05 February 2008

ஒரு வினாடி

ஒரு சிறிய‌ க‌தை :

ஜென் துற‌வி ஒருவ‌ரை தூக்கிலிட‌ உத்த‌ர‌விட்ட‌ அர‌ச‌ன், துற‌வியை நோக்கி "உன்க்கு இன்ன‌மும் 24 ம‌ணி நேர‌ம்தான் இருக்கிற‌து,நீ அதை எப்ப‌டி வாழ‌ விரும்புகிறாய் ? " என‌ கேட்டான். துற‌வி சிரித்து கொண்டே "எப்போதும் வாழ்வ‌து போல் நொடிக்கு நொடி , என்னை பொறுத்த‌வ‌ரையில் இந்த‌ க‌ண‌த்துக்கு மேல் எதுவும் கிடையாது , என‌வே என‌க்கு 24 ம‌ணி நேர‌மும் 24 வ‌ருட‌மும் ஒன்று தான், நான் எப்போதும் கணத்துக்குக் கணம் வாழ்ந்து வந்திருப்பதால் எனக்கு இந்தக் கணமே அதிகம் தான் , 24 மணி நேரம் என்பது மிக அதிகம் , இந்த ஒரு கணமே போதும்" என்றார்.

படித்தது : ஓஷோவின் எதிர்ப்பிலேயே வாழுங்கள்

இக்கதையை படித்தவுடன் இன்றைய நகர சூழலிலே இது போல் ஒரு நொடியேனும் நான் வாழ்கிறேனா? எனது தின அலுவல்களை ( சென்னையின் பெரும்பாலான மக்களின் அலுவல்களும் இது போன்றவயே ) சிந்தித்து பார்க்கையில் இது சாத்தியமா என எண்ணத்தோன்றியது.

13 comments:

jeevagv said...

கணத்துக்கு கணம் - இந்தக் கணத்தில் வாழ்வது - இது மிகவும் அழகான புத்த மதக் கோட்பாடு - ஜென்னில் எனக்குப் பிடித்தது.
இன்றைய சூழலில் முடியுமா? முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. நாம் முதலில் முயல்கிறோமா?
(எனக்கும் சேர்த்துத்தான்!)

Unknown said...

வாங்க ஜீவா , வருகைக்கு நன்றி

திவாண்ணா said...

உண்மைதான், நாம் பெரும்பாலும் இறந்தகால நிகழ்ச்சிகளை அசை போட்டு வருத்தம்/ கோபம் படுவதிலோ அல்லது எதிர்காலத்தைப் பற்றி anxiety யிலோ காலத்தை கழிக்கிறோம். பழகுவது சற்று கடினம்தான்.

Abbas said...

முடியாது.
இன்னும் வாழ இருக்கு ;)

goma said...

இந்த நாள் இனிய நாளாகக் கழிந்து இது போல் நாளையும் கழியும் என்று 24 மணி நேர நன்றி நவிலலில் ஓடிக் கொண்டிருந்த என்னை,ஒரு கணமென்ற, இக்கணமே அதிகம் என்ற வார்த்தை பொட்டென்று உச்சி மண்டையில் ஒரு தட்டு தட்டியது ....இனிமேல் 24 மணி நேரம் என்பதை 60 நிமிடங்களாக ஆக்கிக் கொள்கிறேன் கருத்தான கதைக்கு நன்றி

திவாண்ணா said...

//இனிமேல் 24 மணி நேரம் என்பதை 60 நிமிடங்களாக ஆக்கிக் கொள்கிறேன்//
ம்ம்ம்ம். அப்பவும் கணத்துக்கு வரலையே! பரவாயில்லை. முன்னேற்றம்தான்.

Unknown said...

நன்றி goma

வருகைக்கும் வாழ்த்துக்கும்

_____________________________
\\\
ம்ம்ம்ம். அப்பவும் கணத்துக்கு வரலையே! பரவாயில்லை. முன்னேற்றம்தான்.
\\\

திவா இது எந்த ஊரு குசும்பு

ராமலக்ஷ்மி said...

இக் கணத்தில் மட்டும் வாழும் கலை கற்று விட்டால் மனிதனுக்குக் கவலையேது. ஜீவா கேட்டிருப்பது போல //இன்றைய சூழலில் முடியுமா?//

தெரியவில்லை. பதிலும் அவரே சொல்லியிருக்கிறார்.
// முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.//
முயற்சிப்போமா?

சிந்திக்க வைக்கும் பதிவு!

rapp said...

இப்படி எல்லார்க்கும் தோணும்போது சில வித்தியாசமான விஷயங்களை செஞ்சீங்கன்னா மனசுக்கு தெம்பா இருக்கும். இந்த மாதிரி தோணுற சமயத்தில் நேரா வீட்டுக்கு வந்து ஒரு பேரரசு படத்த போட்டுப் பாருங்க, இல்ல என் ப்ளாக திறந்து படிங்க. அப்ப தானா உங்களுக்கு வாழ்க்கையில் ஒரு தெளிவான பார்வையும், உற்சாகமும் ஏற்படும்(பின்ன இவங்கெல்லாம் இப்படி இருக்கும்போது நாம ஏன் நம்பிக்கைய இழக்கணும்னு), இல்ல இதெல்லாம் பார்த்ததனால்தான் இந்த மாதிரி சோர்ந்து போறாங்கன்னா அப்ப ஏதாவது ஒரு குழந்தை(வடிவேலு ஜோக்ஸ்ல வர்ற மாதிரி இல்லைங்க) முகத்த பார்த்தா மனசு லேசாகிடும். உங்க பதிவை விட பெருசா பின்னூட்டம் போட்டுட்டேனா? பழக்க தோஷம் விட முடியல.

Unknown said...

\\ நேரா வீட்டுக்கு வந்து ஒரு பேரரசு படத்த போட்டுப் பாருங்க, இல்ல என் ப்ளாக திறந்து படிங்க. \\

இத விட ஈஸியா ஒரு வழிஇருக்கு
கடைக்கு போயி ஒரு பாட்டில் எலி விஷமுனு கேட்டா ஒரு மருந்து தருவாங்க அத குடிச்சிட்டு ஹாயா படுத்துக்கலாம்

\\
அப்ப ஏதாவது ஒரு குழந்தை(வடிவேலு ஜோக்ஸ்ல வர்ற மாதிரி இல்லைங்க) முகத்த பார்த்தா மனசு லேசாகிடும்.
\\

ஆஹா ஸ்ஸஸ்ஸஸப்பா
முடியல

\\
உங்க பதிவை விட பெருசா பின்னூட்டம் போட்டுட்டேனா? பழக்க தோஷம் விட முடியல.
\\

உலக வலைப்பதிவர்களில் முதல் முறையாக என் பதிவில் மிக நீளமான பின்னூட்டமிட்ட பின்னூட்ட பெருந்தகை பின்னூட்ட வள்ளல்
பின்னூட்டங்களில் பின்னி பினலெடுக்கும் எங்கள் குல சிங்கம் தமிழகத்தின் தங்கம் அக்கா ராப்புக்கு
என் நன்றிகள்

Unknown said...

\\
சிந்திக்க வைக்கும் பதிவு!
\\

மிக்க நன்றி
ராமலக்குமி
என் பழைய பதிவின் வருகைக்கும்
கருத்துக்கும்

PPattian said...

அட என்னங்க இந்த சின்ன வயசிலேயே ஜென் துறவி கதையெல்லாம் படிச்சிட்டு..

அவரு துறவி.. கணத்துக்கு கணம் வாழுவாரு.. நமக்கு காலையிலிருந்து நைட்டு வரைக்கும் பிக்கலும் பிடுங்கலும் பல ரூபத்தில வருது.. நோ வே.. :)))

திவாண்ணா said...

//திவா இது எந்த ஊரு குசும்பு //
குசும்பு எல்லாம் இல்லை அம்மா! சீரியஸாதான் எழுதினேன்.
யாராலும் வாழும் நேரத்தை உடனடியாக குறைத்துக்கொள்ள இயலாது. படிப்படியாகத்தான் குறைய வேண்டும். அந்த போகஸ் போய்விடக்கூடாது என்று எழுதினேன்.