05 September 2008

இந்த டி-ஷர்ட் சரவணா ஸ்டோர்ஸில் திருடியது.......

டி-ஷர்ட்டுகளில் 1970 களிலிருந்து இன்று வரை பல வித வாசகங்களும் வருவது அனைவரும் அறிந்ததே ... , அதிலும் குறிப்பாக பெண்கள் அணியும் இவ்வகை சட்டைகளில் வரும் வாசகங்கள் குறித்து தனி பதிவே எழுதலாம்.
பொதுவாக டி-ஷர்ட்களில் வெளியாகும் இவ்வாசகங்கள் முழுவதும் ஆங்கிலத்திலேயே வருவதால் , என்னை போன்ற படிக்காத தற்குறி பயல்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை , இவ்வகை வாசகங்கள் பெரும்பாலும் தமிழில் வெளியாகும் அற்புதமான படங்களின் பஞ்ச் வசனங்களை ஒத்தவை , வருங்காலத்தில் வரும் இவ்வகை சட்டைகளில் தமிழில் வாசகங்கள் வெளியானால் எப்படிப்பட்ட வாசகங்களை நம் சமூகத்திற்கும் கலாச்சாரத்திற்கும் ஏற்ற வகையில் போட்டுக் கொள்ளலாம் என்பதை பார்ப்போம் .

இனி வாசகங்கள் :

முதலில் ஆண்களுக்கான வாசகங்கள் சில :


#டாஸ்மாக் எந்த பக்கம் ?
#முதலில் நான் ஒரு இந்தியன் அப்புறம்தான் தமிழன்!!
#இலவு காத்த கிளி கதை தெரியுமா?
#ஸாரி எனக்கு கல்யாணமாயிடுச்சி

#நான் குடிச்சாதான் நல்லா யோசிப்பேன்

#நான் குடிச்சாதான் பிளாக் எழுதுவேன்

#பெண்கள தாயா மதிக்கிறவன் - உன்னைத் தவிர

#இந்த சட்டை காதலியின் பரிசு - 50 ரூபாதான் :-(

#நானும் தமிழன்தான் தெலுங்கு பிகர பாக்கற வரைக்கும்....

#பெண்களுக்கு தமிழில் பிடித்த வார்த்தை - என் பெயர்

#காதலிக்கும் ஆசையில்லை என் கண்கள் உன்னை காணும் வரை
#யார் தச்ச சட்டை - எங்க தாத்தா தெச்ச சட்டை
#நானும் பொது சொத்துதான் - மகளிர்க்கு மட்டும்??

#என்னை தெரியுதா?? - கீழ பார்த்தா எப்படி தெரியும் மேல பாரு

#ஒரு கவிதை சொல்லவா - உன் பெயர்

#எனக்கு ரொம்ப நீளம் - நாக்குங்க

#இந்த டி-ஷர்ட் சரவணா ஸ்டோர்ஸில் திருடியது .

#வாடகைக்கு - என் இதயம் ( மனைவி ஊரிலிருந்து வரும் வரை )

#ஐ லவ் சென்னை - அடுத்த வாரம் வரைக்கும்

#என்ன சிரிப்பு ராஸ்கல் சின்னபுள்ளதனமா

#என்னை கதற கதற ஆதம்டீஸிங் பண்ணலாம்!!

#உங்களுக்கு எத்தனை குழந்தைகள்

#இரவினில் ஆட்டம் - பகலினில் தூக்கம்

#இந்த பூனையும் பீர் குடிக்கும்.. நீ வாங்கி தந்தா

#வேலை இல்லா இளைஞன் நான்... அப்படியே இருக்க ஆசைப்படறேன்

#இது எங்கப்பன் வூட்டு சொத்து

#உங்களோட சேர்த்து இத 61,23,32,99 பேர் படிச்சிருக்காங்க

#எவ்ளோ அடிச்சாலும் நான் ஸ்டெடி

#என் காதலிக்கு மெரினா பீச்ல இடம்தான் வாங்கிதர முடியாது , ஆனா

சுண்டல் வாங்கி தரலாம் .

#குருவிக்கும் குசேலனுக்கும் என்ன சம்பந்தம்

பெண்களுக்கான வாசகங்கள் சில :
#இங்க என்ன பார்வை ?
#மூஞ்ச பாக்க மாட்டீங்களே??

#மனசு ரெண்டும் புதுசு

#லூசாப்பா நீ

#பின்னால எதுவும் எழுதல.. முன்னால மட்டும்தான்

#ஐ எம் ப்ரம் சாவடிச்சான்பட்டி.. வான் ட்டூ நோ மோர்

#உனக்கு அரை அடிதான் எனக்கு ரெண்டடி .. முடிடா

#இன்ச் இன்சா மனுச வாழ்வ புருஞ்சிக்கோ .. எந்த இன்ச்சில் இப்ப இருக்க

நெனச்சிக்கோ

#பிஞ்ச செறுப்ப பாக்கணுமா

#இலவசம் இலவசம் .. மனசு மட்டும்

#இதயத்துக்கு மேல என்ன இருக்கு -- டிஷர்ட்

#டிஷர்ட்குள்ள என்ன இருக்கு -- இதயம்

#பெண்ணின் பெருமை

#பெண்கள்தான் நாட்டின் கண்களா? , ஆண்கள் மத்ததெல்லாமா?

#நீங்க தனியா வந்துருக்கீங்களா?

# அவனா நீ?

#நீங்க ஜொள்வடிச்சான் பட்டியா?

#குடிப்பழக்கம் உடல் நலத்துக்கு கேடு - நான் சொந்த காசில் பீரடிப்பதில்லை

#தீப்பெட்டி இருக்கா ? - விளக்கேத்தரதுக்குடா

#ஹாய் செல்லம்?

#என் போன் நம்பர் வேணுமா ..? உங்க அப்பாவ அனுப்பு

#ஈவ்டீசிங் கம்ப்ளைண்ட் எங்க குடுக்கணும்ணு தெரியுமா?


சில பொதுவானவை :

#தமிழ்ல மொத்தம் எத்தனை எழுத்துனு தெரியுமா?

#மச்சி நீ கேளேன்

#LORD MURUGA IS MY FAVOURITE TAMIL GOD

#மனித வெடிகுண்டு . எண் ; 666

#அல்வாடா புஜ்ஜி

#கம்னாட்டி ( I MEAN COME NAUGHTY)

#குரங்குப்படம் ( உங்க படம்தான் பயப்படாதீங்க )

#போலீஸ் என் நண்பன் :-)

#எனக்கு தமிழ் தெரியாது....!!!


____________________________________________________________________

எனது இந்த வாசகங்கள் தவிர மேலும் எனது சில டிசர்ட் வாசகங்கள் இந்த வார ஆனந்தவிகடனில் வெளியாகியுள்ளது , அது தவிர http://youthful.vikatan.com/ தளத்திலும் இலவசமாக சந்தாதாரராகி அக்கட்டுரையை படிக்கலாம் .


____________________________________________________________________

35 comments:

வால்பையன் said...

காலையிலேயே அங்கே படித்தேன்
ஆனால் கமென்ட் போட முடியவில்லை.
வாழ்த்துக்கள்
வாசககங்கள் அருமை

நந்தா said...

செமை ரவுசா இருக்கு வாசகங்கள் எல்லாம்.

கலக்குங்க அதீஷா.

http://blog.nandhaonline.com

சரவணகுமரன் said...

சூப்பரு....

வெண்பூ said...

அடப்பாவி.. வாழ்த்து சொல்லலாம்னு வந்தா அத மறக்கடிக்கிற மாதிரி தங்கத் தலைவி படத்தை போட்டு ரசிகர் மன்றத்தை பத்தி கும்மியடிச்சிட்டியேய்யா.... :)

அதென்னா கவுரவத்தலைவர்???

Sen22 said...

கலக்கல்...

லக்கிலுக் said...

வாழ்த்துக்கள் தோழர். இந்த வார விகடனில் கூட இந்த மேட்டர் வந்திருக்கு போல. கலக்குறேள்!!

Anonymous said...

எக்ஸலண்ட் அதிஷா...முருகன் கமெண்ட் தமிழ்ல இல்லையே ?

narsim said...

"கலக்கல் அதிஷா.."

பின்னூட்டம் இல்லங்க.. இதையும் வாசகமா போட்டா டிசர்ட் சேல்ஸ் பின்னிறாது??

நர்சிம்

மங்களூர் சிவா said...

/

#என் போன் நம்பர் வேணுமா ..? உங்க அப்பாவ அனுப்பு
/

இதுக்கு எதாவது ஏடாகூடமா சொல்லணும்னு தோணுது சரி வேணாம் !!

:))))

முரளிகண்ணன் said...

அதிஷா அசத்தல்ஷா

ers said...

அதிஷா அத்தனையும் அருமை... உக்காந்து யோசிப்பீங்களா? தனியா ரூம் போட்டு எழுதிறீங்களா?

பரிசல்காரன் said...

//#கம்னாட்டி ( I MEAN COME NAUGHTY)//

யோவ்! சூப்பர்யா!

உங்கிட்ட மேட்டர் இருக்கு!!!

Unknown said...

//#உங்களோட சேர்த்து இத 61,23,32,99 பேர் படிச்சிருக்காங்க

//

:))))))))))))))))))))

Thamira said...

வெண்பூ ://அடப்பாவி.. வாழ்த்து சொல்லலாம்னு வந்தா அத மறக்கடிக்கிற மாதிரி தங்கத் தலைவி படத்தை போட்டு ரசிகர் மன்றத்தை பத்தி கும்மியடிச்சிட்டியேய்யா.... :)// ரிப்பீட்டேய்..

தமிழன்-கறுப்பி... said...

:))

தமிழன்-கறுப்பி... said...

கலக்கல்...:)

thamizhparavai said...

'செம ஹாட் மச்சி' லேபிளுக்கேத்த போஸ்ட்டு...எல்லாமே தூள்...
(பி.கே.பி க்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்)

புதுகை.அப்துல்லா said...

உங்கிட்ட மேட்டர் இருக்கு!!!
//

அதான் தலைவி ஷகிலா படத்த பெருசா வச்சுருக்காருல்ல :)

Tech Shankar said...

பின்னிப் பெடலெடுக்கிறீங்க.. கலக்கல்ஸ்

Anonymous said...

:)))))))
கலக்கல்

Unknown said...

கலக்கல் ஆதிஷா....

சந்தர் said...

ரொம்ப காலத்துக்கு முன்ன (அதாவது நீங்க எல்லாம் பிறக்காதப்ப!)பத்திரிக்கைகளில் படம் வரையும் நம்ப ஜெயராஜ் (நிறைய சுஜாதா கதைகளு்ககு அவர்தான் படம் போடுவார்) படங்களில் வரும் நாயகிகளுக்கு டி-சர்ட் ஜீன்ஸ் மாட்டிவிட்டு டி-சர்ட்டில் வாசகங்கள் எழுதுவார் பாருங்க... நீங்க எழுதியதெல்லாம் ஜூஜுபி. (உ-ம்) Ba Ba Black sheep Have you any wool? Yes Sir, Yes Sir, Two Bags Full!
இன்னொன்று TNDDC (அர்த்தம் தெரியுமா உங்களு்ககு? Tamil Nadu Dairy Development Corporation).

செவத்தப்பா said...

இப்படியே போனா, வெளங்கிடும் சாமி! வாழ்த்துக்கள்...

Boston Bala said...

நல்லா இருக்கு!

Anonymous said...

pls check this
http://honey-tamil.blogspot.com/2008/09/blog-post_11.html

:(((

Anonymous said...

pls check this
http://honey-tamil.blogspot.com/2008/09/blog-post_11.html

:(((

Anonymous said...

உங்க பதிவு உங்க பெரில்லாம, அதுவும்
தானே விகடனில் எழுதியமாதிரி இருந்நுது. நிறைய பதிவுகள் ஒரிஜனல் இல்லாம இருக்குது. அதை உங்க பார்வைக்கு கொண்டு வந்தேன்.

Anonymous said...

hello ur posts are really good, usually i dont read tamil blogs but after reading urs i thought it would be fun reading tamil . thank u athisha..god bless u

தறுதலை said...

பட்டுக்கோட்டை பிராபகரின் (பரத்)சுசி வாசகங்களும் ஈர்ப்பவை.

Tit for Tat
Black in White

MBBS கூட அழியாப் புகழ் பெற்ற வாசகம்தான். இது இது ப.கோ.பியுடையது அல்ல.


-----------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

#இத வாசிக்கிறியே.. உனக்கு வேற வேலையே இல்லையா?

இது ஆங்கிலத்திலிருந்து சுட்டது. :D

அதிஷா.. அப்படியே இந்த வாசகங்களுக்கு உரிமையை பதிஞ்சு வச்சுடுஙகோ.

கௌபாய்மது.

Unknown said...

அப்பிடியே

`தமிழ் நெஞ்சம்` இதையும்

சேத்துக்கோங்க.....

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//பிஞ்ச செறுப்ப பாக்கணுமா//

அட்டகாசம்..

Tech Shankar said...


தன் மகனை நனைய விடாமல் தடுத்து தான் நனையும் தாய் - அன்னையர் தின வாழ்த்துகள் - 2009

ஸ்ரீ.கிருஷ்ணா said...

"இந்த டி-ஷர்ட் சரவணா ஸ்டோர்ஸில் திருடியது
அருமைகலக்குங்க அதீஷா.

சீமான்கனி said...

அடி தூள் அண்ணே.....