
நர்சிம் தெரிந்தோ தெரியாமலோ தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறார். தொடர் பதிவுகள் என்றாலே கொஞ்சம் அலர்ஜியான சமாச்சாரமாகத்தான் இருக்கும்! நர்சிம் மாதிரி மிகப்பெரிய ஆள் அழைக்கும் போது மறுக்க முடியாதே! அதனால் அவரை கலாய்ப்பது போல
பிடித்த பத்து - தினமும் அடிக்கும் கிங்ஸ் ஒரு பாக்கட்டில் இருக்கும் பத்து சிகரட்களும்
பிடிக்காத பத்து - அந்த பத்து சிகரட்களையும் பிடிப்பது பிடிக்காது...
என இரண்டு வரியில் பதிவை போட்டுவிட எண்ணியிருந்தேன்! இருந்தாலும் என்னை நானே எனக்கு பிடித்தவர்களை தெரிந்து கொள்ள இந்த பதிவு உதவும் போல் இருந்தது..
அதனால் இது!
1.அரசியல் தலைவர்
பிடித்தவர் : ஜெயலலிதா (ஈழத்தாய பிடிக்காம இருக்குமா!)
பிடிக்காதவர் : கலைஞர் (தமிழ்துரோகியாமே!)
2.எழுத்தாளர்
பிடித்தவர் : ராஜேஷ்குமார் ( எங்கூர்காரரு.. அதுவும் எங்க ஏரியா.. என்னையும் வாசிக்க வச்ச முதல் எழுத்தாளர்! )
பிடிக்காதவர் : சாரு ( புதிர்!)
3.பதிவர்
பிடித்தவர் : மணிகண்டன்
பிடிக்காதவர் : கே.ரவிஷங்கர் ( ஸ்ஸ்ப்பா விமர்சனத்தை நினைச்சாலே கதிகலங்குதப்பா!)
4.இயக்குனர்
பிடித்தவர் : ஏ.டி.ஜாய் ( ஷகிலாவை பிட்டுப்படங்களில் அறிமுகம் செய்த மகான்!)
பிடிக்காதவர் : ஜெய்.தே.வன் ( சமீப காலமாக எந்த பிட்டுப்படங்களும் எடுக்காததால் )
5.நடிகர்
பிடித்தவர் : விஜய் ( ஓகே ஓகே ஓகே கூல் டவுன் சிரிக்காதீங்கப்பா!)
பிடிக்காதவர் : அஜித் ( ஓகே ஓகே நோ டென்சன்!)
6.நடிகை
பிடித்தவர் : அன்றும் இன்றும் என்றும் மஞ்சுளா
பிடிக்காதவர் : திரிஷா ( மொக்கை ஃபிகர் )
7.இசையமைப்பாளர்
பிடித்தவர் : ஏ.ஆர்.ரஹ்மான்
பிடிக்காதவர் : யுவன்ஷங்கர்ராஜா
8.அரசு அதிகாரி
பிடித்தவர் : வெ.இறையன்பு
பிடிக்காதவர் : (பாஸ்)
9.விளையாட்டு வீரர்
பிடித்தவர் : திருநாவுக்கரசு குமரன் ( மறந்தீட்டீங்களோ.. )
பிடிக்காதவர் : அப்ரிதி
10.தொழிலதிபர்கள்
பிடித்தவர் : மல்லையா ( வாராவாரம் படியளக்குற தெய்வமாச்சே!)
பிடிக்காதவர் : அவரேதான்! ( குடி நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு! - அப்பாடா!
பதிவு கடைசில கருத்து சொல்லியாச்சு !)
மேலே இருக்கும் படத்துக்கும் பதிவுக்கும் என்ன தொடர்பு என யோசிப்பவரா நீங்கள்!
உடனடியாக என் அழைப்பை ஏற்று தொடர்பதிவை தொடரவும்..
நானும் நாலு பேர கூப்பிட்டு இந்த கொலைவெறிப் பணியை தொடர வேண்டும் என்பதனால்!
1.ஜ்யோவ்ராம் சுந்தர்
2.சுகுணா திவாகர்
3.ஆழியுரான்
4.முரளிக்கண்ணன்
5.பொட்டீக்கடை