
தவளையின் பிரார்த்தனை :
அந்த மதகுருவுக்கு இரவு பிரார்த்தனை என்றால் மிக பிடிக்கும் , முன்னிரவுகளில் தொடங்கும் அவரது பிரார்த்தனை விடியும் வரை கூட தொடர்வதுண்டு , இரவெல்லாம் இறைவனை வேண்டி மிக அதிக சத்தத்துடன் துதி பாடல்களை பாடுவார் , ஆனால் கடந்த மூன்று நாட்களாக மட்டும் அவரால் அப்படி பிரார்த்தனை செய்ய இயலவில்லை , அதற்கு காரணம் அவரது வீட்டிற்கு அருகில் புதிதாய் முளைத்த குளத்தில் இருக்கும் தவளையின் கொர் கொர் சத்தம் .
அவரும் பல முறை அந்த குளத்தை நோக்கி கத்தி பார்த்தார் , '' ஏ தவளையே என்னை நிம்மதியாக இருக்கவிடு '' என்று பல முறை கூறியும் , இவர் ஒவ்வொரு முறை கூறும் போதும் அந்த திமிர் பிடித்த குட்டி தவளை மேலும் பலமாக கத்தி அவரை எரிச்சலூட்டியுது ,
அன்று மிக முக்கியமான ஒரு பிரார்த்தனை நாள் , அவரால் அந்த தவளையின் சத்தத்தில் முழுமையாய் அந்த பிரார்த்தனையை செய்ய இயலாமல் போகவே அவர் இறைவனிடம் அந்த தவளை குறித்து கடிந்து கொண்டார் , திடீரென அந்த அறையில் அசரீரியாய் ஒரு குரல்
''சொல் உனக்கு என்ன வேண்டும் ''
''யார்ரா அது''
''மானிடா நான்தான் எல்லாம் வல்ல இறைவன் ''
''ஐயய்யோ சாமி நீங்களா ''
''ஆமாம் ஏன் என்னை அழைத்தாய் ''
''சாமி மூணு நாளா என்னால என்னோட பிரார்த்தனைய சரியா பண்ண முடியல , பக்கத்து குளத்தில இருக்கற ஒரு குட்டி தவளை ரொம்ப தொந்தரவு குடுக்குது , எப்படியாவது அத ஊமையாக்கிருங்க ''
''அடப்போங்கடா , நீங்களும் உங்க பிரார்த்தனையும் , அந்த தவளையும் மூணு நாளா இதத்தான் எங்கிட்ட கேட்டு பிரார்த்தனை பண்ணிகிட்டு இருக்கு ''
என்று கூறி டமார் என மறைந்து போனார் .
_________________
___________________________________________________
(கதைக்கரு - அந்தோணி டி மெல்லோ .. அவரது தவளையின் பிரார்த்தனை கதை நிறைய மாற்றங்களுடன் ) . இக்கதை பிரார்த்தனை குறித்த நம் நம்பிக்கைகளை தகர்த்தெறிய வல்லது , ஊன்றி படித்தால்.
____________________________________________________________________
இன்று செப்டம்பர் ஐந்து இந்தியா முழுவதும் ஆசிரியர் தினம் அமரர் . டாகடர்.சர்வேபள்ளி ராதாகிருஷணன் பிறந்த நாளையொட்டி கொண்டாடப்படுகிறது .
தெய்வத்தை விட உயர்ந்த மதிப்புடைய , நமது வாழ்க்கையின்ஏணிப்படிகளாய் நமக்கு அறிவு புகட்டிய ஆசான்களை இன்றைய நாளில் மட்டுமல்லாது எந்த நாளும் வணங்குவோம்.
_________________________________________________________________
இன்று வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்த நாள் . இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் வெள்ளையரை எதிர்த்து அவர்களுக்கெதிராய் கப்பலோட்டி தமிழினத்திற்கே பெருமை சேர்த்த அவரை இன்றைய தினத்தில் நினைவு கூர்வோம்.
_________________________________________________________________
8 comments:
அதிசா,
இளமை விகடனில் உங்கள் பணியன் வாசகங்கள் கலக்கல் !
jupper....
மிக்க நன்றி கோவி அண்ணா...
ஹிஹி...
இந்த கதையும் கலக்கல்தான். :)
//''அடப்போங்கடா , நீங்களும் உங்க பிரார்த்தனையும் , அந்த தவளையும் மூணு நாளா இதத்தான் எங்கிட்ட கேட்டு பிரார்த்தனை பண்ணிகிட்டு இருக்கு ''
//
தவளையும் மனிதனும் சமஸ்கிரத்தில் பிராத்தனை செய்திருந்தால், அட நம்ம பாஷையாச்சேன்னு மொழிப்பற்றால் மனம் மகிழ்ந்து கடவுள் அருளி இருப்பார்.
:)
மூன்று பாதரியார்கள் நாட்டு நாடாக சென்று தமது மதத்தை பரப்பி கொண்டிருந்தார்களாம்.
ஒரு நாள் ஒரு தீவை கண்டறிந்தார்கள், அதில் ஒரே ஒரு வயதான மனிதர் வாழ்ந்து கொண்டிருந்தார். அவரிடம் மூன்று பெரும் மதத்தின் அருமை பெருமைகளை போதித்தார்கள். மேலும் கடவுளுக்கு எப்படி நன்றி சொல்வது என்றும் சொல்லி கொடுத்தார்கள், (அதாங்க ஜெபம்). எல்லாம் முடிந்த பின் வருகிறோம் என்று விடை பெற்றார்கள்.
கப்பலில் ஏறி சிறிது தூரம் சென்ற பின் தீவை பார்க்க, அந்த வயதானவர் நீர் மேல் வேகமாக ஓடி வந்து கொண்டிருந்தார். மூன்று பாதரிகளுக்கும் ஒன்றுமே புரியவில்லை.
ஓடி வந்த அவர், ஐயா நீங்கள் சொல்லி கொடுத்த ஜெபம் மறந்து விட்டது. மீண்டும் சொல்லிக்கொடுங்கள் என்றாராம்.
மூன்று பாதிரிகளும் அவர் காலில் விழுந்தார்களாம்
//தவளையும் மனிதனும் சமஸ்கிரத்தில் பிராத்தனை செய்திருந்தால், அட நம்ம பாஷையாச்சேன்னு மொழிப்பற்றால் மனம் மகிழ்ந்து கடவுள் அருளி இருப்பார்.//
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்!
இங்கே இவரு சொல்லிருக்குற விஷயம் சாதியோ, மொழியோ சம்மந்தப்பட்டதே இல்ல. தவிரவும், ப்ரார்த்தனையைப் பற்றிக் கோடிக்காட்டப்பட்டிருக்கும் விஷயமானது, எல்லா மதங்களுக்கும் பொருந்தும்.
அது ஆடி மாசம் மாரியம்மன் கோயில்ல வெக்கிற ஒலிபெருக்கியாக இருந்தாலும்; மசூதியில வெக்கிறதா இருந்தாலும்; கிறித்தவர் தேவாலயத்துல இருக்குறதா இருந்தாலும், சொல்லப்பட்ட சேதி எல்லாத்துக்கும் பொருந்தும். அப்போ பின்னூட்டத்துலயும், நக்கலடிக்கிறதுன்னா எல்லாத்தையுமே சொல்ல வேண்டியது தானே! பதிவர் என்னவோ பொதுப்படையாத் தானே எழுதிருக்காரு.
இதுல என்ன மாமியா ஒடச்சா மண் கொடம்; மருமவ ஒடச்சா பொன் கொடம்ங்குற மாதிரி, தேவையில்லாம "சமஸ்கிரத்தில்" என்று (அதுவும் தப்பு தப்பா; அது பேரு "ஸம்ஸ்க்ருதம்") நுழைத்து ஒரு சாதீய நிறம் கொடுப்பது!
எங்கேடா வாய்ப்பு கிடைக்கும், ப்ராம்மணனை, வேதத்தை, ஸம்ஸ்க்ருதத்தைத் திட்டலாம்னு காத்துட்டிருப்பீங்களோ! "பகுத்தறிவு", இல்லையா?! கரெக்ட்டு கரெக்ட்டு!
அரபியில, உருதுவில, லத்தீன்லன்னு கூடத் தான் சொல்லிருக்கலாம். ஆனா, மாட்டீங்களே. ஏன்னா, உண்மையான பகுத்தறிவாளன்னாத் தான் அதெல்லாமும் சொல்வான்; பலருக்கு "பகுத்தறிவு"ங்கிறதே உள்ளுக்குள் இருக்கும் ப்ராம்மண எதிர்ப்பான சாதி வெறியை மறைக்க போட்டுக்கொள்ளப்படும் ஒரு போர்வை தானே. நடக்கட்டும் நடக்கட்டும்.
இதுல மத்தவங்களுக்கு சுயபரிசோதனை செய்யச் சொல்லி அறிவுரை வேற! எதுவோ வேதம் ஓதுன மாதிரி!
-கரை ஏறிட்டவங்கள்ல ஒருத்தேன்.
என்னப்பா நீ ரஜனீஷா?
Post a Comment