ரஜினியின் எந்திரன் தி ரோபோ : முதல் போஸ்டர் !!
>> 08 September 2008
இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யாராய் இணைந்து நடிக்கவிருக்கும் எந்திரன் தி ரோபோ திரைப்படத்தின் முதற்கட்ட படப்படிப்பு பெரு நாட்டில் இன்று முதல் தொடங்கவிருக்கிறது , இப்படத்தை திருட்டுடிவிடி புகழ் ஐங்கரன் நிறுவனமும் வடநாட்டு எராஸ் நிறுவனமும் இணைந்து தாயாரிக்கின்றன் .
படத்தின் ஓளிப்பதிவாளராக ரத்னவேலும் , கலை சாபு சிரிலும் பணியாற்றவுள்ளனர் .
படத்திற்கு இசை ஏ.ஆர்.ரகுமான் . இது தவிர சிலபல ஹாலிவுட் பெரும்புள்ளிகளும் படத்தின் பிண்ணனியில் பணியாற்ற உள்ளனர் .
அப்படத்தின் முதல் போஸ்டர் .
இத்திரைப்படம் குசேலன் என்னும் கலைப்படத்தால் வீழ்ந்து தாழ்ந்து போன ரஜினியின் புகழை தூக்கி நிறுத்தும் என அவரது ரசிகர்கள் கொலைவெறியோடு காத்திருப்பதாக தெரிகிறது , இப்படம் ஷங்கரின் மற்ற படங்களை போலல்லாமல் மிக விரைவில் 2011ல் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.


12 கருத்துக்கள்:
//இத்திரைப்படம் வீழ்ந்து தாழ்ந்து போன ரஜினியின் புகழை தூக்கி நிறுத்தும் என அவரது ரசிகர்கள் கொலைவெறியோடு காத்திருப்பதாக தெரிகிறது //
வணக்கம் தல
நர்சிம்
:-)))...
எல்லா பதிவர்களும் ரெடியாகிகொங்க, உங்களுக்கு ஒரு வேட்டை காத்துகிட்டு இருக்கு
//
இத்திரைப்படம் குசேலன் என்னும் கலைப்படத்தால் வீழ்ந்து தாழ்ந்து போன ரஜினியின் புகழை தூக்கி நிறுத்தும் என அவரது ரசிகர்கள் கொலைவெறியோடு காத்திருப்பதாக தெரிகிறது , இப்படம் ஷங்கரின் மற்ற படங்களை போலல்லாமல் மிக விரைவில் 2011ல் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது//
இப்ப்டித் தேவையே இல்லாமல் ரஜினியை விமர்சிக்கும் போக்கை எப்போதுதான் கைவிடப் போகிறீர்கள்?
இதை ரஜினியே மன்னித்தாலும் நான் மன்னிக்கத் தயாராயில்லை!
//மிக விரைவில் 2011ல் வெளியாகும் //
கண்டிப்பா 2010க்கு முன்னால எதிர்பார்க்க முடியாது.. பாக்கலாம் இன்னும் என்னென்ன நடக்குதுன்னு..
கொலைவெறியோடு காத்திருப்பதாக தெரிகிறது????
இந்த ஆட்டைக்கு நான் வரவில்லை.
2011க்கு வரைக்கும் திருட்டுத்தனமா ஸ்டில் புடிச்சு போர்றவங்களதா நம்பியிருக்கணும்.
:)))))
//இத்திரைப்படம் குசேலன் என்னும் கலைப்படத்தால் வீழ்ந்து தாழ்ந்து போன //
அப்ப கலைப் படங்களை எல்லாம் என்னன்னு சொல்லுவீங்க?
அப்புறம் ரஜினியோட மத்தப் படங்கள் எல்லாம் கலை இல்லையா?
அதிஷா இதை கக பதிவர்கள் மன்னித்தாலும் பரிசல்காரனை நான் மன்னிக்கத் தயாராயில்லைனு ஒரு பதிவு போடுங்க...
:-)))))))))))) சங்கர் தனது வழக்கமான லஞ்ச லாவன்யா கதையாடல் இதிலும் தொடராமல் கொஞ்சம் வேற யோசிசாருனா நல்லா இருக்கும்!!
o.k
mhmmm.. nee eppadi nakkal adikkuradhala yarum padam pakkama erukka poradhu ellai kannammaaa... nee vendum-na paru... unga naina kuda firsttt ala q-le nipparuuu... enna kodumaiii sirrr edhuuuu...
Post a Comment