01 September 2008

பதிவர் பாலபாரதியின் நூல் வெளியீட்டு விழா : ஒரு பார்வை
பதிவர் பாலபாரதி அவர்கள் எழுதிய '' அவன்-அது=அவள் '' புத்தக வெளியீட்டு விழா சில நாட்களுக்கு முன் சென்னையில் நடந்தது .*இவ்விழா ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி சென்னை பார்வதி மினிஹாலில் மாலை 6.30க்கு தொடங்கியது.


* இவ்விழாவிற்கு கார்ட்டூனிஸ்ட் பாலா தலைமையேற்றார் . அவர் பாலாவுடனான நட்பு குறித்தும் இப்புத்தகம் உருவாக அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் குறித்தும் பேசினார்.

*புத்தகத்தை சிவஞானம் ஐயா வெளியிட லிவில்ஸ்மைல் வித்யா பெற்றுக்கொண்டார்.(படத்தில் நடுவில் இருப்பவர் கார்ட்டூனிஸ்ட் பாலா)

*புத்தகம் குறித்த விமர்சனத்தை தோழர் அ.மார்கஸ் வழங்கினார்
*ஒளிப்பதிவாளர் விஜயகுமார் மற்றும் தோழர் பாட்டாளி அவர்களும் வாழ்த்துரை வழங்கினர்.


*பதிவர்கள் பைத்தியக்காரன்,சுகுணாதிவாகர்,ஆழியுரான்,டோண்டு ராகவன்,மருத்துவர்.புருனோ, கென் , கென்னின் நண்பர் அகிலன் , உலக வானொலி பற்றி எழுதி வரும் பதிவர் மகாலிங்கம், வெண்பூ , நர்சிம் ( அவரது நண்பர்) , கடலையூர் செல்வம் , அது தவிர ஒரு வலைப்பதிவு வாசகர் (பெயர் நினைவில் இல்லை ) , கடைசி நேரத்தில் பதிவர் மக்கள்சட்டம் சுந்தர்ராஜன் வந்து சேர்ந்தார் . இன்னும் பல பதிவர்களும் வந்திருந்தனர் பெயர் தெரியவில்லை .


*விழா அரங்கிலேயே பாலாவின் புத்தக விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது , விழா முடிந்தபின் அந்த புத்தக விற்பனையாளிடம் கேட்ட போது 50க்கும் மேற்பட்ட மக்கள் வந்திருந்தும் 15 புத்தகங்கள் மட்டுமே விற்றுள்ளதாக கூறினார் . (கவலையாக இருந்தது)
*விழா முழுவதுமே பதிவர் பாலபாரதி படபடப்புடன் காணப்பட்டார் . (விழாவிற்கு அவரது மனைவியும் வந்ததால் இருக்கலாம்)

*விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் தேநீர் விருந்து கொடுக்கப்பட்டது.


*விழாவிற்கு வந்த அனைவரையும் பாலபாரதி தனது மனைவி மலர்வனம் லட்சுமியுடன் தம்பதி சமேதராய் வரவேற்றது மிக சிறப்பாகவும் மகிழ்ச்சி அளிப்பதாயும் இருந்தது .


*பதிவர் லிவிங் ஸ்மைல் வித்யா நிகழ்ச்சி முழுவதையுமே தனது ஹேண்டிகேமில் பதிவாக்கிக் கொண்டிருந்தார்


*பதிவர் வெண்பூ அவரது ஜீனியரை அழைத்து வந்திருந்தார் , குட்டி வெண்பூ விழாவையே கலகலப்பாக்கினார்.


* தன் வீட்டு விசேடம் போல தோழர் லக்கி மற்றும் நண்பர் முரளிகண்ணன் அவர்களும் மாங்கு மாங்கென்று உழைத்து நிகழ்ச்சியை வெற்றிகரமாய் முடிக்க உதவினர் .*பதிவர்கள் பலரும் கும்பல் கும்பலாக நின்று பல விடயங்களை பற்றியும் விவாதித்தனர் .


*இரவு 8.30க்கு விழா முடிந்தது . பதிவர் சந்திப்பு மேலும் அரைமணிநேரம் தொடர்ந்தது.

19 comments:

ஜோசப் பால்ராஜ் said...

பாலபாரதி எழுதியிருக்கும் இந்த புத்தகம் மிக முக்கியமான சமூகப்பிரச்சனையை குறித்தது. சக பதிவர் ஒருவரது முயற்சி வெற்றி பெற நாம் எல்லோரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

கோவி.கண்ணன் said...

அதிஷா,

இந்த இடுகையைப் படிக்கும் போது நேரியையாக விழாவுக்குச் சென்றது போல் இருக்கிறது.

//*புத்தகத்தை சிவஞானம் ஐயா வெளியிட லிவில்ஸ்மைல் வித்யா பெற்றுக்கொண்டார்.(படத்தில் நடுவில் இருப்பவர் கார்ட்டூனிஸ்ட் பாலா)//

சிவஞானம் ஐயாவின் கைகளால் வெளியிடுவது சிறப்பானது ! பாலாவின் ஏற்பாடு அருமை !

இராம.கி said...

ஊரில் இல்லாத காரணத்தால், விழாவில் பங்கேற்க முடியவில்லை. பாலாவிற்கு வாழ்த்துக்கள்.

அன்புடன்,
இராம.கி.

முரளிகண்ணன் said...

விழா நடை பெற நன்கு வேலை பார்த்த இன்னொரு நபரை விட்டு விட்டீர்களே. அவர் பெயர் அதிஷா.


\\தம்பதி சமேதரை \\
தம்பதி சமேதராக என மாற்றவும்

டோன்டு, சோமீதரன் (குறும்பட இயக்குனர்) விடுபட்டுள்ளார்கள்

நல்ல கவரேஜ்

வால்பையன் said...

நேரில் வரவில்லைஎன்றாலும் இங்கிருந்தே ஆர்டர் கொடுத்து விட்டோம் நண்பரே!

ஆமா நீங்க கூட வாங்களையாமே

வெண்பூ said...

நல்ல கவரேஜ் அதிஷா... விட்டுப்போன சில விசயங்கள்.

* பதிவர் அதிஷா அன்றைய தினம் மவுன விரதத்தில் இருந்ததால் குறைவாக பேசிக்கொண்டிருந்தார் :)
* டீயுடன் பிஸ்கட்டும் கொடுக்கப்பட்டது
* பதிவர் நர்சிம் பார்ப்பதற்கு ஜே.கே.ரித்திஷ் போல் இருப்பதாக ஒரு பேச்சு பரவியது

ஜூனியருடன் வந்திருந்ததால் விழா முடியும் வரை இருக்க முடியவில்லை. :(

narsim said...

//*விழா முழுவதுமே பதிவர் பாலபாரதி படபடப்புடன் காணப்பட்டார் . (விழாவிற்கு அவரது மனைவியும் வந்ததால் இருக்கலாம்)//

அருமையா எழுதி இருக்கீங்க..

நர்சிம்

Anonymous said...

பாலாண்ணாவிற்கு வாழ்த்துகள்..

Unknown said...

முரளி அண்ணா தவறை சுட்டி காட்டியமைக்கு மிக்க நன்றி மாற்றி விட்டேன்

பரிசல்காரன் said...

//உலக வானொலி பற்றி எழுதி வரும் பதிவர் மகாலிங்கம்,//

தப்பு தலைவா...

அந்த விழாவிற்கு தங்க.ஜெயசக்திவேல் என்ற என் நண்பர் வந்த்திருந்தார். அவர் எங்க ஊர்ர்க்காரர். அவர்தான் உலகவானொலி பற்றி எழுதிவருகிறார்.

நீங்கள் குறிப்பிட்ட மகாலிங்கம் இந்தியா டுடேவில் பணிபுரிகிறார்.

எப்படீ?

பரிசல்காரன் said...

அன்றைக்கு வரமுடியாததற்கு இன்னைக்கும் வருந்தறேன்!!!

ILA (a) இளா said...

பதிவர் பாலபாரதிக்கு வாழ்த்துக்கள். புத்தகங்கள் புதரகத்திலும் கிடைக்க ஏற்பாடு செய்ய யாராவது முன் வருவார்களா?

புதுகை.அப்துல்லா said...

ஊருக்கு போய்ட்டதால வரமுடியல. அண்ணன் பாலா இந்த ஓரு புத்தகத்தோடயா நிறுத்தப்போறாரு? அடுத்த வெளியீட்டுக்கு வந்துருவோம்.

rapp said...

பாலபாரதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

//பதிவர் நர்சிம் பார்ப்பதற்கு ஜே.கே.ரித்திஷ் போல் இருப்பதாக ஒரு பேச்சு பரவியது//

அப்போ பதிவர் நரசிம் இஸ் ஆல்சோ ய ஹார்ட் த்ராபா, அவ்வ்வ்வ்வ்வ்வ்...........:):):)

Jaisakthivel said...

கவலப்படாதீங்க நா உங்களுக்கு பின்னூட்டம் எழுதரேன்னு சொல்லீட்டு கடைசியில எம்பேரயே மாத்தீட்டீங்களே?! நல்ல வேல பரிசல்கார அண்ண பார்த்தாரு - வானொலி

narsim said...

//பதிவர் நர்சிம் பார்ப்பதற்கு ஜே.கே.ரித்திஷ் போல் இருப்பதாக ஒரு பேச்சு பரவியது//

அந்த கண்ணாடிய தலைய சுத்தி தூக்கி எறி(ரி)ந்து விட்டேன்..

(வட போச்சே..)

நர்சிம்

narsim said...

.. யாருடைய பேச்சாவது சற்று நீளமாகவோ லைட்டா அருவையாகவோ இருந்தால் வெண்பூ தன் ஜீனியரை லேசாக கிள்ளி அழ விட்டு தெளிவாக வெளியில் தூக்கி சென்று விட்டு வந்தார்..

இத விட்டீங்களே..

நர்சிம்

Unknown said...

பாலாவுக்கு வாழ்த்துக்கள். நான் ஈரோடு புத்தகக் கண்காட்சியில் புத்தகம் வாங்கிவிட்டேன்.
அன்புடன்
சந்துரு

சிங். செயகுமார். said...

ஊரில் இல்லாத காரணத்தால், விழாவில் பங்கேற்க முடியவில்லை. பாலாவிற்கு வாழ்த்துக்கள்.