12 May 2014

சுருள்குழல் அழகி!
வாழ்க்கையில் எதிர்பாராத சந்தர்ப்பங்களில் ஏடாகூடமாக ஏதாவது நடந்து விடுவது இயல்புதானே! அப்படிதான் நேற்று, வரலாற்று சிறப்புமிக்க திரைப்படமான மான்கராத்தேவை பார்த்தேன். இனிமேல் நீ வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன? என்கிற தலைவன் கவுண்டமணி வசனத்திற்கேற்ப இனிமேல் அந்தப்படத்திற்கு விமர்சனம் எழுதினால் என்ன.. எழுதாட்டி என்ன? என்றுதான் முதலில் தோன்றியது. எனவே இது இப்படத்தின் விமர்சனம் அல்ல.

குத்து சண்டை குறித்தும் அதற்காக உயிரை கொடுத்து பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிற எண்ணிலடங்கா இளைஞர்களைபற்றியும் ஒன்னும் தெரியாமல் ஏனோதானோ என்று எடுக்கப்பட்ட மொக்கை படம் என்கிற அளவில்தான் இப்படத்தை அணுக வேண்டியிருக்கிறது. படத்தில் சொல்லிக்கொள்ளும் படி ஒன்றுமே இல்லை. அந்த முதல் இருபது நிமிட இந்திரா சௌந்தர்ராஜன் பாணி பில்ட்அப்புகள் மட்டும் பிடித்திருந்தது!

தினத்தந்தி பேப்பரும் நாலு இளைஞர்களும் என வேறு ஏதாவது கதை சிந்தித்திருக்கலாம். சிவகார்த்திகேயனை வைத்து என்னமோ பண்ணியிருக்கிறார்கள். அவசரத்திற்கு கிண்டிய உப்பில்லாத உப்புமா மாதிரி! ‘’சிவகார்த்திகேயனின் சுள்ளான்’’ என்று இரண்டுவார்த்தையில் இப்படம் குறித்து சொல்லிவிடலாம். ஓவர் டூ தி மெயின் மேட்டர்.

இப்படிப்பட்ட மரண மொக்கைப் படங்களிலும் ஏதாவதொரு அம்சம் நம்மை வெகுவாக கவர்ந்து மென்னியை பிடித்து கவ்வி இழுத்துவிடும். அப்படி கவர்ந்திழுத்த அம்சம் இப்படத்தில் வருகிற அந்த சுருள் முடி பெண்! ‘’அடியே ரத்தீ அக்கினி கோத்ரி’’ என்று புகழுவாரே சிகா! அந்தபெண்தான். படத்தில் அவருடைய பெயர் வைஷ்ணவி. உண்மையான பெயர் ப்ரீத்தியாம். கூகிளில் போட்டிருக்கிறது. கஷ்டப்பட்டு கண்விழித்து தேடித்தேடி கண்டுபிடித்தேன்.

ஒருபக்கம் ஹன்சிகாவின் ஓவர் மேக்கப் முகமும், உதட்டை பிதுக்கி பிதுக்கி ஙே என பார்க்கிற எல்லா சீனுக்குமான ஒரே குஷ்பு ரியாக்சனையும் பார்த்து பார்த்து சோர்ந்துபோன கண்ணுக்கு அவ்வப்போது காட்டப்படுகிற அதிக மேக் அப் இல்லாத இந்தப் பெண்ணை பார்த்துதான் குஷிவருகிறது. இவரையே ஹீரோயினாக போட்டிருக்கலாம்ங்க!

இந்த சுருள்குழல் அழகியை முதல் காட்சியில் பார்த்ததுமே ரொம்ப பிடித்துவிட்டது. என்ன ஒரு தளுக்கு என்ன ஒரு மினுக்கு! அய்யுய்யய்யோ.. அந்த கண்ணில்தான் அவ்வளவு மயக்கம்! ‘’இப்பல்லாம் பீர் கூலிங்காவே கிடைக்கிறதில்ல’’ என்று சொல்லும்போது ஓடிப்போய் டாஸ்மாக்கில் அடித்து பிடித்தாவுத் ஒரு கூலிங் பீர் வாங்கிக்கொண்டு போய் கொடுத்துவிட தோன்றியது.

மைக்கேல் ஜாக்சன் பாணியில் தலைவிரிகோலமாக அலைகிற சுருள்குழல் பெண்களை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். சுருள்முடியோடு கொஞ்சம் பெரிய கண்களும் கொண்ட பெண்களை பற்றி சொல்லவே வேண்டாம். பார்த்ததுமே காதலில் விழுந்துவிடுவேன். அதற்கு முக்கியமான காரணமாக நான் கருதுவது அவர்களுடைய கூந்தலை என்னதான் எண்ணை போட்டு அமுக்கினாலும் அது அடங்கவே அடங்காது! அது அப்படியே நெற்றியில் விழுந்து காற்றில் அலைந்தபடியேதான் கிடக்கும். மீறி படிய வாறினால் அவர்களுடைய முகம் நன்றாகவே இருக்காது. கூகிளில் தேடியபோது படியவாறி சீவிய ப்ரீத்தியின் முகம் கூட சுமாராகத்தான் தோன்றியது!

ஒரு முக்கியமான விஷயம், சுருள்முடி ப்ரீத்திக்கும் தலைவி சிம்ரன் மாதிரியே உதட்டுக்கு மேல் ஒரு அழகான மச்சம் வேறு இருக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அதுவும் வலதுபக்கம்! ஒரிஜினல்தான். (அடியேன் ஒரு காட்டுத்தனமான சிம்ரன் உபாசகன் என்பதை சொல்லவேண்டியதில்லை)

முன்பு 22ஃபீமேல்கோட்டயமில் ரீமா கல்லிங்கலை ரொம்பவே பிடித்து இப்படித்தான் பித்துபிடித்து திரிந்தேன். அதற்கு பிறகு அவருக்கும் மணமாகிவிட்டபடியால், கங்கனா ரனாவத்திற்கு மாறினேன். அவர் நடித்த ரிவால்வர் ராணியை இனிமேல்தான் பார்க்கவேண்டும். சப்டைட்டிலோடு நல்ல ப்ரிண்ட் டிவிடிக்காக வெயிட்டிங்! இந்த சந்துகேப்பில்தான் இந்த ‘’மான்’’ சிந்துபாடியிருக்கிறது! சிம்ரனுக்கு பிறகு அடியேனின் இரும்பு இதயத்தையே அசைத்துப்பார்க்கிறது இப்பெண்ணின் அழகு. ம்ம் சீக்கிரமே இந்த பெண்ணை வெள்ளித்திரையில் நாயகியாக படம் முழுக்க பார்க்கவேண்டும். யாராவது இயக்குனர்கள் மனது வைக்கவேண்டும். நிச்சயம் நன்றாக நடிப்பார் படம் ஹிட்டாகும்.. ப்ரீத்திக்கு நான் கியாரண்டி!

10 comments:

குரங்குபெடல் said...

படம் பேரு - ப்ரீத்திக்கு நான் கியாரண்டி!

எழுத்து - தயாரிப்பு - இயக்கம்

அதிஷா வினோத்

Dhaya said...

"அன்பா அழகா"ன்னு ஒரு படம் வந்துச்சே, அதுல இந்த சுருள் குழல் பாப்பாதானே ஹீரோயின்

Anonymous said...

Ada devuda.....

Short Stories Collection said...

same feeling...

சீனி மோகன் said...

ஷாஜி குறித்து ஒன்றும் சொல்லாமல் விட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

Umesh Srinivasan said...

எப்படி இருந்த நீங்க, இப்படி ஆயிட்டீங்களே தல..... # சிம்ரன் to ப்ரீத்தி !

JJ said...

பையா படத்துல வந்த சோனியாவை மறந்துட்டிங்களே...!!!

Raghav said...

பையாவில் வந்த சோனியா தீப்தி, பொம்மலாட்டம் ருக்மிணி, மக்கயல மக்கயல அப்புறம் யாமிருக்க பயமேயில் வரும் ரூபா மஞ்சரி இது போல பெரிய பட்டியலில் ப்ரீத்திக்கும் இடம் உண்டு.

இவர்களுக்குள் பொறாமை இருக்கட்டும் போட்டி வேண்டாம் :)

Regards
Raghav

Unknown said...

ஆமாமா !! உனக்கு என்ன கலர் பிடிக்கும்ன்னு கேட்க 'ப்ளூ'ன்னு சொல்லுமே அந்த இடத்துல நான் கூட அவுட்டு :D

Unknown said...

ஆமாமா !!! உனக்கு என்ன கலர் பிடிக்கும்ன்னு கேட்க்க 'ப்ளூ'ன்னு சொல்லுமே அந்த இடத்துல நான் கூட அவுட்டு