20 January 2015

சினிமா விமர்சனம் - FAQ and ANSWERS

ஓர் (இணைய) சினிமா விமர்சகனின் பேட்டி அல்லது FAQ and Answers

********

இன்னைக்கு பேஸ்புக்ல ட்விட்டர்ல அக்கவுன்ட் இருக்கிற எல்லாருமே தமிழ்சினிமா
விமர்சனம் எழுதுகிறார்கள், உங்களுக்கெல்லாம் வேறு வேலை வெட்டி கிடையாதா?

கிடையாது. ஒரு ஜோலி வெங்காயமும் கிடையாது. நல்ல வேலை இருந்தால் சொல்லி
அனுப்பவும். ரெஸ்யூம் ஃபார்வர்ட் செய்கிறோம்.

***********

விமர்சனம்னா என்னானு தெரியுமாடா உனக்கு? சினிமான்ற கலைல எத்தனை துறைகள்
இருக்குனு தெரியுமாடா உனக்கு?

முதல்ல அபிப்ராயம்னா என்னானு தெரியுமா உனக்கு. விமர்சனத்துக்கு
அபிப்ராயத்துக்கும் என்ன வித்தியாசம்னு தெரியுமா உனக்கு? ஃபேஸ்புக்ல
போடறது அபிப்ராயம். படம் முடிஞ்சி டீக்கடைல கொட்ற ஆதங்கம் மாதிரி.

*************

அப்படி போய் மொதநாளே ஒரு படத்தை பார்த்துட்டு வந்து வேலை மெனக்கெட்டு
திட்டி எழுதணுமா?

ஆமா எழுதிதான் ஆகணும். எழுதாட்டி செத்துப்போயிருவோம். கைநடுக்கம் வரும்.
அம்பதுவருஷமா எங்களுக்கு கலைனா சினிமாதான். இசைனா சினிமா பாட்டுதான்.
சினிமா பாக்காட்டி தலைசுத்தும் வாமிட் வரும், யாரையாச்சும் போட்டு மிதிக்கணும்னு தோணும். அவ்ளோ அடிக்ட்டு.

************

எங்க நீ ஒரு படத்தை எடுத்து காமியேன்டா? உன்னால ஒரு ஷார்ட் பிலிமாச்சும்
எடுக்க முடியுமா? கரெக்டா ஒரு ஷாட் வைக்க முடியுமாடா? டே சினிமான்னா
என்னானு தெரியுமாடா உனக்கு?

சினிமான்னா என்னானு தெரிஞ்சவங்களுக்கு மட்டும்தான் நீங்க படம்
எடுக்கறீங்களா? அவங்களுக்கு மட்டும்தான் உங்க படத்தை காட்டுவீங்களா?

************

இதுமாதிரி விமர்சனம் எழுதி நேரத்தை வீணடிக்கறீயே இந்த நேரத்துல
நாட்டுக்கு எதாவது உருப்படியா நல்லது செய்யலாம்ல?

ஆமாங்க ராக்கெட் சைன்டிஸ்ட். நீங்க சொல்றது சரிதான். உண்மைதான். நாங்க
கூட உங்களாட்டம் இஸ்ரோவுல சேர்ந்துடலாம்னு நினைக்கிறோம்.
சேர்த்துவிடறீங்களாஜி.

*************

பெரிய அறிவுஜீவி ரோமம் என்று நினைப்பு, எல்லா படத்தையும்
குறைசொல்லுவாரு... நீயெல்லாம் விமர்சனம் எழுதலைனு யார் அழுதா?

எங்க பக்கத்துவீட்டு சீனுமாமா, எதிர்த்த வீட்டு கார்த்திகா ஆன்ட்டி,
அமெரிக்க அதிபர் ஒபாமா, நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி இவங்கள்லாம்
அழறாங்களே சார். நம்ம விமர்சனத்தை பாத்துட்டுதான் அவங்க படமே
பாக்குறாங்க. அதுக்காகதான் எழுதறோம். நாங்க விமர்சனம் எழுதாட்டி
அவங்கள்லாம் விஷத்தை குடிச்சிருவாங்க.

**************

படம் ரிலீஸாகி மொத ஷோ முடியறதுக்குள்ளயே இது கொரியன் படத்தோட காப்பி ஜப்பான் பட காப்பினு சொல்லி ஒரு படத்தோட வியாபாரத்தையே காலி பண்றிங்களே இது நியாயமா? தர்மமா? அடுக்குமா? எங்க காப்பி அடிச்சாங்கன்னு கண்டுபிடிக்கவே படம் பாப்பீங்களாடா நீங்க?

ஆமா அதுக்குதான் படம் பாக்குறோம். நிச்சயமா நாங்க பண்றது நியாயமில்லைதான். ஆனா இந்த ஈரவெங்கயாத்தையெல்லாம் ரைட்ஸ் வாங்காம காப்பியடிச்சி படமெடுக்குறானே அவன்கிட்ட போய் கேக்கறதுதானே இதையெல்லாம். திருட்டுப்பயலுகளுக்கு என்ன திரு வேண்டிகெடக்கு. அந்த ட்டுப்பயலுகள விட நாங்க பண்ணுறது பெரியதப்பாக்கும்.

***************

ஒரு படத்தை எவ்வளவு கஷ்டப்பட்டு ஒருத்தன் எடுக்குறான் தெரியுமா? எத்தனை வருஷத்து உழைப்பு தெரியுமா? உழைப்புக்காச்சும் மரியாதை குடுங்கடா?

முடியாதுடா. என்னமோ இந்தியாவுல சினிமாக்காரங்க மட்டும்தான் உழைக்கிறாங்களா? வேற எவனுமே உழைக்கறதில்லையா? நாங்க என்ன உழைக்காம உக்காந்தா திங்கறோம். ஒரு படத்தை தியேட்டர்ல போய் பாக்கறதுக்கே நாங்க எவ்ளோ உழைக்கிறோம்னு தெரியுமா? நாய் மாதிரி அலைஞ்சு திரிஞ்சு சம்பாரிச்ச ஒரு நாள் கூலிடா! அது நக்கிட்டு போச்சுனா கோவம் வராம கோக்கோகோலாவா வரும்.

******************

உங்களுக்கெல்லாம் ஒரு படத்தை உருப்படியா சரியான கண்ணோட்டத்தோட பாக்க தெரியல?

ஆமா, நீங்களே ஏன் டிக்கட்டோட இந்த படத்தை எப்படி பாக்கணும்னு ஒரு கோனார் நோட்ஸூம் குடுத்துட கூடாது.

*******************

இப்படி எழுதி எழுதி தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை உண்டாக்குறீங்களே இது நியாயமா?

இப்படி மொக்கைப்படமா எடுத்து எடுத்து அப்பாவி ஜனங்களை ஏமாத்தி ஏமாத்தி அவங்களோட கஷ்டபட்ட ஊதிய உழைப்பை சுரண்டி காசு
புடுங்கறீங்களே அதுமட்டும் நியாயமா?

***************

டேய் நீங்க விமர்சனம் எழுதிட்டா படம் ஃப்ளாப்பாகிடுமாடா.. ?

அப்புறம் என்ன சாமந்திப்பூவுக்கு நாங்க எழுதறத பாத்து கோவப்படறீங்க யுவர் ஆனர்.


****************

DISC : இது ஒரு கற்பனையான பேட்டி. இதில் கேள்விகேட்டவரும் பதில்சொன்னவரும் செவ்வாய் கிரகத்தில் வாழ்கிறார்கள்.

13 comments:

மெக்னேஷ் திருமுருகன் said...

சூப்பர் ! செம ! அருமை ! அற்புதம் ! இத அப்படியே எல்லா பதிவர்களும் தஞ்சாவ்வூர் கல்வெட்டுக் கணக்கா செத்துக்கி வச்சிக்கிட வேண்டியதுதான். எவனாச்சும் கேள்வி கேட்டா இத அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணிட வேண்டியதுதான் .

செம ராவடிணே உங்களோட !!!

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

அதிஷா .. பெண்கள் போடுகிற குழாயடி சண்டை மாதிரி இருக்கிறது இந்தப்பதிவு. ஹாஹாஹா

HAJA SHERIFF said...

nalla illai

Umesh Srinivasan said...

மிக ஜாலியான, அதே சமயம் செவிட்டில் அறைந்ததுபோல் இருந்தது. படம் நல்லாயிருந்தா தானா ஓடிடும், பப்படம்னா எந்த விமர்சனமும் அதை காப்பாத்தாதுன்றதுதான் உண்மை.

Raashid Ahamed said...

அய்யோ இது கற்பனையே இல்லை ! என் மனசுல எழுந்த கேள்வில பாதி இங்கே இருக்கு. மேலும் என்னை போல, விஜய், எஸ்ஜே சூர்யா, பவர்ஸ்டார், சாம் ஆண்டர்சன், ரித்தீஷ் குமார் போன்ற தலை சிறந்த ஹீரோக்கள் நடிச்ச படத்தை முதல் காட்சியிலேயே பார்க்கும் ரசிகர்கள் உங்க சட்டையை புடிச்சி கேட்க நினைச்ச கேள்விகளை தான் இங்கே அப்படியே எழுதி இருக்கீங்க !!

Paranitharan.k said...

ஹா....ஹா....:):)

Paranitharan.k said...

:):)

SK said...

திருட்டுப்பயலுகளுக்கு என்ன திரு வேண்டிகெடக்கு. - Athisha shot

Anonymous said...

Dedicated to Lingusamy Sir......

Seshoo

Muraleedharan U said...

"என்னமோ இந்தியாவுல சினிமாக்காரங்க மட்டும்தான் உழைக்கிறாங்களா? வேற எவனுமே உழைக்கறதில்லையா? நாங்க என்ன உழைக்காம உக்காந்தா திங்கறோம். ஒரு படத்தை தியேட்டர்ல போய் பாக்கறதுக்கே நாங்க எவ்ளோ உழைக்கிறோம்னு தெரியுமா? நாய் மாதிரி அலைஞ்சு திரிஞ்சு சம்பாரிச்ச ஒரு நாள் கூலிடா! அது நக்கிட்டு போச்சுனா கோவம் வராம கோக்கோகோலாவா வரும்." best of all

Unknown said...

திருட்டுப்பயலுகளுக்கு என்ன திரு வேண்டிகெடக்கு. அந்த ட்டுப்பயலுகள விட நாங்க பண்ணுறது பெரியதப்பாக்கும்//
Ha ha ha Sema !!!

Anonymous said...

Excellent...

Unknown said...

டேய் நீங்க விமர்சனம் எழுதிட்டா படம் ஃப்ளாப்பாகிடுமாடா.. ?

அப்புறம் என்ன சாமந்திப்பூவுக்கு நாங்க எழுதறத பாத்து கோவப்படறீங்க யுவர் ஆனர்.

The best