27 June 2012

கடவுளே உனக்கு கருணையே இல்லையா?


இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்தே யதார்த்த படங்களாக பார்த்து பார்த்து கண்ணு ரெண்டும் அவிஞ்சிபோச்சு.. விளிம்பு நிலை மக்களின் சொல்லப்படாத பக்கங்களை புரட்டி புரட்டி.. விரல்கள் பத்தும் வீங்கிபோச்சு. அழுக்கு முகங்களையும் இருட்டு மனிதர்களையும் ரத்தம் சொட்டும் அரிவாள்களையும் பார்த்து பார்த்து கிட்டத்தட்ட அரைமென்டலாகித்தான் அலைந்துகொண்டிருக்கிறோம். இதுமாதிரி நேரத்தில் கொஞ்சம் ரிலாக்ஸாக மூச்சுவிடவும் உழைச்ச களைப்பு தீரவும் வீங்கின நெஞ்சை ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும்... நாலு பாட்டு, அஞ்சு பைட்டு, நிறைய காமெடி, கொஞ்சம் ரொமான்ஸ், ஒருகவர்ச்சி டான்ஸ் என நல்ல மசாலா படமொன்று வராதா என ஏங்கிக்கொண்டிருந்தோம்.

உன்னதமான ஆகச்சிறந்த மசாலா படம் வேண்டி பெருமாள் கோயிலுக்கு பொங்க வைத்து கடாவெட்டி பிரார்த்தித்தோம். தவமாய் தவமிருந்தோம். இந்த கடவுள் இருக்கிறாரே.. கடவுள்.. கொஞ்சம் கூட கருணையேயில்லாதவர். முதலில் விக்ரம் வாழ்ந்த ராஜபாட்டையை நமக்கு பரிசளித்தார்.. அய்யோ அம்மா.. என்று கதறினோம்.. நம்முடைய குரல் கடவுளின் காதுகளை எட்டவேயில்லை. பிறகு சிம்பு நடித்த ஒஸ்தியை வழங்கினார்.. கடவுளே எங்கள விட்டுடு.. தெரியாம கேட்டுட்டோம் என தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டோம்..

எங்களுக்கு மசாலாவும் வேண்டாம் மண்ணாங்கட்டியும் வேண்டாம் ஆளவுடு என கெஞ்சினோம்.. ஆனால் கொஞ்சம் கூட இதயத்தில் ஈவு இரக்கமேயில்லாத கடவுள் இதோ இப்போது சகுனியை கொடுத்திருக்கிறார்.. நாங்க என்ன பாவம் செஞ்சோம்.. கடவுளே... முடியல..

‘’மைநேம் இஸ் ரஜினி.. ஐயாம் கமல்’’ என மிரட்டலாக.. ட்ரைலரிலேயே அடடே போடவைத்த சகுனி சென்ற வாரம் ரிலீஸானது. உதயம் தியேட்டரில் நுழையும்போதே ஒரே கூச்சல்.. ஆராவாரம்.. குத்தாட்டம்தான்.. கும்மாளம்தான்.. அடேங்கப்பா கார்த்திக்கு இவ்வளவு ரசிகர்களா என ஆச்சர்யகுறியை தலைக்குமேல் போட்டு உள்ளே நுழைந்தோம்.. படம் ஆரம்பித்து. பத்தே நிமிடங்கள்தான்.. ஜஸ்ட் டென்மினிட்ஸ்.. கூச்சலும் கும்மாளமும் அடங்கியது. ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா என்னும் பாடலுக்கேற்ப நாம் இருப்பது உதயம் தியேட்டரா அல்லது கண்ணம்மாபேட்டை சுடுகாடா என்கிற சந்தேகமே வந்துவிட்டது!

ஓக்கே திஸ் டைரக்டர் நமக்கு வேற ஏதோ வித்தியாசமான படம் காட்டப்போறார் போல.. நாமதான் வேற எதையோ எதிர்பார்த்து வந்துட்டோம்.. லெட் அஸ் கான்சென்ட்ரேட் ஆன் திஸ் மூவி என்று மும்முரமாக படத்தை பார்க்கத்தொடங்கினோம். கடவுள் சிரித்தார்!
தன் வீட்டை இடிக்க போகிறார்கள் என மந்திரியிடம் மனு கொண்டு போய் கொடுக்கிறார் ஹீரோ.. மந்திரி மனுவை வாங்கிக்கொள்கிறார்.. ஹீரோ மகிழ்ச்சியாக மந்திரிவீட்டு வாசலில் இருக்கிற தள்ளுவண்டி பஜ்ஜி கடையில் பஜ்ஜி சாப்பிடுகிறார்.. பஜ்ஜி ஆயிலை கசக்க பேப்பரை எடுத்தால் ஹீரோ கொடுத்த மனு! ஹீரோ அப்படியே ஷாக் ஆகிறார். வாவ் வாட் ஏ சீன்.. நூறாண்டு இந்திய சினிமா இப்படியொரு பிரமாதமான காட்சியை கண்டதுண்டா! இதுமாதிரி பல காட்சிகள் அடங்கிய அற்புதமான திரைப்படம்தான் சகுனி!

படத்தின் முதல் பாதி முழுக்க அப்பாவியாகவே திரிகிறார் ஹீரோ.. எலி ஏன் அப்படி திரியுது என்றால் இரண்டாம்பாதியில் முதலமைச்சரை எதிர்த்து சண்டை போடுகிறார். முதலமைச்சரே இவரை பார்த்து அஞ்சுகிறார். எதிர்கட்சி தலைவரை முதல்வராக்குகிறார். அதற்காக அவர் செய்யும் சகுனி வேலைகள்.. தமிழ்சினிமா காணாதது! இறுதியில் ஸ்டேட் கவர்மென்ட்டு முடிந்து சென்ட்ரல் கவர்மென்ட்டும் அவரை அழைப்பதோடு படம் முடிகிறது. செகன்ட் பார்ட் ஹிந்தியில் போல.. நாம தப்பிச்சோம்.. பானிபூரி பாய்ஸ் செத்தானுங்க... மூணாவது பார்ட் ஹாலிவுட்டா இருக்கலாம்.. வெள்ளை மாளிகையை காப்பாற்ற குஷ்பூவை அமெரிக்க அதிபரா ஆக்குவார்னு தோணுது!

சந்தானம் படம் முழுக்க பேசிக்கொண்டேயிருந்தால் படம் ஹிட்டாகிவிடும் என்று யாரோ இயக்குனரிடம் சொல்லித்தொலைத்திருக்க வேண்டும்.. படம் முழுக்க வாய் வீங்க வீங்க சந்தானம் பேசுகிறார். சில இடங்களில் அவர் மட்டும்தான் படத்தையே காப்பாற்றுகிறார். சமீபத்தில் வெளியான பல படங்களிலும் குடிப்பழக்கத்தை ஆதரிப்பது போல வசனங்கள் இடம்பெறுவது வாடிக்கையாகிவிட்டது. இதையெல்லாம் யாரும் எதிர்த்து போராடமாட்டார்களா?

ஹீரோ கார்த்தி சிரிச்ச மூஞ்சியாகவே ஒரே ரியாக்சனுடம் படம் முழுக்க வருகிறார். விஜயை போலவே வளைந்து வளைந்து நடனமாடுகிறார்.. பஞ்ச் டயலாக் பேசுகிறார்! நல்ல வேளை இந்த படம் செம ஃப்ளாப்! இல்லாட்டி போன இன்னும் பத்து படத்திலாவது இதேமாதிரி பஞ்ச் டயலாக் பேசி டான்ஸ் ஆடி நம்மை தாலியறுத்திருப்பார்! விஷால்,பரத் வரிசையில் இந்த தளபதியும் இணைந்து நாட்டுக்கு நன்மை செய்வார் என்பது தெரிகிறது.
படமும் சரியல்லை.. ஹீரோயினும் சரியில்லை.. இயக்குனருக்கு ஆன்ட்டி போபியோவோ என்னவோ ரோஜா,ராதிகா என சீரியல் ஆன்டிகளை வேறு அள்ளிக்கொண்டு வந்து நடிக்க வைத்திருக்கிறார். ம்ம்.. என்னத்த சொல்ல.. வில்லனாக பிரகாஷ்ராஜ் இந்தப்படத்திலும் முட்டாளாகவே வாழ்கிறார். கத்துகிறார். சவால் விடுகிறார். டேய்.. என்கிற வார்த்தையை விதவிதமான மாடுலேஷன்களில் சொல்கிறார்.

படத்தில் டெக்னிக்கல் சமாச்சராங்களை கவனிக்கவே முடியாத அளவுக்கு படம் அவ்வளவு சிறப்பாக இருந்ததால் அதைப்பற்றியெல்லாம் எழுதவே தோணலை. படத்தின் இயக்குனர் சிறந்த வசனகர்த்தாவாக இருக்கலாம். படத்தின் பல வசனங்கள் நச்சென்று இருந்தன.

இந்த உலகப்படம் பார்க்கிற அறிவுஜீவிகள்தான் மசாலா படம் பார்க்கிறவனை முட்டாளாக நினைத்து பீட்டர் விடுவதை இச்சமூகம் கண்டிருக்கிறது.. வரவர மசாலா பட இயக்குனர்களே தன்னுடைய ரசிகனை முட்டாளாக நினைக்கத்தொடங்கியிருப்பது மசாலா பட ரசிகர்களை வெறிகொள்ள செய்துள்ளது..

பைனலாக ஒன்றே ஒன்றுதான்.. கடவுளே உனக்கு கருணையே இல்லையா.. மொக்கை மசாலா படங்களிடமிருந்து எங்களை காப்பாற்று யதார்த்த படமொக்கைகளை நாங்களே பார்த்துக்கொள்கிறோம்!

32 comments:

அஞ்சா சிங்கம் said...

உங்களின் அனைத்து புலம்பல்களுக்கும் கடவுள் முடிவு கட்டுவார் .....
ஆமாம் ஆனந்த தொல்லை விரைவில் வெள்ளி திரையில் .........
மூச்சி திணற திணற மசாலா தூவி எடுத்திருக்காரு நம்ம பவர் ஸ்டார் ....

அமுதா கிருஷ்ணா said...

கரெக்ட்,முதல் நாளே படம் பார்க்க போவியா..போவியா..என்று என்னை நானே திட்டி கொண்டு இருக்கிறேன். சிறுத்தை,ஆயிரத்தில் ஒருவன்,சகுனி என்று தியேட்டரில் பார்த்த எந்த கார்த்தி படமும் எனக்கு பிடிக்கவில்லை.

Unknown said...

sariyaa soneenga nanba.by ungal nanban kavithai nadan
http://nadikavithai.blogspot.in/

Anonymous said...

Dai nee enna thirai paarvai mathan rangekku comment podara... padatha parthiya velaya paaru.... summa seen podatha...

இராகவன் நைஜிரியா said...

:-))

Anonymous said...

Your Saguni review is much more entertaining than the film. LOL!

Unknown said...

கடவுள் எனக்கும் கருணை காட்டல. ஒரு நைட் ஷோவுக்கு கூட்டிட்டுப் போய் தூக்கத்தையும் துட்டையும் அபகரித்துக் கொண்டார்.

செம நக்கல் விமர்சனம். சிரித்துக் கொண்டே வாசித்தேன். உங்க விமர்சனத்துக்காகவே சகுனி பார்ட் -2 எடுக்கலாம்.

KUTTI said...

same blood...

here is my link... expecting your comments

http://feelthesmile.blogspot.in/2012/06/blog-post_25.html

Mano

manjoorraja said...

இந்த பதிவின் ஹைலைட்: மொக்கை மசாலா படங்களிடமிருந்து எங்களை காப்பாற்று யதார்த்த படமொக்கைகளை நாங்களே பார்த்துக்கொள்கிறோம்!

Anonymous said...

செம ! செம !!
அதிஷா அது ஆன்ட்டி போபியா இல்லை ,ஆன்ட்டி பிலியா.
போபியா = வெறுப்பு
பிலியா = பிடிப்பு
அதிக பிரசங்கி தனமாக இருந்தால் மன்னிக்கவும்

ramachandranusha(உஷா) said...

அதிஷா, உம்ம விதி,
இந்த திராபை படத்தைப் பார்க்க வைத்தற்கு கடவுளை நிந்திப்பது ரொம்ப அநியாயம் :-)

நல்ல தரமான பொழுதுப் போக்கு படம் எடுப்பதுதான் மிக கஷ்டம் :-)

ramachandranusha(உஷா) said...

அதிஷா, உம்ம விதி,
இந்த திராபை படத்தைப் பார்க்க வைத்தற்கு கடவுளை நிந்திப்பது ரொம்ப அநியாயம் :-)

நல்ல தரமான பொழுதுப் போக்கு படம் எடுப்பதுதான் மிக கஷ்டம் :-)

கோவை நேரம் said...

ரொம்ப லேட்டா பாதிக்க பட்டு இருக்கீங்க...விமர்சனம் அருமை..

Anonymous said...

unakellam ithuvum venum innamum venum.

Nat Sriram said...

ஸ்க்ரிப்டாக கேக்க நல்லாருந்து படமா சொதப்பினா மாதிரி இருக்கு..ஒரு டவுட்..ரயில்வே ப்ராஜக்ட்லாம் செண்ட்ரலா, ஸ்டேட்டா? மொத ஹாஃப்ல செண்ட்ரல் ரயில் மினிஸ்டர்க்கிட்ட தொங்குறாரு..அப்புறம் கடைசியா சிஎம் கேன்சல் பண்றதா வருது? வாட் அ லாஜிக் சர்ஜி..

Ariv said...

அருமையான விமர்சனம். இந்த புண்ணாக்கு படத்துக்கு போய் என் நேரந்தான் வேஸ்ட். எனக்கு கார்த்தியின் மத்த படங்கள் பிடிச்சுது. ஆனா எப்படி பார்த்தாலும் இந்த படம் உலக மகா குப்பை.

Unknown said...

பெருமாள் கோயிலுக்கு பொங்க வைத்து கடாவெட்டி பிரார்த்தித்தோம்.// பெருமாள் கோயிலு.......கடாவெட்டி ithellaam nallella. athukku padaththaiye paaththuduven!

Anonymous said...

Very nice..coming to old form!!!..keep going..."பானிபூரி பாய்ஸ் செத்தானுங்க.." :-))

---by Maakkaan

Anonymous said...

அதுக்குதான் முதல் வாரம் ரிசல்ட் பார்த்துட்டு படத்துக்கு போகணும். அப்படி போனா காசாவது மிஞ்சும் :)

perumal karur said...

ரொம்ப நாள் கார்த்தி தாக்கு பிடிக்க மாட்டார் என்பது இந்தப்படத்தில் இருந்து ஆரம்பமாகிறது. ஆம் கார்த்தியால் கடைசிவரை ஹீரோவாக குப்பை கொட்ட முடியாது. அவர் இன்னொரு அரவிந்த சாமி தான்.

பை த பை

விமர்சனம் நல்ல எள்ளல் நடையில் உள்ளது. ரசித்துப் படித்தேன். வாழ்த்துக்கள்.

Unknown said...

naanum trailer paarthu film polam nunnenaichen.
great writing

http://abiramivisagan.blogspot.com

Unknown said...

nice.
vimarsanam was way too interesting

Anonymous said...

இந்த மொக்க படத்த கிழிகிழின்னு கிழிச்ச உங்களுக்கு தமிழ் மக்கள் சார்பில் நன்றி..!..இந்த படத்தையும் பார்த்து,சகித்து,விமர்ச்சிகின்ற உங்கள் பொறுமையை கண்டு வியக்கேன்....?????#அலார்ட்டு அதிஷா வாழ்க..

Anonymous said...

hey....ur vimarsanam was interesting andhumorous...

யதுபாலா said...

நக்கலா நச்சுன்னு இருக்கு...!!! தமிழ் ரசிகர்களுக்கு முன் எச்சரிக்கை கொடுத்த ''அலார்ட்டு அதிஷா'' வாழ்க.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல விமர்சனம் ! இவ்வளவு சொன்ன பிறகு இந்தப் படத்திற்கு போக முடியுமா ? நன்றி சார் !

Raashid Ahamed said...

உங்களை யாரு வேலில போற ஓணானை எடுத்து வேட்டியில விட சொன்னது. நல்ல வேளை நீங்க பாத்ததுனால நாங்க தப்பிச்சோம். பேசாம கர்ணன் படத்தை இன்னொரு முறை போய் பாருங்க விமர்சனம் எழுதி சாப விமோசனம் அடையுங்க. சந்தோஷமா இருங்க.

Vanthiyathevan said...

Nice One! :-)

ம.தி.சுதா said...

ஃஃஃஃஎலி ஏன் அப்படி திரியுது என்றால் இரண்டாம்பாதியில் முதலமைச்சரை எதிர்த்து சண்டை போடுகிறார்.ஃஃஃஃ

எத்தனை பெரிய மாற்றங்கள் சினிமாத்துறையில் வந்தாலும் சில பாணிகள் வரைமுறைகளை மாற்றவே முடிவதில்லை...

Anonymous said...

Idha vida kuppai padam, "Siruthai"-a edhukku da super hit aakineengha? Saavunghada... inime ippadi dhan... marana mokkai dhan unghalukku.

Unknown said...

இதுக்கு எங்க தலைவியோட ”கின்னார தும்பி...” ”அஞ்சரக்குள்ள வண்டி...” படங்கள் வசனமே இல்லாம வெற்றி பெற்றது பெருமையா இருக்கு.....

சதீஷ் செல்லதுரை said...

http://tamilmottu.blogspot.in/2012/07/ii.html ஒரு விளம்பரத்துக்கு உங்க வீட்டுல இந்த போஸ்டர்....