25 July 2012

கொஞ்சநேரம் குழந்தையாகலாம்

தம்பி தம்பி
என்ன வேண்டும்?
பழம் வேண்டும்
என்ன பழம்?
பலாப்பழம்
என்ன பலா?
வேர்ப்பலா
என்ன வேர்?
வெட்டி வேர்
என்ன வெட்டி?
விறகு வெட்டி
என்ன விறகு?
மர விறகு
என்ன மரம்
மா மரம்
என்ன மா?
அம்மா
என்ன அம்மா
டீச்சரம்மா
என்ன டீச்சர்
கணக்கு டீச்சர்
என்ன கணக்கு
வீட்டு கணக்கு
என்ன வீடு
மாடி வீடு
என்ன மாடி
மொட்ட மாடி
என்ன மொட்டை
பழனி மொட்டை
என்ன பழனி
வட பழனி
என்ன வட
ஆமை வட
என்ன ஆமை
கொளத்து ஆமை
என்ன கொளம்
திரி கொளம்
என்ன திரி
வெளக்குத் திரி
என்ன வெளக்கு
குத்து வெளக்கு
என்ன குத்து
கும்மாங் குத்து

இப்படியே போகும் பாட்டு கடைசியில் என்னா குத்து , கும்மாங்குத்து என்று முடியும். அல்லது மத்தியிலேயே வேறு ட்ராக் பிடித்து புதுப்பாடல் உருவாகும். இந்த சிறுவர் விளையாட்டு பாடல் நம்மில் பலருக்கும் நினைவிருக்கலாம். இதை யார் நமக்கு கற்றுக்கொடுத்திருப்பார்கள்? எப்படி இந்த விளையாட்டு நமக்கு பரிச்சயமானது? என்பதெல்லாம் நினைவில் நிச்சயமாக இருக்காது.. ஆனால் நம்மில் பலரும் இந்த விளையாட்டினை கடந்துதான் வந்திருப்போம். இந்தப்பாடலை படிக்கும் போது சிறுவயதில் பாட்டுப்பாடி விளையாடிய குழந்தைப்பருவ நாட்களின் மகிழ்ச்சியான நினைவுகள் மட்டும்தான் எஞ்சியிருக்கிறது.

ஒவ்வொரு முறை விளையாடும்போதும் எங்கேயோ தொடங்கி எதிலோ முடியும் இந்த விளையாட்டு. நான்கைந்து பேர் வட்டமாக அமர்ந்து ஒவ்வொருவரும் மாறி மாறி பாடிக்கொண்டே வர.. வார்த்தையில்லாதவர் அவுட் ஆகி வெளியேற்றப்படுவார்! அவுட் ஆகிவிடக்கூடாது என்பதற்காக இன்னைக்கு இதுல என்ன புது புது வார்த்தைகளை போட்டு பாடலாம் என்று பள்ளியில் அமர்ந்துகொண்டு நிறையவே யோசித்திருக்கிறேன். என்ன உருண்டை கோலா உருண்டை என்ன கோலா கோக்க கோலா என்றெல்லாம் பாடியது நினைவில் இருக்கிறது.

அண்மையில் இந்தப்பாடலை தோழர் பொட்டீகடை சத்யா ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார். யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என இங்கேயும் பகிர்ந்துவிட்டேன்.

நம் குழந்தைகளுக்கு இதுமாதிரி பாட்டெல்லாம் பரிச்சயமா என்பது சந்தேகம்தான். தெரிந்திருந்தாலும் ட்யூசனுக்கும் டிவிக்கும் நடுவே மற்ற குழந்தைகளோடு இதெல்லாம் விளையாட நேரமிருக்குமா தெரியாது. உங்கள் குழந்தைக்கு இந்தப்பாடலை சொல்லிக்கொடுத்து நீங்களும் அவர்களோடு விளையாடுங்க.. குழந்தைகள் நிறைய தமிழ் சொற்களை கற்றுக்கொள்ளவும் புதிய பாடல்களை உருவாக்கவும் வாய்ப்பாக அமையும். அதோடு நாமும் கொஞ்ச நேரம் முழுமையாக குழந்தையாகலாம்.

17 comments:

Unknown said...

எவ்வளவு தூரம் ஞாபகம் வைச்சு முழுவதும் எழுதியிருக்கீங்க அந்த பாட்டை! வாழ்த்துக்கள் சகோ!

திண்டுக்கல் தனபாலன் said...

சிறு வயது மகிழ்ச்சியான நினைவுகள் ஞாபகம் வந்தது சார்...
அடிக்கடி இது போல் (சொல்லுக்கு சொல், வார்த்தை விளையாட்டு) வீட்டில் குழந்தைகளோடு விளையாடுவதுண்டு.

நன்றி...
திண்டுக்கல் தனபாலன்

அரவிந்தன் said...

பிஸ்கெட் பிஸ்கெட்
என்ன பிஸ்கெட்
டீ பிஸ்கெட்
என்ன டீ
ரொட்டி
என்ன ரொட்டி
பச்ச ரொட்டி
என்ன பச்ச
மா பச்ச
என்ன மா


ம்
மா!

சுபத்ரா said...

டக் டக்
யாரது?
கள்ளன் அது
என்ன வேண்டும்?
நகை வேண்டும்
என்ன நகை?
கலர் நகை
என்ன கலர்?
---

இதுல கள்ளன் என்ன கலர் சொல்றானோ அந்தக் கலரை எல்லாரும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். இல்லன்னா அவுட் :)

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

குழந்தைப் பருவம்தான் எவ்வளவு இனிமையானது...!

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

குழந்தைப் பருவம்தான் எவ்வளவு இனிமையானது...!

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

நல்ல பதிவு பாஸ்....
தொடர்ந்து எழுதுங்கள்

aanthaiyar said...

சூப்பர் அதிஷா!

Anonymous said...

இதைப்போல ஒருகுடம் தன்னிஎடுத்து ஒரு பூ பூத்தது, fire இன் தி மௌன்டைன் ரன் ரன் ரன், போன்ற இலக்கிய இடுகைகளை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் அன்பு வாசகர் சதுரத்தின் ஒரு முனை.

Anonymous said...

மொட்டை பாப்ப்பாத்தி (பாப்பாத்தி) பிரெஷா (Fresh ).. இம்ப்றேச்சிவ்வா (Impressive )றோட்டி சுடடாலாம், கடைக்கு பொநாலாம் (போனாளா), காசு இல்லையாம், கடைக்காரனப்பாத்து (ர்) - கன்னடிச்சாலாம் (ண்) . இப்படியும் பின்னூட்டமிடலாம், இது ஒரு வகை ஸ்டைல். :))

perumal karur said...

தாராளமயமாக்கலுக்கு முன்பிருந்த கிராமத்தில் பிறந்து இளமைப் பருவம் முழுவதையும் அந்தக் கிராமத்தில் கழித்து தங்களுது ஆழ் மனதை அந்தக் கிராமத்தின் கூறுகளால் கட்டமைத்துக் கொண்டவர்கள் பாக்கிய சாலிகள்.

Singaravelan said...

Good Article, nice photo!

Raashid Ahamed said...

எல்லாமே போச்சு அதிஷா !! இந்த பாட்டு விளையாட்டு மட்டுமில்லை கோலிக்குண்டு, ஒளிஞ்சி புடிச்சி, கிச்சி கிச்சி தாம்பாளம், பம்பரம், நுங்கு உருட்டி, இப்படி நிறைய சொல்லிகிட்டே போகலாம். இந்த விளையாட்டை பற்றி இந்த கால புள்ளைங்க கிட்ட சொன்னா நம்மை மேலும் கீழும் பார்க்கும். கம்ப்யூட்டர் கேம்ஸ்ல ஆரம்பிச்சி, Gameboy, பிளே ஸ்டேஷன், X-Box, Y-Box ன்னு என்ன எழவெல்லாமோ வந்து புள்ளைங்களை வீட்டை விட்டு வெளிய வராம பண்ணி சோம்பேறியாக்கிடிச்சு.

Raashid Ahamed said...

எல்லாமே போச்சு அதிஷா !! இந்த பாட்டு விளையாட்டு மட்டுமில்லை கோலிக்குண்டு, ஒளிஞ்சி புடிச்சி, கிச்சி கிச்சி தாம்பாளம், பம்பரம், நுங்கு உருட்டி, இப்படி நிறைய சொல்லிகிட்டே போகலாம். இந்த விளையாட்டை பற்றி இந்த கால புள்ளைங்க கிட்ட சொன்னா நம்மை மேலும் கீழும் பார்க்கும். கம்ப்யூட்டர் கேம்ஸ்ல ஆரம்பிச்சி, Gameboy, பிளே ஸ்டேஷன், X-Box, Y-Box ன்னு என்ன எழவெல்லாமோ வந்து புள்ளைங்களை வீட்டை விட்டு வெளிய வராம பண்ணி சோம்பேறியாக்கிடிச்சு.

Anonymous said...

nalla blog
vazhukkal :) :)

Anonymous said...

nalla blog
vaazhukkal :) :)

கோவை நேரம் said...

அட..நம்ம வீட்டுல வாண்டுக இதைதான் சொல்லி விளையாடும்...கடைசியில் என்ன கல்லு..நாமக்கல்லு...அப்படின்னு முடிக்கும்..ஏன்னா நம்ம அம்மணி ஊரு அது...