22 August 2008

முத்தம் சில்லென்று சில குறிப்புகள் மற்றும் கவிதைகள்


முத்தம் , சில்லென்று சில குறிப்புகள் :


* ஒரு முறை முத்தமிடுவதால் நம் முகத்தின் 29 தசைகள் இயங்க வைக்கப்படுகிறது


*எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக முத்தமிடுகிறோமோ அதற்கு சமமாக முதுமையால் நமது முகத்தில் சுருக்கம் விழுவது குறையும் .


*காதலர்கள் இதழோடு இதழினைத்து முத்தமிடுகையில் பரிமாறிகொள்ளும் எச்சிலில் பல முக்கியமான கொழுப்பு , சில ஊட்டச்சத்துக்கள் , புரதம் என பல வித விடயங்களும் இருப்பதால் , அது முத்தமிடுபவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது .


*66% பேர் முத்தமிடுகையில் முகத்தை மூடிக்கொள்கின்றனர் , மீதி பேர் மட்டுமே கண்களை திறந்த படி தனது பார்ட்னரை பார்த்த படி முத்தமிடுகின்றனர் .


*அமெரிக்க பெண்கள் தனது திருமணத்திற்கு முன் குறைந்தது 80 ஆண்களையாவது முத்தமிடுகின்றனர் என ஒரு ஆய்வு கூறுகிறது .


*உலகில் ஒரு மனிதன் தனது வாழ்நாளின் இருபதாயிரத்து நூற்றி அறுபது நிமிடங்கள் அதாவது இரண்டு வாரங்கள் முத்தமிடுவதில் கழிக்கிறான். *நம் உதடுகளின் SENSITIVITYயானது நம் விரல்களை விட 200 மடங்கு அதிகமானது .


*இந்தியாவில் காதல் திருமணம் செய்து கொண்டவர்களை விட வீட்டில் பார்த்து முடிக்கப்படும் திருமணம் செய்து கொண்டவர்கள் அதிகம் முத்தமிட்டு கொளவதாக ஒரு கருத்துக்கணிப்பு கூறுகிறது .


*ஒரு முறை முத்தமிடுவதால் , 2-3 கலோரிகள் நம் உடலில் எரிக்கப்படுகிறது , அதுவே பிரெஞ்சு முத்தமாக இருக்கும் பட்சத்தில் 5 கலோரி அளவுக்கு சக்தி எரிக்கப்படுகிறது.


*வேலைக்கு செல்வதற்கு முன் தன் மனைவியை முத்தமிட்டு செல்பவர்கள் , அப்படி செய்யாதவர்களை விட 5 ஆண்டுகள் கூடுதலாக தனது தொழிலை மேற்கொள்கின்றனர்.


*மிக அதிக உணர்ச்சியுடன் 90 விநாடிகள் வரை முத்தமிட்டு கொள்பவர்களின் இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் மிக அதிக அளவிற்கு செல்வதால் அவர்களது வாழ்நாளில் ஒரு நிமிடம் குறைகிறது.


*எஸ்கிமோக்கள் மற்றும் மலேசியர்கள் தங்களது மூக்கால் முத்தமிட்டு கொள்கின்றனர் .


*முத்தமிடுதல் பெண்களின் மன அழுத்தத்தை பெருமளவில் குறைக்கிறது. , ஆண்களுக்கு மனஅழுத்தத்தை அதிகமாக்குகிறது.


*குண்டாயிருப்பவர்கள் தொடர்ந்து ஒரு நிமிடம் வரை முத்தமிடுவதால் தனது உடலின் 26 கலோரிகளை குறைக்க இயலும் . இதனால் தொப்பை குறைகிறதாம்.


*முத்தமிடுதல் மற்றும் முத்தம் குறித்த ஆராய்ச்சிக்கு PHILEMOTOLOGY என்று பெயர் .


*5 மில்லியன் பாக்டீரியாக்கள் முத்தமிடுகையில் பரிமாறப்படுகிறது.


*ORBICULARIS ORIS எனபதே முத்த தசை ஆகும்.


*முத்தமிடுகையில் பெரும்பாலும் நாம் வலது புறமாகவே முத்தமிடுகிறோம் , ஏன் எனில் நமது மூளையில் நமது உணர்ச்சிகள் வலது பக்கமே கட்டுப்படுத்தப்படுகிறது.


*சினிமாவில் வெளியான முதல் முத்தகாட்சி 1896ல் வெளியான THE KISS திரைப்படத்தில் JOHN.C.RICE எனும் நடிகர் MAY IRWIN எனும் நடிகைக்கு கொடுத்ததேயாகும்.


*கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட்ட மிக நீளமான முத்தம் 417 மணிநேரமாம்.


*இரவில் நாம் முத்தமிட நமது மூளையில் சில சிறப்பு நியுரான்கள் இருப்பாதலேயே நம்மால் இருட்டிலும் சரியாக முத்தமிட முடிகிறதாம்.


*முத்தமிடுவதால் எய்ட்ஸ் பரவுவதில்லை


*இங்கிலாந்தில் மட்டுமே ஜீலை 6 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தேசிய முத்த தினமாக கொண்டாடப்படடது .


*அத்தினமே பிற்காலத்தில் உலக முத்ததினமாக மாறியது


* முத்தம் குறித்த ஒரு பழமொழி - அணைப்பில்லா முத்தம் மணமில்லா பூ போன்றது.


நன்றி - www.google.co.in


____________________________________________________________________


சில முத்தக் கவிதைகள் - ( யாரோ அதிஷா என்னும் அரைடிரவுசர் கவிஞர் எழுதியது.... : )


உன் உதடுகளை மூடிகொள்

யாரேனும் நுழைந்து விட வாய்ப்புண்டு

அது சொர்க்கத்தின் வாயில்


*******


உதடுகளின் முத்தம்

இச் எனும் சத்தம்

வாய்ப்பதில்லை முதிர்கன்னிக்கு


*******


மூன்று வருடங்கள் முழுமையாய்


முத்தங்களின்றி


நான் வாழ்ந்ததில்லை


என்


நான்காம் வயது வரை


*******


முத்தத்தொழிலில்


லாபம்


இருவருக்கும்...


*******


நாத்திகனுக்கும் நம்பிக்கை வருமோ


கூடு விட்டு கூடு பாய்வதில்


உன்னை முத்தமிடுகையில்


********


உன்னை முத்தமிட


என் உதடுகள் மறுக்கிறது


மலர்களை நான் கடிப்பதில்லை.


********


இறைவனின் அருள்


விபச்சாரியின் முத்தம்


இறைவனுக்கு காணிக்கை


விபச்சாரிக்கு டிப்ஸ்


****************


38 comments:

ers said...

உன் உதடுகளை மூடிகொள்


யாரேனும் நுழைந்து விட வாய்ப்புண்டு


அது சொர்க்கத்தின் வாயில்

}}}}
சுட்டாலும் சுவையான சமாச்சாரத்தை தான் சுட்டு போட்டிருக்கிறீர்கள். படித்து முடிப்பதற்குள் உதட்டில் உஷ்ணம் பரவுகிறது. கவிதைகள் அருமை.

முரளிகண்ணன் said...

padam super

சிவமணியன் said...

Super..

விஜய் ஆனந்த் said...

:-))))...

குசும்பன் said...

//*மிக அதிக உணர்ச்சியுடன் 90 விநாடிகள் வரை முத்தமிட்டு கொள்பவர்களின் இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் மிக அதிக அளவிற்கு செல்வதால் அவர்களது வாழ்நாளில் ஒரு நிமிடம் குறைகிறது.//

அய்யய்யோ அப்ப இனி 89 விநாடிகள் தான்.

VIKNESHWARAN ADAKKALAM said...

அதிஷா அழகான துணுக்குகள்... வாழ்த்துக்கள்... மேலும் எழுதுங்கள்...

//உதடுகளின் முத்தம்

இச் எனும் சத்தம்

வாய்ப்பதில்லை முதிர்கன்னிக்கு//

என்னைக் கவர்ந்தது இது. சூப்பர்.

Unknown said...

நன்றி தமிழ் சினிமா,

அடேங்கப்பா எனது முதல் கவிதை முயற்சிக்கு தமிழ் சினிமாவே முதல் பின்னூட்டம் போட்றுச்சா...

Unknown said...

முரளி அண்ணா படம் மட்டும் தான் நல்லாருந்துச்சா

Unknown said...

நன்றி சிவமணியன்

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

Unknown said...

வாங்க விஜய் ஆனந்த் .. சிரிப்புக்கு நன்றி

Unknown said...

குசும்பன் பார்த்து கொஞ்சம் மிஸ் ஆனாலும் ஒரு நிமிஷம் காலி

Unknown said...

வாங்க விக்கி கட்டாயம் எழுதுகிறேன்

வாழ்த்துக்கு நன்றி

குசும்பன் said...

//முத்தமிடுதல் பெண்களின் மன அழுத்தத்தை பெருமளவில் குறைக்கிறது. , ஆண்களுக்கு மனஅழுத்தத்தை அதிகமாக்குகிறது.//

பெண் அருகில் இருந்தாலே ஆணுக்கு வரக்கூடியதுதானே அது:))

குசும்பன் said...

//முத்தமிடுதல் மற்றும் முத்தம் குறித்த ஆராய்ச்சிக்கு PHILEMOTOLOGY என்று பெயர் .//


Dr.அதிஷா MD(PHILEMOTOLOGY) ஈரோட்டில் பிரதிமாதம் 2,3,தேதிகளில் குறுக்கு சந்து லாட்ஜிலும்,

தஞ்சையில் பிரதிமாதம் 5,6 தேதிகளில் பர்வீர் லாட்ஜிலும்
..
..
..
மேலும் உங்கள் ஊர் விஜயம் பற்றி தெரிஞ்சுக்க அனுப்புங்க SMS 8444
க்கு கிஸ் மாஸ்டார் விசிட்? ஸ்பேஸ் விட்டு அனுப்பவும்.

குசும்பன் said...

//முரளிகண்ணன் said...
padam super//

என்ன முரளி படம் முடிஞ்சு வெளிவரும் ஆட்களிடம் சன் டீவி விமர்சனத்துக்கு பதில் சொல்வது போல் படம் சூப்பர் என்று சொல்றீங்க:)))

FunScribbler said...

// அதுவே பிரெஞ்சு முத்தமாக இருக்கும் பட்சத்தில் 5 கலோரி அளவுக்கு சக்தி எரிக்கப்படுகிறது.//

ஒரு நாள்ல 500 கலோரிய குறைத்தால், ஒரு வாரத்துல,உடல் எடையை ஒர் கிலோ குறைத்துவிடலாம். ஆக கணக்கு படி தினமும் 100 பிரெஞ்சு முத்தம்...அவ்வ்வ்.....

FunScribbler said...

//முத்தமிடுதல் மற்றும் முத்தம் குறித்த ஆராய்ச்சிக்கு PHILEMOTOLOGY என்று பெயர்.//

இந்த படிப்ப எங்க படிக்காலம்.எத்தன வருஷ படிப்பு. எவ்வளவு செலவாகும் என்று சொன்னால்...நல்லா இருக்கும்.

அதுக்கு அப்பரம் வேலை கிடைக்குமா என்பதை பத்தி கவலை வேணாம்! அத நாங்க சுயதொழிலா செஞ்சிக்குவோம்! :)))))

FunScribbler said...

//இரவில் நாம் முத்தமிட நமது மூளையில் சில சிறப்பு நியுரான்கள் இருப்பாதலேயே நம்மால் இருட்டிலும் சரியாக முத்தமிட முடிகிறதாம்.//

அப்படியா!! எப்படிங்க இப்படி! சூப்பரான பதிவு!!
உட்காந்து ஆராய்ச்சி பண்ணீங்களா..ரொம்ப அருமையான கருத்துகள், அதிஷா!
தொடரட்டும்!:)

Unknown said...

\\ Dr.அதிஷா MD(PHILEMOTOLOGY) ஈரோட்டில் பிரதிமாதம் 2,3,தேதிகளில் குறுக்கு சந்து லாட்ஜிலும்,

தஞ்சையில் பிரதிமாதம் 5,6 தேதிகளில் பர்வீர் லாட்ஜிலும்
..
..
..
மேலும் உங்கள் ஊர் விஜயம் பற்றி தெரிஞ்சுக்க அனுப்புங்க SMS 8444
க்கு கிஸ் மாஸ்டார் விசிட்? ஸ்பேஸ் விட்டு அனுப்பவும். \\

எனக்கு டாக்டர் பட்டம் வழங்கிய அண்ணன் குசும்பன் அவர்களுக்கு என் நன்றிகள் பல கோடி

Unknown said...

\\
இந்த படிப்ப எங்க படிக்காலம்.எத்தன வருஷ படிப்பு. எவ்வளவு செலவாகும் என்று சொன்னால்...நல்லா இருக்கும்.
\\

வாங்க தமிழ் மாங்கனி

இந்த படிப்பு உண்மைலயே ஒரு இங்கிலாந்து பல்கலை கழகத்தில் இருக்குங்க

manikandan said...

கவிதை...கவிதை கவிதை..
கலக்கல். பிரமாதம். சூப்பர்.

Unknown said...

மிக்க நன்றி அவனும் அவளும்

narsim said...

க‌ல‌க்க‌ல் அதிஷா..

ந‌ர்சிம்

Unknown said...

நன்றி நர்சிம்

Anonymous said...

மிக நல்ல பதிவு

Unknown said...

சதீஷ் ... மிக்க நன்றி

Anonymous said...

என்ன சத்தம் இந்த நேரம்?....

உயிரின் ஒலியா?........

Anonymous said...

mudhir kanni-ku muththam kodukkum / vaangum vaaippu irukkaadhu-nu neengale mudivu panniduradhaa?

ethanaiyo kalyanamaagaadha mudhir kannigal muthamittittu dhaan irukkaanga! adhu veliyulagathukku theiryaamal nadakkiradhu, avlavu dhaan.

Tech Shankar said...முத்தம் ஒன்று கொடுத்தால் நீ முத்தமிழ் அப்படின்னு பாட்டெல்லாம் எழுதுறாங்களே?
அதைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?

Anonymous said...

xerox copy of this post

http://kelvi.net/?p=514
http://www.dinasari.com/?p=293

Anonymous said...

முத்தமிட்டால் ஆண்கள் மன அழுத்தம் அதிகரிக்குமாமே!! ஐயோ அப்புறம் எதுக்குய்யா அது?

மதன் said...

படத்தில் ஆரம்பித்து, எல்லாமே சுவாரசியம் குறையாமல்..

வாழ்த்துக்கள்..!

மதன் said...

படத்தில் ஆரம்பித்து, எல்லாமே சுவாரசியம் குறையாமல்..

வாழ்த்துக்கள்..!

மதன் said...

படத்தில் ஆரம்பித்து, எல்லாமே சுவாரசியம் குறையாமல்..

வாழ்த்துக்கள்..!

மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

//
முத்தத்தொழிலில்


லாபம்


இருவருக்கும்...//

அருமையான தொழில் வாய்ப்பு. இளைஞர்கள் சுயதொழில் தொடங்கவேண்டும் என்பதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லைதானே?


கவிதைகள் ச்சோ...ஸ்வீட்.

செழியன் said...

அருமை

செழியன் said...

அருமை

செழியன் said...

அருமை