டது இன்னொரு போஸ்டர். இதிலும் பார்ப்பன பெண்மணி (சுசிலா மாமி!) ஒருவர் கிறிஸ்தவராக மதம் மாறியும் விடாப்பிடியாக தன்னுடைய சாதிப்பெருமையை கைவிடாமல் உடும்புபிடியாக பிடித்துக்கொண்டிருந்தார். மணி ஐயரை விடவும் இவர் ஒருபடிமேலே போய் கிறிஸ்தவ பிராமண சேவா சமிதி என்று அமைப்பு வேறு வைத்திருக்கிறார்கள்.


(படத்தை கிளிக் செய்து பெரிதாக பார்க்கலாம்)

அமாவசை நாளில் சிறப்பு பூஜை வேறு உண்டு. பில்லிசூனியங்களை எடுக்கிறார்களாம். பிசாசுகளை விரட்டுகிறார்களாம்! எண்ணெய்போட்டு ஸ்பெசல் பூஜை வேறு. உன்னோடு கூட இருந்து நான் செய்யும் காரியங்கள் பயங்கரமாய் இருக்கும் – யாத் 39:10 பைபிளில் இல்லாத வாசகங்களை போட்டு பயமுறுத்துகிறார்கள். பைபிளில் அப்படியெல்லாம் வாசகங்கள் கூட இல்லை!

**********


இந்த மொக்கை கிறிஸ்தவ பிராமண கோஷ்டிகளின் காமெடிக்கு நடுவில் பொள்ளாச்சி நசனின் தமிழம் தளத்தில் பழைய சிற்றிதழ்களை புரட்டிக்கொண்டிருந்த போது செய்தி துணுக்கு ஒன்று கண்ணில் பட்டது. யாரோ ஒரு பிராமணர் வேறு சாதி ஆள் ஒருவரிடம் பணம் வாங்குகிறார். கடன் கொடுத்தவன் திருப்பி கேட்க போன இடத்தில் நடக்கும் பிரச்சனையில் மாடுமுட்டி இறந்தார் என்னும் செய்தி எவ்வளவு நேர்த்தியாக திரித்து எழுதியிருக்கிறார்கள் என்பதை படித்து பாருங்களேன். (கல்பதரு இதழ் 1917ல் வெளியான செய்தி இது). இதை படிக்கும் போது எழுத்தாளர் மாமல்லன் அண்மையில் எழுதிய நிறம் கதையின் சாயல் அச்சு அசலாக தெரிவதை தவிர்க்க முடியவில்லை.

30 comments:

Priya Raju said...

கிழிஞ்சது கிருஷ்ணகிரி. ஹிந்து மதத்தில தான் ஜாதின்னு பாத்தா...நம்ம ஆளுக எதையும் உருப்பட விட மாட்டாங்க.

Manion said...

அது சாதி வெறி அல்ல. மத வெறி! ஐயர் ஆனா நானே மாறீட்டேன் அப்போ நீங்க...?

Vetirmagal said...

Sick people :-(

த. ஜார்ஜ் said...

சாத்தான் மட்டும் இல்லாதிருந்தால் அவர்கள் பிழைப்பில் மண் விழுந்திருக்கும்.கடவுளைக் காட்டுவதைவிட அதைகாட்டுவது அதிக பலன் தருகிறதாம்.

சுந்தரராஜன் said...

:)

நாடோடிப் பையன் said...

Goood post on weird people.

kumar said...

மாமாவும்,மாமியும் இன்னும் சிறிது காலத்தில் தாய் மதம் திரும்பி கிருஸ்தவர்கள்
செய்யும் மதமாற்ற கொடுமைகளை உலகுக்கு எடுத்தியம்புவார்கள் பாருங்கள்.
"" சிறுத்தை தன் புள்ளிகளை ஒருபோதும் மாற்றி கொள்வதில்லை. ""

கோவி.கண்ணன் said...

மத்த சாதிக்காரவா காசுக்காக மதம் மாறினா ஓய், இவா மட்டும் தான் தேவனின் மகிமைக்காம மாறி இருக்கா ஓய், அவாள தப்பா பேஷாதேள்

maithriim said...

கலி காலம். Really, you have a sharp eye and a sharper brain! The root cause for all this is basically money. Well written.
amas32

Anonymous said...

Mani iyarukkum, suseela mamikkum Etho connection irukum pola

Shankar Balachandran said...

இதில் நீங்கள் கூறியுள்ளது உண்மைதான். ஆனால் யாரை சாட வேண்டுமோ அவர்களை விட்டு விட்டு, பிராமண ஜாதியை மட்டும் ஏன் ? பிராமணர்கள் மேல் இருக்கும் வெறுப்பா அல்லது என்ன கூறினாலும் பதில் பேசமாட்டார்கள் என்ற காரணமா?

கர்த்தர் பைபிள். அறிந்திராத பல தகவல்கள்.... said...

CLICK AND READ THE LINKS


>>> ம‌த‌ம்மாற்ற‌ செய்ய‌ மொள்ள‌மாரித்த‌ன‌ம்.


>>> மதம் மாற்ற முயற்ச்சிப்பவர்களை கொல்லவாம்.
பிறமத‌த்தை திணிப்பவர்களை கொல்லுங்கள். ‍‍‍பைபிள் உத்தரவு
<<<<

.

தோமா said...

இந்த நாதாரிகளை தோலுரித்து காட்டியதற்கு நன்றி அதிஷா!!! பாவம் லூர்து ஜேம்ஸ் என்கிட்ட வாங்கிகட்டிகொண்டார்.

Gobs said...

Athisha,
Before publishing this did you inquired are they true brahmins or the people who are doing this have kept like that? Moreover everyone likes to criticize brahmins because they are the dumb idiots who wont open their mouth...Still do you believe brahmins are the one and only like that?? No other people are like them??

Unknown said...

சார் உங்களுக்கு இது புதுசு ஒரு போஸ்டர்ல நாடார், முதலியார், கவுண்டர் ன்னு ஜாதி பேரை போட்டுருந்தாங்க பாருங்க.......என்ன நான் போட்டோ எடுக்கலே நீங்க எடுத்துட்டிங்க என் கூட வந்தவர் கிறிஸ்துவர் தலையில் அடிசுக்கிட்டார்

Anonymous said...

Why dont you see Hindu Matrimony coloumn CSI NADAR, CSI GOUNDER, CSI Pillai all are there. It is a very cheap and tactic advertisement to convert brahmins to christianity. Have you met the two persons and ensured that they are brahmins? If you want to scold, scold all the caste peoples who are giving matrimony ad in hindu too.... Why you are scolding only Brahmins? Dont have guts to scold the other castes?

Anonymous said...

//everyone likes to criticize brahmins because they are the dumb idiots who wont open their mouth...Still do you believe brahmins are the one and only like that?? //

yes they are very shrewd. they want to monopolize everything, don't want to lose their supremacy. When they are alone, they fell on the feet of others. when in group (even in minority), they think they are the bosses and add more brahmins to their group even how inferior they may be. When in danger, they don't mind sacrificing one of their brahmin brethren to retain the monopoly. It is this sick mentality that creates aversion for others.

//No other people are like them??//

The difference is it is few in other communities and high among brahmins.

There are always exception to rules. And exception don't make up to rules.

Please don't continue to trumpet the "we are victim" chant.

சுப்புணி said...

//மாமாவும்,மாமியும் இன்னும் சிறிது காலத்தில் தாய் மதம் திரும்பி கிருஸ்தவர்கள்
செய்யும் மதமாற்ற கொடுமைகளை உலகுக்கு எடுத்தியம்புவார்கள் பாருங்கள்.
"" சிறுத்தை தன் புள்ளிகளை ஒருபோதும் மாற்றி கொள்வதில்லை. ""//

கரெக்ட் பாஸ்.

ஆனா உங்க சைடு வந்திட்டா மாமாவும் மாமியும் திரும்பவும் தாய் மதம் போறத நெனச்சுக் கூட பாக்க முடியாதே. நீங்க ஒன்வே டிராபிக் வச்சுண்டு மத்தவாள குறை சொல்லலாகுமோ? இது தகுமோ? முறையோ?

ஜார்ஜ் லூகாஸ் அய்யங்கார் said...

யேசுவுக்கு பூணூல் போட்டாச்சோ?

silandhy said...

பாய் கொளம்பிட்டாறு.அங்க போனவங்க ஏன் திரும்பி வரணும்னு?
போனவங்க திரும்ப வர்றத அப்புறம் பாக்கலாம்.புதுசா வர்றவங்களுக்கு
எந்த ஜாதியில ஓதிக்கீடுங்கன்னா? முக்கியமா அவாள் ஜாதில
ஜாய்ன் பண்ணலாமா?

Unknown said...

// Manion said...
அது சாதி வெறி அல்ல. மத வெறி! ஐயர் ஆனா நானே மாறீட்டேன் அப்போ நீங்க...?//
repeatu

Raashid Ahamed said...

கடைசி பத்திரிகை துணுக்கை படித்ததும் ரத்தம் கொதித்தது. “கள்ளசாதியான்” என்ன ஒரு அயோக்கியத்தனமான வார்த்தை. அப்போது மேல் சாதி ஆதிக்கம் எப்படி இருந்தது என்பது இந்த ஒரு சொல்லில் விளங்குகிறது. நல்ல வேளை இந்தியா மிகவும் திருந்தி விட்டது. இப்போது இப்படி ஒரு செய்தி வந்திருந்தால் அடுத்த நாள் பத்திரிகை ஆபீஸே அந்த இடத்தில் இருக்காது.

Adien Ramanuja Dasan said...

உன்னோடு கூட இருந்து நான் செய்யும் காரியங்கள் பயங்கரமாய் இருக்கும் – யாத் 39:10 பைபிளில் இல்லாத வாசகங்களை போட்டு பயமுறுத்துகிறார்கள். பைபிளில் அப்படியெல்லாம் வாசகங்கள் கூட இல்லை!
Dear Athisha

நீங்கள் சொல்லும் வாசகம் பைபிளில் உண்டு பார்க்க யாத்திராகமம் 34.1௦. இதுமட்டுமல்ல தேவன் கோபாக்கினை உள்ளவர், பலி மாமிசத்தின் மனத்தை சுகந்தமாக சுவாசிப்பவர் என்பன போன்ற வசனங்கள் ஏராளமாக உள்ளன. ஒருமுறை சரியாக படித்துவிட்டு எழுதுவது நலம். இரண்டாவது, மற்ற சாதியாரை விடை பிராமணர்கள் வைதீக, சாஸ்த்ரிய சமாச்சாரங்கள் உணர்தவர்கள். அவர்களே இயேசுவை நோக்கி வந்துவிட்டார்கள். விஷயம் தெரிந்தவர்களே இப்போது யேசுவிடம் வந்துவிட்டனர் ஆகையால் சமான்யர்களே நீங்களும் மதம் மாறுங்கள் என்று கூவி இயேசுவை எல்லார் மேலும் ஏவுவதற்கு இதுபோன்ற பிராமணர்களாக இருந்து மதம் மாறியவர்களின் சாதீய பின்புலம் இவர்களுக்கு வணிக நோக்கங்களுக்காக பயன்படும். ஒரு தலித் இவ்வாறு மதம் மாறினால் அவரது சாதியை பரகடனப்படுத்தமட்டர்கள். இதெல்லாம் ஒரு வியாபார உத்தி. மேற்கொண்டு, சம்பந்தப்பட்டவர் உண்மையாகவே பிராமணரா அல்லது கலப்பா யார் இதெல்லாம் விசரிக்கப்போகிரார்கள்.

Adien Ramanuja Dasan said...

நீங்கள் சொல்லும் வாசகம் பைபிளில் உண்டு பார்க்க யாத்திராகமம் 34.10. இதுமட்டுமல்ல தேவன் கோபாக்கினை உள்ளவர், பலி மாமிசத்தின் மனத்தை சுகந்தமாக சுவாசிப்பவர் என்பன போன்ற வசனங்கள் ஏராளமாக உள்ளன. ஒருமுறை சரியாக படித்துவிட்டு எழுதுவது நலம். இரண்டாவது, மற்ற சாதியாரை விடை பிராமணர்கள் வைதீக, சாஸ்த்ரிய சமாச்சாரங்கள் உணர்தவர்கள். அவர்களே இயேசுவை நோக்கி வந்துவிட்டார்கள். விஷயம் தெரிந்தவர்களே இப்போது யேசுவிடம் வந்துவிட்டனர் ஆகையால் சமான்யர்களே நீங்களும் மதம் மாறுங்கள் என்று கூவி இயேசுவை எல்லார் மேலும் ஏவுவதற்கு இதுபோன்ற பிராமணர்களாக இருந்து மதம் மாறியவர்களின் சாதீய பின்புலம் இவர்களுக்கு வணிக நோக்கங்களுக்காக பயன்படும். ஒரு தலித் இவ்வாறு மதம் மாறினால் அவரது சாதியை பரகடனப்படுத்தமட்டர்கள். இதெல்லாம் ஒரு வியாபார உத்தி. மேற்கொண்டு, சம்பந்தப்பட்டவர் உண்மையாகவே பிராமணரா அல்லது கலப்பா யார் இதெல்லாம் விசரிக்கப்போகிரார்கள்.

Adien Ramanuja Dasan said...

நீங்கள் சொல்லும் வாசகம் பைபிளில் உண்டு பார்க்க யாத்திராகமம் ௩௪.௧௦. இதுமட்டுமல்ல தேவன் கோபாக்கினை உள்ளவர், பலி மாமிசத்தின் மனத்தை சுகந்தமாக சுவாசிப்பவர் என்பன போன்ற வசனங்கள் ஏராளமாக உள்ளன. ஒருமுறை சரியாக படித்துவிட்டு எழுதுவது நலம். இரண்டாவது, மற்ற சாதியாரை விடை பிராமணர்கள் வைதீக, சாஸ்த்ரிய சமாச்சாரங்கள் உணர்தவர்கள். அவர்களே இயேசுவை நோக்கி வந்துவிட்டார்கள். விஷயம் தெரிந்தவர்களே இப்போது யேசுவிடம் வந்துவிட்டனர் ஆகையால் சமான்யர்களே நீங்களும் மதம் மாறுங்கள் என்று கூவி இயேசுவை எல்லார் மேலும் ஏவுவதற்கு இதுபோன்ற பிராமணர்களாக இருந்து மதம் மாறியவர்களின் சாதீய பின்புலம் இவர்களுக்கு வணிக நோக்கங்களுக்காக பயன்படும். ஒரு தலித் இவ்வாறு மதம் மாறினால் அவரது சாதியை பரகடனப்படுத்தமட்டர்கள். இதெல்லாம் ஒரு வியாபார உத்தி. மேற்கொண்டு, சம்பந்தப்பட்டவர் உண்மையாகவே பிராமணரா அல்லது கலப்பா யார் இதெல்லாம் விசரிக்கப்போகிரார்கள்.

vamanan sight said...

ONE OF THE SCRIPTS WRITTEN BY THOSE OUT TO SATISFY THEIR FOREIGN MASTERS....Govt must clamp down on the funds received by such malicious idiots.

Anonymous said...

FYI... கோயில் பூசாரிகள் பார்ப்பனர் அல்ல. குருக்கள் மட்டுமே பார்ப்பனர்.

சுசீலா ரகுநாதன் தமிழர் அல்ல. கேரளாவைச்சேர்ந்தவர். அவரது சகோதரரும், அரபு நாட்டில் இஸ்லாமியர்களை மதமாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இது அவரே வெளியிட்டிருக்கும் statement.

Anonymous said...

இன்னொரு தகவல். இந்த மணி ஐயரும் ஒன்றும் கோவில் பூசாரி இல்லை. மஸ்கட்டில் கொஞ்ச நாள் வேலை பார்த்தார். பிறகு இந்தியா வந்தார். வேலை எதுவும் கிடைக்கவில்லை. சரி, பிழைப்புக்கு? மனைவி ஒரு கிறிஸ்துவர். இந்தியா வந்ததும் கிடைத்த ஐடியாதான் இந்த மதமாற்றம்.

Raj said...

ரோமன்கத்தோலிக்கர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Anonymous said...

உதவிக்கு யாரும் இல்லை என்னும் நிலையில் கத்தியால் வெட்டத்துணிபவனை, மாடு முட்டி இறக்கச்செய்தது. இதில் திரித்து எழுதுவதற்கு என்ன இருக்கிறது?