09 December 2011

மொக்கைக்கு லிமிட்டே கிடையாதுலே!
சிம்புவை விரல் நடிகர்னு ஊரே நக்கலடிக்கும். அதனால ‘இந்த படத்துலயாச்சும் பத்து வெரலையும் கட்டிவச்சிட்டு நடிங்க பாஸ்’னு டைரக்டர் கொஞ்சி கேட்டிருப்பார் போல. பயபுள்ள வெரலை கட்டிப்போட்டுட்டு கண்ணு காது மூக்கு முழி இடுப்பு உடுப்புனு டோட்டல் பாடி பார்ட்ஸ்லயும் வளைச்சி வளைச்சி வித்தைககாட்டி படம் பாக்கற நம்மள ரொம்ப டார்ச்சர் பண்ணிடுச்சி. அதுவாச்சும் பரவால்லங்க படம் முழுக்க திருநெல்வேலி பாஷை பேசுறேனு அடித்தொண்டைல பேசி ஏலே வாலே ஓலேனு இழுத்து இழுத்து பஞ்ச் டயலாக் பேசி ஸ்ஸ்ஸ்ப்பா.. ஒருமனுஷன் எவ்ளோ நேரந்தான் வலிக்காத மாதிரியே இருக்கறது.

இந்த சிம்புபையன் சாதாரண தமிழ்ல பஞ்ச் டயலாக் பேசினாலே இந்தியாவுக்கே பொறுக்காது.. இதுல திருநெல்வேலி பாஷைல பன்ச் அடிச்சா 2011லயே உலகம் அழிஞ்சிராதா! பயபுள்ள போலீஸ் வேஷத்துல வேற நடிச்சி தொலைச்சிருக்கு. போஸ்டர்ல ஏதோ கிராபிக்ஸ் பண்ணி பாக்க மீசையில்லாத தங்கப்பதக்கம் சிவாஜியாட்டம் லிட்டில் சூப்பர் ஸ்டாரை காட்டிட்டாலும் ஸ்க்ரீன்ல பாக்க சொல்ல கோயம்புத்தூரு ஸ்டேன்ஸ் ஸ்கூலு பத்தாம்ப்பூ பையனாட்டம்.. தியேட்டரே சிரிச்சி மகிழுதுய்யா!

பாவம் தரணி! குருவினு ஒரு படமெடுத்து டோட்டல் தமிழ்நாடே குனியவச்சி குளிப்பாட்டினதாலே கொஞ்சநாள் தலைமறைவாகி மறுபடியும் திரும்பி வந்துருக்காப்ல! இந்த வாட்டி ரொம்பவே ரிஸ்க் எடுக்காம ஹிந்தில சல்மான்கான் நடிச்ச தபாங்கையே ரிமேக்கிட்டாப்ல. நல்லதுதேன். ஆனாப்பாருங்க ஹிந்தில காமெடியா நக்கலா எடுத்த படத்த சிம்புவ வச்சு ஏன் இம்பூட்டு சீரியஸா எடுக்கோணும்னு கேக்கேன்! முழு உழைப்பகொட்டி படமெடுத்துருந்தாலும் ஆக்கின சோத்துல பல்லிவிழுந்த மாதிரி சிம்புவச்சுலா படம் எடுத்துருக்காரு!

நேர்மையான போலீஸு + பயங்கரமான கெட்ட வில்லன் + அம்மாவ கொன்னுடறான் வில்லன் + ஹீரோவோட தம்பி துரோகம் பண்றான் + ஹீரோயின லவ்பண்றான் ஹீரோ + கிளைமாக்ஸ்ல தம்பி திருந்தி வில்லன் சாவுறான்! இவ்ளோதான் கதை. நான் பொறக்கறதுக்கு முன்னாடி வெளியான பழிவாங்கற படம், போலீஸ் படம், அம்மா சென்டிமென்ட் படம்னு அந்தப் படங்களோட கதைகளையெல்லாம் மிக்ஸ் பண்ணி எடுத்த ஹிந்தி படத்தோட கதையப்போயி என்ன மைசூருக்கு காசு குடுத்து ரைட்ஸ் வாங்கி ரிமேக் பண்ணோனுங்கறேன்! அதுமில்லாம இன்னைக்கு பம்பைக்காரனே தமிழ்படத்த ரீமேக்கிட்டு திரியும்போது ஹிந்தி படத்த ரிமேக்கறதெல்லாம் சிம்புவாலதாம்லே முடியும்! (விஜய் காட்டிய வழியா இருக்கலாம்) அது புரொடியூசர் படும் பாடு நமக்கேன் பொச்செரிச்சல்றேன்.

அந்த பொண்ணு ஹீரோயினு படம் முழுக்க அங்கிட்டிருந்து இங்கிட்டு நடக்குது.. இங்கிட்டுருந்து அங்கிட்டு நடக்குது.. ஒன்னு ரெண்டு வசனம் பேசுது.. பாட்டுல கூட சிம்புதான் ஆடுதாரு. ஹீரோயின் நடந்துகிட்டே இருக்குது. அஜித்து அண்ணன்கிட்ட நடிப்பு டிரெயினிங் எடுத்துகிட்ட புள்ளையோ என்னவோ.. இடுப்புல தங்கத்துல அர்ணாகொடியோ என்னவோ மாட்டிகிட்டு ஜிங்கு ஜிங்குனு செம நடப்பு குட் இடுப்பு! அதிர்ச்சியூட்டும் வகைல ஜித்தன் ரமேஷ் ஓரளவு சுமாரா நடிச்சிருக்காப்ல..

வில்லன் நடிகர் சோனுசூட் எப்பயும் போல ஏஏஏஏஏஏய் னு கத்தறதையும் டாடா சுமோவுல பாஞ்சு பாஞ்சு துறத்தறதையும் நல்லா திருப்தியா செஞ்சுருகாப்ல. படத்தோட ஒரே சந்தோசம் பேரரசு இஸ்டைல் மசாலா வசனங்கள்! அப்புறம் அந்த கலாசலா கலாசலானு எல்ஆர் ஈஸ்வரியோட பாடி மல்லிகா ஷெராவத்து ஆடற குத்துப்பாட்டு.. அந்த ஒரே ஒருபாட்டுக்காக படம் பாக்கலாம். சந்தானம் போர் அடிக்க ஆரம்பிச்சிருகாப்ல.. அடுத்தவருஷம் ரீல் அந்துரும்னுதேன் தோணுது.

இத்தன கொடுமைக்கு மத்தில கிளைமாக்ஸ்ல சிம்பு சிக்ஸ்பேக்ஸ் பாடியெல்லாம் காட்டுறாரு. கண்ணு ரெண்டையும் தோண்டி காக்காய்க்கு போட்டுரலாம்போல கொலைவெறி வருது..

மத்தபடி பெருசா சொல்ல ஒன்னுமில்லே.. அரைச்ச மாவ அரைப்போமா துவைச்ச துணிய துவைப்போமானு ஒரு படம். எங்களுக்கும் மசாலா படம் புடிக்கும்லே.. ஆனா இது மொன்னை மசாலா. ஒன்னும் அர்ஜன்ட் இல்லலே... டிவில போடுறப்ப பொறுமையா பாத்துக்கலாம்.

18 comments:

ஆயில்யன் said...

//கண்ணு ரெண்டையும் தோண்டி காக்காய்க்கு போட்டுரலாம்போல கொலைவெறி வருது..///

:)))))))))))))))

! சிவகுமார் ! said...

//அந்த பொண்ணு ஹீரோயினு படம் முழுக்க அங்கிட்டிருந்து இங்கிட்டு நடக்குது.. இங்கிட்டுருந்து அங்கிட்டு நடக்குது. ஒன்னு ரெண்டு வசனம் பேசுது. ஹீரோயின் நடந்துகிட்டே இருக்குது.//

தமிழ் சினிமாவில் ஒரு புத்தம் புதிய முயற்சி. ஹீரோயின் நடந்து நடந்து இறுதியில் கேமராவில் டாட்டாக தெரியும் வரை குறு குறு என்று பார்க்கும் இந்த பார்வைதானைய்யா உங்கள் கலைக்கண்ணுக்கு கிடைத்த வெற்றி :-)))

Anonymous said...

லே.. நல்ல தமாசா எழுதியிருக்கேலே. சிம்பு புள்ளே கிட்டே இவ்ளோ வம்பு தேவையாலே ? டி. ஆர் படம் மாதிரி போட்டுத் தாக்கியிருக்கே.... சரி சரி... சொல்றதைப் பாத்தா பொங்கலுக்கு டிவில பாக்லாம் போலல்லா இருக்கு !!
0

சேவியர்.

Unknown said...

படம் டிவிடி எப்ப வரும்?

அறிவில்லாதவன் said...

வயிறு குலுங்க சிரிச்சேன். கண்டிப்பா இது போன்ற மொண்ணை மொக்கை படங்களை நிறைய பார்த்து கலகலன்னு விமர்சனம் எழுதணும். விழுந்து விழுந்து சிரிக்கணும். சான்சே இல்ல. கலக்கிட்டீங்க அதிசா

chaku006 said...

Mayakam enna vimarsanam engala?

Unknown said...

பாவம் சிம்பு சாரி எஸ்டிஆர். விட்டுருங்க!

அ.வெற்றிவேல் said...

கலக்கல்..அதிஷா!!!

Rathnavel Natarajan said...

அருமை.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல அலசல்.
பகிர்விற்கு நன்றி நண்பரே!
நம்ம தளத்தில்:
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"

sweet said...

ஏன் இந்த கொலைவெறி உங்களுக்கு அவங்க மேல?...

ரஜினி, சிம்பு, விஜய் எது பண்ணினாலும் நக்கல் விடும் நீங்க யாருக்கு ரசிகர்? சொல்லுலே ஹி ஹி

குரங்குபெடல் said...

"அதிர்ச்சியூட்டும் வகைல ஜித்தன் ரமேஷ் ஓரளவு சுமாரா நடிச்சிருக்காப்ல.. "

"ஓரளவு சுமாரா . . . "


இதுக்கே அதிர்ச்சியா . .

ஆனா .RB சௌத்ரிக்கு சந்தோஷம்லே . .

பகிர்வுக்கு நன்றி

sweet said...

பதிவுலகின் முக்கிய பதிவர்களான ஜாக்கி சேகர், கேபிள் சங்கர் படம் நன்றாக இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள்

நானும் படம் பார்த்தேன். மசாலா படம். நல்லா பொழுது போச்சு. உங்கள் விமர்சனமும் நன்றாக இருக்கிறது.

ஆனால் தனுஷ் & ரஜினி ரசிகர்களான அட்ரா சக்க சிபி, அதிஷா, என்வழி வினோ அவர்களது கொலை வெறியை பதிவாக போட்டுள்ளனர்.

பார்க்கலாம். கேபிள் சங்கரோட வசூல் ரிப்போர்ட் என்ன சொல்லுது என்று

பயமா இருந்த கமெண்ட் பப்ளிஷ் பண்ண வேண்டாம்

மாங்கனி நகர செல்லக் குழந்தை said...

ஹீரோயின் நடந்துகிட்டே இருக்குது. அஜித்து அண்ணன்கிட்ட நடிப்பு டிரெயினிங் எடுத்துகிட்ட புள்ளையோ என்னவோ.. இடுப்புல தங்கத்துல அர்ணாகொடியோ என்னவோ மாட்டிகிட்டு ஜிங்கு ஜிங்குனு செம நடப்பு குட் இடுப்பு! அதிர்ச்சியூட்டும் வகைல ஜித்தன் ரமேஷ் ஓரளவு சுமாரா நடிச்சிருக்காப்ல..


அருமை.....

நாய் சேகர் said...

http://tasmacdreams.blogspot.com/2011/12/12122001.html

நாய்சேகரின் பிராந்திக்கடை 12122001

Anonymous said...

சுவாரசியமான நடை..வாழ்த்துகள்..!

vishamakaran said...

பட்டாசு ;) ) )

vishamakaran said...

பட்டாசு ;) ) )