என்னைப் பற்றி - ஒரு சிறு குறிப்பு

>> 05 February 2008

என்னைப்பற்றி :


இயற்ப்பெயர் வினோத் . தமிழில் வெளியாகும் ஒரு வாரப்பத்திரிக்கையில் நிருபர். பிறந்த வளர்ந்த ஊர் கோவை , கோட்டைமேடு . படித்தது கோவை மிக்கேல் மேல்நிலைப்பள்ளியில் . பட்டயபடிப்பு ராமகிருஷ்ணா பாலிடெகனிக் , துடியலூர் .

இப்போது பணி நிமித்தமாய் சென்னை , முகப்பேரில் தஞ்சம் .



பெயர்க்காரணம் :

என்னை நேரில் சந்திக்கும் பெரும்பாலனவர்கள் முதலில் கேட்கும் கேள்வி அது என்ன அதிஷா என்பதாகத்தான் இருக்கிறது .

அதிஷா என்பது ஒரு புத்தமத துறவியின் பெயர் . அதிஷா குறித்து நான் முதன்முதலில் படித்தது , ஓஷோவின் ஒரு புத்தகத்தில் (நாரதரின் பக்தி சூத்திரம் ) . எனக்குத் தெரிந்து அவரைப் பற்றி ஆங்கிலத்திலும் இந்திய மொழிகளிலும் புத்தகங்கள் மிகக்குறைவே. ஓஷோவை பின்பற்றுபவர்கள் மத்தியில் அவர் பிரபலம். ஓஷோ அவரைக்குறித்தும் அவரது தியான முறைகள் குறித்தும் பல அவரது பல புத்தகங்களிலும் குறிப்பிட்டிருக்கிறார். இவரும் புத்தரைப்போலவே அரசக்குடும்பத்தில் பிறந்து , பின் புத்தமதத்தை பின்பற்றி துறவியானார். அவர் பிறந்தது கி.பி.980 , மறைவு - கி.பி.1052 , அவர் பிறந்தது அன்றைய இந்தியாவோடு இணைந்திருந்த பெங்காலில் என்றாலும் , இப்போது அவ்விடம் பங்களாதேஷில் இணைந்திருக்கிறது. அவரது தியான முறைகள் தந்த்ரா(tantra) முறையை ஒத்த ஒன்று .

அவரது கோட்பாடுகள் புத்தரின் கடினமான வழியிலன்றி மிக எளிமையாய் தியானம் மற்றும் ஞானத்தை மக்களிடையே எடுத்துச்சென்றது. அதை இந்தியாவில் இருந்து வடக்காக பயணித்து செல்லும் வழியெங்கும் கற்ப்பித்தார். தனது வாழ்வில் கடைசி நாட்களில் மத்திய திபெத்தில் ஆஸ்ரமம் அமைத்து வாழ்ந்தார். தனது 72ஆம் வயதில் மறைந்தார். 1978ல் அவரது அஸ்தி திபெத்திலிருந்து பங்களாதேஷிற்கு எடுத்து வரப்பட்டு டாக்காவில் உள்ள மிகப்பிரபலமான தர்மராஜிகா புத்த விகார் என்னும் புத்த மடத்தில் வைக்கப்பட்டது . அவர் புத்தமதம் குறித்து 200க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார். அந்த புத்தகங்களே பிற்காலத்தில் சீனாவிலும் , அதைத்தாண்டியும் புத்தமதம் பரவ உதவியதாக கருதப்படுகிறது. அவர் பல சமஸ்கிருத புத்தகங்களை திபெத்திய மொழியில் மொழிபெயர்ப்பும் செய்திருக்கிறார். அதேபோல திபெத்திய மருத்துவமுறைகள் குறித்த புத்தகங்களும் எழுதியுள்ளார். அவர் தன் வாழ்நாளில் இயற்பியலிலும் தேர்ந்தவராக இருந்தது குறிப்பிடத்தக்கது. அவரைக்குறித்து மேலும் அறிந்துகொள்ள கீழ்க்காணும் புத்தகம் கிடைத்தால் படித்து தெரிந்து கொள்ளலாம். (அப்புத்தகம் கிடைத்தால் தெரிவிக்கவும் நானும் பல நாளாய் தேடி வருகிறேன் ) Lamp for the Path to Enlightenment, ரின்சென் .

அவர் குறித்தும் அவரது தியான அணுகுமுறைகள் குறித்தும் மேலும் அறிந்து கொள்ள ஆர்வமிருப்பின் என்னை தொடர்புக்கொள்ளலாம்.

எனது பதிவுகள் பற்றிய உங்களது விமர்சனங்களை எனக்கு மின்னஞ்சல் செய்யவும் என்னை தொடர்பு கொள்ளவும் dhoniv@gmail.com என்ற முகவரிக்கு மடலிடவும் .


அதிஷா

26 கருத்துக்கள்:

Abbas February 20, 2008 12:09 PM  

We will do that sir ;-)

முரளி March 17, 2008 1:12 PM  

Welcome to the Bloggers Group. All the best

Murali
- Junior Blogger :)

வெற்றி March 17, 2008 1:49 PM  

அதிஷா,
வாங்கோ! வாங்கோ!

உங்கடை வருகையால் தமிழ்மணம் மேலும் மெருகேறட்டும்.

வாழ்த்துக்கள்.

அதிஷா March 17, 2008 4:03 PM  

நன்றி வடுவூர் குமார், நன்றி சுல்தான் , நன்றி வெற்றி , நன்றி முரளி மற்றும் வருகை தந்த அனைவருக்கும் நன்றி

அதிஷா March 17, 2008 9:03 PM  

ந‌ன்றி காட்டாறு

VIKNESHWARAN August 13, 2008 1:19 PM  

அறிமுகம் ஓகே... அராஜகம் தாங்கல...

GND September 4, 2008 4:09 PM  

Hai Athisha,
Today ie. on 04/09/2008. I have been gone through your blog.
From 1985 onwards i am a regular reader of anantha vikadan.
The same [or more than that] style,
i seen in your blogs.
Very nice.
with regards,
Kumaran

cheena (சீனா) October 4, 2008 4:41 AM  

ஹரிணிக்கு நல்வாழ்த்துகள்

Raj,  November 4, 2008 8:39 AM  

அன்புடன் அதிஷா

நான் உங்கள் வலை பூ ரசிகன். தாங்கள் மிக நன்றாக எழுதி வருகிறீர்கள். எனக்கு பிடித்தவைகளில் திரை விமர்சனம் ஒன்று. நான் சொல்ல நினைப்பதை நீங்கள் அப்படியே பதிவு செய்வதால் எனக்கு மிகவும் பிடித்து உள்ளது. தமிழ் சினிமா மீது உள்ள என் கோபத்தை, அதன் அபத்தத்தை நன்றாக விமர்சித்து வருகீர்கள். தங்கள் பணி மேன் மேலும் தொடர வாழ்த்துக்கள்.

ஆதரவு மற்றும் அன்புடன்
ராஜ்

பெர்த், ஆஸ்திரேலியா

BLUESPACE அறிவுமணி, ஜெர்மனி January 17, 2009 5:41 AM  

Your writing style, way of handling and approching the things are very nice..

I am also from coimbatore,
(Saibaba Colony)..

Keep it up..
All the best..
Take Care..

Anonymous,  January 20, 2009 6:57 PM  

Hai Athisha,

I have gone through it, it was such a nice nice nice blog. I like your mokkai language. I will be your regular reader hereafter.
Kalakkara athisha.

Mathy Janani

A.Hari January 22, 2009 10:48 PM  

Great blog. Late start but great progress. Keep it up.

A.Hari

(Inspire Minds to Change Lives)
http://changeminds.wordpress.com/

Anonymous,  January 24, 2009 4:06 AM  

http://www.lamrim.com/hhdl/atishaslamp.html

mahendran January 27, 2009 8:45 PM  

அதிஷா ரைட்டிங் சூப்ப்ர்.நானும் சில நாட்களாக ஒரு BLOG எழுத முயற்சித்து வருகிறேன்.வழி தெரியவில்லை உதவுங்களேன்.mahe

Lakshmanan,  February 8, 2009 6:08 PM  

கோவை மனிதர்கள் குசும்பர்கள் என்பது உலகறிந்த (atleast ஊரறிந்த) விஷயம்...."நான் கடவுள்" சினிமாவின் விமர்சனத்தை பார்க்கும்போது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகிறது.

:)

"இது தமிழ்சினிமாவின் மைல்கல், பாறாங்கல், கருங்கல் என்றெல்லாம் சொல்ல இயலாது".

அப்படின்னா, பொங்கல்-னு சொல்லலாமா?

Senthil,  March 18, 2009 2:23 PM  

Hi Athisha,

I am following ur blogs since the last 6-7 months, its really good.... ur reviews, comedy stories all r good...

Especially i like the way u narrate and the importance u r giving to tamil. Good work

cheena (சீனா) September 17, 2009 11:05 PM  

இரு மடல்கள் அனுப்பினேன் - பதிலில்லையே

ராஷித்-சவூதி November 3, 2009 7:49 PM  

அதிஷா உங்களுக்குள்ள ஒரு பெரிய கலைஞன் ஒளிஞ்சிகிட்டிருக்கான்.
அவனை முழுசா வெளிய கொண்டு வாங்க.இந்த மாதிரி வலைப்பூவையெல்லாம் படிக்கும் போது மனசுக்கு ரொம்ப ரிலாக்ஸா இருக்கு.
நீங்க ரொ.....ம்......ப நல்லவரு போல தெரியுது.

பித்தன்,  April 1, 2010 8:05 PM  

முதலில் உங்களுடைய ப்ளாக்கில் ஜனநாயகத்தன்மையே இல்லை.பின்னோட்டங்களை நீங்கள் வாசித்து பிடித்தால் அனுமதி அளிப்பீற்கள் நல்ல பத்திரிக்கையாளர். வாழ்க ஜனநாயகம்

ekambavanan,  May 7, 2010 5:39 PM  

வினொத்,உங்கள் பிளாக் அருமை.வாழ்த்துக்கள்

Post a Comment

  © Blogger template Simple n' Sweet by Ourblogtemplates.com 2009

Back to TOP