அஜித்குமார் மிகச்சிறந்த மனிதர். கடினமான உழைப்பாளி. நிறைய ஏழைகளுக்கு உதவிகள் செய்து வருபவர். பிரியாணியை தன் கையால் சமைத்து லெக்பீஸோடு ஏழைகளுக்கு அர்ப்பணிக்கும் தயாள குணங்கொண்டவர். சொந்தக்காலில் சுயமாக நின்று கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறியவர். விபத்தில் அடிபட்டு உடல்நலங்குன்றி தேறிவந்து நடித்தவர். தோல்விகள் அவரை ஒன்றுமே செய்யாது. ப்பீனிக்ஸ் பறவைபோல தோல்விகளிலிருந்து குபுக் என குதித்து வந்தவர். உண்மை உலகில் நல்ல நல்லவராக வாழ்வதற்காகவே சினிமாவில் கெட்ட கெட்டவராக நடிப்பவர். இன்றைக்கு தமிழகத்தில் அப்துல்கலாமுக்கு பிறகு அஜித்குமார்தான் மிக மிக நல்ல நல்ல நல்லவர். அவரைவிட்டால் தமிழ்நாட்டிலேயே ஏன் இந்த இந்தியாவிலேயே வேறு நல்ல நல்லவர்கள் இருப்பதாக தெரியவில்லை. இப்படி தமிழகமே போற்றும் ஃபீல்குட் புராஃபைல் கொண்டவர் அஜித்குமார். அவரை மதிக்கலாம். பாராட்டலாம். விழா எடுக்கலாம். பீச்சாண்டை சிலைகூட வைக்கலாம்.
ஆனால் அதற்கொசரம் அவருடைய படம் கொடூர குப்பையாய் இருந்தாலும் அதை கொண்டாடும் அளவுக்கெல்லாம் எனக்கு பெரிய மனசு கிடையாது. அஜித் படங்களை முதல்நாளே பார்த்துவிட வேண்டும் என்று துடிக்கிற கோடானுகோடி உண்மையான உத்தம தமிழர்களுக்கு மத்தியில் உலகமயமாக்கலால் உண்டான பங்குசந்தை வீழ்ச்சியால் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவால் அடியேன் இரண்டாம்நாள்தான் இத்திருக்காவியத்தை காணும் பாக்யம் வாய்த்தது.
தியேட்டரின் அருகினில் கூடிய கூட்டங்கள் கடலா கடல் அலையா..ஆஆஆஆஆஆஆ... என்று பிரமிக்கும் அளவுக்கு இளசுகள் எல்லாம் தலவெறி தலைக்கேறி கையில் டிக்கட்டோடு சுற்றிக்கொண்டிருந்தனர். சில தியேட்டர்களில் டிக்கட் விலை 750ஐ தாண்டியதாம். அதிகாலை நான்குமணிக்கே நகரின் முக்கிய சாலைகள் முடங்கும் அளவுக்கு தியேட்டர் வாசல்களில் கூட்டமாம். எத்தனை ஆயிரம் வேண்டுமானாலும் காசு கொடுத்து டிக்கட் வாங்க ரசிகர்கள் காத்திருந்தது தெரிகிறது. ப.சிதம்பரத்துக்கு இதெல்லாம் தெரிந்தால் விலைவாசியை இன்னும் கூட பத்துபர்சென்ட் ஏற்றிக்கொள்ளுவார் என்பதில் ஐயமில்லை! இந்த தியேட்டர் ப்ரீக்வல் புராணங்களை புறந்தள்ளிவிட்டு படத்தைப்பற்றி மட்டும் பார்ப்போமா?
முதல்காட்சியிலே அஜித்தை நான்குபேர் பிடித்துவைத்து துப்பாக்கி முனையில் அடித்து உதைத்து ரத்தம் வழியும் வாயோடு பஞ்ச் டயலாக் சொல்லவைக்கிறார்கள். அஜித்தும் வேறு வழியில்லாமல்.. ‘’டேய்ய்ய்ய்ய்ய்... என் வாழ்க்கைலெஏஏஏஏஏஏஏ.. ஒவ்வொரு நாளும்.ம்ம்ம்ம்ம்..’’ என்று இழுத்து இழுத்து டிரைலரில் பேசிய அதே பஞ்ச் டயலாக்கை பேசுகிறார். பேசிமுடித்ததும் பிக்காலி பயலுக டூமீல்னு சுடாம தல இன்னொரு பஞ்ச் பேசுவாரோ என காத்திருக்கிறார்கள்.. அந்த கேப்பில் அஜித்தின் மகத்தான இடுப்பு பிரதேசத்தில் யாரோ பத்திரமாக இருக்கட்டுமே என குத்தி வைத்திருந்த கூரான கத்தியை உருவி நான்குக்கும் மேற்பட்டவர்களை கொன்றுவிட்டு.. கீழே கிடக்கிற துப்பாக்கியை எடுத்து நம்மை நோக்கி சுடுகிறார்! அப்போதே நாம் உஷாராகி வெளியே ஓடிவந்திருக்க வேண்டும். இந்த விதிதான் விடாதே!
இலங்கையில் போர் நடக்கிறது. குடும்பம் கொல்லப்படுகிறது. அஜித் அநாதையாகி திருடனாகிறார்.(இதெல்லாம் பெயர் போடும்போதே போட்டோவில் காட்டிவிடுகிறார்கள்). அடுத்த காட்சியில் இலங்கையிலிருந்து ராமேஸ்வரம் செல்லுகிற டெய்லி சர்வீஸ் (இரவு கிளம்பினால் காலையில் வந்துசேரும் போல) அகதிகள் எக்ஸ்பிரஸ் படகில் ஒரு பெட்டியோடு தொந்தியும் தொப்பையுமாக ஆந்திரா மெஸ்ஸில் இரண்டு ஃபுல்மீல் சாப்பிட்ட தெம்போடு இரண்டு மண்ணெண்ணெய் கேன் லூயி பிலிப்பி சட்டை சகிதம் நேராக ராமேஸ்வரம் கடற்கரையிலேயே வந்திருங்குகிறார்.
ஒவ்வொரு அகதியாக கூப்பிட்டு அழைத்து உட்காரவைத்து அரசு ஊழியர் ஒருவர் பெயர் ஊர் விபரமெல்லாம் கேட்கிறார். அதுபோல அஜித்தும் அழைக்கப்படுகிறார். விசாரிக்கப்படுகிறார். அவரும் தனக்கேயுரிய பாணியில் ‘’ப்பில்லா... ட்டேவிட் ப்பில்லா’’ என்கிறார். அந்த அலுவலரும் அஜித்தை மிரட்டி பஞ்ச் டயலாக் சொல்லவைக்கிறார் அஜித்தும் அந்த சிச்சுவேசனில் ஏதாவது சொல்லியாக வேண்டுமே என தீவிரவாதிக்கும் போராளிக்கும் இருக்கிற வித்தியாசத்தினை ஒருவரியில் சொல்லிவிடுகிறார்! உடனே அஜித் அகதிகள் முகாமில் நண்பர்களோடு டீ சாப்பிடுகிறார். போலீஸ்காரரை புரட்டி எடுக்கிறார். போலீஸ் ஸ்டேஷனில் அஜித்தை கட்டிவைத்து அடிக்கிறார்கள். கடத்தலில் ஈடுபடுத்துகிறார்கள். அஜித் கொலைசெய்யதொடங்குகிறார்!
ஆயிரம் பேர கொன்னாதான் அரைவைத்தியனாக முடியும் என்பது மாதிரி நூறு பேரையாவது கொன்றால்தான் முக்கால் கேங்ஸ்டர் ஆகமுடியும் என்று குவான்டீன் டாரன்டீனோவும் மார்ட்டீன் ஸ்கார்சீயும் மரியா புஜோவும் எழுதிவைத்திருக்கிறார்கள். டேவிட் பில்லா தனக்காக இல்லாவிட்டாலும் மேற்சொன்ன உத்தமமான மனிதர்களுக்காக நல்லவனோ கெட்டவனோ யாராக இருந்தாலும் அவர் வாழ்வதற்காக ரத்தம் கொட்ட கொட்ட கொன்று குவிக்கிறார்.
இலங்கை அகதியான அஜித்துக்கு சென்னையில் பிரவுன் சுகர் விற்கும் இடம் தொடங்கி ‘’டேன்ஸ் வித் மீ’’ மாதிரியான ஆங்கிலப்பாடல்கள் கூட தெரிந்திருக்கிறது. இங்கிலீஸில் பொழந்துகட்டுகிறார். அன்பார்சுனேட்லி அவர் இலங்கைத்தமிழர் என்பதால் புறத்தால என்கிற தமிழ்வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் போகிறது. அந்த க்ஷணத்தில்தான் அஜித் இலங்கையிலிருந்து வந்த அகதியா அல்லது இங்கிலாந்து ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டியில் பட்டம் பெற்று நாடுதிரும்பியவரா என்கிற சந்தேகமே உருவாகியது! அதைவிடுங்க.. இப்படியாக ஒருவழியாக டாக்டர் அஜித் பல ஆபரேஷன்கள் செய்து சின்ன டானாக மாறுகிறார். கொதிக்கும் வெயிலில் குளுகுளு கோட்டும், கடுமையான இருட்டு நேரத்திலும் டார்க் கூலர்ஸும் போட்டுக்கொள்கிறார். (எனக்கென்னவோ அஜித் டான் ஆவதே இந்த கோட்டு போடவும் கூலிங் கிளாஸ் மாட்டவும்தானோ என்றுகூட தோன்றுகிறது).
பிட்வீன் தன்னுடைய அக்காவை சர்ச்சில் சந்திக்கிறார். சில காட்சிகளுக்கு பிறகு அக்கா செத்துப்போகிறார் (படத்தில் இயற்கையாக செத்துப்போகும் ஒரே ஆள் அவர்தான்). நெட்டையாக இருப்பவரும் சர்ச்சில் பாட்டு பாடும் அடக்க ஒடுக்கமான அக்கா பெண்ணை அழைத்துக்கொண்டு கோவா போய் தங்கவைக்கிறார். அஜித்தை ஆசையாக மாமா மாமா என்று அழைக்கும் அந்தபெண்ணுக்கு குடிப்பழக்கம் உண்டாகி அது வேறு யாரோடோ பார்ட்டியில் டேன்ஸ் ஆடும் அளவுக்கு எல்லைமீற கடுப்பாகும் அஜித் பத்துபேரின் மண்டையில் பாட்டில் உடைக்கிறார்.. சூப்பர் ஃபைட். (க்ளைமாக்ஸில் அந்தபெண்ணை கொன்றுவிடுகிறார்கள்) இதற்கு நடுவில் இன்டர்வெல் விட்டாக வேண்டும் என டைரக்டருக்கு திடீரென தோன்றிவிட்டது போல ஓடிப்போய் வில்லன்களை பிடித்து கூட்டிவந்து நிற்க வைக்கிறார் அஜித் பஞ்ச்டயலாக் பேசுகிறார்! நடக்கிறார் இன்டர்வெல்!
முதல் பாதியில் நாம் நிறைய எழுதுகிற அளவுக்கு மேட்டர் இருந்ததில்லையா? இரண்டாம் பாதியில் அதுமிகவும் குறைவு. ரஷ்யாவில் இருக்கிற ரஷ்ய டானோடு அஜித் மோதுகிறார். அஜித் அவனிடமும் பஞ்ச் டயலாக் பேசிவிட்டு முதலமைச்சரை கொன்று நீதிபதியை மிரட்டி சிறையிலிருந்து திரும்பி புராவியோவோ என்னவோ உலகமேப்பில் தேடி கண்டுபிடிக்க வேண்டிய நாட்டுக்கு இரட்டை ஆளாக (அஸிஸ்டென்ட்டோடு) போய் அட்ரஸ் தேடி கண்டுபிடித்து மாபெரும் டானின் ஆயுதகிடங்கில் அவர்களுக்கே தெரியாத இடங்களில் குண்டுவைத்து அழித்து, ஒரே ஒரு துப்பாக்கியின் உதவியோடு பல நூறுபேரை கொன்றுகுவித்து தர்மத்தை காக்கிறார். அதோடு இயக்குனர் வேறு வாடகைக்கு ஒரு ஹெலிகாப்டரையும் எடுத்துவிட்டதால், அஜித்தை டூப்பில்லாமல் தொங்கவிடுகிறார். ஹெலிகாப்டரில் தொங்கும்போது கூட ‘’டேய்ய்ய்ய்ய் நான்...’’ என்று தொடங்கும் ஏதாவது ஒரு பஞ்ச் டயலாக்கை பேசிவிடுவாரே என்கிற அச்சத்தோடே படம் பார்க்கும் துர்பாக்கிய நிலை வேறு பயமுறுத்தியது. அந்த இடத்தில் பஞ்ச் வைக்காத வசனகர்த்தாவின் திசைபார்த்து கும்பிடுகிறேன்.. நன்றி தலைவரே!
இப்படியாக பலபேரை கொன்று டான் ஆகிறார் அஜித் (இதுதான் படத்தின் ஒன்லைன்). நல்லவேளையாக இரண்டுமணிநேரத்திலேயே அவர் டான் ஆகிவிட்டது நாம் பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியமாக இருக்கலாம்.
அஜித் பில்லா முதல் பாகத்தில் இருந்ததை விடவும் இதில் நிறையவே வயதானவராக தெரிகிறார். மேக்கப் கொஞ்சம் ஏற்றியிருக்கலாம். இது ஏதோ பின்னவீனத்துவ ப்ரீக்வல் போல! டெக்னிக்கலாக அப்படி! மேக்கிங் இப்படி! கேமராவ பார்த்தியா.. இசைய நீயும் கேட்டியா.. என்றெல்லாம் எதை சொன்னாலும் படத்தில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. அஜித்தை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படம் போல! அஜித் ரசிகர்கள் அவர் நடந்தாலே கைதட்டுவார்கள். இதில் நிறைய நடக்கிறார், பஞ்ச் டயலாக் பேசுகிறார். கைத்தட்டி மகிழலாம்.
வெறும் தொழில்நுட்பமும் ஸ்டைலும் மட்டுமே முழுமையான திரைப்படமாகாது. உணர்வு என்கிற ஜந்துவே இல்லாத ஒரு திரைப்படத்தை பல வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் பார்க்கிறேன். என்னதான் மொக்கை மசாலா படமாக இருந்தாலும் அதன் பலம் திரைக்கதையின் சுவாரஸ்யத்தில்தான் இருக்கிறது. புளித்துப்போன தீ,ரங்கா காலத்து காட்சிகள். கொஞ்சமும் புத்திசாலித்தனமில்லாத ட்விஸ்ட்டுகள். அதிலும் வில்லனை காட்டும்போதெல்லாம் அவர் இடுப்பில் துண்டோடு முதுகில் மிதிக்கும் மசாஜ் பெண் என்கிற ஐடியாவை எங்கிருந்து பிடித்தார்களோ கொடுமை. ஓவர் வன்முறை, மொக்கையான செக்ஸ் அடங்கிய ஒரு ஹைபட்ஜெட் ஸ்டைலிஷ் 'சுறா!தான் இந்த பில்லா 2.
எதை வேண்டுமானாலும் தாங்கிக்கொள்வேன்.. ஒரு விஷயம்தான் கடைசிவரை உறுத்தியது. எப்படித்தான் இரண்டு ஆண்களுக்கு பிகினியெல்லாம் மாட்டிவிட்டு ஹீரோயின்கள் என்று சொல்ல முடிந்ததோ இந்த மனசாட்சியே இல்லாத இயக்குனருக்கு!
50 comments:
வித்தியாசமான விமர்சனம்... அங்கங்கு நல்ல நகைச்சுவைகள்... ரசித்துப் படித்தேன்...
பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்... (த.ம. 1)
// ப.சிதம்பரத்துக்கு இதெல்லாம் தெரிந்தால் விலைவாசியை இன்னும் கூட பத்துபர்சென்ட் ஏற்றிக்கொள்ளுவார் என்பதில் ஐயமில்லை!//
ROFL
பலபேரை கொன்று டான் ஆகிறார் அஜித் (இதுதான் படத்தின் ஒன்லைன்). நல்லவேளையாக இரண்டுமணிநேரத்திலேயே அவர் டான் ஆகிவிட்டது நாம் பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியமாக இருக்கலாம்.
அருமை.....
அத்தான் - என்னைவிட்டு படத்திற்கு செல்லாதீர்கள் என்று எவ்வளவு முறை சொல்லியும் கேக்க மாட்டேன்கறீங்க. உங்களுக்கு இதுவும் வேணும் இன்னமும். உங்க ரிவ்யூ கலக்கல். இப்படியே பல ரிவ்யூ எழுத வேண்டி உங்கள் சாருமதி.
very very beautiful and interesting review, my kisses :)
கலக்கல்
please dont tell anything.
கிண்டலில் செய்த மசாலா சுண்டல் உங்க மொழி நடை.தொரட்டும்..
hollywood making ya. u dont know cinema. but u write many times 'bad" comment. pls change in your (old) view.
எப்படித்தான் இரண்டு ஆண்களுக்கு பிகினியெல்லாம் மாட்டிவிட்டு ஹீரோயின்கள் என்று சொல்ல முடிந்ததோ இந்த மனசாட்சியே இல்லாத இயக்குனருக்கு!
very funny!
அவ்வளவு சத்தமமவா கேக்கு த்து வா
first u know that " direction, camera man, editing "
உக்காந்து வேலை வாங்குறவனுக்கும், உயிரை கொடுத்து வேலை செய்யிறவனுக்கும் வித்தியாசம் இருக்கு.
u first grade
எப்படித்தான் இரண்டு ஆண்களுக்கு பிகினியெல்லாம் மாட்டிவிட்டு ஹீரோயின்கள் என்று சொல்ல முடிந்ததோ இந்த மனசாட்சியே இல்லாத இயக்குனருக்கு!
Hahahahah... very funny
அவ்வளவு சத்தமமவா கேக்கு த்து வா
இந்த மாதிரி விமர்சனம் படிக்கவே இப்படிப்பட்ட படங்கள் வரணும். வரும்
//
சாருமதி, July 16, 2012 4:29 PM
அத்தான் - என்னைவிட்டு படத்திற்கு செல்லாதீர்கள் என்று எவ்வளவு முறை சொல்லியும் கேக்க மாட்டேன்கறீங்க.//
இது வேறயா?
எப்படி உங்களால் மட்டும் இப்படி யோசிக்க முடிந்தது...ஆரம்பத்திலேயே அஜித்தை பற்றி ஒரு புகழாரம் பாடி ஆரம்பித்து, அதற்காக அவர் மொக்கை படங்களை பார்க்க வேண்டுமா? என்ற உங்க நேர்மை எனக்கு புடிச்சு இருக்கு!
நம்ம அதித்தோட ஆக்போர்ட்ஸ் இங்கிலிஷு படிச்சது ஒன்னு பெயரிலியா கமென்ட் போடுது ...ஸ்டார்ட் மியூசிக்
நம்ம அதித்தோட ஆக்போர்ட்ஸ் இங்கிலிஷு படிச்சது ஒன்னு பெயரிலியா கமென்ட் போடுது ...ஸ்டார்ட் மியூசிக்
ஒவ்வொரு கட்டுரையும் முடிக்கும் போது ”என்னோட கட்டுரையில் ஒவ்வொரு வரியும், ஒவ்வொரு வார்த்தையும், ஏன் ஒவ்வொரு எழுத்தும் நானே செதுக்கினது”ன்னு முடிங்க. நல்லாருக்கும்.
சார் சார் அப்டியே அணில் படம் சுறாவுக்கு நீங்க விமர்சனம் எழுதியிருந்தாலோ இல்ல எழுதியோ இதுகூடவே அட்டாச் பன்னி அடிச்சு விடுங்க ப்ளீச்
செம செம விமர்சனம்
விமர்சனம் சுத்த மொக்கை. மொக்கைப் படத்துக்கு மொக்கையாத்தான் விமர்சனம் எழுத முடியும் என்றாலும் படத்தின் காட்சிகளை அப்படியே எழுதி அதை விமர்சனம் என்று வேறு போட்டுக் கொள்வது...ம்ம்ம்...நடக்கட்டும் நடக்கட்டும்.
//படத்தில் இயற்கையாக செத்துப்போகும் ஒரே ஆள் அவர்தான்// முதல் //பின்னவீனத்துவ ப்ரீக்வல்// பலப்பல செமசெம-க்கள்..:))
போட்டு தாக்குங்க பாஸ் ....பணம் போச்சே...
பணம் போச்சே ....முன்னாடியே சொல்ல கூடாதா?
//‘’டேய்ய்ய்ய்ய்ய்... என் வாழ்க்கைலெஏஏஏஏஏஏஏ.. ஒவ்வொரு நாளும்.ம்ம்ம்ம்ம்..’’//
//‘’ப்பில்லா... ட்டேவிட் ப்பில்லா’’ //
அஜீத்தை கண் முன்னே கொண்டு வந்துட்டீங்க ! சான்சே இல்லை. மிமிக்ரி பண்ணி காட்டுற மாதிரி இருந்துச்சு
செம விமர்சனம்....
Raaasa... unga blogku keezhae 'adadae!! review arumai' endru makkal poda vendum enbatharkkaaga, thaangal ippadi oru Mokkai review ezhudha vendum endru avasiyam illai...
Ohh.. Wait.. Its not a review basically.. Its just your view.. Try to explain the Plus and negative points in every movie..
One more thing... 'CM-ma Billa pottu thalraaru' -- idhula irundhu neenga endha alavukku padam paathurukkeenganu theriyudhu..
Neengallaaam enga irundhuyya varreeenga? innamum, avaru colling glass podraaru, coattu podraarunnu pesittae irukkeenga.. neengallaam edhukku 'padam paakka theatre ku poganum?? unnaiyellaam poga solli yaaru azhudha??' ... ViLangum Thamizh Cinema..
Thodarndhu ezhudhunga thambi... Pinnaala nallaa varuveenga...
"எப்படித்தான் இரண்டு ஆண்களுக்கு பிகினியெல்லாம் மாட்டிவிட்டு" ...:-))
good..I like the lines..!!!!!!!
----by
Maakkaan
உணர்வு என்கிற ஜந்துவே இல்லாத ஒரு திரைப்படத்தை பல வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் பார்க்கிறேன்..// nachunu solitinga... ovvoru variyum sirika vaikudu... padam paathadaku inda madiri 4 vimarsanatha 40 thadava padikalam....
Ungalaa mudincha varikkum Ajith ah kevalapaduthittinga athu rombha varutham...
kadasiyaga oru onumaiya sonnathukku mikka nadri brother...
"அஜித் ரசிகர்கள் அவர் நடந்தாலே கைதட்டுவார்கள். இதில் நிறைய நடக்கிறார், பஞ்ச் டயலாக் பேசுகிறார். கைத்தட்டி மகிழலாம்..."
சினிமான்னா கொஞ்சம் அப்புடி இப்புடி தான் இருக்கும். அதை ரசிக்காமா இப்படி அநியாயத்துக்கு குறை சொல்லி திரிஞ்சா எப்புடி ? நல்ல வேளை அஜித் ரசிகய்ங்க இண்டர்நெட் பாக்குற அளவுக்கு விவரமானவிங்க இல்லைங்கிற தைரியத்துல தான் இந்த கிழி கிழிச்சிருக்கீங்க. இந்த விமர்சனத்த மட்டும் படிச்சிருந்தா உங்களை உண்டு இல்லைன்னு பண்ணியிருப்பாய்ங்க.
என்னைப் பொறுத்தவரையில் ஆக்சன் படங்களுக்கு அஜித் செட் ஆகமாட்டார். ஏனென்றால் ஆக்சன் படங்களுக்கு என்றுமே மேன்லியான ஹீரோவாக இருக்க வேண்டும். அஜித்துக்கு அந்த மேன்லினஸ் இல்லை. பேசாமல் ரொமாண்டிக் ஹீரோவாகவே தொடரலாம்.
ungaluku padam pidikalana pakadhinga.. yedhukaga ajith padatha pathi ivlo kevalama review eludhiringa... idhu romba thappu. padam nalla illanalum paravalla andha padatha ajith fans nanga irukom hit akuvom..
padam nalla erukku !
ungal vimarchanam ungalaimathiriye ullathu ! ugly with ediot .
beautiful review........
u forgot to mention one thing.....
this movie is rip off of al pacino's scarface.....
அதிஷா நீங்க பிரபல பதிவராமே அப்படியா .இதுக்கு முன்னாடி எப்பவாச்சும் படம் பார்க்க திரை அரங்கம் போய் இருக்கீங்களா .விலாவரியாக விமர்சனம் எழுதுறேன்னு வயிதெரிசலில் எழுதியதாக தெரிகிறது .உங்களுக்கு ஆமாம் போட கொஞ்சம் ஆட்கள் .வெள்ளைக்காரன் ஒரு கத்திய வச்சுட்டு ஆயிரம் ஆயிரமா அடிச்சு தள்ளுவான் அதை ஆகா ஓகோன்னு சொல்லுவீங்க .ஆனா தமிழில் யாரவது முயற்சி செய்தால் உங்களுக்குள் இருக்கும் குப்பனோ சுப்பனோ திடிர்னு முழித்துக்கொள்வார் .நீங்கதான் ஏற்க்கனவே இங்கே பிரபல பதிவராச்சே .உங்களை தொடரும் நண்பர்களும் அதிஷா சொன்னா சரியா இருக்கும் அப்படின்னு அவங்களும் உங்க பதிவுக்கு கமன்ட் போட்டு தங்கள் கடமைய செய்துவிடுவார்கள் .நீங்க எல்லாம் எப்பதான் படத்தை சரியாக பார்க்க கற்றுக்கொள்வீர்கள் அல்லது வயிறு எரிந்து எழுதுவதை நிப்பாட்டுவீர்கள் .உண்மையில் அஜித் இந்த படத்தில்தான் வசன உச்சரிப்பை சரியாக செய்து உள்ளார் .ஆனால் உங்களுக்கு இந்த படத்தையும் அஜித்தயும் கிண்டல் செய்யும் நோக்கோடு ஆரம்பத்திலேயே தெளிவாக எழுத ஆரம்பித்து விட்டீர்கள் .ஆமா உங்களுக்கு எப்படி இந்த வருஷம் சுஜாதா விருது கிடைத்தது .அம்பூட்டு நல்லாவா எழுதுறீங்க நீங்க
படம் நல்ல இருந்ததோ இல்லையோ
உங்க விமர்சனம் ரொம்ப அட்டகாசம்
சிரிச்சி சிரிச்சி வயிறு வலி தாங்கலை
கொன்னுடீங்க பாஸ். வலையுலக விமர்சன தல நீங்க தான். இந்த வருஷத்திலே இந்த அளவு நான் சிரிச்சதில்லை.நன்றி.
Your comments reminds me of Writer SUJAATHA.. pls write more.. your sense of humour is really gud..
Billa-2 படத்தை பார்த்துவிட்டு வீராசாமி படத்தை விமர்சித்த ஒரே ஆள் நீங்கள்தான்.
நண்பரே,
ஹா..ஹா..ஹா..
சிரிச்சி, சிரிச்சி வயிறு சுளுக்கிடுச்சு, இன்னும் தீவிர அஜீத் ரசிகர்கள் இந்த படம் சூப்பர், சூப்பர் என்றுதான் சொல்லிக்கிட்டிருக்காங்க. படத்தை தியேட்டரை விட்டு எடுக்கும் வரை அப்படித்தான் சொல்வாங்க போல. ஒரு படம் சரியில்லை என்றால் உண்மையா மனதளவில் பாதிக்கப் படுவது அந்த நடிகரின் தீவிர ரசிகர்களே. படம் வருவதற்கு முன் வானளாவிய பேனர் கட்டி பால் அபிஷேகம் செய்யும் ரசிகர்கள், ஒரு வாரத்திற்கு பின் நண்பர்களை சந்திப்பதையே தவிர்த்து உளவியல் பாதிப்புக்கு ஆளாகி விடுகிறார்கள்.
அன்புடன்,
பாலாஜி சுந்தர்.
சக்ரி டோலெட்டி சலங்கை ஒலியில் கமலைப் ஃபோட்டோ பிடிப்பான், படங்கள் அபத்தமாக வந்திருக்கும். உன்னைப்போல் ஒருவனில் கமலையும் இதில் அஜித்தையும் இயக்கியதிலிருந்தே தெரிகிறது அவன் இன்னும் வளரவேயில்லையென்று....
First of all, u r a coward. Incapable. U just want to get readers for ur blog by demeaning famous people. I agree u r in right path to attract readers. KUDOS!!!
Now, do u even know anything about cinema?? May be u r one of those dumb people who watch vijay and surya movies for the masala and enjoy. U must know there r other types of film making too. And from your blog, its very evident that u dint even understand the movie first. By saying "ajith killed CM" it shows how dumb u r. U don't even deserve to write. And if possible don watch movies here after cos either u don watch them with interest or u r too dumb to understand. I am not saying this movie is too good and perfect but this aint so bas as u have portrayed. If it was so bad, and even after so many bad reviews from stupid people like u, theaters are still running house full. If you dint like this movie I am sure u won't like movies like godfather, scarface. And FYI, Godfather is rank #2 in IMDB. For what I know this movie is inspired by these movies. i won't say its a rip off. This is d way to take tamil cinema to next level. I appreciate the guts of director and the hero. If the director has told this story to vijay or surya am sure they wouldn't have signed. So Ajit is the real star here. He has proved it already and and now again. No f***ing a**h**e has any rights to be mean to him.
If you don like this kinda movies why d hell did u go n watch even after they said the movie is a prequel and believe me there is no better way to make a prequel that too for a Don' story. I have watched so many gangster movies and most of them were like this movie. It ll be like a documentary for the most part. What else do u expect in such movie? And u say u watched it on second day, dint u know the movie got bad reviews on the first day?? Then y d hell go watch?? The reason is u jus want to write bad about it without reason n logic n attract readers.
I see u wanna humor people, make them laugh. "comedy is a serious business". U don't get to do that business by demeaning and hurting others. He who makes people laugh without hurting a second soul is a real comedian/comedy writer in your case.
For tamil cinema industry's sake, don't ever watch another tamil movie or write a review about it. Tamil industry is held behind by people like you.
பாருக் அவர்களே,
நாம் என்னதான் கண்மூடித்தனமாக தலைவா தலைவா என்று சொன்னாலும் படம் மொக்கை என்றால் நம் உள்ளம் குப்பை குப்பை என்று சொல்லிகொண்டே இருக்கும். சில சமயம் நம்மை அறியாமலே நம் தலைவனின் weak pointடை சொல்லிவிடுவோம். கீழே உள்ள கமெண்ட் உங்களை அறியாமலே நீங்கள் சொன்னதுதான்.
//.உண்மையில் அஜித் இந்த படத்தில்தான் வசன உச்சரிப்பை சரியாக செய்து உள்ளார்//
DON போன்றவர்கள் அதிகம் பேசக்கூடாது. வசன உச்சரிப்பு நன்றாக இருந்தாலும் Action காட்சிகள் மொக்கையாக இருந்தது.
vilunthu vilunthu sirithaen....kalakkureenga boss....continue..........
Worst review
அந்த அலுவலரும் அஜித்தை மிரட்டி பஞ்ச் டயலாக் சொல்லவைக்கிறார்//
Ha ha :D :D :D
அப்படியே, free ஆ இருந்தா வாங்களேன், ஒரு படம் டைரக்ட் பண்ணிட்டு வரலாம்.....
நிறைய ஞானம் இருக்கு உங்களுக்கு!!!!!
எதை வேண்டுமானாலும் தாங்கிக்கொள்வேன்.. ஒரு விஷயம்தான் கடைசிவரை உறுத்தியது. எப்படித்தான் இரண்டு ஆண்களுக்கு பிகினியெல்லாம் மாட்டிவிட்டு ஹீரோயின்கள் என்று சொல்ல முடிந்ததோ இந்த மனசாட்சியே இல்லாத இயக்குனருக்கு! // NACH COMMENT..
ன குத்தி வைத்திருந்த கூரான கத்தியை உருவி நான்குக்கும் மேற்பட்டவர்களை கொன்றுவிட்டு.. கீழே கிடக்கிற துப்பாக்கியை எடுத்து நம்மை நோக்கி சுடுகிறார்! அப்போதே நாம் உஷாராகி வெளியே ஓடிவந்திருக்க வேண்டும். இந்த விதிதான் விடாதே!
------
ஹா ஹா, நச்.
Ukkaanthu ezhuthuruvanukum uyira kuduthu nadikuravanukum vithyaasam iruku Neeeenga enna sonnaalum thala thala Thaaaan love u thala thalayoda movies ah pathi cmnt kuduka entha thaguthiyum vendam aanaa Ajith engira oru nalla manitharai padry pesa ungaluku thaguthi venum Goiyala Thala daaaaaaaaaaaaaaaaaaaa
Post a Comment