Pages

21 August 2008

பாலபாரதி,லக்கிலுக்,உண்மைத்தமிழன்,லதானந்த் மற்றும் சில பதிவர்கள் பற்றிய குட்டி செய்திகள் உங்களுக்காக

பதிவர்கள் குறித்த பல குட்டி செய்திகளின் தொகுப்பு இது ,



பாலபாரதி :



பதிவர் பாலபாரதி அவர்களின் '' அவன் - அது = அவள் '' புத்தக வெளியீட்டு விழா வரும் ஆகஸ்டு 31ம் தேதி நடைபெருகிறது . பதிவர்கள் அனைவரும் கட்டாயம் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் .







விழா குறித்த விபரங்கள் :



நூல் வெளியிடுபவர் :தோழர் ஆர்.நல்லக்கண்ணு


நூலினை பெற்றுக்கொள்பவர் :தோழி ரேவதி, திருநங்கை


வாழ்த்துரை :தோழர் ஆதவன் தீட்சண்யாதோழர் பாட்டாளி



ஏற்புரை : நூலாசிரியர் பாலபாரதி



நாள் : 31-08-2008, ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி



இடம் : ஸ்ரீபார்வதி மினி ஹால்,28/160, எல்டாம்ஸ் சாலை, தேனாம்பேட்டை,


சென்னை-18.(மியூசிக் வேர்ல்டு அருகில், கிழக்கு பதிப்பகம் எதிரில்)



இது ஒரு பதிவர் சந்திப்பாகவும் அமையும் என்பதால் அனைத்து பதிவுல நண்பர்களும் கட்டாயம் கலந்து கொள்ளவும் .



லக்கிலுக் :


பதிவர் லக்கிலுக் வரும் ஞாயிற்றுகிழமை( ஆகஸ்டு 24 ஆம் தியதி ) தனது ___ வது பிறந்தநாளை கொண்டாடினார் . அவருக்கு அனைத்து பதிவுலக நண்பர்கள் சார்பாக எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் . அவருக்கு பத்து-பத்து மற்றும் சுட்ட பழம் டிவிடி ஒன்று பரிசளிக்க எண்ணியுள்ளேன் .


(கோடிட்ட இடத்தை அவரே நிரப்பினால் நல்லது , சில உண்மைகள் சொல்லிவிடுவதை விடவும் மறைக்கப்படும் போது மிகஅழகாய் தோன்றும் )




உண்மைத்தமிழன் :


பதிவர் உண்மைத்தமிழன் அவர்கள் கடந்த ஒரு வாரமாக கடும் குளிர்காய்ச்சலால் அவதிகுள்ளாகி வருகிறார் . அவர் விரைவில் குணமடைந்து மீண்டும் பல நீண்ட பதிவுகளை இந்த பதிவுலகத்திற்கு சமர்ப்பிக்க எல்லாம் வல்ல எம்பெருமான் முருகனை அனைத்து பதிவர்கள் சார்பாக பிரார்த்திக்கிறேன் .


அவர் விரைவில் குணமடைய முருகப்பெருமான் அருள் புரியட்டும் .



லதானந்த் :

இந்த வாரக் குங்குமத்தில் லதானந்த் அவர்கள் எழுதிய படக்கதை ஒன்று வந்துள்ளது , அனைவரும் கட்டாயம் படித்து பயன் பெறவும்.


நான் பதிவுலகில் மிக அதிக மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் பதிவர்களில் மிக முக்கிய பதிவர் லதானந்த் அவர்கள் , நேற்று நான் எழுதிய எனது கதை குறித்த அவரது கருத்துகளை கேட்ட போது மிக நல்ல விடயங்களை பகிர்ந்து கொண்டார் அவை உங்கள் பார்வைக்கு ,

கடந்த வாரம் நான் எழுதிய இறுதி முத்தம் கதை குறித்து அவரது விமரிசனம் ,


கதை நன்றாக இருக்கு. ,முத்தங்களைப் பத்தின மேலதிக விஷயங்களும் சரிதான். ஆனால் அவை தனிப் பதிவாக இருந்திருக்கணும். கதையின் கனத்தை லேச்சாக்கிவிட்டது . கதை நிகழிடம் இருக்கணும் . கதையின்மிக முக்கியமான வரி ஆரம்பத்தில் இருந்தா நல்லா இருக்கும் . உதாரணமா இந்தக் கதையின் ஆரம்ப வரி "தாயில்லா என் அன்பு மகள் ராஜி இன்னும் சில மணி நேரத்தில் செத்துப் போவாள் எனபதை நினைக்கும்போதே எல்லையில்லாத்துயரம் என்னைச் சூழ்கிறது" அப்பப் படிக்கிறவிங்களுக்கு ஒரு ஜெர்க் இருக்கும்


லதானந்த் அண்ணனின் அன்புக்கும் அவர் என மீது வைத்திருக்கும் அக்கறைக்கும் அவரது விமர்சனத்திற்கும் மிக்க நன்றி அண்ணா!! .

அவர் தனது மிக நீண்ட வலையுலக அறப்போரை கைவிட்டு விரைவில் மீண்டும் பல நல்ல பதிவுகளை எழுதுவார் என்று எதிர்பார்க்கிறேன்.


பரிசல்காரன் :

பதிவர் பரிசல் காரன் தனது 11ஆம் ஆண்டு திருமண நாளை மிகச்சமீபத்தில் கொண்டாடினார் , அவருக்கு அனைத்து பதிவுல நண்பர்கள் சார்பாக எனது வாழ்த்துக்கள் . ( அவரு ஆளை பாத்தா குட்டி பையன் மாதிரி இருக்காரு கல்யாணமாகி 11 வருஷம் ஆன அங்கிள்னு சொன்னா நம்பவே முடியல ) . அவருக்கு அதிஷாவின் வாழ்த்துக்கள்.



டிபிசிடி :


பதிவர் டிபிசிடி அவரது குட்டி பெண்ணுக்காக ஒரு பிரபலமான வீடியோவை பல காலமாக தேடி வருகிறார் . அந்த வீடியோ ..


'' பூந்து பூந்து '' என சங்கர் மகாதேவன் பாடும் கின்லே(KINLEY MINERAL WATER) விளம்பரம் .



அந்த குட்டி பெண்ணுக்கு பதிவர்கள் உதவ வேண்டும் , இந்த வீடியோ குறித்து உங்களுக்கு தெரிந்தால் உடனடியாக பின்னூட்டத்தில் தெரிவிக்கவும் . குட்டிபாப்பவின் அன்பு முத்தங்கள் உங்களுக்கு பரிசாக மின்னஞ்சல் செய்யப்படும்





இட்லிவடை :


தமிழ்மணத்தில் மீண்டும் இட்லிவடையாரின் பதிவுகள் இடம் பெருகின்றன , என்ன காரணம் என தெரியவில்லை. சமீபகாலமாக இட்லிவடையின் மவுசு வலையுலகில் குறைந்துவிட்டதால் இருக்கலாம் என நம்ப தகுந்த வட்டராங்கள் கிசுகிசுக்கின்றன .


நரசிம் :


நேற்று பதிவர் நரசிம்மை நேரில் சந்தித்த போது , எனது இறுதிமுத்தம் கதை அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவத்தோடு ஒத்து போவதாக கூறினார் அதிர்ச்சியாக இருந்தது .


அது தவிர பதிவர்களாகிய நாம் ஒருங்கிணைந்து ஒரு குழுவை உண்டாக்கி அக்குழு மூலமாக , நமக்கு தெரிந்த பதிவர்கள்,நண்பர்கள் , ஏழைகள் என இல்லாதோர்க்கு நம்மால் முடிந்த உதவிகள் செய்யலாம் எனக்கூறினார் , அது மிக நல்ல யோசனையாக இருந்தது .



விரைவில் அது குறித்து ஒரு அறிவிப்பு பதிவு வெளியாகும் .



செந்தழல் ரவி :

ஆகஸ்டு மாதம் 23ம் தேதி சனிக்கிழமை பெங்களூருவில் அண்ணன் செந்தழல் ரவி ஒரு பதிவர் சந்திப்பு அறிவித்திருந்தார் .
அதில் அடியேனும் கலந்துகொண்டு விழாவ்வை முடிந்த வரை சிறப்பித்தேன் .

அது தவிர சந்திப்பு மிக நல்ல அனுபவமாக இருந்தது , அது குறித்து இந்த வாரத்தில் ஒரு பதிவு கட்டாயம் நம் வலைப்பூவில் வெளியாகும்.





விக்னேஷ்வரன் :

பதிவர் விக்னேஷ்வரன் அவர்களின் தாயார் சென்ற வாரம் தனது 50வது பிறந்தநாளைக் கொண்டாடினார் . அவருக்கு அனைத்து பதிவுலக நண்பர்கள் சார்பாக வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் .


*****************************


இத்துடன் இச்செய்தியறிக்கை முடிவடைகிறது , இது தவிர இன்னும் பற்பல பதிவுலக செய்திகள் இருந்தும் நேரமின்மை மற்றும் பதிவின் நீளம் கருதி நன்றி வணக்கம் .


___________________________________________________________________




குட்டி தகவல்கள் சில :

* உலகிலேயே மிக நீளமான பெயரை கொண்ட வலைப்பூ







என்கின்ற இந்த வலைப்பூவின் பெயரே இதுவரை பிளாக்கரில் பதிவு செய்யப்பட்ட வலைபூக்களின் பெயர்களில் மிக நீளமான ஒன்று .




* உலகிலேயே மிக நீளமான இணையதள முகவரி எது தெரியுமா




இந்த இணையதளத்தின் பெயர் இங்கிலாந்து நாட்டின் வெல்ஷ் மாகாணத்தில் உள்ள ஒரு குட்டி கிராமத்தின் பெயர் , இப்பெயர் 1960 களில் வெளியான ஒரு திரைப்படத்தின் பெயர் என்பதும் வியக்க வைக்கிறது . ( அது குறித்து இணையத்தில் தேடிய போது அது ஒரு பிட்டு படம் என்று தெரிந்ததும் மேலும் வியதேன் , மேலும் இதுபோல நம்மூரிலும் வெளியான ''தங்கத்தோணி'' என்கிற ஷகிலா படப்பெயரில் ஒரு கேரள கிராமம் இருக்கிறது எனபதையும் தெரிவித்து கொள்கிறேன் )

___________________________________________________________________



சென்றவாரம் வெளியான எனது இறுதி முத்தம் சிறுகதையுடன் வெளியான முத்தக்குறிப்புகள் அந்த பதிவிலிருந்து பற்பல பதிவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நீக்கப்பட்டது . முத்தக்குறிப்புகள் விரைவில் தனிப்பதிவாக வெளியாகும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்

___________________________________________________________________


ஒரு அரிய புகைப்படம்(அல்லது) ஓவியம் :



1890ல நம்ம மெரினா பீச்... இன்னா சோக்காகீது பாருங்கோ


அப்பால இந்த படம் வரைஞ்சதா இல்ல படம் புட்ச்சதானு தெர்லபா





__________________________________________________________________