Pages

03 September 2008

கலைஞருக்கு ஒரு நன்றி கடிதம் + ஒரு பிரபலமான கேலிச்சித்திரம்
முதல்வர் கலைஞருக்கு என் வணக்கங்கள் பல கோடி ....
வூட்ல உங்க புள்ள குட்டிங்கள்ளாலாம் சௌக்கியங்களா , அவங்க சௌக்கியம்தான் மொதல்ல , அப்புறம்தான் இந்த மக்க மாங்கொட்டைலாம் , உடம்பு சுகமாருக்குங்களா , எனக்குதான் ரெண்டு நாளா அஜீரணம் , ஆயி கூட சரியா போக மாட்டேங்குது , அது ஏன்னு அப்புறம் சொல்லுறேன் ,

போனா மாசம் நீங்க விட்ட அறிவிப்பால ஒரு ரூபா அரிசில கஞ்சிகாச்சி குடிச்ச ஒரு வயசான கூலி வேல பாக்கற பிச்சைகார தற்குறி தமிழன்யா நான் , உங்களுக்கு ஒட்டு போட்டேன்ங்கற தைரியத்துலதான் இந்த கடுதாசியே எழுதறேன் , தப்பிருந்தா மன்னிச்சிடுங்க ,உங்களுக்கே புத்தி சொல்ற அளவுக்கு எனக்கு அனுபவமுமில்ல அறிவுமில்லங்கய்யா !! இருந்தாலும் சில விசயத்துக்கு உங்கள பாரட்டணும்னு தோணுச்சி அதானுங்க இந்த அவசர கடுதாசி , ஏன்னா நேத்து விடுமுறை தினம் பாருங்க, வேலை வெட்டி இல்ல .......

அடடா தலைவா நீங்க மட்டும் இல்லாட்டி எங்க பாக்கட்ல இருக்கற ஒரு ரூபாய்ல டீ கூட குடிக்க முடியாம , ஏன் பப்ளிக் டாய்லெட்டுல ஒரு ரூபாய்க்கு இரண்டுக்கு கூட போக முடியாம( அங்க ஒன்னுக்கு போகதான் ஒரு ரூபா .. ரெண்டுக்கு ரெண்டுதான் ) ரொம்ப கஷ்டப்பட்டுகிட்டு கிடப்போம் , அதுக்கு மொதல்ல உங்களுக்கு நன்றி சொல்ல நான் மட்டுமில்ல தமிழ்நாட்டில இருக்கிற எல்லா பிச்சைகார தமிழனும் கடமை பட்டிருக்கான் .
உங்களோட ஒரு ரூபா அரிசி திட்டம் மட்டும் வராம போயிருந்தா நாங்கள்ல்லாம் இந்நேரம் சோத்துக்கே வழியில்லாம தூக்குல தொங்கி செத்துருப்போம் , எங்க உசிர காப்பாத்தின எசமானுக்கு எப்படி நன்றி சொல்றதுனே தெரியலங்க.

ஐயா ஒரு ரூபாய்க்கு அரிசி போட்டிங்க சரிங்க , அந்த அரிசில என்னைக்காவது சோறு தின்னுருக்கீங்களா , இப்பலாம் நாய்க்கு கூட நல்ல அரிசில சோறு போட்டாதான் சோறு தின்னுது , இல்லாட்டி அதுகூட நம்மள மதிக்க மாட்டேங்குது , உங்க அரிசியும் அப்படிதாங்கய்யா ஒரு வேளை சோறு தின்னா வாழ்க்கைல அதுக்கு பொறவு சோறு திங்கற ஆசையே வராதுங்கய்யா , அம்புட்டு ருசி , கட்டாயம் நீங்க கூட உங்கூட்டு அம்மாகிட்ட சொல்லி ஒரு வாட்டி சாப்பிட்டு பாருங்க , அதுக்கப்புறம் அத ஜீரணம் பண்ண 100 ரூபா செலவு பண்ண வேண்டி இருக்கும் . நீங்க மட்டும் அந்த சோத்த திங்காம உங்கூட்டு நாயி , பூனை , அப்புறம் உங்க மந்திரிங்கனு எல்லாருக்கும் போடுங்க , அவங்களுக்கும் தெரியட்டும் அந்த சோறு எம்புட்டு ருசினு.

முதல்வர் ஐயா நாங்கள்ளலாம் விலை வாசி உசந்து போயி _____ பிதுங்கி கிடக்கயில , உங்களோட இந்த அறிவிப்புனால அப்படியே புல்லரிச்சு போயி புலங்காகிதமடஞ்சிட்டோங்கையா , ஆனா உங்களோட இந்த அருமையான திட்டத்த எங்களால முழுமையா அனுபவிக்க முடியாம எதோ ஒன்னு தடுக்குதுங்க , அது வேற ஒன்னுமில்லங்கையா , நம்ம ஊர்ல பருப்பு , எண்ணை , உப்பு , புளி, மொளகா னு சமைக்க நிறைய ஐட்டம் வேணுங்களாமே , அதுலாம் இல்லாம சமச்சா சோறு நல்லாருக்காதுனு எங்கூட்டு தங்கமணி சொல்றாங்கையா , அவ கிடக்கறா நாட்டு பொறம் , அவளுக்கு என்ன தெரியும் , நான் உங்க அரும பெருமயெல்லாம் சொல்லி சமைக்க சொன்னா , கஞ்சி மட்டும்தான் காச்ச முடியும் வேற ஒன்னும் முடியாதுனுட்டா , சரி அதயாவது செய்யுடினா அதுக்கும் பிரச்சனைங்கையா , நம்மூர்ல கேஸ் ஸ்டவ்லாம் வந்தாலும் எங்கூட்டுல இன்னும் திரி ஸ்டவ்தாங்க , மண்ணெண்ணை விலை ஏறி போச்சி, இருந்தாலும் நீங்க எங்க தலைவராச்சே, விடுவமா இதோ ஆரம்பிச்சிட்டோம் சிக்கி முக்கி கல்ல வச்சி கற்காலத்தில பண்ண மாதிரி சோறு பொங்கி திங்க ... அதுக்கும் வழியில்லாட்டி அப்படியே சாப்பிடறோம் .

இப்பல்லாம் உங்க அரிசிய வேக வைக்காம அப்படியே தின்னுட்டு அது ஜீரணம் ஆக கொஞ்சம் காத்தாட நீங்க குடுத்த டீவில , உங்க சொந்த சேனல்ல வர குத்தாட்டம் பாத்து குஷியாகலாம்னா அதுக்கும் வழியில்லாம போயிடுச்சுங்க , ஆமாங்கையா இப்பலாம் எப்பவாச்சும் தான் வீட்டுல கரெண்ட்னு ஒண்ணு இருக்கு , எனக்கும் தங்கமணிக்கும் பரவால்லைங்க நம்ம புள்ளைங்கதான் பாவம் அதுங்க படிக்கிற கார்ப்பரேசன் இஸ்கூல்ல குடுக்கற வீட்டுபாடம் செய்ய முடியாம பரீச்சைக்கு படிக்க முடியாம திண்டாடுதுங்க , அத பாக்கயில தான் மனசுக்கு என்னமொ பண்ணுதுங்க , ஆனா ஒன்னுங்க நீங்க பண்ணதுல இருக்கற உள்குத்து இப்பதான் புரியுது , முன்னாடிலாம் பிள்ளைங்க உங்க சேனலத்தான் பாத்துகிட்டு படிக்காம கிடந்துச்சுங்க இப்பலாம் மெழுகு வர்த்தில கூட ஒழுங்கா படிக்குதுங்க , ரோட்டுல விளையாடுதுங்க , தயவு செஞ்சு இனிமே எப்பவும் கரெண்டே குடுக்காதீங்க புள்ளைங்க உங்க டீவி பாத்து கெட்டு போகமா ஒழுங்கா படிக்கும் . உங்க வூட்ல எப்படிங்கையா இருபத்திலநாலு மணிநேரமும் கரண்ட் வருதுங்களா?

இப்பல்லாம் பிள்ளைங்க ரோட்டுல இறங்கி விளையாடறதும் , பொம்பளைங்க வீட்டு வாசப்படில உக்காந்துகிட்டு பக்கத்து வீட்டு பெரியம்மாவோட பேசறதும் , 20 வருஷம் முன்னாடி இருந்த ஒரு சூழ்நெலய இப்ப அனுபவிக்க வச்சதுக்கு ரொம்ப நன்றிங்க ,

எங்க வாழ்க்கைல விளக்கேத்தாட்டியும் வூட்டுலலாம் விளக்கேத்தி வச்சு பெருமையடஞ்சிட்டீங்க எசமான் . அதுக்கு ஒரு நன்றி .

இப்படி விறகடுப்புல கஞ்சி காச்சி குடிக்க வச்சி , பெட்ரோல் விலைய ஏத்தி மாட்டு வண்டிக்கு எங்கள மாற வச்சி, கரெண்ட புடுங்கி வூட்டு வூடு திரி வெளக்கேத்தி ஒரு மாதிரி கற்கால மனுசங்களா தமிழங்கள மாத்தின பெருமை வரலாற்றுல யாருக்கு இருக்கு!! .
இப்படி ஒரு மாசத்தில உங்க ஆட்சியால எங்களலாம் கற்காலத்துக்கே அழைச்சிட்டு போன உங்க நிருவாக திறமைக்கு எப்படி நாங்க நன்றிகடன் செலுத்தறதுனே தெரியலைங்க சாமி.

இப்படி நீங்க கல்தோன்றி மண் தோன்ற மூத்த குடி மக்கள அந்த காலத்துக்கே அனுப்பி அதையும் ரசிக்க வச்சதுக்கு உங்களுக்கு ஒரு கோயில் கட்டி கும்பிடலாம் சாமி .

இப்படிலாம் நல்லது பண்ண உங்கள போயி தப்பு தப்பா பேசற அந்த லூசு பசங்கள பத்தி கவலப்படாதீங்க சாமி , அவங்களுக்கு என்ன தெரியும் உங்களப்பத்தி , உங்க டாஸ்மாகலயே குடிச்சிட்டு உங்களயே கொற சொல்லுவாங்க . நீங்க அடுத்த படத்துக்கு கதை வசனமெழுது சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க காத்துக்கிட்டு கெடக்கோம் , பச்சயா அரிசி தின்னா ஜீரணம் ஆக மாட்டேங்குது .

அவ்ளோதான் எசமான் , இதுக்கு மேல பேச ஒண்ணுமில்லீங்க , ஒரு பத்து நிமிஷம் தெரியாம உங்களுங்க கரெண்ட் குடுத்துட்டாங்க போலருக்கு , பிள்ளைங்க மூஞ்ச பாத்திட்டு வந்துடறேன்.

கடைசியா ஒன்னு சொல்லிக்கிறேன் நீங்க பாட்டுக்கு அரிசி விலைய குறைச்சிட்டீங்க அது என்னமோ நீங்க மின்சார பிரச்சனைய மறைக்கத்தான் பண்ணுறீங்கன்னும் அடுத்தப்ல வரப்போற தேர்தலுக்காகவும் பண்றீங்கன்னும் உங்க டவுசர அந்த லூசு பயலுங்க கழட்டுவாய்ங்க , அதுக்குலாம் கவலைப்படாம அடுத்த அறிவுப்புல அம்பது காசுக்கு ஒரு கிலோ அரிசி குடுக்க ஏற்பாடு பண்ணுங்க ...........

அது வரைக்கும் உங்களிடமிருந்து விடை பெறுவது ,

கல்தோன்றி மண் தோன்றா காலத்துல வாழ்றமோனு சந்தேகத்தோடயும் பச்சையா அரிசி தின்னு ஆய் போகமா அஜீரணத்தால அவதி படற

அதே பிச்சக்கார தற்குறித் தமிழன்
_____________________________________________________________________________________


விநாயகர் சதுர்த்திக்காக ஒரு ஸ்பெசல் படம் ;

மிக பிரபலமான ஒரு பழைய பிரிட்டிஷ் கேலி சித்திரம் :(படத்தின் மீது கிளிக்கி பெரிதாக்கி பார்க்கலாம் )

இந்த படத்தை வரைந்தவர் , EH.SHEPHERD எனபவர் , ஆண்டு 1946 , இந்திய , பாகிஸ்தான் பிரிவினைக்கு முன் இந்தியாவின் ஒருமைப்பாடு குறித்து அவர் வரைந்த ஒரு கேலி சித்திரமாகும் .

இப்படத்தில் அவர் பெரும்பான்மை ஹிந்துக்களின் அப்போதைய காங்கிரசை ஒரு யானையாகவும் , இன்னொரு யானையாக ஜின்னாவின் முஸ்லீம் லிக்கினையும் சித்தரிப்பதாக இந்த சித்திரம் அமைந்துள்ளது . அவ்விரு யானைகளும் இந்தியாவின் சுதந்திரத்தை காட்டிலும் தங்கள் சுய கௌரவத்தை பெரிது படுத்தி ஒன்றுக்கொன்று ஒத்துழைக்காமல் இருப்பது போல இச்சித்திரம் வரையப்பட்டுள்ளது .

இந்திய சுதந்திரம் பெரும் முன் அப்போதைய பிரிட்டிஷ் இந்திய வைசிராய் மௌண்ட்பேட்டன் பிரபுவின் இந்திய-பாக்கிஸ்தான் பிரிவினை குறித்த பிரபலமான உரை,

"There can be no question of coercing any large areas in which one community has a majority to live against their will under a government in which another community has a majority. And the only alternative to coercion is partition."

இந்த பேச்சு அவரால் 1947ஆம் ஆண்டு ஜீன் மாதம் 6 ஆம் நாள் பேசப்பட்டது.

____________________________________________________________________


அவ்ளோதாங்க............


:-)


*****************