நாம் எல்லோருமே தினத்தந்தி செய்தி படித்துவிட்டு தீர்ப்பு எழுதும் காமன்மேன்கள்தான். நாம் இலக்கியவாதிகளோ அறிவுஜீவியோ கிடையாது. சாதாரண பொதுஜனம். செய்தியின் பின்புலத்தையும் அதன் அரசியலையும் ஒருநாளும் ஆய்வுக்கு உட்படுத்தி தீர விசாரிக்க நமக்கெல்லாம் துப்புகிடையாது. ஸ்டிரைட்டா ஹீரோதான். என்னது செக்ஸ் டார்ச்சரா.. கற்பழிப்பு வழக்கை போட்டு அவனை புடிச்சி தூக்கில போடுங்க சார் என அறைகூவல் விடுத்துவிட்டு நம்முடைய வேலைகளில் மூழ்கிவிடுவோம்.
ஆனால் எதையும் பகுத்தறிந்து ஊருக்கும் உலகுக்கும் உரக்கச் சொல்லுகிற முற்போக்காளர்களாக அறியப்படும் சில எழுத்தாளர்கள் கூட அதே பாணியில் தீர்ப்பு எழுதுவதையும், இதுதான் சாக்கு என நானும் உத்தமன்தான்.. பெண்களை தாயாக மதிக்கிறேன்.. என நிருவ முயல்வதையும் ‘’ பிரபல பாடகி சின்மயி - ஆபாச ட்விட்’’ விவகாரத்தில் கண்கூடாக பார்க்க முடிந்தது. என்னதான் அறிவுஜீவிகள் சொன்னாலும் உண்மை வேறு மாதிரி இருந்தது.
பாடகி சின்மயி விவகாரத்தில் உண்மையில் நடந்தது என்ன என்பதை முதலில் பார்த்துவிடுவோம். இந்த ஃபிளாஷ்பேக் துவங்குவது சென்ற ஆண்டு ஜனவரி மாதம்.
இட ஒதுக்கீடு தொடர்பாக ஆட்சேபனைக்குரிய சில கருத்துகளை சின்மயி தன்னுடைய ட்விட்டர் தளத்தில் வெளியிடுகிறார். அதுபோக தலித்துகளை ‘’சோகால்ட் தாழ்த்தப்பட்டவர்கள்’’ என்று வசைமாரி பொழிந்ததோடு, தலித் இயக்க தலைவர்கள் அந்த மக்களை கீழானவர் என சொல்லி சொல்லி ஏமாற்றி வருவதாகவும் கூறியிருந்தார்.
இதை படித்த சில இட ஒதுக்கீடு ஆதரவாளர்கள் அவரோடு வாக்குவாதம் செய்கின்றனர். இதில் ராஜன் பாதியில் பேச ஆரம்பிக்கிறார். சில ட்விட்டுகளில் மிகவும் மென்மையாக பேசிவிட்டு பிறகு விலகிவிடுகிறார். இதற்கு பிறகும் கூட ராஜனுக்கும் சின்மயிக்கும் இடையே ஒரு சண்டையும் வம்பும் இருந்ததாக தெரியவில்லை.
அதுகுறித்த முழுமையான பேச்சுகள் இந்த இணையதளத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. அந்த விவாதத்தை இங்கே காணலாம்.
http://365ttt.blogspot.in/2011/12/famous-tamil-twitter-conversation.html
அதற்கு பிறகு அதே ஜனவரியில் இலங்கை கடற்படையால் கொல்லப்படும் மீனவர்களை காக்க ட்விட்டரில் ஒரு இயக்கம் தொடங்கப்படுகிறது. அதில் தமிழர்கள் மட்டுமல்லாது வட இந்தியர்களும் ஆர்வத்துடன் இணைந்து மீனவர்களின் உயிருக்காக குரல் கொடுக்கின்றனர். அந்த சமயத்தில் ஒரு ஆன்லைன் பெட்டிஷனில் கையொப்பமிட எழுத்தாளர் மாமல்லன் சின்மயியிடம் முறையிடுகிறார். ஆனால் அவரோ நாங்கள்லாம் உயிர்களை துன்புறுத்துறவங்க இல்ல.. வெட்டி சாப்பிடறவங்களும் இல்லை.. என்று பதில் சொல்கிறார்.
இது எந்த அளவுக்கு அந்த இயக்கத்தில் பங்குகொண்ட ஒவ்வொருவரையும் கடுப்பேற்றியிருக்கும் என்பது முக்கியம். அதோடு மீனவர் ஆதரவுட்விட்டுகளை ‘’ஓவர் ஆட்டமாருக்கு’’ என வர்ணிக்கிறார். அதோடு இப்போதும் கூட ஏதோ போக்கிரிகள் சேர்ந்து கொட்டம் அடித்ததை போலவேதான் டிஎன்ஃபிஷர்மேன் டேகில் இணைந்தவர்களை பற்றி சிலாகிக்கிறார். அதை கண்டித்த சிலபல ட்விட்டர்களையும் ப்ளாக் செய்கிறார். கெஞ்சி கெஞ்சி கேட்டவர்களை கேலி செய்து ரசிக்கிறார்.
இதுகுறித்த முழுமையான உரையாடல் இங்கே
http://365ttt.blogspot.in/2012/10/tnfishermen-tamil-twitter-conversation.html
இந்த இட ஒதுக்கீட்டு களேபரங்களும் மீனவா மீனை கொன்றா ஸ்டேட்மென்ட்களும் அவரை தமிழ் ட்விட்டர்களிடமிருந்து பிரித்துவிட்டது. அதோடு ஒருமுறை ஹிந்துவில் வெளியான செய்தியின் லிங்கையும் கொடுத்து.. ஏழைகள் மின்சாரைத்தை திருடுகிறார்கள் அவர்களை கண்காணிக்கவேண்டும் என்றெல்லாம் பேசியதாக சொல்லப்படுகிறது. அப்போதும் அவரை தமிழில் எழுதும் ட்விட்டர்கள் தொடர்ந்து எதிர்த்தே வந்திருக்கிறார்கள்.
ட்விட்டரில் தன்னை தொடர்பவர்கள் கேள்விகள் கேட்காமல் கூழைக்கும்பிடு போடவேண்டும் என எதிர்பார்த்தவருக்கு இது எரிச்சலை உண்டாக்கியிருக்க வேண்டும். இதனால் தமிழ் ட்விட்டர்கள் யாருமே அவரை சீண்டுவதேயில்லை.
சின்மயி என்று ஒருவர் ட்விட்டரில் இருந்ததையே எல்லோருமே மறந்து போயிருந்த நிலையில் இந்த ஆண்டு துவக்கத்தில் மார்ச் 10 ஆம் தேதி ஹிந்துஸ்தான் டைம்ஸ் இணையதளத்தில் ஒரு செய்தி வெளியாகிறது. ”தி அதெர் வாய்செஸ்” என்கிற அந்தக் கட்டுரையில் அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் தவிர்த்து மக்களிடையே இப்போது இணைய ஊடகங்கள் மூலமாக மக்கள் செய்தியாளர்கள் பெருகியுள்ளனர் என மகேஷ் மூர்த்தி என்கிற நிருபர் எழுதியிருந்தார். அதில் பொழுதுபோக்குப் பாட்ஷாக்கள் என்கிற தலைப்பில் 5 பேரில் நான்காவதாக சின்மயியையும் ஐந்தாவதாக ராஜனையும் குறிப்பிட்டிருந்தார். இதுதான் சின்மயி-ராஜன் இடையேயான கைது விவகாரத்தில் மிக முக்கியமான ஒன்று.
அந்த கட்டுரை இங்கே இருக்கிறது
http://www.hindustantimes.com/Brunch/Brunch-Stories/The-other-voices/Article1-823273.aspx
இதில் பிரபல பாடகியான சின்மயிக்கு உடன்பாடில்லை என்பதும், அவர் அந்த பட்டியலை வெளியிட்ட மகேஷ்மூர்த்தி என்பவருக்கு தொல்லை கொடுத்து ராஜனின் பெயரை நீக்க வேண்டும் என்றும் கோரினார். பல விருதுகளைவென்ற பிரபல பாடகியான பல லட்சம் பேர் பின்தொடரும் தன் பெயரோடு ஆஃப்டர் ஆல் 2000 பேர் கூட தொடராத காமன் மேனான ராஜனின் பெயர் எப்படி இடம்பெற முடியும் என மகேஷ்மூர்த்தியிடம் சண்டைபோடுகிறார்.
ஆனால் மகேஷ்மூர்த்தியோ விடாப்பிடியாக நீக்கமுடியாது என்றும் அதற்கான காரணங்களையும் முன்வைக்கிறார். ஆனால் சின்மயியோ விடாபிடியாக சண்டையிடுகிறார்.
ஒன்று என் பெயரை நீக்கு அல்லது ராஜன் பெயரை நீக்கு என்றெல்லாம் டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்தார். ஆனால் பத்திரிகையாளர்மகேஷ்மூர்த்தியோ என்னால் எதுவும் செய்யமுடியாது.. உன்னால் முடிந்ததை செய்துகொள் என விலகிவிடுகிறார். இது சின்மயிக்கு செம கடுப்பை உண்டாக்கியது. இதுதான் ராஜன் மீதான வன்மத்திற்கான முதல் விதை விழுந்த இடம். ராஜனை பழிவாங்க வேண்டும் என அப்போதே முடிவு செய்திருக்கிறார்.
சின்மயியின் இந்த குடுமிபிடி சண்டையை கவனித்துக்கொண்டிருந்த ராஜனும் அவருடைய நண்பர்களும் சின்மயியின் தோல்வியை பகடி செய்யும் வகையில் அசிங்கப்பட்டாள் சின்மயி என்கிற ஹேஷ்டாகின் கீழ் அவரை கேலி செய்தனர். அதிலும் கூட ராஜனோ அவருடைய கூட்டாளிகளோ வரம்புமீறி எதையும் சொல்லவில்லை. குறிப்பாக ஆபாசமாக எதையும் ட்விட்டவில்லை.
ஆனால் கடுமையான மன உளைச்சலிலும் பழிவாங்கு உணர்ச்சியோடு இருந்த சின்மயியோ இந்த ஹேஷ் டேகில் பேசிய அனைவரையும் ப்ளாக் செய்தார். முன்கதை சுருக்கம் தெரியாமல் சின்மயி போன்ற நல்ல பாடகியை ஏன் கேலி செய்கிறீர்கள் என்று தமிழில் ட்விட்டிய ஒரே காரணத்திற்காக என்னையும் கூட ப்ளாக் செய்தார் இந்த பிரபல பாடகி.
இந்த சமயத்தில்தான் சின்மயி தமிழில் ட்விட்டுபவர்கள் அனைவருமே பொறுக்கிகள் என எழுதி ட்விட் செய்து பின் அழித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு பிறகு சின்மயி தொடர்ச்சியாக ராஜனை சீண்டும் வகையில் ட்விட்டுகள் போடுவதும்.. அதனால் கடுப்பான ராஜனின் நண்பர்கள் சின்மயியை கேலி செய்யும் வகையில் ட்விட்டுகள் போட்டதும் தொடர்ந்தன. ராஜன் இந்த நேரத்திலும் கூட கண்ணியக்குறைவாக எதையும் ட்விட்டவில்லை. ஆனால் கடந்த மார்ச் மாதம் ஒரு கட்டுரை எழுதி அதில் ராஜனை
’பெண்கள் குறித்து வக்கிரமாக எழுதுவதையே பிழைப்பாக் கொண்ட ஒருவனால் ஒரு வருடமாக உளைச்சல் அடைந்து வருகிறேன்’
என்று எழுதுகிறார். இது ராஜனுக்கு பெரிய மன உளைச்சல் உண்டாக்க அவர் அதற்காக ஒரு பதிலை தன்னுடைய வலைப்பதிவில் பகிர்கிறார். அதில் சின்மயியிடம் சில கேள்விகளையும் முன்வைக்கிறார்.
அந்த பதிவை படிக்க
http://www.rajanleaks.com/2012/03/blog-post.html
ஆனால் எந்தகேள்விக்கும் எந்த பதிலையும் சொல்லாமல் கமுக்கமாக அமைதியாகிவிடுகிறார் சின்மயி.
அக்டோபர் மாத துவக்கத்தில் டெக்கான் க்ரானிக்கிள் பத்திரிகையின் துணை இதழில் சின்மயி ஒரு பேட்டி கொடுத்திருந்தார். ட்விட்டரில் உள்ளவர்கள் தன்னை துன்புறுத்துவதாகவும் இதை தடுக்கவேண்டும் என்றும் கூறியிருந்தார். அந்த பத்திரிகை செய்தியும் ஒருதலைபட்சமாக அவருடைய பேட்டியை மட்டுமே வாங்கி போட்டிருந்தது.
அதை படித்த சிலர் சின்மயியை கண்டித்து மீண்டும் ட்விட்டுகளை வெளியிடத்தொடங்கினர். இந்த சமயத்தில் சில விஷமிகள் சின்மயியை தூண்டிவிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதோடு ராஜனும் அவருடைய நண்பர்களும் போட்ட ட்விட்டுகளின் ஸ்கீரின் ஷாட்களையும் எடுத்து கொடுத்திருக்கிறார்கள். ஒரு ப்ளாக் செய்துவிட்ட பின் அவர் என்ன எழுதினாலும் சம்பந்தப்பட்டவருக்கு தெரியாது.. அப்படியிருக்க சின்மயிக்கு மட்டும் ராஜன்,சரவணகுமார் ட்விட்டுகள் எப்படி தெரிந்தது என்கிற கேள்விக்கான விடையே மேலே குறிப்பிட்டிருப்பது.
இதுதவிர அவ்வப்போது தான் ஒரு ஐயங்கார் என்பதைக்கூட highயெங்கார் என்கிற மிதப்போடு எழுதுவதை வழக்கமாக கொண்டிருந்தார் சின்மயி. சாதிய பெருமிதத்தோடு இப்படியெல்லாம் ட்விட்டுவது தவறு என கண்டித்த ஒவ்வொருவரையும் அவர் ப்ளாக் செய்திருக்கிறார்.
டெக்கான் க்ரானிக்கிள் செய்திக்கு கிடைத்த எதிர்வினைகளை கண்டு கோபம் கொண்ட சின்மயியின் தாயார் சின்மயிக்கு எதிராக ட்விட்டும் சிலரை போனில் அழைத்து மிரட்டல் விடுத்திருக்கிறார். இந்த அலைப்பேசி எண்கள் கூட சின்மயியின் அல்லக்கைகளாகவே மாறிப்போன அந்த விஷமிகள் தேடி வாங்கிக்கொடுத்தவையே! (பிரபல பாடகிக்கு வேறு வேலையே இருக்காதா?)
வலைப்பதிவரான பரிசல்காரனுக்கும் அழைப்பு வந்திருக்கிறது. பிரச்சனையை சுமூகமாக முடிப்பதற்கே நண்பர்கள் முயற்சி செய்துள்ளனர். ராஜனும் கூட நான் போட்ட ட்விட்டுகளுக்காக மன்னிப்பு கேட்கிறேன் என்றெல்லாம் சொல்லியும்.. உங்களையெல்லாம் சும்மா விடமாட்டேன்டா என்கிற வகையில் பேசிவிட்டு தொடர்பை துண்டித்திருக்கிறார்.
அப்படித்தான் சின்மயியின் தாயார் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் இன்னொரு நபரான செந்தில் என்பவரையும் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அவரோ உங்கள் மகளை அமைதி காக்க சொல்லுங்கள் எல்லாமேசரியாகிவிடும் என்பதாக பேசியுள்ளார். அதை அவர் ட்விட்டரில் சொல்ல.. சரவணகுமார் மிக மிக சாதாரண அளவில் ‘’கடலைபோடதானே’’ என்கிற வார்த்தையை உபயோகித்து கிண்டல் செய்திருக்கிறார். பொதுவெளியில் இதைவிடவும் மோசமான விமர்சனங்களை பிரபலங்கள் எதிர்கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு பிறகு ராஜன் சின்மயி பற்றி எதுவும் பேசாமல் இனி ஜென் நிலையில் இருப்பேன் என அறிவித்துவிட்டு ராஜென் என தன் பெயரை மாற்றிவைத்துவிட்டு அமைதியாகவே இருந்தார். ஆனால் சின்மயியை இவ்விஷயத்தில் சில பார்ப்பன ஆதரவாளர்கள் அதெல்லாம் சும்மா விடக்கூடாது இவர்களை பழிவாங்கவேண்டும் என தூபம் போட்டிருக்கிறார்கள்.
அதோடு அக்டோபர் 5 ஆம் தேதி சரவணகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட சின்மயி இதற்காக உன்னை பழிவாங்காமல் விடமாட்டேன் என ட்விட்டரிலேயே சபமிட்டுள்ளார். ஆனால் சில மணிநேரங்களில் அந்த ட்விட்டுகள் நீக்கப்பட்டன. அவை மட்டுமல்லாது.. ராஜனை அவதூறாக எழுதிய ட்விட்டுகளும் இட ஒதுக்கீடு , மீனவர்கள் மீன்களை கொல்லுகிறார்கள் மகேஷ்மூர்த்தியிடம் மன்றாடியது என பல ட்விட்டுகளும் அதிரடியாக நீக்கப்பட்டன. (இதற்காக தனிப்படை வேலை பார்த்ததோ என்னவோ!)
ராஜன் ,சரவணன்,செந்தில் உள்ளிட்ட சிலர் போட்டதாக சொல்லபடும் ட்விட்களை மட்டுமே ஆதாரமாக வைத்துக்கொண்டு புகார் ஒன்றை கமிஷனரிடம் கொடுக்க.. அதிரடியாக ராஜனும் சரவணனும் கைது செய்யப்படுகின்றனர். ஒரு சாதாரண பொதுஜனம் கம்ப்ளைன்ட் கொடுத்தால் நம்முடைய காவல்துறை எவ்வளவு வேகமாக நடவடிக்கை எடுக்கும் என்பதற்கு இது நல்ல உதாரணம்.(சைபர் கிரைமில் பொதுஜனங்கள் கொடுத்த 19 வழக்குகள் பென்டிங்கில் இருப்பதாக கமிஷனரே கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது)
இங்கே ஒரு கேள்வி இருக்கிறது. ஒருவரை கைது செய்து சிறையில் அடைக்க வெறும் ஸ்கிரீன் ஷாட்டுகள் மட்டுமே போதுமா.. தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்துவிட்ட நிலையில் யார்வேண்டுமானாலும் யார் எழுதியது போலவும் ஸ்கிரீன் ஷாட் தயார் செய்ய இயலும். அதைப்பற்றியெல்லாம் கவலையேயில்லாமல் காவல்துறை தன் கடமையை உடனடியாக நிறைவேற்றியிருக்கிறது.
போகட்டும் இதோ பதினைந்து நாட்கள் இருவரும் சிறையலடைக்கப்பட்டுள்ளனர். அந்த இருவருடைய குடும்பங்களும் சொல்லவொண்ணா துயத்தை சந்தித்துள்ளனர். பிள்ளைகள் தந்தையில்லாமல் வாடிப்போயிருக்கின்றன. தொலைக்காட்சிகள் ஏதோ காமவெறியர்களை போல இருவரையும் சித்தரித்து செய்திகள் வெளியிடுகின்றன.
இருவர் மீதும் சின்மயி முன்வைத்த குற்றச்சாட்டு என்ன? இருவரும் ஆபாச ட்விட்டுகள் வெளியிட்டதாக சொல்லப்படுவதே. ஆனால் அதற்கான ஆதாரங்கள் சின்மயியிடமே கிடையாது. அவர்கள் இருவரும் அப்படி ஏதாவது செய்திருந்தால்தானே ஆதாரங்கள் கிடைப்பதற்கு. தன்னை பற்றி ஆபாச ட்விட்டுகள் இல்லையென்கிற காரணத்தால் உடனடியாக அரசியல் தலைவர்கள் குறித்து ராஜனும் சரவணகுமாரும் ட்விட்டியதையெல்லாம் ஸ்கீரின் ஷாட் எடுத்து ஆதாரம் என நீட்டுகிறார்கள். சின்மயியின் புகார் அவரைப்பற்றி ட்விட்டியதாக சொல்லப்படுவதுதானே..
சின்மயியின் நோக்கம் என்ன? பழைய பகையையும் தமிழில் எழுதும் ட்விட்டர்களின் மீதான தன்னுடைய வன்மத்தையும் தீர்த்துக்கொள்ள இப்படி ஒரு பொய்யான புகாரை சின்மயி கொடுத்திருக்கிறார். அதற்கான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்திருக்கிறார். சின்மயி அம்மா குறித்து பகடியாக சரவணகுமாரும் செந்திலும் பேசியதை பிடித்துக்கொண்டு அதைவைத்து ஆதரவை திரட்டுகிறார்.
குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்டிருக்கும் ராஜனோ சரவணகுமாரோ ட்விட்டரிலோ வேறு தளங்களிலோ சின்மயியின் ஆபாசப்படங்களையோ அல்லது அவரை ஆபாசமாக வர்ணித்தோ எதையுமே எழுதவில்லை. அவரை மின்னஞ்சலில் மிரட்டவில்லை. நேரிலோ தொலைபேசியிலோ கூட பேசியதில்லை. சொல்லப்போனால் இவர்கள் யாருமே சின்மயியை பார்த்ததே கிடையாது. அப்படியிருக்க நம்முடைய காவல்துறை இவர்கள் மீது பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது என்பது ஆச்சர்யமான விஷயம்.
அதிகாரவர்க்கம் பிரபலங்களுக்கு துணைபோவது இன்று நேற்றல்ல எப்போதுமே அப்படித்தான்..
ஏற்கனவே சமூக வலைதளங்களால் பெரிய அளவில் பாதிகப்பட்டிருக்கும் ஆளும் அதிகாரம்.. இதுதாண்டா சான்ஸு இவனுங்களை அடக்குவதற்கு என்கிற ரேஞ்சில் நடவடிக்கை எடுத்துள்ளது. இது நம்முடைய கருத்து சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை. நாளையே ட்விட்டரிலோ ஃபேஸ்புக்கிலோ ஊழல் ஒழிப்போ, ஈழப்போராட்டமோ, மீனவர் படுகொலையோ, கூடங்குளமோ ஏதோ ஒரு பிரச்சனை.. ஆனால் அதிகாரத்திற்கு எதிரானதாக இருந்தால் எழுதியவரை வெறும் ஸ்கிரீன் ஷாட் உதவியோடு கூட கைது செய்து சிறையிலடைத்து இந்திய இறையாண்மைக்கு எதிராக எழுதியவன் என முத்திரைகுத்தி தீவிரவாதியாக்கிவிட இயலும்.
இன்று ஊடகங்கள் எல்லாமே கிட்டத்தட்ட அதிகார வர்க்கத்தின் கைப்பாவையாகவே செயல்படுகின்றன. அப்படியிருக்க மாற்று ஊடகமான இணைய வெளியிலும் தன்னுடைய அதிகாரத்தை நிலைநாட்ட அரசியல்வாதிகளும் சினிமாக்காரர்களும் முயல்கிறார்களோ என அஞ்சவேண்டியிருக்கிறது. உண்மை எங்கிருந்தாலும் ஊழல் பேர்வழிகளுக்கு உறுத்தலாகத்தானே இருக்கும்.
ட்விட்டர் ஃபேஸ்புக் மாதிரியான சமூக வலைதளங்கள் நவீன திண்ணையை போன்றது. இங்கே உங்களுக்கு ப்ரியமானவர்களோடு சேர்ந்து உரையாடலாம் திட்டலாம் கொஞ்சலாம் குலாவலாம். பிடிக்கவில்லையா ப்ளாக் செய்துவிட்டு போய்விடலாம். அவர் பேசுவது உங்களுக்கு கேட்காது.. நீங்கள் பேசுவதும் அவருக்கு கேட்காது. அதிலும் குறிப்பாக பிரபலங்கள் என்று அறியப்படுபவர்களுக்கு லட்சக்கணக்கில் பாலோயர்கள் இருப்பது கண்கூடு. ட்விட்டரில் இருக்கிற எந்த பிரபலமும் தன்னை தொடர்பவர் தன்னைப்பற்றி கேலி செய்கிறாரா திட்டுகிறாரா என்று பார்த்துக்கொண்டிருப்பதில்லை. ஆனால் சின்மயி ஒருவரை ப்ளாக் செய்த பின்னும் கொல்லைப்புறமாக உளவு பார்த்து வஞ்சம் தீர்க்க காத்திருந்து பழிவாங்கியிருக்கிறார்.
அவருடைய பழிவாங்கும் உணர்ச்சியை மிகச்சரியாக பயன்படுத்தி கொண்டிருக்கிறது அதிகாரவர்க்கம். சமூகவலைதளங்களில் இனி எவனாச்சும் ஏதாச்சும் எழுதிப்பாருங்கடா.. என்று சவால் விடப்பட்டிருக்கிறது. இணையத்தில் இவர்களால் ஒன்றிணைக்கப்பட்டு முன்னெடுக்கப்படும் தொடர் போராட்டங்கள் கண்களை உறுத்துகிறது.
முல்லைபெரியார் பிரச்சனையின் போது தமிழர் உரிமைக்காக அறிவியல் ரீதியிலான வாதங்களை முன்னெடுத்தவர் உதவி பேராசிரியர் சரவணகுமார். தொடர்ந்து தலித் மக்களுக்காகவும் ஈழத்தமிருக்காகவும் மீனவர்களுக்காவும் குரல்கொடுத்து வருபவர். சொல்லப்போனால் சின்மயியோடு அவர் உரையாடியது மிக குறைவே. காக்கைசிறகினிலே என்கிற சிற்றிதழையும் முன்னெடுத்து வெற்றிகரமாக நடத்திவருகிறார். ராஜன் மிகச்சிறந்த வாசிப்பாளர். தமிழில் எழுதுவதில் மிகச்சிறந்த ஆளுமையை கொண்டிருப்பவர். சின்மயியிடம் அவர் சில கேள்விகளை முன்வைத்து கடந்த மார்ச் மாதம் எழுதிய பதிவை படித்தாலே அவரைப்பற்றி புரிந்துகொள்ள முடியும். வறுமையோடு போராடி இன்று அரசு வேலையில் இருப்பவர். நம்முடைய சமூகத்தின் மீதான கோபத்தை அவருக்கேயுரிய மொழியில் வெளியிடுகிறார். வழக்கு எண் படம் குறித்து அவர் எழுதி பதிவை வாசித்துப்பாருங்கள். எவ்வளவு சிறப்பாக எழுதக்கூடியவர்.
http://www.rajanleaks.com/2012/05/189.html
நம் மக்களுடைய மொழி எப்போதுமே கள்ளங்கபடமில்லாமல் எதையும் நேர்பட பேசுகிறவையாகவே இருந்திருக்கிறது. திமுகவும் அதிமுகவும் மேடைகளில் பேசிடாத ஆபாசத்தினையா ராஜன் பேசிவிட்டார். சரவணகுமாரும் செந்திலும் பேசியது சிறையிலடைத்து தண்டிக்கப்படவேண்டிய குற்றமா? சைபர் போலிஸாரிடம் தரப்பட்ட 19 வழக்குகள் நிலுவையில் இருக்க.. அவசரமாக இந்த வழக்கினை எடுத்துக்கொண்டு தனிப்படை அமைத்து கைது நடவடிக்கை வரைக்கும் இறங்கவேண்டிய காரணம் என்ன? எந்த விசாரணையும் முடிவடையாத நிலையில் ஊடகங்கள் ஏன் அவசரமாக இருவரையும் காமவெறியர்களாக சித்தரித்து தீர்ப்பெழுதின? என்பதுமாதிரியான கேள்விகள் நம்மிடையே எஞ்சியிருக்கின்றன.
விமர்சனங்களையும் பாராட்டுகளையும் ஏற்றுக்கொள்கிறவனே நல்ல கலைஞனாக இருக்க முடியும். சின்மயியை போன்றவர்கள் வெறும் பாராட்டுகளை மட்டுமே எதிர்பார்த்து பொதுவெளிக்கு வரும்போது விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் தப்புதவறுமாக எதையாவது உளறிகொட்டி சக ரசிகர்களின் கேள்விகளால் திணறுகிறார்கள். சின்மயி கோர்ட்டுக்கு போனதுபோல பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசனோ கலைஞர் கருணாநிதியோ கோர்ட்டுக்கு போயிருந்தால் இந்நேரம் சமூகவலைதளங்களை பயன்படுத்துகிற பாதிபேருக்கு ஆயுள்தண்டனையைத்தான் கொடுக்க வேண்டியிருக்கும். பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசனுக்கு இருக்கிற பக்குவமும் ஆளுமையும் கூட பிரபல பாடகி சின்மயிக்கு இல்லையே என்பதுதான் நம்முடைய கவலை.
எந்த நாடாக இருந்தாலும், அரசு இயந்திரங்கள் கருத்து பரிமாறல்களை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் தொடர்ந்து முயன்றபடி இருக்கும். இணையத்தில் இது மிகவும் கடினம் என்பதால், இங்கே அச்சுறுத்தல் தொடங்கியிருக்கிறது. இது மிக மிக மோசமான முன்னுதாரணம். நம்முடைய சிறகுகள் வெட்டி எறியப்படும் முன் இது தடுத்து நிறுத்தப்படவேண்டும்.
ராஜனுக்காக நாம் குரல் கொடுக்கத்தேவையில்லை. சின்மயியை எதிர்க்க தேவையில்லை. அதிகாரத்தின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் நம்முடைய கருத்து சுதந்திரத்திற்காக குரல்கொடுப்போம்.
உதவிய இணையதளங்கள் – www.twitter.com , http://365ttt.blogspot.in , http://www.rajanleaks.com , http://www.chinmayisripada.com , www.google.com , மகேஷ்மூர்த்தியின் ட்விட்டுகள், ஹிந்துஸ்தான் டைம்ஸ் கட்டுரை மற்றும் நண்பர்களின் ட்விட் லாங்கர் கருத்துகள்.
56 comments:
காலத்தில் பதியப்பட்ட முழுமையான தெளிவான அலசல்.. அருமை
- @sheik007
//நாம் எல்லோருமே தினத்தந்தி செய்தி படித்துவிட்டு தீர்ப்பு எழுதும் காமன்மேன்கள்தான். நாம் இலக்கியவாதிகளோ அறிவுஜீவியோ கிடையாது. சாதாரண பொதுஜனம். செய்தியின் பின்புலத்தையும் அதன் அரசியலையும் ஒருநாளும் ஆய்வுக்கு உட்படுத்தி தீர விசாரிக்க நமக்கெல்லாம் துப்புகிடையாது.//அதுக்கெல்லாம் பொதுமக்களுக்கேது நேரம்!!!!அதை எல்லாம் பத்திரிகைகளும், ஊடகங்களும்தான் செய்யவேண்டும். உதாரணமாக இந்த கட்டுரையில், அதன் சுட்டிகளில் உண்மைகளை எப்படி சரி பார்ப்பது?
Crysral clear report...
Crystal clear review...
இந்த அபாயத்தை தடுப்போம். நல்லதொரு பகிர்வு:)
very well written athisha. we need to unite and protest this.
முழுமையான பதிவு.
இதில் சின்மயி திடீரென அளித்த "நான் மறத்தமிழச்சி" எனத்தொடங்கும் விளக்கத்தின் உண்மைத்தன்மையை விளக்கும், வவ்வாலிம் பதிவும், மாமல்லான் சாரின் கேள்விகளும் சேர்த்தால் ஷேமம் ;)
நல்ல முயற்சி அதிஷா.. ஒரு பெண்ணின் வன்மம் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டு..தனிப்பட்ட ஈகோ ஒரு இனிய குடும்பத்தை தகர்த்து எறிந்து விட்டது, இதற்கு ஆண்டவனிடம் நிச்சயம் பதில் சொல்லியே ஆகவேண்டும்.. இதற்கு தூபம் போட்டவர்களும் பதில் சொல்லவேண்டிய காலம் கூடிய விரைவில் வரும்..
நடந்த அனைத்தையும் தெளிவாக கூறியுள்ளீர்கள்... இந்த கருத்துக்களை மறுப்பவர்கள் @maheshmurthy யின் Twitter காலக்கோட்டை பார்க்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...உண்மை புரியும்...By @dp2k
நன்றாக விரிவாக எழுதியுள்ளீர்கள்..வாய்மையே வெல்லும் :))
அதிஷா அவர்களே,
மிக தெளிவான ஒரு உண்மை அலசல்!.. இதை அப்படியே 'புதிய தலைமுறை' ஊடகத்தின் மூலம் எடுத்துரைத்தால் 'உண்மை' மக்களை எளிதாக சென்றடையும்,பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகப்பெரும் உதவியாக இருக்குமென நம்புகிறேன்.புதிய தலைமுறையின் நிருபராக இருக்கும் உங்களால் இதை எளிதாக செய்ய முடியுமென எண்ணுகிறேன்!.. நன்றி
That Indian IT Act and ITRules2011 is draconian and usage of it when the law itself is under review is sad thing. I have no sympathies for anyone who used the act. They too will face the same case as the law allows to file a complaint against anyone without reasoning. That is totally another debate.
But, your reasons supporting those arrested is flawed. Chinmayi's thoughts are not anything new and they represent what a section of society thinks and it might be unacceptable to few other sections. So she is not politically correct but claims herself to stand on moral higher ground and victimized by 'பொறுக்கிகள்'.
It is funny that you want others to speak politically correct things(irrespective of their views), but treat 'கடலபோடறது' as just 'பகடி'. Either be political correct and be sensitive to everything or treat the medium lightly. The problem is both sides think its their home and only they can make fun of others but others must be politically correct and not make fun at all.
The IT Act gives enough freedom for anyone to lodge complaint. Instead of whinning on twitter and writing blogs that she deleted tweets, mass petition to cyber crime (physical ones) with her tweets would have made the issue dissolve
சரியான அலசல்...
நன்றி அதிஷா...
Good Job Mams..:-) By @HarryGowtham
அண்ணன் தம்பியோடு பிறந்திருந்தால் ஆணின் வலி தெரிந்திருக்கும். அதுதான் பிரச்னை.அவர் வீட்டில் ஒரு பையன் இருந்து அவன் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு எழுப்பப்பட்டிருந்தால் இப்படித்தான் ஆணாதிக்கம் பேசுவார்களா? அப்போது 'என் பையன் நல்லவன் (அல்லது) இதெல்லாம் பெரிய விஷயமா' என்றுதான் பேசுவார்கள். அக்கா தங்கச்சியோடு பொறக்கலியா என்று பேசுபவர்களை நான் யோசிக்கிறேன், சரி இவர் அண்ணன் தம்பியோடு பொறக்கலை என்று.
Awesome article thalaiva..Nice one. Bold enough to touch the core depth of this matter. high time someone takes this points to the people and the police to clarify all stupidity and atrociousness lashed against Rajan sir. I havent met Rajan Sir. But as his followers we call know how good he is at Tamil writing...Kudos to you boss..Rock onn...Good article..Better than Savukku
//. ஒரு பெண்ணின் வன்மம் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டு//
இது ஒரு ஹையங்காரின் வன்மம்
// காலத்தில் பதியப்பட்ட முழுமையான தெளிவான அலசல்.. அருமை
- @sheik007//
வழிமொழிகிறேன் @Piliral
// காலத்தில் பதியப்பட்ட முழுமையான தெளிவான அலசல்.. அருமை
- @sheik007//
வழிமொழிகிறேன் @Piliral
அருமையான பதிவு. அவர் சார்ந்த சினிமா உலகத்தில் இல்லா கிசு கிசுவா, ஆபாசமா? அவைகளை முன்னிறுத்தி தலைமை தாங்கி போராட வேண்டியதுதானே. அதற்க்கு தைரியம் இருக்கா? நடந்தது எல்லாம் மோசடி மற்றும் சதி திட்டம்.இருவரின் துயரத்திற்கு அவர் பதில் சொல்லியே ஆகணும், சட்டத்தின் முன் இல்லாவிட்டாலும், இறைவன் சரியான நேரத்தில் சரியான தண்டனை கொடுப்பார். அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும். நன்றி
ராஜனுக்காக நாம் குரல் கொடுக்கத்தேவையில்லை. சின்மயியை எதிர்க்க தேவையில்லை. அதிகாரத்தின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் நம்முடைய கருத்து சுதந்திரத்திற்காக குரல்கொடுப்போம்.
ராஜனுக்காக நாம் குரல் கொடுக்கத்தேவையில்லை. சின்மயியை எதிர்க்க தேவையில்லை. அதிகாரத்தின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் நம்முடைய கருத்து சுதந்திரத்திற்காக குரல்கொடுப்போம்..........well written brother.unite to protest this
இதை விட தீவிர இட ஒதிகீடு எதிர்பாளர்கள் twitterஇல் (like subramanian swamy) உள்ளனர்
அங்கே விவாதிக்க வேன்டியது தானே
அந்த தைரியம் கிடையாது
ஆனால் ஒரு பெண்ணிடம் ஆபாசமாய் விவாதிப்பார்கள் பெண்ணை குறித்து ஆபாசமாய் எழுதுவார்கள்
அவர்களுக்கு வக்காலத்து வாங்கி ஒரு பதிவு
It is a serious matter. Measures must taken to prevent such frivolous complaints and police action without much preliminary investigations or enquiries.
இதில் எங்கு மீனவர்களை அவர் தவறாக சொல்கிறார் என்று சுட்டி காட்ட முடியுமா. அவர் சொன்னதாக சொல்லப்படும் கருத்து மாமல்லன் தான் சொல்கிறார்.ஒன்று நீங்கள் படிக்கவில்லை இல்லை மற்றவர்கள் படிக்க மாட்டார்கள் என்று நினைக்கிறீர்கள்
மாமல்லன் அவங்க போஸ்ட் லிங்கயும் சேத்து கொடுத்திருக்கலாம்.
http://www.maamallan.com/2012/10/blog-post_28.html
சின்மயி நேர்மையில்லாம பொய் வழக்கு போட்டத தான் எல்லாரும் எதிர்க்கறாங்க. ஆபாசமா பேசறதுக்கு ஆதரவுன்னு அர்த்தமில்ல.
மாண்புமிகு சின்மயிய பத்தி நான் எந்த கருத்தும் சொல்லல
மிகச் சரியான நேரத்தில் வந்திருக்கக் கூடிய பதிவு. உங்களைப் போன்ற ஊடக ஆளுமைகளின் செயற்பாடுகள் நம்பிக்கை அளிக்கிறது. நன்றி.
அனானி, இது ஒரு பெண்ணின் வன்மம் அல்ல. சாதி வெறியின் வன்மம்
தமிழ்நாடு, இந்தியா என்றல்ல. உலகம் முழுவதும் நீதி எப்படி செயல்படும் என்பதைப் பற்றி ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். சின்மயி விடயம் என்றல்ல, அது எந்த விடயமாக இருந்தாலும் அதன் தீர்ப்பு இக்கட்டுரையில் நான் சொல்வது போலவே இருக்கும் என்பது என் அபிமானம்.http://lakshmanaperumal.com/2012/02/13/%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/
மிகவும் தெளிவாக இருக்கிறது அதிஷா..!!
என் அன்பு உங்களுக்கு...!!
//ராஜனுக்காக நாம் குரல் கொடுக்கத்தேவையில்லை. சின்மயியை எதிர்க்க தேவையில்லை. அதிகாரத்தின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் நம்முடைய கருத்து சுதந்திரத்திற்காக குரல்கொடுப்போம்.//
ராஜனுக்காக நாம் குரல் கொடுக்கத்தேவையில்லை. சின்மயியை எதிர்க்க தேவையில்லை. அதிகாரத்தின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் நம்முடைய கருத்து சுதந்திரத்திற்காக மட்டும் குரல்கொடுப்போம்.//
very well analysed article. hats off to you.
அருமை..See this link also அதிஷா,
http://vovalpaarvai.blogspot.in/2012/10/blog-post_24.html
http://vovalpaarvai.blogspot.in/
Keep rocking...
by--
Maakkaan.
You purposefully ignore the fact that even if u r not following someone you can read their tweets provided it is not restricted .Even for a simple comment your friend yuvakrishna couldnt tolerate and blocked me . Those who never minded about their families while tweeting are now dragging their family masks . Tweeters r bringing the Caste mask now , they were the one who bashed MK n others when he gave same remark to support A Raja. MK is far better than u guys
தகவல்களை அதனதன் பின்புலத்துடன் ஒருங்கிணைத்து முழுமையாகக் கொடுக்கப்பட்ட இடுகை! நன்றி அதிஷா!
நன்றி-சொ.சங்கரபாண்டி
இதனை அப்படியே காபி செய்து உங்கள் பெயர் இட்டு என்னுடைய முக நூல் பக்கத்தில் பகிர்ந்து விட்டேன். உங்கள் அனுமதி பெறாமைக்கு மன்னிக்கவும். நன்றி
http://www.facebook.com/perumal.magendran/posts/10151213098293996
http://www.facebook.com/perumal.magendran/posts/243332932460210
// இவ்விஷயத்தில் சில பார்ப்பன ஆதரவாளர்கள்
எல்லாவற்றுக்கும் சுட்டி கொடுத்துவிட்டு பொத்தாம் பொதுவாக எதற்கு இந்த இடைச்செருகல்? ஆதரவு கொடுத்தவர்கள் பார்ப்பனர்கள் என்றால் ஆதரவாளர்கள் யார் அவர்களது ஜாதி என்ன என்ற ஆராய்ச்சியை நீங்கள் முதலில் செய்திருக்க வேண்டும். ஆதரவு கொடுக்கப்பட்ட சின்மயி பார்ப்பனர் என்றால் விஷயத்தில் சம்பந்தப்பட்ட மற்றவர்கள் ஜாதியையும் குறிப்பிட வேண்டும்.
அதிருக்கட்டும். இட ஒதுக்கீடு, ஈழப் போராட்டம், மீனவர்கள் பிரச்சனையை ஆகியவற்றில் ஒருவருக்கு மாற்றுக் கருத்தே இருக்கக் கூடாதா? ராஜனின் கருத்து சுதந்திரம் குறித்து கவலைப் படும் நீங்கள் சின்மயியின் கருத்து சுதந்திரத்தை மறுக்கலாமா?
தாழ்த்தப்பட்டவர்களை "ஒட்டுண்ணிகள்" என சின்மயி பேசியது மிகப் பெரும் தவறு. அதே சமயம் பார்ப்பனர்களை இணையத்தில் எவ்வளவு வசை பாடுகிறார்கள். உதாரணமாக வினவு தளத்தில் கூடங்குளத்தில் இருந்து குருவி செத்ததது வரை எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் "பார்ப்பனக் கும்பலை" தானே காரணமாக காட்டுகிறார்கள். இப்படி பொத்தாம் பொதுவாக பார்ப்பனர்களை வசை பாடுவது மட்டும் சரியா?
இணையத்தில் நம்ம எல்லைகோட்டை தெரிஞ்சு கபடி விளையாண்டா நாமதான் கில்லி.. ஆனா இந்த எதிர்தரப்பு ரெபர்ரீய கைக்குள்ள போட்டுகிட்டு எல்லைகோட்டை அவனுகளுக்கு வேணும்ன்ற நேரத்தில் வேணும்ன்ற மாதிரி மாத்தி வச்சுகிராணுக. அப்படி இருக்கியல அடிப்படை விதிகளை காக்க வேண்டியது நம் வேலை.
Best of All..
//ராஜனுக்காக நாம் குரல் கொடுக்கத்தேவையில்லை. சின்மயியை எதிர்க்க தேவையில்லை. அதிகாரத்தின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் நம்முடைய கருத்து சுதந்திரத்திற்காக குரல்கொடுப்போம். //
@Sidhutwits
பார்பன வெறுப்புகளுக்கு அச்சாரம் போடும் தினமலர், துக்ளக், இந்து இராம் வரிசையில் சோ கால்டு பாடகியும் இடம் பிடித்திருக்கிறார்.
நல்ல பதிவு. ராஜன் சிறையில் இருந்து விடுவிக்கப்படவேண்டும்.
இதுவரை காலமும் பெண்களுக்கு நடந்த பல செக்ஸ் டார்ச்சர்களுக்கு கள்ள மௌனம் சாதித்த ஜெயமோகன் இப்போ அறச்சீற்றம் வந்து பொங்கி எழுந்திருக்கிறார். சுனாமியே தோத்து போயிடும்.
(மீனா கந்தசாமிக்கு பாலியல்
இது போதாது என்று நம்ம காம வெறி எழுத்தாளர் பூரு வும் (எல்லாம் சேப்டிக்கு தான்) ஒரு ஜால்ராவை போட்டு தாக்கி இப்போ ஜெயமோஹனை நோக்கி நட்பு கரம் வேற நீட்டியிருக்கிறார்.
"யார் பெண் பாதுகாப்பை பேசுவது என்ற விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது. சாத்தான்கள் வேதம் ஓதுகின்றன"
இந்த பதிவு சேர வேண்டியவர்களை சென்று சேர வேண்டும்.
உண்மை நிலையை ஊர் அறிய வேண்டும் நடக்குமா?
ராஜன் செய்தது தவறு. ஏனென்றால்,
ஆதிஷாவின் Blogயே எடுத்து கொள்வோம். ஆதிஷாவுக்கு அனைத்தும் எழுத உரிமை உண்டு. அவரின் கருத்துக்கு உடன் படாதவர்கள் அவரை கண்ணா பின்னாவென்று திட்ட உரிமை இல்லை.
ஆதிஷாவே என்ன சொல்வார்?
"இது என்னுடைய ப்ளாக். என்னுடைய கருத்துக்கு உடன் படாதவர்கள் எதற்கு திட்டுகிறீர்கள்?" என்று அவரே சொல்வார்.
ராஜன் செய்த மிக பெரிய தவறு, சின்மயியின் ப்ளாகிற்கு சென்று அவரையே திட்டியதுதான்.
அது மட்டுமல்லாமல் "ஹை...யங்கார், சு....யங்கார்" என்று பெயர் வைத்துகொள்வது அவருடைய தனிபட்ட விருப்பம். (உம்: மாய தேவர், தம்பு செட்டியார்)
அதில் தலையிட நமக்கு உரிமை இல்லை.
ராஜன் என்ன செய்திருக்க வேண்டும்?
ஆதிஷா மாதிரி ஒரு அருமையான கட்டுரை எழுதி தான்னுடைய கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருக்கலாம்.
அதை விட்டுபுட்டு "கடலைபோடதானே என்று கேட்டதுதான் தவறு.
மற்றபடி சின்மயி போன்ற ஆளையெல்லாம் நான் மதிப்பதே கிடையாது. அவளும் அவளுடைய ஜாதிவெறியும்.
மிக மிக அருமையான பதிவு.
திரு ஜெமோ
ஷோபா சக்தியை நேர்மையின் சிகரம் என்றெல்லாம் நீங்கள் எழுதியிருந்ததை வாசித்தேன். அரசியலில் கடந்த பதினைந்து ஆண்டுக்காலமாக அவர் சோரம்போன கதையெல்லாம் உமக்கு தெரியாது. அதெல்லாம் எங்கள் விஷயம் என்றே வைத்துக்கொள்ளுங்கள். தமிழச்சி என்ற ஒரு பெண்மணி ஷோபாவின் பாலியல் அத்துமீறல்களைப்பற்றி ஆதாரபூர்வமாக எழுதியிருந்தார்கள் வாசித்தீர்களா? அதைப்பற்றி நீங்கள் வாயே திறக்கவில்லை. ஒரு சாமியார் அவருக்குப்பிடித்த பெண்ணுடன் படுத்தால் காமிரா வைத்து பிடித்து அவரை கொலைகாரனைப்போல நடத்துகிறீர்கள். ஒரு எழுத்தாலன் அவரிடம் சாட்டில் வலியவந்து வழிந்த பெண்ணுடன் பேசினால் உடனே கொலைக்குற்றம் என்று சொல்கிறீர்கள். ஆனால் உங்களுக்கு சாதகமான அரசியல் உடையவர் என்றால் பேசாமலிருப்பீர்கள். புலி எதிர்ப்பு அரசியல் மட்டும் இல்லை என்றால் ஷோபா சக்தியை இணையத்திலெ எப்படியெல்லாம் நீங்கள் துவைத்துக்காயப்போட்டிருப்பீர்கள் என்று எங்களுக்கும் தெரியும்
கெ.எஸ்
அன்புள்ள கெ.எஸ்,
நான் இணையத்திலோ பொதுவிலோ எவருடைய தனிப்பட்ட பாலியல் ஒழுக்கத்தையும் விவாதித்ததில்லை. அது என் வழிமுறை அல்ல. நான் உறுதியான ஒழுக்கவாதி என்பேன். ஆனால் பிறரது ஒழுக்கத்தைப்பற்றி விவாதிக்கும் தகுதி எனக்குண்டா என்றால் இல்லை என்றே சொல்வேன். இத்தகைய செயல்பாடுகளில் நாம் எளியமுடிவுகளை எடுக்க முடியாது. மானுட அந்தரங்கம் என்பது மிகமிக சிக்கலானது என்பதை அறிந்தவனே எழுத்தாளனாக முடியும்.
நான் ஷோபா சக்தியை மதிப்பிடுவது இரு அடிப்படைகளில். ஒன்று அவரது எழுத்துக்கள். அவை கூரிய அங்கதமும் சீற்றமும் கொண்டவை. சமகால வரலாற்றின் முன் தயங்கிநிற்கும் நம் மனசாட்சியை சீண்டக்கூடியவை. இரண்டு, அவரது இதுகாறுமான தனிவாழ்க்கையில் அவர் எதை எழுதினாரோ அதற்கு உண்மையானவராகவே அவர் நடந்துகொண்டிருக்கிறார். அதற்காக தன் உயிரையே பணயமாக வைக்கவும் அவரால் முடிந்திருக்கிறது.
ஒருவேளை அவர் காஞ்சி மடத்திடமிருந்தோ ராஜபட்சேவிடமிருந்தோ காசு வாங்கிக்கொண்டு அவர்களை நியாயப்படுத்தி ஏதாவது செய்தால், பெரியாரியத்தை பரப்புவதற்கான நிதியாதாரத்துக்காக அதைச்செய்தேன் என்று சொன்னால் பார்ப்போம்.
[ஆனால் காஞ்சிமடத்தில் போய் கல்லுடைத்துக் கூலி பெற்றால் அது தவறும் அல்ல. கடவுளே இந்தச்சின்ன விஷயத்தை அறிவுஜீவிகளின் சால்ஜாப்புகளைத்தாண்டி உள்ளே கொண்டுபோவது நம் சூழலில் எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது!]
அப்படி நீங்கள் ஆதாரம் தரும்வரைக்கும் அவரது கருத்துக்களை நேர்மையாகவே எதிர்கொள்வேன்
ஜெ
"அப்படி நீங்கள் ஆதாரம் தரும்வரைக்கும் அவரது கருத்துக்களை நேர்மையாகவே எதிர்கொள்வேன்"
அப்போ எந்த ஆதாரத்தை வைத்து ராஜன் மீது துள்ளி குதிக்கிறார். அரிச்சந்திரி சின்மயி கொடுத்த தகவலை ஆதாரமாக கருதி விட்டார் போலும். ஹை அங்கார் பொய் சொல்லமாட்டாங்க தானே
whatever you said its true.
இந்த விஷயத்தை மிகச்சரியாக அலசி வெளிவந்திருக்கும் பதிவு..நன்றி பாஸ்.
மிக அருமையான அலசல். தெளிவான கருத்துகள். இதை எல்லோரிடமும் சென்று சேர்க்க வேண்டும். சீமயி செய்தது சின்னப் புத்தித் தனமானது என்பது மிகத் தெளிவு! எதிரான கருத்து என்பதென்றே இருக்கக் கூடாது எனபதை வலியுறுத்துவதாகவே இந்தக் கைதுகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. நம் வீராவேசப் பதிவர்கள் பல்ர் வாய் மூடி இருப்பதே இதற்குச் சான்று. வால் பையன் முதற்கொண்டு வாளாவிருப்பது நல்லதற்கல்ல!
-பாலா. USA.
If somebody says I am "highyengar" then it's bad, but if they say I am proud to be a Thevar or Mudaliar or Nadar then it's ok.
போங்கப்பா போயி புள்ள குட்டிங்கள படிக்க வைங்க. சும்மா எதற்கு எடுத்தாலும் பார்ப்பான் பார்பனீயம்ன்னு பேசிகிட்டு.
ஒரு பொண்ணு அது எந்த ஜாதியாக இருந்தாலும் தரக்குறைவா பேசுவது தப்பு. அதை எவனும் கண்டிக்க மாட்டான். ஆனால் அதுக்கு ஏதாவது நடவடிக்கை எடுத்தா கருத்து சுதந்திரம் பற்றி குய்யோ முய்யோ என்று கத்தவேண்டியது.
அந்த பொண்ணோட கருத்து பிடிக்கவில்லை என்றால், அதை நாகரீகமா மறுத்து தெரிவிக்க வேண்டியதுதானே? அப்படியும் ஒத்து வரலை என்றால் பேசாமல் வாயை மூடி கொண்டு இருக்க வேண்டும்.
நமது தப்பான நடைமுறையை நியாப்படுத்த முயற்சி செய்யும் பதிவு இது.
யார் வேண்டுமானாலும் ஸ்க்ரீன் சாட் எடுத்து போட்டு அதை வைத்து வழக்கு பதிவு செய்ய முடியும் என்பதை விட ஆபத்து ஒன்றுமில்லை.எந்த கொடுங்கோல் ஆட்சியிலும் இதுபோன்ற நிகழ்வு ,இதற்கான அனுமதி இருக்காது .இப்போதும் இதற்க்கு சட்டப்படி அனுமதி இருக்கிறதா என்று தெரியவில்லை.
அரசு கேட்டால் தர வேண்டும் என்பதே சரியல்ல என்று தான் நினைக்கிறேன்.
தருவதற்கு தேச நலனிற்கு குந்தகம்,தீவிரவாதியாக இருப்பானோ,கொலை குற்றவாளியோ என்று போன் டேப் செய்ய அனுமதி பெற என்ன விதிமுறைகள் உண்டோ அது போல இதற்கு இருக்க வேண்டாமா
facebook ,த்விட்டேர் எனபது என் வீட்டு பாத்ரூம் சுவர் மாதிரி .நான் வக்கிரம் பிடித்தவனாகவே இருந்து என் பாத்ரூம் சுவரில் என் எதிரிகளை பற்றி அசிங்க அசிங்கமாக எழுதி இருக்கிறேன் என்று வைத்து கொள்வோம். அதை திருட்டுத்தனமாக குதித்து வந்து போட்டோ எடுத்து வழக்கு போட முடியுமா
ஒருவரை ஒருவர் பிளாக் செய்த பிறகு அடுத்தவர் சுவரை பற்றி இவருக்கு என்ன கவலை.பிளாக் செய்து விட்டதோடு பிரச்சினை முடியவில்லையா
அதில் அவர் மற்றவர்களை பற்றி என்ன எழுதி இருக்கிறார் ,அவர் கெட்டவர் என்று அதை வைத்து வழக்கு தொடுப்பதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்
பாத்ரூம் சுவற்றை விட அதிக சுதந்திரம் தரும் சுவராக தானே முகநூல்,த்விட்டேர் உள்ளது.ஒரு போலோவேரும் இல்லாமல் தனியாக த்விட்டேரில்.முகநூலில் கண்டபடி யாரையாவது திட்டினால் கூட குற்றமா
வீட்டில் தனியாக கூட யாரையும் திட்டி பேச முடியாது போல .அதை microphone வைத்து ரெகார்ட் செய்து கேஸ் போடலாம்
நேரடியாக ஒருவருக்கு ஒருவர் எழுதி கொள்ளும் த்வீட்களை தவிர்த்து மற்ற ச்டடஸ்களை வைத்து வழக்கு பதிவு செய்யும் உரிமை எனபது மிக மிக ஆபத்தான ஒன்று
அதிஷா அவர்களின் சுவற்றில் வந்து நான் அவரை திட்டுவதற்கும் என் சுவற்றில் சினமயியை ஆதரிப்பவர்களை திட்டி போஸ்ட் போடுவதற்கும் வித்தியாசம் இல்லையா .
நேரடியாக தொடுக்கப்பட்ட வசவுகள்,மிரட்டலகளுக்கு பதில் சொல்ல வேண்டும்,தண்டிக்க வேண்டும் எனபது ஞாயம்.கிசு கிசு போல சின்னாத்தா என்ற த்வீட்கள் இவரை தான் குறிக்கிறது என்பதும் ,பொதுவாக திட்டி போஸ்ட் செய்வதையும் ஆதாரங்களாக எடுத்து கொள்வது சட்டத்தில் நிற்குமா .
தவறாக எழுதி விட்டேன் என்று நினைத்து அழித்து விட்டால் கூட இரண்டு வருடம் கழித்து அழித்த த்வீட்களை பயன்படுத்தி வழக்கு தொடுக்க முடியுமா .
தவறு என்று அழிக்கப்பட்ட த்வீட்களை ஒத்து கொள்ள முடியாது என்பதை விட ஆபத்து உண்டா ஆத்தா என்று tamil transliteration இல் டைப் செய்து அது ஒ....... என்று வந்து விட்டால் அவ்வளவு தான் சிறை தண்டனை தானா
இந்த ஆண்டில் நான் நினைத்து நினைத்து சிரிப்பது த்விட்டேரில் வந்த
ஜெயந்தி யாரு என்ற கேள்விக்கு பதில் தான்
யாருன்னு தெரியல ஆனா ரொம்ப மோசமான பொம்பளையா இருந்திருப்பா போல காந்தி மகாவீரர் அம்பேத்கார் ன்னு பல பேர் கூட இருந்திருக்கு எனபது தான்
இதை ஒரு sexist கமெண்ட் என்று வாதிடலாம்
என் அக்காவின் பெயர்,மனைவியின் பெயர் அவரை தான் வேண்டும் என்றே குறிப்பிடுகிறார்கள்,இழிவு படுத்துகிறார்கள் என்று கூட வழக்கு தொடுக்கலாம்
அரசியல் வியாதிகள் ,வக்கீல் நாய்கள்,மருத்துவ ஓநாய்கள் என்று எழுதுவதை எதிர்த்தும் வழக்கு தொடுக்கலாம்
நண்பர்கள் அவர்களுக்குள் அடித்து கொள்ளும் கிண்டல்களை ,பேசும் பேச்சுக்களை தடை செய்ய வேண்டும் ,முறைபடுத்த வேண்டும் என்ற எண்ணம் சரியா
தொலைபேசியில் ராடியாவும் டாடாவும் பேசுவது ,அதை ஒட்டு கேட்பது,அதை வெளியிடுவது தவறு என்ற வழக்கு எந்த நிலையில் உள்ளது.அதில் ஒருவர் கமல்நாத் பதினைந்து சதவீதம் இந்த துறையிலும் கிடைக்கும் என்கிறார். இந்த பேச்சை வைத்து அவர் மீது கமல்நாத் வழக்கு தொடர முடியுமா
இருவர் தொலைபேசியில் பேசுவது,அல்லது conference கால் மூலம் பலர் பேசுவது,email,கடிதம் போல தானே த்விட்டேர்,facebook இரண்டும்.இந்த பேச்சுக்களை வைத்து வழக்கு தொடுக்க முடியும் என்பதை விட கொடுமையான சட்டங்கள் இருக்க முடியுமா
http://www.newswala.com/India-National-News/Radia-tapes-Supreme-Court-snubs-Centre-defends-15811.html
என் த்வீட்களை நண்பர்களை தவிர யாரும் பார்க்க கூடாது என்று கூறும் உரிமை உண்டா இல்லையா. அப்படி இருக்கும் போது அதை வைத்து வழக்கு தொடுக்க முடியும் எனபது எப்படி
என் த்விட்டேர் ,முகநூல் பக்கத்தை விஜய் டி வி ,ஆனந்த விகடன் மாதிரி எடுத்து கொள்ளுதல் சரியா
அங்கு எழுதியவர்,எடிட் செய்து வெளியிடுபவர்,நடத்துபவர் அனைவரும் வெளி வரும் கருத்துக்களுக்கு பொறுப்பு.இங்கு அப்படியா
த்விட்டேர்,முகநூல் எனபது தபால்துறை போல .யார் தபாலில் என்ன எழுதுகிறார்கள் என்பதில் தபால் துறைக்கு எந்த பொறுப்பும் கிடையாது
அடுத்தவர் தபால்களை பிரித்து பார்த்து படிப்பது அநாகரீகம் மட்டும் அல்ல,சட்டப்படி தவறும் கூட.அதே தானே இந்த ஸ்க்ரீன் shots
இரு நண்பர்களுக்குள் நடக்கும் பேச்சினை மூன்றாமவர் ஒட்டு கேட்டு அதை வைத்து வழக்கு தொடுக்க முடியுமா
மான் கறி சாப்பிடுவது சட்டப்படி குற்றம்.நான் மான்கறி சாப்பிட்டேன் என்று ச்டடுஸ் போட்டேன் என்றால் அதை வைத்து வழக்கு தொடுக்க முடியுமா
நான் சிறு வயதில் இருந்து ஆட்டை மான் என்று தான் சொல்வேன் என்றால் சட்டம் என்ன செய்யும்.தண்டிக்குமா
வாய் புணர்வு,ஆசன வாய் புணர்வு எல்லாம் இன்றும் சட்டப்படி குற்றம் தான்.நானும் என் மனைவியும் அப்படி ஈடுபட்டால் அதை மறைந்திருந்து படம் எடுத்து சட்டத்திற்கு எதிராக நடந்த இவனை கைது செய்து தண்டனை தர வேண்டும் என்று வழக்கு தொடுத்தால் நான் தண்டிக்கபடுவேனா .அப்படி நுழைந்து படம் எடுக்கும் உரிமை எல்லாருக்கும் உண்டா
தனக்கு தொடோர்பில்லாத மனிதர்களின் சுவருக்கு சென்று ஸ்க்ரீன் shots எடுப்பது தான் பெரிய குற்றமாக இருக்க வேண்டும் .அதை விட்டு விட்டு இரு நண்பர்கள் கடலை போடு, சப்ப பிகர் என்று பேசுவது எல்லாம் குற்றசாட்டு ஆகி விடாது
பாப்புலர் ஆகணும், நம்மை எல்லோரும் பாக்கணும், நான் டிவியில தெரியணும் அப்படிங்கறத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய ஒரு சிலர் தயாராக இருக்கிறார்கள். எந்த அளவுக்கு என்றால் தான் செத்தால் தன்னை உலகம் முழுவதும் பார்க்கும் என்றால் சாகக்கூட தயார். இது ஒரு விதமான மனநோய். இதன் பாதிப்பு தான் இதெல்லாம் என்று கூட சொல்லலாம். ஒரு நல்ல மீடியாவை தவறாக பயன்படுத்தி நிறைய பேருக்கு சங்கடத்தை உண்டாக்கி இருக்கிறார் சின்மயி.
ராஜனுக்காக இப்போது வக்காலத்து வாங்கும் அதிஷாவிற்க்கு "ஆல் இன் ஆல் அழகு ராஜா" என்ற பிளாக்கின் மூலம் அவரின் வக்கிர எழுத்தை பற்றி தெரியுமா? எவ்வளவு மன உளைச்சல்கள் மற்றவருக்கு ஏற்படுத்தினார் என்று தெரியுமா. "வினை விதைத்தவன் வினை அறுப்பான்"
Read ur blog after gnani sir's blog.. Both on d right track.. Chinmayi's twitter & fb flows with wishes & hats off status as if she.won a world war..truth will come up surely & she has to pay for her mistakes in d near future.. She story she made is for d ambhis who follow her , she cant deny dat dey r only trying to win her friendship..
truth always win..neengal solvathai pola aval jaathiya thimiril thavaru seithirunthal aval thandanai pera pohum kalam rompa thooram illai..
Post a Comment