17 July 2008

அரசு மருத்துவமனை சுகாதாரம் - Dr.புருனோவின் கேள்விகளும் சில சிந்தனைகளும்


மருத்துவர் புருனோ தனது பதிவில் அரசு மருத்துவமனைகளின் சுகாதரத்தின் ஆணிவேர்கள் குறித்து சிலபல கேள்விகளை தனது (அரசு மருத்துவமனைகள் சுகாதாரம் இல்லாமல் இருப்பதற்கு யார் காரணம் ) பதிவில் வினவியிருந்தார் . அத்தனை கேள்விகளும் அற்புதமானவை . நம்மை (அதாவது நம்மை போன்ற சராசரி மக்களை சிந்திக்க செய்வது ) . சரி ஒரு சராசரி பாமரனாய் அக்கேள்விகளுக்கு நாமும் பதிலளிக்க முயல்வோம் .

கேள்வி .1 : அரசு மருத்துவமனை சுவரில் வெற்றிலை துப்புவது யார் – மருத்துவரா, இல்லை அங்கு வரும் நீங்களா (நீங்கள் என்பது மங்களூர் சிவா ஒருவரை மட்டும் அல்ல, அனைத்து பொதுமக்களையும் தான்) ?

நல்லா கேட்டிங்க சார் கேள்வி , அரசு மருத்துவமனைக்கு வருவது மென்பொருள் துறையில் பணிபுரியும் சீமான்களோ , படித்து பட்டம் பெற்ற கணவான்களோ , மக்கள் ஒட்டை தேவையான அளவு வாங்கி கொண்டு ஆட்சி செய்யும் மந்திரிகளோ அல்லர் . (மேற் சொன்ன யாராவது நீங்கள் சொல்லும் மாடுகளும் பன்றிகளும் மேயும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்றதற்கான ஆதாரமிருந்தால் மன்னிக்கவும் , தற்குறி பாமரனுக்கு அவ்வளவுதான் அறிவு என்பதை ஒத்து கொள்கிறேன் )

அங்கே வரவன்லாம் காட்டில் ( வயலில் ) வேலை செய்றவன் , கக்கூஸ் கழுவறவன் , சாக்கடை சுத்தம் செய்பவன் , சேரியில் வாழற படிப்பறிவுல்லாத தற்குறிகள் , வரவன் பூரா காட்டு பயலுக ,( அவன் நம்மை போல சுகாதாரம் பற்றி படித்து தெரிந்தவனில்லை ) அவர்கள்தான் இந்த பாழாய் போன அரசு மருத்துவ மனைகளுக்கு வருவது . அவர்களிடம் நீங்கள் எதிர் பார்க்கும் சுகாதாரம் இருக்காதுதான் . ஒத்துகொள்கிறேன் , அவனுக்கு என்ன தெரியும் ஹைஜீன் பற்றி .

அவன்தான் அப்படி இருக்கிறான் படிக்காத தற்குறி பயபுள்ள .

அரசுமருத்துவமனைகளில் பணியிலுருக்கும் எத்தனை துப்புரவு ஊழியர்கள் சரியாக பணியாற்றுகின்றனர் . அட அரசு மருத்துவமனை சுவர்கள் எத்தனை வருடங்களுக்கு ஒரு முறை வெள்ளளையடிக்க படுகின்றன , எனக்கு தெரிந்தவரை அப்படி ஒன்று இருப்பதாக தெரியவில்லை . துப்புரவு தொழிலாளர்களை கண்கானிப்பது யார் , கண்காணிப்பாளர் சரியாக இருந்தால் அரசு மருத்துவமனைகள் நிச்சயம் சுத்தமாகத்தான் இருக்கும் . அங்கே தினமும் சரியான நேரத்திற்கு வேலைக்கு போகும் மருத்துவர்களாவது இந்த அசுத்தங்களை சுத்தம் செய்ய சொல்லலாமல்லவா .

அரசு மருத்துவமனைகளுக்கு வரும் மக்களுக்கு , மருத்துவமனைகளில் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டுமென அறிவுருத்த வேண்டியது யார் கடமை . ( ஏன்னா வரவன் பூரா காட்டு பயலுக ,அவன் நம்மளாட்டம் படிக்கல அதான் )

கேள்வி 2 : அரசு மருத்துவமனை படிக்கட்டில் பாதி இட்லியையும் மீதி சட்னியையும் வீசுவது யார் – செவிலியரா அல்லது நீங்களா ?

நாங்கதான் சாமி , அது நாங்களேதான் . சரிங்க சாமி நாங்கதான் பேஸன்ட்டுக்கு துணையா வந்தா எங்களுக்கு தங்கதான் இடங்கொடுக்கல ( நாங்க எங்க 5 நட்சத்தி ஒட்டல்லயா சாமி தங்க , அப்புறம் சோறு திங்க ) திங்கவாவது இடங்கொடுக்கலாம்ல சாமி ,ஒதுக்கு புறமா . சாப்பிடற இடத்த சுத்தமா வச்சிக்க எங்களுக்கு தெரியலனா என்ன உங்காளுங்க தான் ஷிப்ட்டு போட்டு சுத்தம் பண்றாங்கள்ள (படிச்சவங்க ) சுத்தம் பண்ண வேணாம் , குறஞ்சது சொல்லலாம்ல இப்படி அசுத்தம் பண்ண வேணாமுன்னு .

கேள்வி 3 : ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தினுள் மாடு, பன்றி மேய்ப்பது – ஆய்வக நுட்பனரா அல்லது நீங்களா ??? அதை தடுக்கும் மருத்துவ அலுவலரிடம் அந்த பகுதி அரசியல்வாதி மூலம் பேசுவது மருந்தாளுனரா அல்லது நீங்களா ??

யாருங்க அத உள்ள விட்டது , உங்காஸ்பத்திரில செவிலியர்கள் , வாட்ச்மேன்கள்ளாம் இல்லையா . காசு குடுத்தா மாடு என்ன மாடர்னா என்ன வேணா பண்ணலாம்ங்க ஆஸ்பத்திரியில . அது சரி ஆரம்ப சுகாதார நிலையத்தில யாரு விவசாயம் பண்ண ஆரம்பிச்சா மாடு அங்கன வந்து மேய ( மாடு அங்க வந்து மேஞ்சு என்னத்த திங்க போவுது வீணாபோன சிரிஞ்சியும் , பஞ்சையுமா? ) . பன்றி மேயுதுனா அதுக்கு காரணம் உங்க துப்புரவாளர்களின் துப்பில்லாத தனம்தான் . ஏன்னா பன்றிகள் எங்க மேயும்னு உங்களுக்கே தெரியும் .

அப்புறம் இதுக்கு போயி அரசியல்வாதிய விட்டு மிரட்டுறதா சொல்றத கேட்டா , சிரிப்புதான் வருது , ஐயா மாடு மேய்க்கிற பயலுக்கு அதெல்லாமா தெரியும் , அப்படியே அது போன்ற விசயத்துக்கெல்லாம் ஒரு அரசியல்வாதி வருவரா ( ஒரு வேளை அது அப்போலோல வைத்தியம் பாக்கற , பண்ணையார் மாடா இருக்கும் , அவருக்கென்ன அவரும் உங்களாட்டம்தான் )

கேள்வி 4 : மருத்துவமனை என்று மட்டும் அல்ல ஏறத்தாழ அனைத்து அரசு அலுவலகங்களும் இப்படி இருக்க காரணம் அரசு ஊழியர்களா, நீங்களா ??

ஆமாமா , அந்த அரசு அலுவலகங்கள்ல்லாம் சுண்ணாம்ப பார்த்து எத்தனை வருஸமாச்சுனு அந்த சுவருக்கும் ஆண்டவனுக்கும் தான் தெரியும் . அதே மாதிரி வெத்தலை பாக்கு போடற அரசு அலுவலர்னு யாருமே இல்ல , இதுக்கு காரணமும் மக்கள்தான் ஒத்துக்கறோம்ங்க.

கேள்வி 5 : கலவரத்தில் விவேகம் பேரூந்து, கே.பி.எண் எல்லாம் பத்திரமாக போகும் போது அரசு பேரூந்து மட்டும் உடைவதற்கு காரணம் போக்குவரத்து துறையா, பொது மக்களா.???

முதலில் ஒன்றை தெளிவு படுத்துங்கள் , கலவரம் செய்வது பொதுமக்களா? , பஸ்ஸை உடைப்பது பொதுமக்களா??

பொதுமக்கள் என நீங்கள் கூறுவது ஒட்டு மொத்த சமூகத்தையும் சேர்த்துதான் என்பது உங்கள் வாதமாக இருப்பின் , கலவரம் செய்வது மருத்துவர்கள்தான் என்பது என் வாதம் ( மருத்துவர்களும் இச்சமூகத்தின் ஒரு பகுதியன்றோ )

நீங்கள் சொல்லும் கேபிஎன் ம் விவேகமும் எத்தனை பேருந்துகளை இயக்குகின்றன??, அதில் எத்தனை பேருந்துகள் கலவரம் நடக்கும் பகல் வேளையில் இயங்குகின்றன??

பாவங்க பொதுமக்கள் அரசாங்கம் எவ்வளவுதான் கட்டணத்த உயர்த்தினாலும் பேசாம கேக்கறத குடுத்துட்டு பயணிக்கிறான்

கலவரம் பண்ற படிக்காத பாமரனை கலவரத்திற்கு தூண்டிவுடுவது நம்மை போன்ற படித்தவர்கள் தானே . WE THE PEOPLE .

இந்த பிரச்சையில் ஒட்டு மொத்தமாய் பொதுமக்கள் மீது குற்றம் சுமத்தியாதாலேயே இந்த விளக்கம் , அதற்காக மக்கள் எந்த தவரும் செய்யவில்லை என நான் சப்பைகட்டு கட்டவில்லை , அதில் மக்களின் பங்கு அதிகமே , ஆனால் சரியான ஊழியர்களும் , தக்க மேலாண்மையும் ( தனியார் மருத்துவமனைகளில் உள்ளது போல ) , அரசின் நிதியும் ,இருந்தால் இந்த பிரச்சனை இருக்கவே இருக்காது . மக்களுக்கு மருத்துவ மனை சுகாதாரம் குறித்த அறிவை அதிகப்படுத்தினாலே போதும் ஓரளவு பிரச்சனை குறையும் . அதிகமான அளவு மக்கள் குவியும் அதுவும் பாமர மக்கள் வரும் இடங்களில் அதிகமான உருப்படியான துப்புரவு தொழிலாளர்களை நியமித்து அவர்கள் சரியாக இயங்கினாலே போதும் அரசு மருத்துவமனைகள் இந்தரலோகம் போல ஜொலிக்கும் .

அதில் மருத்துவர்களின் பங்கு மிகச்சிறியதே , அதனால் அந்த பிரச்சனையில் அவர்களை சாடுவது அர்த்தமற்றது . அவர்களால் இயன்றது இது போன்ற பிரச்சனைகளில் தலையிட்டு அரசிடம் இது குறித்து முறையிடலாம் . ( போராட்டம் வேண்டாம் , பிறகு தடியடி போன்றவைகளை சந்திக்க நேரிடலாம் )

அரசு மருத்துவமனைகளின் துப்புரவு பணிகளை தனியாரிடம் ஒப்படைத்தால் கூட நல்ல பலன் கிடைக்கும் என்பது அடியேனின் கருத்து .

24 comments:

மங்களூர் சிவா said...

மொக்கை மன்னன் ஆதிஷா நீயா எழுதினது இது!?!?

மங்களூர் சிவா said...

நல்ல பதிவு. திரும்ப இன்னொரு தடவை படிச்சிட்டு வரேன்.

சென்ஷி said...

:))

மங்களூர் சிவா முதல் கமெண்டுக்கு ரிப்பீட்டே :))

புருனோ Bruno said...

//அவர்களிடம் நீங்கள் எதிர் பார்க்கும் சுகாதாரம் இருக்காதுதான் . ஒத்துகொள்கிறேன் , அவனுக்கு என்ன தெரியும் ஹைஜீன் பற்றி .//

நீங்கள் சொல்லும் எல்லாரும் அவர்களின் வீட்டில் இது போல் தான் எச்சில் / வெற்றிலை துப்புவார்கள் , அவர்கள் வீட்டு நடுக்கூடத்தில் பாதி இட்லியையும் மீதி சட்னியையும் வீசுவார்களா

இந்த கேள்விக்கு ஆம் / இல்லை என்று பதில் சொல்லலாமா ??

//அவன்தான் அப்படி இருக்கிறான் படிக்காத தற்குறி பயபுள்ள . //

அவன் வீட்டை ஒழுங்காக சுத்தமாக வைக்க தெரிந்த படிக்காத தற்குறி பயபுள்ள அரசு மருத்துவமனை என்றவுடன் ஏன் இப்படி செய்கிறான் என்பது தானே கேள்வி

கலவரத்தில் எவனாவது தன் வீட்டை கொளுத்துகிறானா. தனது மிதிவண்டியையோ அல்லது தனது இரு சக்கர வாகனத்தையோ உடைப்பானா. அரசு வாகனம் தானே குறி.

இது தான் ஆதார பிரச்சனை. அரசு என்றாலே இளக்காரம் தான்.

தெரிந்தே தப்பு செய்து விட்டு படிக்காதவன் என்று தப்பலாம். அதற்கு சில படித்தவர்கள் கூட துனை போவது வேதனை தான்.

//அரசுமருத்துவமனைகளில் பணியிலுருக்கும் எத்தனை துப்புரவு ஊழியர்கள் சரியாக பணியாற்றுகின்றனர் //

இது குறித்து நான் ஏற்கனவே விளக்கி விட்டேன். அப்படி சரியாக பணியாற்றாத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தடுப்பது எது என்றும் விளக்கி விட்டேன்

//அங்கே தினமும் சரியான நேரத்திற்கு வேலைக்கு போகும் மருத்துவர்களாவது இந்த அசுத்தங்களை சுத்தம் செய்ய சொல்லலாமல்லவா . //

இது குறித்து விளக்கப்பட்டு விட்டது. பணியாளர்களை வேலை வாங்கினால் என்ன நடக்கும் என்று எனது பதிவில் தெளிவாகவே உள்ளது.

ஒரு முறை படித்து விட்டு, உண்மையை புரிந்து விட்டு, அதன் பின் இது போல் தவறான விஷயங்களை எழுதுவதை தவிர்க்கலாம் என்பது வேண்டுகோள் :) :)

//அரசு மருத்துவமனைகளுக்கு வரும் மக்களுக்கு , மருத்துவமனைகளில் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டுமென அறிவுருத்த வேண்டியது யார் கடமை . ( ஏன்னா வரவன் பூரா காட்டு பயலுக ,அவன் நம்மளாட்டம் படிக்கல அதான் )//

அவனவன் தனது வீட்டில் எப்படி நடந்து கொள்வானோ, அல்லது அதிஷாவின் வீட்டிற்கு விருந்தாளியாக சென்றால் எப்படி நடந்து கொள்வானோ அப்படி நடந்தால் போதும்.

ஒரு 2 வயது குழந்தை நடு அறையில் துப்பலாம். அது தன் வீட்டிலும் அப்படி தான் செய்யும். மருத்துவமனையிலும் அப்படித்தான் செய்யும். ஆனால் தனது வீட்டில் ஒழுங்காக இருப்பவன் மருத்துவமனையை ஏன் அசுத்தப்படுத்துகிறான். அரசு என்ற இளக்காரம் தானே. இது கூட புரியவில்லையா.

புருனோ Bruno said...

//குறஞ்சது சொல்லலாம்ல இப்படி அசுத்தம் பண்ண வேணாமுன்னு . //

சொல்லிக்கொண்டுதான் இருக்கிறோம். கேட்காவிட்டால் என்ன செய்வது.

உங்களை போன்ற படித்தவர்கள் கூட அவர்களுக்கு அறிவுரை சொல்லாமல் அவர்கள் அப்படிதான் என்று சப்பை கட்டு கட்டினால் எப்படி முன்னேறும்.

புரியுதா ??? :) :)

புருனோ Bruno said...

//பொதுமக்கள் என நீங்கள் கூறுவது ஒட்டு மொத்த சமூகத்தையும் சேர்த்துதான் என்பது உங்கள் வாதமாக இருப்பின் , கலவரம் செய்வது மருத்துவர்கள்தான் என்பது என் வாதம் ( மருத்துவர்களும் இச்சமூகத்தின் ஒரு பகுதியன்றோ )//

ஆமாம் கலவரம் செய்வது நீங்கள் சொன்ன மென்பொருள் துறையில் பணிபுரியும் சீமான்களும் , படித்து பட்டம் பெற்ற கணவான்களும் தான். ஏன் அதிஷாவும் கூட.

அது சரி பேரூந்தை உடைப்பது சமுகம் என்ற உடன் மருத்துவர்களை மட்டும் சேர்க்கிறீர்கள். ஏன் பிறரை விட்டு விட்டீர்கள் :) :) :)

ஐயா, புல்லரிக்குது

புருனோ Bruno said...

//அரசு மருத்துவமனைகளின் துப்புரவு பணிகளை தனியாரிடம் ஒப்படைத்தால் கூட நல்ல பலன் கிடைக்கும் என்பது அடியேனின் கருத்து .//

நல்ல கருத்து

அரசு மருத்துவமனைகளின் துப்புரவு பணிகளை தனியாரிடம் ஒப்படைத்தால் கூட நல்ல பலன் கிடைக்கும் என்பது அடியேனின் கருத்தும் கூட

ஆனால் இதை சொன்னதற்காக அதிஷாவும் புருனோவும், முதலாளி மனப்பாண்மை உடையவர்கள், தொழிலாளி விரோதிகள் என்று அழைக்கப்படுவார்கள்

புருனோ Bruno said...

//இந்த பிரச்சையில் ஒட்டு மொத்தமாய் பொதுமக்கள் மீது குற்றம் சுமத்தியாதாலேயே இந்த விளக்கம் //

இல்லை. திரும்ப வாசியுங்கள். நான் அப்படி கூறவில்லை

மருத்துவமனை சுகாதார கேட்டிற்கு காரணங்கள்

1. கண்ட இடத்தில் அனைத்தையும் போடுவது - இது பொது மக்களின் குற்றம்

2. அந்த பொருட்களை சுத்தம் செய்யாதது - இது மருத்துவமனையின் குற்றம்

முழுவதும் மருத்துவமனையை மட்டும் குற்றம் சாட்டாதீர்கள் என்பது தான் என் வேண்டுகோள்

யாராவது நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சென்றிருக்கிறீர்களா.

அங்கு மட்டும் எப்படி சுத்தமாக இருக்கிறது :) :) :) :)

//அதற்காக மக்கள் எந்த தவரும் செய்யவில்லை என நான் சப்பைகட்டு கட்டவில்லை , அதில் மக்களின் பங்கு அதிகமே //

இது தான் என் கருத்து

//ஆனால் சரியான ஊழியர்களும் , தக்க மேலாண்மையும் ( தனியார் மருத்துவமனைகளில் உள்ளது போல ) , அரசின் நிதியும் ,இருந்தால் இந்த பிரச்சனை இருக்கவே இருக்காது //

இல்லை.. மக்களின் பங்களிப்பு இல்லாமல் வெறும் மேலாண்மையை மற்றும் வைத்துக்கொண்டு எதுவும் சரி செய்ய முடியாது

புருனோ Bruno said...

கலவரத்தில் எவனாவது தன் வீட்டை கொளுத்துகிறானா. தனது மிதிவண்டியையோ அல்லது தனது இரு சக்கர வாகனத்தையோ உடைப்பானா. அரசு வாகனம் தானே குறி.

இது தான் ஆதார பிரச்சனை. அரசு என்றாலே இளக்காரம் தான்.

ஜோசப் பால்ராஜ் said...

இதில் ஒருவர் மேல் ஒருவர் மாறி மாறி குற்றம் சொல்லிக்கொண்டிருப்பதில் எந்த அர்தமும் இல்லை.
எல்லோருக்கும் பொறுப்பு இருக்கின்றது.
அதில் அரசு ஊழியர்களுக்கு கொஞ்சம் அதிகமாக பொறுப்பு இருக்கின்றது.

manikandan said...

ஜோசப் ஐயா :-

நான் ப்ருனோ அவர்கள் கொடுத்த வழக்கு விவரங்களை "grievance" ஆக பதிவு செய்து உள்ளேன்.

http://pgportal.gov.in/

பார்க்கலாம். என்ன பதில் வருகிறது என்று.

வீட்லதான் கடுப்பு ஆக போறாங்க. ஏண்டா சும்மா இருந்து தொலையமட்டயான்னு.

புருனோ Bruno said...

//எல்லோருக்கும் பொறுப்பு இருக்கின்றது.//
உண்மை

//அதில் அரசு ஊழியர்களுக்கு கொஞ்சம் அதிகமாக பொறுப்பு இருக்கின்றது.//

உண்மைதான்

தெளிவாக கூறிவிட்டீர்கள்

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

அனைவரும் பொறுப்புணர்ந்து தம் வீட்டில் எப்படி நடந்து கொள்வார்களோ அப்படியே பொது இடத்திலும் நடந்து கொண்டாலே போதும் அனைத்து பொது இடங்களும் பளிச்சிடும் சுத்தமாக மாறிவிடும் .
அன்புடன்,
அருப்புக்கோட்டை பாஸ்கர்

Unknown said...

\\
நீங்கள் சொல்லும் எல்லாரும் அவர்களின் வீட்டில் இது போல் தான் எச்சில் / வெற்றிலை துப்புவார்கள் , அவர்கள் வீட்டு நடுக்கூடத்தில் பாதி இட்லியையும் மீதி சட்னியையும் வீசுவார்களா
\\

இல்லை , ஒரு இடம் குப்பைக்கூளமாக இருந்தால் அந்த இடத்தை சுத்தமாக வைத்திருக்க யாருக்குத்தான் எண்ணம் வரும் .
சுத்தமாக இருக்கும் இடத்தை அசுத்தம் செய்ய யாருக்குத்தான் மனம் வரும்

(தனியார் மருத்துவமனைகளில் இக்காட்சிகள் இல்லாமைக்கு இதுமான் காரணம் )

\\
இது குறித்து விளக்கப்பட்டு விட்டது. பணியாளர்களை வேலை வாங்கினால் என்ன நடக்கும் என்று எனது பதிவில் தெளிவாகவே உள்ளது.
\\

மருத்துவ மனை ஊழியர்கள் மீதும் குற்றம் உள்ளதென்று ஒப்புக்கொண்டுள்ளீர்கள் ,சரி , ஊழியர்கள் தனது வேலையை சரிவர செய்யவில்லை எனில் அதற்கு காவல்துறை என்ன செய்யும் இதைப்பற்றி புகார் அளிக்க வேறு டிபார்ட்மென்டுகள் இல்லையா , அவர்களுக்கு மட்டும்தான் சங்கம் இருக்கிறதா ?

\\
அவன் வீட்டை ஒழுங்காக சுத்தமாக வைக்க தெரிந்த படிக்காத தற்குறி பயபுள்ள அரசு மருத்துவமனை என்றவுடன் ஏன் இப்படி செய்கிறான் என்பது தானே கேள்வி
\\

அட ஆமாம்ல , அதுக்கு அவன் என்ன பண்ணுவான் , அங்க வரவனுக்கு அரசு மருத்துவமனை மட்டும் ஏனோ வீடு போல தோன்றதில்லை , அதுக்கு காரணம் அங்கே அவன் நடத்தப்படும் விதம் . எந்த அரசு மருத்துவமனையில் நோயாளிகளை மனுசனா மதிக்கிறாங்க அதான்ங்க எனக்கு காரணமா தெரியுது .

Unknown said...

\\\
இல்லை.. மக்களின் பங்களிப்பு இல்லாமல் வெறும் மேலாண்மையை மற்றும் வைத்துக்கொண்டு எதுவும் சரி செய்ய முடியாது
\\\

மேலாண்மை சரியாக இருந்தால்தான் சுகாதாரபணிகள் நல்ல முறையில் நடக்கும் . மேலாண்மையால்தான் நாமக்கல் ம.மனை கூட நீங்கள் சொல்வது போல இருக்கிறது , இங்க வாழும் அதே குணம் கொண்ட மக்கள்தான் நாமக்கல்லிலும் வாழ்கின்றனர் , அங்க ம.மனைக்கு வருவோரெல்லாம் வேற்றுகிரக வாசிகளா , சென்னையில் முடியாத ஒன்று எப்படி நாமக்கல்லில் முடிந்தது ,

அதை மட்டும் விளக்கி விடுங்கள் .

கோவை விஜய் said...

அரசு மருத்துவ மனிகளின் சுகாதாரக் சீர்கேட்டை சri செய்ய தொண்டு நிருவனங்கள் துணை புரியாலாமே!

தி.விஜய்
pugaippezhai.blogspot.com
வாங்கோணா வாங்கோ கோவையின் ரேஸ் திருவிழாவை பார்க்க வாங்கோணா..! 21 மறுமொழிகள் | விஜய்

புருனோ Bruno said...

//அதை மட்டும் விளக்கி விடுங்கள் .//

அதிஷா, நாமக்கல் பற்றி கூறியதே நான் தானே.

அது பற்றி நீங்களே முடிவு செய்துவிட்டீர்களே (தகவல் எதுவும் தெரியாமல்)

நேரில் சென்று பாருங்கள், அல்லது விசாரித்து பாருங்கள். உண்மை புரியும்.

நேரில் சென்று / விசாரிப்பது என் வேலை இல்லை என்று நீங்கள் பதிலளிப்பீர்களானால் ”
மேலாண்மை சரியாக இருந்தால்தான் சுகாதாரபணிகள் நல்ல முறையில் நடக்கும் . மேலாண்மையால்தான் நாமக்கல் ம.மனை கூட நீங்கள் சொல்வது போல இருக்கிறது ,” என்று முழுவதும் அறியாமல் தவறான கருத்து கூறுவது கூட உங்கள் வேலை கிடையாது.

புருனோ Bruno said...

//ஊழியர்கள் தனது வேலையை சரிவர செய்யவில்லை எனில் அதற்கு காவல்துறை என்ன செய்யும் இதைப்பற்றி புகார் அளிக்க வேறு டிபார்ட்மென்டுகள் இல்லையா , அவர்களுக்கு மட்டும்தான் சங்கம் இருக்கிறதா ?//

ஐயா, பிரச்சனை என்னவென்றே தெரியாமல் நீங்கள் பாட்டுக்கு எதேதோ கூறுகிறீர்கள். நான் அளித்த சுட்டிகளை ஒரு முறை படித்து பாருங்கள், விபரம் புரியும்.

சுட்டியை படித்தாலே உங்கள் கருத்து பற்றி / நீங்கள் எழுதிய வரிகள் குறித்து உங்களுக்கே சிரிப்பு வரும்

புருனோ Bruno said...

//இல்லை , ஒரு இடம் குப்பைக்கூளமாக இருந்தால் அந்த இடத்தை சுத்தமாக வைத்திருக்க யாருக்குத்தான் எண்ணம் வரும் . //

ஆகா. புதிதாக கட்டப்படும் ஒரு மருத்துவமனையில் கூட குப்பை போடுவது யார் ????

நாமக்கல் மருத்துவமனை இன்று நன்றாக இருக்கிறது. (புது கட்டிடங்கள்) ஆனால் அதையும் சில மாதங்களில் நம் பொதுஜனம் என்ன செய்வார்கள் என்று கூறவே அந்த உதாரணம் தந்தேன்.

புரிகிறதா.

புருனோ Bruno said...

//சுத்தமாக இருக்கும் இடத்தை அசுத்தம் செய்ய யாருக்குத்தான் மனம் வரும்//

என்ன கேள்வி.. அது தான் நீங்களே பதில் கூறி விட்டீர்களே

உங்கள் இடுகையை ஒரு முறை பார்க்கவும்.

ஏன் சார், நீங்கள் ஏற்கனவே கூறியதையே கேள்வியாக எழுப்புகிறீர்கள்

//(தனியார் மருத்துவமனைகளில் இக்காட்சிகள் இல்லாமைக்கு இதுமான் காரணம் )//

இல்லை.

காரணம் அரசு என்ற இளக்காரம் தான்.

கலவரத்தில் தனது வாகனத்தையோ, தனியார் வாகனத்தையோ கொளுத்தாமல் அரசு வாகனத்தை கொளுத்தும் பொதுஜன மனநிலை தான் இந்த பிரச்சனைக்கு அடிப்படை காரணம்.

நீங்களே முதலில் ஒரு கருத்தை தெளிவாக கூறிவிட்டீர்கள்.

அவர்களிடம் நீங்கள் எதிர் பார்க்கும் சுகாதாரம் இருக்காதுதான் . ஒத்துகொள்கிறேன் , அவனுக்கு என்ன தெரியும் ஹைஜீன் பற்றி .

அவன்தான் அப்படி இருக்கிறான் படிக்காத தற்குறி பயபுள்ள .


நீங்களே கூறியது அரசு மருத்துவமனைகள் / அரசு நிறுவனங்கள் / பொதுமக்கள் புழங்கும் இடங்கள் சுத்தமில்லாமல் இருப்பதற்கு காரணம் அங்கு வரும் மக்களின் இயல்புதான் என்பது நேற்று நீங்களே கூறியதுதானே.

//நாங்கதான் சாமி , அது நாங்களேதான் . சரிங்க சாமி நாங்கதான் பேஸன்ட்டுக்கு துணையா வந்தா எங்களுக்கு தங்கதான் இடங்கொடுக்கல ( நாங்க எங்க 5 நட்சத்தி ஒட்டல்லயா சாமி தங்க , அப்புறம் சோறு திங்க ) திங்கவாவது இடங்கொடுக்கலாம்ல சாமி ,//

இதுவும் நீங்கள் கூறியதுதான்

என்னவாயிற்று

நான் கேட்ட கேள்வி

யார் காரணம்

நீங்கள் சொன்ன பதில்

பொதுமக்கள் காரணம் - அதற்கு காரணம் அந்த பொதுமக்களின் படிப்பறிவினமை

இப்பொழுது என்ன வாயிற்று

புருனோ Bruno said...

//சென்னையில் முடியாத ஒன்று எப்படி நாமக்கல்லில் முடிந்தது ,

அதை மட்டும் விளக்கி விடுங்கள் .//

நாமக்கல்லில் புது கட்டிடங்கள். நன்றாக இருக்கிறது.

அதே மேலாண்மையில் இன்னும் சில மாதங்கள் கழித்து தனது வீட்டை ஒழுங்காக வைத்திருக்கும் நம் மக்கள் இன்று சுத்தமாக இருக்கும் மருத்துவமனையை என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள் என்பதற்காகத்தான் நாமக்கல்லை உதாரணம் காட்டினேன்

சிறிது பொறுத்திருந்து பார்த்தாலே உங்களுக்கே விளங்கிவிடும். யாரும் விளக்க வேண்டாம்

புருனோ Bruno said...

//எந்த அரசு மருத்துவமனையில் நோயாளிகளை மனுசனா மதிக்கிறாங்க அதான்ங்க எனக்கு காரணமா தெரியுது .//

மண்டபத்தில் கைதட்டல் வாங்க வேண்டும் என்பதற்காக எழுதிய அபத்த கருத்து என்பதால் வன்மையாக கண்டிக்கிறேன்

எந்த மருத்துவமனையில் நோயாளியை மனுசனாக நடத்த வில்லை என்று கூறவும்

அப்படி கூறவில்லை / கூறமுடியவில்லை என்றால் இது போன்ற தவறான அபத்தங்களை கூறுவதை தயவு செய்து நிறுத்தவும்.

அதிஷா, என்ன வாயிற்று உங்களுக்கு

ஒரு முறை நீங்கள் எழுதியதை நீங்களே படித்து பாருங்கள்.

பொது மக்கள் மருத்துவர்களை மனுசனாக மதிப்பதை விட (ஆதாரமில்லாத அபாண்ட குற்றச்சாட்டுகள் கூறுவது கூட இதில் அடக்கம் தான்) மருத்துவர்கள் பொதுமக்களை மனுசனாக தான் நடத்துகிறார்கள்.

--

தனியார் மருத்துவமனையில் மட்டும் ஒழுங்காக வரிசையில் நிற்பவன் அரசு மருத்துவமனையில் சீட்டு கொடுப்பவனை சுற்றி நின்று கொண்டு 15 நபர்கள் ஒரே நேரத்தில் கையை நீட்டினால் சீட்டு அளிப்பவார் எரிந்து தான் விழுவார்.

இதில் யார் யாரை மனுசனாக மதிப்பதில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்

ஏன் தனியார் மருத்துவமனையில் வரிசையில் வருபவன் அரசு மருத்துவமனையில் வருவதில்லை.

அரசு என்ற இளக்காரம் தானே

புதுகை.அப்துல்லா said...

நீங்கள் சொல்லும் எல்லாரும் அவர்களின் வீட்டில் இது போல் தான் எச்சில் / வெற்றிலை துப்புவார்கள் , அவர்கள் வீட்டு நடுக்கூடத்தில் பாதி இட்லியையும் மீதி சட்னியையும் வீசுவார்களா
//

டாக்டர் ஸார் உங்க கொஸ்டினு குட் கொஸ்டினு. ஆனா ஒரு அடிப்படை விஷயம் என்னன்னா ஒரு இடம் மிகமிக சுத்தமாக இருக்கும் பட்சத்தில் அந்த இடத்தில் அசுத்தம் செய்ய பொதுவாகவே யாருக்கும் மனசு வராது.அதே படிக்காதவன் துபாய்க்கும்,சிங்கப்பூருக்கும் வேலைக்கு போறான்.அங்க உள்ள அரசு மருத்துவமனையிலதான் மருத்துவம் பாக்குறான்.அங்க துப்புறானா?இல்லையே!காரணம் மணிக்கு ஒருமுறை செய்யப்படும் சுத்தம். நம்ப கவர்மெண்டு ஆஸ்பத்திரில இன்னைக்கு காலயில கூட்டுனா அப்புறம் நாளைக்கு காலையில வந்தா அதிசயம். ஆயிரக்கணக்கான பேர் வந்து போற இடம் மெதுவாக அங்கு குப்பை சேரும்.கொஞ்சம் குப்பையை பார்த்தவுடன் அதன் மேல் மீண்டும் மீண்டும் குப்பை போடுவது மனித மனத்தின் இயல்பு.எங்கே.. பாண்டிச்சேரி கடற்கரையில நம்பாள ஒன்னுக்கு அடிக்க சொல்லுங்க?மாட்டான்...காரணம் மிகவும் சுத்தமாக இருக்கும் இடத்தில் அசுத்தம் செய்ய எந்த மனிதனுக்கும் மனம் வராது.(நீங்க டாக்குடரு..ஒங்களுக்கு நா சைகாலஜி சொல்ற அளவுக்கு பெரிய ஆள் கிடையாது). என்னைப் பொருத்தவரை தவறு இரு பக்கமும் உள்ளது. முதல் தவறு முறையாக பராமரிக்காத அரசு.இரண்டாவதுதான் மக்கள்.எது எதுக்கோ பணம் ஒதுக்கும் அரசு இந்த விஷயத்தில் பெரிதாக அக்கறை எடுப்பது இல்லை. பராமரிப்பை தனியாரிடம் விடுவது சரியான முடிவு.ஆனால் நானும் கூட உங்களைப் போல முதலாளித்துவ பூர்ஷ்வா ஆகி விடுவேன் :))

Anonymous said...

மத்திய அரசு மருத்துவ துறைக்கு ஒதுக்கும் நீதி 1.3 % (மொத்த பட்ஜேடில்) மாநில அரசு 5.5%. இலங்கை அரசு கூட பொது சுகாதரத்திற்கு இந்தியாவை விட இரண்டு மடங்கு நிதி ஒதுக்கிறது. மருத்துவ பணியிடங்கள் பல காலியாகவே உள்ளன. பல மருத்துவமனைகளில் செவிலியர்கள் மட்டும் வேலை செய்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வெறும் 4 மாதத்தில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர்கள் என்னத்த கிழித்து விட போகிறார்கள் .தமிழ் நாட்டில் உள்ள 37,733 அலோபதி மருத்துவர்களில் சுமார் 70 % தனியார் துறையில் வேலை செய்கின்றனர். இவர்களில் பாதிப்பேர் அரசு மருத்துவராக பணிபுரிந்து உள்ளனர் என்பது அதிர்ச்சியான தகவல். இதில் சென்னையில் மட்டும் சுமார் 10,000 பேர் உள்ளனர். தமிழகம் முழுவது 1,590 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை உள்ளது. (2005 ஆம் ஆண்டு ஆய்வு)
1991க்குப் பிறகு இந்தியாவில் கிராமப்புற சுகாதார வசதிகள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளன. 7வது ஐந்தாண்டு திட்டத்தின் முடிவில் இந்தியா முழுவதும்மிருந்த ஆரம்ப சுகாதார நிலையங்கள் எண்ணிக்கை 18,671 ஆகும். அது 8வது ஐந்தாண்டுத் திட்ட கால இறுதியில் 22,149 ஆக உயர்ந்தது. ஆனால் 1997-2002க்கு இடைப்பட்ட ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டத்தின் போது இந்தியா முழுவதும் 693 ஆரம்ப சுகாதார நிலையங்களை மட்டும் உருவாக்கினார்கள். பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் போது இந்தியா முழுவதும் வெறும் 394 சுகாதார நிலையங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டது. இது தான் நிலமை. இதை வைத்துக்கொண்டு தான் அனைவருக்கும் சுகாதாரம் வழங்க போகிறார் “அன்பு” மணி.
உண்மையில் கிராமப்புற மருத்துவ சேவையில் அக்கறையுடையதாக செயல்படும் அரசாக இருந்தால்,வேலை உத்தரவாதம் அளித்து இளநிலைமருத்துவரிகளை மருத்துவமனைகளில் நியமிக்க வேண்டும் அதற்கு தகுந்தார் போல் வசிப்பிடம்,வாகன வசதி, போதிய மருந்துகள், மருத்துவ உபகாரங்கள், உதவியாளர்கள், செவிலியர்கள், படுக்கை போன்றவற்றை நியமிக்க வேண்டும்.
தனியார் மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை அளிக்கின்றனவா என்றால் அதுவும் இல்லை. பல தனியார் மருத்துவமனைகள் பணம் தின்னும் கழுகாக மாறிவருகின்றன. சட்ட விரோத கருச்சிதைவுகள் தொடங்கி உடல் உறுப்புகளைத் திருடுவது வரை சட்டத்துக்கு புறம்பான அத்தனை செயல்களும் நடக்கின்றன. பல தனியார் மருத்துவமனைகள் சலுகை விலையில் நிலங்களை பெற்றுள்ளன. பல்வேறு மருத்துவ உபகரனங்கள் வரிச்சலுகை பெற்று வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்துள்ளன. தாம் சிகிச்சை அளிக்கும் நோயாளிகளில் முப்பது சதவீதம் பேருக்கு இலவசமாக சிகிச்சை அளிப்பேன் என்ற வாக்குறுதியை அளித்து இந்த சலுகைகள் பெற்றுள்ளன. அதே போல் அந்த மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளை ஒதுக்குவதிலும், பரிசோதனைகளை மேற்க்கொள்வதிலும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் சிகிச்சைக்கு வரும் நோயாளியிடம் இலவசமாக செய்யப்படவேண்டும். எந்த ஒரு தனியார்
மருத்துவமனை இந்த வாக்குறுதியை நடைமுறை படுத்தியிருக்கிறதா? இது தொடர்பாக கடந்த 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்ட போது பதில் அளித்த சுகாததரத்துறை இணை அமைச்சர் ” சுகாதாரம் என்பது மாநில பட்டியலில் இருப்பதால் இதற்கான வரைமுறையை மாநில அரசுகள் தான் உருவாக்கிக் கொள்ளவேண்டும்” என்று கூறினார்.
itha pathi pesuvikella!! www.lightink.wordpress.com