21 May 2008

சென்னை வலைப்பதிவருங்க சந்திப்பு 18.05.2008

சென்னை வலைப்பதிவர் சந்திப்பு 18.05.2008


வலைப்பதிவருங்க சந்திப்பு சென்னைல நடக்கப்போறது எனக்கு 18ம் தேதி சாயங்காலம் வரைக்கும் தெரியாது , ஒரு வாரமா கொஞ்சம் வேலை அதனால தமிழ்மணம் பக்கமும் தல வைக்கல,சந்திப்பு மேட்டரும் தெரியாது , ஒரு நாலரை மணிக்கு பாலாண்ணாகிட்டருந்து கால் , தம்பி கிளம்பிட்டியானு !! எனக்கு டூமில்னு இருந்துச்சு !!! எங்கனு கேட்டா ............ சந்திப்பு , காந்தி சிலைங்கறாரு , நான் , அண்ணே என்னணே சொல்லவே இல்லனு சொன்னதும் ஒகே பரவால உடனே கிளம்பி வானுட்டாரு .



படபடனு கிளம்பி காந்தி சிலை போய் சேர மணி 6.30 , காந்திசிலை பின்னால போயி நம்மாளுங்களுக்கு வலை வீசினா யாரையும் காணோம் , ஒரு உருவத்த மட்டும் எங்கயோ பாத்த மாதிரி இருக்கேனு பக்கத்துல போயி பார்த்தா பாலாண்ணா!!!!!!!!! ஆள் அடையாளமே தெர்ல , தலைல ஒரு கேப் , மீசை ஆள் அடையாளமே தெர்ல , அண்ணேனு கூப்பிட்டு முகத்தப் பாத்தப் பிறகுதான் அடையாளமே தெரியுது . பாலாண்ணாப் பக்கத்துல ஒரு பொண்ண உக்கார வச்சு பேசிட்டுருந்தாரு , அப்புறம்தான் தெரிஞ்சுது அந்தப் பொண்ணு இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆளுனு , அண்ணன் ரொம்ப சீரியஸா எதோ பேசிட்டுருந்தாரு , நமக்குதான் சீரியசுனாலே புடிக்காதே , அப்டிக்கா அங்கருந்து ஜகா வாங்கினு ஜோதில கலக்கலாமுனு நம்ம சனங்கள தேடுறேன் யாருமே தெரிஞ்ச முகமாவே இல்ல , இன்னாடாது பேஜாராகீதேனு சுத்தும் முத்தும் பாத்தா நம்ம மு.க !!!!!!!

'' மு.க'' னா '' மு.கருணாநிதி '' ஐயா இல்லீங்கோ நம்ம வலைக்கலைஞர் முரளிகண்ணன்ங்க , அடடா நம்மாளுனு மனசு மஜாவாய்டுச்சி .
அவருகிட்ட கொஞ்ச நேரம் பேசிகிட்டே லெப்டுல பாக்கறேன் அமைதியே உருவாய் அஜித்க்குமார் மாதிரி டீக்கா நம்மாளு டோண்டு சார் ( அப்பாடா அஜித்த பழி வாங்கியாச்சு!!!!!!! ;-) ) அவருக்கு ஒரு நமஸ்காரத்த வச்சிட்டு ,அவரோட கொஞ்ச நேரம் அளவளாவிட்டு , மறுபடியும் நம்ம முக கிட்ட அவால்லாம் யாருனு கேட்டேன் .



அவரு , விழா நாயகர் கோ.க ( கோவிகண்ணன்) ( அவருக்காகதான் இந்த சந்திப்புனு சொல்லிக்கிட்டாங்க ஆனா அவரு அப்பிராணி மாதிரி '' சிவனேனு '' உக்காந்திருந்தாரு ) அவரு நண்பர், தருமி ஐயா , வளர்மதி , MPசுந்தர் , லிவிங் ஸ்மைல் வித்யா , டாக்டர் புருணோ அப்புறம் சின்னதுரை இன்னும் ரெண்டு,மூனு பேரோட பேரு மறந்திறுச்சு , ( மன்னித்தறுளவும் ) .
கோ.க அவங்கூரு சாக்லேட் குடுத்தாரு , நம்ம வலைப்பதிவுங்க மாதிரியே இருந்துச்சு ( வாயிலப் போட்டதும் கரைஞ்சிருச்சு ) , ஜ்யோவ்ராம் சாரும் அதியமான் அண்ணாவும் வளர்மதி சாரும் சீரியஸா எதோ பேசிட்டுருந்தாங்க ( ஆஹா மறுபடியும் சீரியஸா !!!!!!!!!!) உடனே அங்கருந்து எஸ் ஆகி லக்கிய கூட்டிக்கிட்டு தம் கட்ட கிளம்பினேன் .
ஒரு தங்கராசா வடிகட்டிய பத்த வச்சுகிட்டு அவரு ஆச பட்ட மாதிரி மானவாரியா மொக்க போட்டாலும் ம்ம்ம்ம் ஆளு அசரலயே ( ஆனாலும் லக்கி நீங்க ரொம்பபபபப நல்ல்ல்ல்ல்லவருயா ) .


அந்த இந்தியன் எக்ஸ்பிரஸ்ப் பொண்ணு எல்லாரையும் வளைச்சு வளைச்சு பேட்டி எடுத்துட்டுருந்துச்சு . நான் வரதுக்கு முன்னாடியே போட்டோ எடுத்தாங்களாம் . ( ச்சே கொஞ்சம் சீக்கிரம் வந்துருக்கலாமோனு தோணுச்சு ), இதுபோக எல்லாரும் பல மேட்டருங்க ( சீரியஸா ) விவாதிச்சுகிட்டாங்க .


நான் ரொம்ப எதிர்பார்த்தது உண்மைத்தமிழன் அண்ணாவதான் அவரு கடைசி வர வரல . மணி 8 ஆயிருச்சு , வானம் வேற 10 பின்நவீனத்துவப் பதிவுகள ஒன்னா படிச்ச மாதிரி மாமாங்கமா இருட்டுகட்டிருந்துச்சு , எதோ ஒரு குரல் சபை கலையலாம்னதும் , அலைகடலென வந்த பதிவர் கூட்டம் கலைய ஆரம்பிச்சுது .



நான் , பாலா, வித்யா, புருனோ, சின்னதுரை , முக , லக்கி எல்லாருமா சேர்ந்து பதிவர் பார்ட்டிக்காக " the light house tea stall "ல் சங்கமமானோம் , அங்கே அனைவருக்கும் தடபுடலாக தேநீர் விருந்து தரப்பட்டது . இப்படியாக இந்த பதிவர் சந்திப்பு இனிதே நிறைவடைந்தது .

இதுபோன்றப் பதிவர் சந்திப்புகளை அடிக்கடி(மாதமொருமுறை) நடத்தினால் என் போன்ற புதிய பதிவர்களுக்கு ஒரு நல்ல motivation ஆக இருக்கும் . அதுமட்டுமல்லாது இம்முறை பல மூத்தப்பதிவர்களை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது . இம்மகிழ்ச்சியான சந்திப்பை ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றிகள் .








8 comments:

வால்பையன் said...

உங்க பேர பார்த்து நீங்க ஒரு பொண்ணுன்னு நான் நினைச்சிகிட்டு இருந்தேன்.
இப்படி என் நினைப்புல பீச் மண்ணள்ளி போட்டுடிங்க்களே

வால்பையன்

முரளிகண்ணன் said...

\\நம்ம வலைக்கலைஞர் முரளிகண்ணன்ங்க \\
தம்பி இதெல்லாம் ரெம்ப ஓவர்

இந்த விளம்பரம் நமக்கு தேவையா?

முரளிகண்ணன் said...

\\கோ.க அவங்கூரு சாக்லேட் குடுத்தாரு , நம்ம வலைப்பதிவுங்க மாதிரியே இருந்துச்சு ( வாயிலப் போட்டதும் கரைஞ்சிருச்சு )\\

ஏங்க வலைப்பதிவ பிரிண்ட் அவுட் எடுத்து எப்ப சாப்பிட்டீங்க?

அதிஷா said...

// உங்க பேர பார்த்து நீங்க ஒரு பொண்ணுன்னு நான் நினைச்சிகிட்டு இருந்தேன்.
இப்படி என் நினைப்புல பீச் மண்ணள்ளி போட்டுடிங்க்களே //

இப்படிதாங்க பல பேரு ஏமாந்துட்றாங்க.....

எதோ நம்மால முடிஞ்சது ;-))

அதிஷா said...

//
தம்பி இதெல்லாம் ரெம்ப ஓவர்

இந்த விளம்பரம் நமக்கு தேவையா?
//

அண்ணா இது வெறும் டிரெய்லர்தான்....

லக்கிலுக் said...

ஆளாளுக்கு பட்டையை கிளப்புறாங்களே? ஒரு சின்ன கிசுகிசு...

அடுத்த சந்திப்பு அதிமுக்கிய நபர்களோடு இருக்கலாம் :-)

அதிஷா said...

//அடுத்த சந்திப்பு அதிமுக்கிய நபர்களோடு இருக்கலாம் :-)
//

என்ன அதிமுக நபர்களோடயா!!!!!!!!!!

அதிஷா said...

//

ஏங்க வலைப்பதிவ பிரிண்ட் அவுட் எடுத்து எப்ப சாப்பிட்டீங்க?

//
ஹி ஹி

There was an error in this gadget