07 June 2008

பஞ்ச பூதம் ; சரியான தமிழ் வார்த்தை தேவை


பஞ்சபூதம் ,( நீர்,நெருப்பு,ஆகாயம்,காற்று,நிலம்) நான் சிறு வயதிலிருந்தே இது தமிழ் வார்த்தை என எண்ணியிருந்தேன் . ஏன் நம் பள்ளி பாட புத்தகங்களில் கூட பஞ்சபூதம் என்ற சொல்லாடலையே பயன்படுத்துகிறோம் .
சமீபத்தில் தான் இது ஒரு சமஸ்கிருத சொல்லென கேள்விப்பட்டேன் . சரி இதற்கு தமிழில் என்னசொல் எனத் தேடியதில் கண்டுபிடிக்க இயலவில்லை .
சிலபல தமிழ் அறிஞர்களிடமும் பதிலில்லை .

அதனால் சான்றோர்கள் அணிவகுக்கும் நம் வலையுலகில் என் சந்தேகத்தை எடுத்து வந்துள்ளேன் . அது தவிர தமிழில் புதிய வார்த்தைகள் பற்றிய ஒரு விவாதமாகவும் இது அமையலாம்.

பஞ்சபூதத்தின் சரியான வார்த்தையை அறிய தமிழர்க்கு உதவுங்கள் ,


தங்கள் பேருதவிக்கு மிக்க நன்றி .

10 comments:

இராம.கி said...

ஐம்பூதம் என்றே சொல்லலாம்.

ஐம்பூதம் பற்றிப் பேசும் தமிழ்ப் பாக்கள் சங்க காலத்தில் இருந்து உண்டு. புறநானூற்றின் இரண்டாம் பாட்டே ஐம்பூதக் கொள்கை பற்றிப் பேசும். தொல்காப்பியத்திலும் உண்டு. ஐம்பூதம் பற்றிப் பேசும் உலகாய்தம் தமிழ் மண்ணில் எழுந்த கோட்பாடு. நம்முடைய மெய்யியற் பின்புலம் மிக ஆழமானது. இந்திய மெய்யியல் வளர்ச்சியில் தமிழரின் பங்கு ஆழ்ந்து போற்றப் படுவது.

பூதம் என்பது முற்றிலும் தமிழே. அதைச் சங்கதச் சொல் என்று பலரும் தவறாக எண்ணிக் கொள்கிறார்கள். கீழே குறித்துள்ள என் வலைப்பதிவு இடுகைகளைப் படியுங்கள்.

http://valavu.blogspot.com/2005/04/physics-1.html
http://valavu.blogspot.com/2005/04/physics-2.html
http://valavu.blogspot.com/2005/04/physics-3.html
http://valavu.blogspot.com/2005/04/physics-4.html

அன்புடன்,
இராம.கி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஐம்பூதம்ன்னு சொல்லவந்தேன்.. அதற்குள் பதில் வந்துவிட்டது இராம.கி அவர்களிடம் இருந்து.. :)
திண்ணைப்பற்றிய தொடர் பதிவு எழுதுங்கள் அதிஷா.. உங்களை அழைத்திருக்கேன்..

முரளிகண்ணன் said...

20 20 ல கவாஸ்கருக்கு என்ன வேலை?
நான் வர்றேன்

முரளிகண்ணன் said...

அய்யோ பாவம்

வசந்தத்தின் தூதுவன் said...

தமிழ் சொல்லை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி..
"வார்த்தை" என்றால் தமிழில் "சொல்" தானே. :)

மல்லிகை said...

ஐம்பூதங்கள் என்பது நல்ல தமிழ்ச்சொல்லே.
நான் வலைப்பதிவுக்குப் புதியவள்.
பதிவிலிடமுன்னே பலர் பதில் தந்து விட்டனர்.
நன்றி

Unknown said...

தங்கள் இடுகைகளைப்படித்தேன்,

நன்றி இராம.கி சார்

சந்தேகத்தை தெளிய வைத்தமைக்கும் வருகைக்கும்

Osai Chella said...

அதென்ன பேய் பூதங்களுக்கெல்லாம் தமிழில் பெயர் தேடிக்கிட்டு! அதுவும் இணையக் காலத்தில் தட்டியெடுத்துக்கொண்டு இருக்கையில்!! நீர், நெருப்பு, நிலம், காற்று, ஆகாயம் எல்லாம் பழங்கதை சாமி!

காற்றில் ஆக்சிஜன் இருக்கு... ஆக்சிஜனில் நெருப்பு இருக்கு..
நிலத்தில் சிலிக்கன் டைஆக்சைடு இருக்கு...
ஆகாயத்தில் ஆங்காங்கே ஹைடிரஜன் இருக்கு.. ஆக்சிஜனும் ஹைடிரஜனும் சேர்ந்து எரிந்து காரோட்டினால் புகைக்குப் பதில் நீர் உருவாகும் நு எழுதாம.. இப்படி ஐம்பூதம், மாத்ருபூதம்னு ஆராய்ச்சி பண்ணி பண்ணியே ”படித்தது தமிழ்” படம் எடுக்கிற நிலைமைக்கு வந்தாச்சு!! என்னமோ போங்க... ஊதுர சங்கை ஊதிவிட்டேன்!

இராம.கி said...

அன்பிற்குரிய ஓசை செல்லாவுக்கு,

உலகத்தை வெறுமனே ஒற்றைப் பரிமாற்றத்திலும் பார்க்க முடியாது. நாம் வந்த வரலாறு அறியாமல் இருந்தால், அதைப் பழங்கதை என்று தூக்கி எறிந்தால், நம் நாட்டு எதிர்காலம் குட்டிச்சுவராய்த் தான் போகும். (இப்படி ஒற்றைப் பரிமாணத்தில் பயணம் செய்து, படிப்பு, கலை, இலக்கியம், வரலாறு எனப் பல ஆவணங்களை, ஒரு பத்தாண்டில் தொலைத்த சீனப் பண்பாட்டு புரட்சி பற்றிப் படித்திருக்கிறீர்களா நண்பரே! )

அறிவியல் வரலாற்றில் ஐம்பூதம் என்பது உலகாய்தத்தின் தொடக்க காலச் சிந்தனை. அந்த ஐம்பூதச் சிந்தனை என்னும் படிக் கல்லில் இருந்து முன்னேறித்தான் இந்தக் கால எளிமங்கள் (elements), மூலக்கூறுகள், வேதியல், அணுவியல் பற்றிய உயர்சிந்தனை எழுந்தது. நீங்கள் சொல்லும் நீரகம் (hydrogen), அஃககம் (oxygen) எல்லாம் அப்படிக் கண்டவைதான். (அஃககத்திற்குள் நெருப்புக் கிடையாது. நெருப்பிற்கு அஃககம் வேண்டும்.)

நாகரிகன் என்பவன் திடீரென்று வானத்தில் இருந்து குதிக்க முடியாது. விலங்காண்டி நிலையில் இருந்துதான் கொஞ்சம் கொஞ்சமாய்ப் போராட்டத்தின் வாயிலாய் நாகரிகம் எழுந்தது. ஐம்பூதச் சிந்தனையை எள்ளாடுவது, நாகரிகன் விலங்காண்டியை எள்ளாடுவது போல. மிக எளிதானது; ஆனால் முட்டாள் தனமானது. தாத்தனைக் குறைகூறிப் பெயரனை வளர்த்தெடுக்க முடியாது.

நான் எழுதிக் கொண்டே போகலாம். அறிவியலும், நுட்பியலும் தமிழருக்கும், தமிழுக்கும், எவ்வளவு தேவையோ, அவ்வளவு தேவை வரலாறும், மெய்யியலும். அவற்றைப் பழிப்பது கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்குவது போலவே உணரப் படும்.

தொடக்க கால அறிவியலும் அதற்கான மெய்யியலும் தமிழரிடையே எப்படி இருந்தன என்று அறிவது மிகவும் தேவையான ஓர் ஆய்வே. ஐம்பூதம் பற்றிய சிந்தனையும், அவற்றில் தமிழரின் பங்களிப்பும் பலருக்கும் உணர்த்தப் படவேண்டியவையே!. இந்தியத் துணைக் கண்டத்தில் அறிவியலுக்கு உந்து ஆற்றாலாய் இருந்த உலகாய்தம் தமிழ்க் குமுகாயத்திலே தான் ஆழ்ந்து ஆயப்பட்டது. இதைப் படிக்க வடக்கில் இருந்து பலரும் வந்திருக்கிறார்கள். இதைப் பல்வேறு அறிஞர்களும் உறுதி செய்திருக்கிறார்கள்.

பெரியாரைத் துணைக்கொள்ளும் அன்பர்கள் நாம் வந்த வழியை அறியாது இருந்தால், அதைப் பழங்கதை என்று பழித்தால், எப்படி? (அதுவும் பிசாசு மொழி பற்றிய செய்திகளை எல்லாம் தேடியெடுத்து ஒன்றாக்கி ஒருகாலத்திற் பதிவு போட்டவரா இப்படிப் பேசுவது?)

பெரியாரியத்தின் முதல் பாடமே "படி, தெரிந்து கொள், சிந்தனை செய், கேள்வி கேள்; பகுத்து அறி, நான் சொன்னேன் என்று ஏற்றுக் கொள்ளாதே" என்பது தான்.

அன்புடன்,
இராம.கி.

kumqrqsamy naavalantheevu @gmail.com said...

மொழி என்றால் அதை ஒருவருடன் ஒருவர் பேச வேண்டும் ஆனானப்பட்ட காளிதாசனாலேயே தனது கதாப்பாத்திரங்களை சமஸ்கிருதத்தில் பேச வைக்க முடியவில்லை. மொழியை மக்கள் உருவாக்கினார்கள். சமஸ்கிருதத்தை தேர்ந்தெடுத்த ஒருசிலர் உருவாக் கினார்கள். அதனால்தான் அவர்கள் வர்க்க எழுத்துக்களையும் உருவாக்கினார்கள். அம்பேத்கார் கருத்துப்படி அன்று நாவலன் தீவு முழுவதும் - இந்தியா முழுவதும் - தமிழ் மொழிதான் இருந்தது. அம்மொழியின் கட்டமைப்பு - இலக்கணம் - படி குறில் எ, ஒ, எழுத்துக்கள் புள்ளி பெற்று குறிலாகவும் புள்ளி இன்றி நெடிலாகவும் புழங்கியது. அந்த நுட்பம் புரியாத்தால் சமஸ்கிருதம் குறில் எ,ஒ எழுத்துக்கள் இல்லாமல்தான் இன்றும் இருக்கிறது. மூன்றாவது கிந்தியான நமது தேசிய மொழியும் குறில் எ,ஒ இல்லாமல்தான் இருக்கிறது. இந்த காரணத்தால்தான் தேசிய மொழியான மூன்றாவது கிந்தியால் ஒடிசா மாநிலத்தின் பெயரை உடிசா என்று எழுதுகிறது.இந்த லட்சணத்தில்தான் அவர்கள் சமஸ்கிருத எழுத்துக்களில் இருந்து தமிழ் எழுத்துக்கள் உருவான கதையைச் சொல்கிறார்கள். இனி பஞ்சபூதம் தமிழில் பஞ்சபூதம், சிறுபஞ்சமூலம் முதலிய சொற்கள் புழங்கக்காரணம் அவை பழந்தமிழ் சொற்கள் என்பதால்தான். இதனால்தான் தமிழில் நிகண்டுகள் உருவானது. ஒரு வாழும் மொழிக்கு இவைகள் தேவை என்பதால்தான். தமிழ் இன்று நாவந்தீவின் ஒரு சிறு பகுதிக்குள் முடங்கி விட்டதால் நீங்கள் குழம்பக்கூடாது. தமிழில் மட்டும்தான் அங்கே, அவ்விடம், அந்தண்ணடை, அங்கன,அங்கிட்டு என்று சொற்கள் உள்ளன. ஆனாலும் அது இது உது என்பதில் உள்ள உது இன்று யாழ்பாணத்தில் மட்டுமே புழக்கத்தில் இருக்கிறது. சமஸ்கிருத ஆதரவாளர்கள் சொல்வது போல நாவலந்தீவின் மொத்த அறிவையும் சமஸ்கிருதம் தன்னுள் வைத்துள்ளது என்பது சரியல்ல. ஒருவேளை தமிழ் மொழியில் இருக்கலாம்.