31 March 2012

ஐஸ்வர்யா தனுஷின் கொலைவெறி!
தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்கிற வாசகங்களோடு படம் முடிகிறது. ஐஸ்வர்யா தனுஷின் கருணையே கருணை. அவர் எடுத்திருக்கிற கொடூரமான மொக்கைப் படத்தை பார்த்து யாரும் தற்கொலை செய்துகொள்ளக்கூடாது என்கிற அன்பை நாம் பாராட்டியே தீரவேண்டும். ரஜினியின் மகள் அல்லவா? அவருடைய அன்பில் கருணையுள்ளத்தில் பாதியாவது இருக்காதா பின்னே!

தனுஷ் இதுவரை நடித்து ஓரளவு பேரும் துட்டும் சம்பாதித்த எல்லா படங்களிலிருந்து தலா நான்கு காட்சிகளை உபயோகித்து இந்த படத்தினை எடுத்திருக்கிறார்கள். தனுஷூக்கான TRIBUTE ஆக மூன்று படத்தினை கருதலாம். துள்ளுவதோ இளமையிலிருந்து நாலு சீன், புதுப்பேட்டையிலிருந்து இரண்டு சீன், மயக்கம் என்ன, காதல்கொண்டேனிலிருந்து சில காட்சிகள்! பொல்லாதவன் படிக்காதவனிலிருந்து மேலும்.. அதுபோக தனுஷின் பெரும்பாலான படங்களில் வருவதைப்போலவே இந்தபடத்திலும் அவருக்கு பைத்தியம் பிடித்துவிடுகிறது! தண்ணீர் தெளித்த கோழியை போல வெடுக் வெடுக் என இப்படியும் அப்படியும் ஆட்டி ஆட்டி பயமுறுத்துகிறார்! நமக்கு சிரிப்பு வருகிறது. கோழி சண்டையும் கேபி கருப்பையும் சேர்த்திருந்தால் TRIBUTE முழுமையடைந்திருக்குமோ என்று தோன்றுகிறது.

தம்த்தூண்டு ஸ்கூல் பசங்க அதவிட டாமாங்கோலி ஸ்கூல் புள்ளைங்கள காதலிப்பதைப்போல படம் எடுக்கிற புண்ணியவான்களுக்கு இபிகோவில் ஏதாவது செக்சனில் ஏதாவது கொடூரமான கட்டிங் வெட்டிங் தண்டனை வழங்கித்தொலையலாம். அதிலும் இந்தப்படம் சொல்லுகிற செய்தி இன்னும் மோசமானது. ‘’ஸ்கூல் படிக்க சொல்லவே நல்ல பணக்கார பக்கி பையனா பார்த்து லவ் பண்ணிட்டு செட்டிலாகிடுங்க கேர்ள்ஸ்’’ என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார் ஐஸ்வர்யா!.

அதோடு குடிவெறி பாரில் தாலிக்கட்டி திருமணம், நண்பனை பக்கத்தில் வைத்துக்கொண்டே சரச சல்லாப விளையாட்டு, குடும்பத்தோடு குடிக்கும் குதூகலம்.. அடேங்கப்பா படம் முழுக்க கலாச்சார அதிர்ச்சிகள் ரொம்பி வழிந்து வழித்து வழித்து ஊற்றியிருக்கிறார்கள்! ஆனால்
எதற்குமே காரணமே இல்லை. அட மண்ணாங்கட்டி லாஜிக்கும் இல்லை. ஹவுஸிங் யூனிட்டில் வளரும் ஸ்ருதிஹாசன் திடீரென பப்பில் தனுஷோடு சரக்கடிக்கிறார்! வாவ் வாட் ஏ லாஜிக் ஐசே!

சிவகார்த்திகேயன் சூப்பர் சிங்கர் சூப்பர் டான்ஸர் ப்ரோகிராம்களுக்கு நடுவில் புரோடியூசர் கிட்ட உச்சா போயிட்டு வரேனு சொல்லிட்டுவந்து நடிச்சிருப்பார் போல! திடீரென வந்து காணாமல் பூடுகிறார். பிரபு,பானுசந்தர்,பானுப்ரியா என பலரும் நட்புக்காக நடிச்சி கொடுத்திருக்க வேண்டும். ரோஹினியை கதறி கதறி கத்த விட்டிருக்கிறார்கள். ஸ்ருதிஹாசனும் அதைவிட அதிக டெசிபலில் ஆவ்வ்வ் என கத்திக்கொண்டேயிருக்கிறார்.. காதுக்கு புடிச்ச கேடு! (ரசூல்பூக்குட்டிலாம் வேலை பார்த்துருக்காரு போல)

முதல்பாதியின் முதல் முக்கால் மணிநேரம் மட்டும் படத்தை பார்த்துவிட்டு தியேட்டரிலிருந்து வெளியேறிவிடுவது உத்தமம். மீதி படத்தையும் நான் பார்த்தே தீருவேன் என்று அடம்பிடித்தால் முக்கால் படத்தில் வெறியேறி பக்கத்து சீட்டில் இருப்பவர்களையெல்லாம் கடித்துவைத்துவிடுவீர்கள் ஜாக்கிரதை!

நன்றாக நினைவிருக்கிறது. சக்கரகட்டி என்று ஒரு படம். டாக்ஸி டாக்ஸி என்கிற பாடலுக்காகவே போய் முதல் நாளே பார்த்து நொந்துபோன நினைவுகள் மனதில் அப்படியே இருக்கிறது. கதறகதற சுரணையே இல்லாமல் படமெடுத்திருப்பார் படத்தின் இயக்குனர். அதற்கு இணையான படமென்று மூன்று படத்தினை சொல்லலாம். படத்தின் இசையமைப்பாளரும், கேமராமேனும் நிறைவாக செய்திருப்பதுதான் இரண்டே பிளஸ்!

ஐஸ்வர்யாவுக்கு செல்வராகவன் ஆகிவிடவேண்டும் என்றும் ஆசை வந்திருக்கலாம். அதற்காக செல்வராகவன் படங்களையே காக்டெயிலாக கலக்கி ரீமிக்ஸ் செய்திருப்பது அடடே!! பைபோலார் டிசார்டர் என்று சொல்லிவிட்டு அருந்ததி,காஞ்சனா ரேஞ்சில் பூச்சாண்டி காட்டி சிரிப்பூட்டியிருக்கிறார். ஸ்ருதிஹாசன் சில இடங்களில் பிரமாதமாகவும் பல இடங்களில் கொடூரமாகவும் நடித்திருக்கிறார். தனுஷ் நன்றாக நடித்திருப்பதாக சொல்லப்பட்டாலும் ஒரேமாதிரி நடிப்பு கொஞ்சமாக போர் அடிக்க ஆரம்பிக்கிறது. அதன் பலன் எமோசனலான கிளைமாக்ஸ் காட்சியில் தியேட்டர் முழுக்க டேய் சீக்கிரம் சாவுடா படம் முடியட்டும் என்கிற சத்தம் காதை ரொப்புகிறது.

படம் பார்க்கும்போதுதான் தோணிச்சி.. படத்துல வர தனுஷ் பைத்தியமா? இல்ல படம் எடுத்த அவிங்க பைத்தியமா? ஒரே ஒரு பாட்டால காசு குடுத்து இந்த திராபைய பார்க்குற நாம பைத்தியமானு! சும்மா தோணிச்சி.

31 comments:

CS. Mohan Kumar said...

//ஐஸ்வர்யா தனுஷின் கருணையே கருணை. அவர் எடுத்திருக்கிற கொடூரமான மொக்கைப் படத்தை பார்த்து யாரும் தற்கொலை செய்துகொள்ளக்கூடாது என்கிற அன்பை நாம் பாராட்டியே தீரவேண்டும்//

:))

CS. Mohan Kumar said...

இந்த படத்தை திட்டாதீங்க. இல்லாட்டி இப்படி நீங்க விமர்சனம் எழுதி நாங்க சிரிக்க முடியுமா?

ஹாலிவுட்ரசிகன் said...

எதிர்ப்பார்ப்புக்கள் அதிகமாக இருக்கும் அதிகமான படங்கள் இப்படி இறுதியில் சொதப்புவது தெரிந்த விடயமே. விமர்சனத்திற்கு நன்றி.

Unknown said...

//படம் பார்க்கும்போதுதான் தோணிச்சி.. படத்துல வர தனுஷ் பைத்தியமா? இல்ல படம் எடுத்த அவிங்க பைத்தியமா? ஒரே ஒரு பாட்டால காசு குடுத்து இந்த திராபைய பார்க்குற நாம பைத்தியமானு! சும்மா தோணிச்சி.//

இதுல என்ன பாஸ் சந்தேகம்? நாமதான்.. தெளிய தெளிய அடிக்கிறாங்க!! நாமளும் விடாம பாக்கப் போறோம்.

நல்ல வேலை. நான் படம் பாக்கலை. I am escape..! Great escape...!!!

Devaraj said...

Thanks a lot for saving from mokkai

Devaraj said...

" நல்ல வேலை. நான் படம் பாக்கலை. I am escape..! Great escape...!!! "

RAJI MUTHUKRISHNAN said...

Brilliant. //தம்த்தூண்டு ஸ்கூல் பசங்க அதவிட டாமாங்கோலி ஸ்கூல் புள்ளைங்கள காதலிப்பதைப்போல படம் எடுக்கிற புண்ணியவான்களுக்கு இபிகோவில் ஏதாவது செக்சனில் ஏதாவது கொடூரமான கட்டிங் வெட்டிங் தண்டனை வழங்கித்தொலையலாம்.// I agree.

Raashid Ahamed said...

நல்ல வேளை நீங்க பட்ட இம்சையை நாங்க படாமா தப்பிக்க போறோம் (படத்தை பாக்காம தான்) எவ்வளவு மொக்கபடத்தை பாத்துட்டு அந்த கஷ்டத்தையெல்லாம் தாங்கிக்கிட்டு வலிக்காத மாதிரியே நடிக்கிறீங்க. இந்த மாதிரி குப்பைகளை ஜனங்க பாக்கும் போது எல்லாருமே இடைவேளையோட ஓடி வந்துட்டா படம் எடுத்தவுங்களுக்கு செருப்படி பட்ட மாதிரி இருக்கும். அதுக்கப்புறம் தான் மேற் கொண்டு இந்த மாதிரி குப்பை படங்களை எடுக்க யோசிப்பாங்க.

perumal karur said...

தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்கிற வாசகங்களோடு படம் முடிகிறது. ஐஸ்வர்யா தனுஷின் கருணையே கருணை. அவர் எடுத்திருக்கிற கொடூரமான மொக்கைப் படத்தை பார்த்து யாரும் தற்கொலை செய்துகொள்ளக்கூடாது என்கிற அன்பை நாம் பாராட்டியே தீரவேண்டும்////

SUPER

Unknown said...

நம்மல பைத்தியமாக்காம விடமாட்டாங்க...

காவேரிகணேஷ் said...

படம் பார்த்தற்கு உங்களின் பதிவை படித்தால் 10 தடவை வயிறு வலிக்க சிரித்து இருந்திருக்கலாம்..

என்னய்யா உன் ஸ்டைல் , ஸ்மார்டா இருக்கு..

bandhu said...

//இந்த மாதிரி குப்பைகளை ஜனங்க பாக்கும் போது எல்லாருமே இடைவேளையோட ஓடி வந்துட்டா படம் எடுத்தவுங்களுக்கு செருப்படி பட்ட மாதிரி இருக்கும். அதுக்கப்புறம் தான் மேற் கொண்டு இந்த மாதிரி குப்பை படங்களை எடுக்க யோசிப்பாங்க.//
அதை விட படம் பார்த்த எல்லாரும் டிக்கட் காசை திருப்பி கேட்டால் கண்டிப்பாக திருந்துவார்கள்..

ராம்குமார் - அமுதன் said...

மிகச்சரியான விமர்சனம்... எனக்கும் இந்தப் படத்தைப் பார்த்த போது சக்கரக்கட்டி படம்தான் ஞாபகத்துக்கு வந்தது... இரண்டுக்குமே நான் போட்டது கொலைவெறி பதிவுகள்தான்...

3 - http://nellainanban.blogspot.in/2012/03/3.html

சக்கரக்கட்டி - http://nellainanban.blogspot.in/2008/09/blog-post.html

Rathnavel Natarajan said...

படம் பார்க்கும்போதுதான் தோணிச்சி.. படத்துல வர தனுஷ் பைத்தியமா? இல்ல படம் எடுத்த அவிங்க பைத்தியமா? ஒரே ஒரு பாட்டால காசு குடுத்து இந்த திராபைய பார்க்குற நாம பைத்தியமானு! சும்மா தோணிச்சி.

அருமை அதிஷா.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல விமர்சனம் ! நன்றி !

vanila said...

தல.. நீங்க கண்டிப்பாக பார்க்க வேண்டிய (மொக்கை படம் பார்ப்போர்கள் சங்கம் - இன்னும் இருக்கா இல்ல கலைச்சுட்டீங்களா )ஒரு படம் வந்துருக்கு. ஒத்த வீடு.. சூப்பர் படம். படத்த 35 mm , 70 mm எல்லாம் கேள்விப்பட்டுருப்பீங்க. ஆனா 4 mm படம் பாத்துருக்கீங்களா. படம் முழுக்க பாச்ச்போர்ட் சைஸ்'லயே எடுத்துருக்காங்க, லாங் ஷாட் மொத்தமே மூனே எடத்துல தான். hatsoff to பாலு மலர்வண்ணன்.(டைரக்டராமாம்). ம்யுசிக் மற்றும் பாடல்கள் அருமையோ அருமை.. கண்டிப்பாக பார்க்க வேண்டும். இந்த காவியத்தின் விமர்சனம் உங்களுடைய பார்வையில் காண ஆவலுடன் இருக்கின்றோம். நடிப்பைப்பற்றி சொல்ல வார்த்தைகளில்லை.

kailash said...

I dont know when these directors are going to realize that they are spoiling the school kids . These kind of psycho movies really spoils the school children . We dont need good message movies but dont take these kind of movies and spoil the youth.

Unknown said...

To the blog author- stop writing these kind of comments. All your movie reviews are totally misguiding.Can't you appreciate the good things in any movie.eg. Aravaan. And also this movie. Especially the story of 3 can happen in any one's life. I strongly comdemn your opinion as though movie is guiding people to choose love at early life and settle early. No where it was portrayed like that. Over all this movie is much better than the routine tamil masala formula, where hero is capable of killing 100 people at a time, but can kill villain only in the climax. This movie is so realistic compared to
the usual formula. In how many tamil movies heroines are getting a chance to perform other than showing off.
This movie throughout has good performance by every single character of the movie. You are simply making
people to prejudice before watching it. A good reviewer should analyze all the aspects. You don't have that quality. I know you won't post this blog. But don't keep hurting people just for the sake of your fun.

R V Aravintraj said...

எனக்கு தெரியும் இப்படி ஏதாவது ஏடாகூடமா ஆகும் என் இருந்தாலும் நமக்கு நாலு பேரு வேணுமுல அதற்காகவே ஆரம்பித்து எனது http://munuthanus.blogspot.in/ இந்த பிளாக். அதுல உங்க விமர்ச்சனத்தை எடுத்து போட்டுக்கவா? இல்லைங்க போட போறேன். தமிழர்களை காப்பாற்ற வேண்டும்.

R V Aravintraj said...

எனக்கு தெரியும் இப்படி ஏதாவது ஏடாகூடமா ஆகும் என் இருந்தாலும் நமக்கு நாலு பேரு வேணுமுல அதற்காகவே ஆரம்பித்து எனது http://munuthanus.blogspot.in/ இந்த பிளாக். அதுல உங்க விமர்ச்சனத்தை எடுத்து போட்டுக்கவா? இல்லைங்க போட போறேன். தமிழர்களை காப்பாற்ற வேண்டும்.

R V Aravintraj said...

எனக்கு தெரியும் இப்படி ஏதாவது ஏடாகூடமா ஆகும் என் இருந்தாலும் நமக்கு நாலு பேரு வேணுமுல அதற்காகவே ஆரம்பித்து எனது http://munuthanus.blogspot.in/ இந்த பிளாக். அதுல உங்க விமர்ச்சனத்தை எடுத்து போட்டுக்கவா? இல்லைங்க போட போறேன். தமிழர்களை காப்பாற்ற வேண்டும்.

R V Aravintraj said...

எனக்கு தெரியும் இப்படி ஏதாவது ஏடாகூடமா ஆகும் என் இருந்தாலும் நமக்கு நாலு பேரு வேணுமுல அதற்காகவே ஆரம்பித்து எனது http://munuthanus.blogspot.in/ இந்த பிளாக். அதுல உங்க விமர்ச்சனத்தை எடுத்து போட்டுக்கவா? இல்லைங்க போட போறேன். தமிழர்களை காப்பாற்ற வேண்டும்.

scenecreator said...

உண்மையிலேயே கொடூரமான படம்.
என் விமர்சனம்.
மொக்கை + ரம்பம்+ பிளேடு = 3 பட விமர்சனம்)
http://scenecreator.blogspot.in/

scenecreator said...

உண்மையிலேயே கொடூரமான படம்.
என் விமர்சனம்.
மொக்கை + ரம்பம்+ பிளேடு = 3 பட விமர்சனம்)
http://scenecreator.blogspot.in/

Mehal Rams said...

Hiyo.. Hiyo... Pala paatha ore padathula pathutengala... apram enna.? indha padam oru periya tamil cinema maatrathaye kondu vandhu tolaika pogudhu paarunga..... (Idhukku Mela ennala Mudiala...) :))))))

Mehal Rams said...

Aala Vidungada Samy... Escape...

Romeoboy said...

இருந்தாலும் தோழரே இப்படி கிழித்து தொங்க விட்டு இருக்க கூடாது.. எனக்கு முதல் பாதி பிடித்து இருக்கு

rrsri said...

நேர்மையான விமர்சனம்

Anonymous said...

your review is better than the movie...

Unknown said...

படத்தின் எஃபக்ட் விமர்சனத்தில் தெரிகிறது..:)

இதில் ரஜினி படத்தின் விநியோகஸ்தர்களுக்கு பணம் திருப்பித் தரவேண்டும் என்று சில பக்கங்களில் செய்தி வந்தது..

பாவம் ரஜினி,இன்னும் என்னவெல்லாம் காத்திருக்கிறதோ?

Anonymous said...

hey badu go kill yourself. you will not understand unless you live in that(dhanush role ) mental state in real life