01 September 2008

காண்டம்.......காண்டம்.......காண்டம் : வெக்கப்படாதீங்க பாஸூ!!!காண்டம் குறித்த சில சுவாரசியமான தகவல்கள் :


காண்டம் , எய்ட்ஸ் என்னும் ஒரு நோய் மனித இனத்தை ஆட்கொள்ளும் வரை , அது ஒரு கருத்தடை சாதனம் மட்டுமே , என்றைக்கு எய்ட்ஸ் மனிதனை நெருங்கியதோ அன்றிலிருந்து இன்று வரை காண்டம்ங்கள் குறித்த விழிப்புணர்வும் அதன் விற்பனையும் விண்ணை முட்டும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது . ஒரு வருடத்தில் 6 முதல் 8 பில்லியன்கள் வரை உலகலவில் காண்டம்கள் விற்கப்படுவதாக கூறப்படுகிறது . அப்படிப்பட்ட காண்டம் எங்கே எப்படி உருவானது , அது எப்படி பிரபலமடைந்தது எனபது குறித்து அறிய அனைவருக்கும் ஆவலிருக்கும் .
உலக வரலாற்றில் காண்டம்களின் வளர்ச்சி :

கி.மு.1200 :

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தப்பட்டு வந்திருப்பதாக பல வரலாற்று ஆசிரியர்களும் குறிப்பிட்டுள்ளனர் . மனித நாகரீக வளர்ச்சியின் மிக முக்கிய காலகட்டமான எகிப்திய நாகரீகத்தில் காண்டம்கள் இடம் பெருவதாக வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர் .
மேலும் எகிப்தியர்கள் உடலுறவினால் ஏற்படும் நோய்கள் மற்றும் தொற்றி வியாதிகளிலிருந்து தங்களை காத்துக்கொள்ள காண்டம்களை பயன்படுத்தினர் எனபது மிக சுவாரசியமான தகவல்.கி.மு.100- 200 :

இது தவிர பிரான்சு நாட்டு குகை சிற்பங்களிலும் அக்கால மனிதர்களின் காண்டம் பயன்பாட்டை குறிப்பிடும் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளது , அச்சிற்பங்ககள் கி.மு.100 ஆம் வருடத்தியவை என்பது குறிப்பிடத்தக்கது. அது குறித்த படம்..கி.பி.1500 :

கி.பி.1500ஆம் ஆண்டில் இத்தாலி நாட்டை சேர்ந்த GABRILLE FABILLIOS என்பவர் லைனனை உபயோகித்து செய்த காண்டம்கள் , காண்டம்களை மிக பிரபலமடைய செய்தது .அவர் இக்காண்டம்களை பலரிடம் உபயோகிக்க செய்து சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளார் .இன்றைய நவீன காண்டம்களின் தந்தை என்று அவரை அழைக்கலாம்.


கி.பி.1600 :

இவ்வாண்டு வாக்கில் இங்கிலாந்தை ஆண்ட இரண்டாம் சார்லஸ் தனக்கு உடலுறவால் ஏற்படும் தொற்றிலிருந்து தன்னை காத்து கொள்ள ஒரு உபகரணம் வேண்டுமென பிரகடனம் செய்ய , அந்நாட்டின் பிரபல வைத்தியரான காண்டன் என்பவர் ஆட்டின் குடலில் செய்த ஒரு காண்டத்தை வடிவமைத்து தந்தார் . அக்காண்டம் பிற்காலத்தில் நல்ல வரவேற்ப்பை பெற்றதுடன் பல நூறு ஆண்டுகளுக்கு மக்கள் இவ்வகை காண்டம்களையே பயன்படுத்தி வந்துள்ளனர் .

(பழைய காலத்து காண்டம் )காண்டம் என்ற சொல்லின் பெயர் காரணத்திற்கு , அதை கண்டறிந்த டாகடர் கான்டன் அவர்களின் பெயரே காரணம் என ஒரு கருத்து உள்ளது , அது தவிர லத்தீனின் காண்டஸ் என்னும் சொல்லிலுருந்தும் அப்பெயர் தோன்றியிருக்கலாம் எனவும் ஒரு கருத்து உள்ளது .


கி.பி.1700 :

மிருகத்தோலினால் செய்யப்பட்ட காண்டம்கள் எளிதில் விரிவடையும் தன்மையற்றதாக இருந்ததால் , கி.பி.1700 களில் அத்தோலினை பதப்படுத்தி அதனை விரிவடையும் வகையில் உருவாக்கியதுடன் , அவற்றை விற்க விளம்பரங்களும் துண்டுபிரசுரங்களும் தரப்பட்டது.


கி.பி.1800 :

18ஆம் நூற்றாண்டு வாக்கில் காண்டம்களின் தேவை கீழைநாடுகளில் அதிகரிக்க , மிருகத்தோல் தவிர மாற்று ஏற்பாட்டுக்காக விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு அக்காலத்தில் அப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்ட வலைகனைஸ் செய்யப்பட்ட ரப்பரால் உருவாக்கினர் .
இவ்வகை காண்டம்களை குட்இயர் மற்றும் ஹேன்காக் என்ற இருவர் இணைந்து உருவாக்கினர்.( வல்கனைஸ் என்பது ரப்பரை எந்த அளவுக்கு சூடாக்குகிறோமோ அவ்வளவு அதிகமாக அவை விரிவடையும் தன்மை பெரும் என்கிற முறை )

கி.பி . 1900 :
( DUREX ன் முதல் விளம்பரம் )
19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உராய்வு எண்ணையுடன் கூடிய ரப்பருக்கு பதிலாக லேட்டக்ஸ் எனப்படும் ஒரு வகை பிளாஸ்டிக் பொருள் காண்டம்களில் பயன்படுத்தப்பட்டது , அதுவே இன்று வரை நாம் பயன்படுத்தும் காண்டம்களில் சேர்க்கப்படுகிறது .


இன்று நாம் உபயோகிக்கும் காண்டம்கள் 1990ஆம் ஆண்டு DUREX நிறுவனத்தின் புதிய தொழில்நுட்பத்தால் தயாரிக்கபடுவது . அத்தொழில் நுட்பம் காண்டம்களின் விலையை மலிவாகவும் , உபயோகிக்க எளிதாகவும் , நம்பகத்தன்மையுடையதாகவும் ஆக்கியது . (அத்தொழில் நுட்பம் குறித்து எழுத இயலாது.. அதை நீங்களே இங்கே பார்க்கலாம் ....
http://www.ripnroll.com/headlinenews.htm )

சில சுவாரஸ்யமான தகவல்கள் :

* ஜப்பானியர்கள் அக்காலத்தில் இருவகை காண்டம்களை பயன்படுத்தியுள்ளனர் அதலி ஒன்று ''காவா காட்டா '' இது மெல்லிய வகை தோலினால் செய்யப்பட்டது , மற்றொன்று '' கபூட்டோகோட்டா '' இது கடினமான மிருக கொம்பு அல்லது ஆமையின் ஓட்டினால் செய்யப்படுபவை.


*உலகில் அதிக காண்டம்களை விற்கும் டீயூரக்ஸ் நிறுவனம் 1935ல் தனது சேவையை தொடங்கியது

*இந்தியாவில் காண்டம் வாங்க ஆகும் செலவை விட விபச்சாரியிடம் செல்ல ஆகும் செலவு குறைவு என ஒரு அமெரிக்க கருத்துக்கணிப்பு கூறுகிறது.

*200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உலகில் காண்டம்களை உற்பத்தி செய்கின்றன.

*டென்மார்க்கில் காண்டம்களை சுருக்கமாக '' svangerskabsforebyggendemiddel '' என் அழைக்கின்றனர்.

*உலகின் 70 சதவீத பெண்கள் தாங்களாகவே கடைக்கு சென்று காண்டம்களை வாங்குகின்றனர் .

*இங்கிலாந்தில் 20 வயதுக்கும் குறைவானவர்களே அதிக காண்டம்களை வாங்குகின்றனர்.

*எஸ்கிமோக்கள் மீனின் தோலினால் செய்யப்பட்ட காண்டம்களை உபயோகிக்கின்றனர்.

*கத்தோலிக்க கிறித்தவ சபை சில வருடங்கள் முன்பு வரை காண்டம்கள் உபயோகிப்பதை தவறாக அறிவித்திருந்தது , பிறகு எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்ப்பட்ட பின் அதனை சில நிபந்தனைகளுடன் மாற்றிக்கொண்டது .

*சமீபத்தில் நடந்து முடிந்த பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் 4 இலட்சம் காண்டம்கள் இலவசமாக தரப்பட்டது.

*55 மில்லியன் அமெரிக்கர்களில் 4இல் ஒருவருக்கு பாலியல் தொடர்பான நோய் இருப்பதாக ஒரு கருத்துகணிப்பு கூறுகிறது.

*காண்டம்களை எப்போதும் குளிர்ந்த பகுதியில் வைக்க வேண்டுமாம்.

*அமெரிக்காவின் பெட்ரோல் பங்குகள் வருவாயை அதிகரிக்க பங்குடன் அணைந்த விபச்சார விடுதிகளை நடத்தி வந்தது , இப்போது பெட்ரோல் விலை அதிகரிப்பால் வாடிக்கையாளர் வருவாய் குறைகிறதாம் , அதனால் வாடிக்கையாளர்கள் விபச்சாரிகளிடம் செல்ல காண்டம்களை இலவசமாகவும் பெட்ரோல் தள்ளுபடி கூப்பனும் வழங்குகின்றனர்.


*காண்டம்கள் தரும் இயந்திரம் ( வெண்டிங் மிஷின்ஸ்) முதன்முதலில் 1923 ஆம் ஆண்டு போர்ம்ஸ் என்னும் நிறுவனத்தால் தொடங்கப்பட்டது . (இவ்வியந்திரம் உடலுறவை பிரபலப்படுத்தவே முதன்முதலில் தொடங்கப்பட்டதென்பது அந்நிகழ்வை மேலும் சுவாரசியமாக்குகிறது.

_____________________________________________________________________________________

எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பிபிசி நிறுவனம் , காண்டம் பாடல் ஒன்றை வடிவமைத்துள்ளது , அதனை உங்கள் மொபைல் போனில் ரிங் டோனாக பயன்படுத்த விரும்பினால் இங்கே தரவிரக்கி கொள்ளலாம் .


CLICK TO DOWNLOAD BBC CONDOM RINGTONE


இது தவிர
www.condomcondom.org என்னும் தளத்தில் மேலதிக விபரங்கள் உள்ளது.

_____________________________________________________________________________________

ஆணுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இப்பதிவு , இப்பதிவை படிப்பதோடு மட்டுமல்லாமல் உங்களுக்கு தெரிந்தவர்களிடம் காண்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவுமே இப்பதிவு .

எய்ட்ஸிலிருந்து ஆணுறைகள் நம்மை எப்போதும் 100 சதவீதம் காப்பதில்லை , தவறான உடலுறவை தவிர்ப்பதே எய்ட்ஸிலிருந்து தப்பிக்க ஒரே வழி.

_____________________________________________________________________________________

அவ்ளோதாங்க........................
என்னது இன்னுமா.. ஓகே..... உங்களுக்காக ஒரு சூப்பர் விளம்பரம்...


என்சாய் மக்களே........அந்த காலத்து எய்ட்ஸ் விளம்பரம் ( 1935ல் வெளியானது ) இப்பவும் கதையும் கருத்தும் ஒன்னுதான்.

_____________________________________________________________________________________
:-)

31 comments:

Tech Shankar said...
This comment has been removed by the author.
Unknown said...

condom test

condom test

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

எங்கிருந்து இவ்வளவு தகவல்களைத் திரட்டினீர்கள்!

லக்கிலுக் said...

தமிழ்நெஞ்சம் என்பவரின் பின்னூட்டங்களை காணும்போது இப்போதெல்லாம் எரிச்சல் மேலிடுகிறது. கமெண்டில் எதற்கு அவரது பதிவுக்கு சம்பந்தமில்லாமல் லிங்க் தருகிறார். உருப்படியாக எழுதினால் ஹிட் வரப்போகிறது. இப்படித்தான் ஹிட் அடிக்க வேண்டுமென்றால் இதெல்லாம் ஒரு பொழைப்பா என்று நினைக்கத் தோன்றுகிறது :-)

இனி இதுபோன்ற லிங்கோடு எனக்கு தமிழ்நெஞ்சம் கமெண்டு போட்டால் அதை நான் வெளியிடப் போவதில்லை.

பரிசல்காரன் said...

//லக்கிலுக் said...

தமிழ்நெஞ்சம் என்பவரின் பின்னூட்டங்களை காணும்போது இப்போதெல்லாம் எரிச்சல் மேலிடுகிறது. கமெண்டில் எதற்கு அவரது பதிவுக்கு சம்பந்தமில்லாமல் லிங்க் தருகிறார். உருப்படியாக எழுதினால் ஹிட் வரப்போகிறது. இப்படித்தான் ஹிட் அடிக்க வேண்டுமென்றால் இதெல்லாம் ஒரு பொழைப்பா என்று நினைக்கத் தோன்றுகிறது :-) //


பதிவை அப்புறம் படிக்கறேன். மொதல்ல இதுக்கு டபுள், ட்ரிபுள் ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய் போட்டுக்கறேன்!

Sanjai Gandhi said...

நல்ல தகவல்கள் விநோத்து.. :)

//*இந்தியாவில் காண்டம் வாங்க ஆகும் செலவை விட விபச்சாரியிடம் செல்ல ஆகும் செலவு குறைவு என ஒரு அமெரிக்க கருத்துக்கணிப்பு கூறுகிறது.//

இதை கூட அமெரிக்கா காரன் தான் ஆராய்ச்சி பண்ணோனுமா? அவன் என்னாமா பொரளி கெலப்பறான் பாருங்க.. இந்தியாவில் காண்டம் தாராளமாக இலவசமாகவே கிடைக்கிறது... பல ஏரியால பசங்க தண்ணி பம்ல இதை வச்சி தண்னீர் நிரப்பி பலூன் மாதிரி வச்சி விளையாடறானுங்க.. அந்த அளவு இங்க தாரளமா இருக்கு.. அவன் என்னடான்னா விலைமாதர்களை விட காண்டம் விலை அதிகம்னு கொளுத்தி போட்டிருக்கான்.. :))

விஜய் ஆனந்த் said...

:-)))...

உண்மைத்தமிழன் said...

சுவையான தகவல்களைக் கொட்டியிருக்கிறீர்கள் தம்பி.. நன்றிகள்..

கூடவே இதனை எப்படிப் பயன்படுத்துவது என்பதையும் கொஞ்சம் சொல்லிக் கொடுத்திருந்தீர்களானால்...? எங்கயோ போயிருப்பீர்கள்..))))))))))))))))))

Anonymous said...

விக்கிபீடியா காண்டம் பகுதியை படிப்பது போல் இருந்தது...

எழுத எவ்வளவு நேரம் பிடித்தது ?

Anonymous said...

///ராமாயணத்தின் காண்டமாக இருக்குமோ என்கிற ஒரு குருட்டு நம்பிக்கையில் வந்தேன்.

படமெல்லாம் போட்டு.. ஆகா..///

தரசத காண்டத்தில் தசரதன் காண்டம் உபயோகிக்காததன் விளைவு...ஹும்...

Anonymous said...

http://www.condomcondom.org/

குசும்பன் said...

ஏதும் வேண்டுதலா காண்டம் என்று மூன்று முறை சொன்னால் ஏதும் பலன் கிட்டும் என்று சிட்டுகுருவி லேகிய விற்பவன் சொன்னானா?

பதிவு சூப்பர்

குசும்பன் said...

//*இந்தியாவில் காண்டம் வாங்க ஆகும் செலவை விட விபச்சாரியிடம் செல்ல ஆகும் செலவு குறைவு என ஒரு அமெரிக்க கருத்துக்கணிப்பு கூறுகிறது.//

இது நம் நாட்டு தினதந்தி அழகிகளை குறைத்து மதிப்பீட்டு செய்யது வெளியிடப்பட்டது இது திட்டமிட்ட வெளிநாட்டு சதி!

மெரினாவி பீச்சிலேயே 10, 20 என்று கேள்வி பட்டு இருக்கிறேன்.
இதைவிட காண்டம் விலை கம்மிதான் என்று நினைக்கிறேன்.

குசும்பன் said...

//உலக வரலாற்றில் காண்டம்களின் வளர்ச்சி //

காண்டமின் வளர்ச்சி கொஞ்சநேரமே என்று சொல்றாங்களே அது உண்மையா?:)))))

குசும்பன் said...

//*இங்கிலாந்தில் 20 வயதுக்கும் குறைவானவர்களே அதிக காண்டம்களை வாங்குகின்றனர்.//

ம்ஹும் பெரு மூச்சு விடுவதை தவிர வேறு ஒன்னும் தோனவில்லை.:((((

குசும்பன் said...

//அமெரிக்காவின் பெட்ரோல் பங்குகள் வருவாயை அதிகரிக்க பங்குடன் அணைந்த விபச்சார விடுதிகளை நடத்தி வந்தது , //

ஒருவேளை விளக்கு எல்லாம் அணைந்த இடமாக இருக்குமோ?:))

Tech Shankar said...

தமிழ்நெஞ்சம் என்பவரின் பின்னூட்டங்களை காணும்போது இப்போதெல்லாம் எரிச்சல் மேலிடுகிறது. கமெண்டில் எதற்கு அவரது பதிவுக்கு சம்பந்தமில்லாமல் லிங்க் தருகிறார். உருப்படியாக எழுதினால் ஹிட் வரப்போகிறது. இப்படித்தான் ஹிட் அடிக்க வேண்டுமென்றால் இதெல்லாம் ஒரு பொழைப்பா என்று நினைக்கத் தோன்றுகிறது :-)

இனி இதுபோன்ற லிங்கோடு எனக்கு தமிழ்நெஞ்சம் கமெண்டு போட்டால் அதை நான் வெளியிடப் போவதில்லை.

"நான் ஒன்றும் நீங்கள் நினைக்கிற மாதிரி ஹிட்டுக்காக அலையும் ஆளில்லை" என்பதை இந்தச் சுட்டியைச் சொடுக்கினால் புரிந்துகொள்வீர்கள்.


http://tamizh2000.blogspot.com/2008/07/blog-post_5651.html

முரளிகண்ணன் said...

சுந்தர (ஜியோவ்ராம்) காண்டத்தில் ஆரம்பித்து, அதிஷா காண்டத்தில் வளர்ந்துள்ளது.

வால்பையன் said...

ஜிம்ஷாவின் பதிவில் கையுறை பற்றி எழுதியிருந்த பொது ஆணுறை பற்றி எழுத சொல்லி கேட்டிருந்தேன், அவர் எழுதவே இல்லை,
நீங்க நல்லவர், வல்லவர் தேவையை புரிந்து சரியாக வெளியிட்டீர்கள்

நன்றி

Thamira said...

ஆமா, காண்ட‌ம் காண்டம்னு ஏதோ பேசிக்கினுருக்கீங்களே.. என்னுது அது?

மதுரை சொக்கன் said...

கோர்ட்டில் கூப்பிடுவது போல் (நிசமாகவே கோர்ட்டில் அப்படிக் கூப்பிடுகிறார்களா?) கூப்பிட்டுக் காண்டத்தைக் கூண்டில் ஏற்றி விட்டீர்கள்.இனி விசாரணையென்று எல்லாரும்'போட்டுக் கிழிக்கப் போகிறார்கள்!'

narsim said...

அதிஷா..

கலக்கல் விபரங்கள்...

ஆமா.. ஒன்னு குழந்தைகள் பற்றி பதிவு.. இல்ல அது சம்பத்தப்பட்ட சாதனத்தப் பத்தி.. நடத்துங்க..

நர்சிம்

மங்களூர் சிவா said...

நல்ல பதிவு.

வெக்கபடலை பாஸூ!!

Namma Illam said...

////சிவா said...

நல்ல பதிவு.

வெக்கபடலை பாஸூ!!///
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

வெண்பூ said...

வில்லங்கமான ஐட்டத்தைப் பத்தி வித்தியாசமான விசயங்களுடன் கொஞ்சமும் விரசமில்லாமல்... கலக்கீட்டீங்க அதிஷா..

தமிழன்-கறுப்பி... said...

எவ்ளோ விசயத்தை தந்திருக்கிறிங்க

பதிவுக்கு நன்றி பாஸ்...:)

King... said...

பரிசல்காரன் said...
\
//லக்கிலுக் said...

தமிழ்நெஞ்சம் என்பவரின் பின்னூட்டங்களை காணும்போது இப்போதெல்லாம் எரிச்சல் மேலிடுகிறது. கமெண்டில் எதற்கு அவரது பதிவுக்கு சம்பந்தமில்லாமல் லிங்க் தருகிறார். உருப்படியாக எழுதினால் ஹிட் வரப்போகிறது. இப்படித்தான் ஹிட் அடிக்க வேண்டுமென்றால் இதெல்லாம் ஒரு பொழைப்பா என்று நினைக்கத் தோன்றுகிறது :-) //


பதிவை அப்புறம் படிக்கறேன். மொதல்ல இதுக்கு டபுள், ட்ரிபுள் ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய் போட்டுக்கறேன்!
\\\


?...:)

King... said...

நிறையத்தகவல்களை தொகுத்திருக்கிறீர்கள்

பாராட்டுக்கள்...

சுரேகா.. said...

மிகவும் சிறப்பாக , பயனுள்ளதாக எழுதியுள்ளீர்கள்
வாழ்த்துக்கள்!

Anonymous said...

நிறைய தகவல்கள்.
நன்றி

cheena (சீனா) said...

வெக்கபடலை பாஸூ!!