15 September 2008

வலையுலகில் பதிவுகளை திருடும் முகமூடி கும்பல்...!!!


சமீபகாலமாக சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் முகமூடி கொள்ளையர்களின் கைவரிசை அதிகமாகியுள்ளது , அது போல நம் பதிவுலகத்திலும் கொள்ளையர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது . பதிவு திருட்டு என்பது என்னை போன்ற புதிய பதிவர்களுக்கு மிக புதியதும் அரியதுமான ஒரு வார்த்தை .இரண்டு வாரங்களுக்கு முன் எனது டிஷர்ட் வாசகங்கள் குறித்த பதிவு எனது வலைத்தளத்தில் வெளியானது அனைவரும் அறிந்ததே , அந்த பதிவில் HISUBASH என்னும் நண்பர் ஒருவர் ஒரு பின்னூட்டத்தில் ஒரு லிங்க்கை கொடுத்து அதை பார்வையிட கூறியிருந்தார் . அந்த வலைப்பக்கத்தில் பார்த்தால் எனது டிஷர்ட் பதிவு ஒரு வரி கூட மாறாமல் அப்படியே முழுவதுமாக காப்பி பேஸ்ட் செய்யப்பட்டிருப்பதை பார்க்க நேர்ந்தது (தலைப்பு மட்டும் மாற்றப்பட்டுள்ளது ) . சரி நமது ஒரு பதிவுதானே என்று அந்த வலைப்பூவை மேலும் தேடினால் அங்கு எனது சிலபலபதிவுகள் மட்டுமின்றி லக்கிலுக் போன்ற பதிவர்களது பல பதிவுகளும் அப்படியே திருடப்பட்டுள்ளது , ஒரு இடத்தில் கூட அது எந்த இடத்திலிருந்து உருவப்பட்டது என குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது . குறைந்தது உபயம் என அந்த பதிவின் உரிமையாளரின் பெயரயாவது போட்டிருக்கலாம்.இதில் அந்த வலைப்பூவில் காப்பிரைட் honey tamil என்று வேறு போட்டுள்ளனர் . நாளைக்கே அந்த பதிவு தான் எழுதியதென்றும் அதை எழுதிய நான் , அதை திருடியதாகவும் குற்றம் சாட்டினால் நம்மால் என்ன செய்து விட முடியும் . அந்த வலைத்தளத்தில் அவரது பெயர் மின்னஞ்சல் முகவரி எதுவுமே இல்லை .
பதிவர்களாகிய நாம் நமது ஒவ்வொரு பதிவினையும் எழுத எடுத்துக்கொள்ளும் முயற்சிகளும் அதன் வலியும் வேதனையும் நமக்கு மட்டுமே தெரிந்த ஒன்று . அப்படி நாம் மிக சிரமப்பட்டு எழுதிய இந்த பதிவுகளை சுட்டு தனது பதிவில் போடுவது தவறில்லை ஆனால் அந்த பதிவில் அதனை யார் எழுதியது என ஒரு வரி இட்டாலாவது பரவாயில்லை , என்னை போன்ற புதிய பதிவர்களது வலைப்பூவிற்கு வரும் மக்களின் எண்ணிக்கையில் ஒன்றிரண்டாவது கூடும் . இதை எப்படி தடுப்பது யாரிடம் முறையிடுவது ஒன்றும் இயலாது ,
ஐயா புளைங்கள பெத்த புண்ணியவான்களே , அங்க அவன் அவன் ஒரு பதிவு எழுதறுதுக்குள்ள டவுசர் கிழிஞ்சு கீழ்வானம் செவந்துருது , தயவு செஞ்சு உங்க பதிவுல யாரோட பதிவ வேணும்ணாலும் போட்டுக்கோங்க ஆனா அத எங்க சுட்டீங்கணு போட்டீங்கண்ண உங்களுக்கு புண்ணியமா போகும் .இப்போதைக்கு இந்த வலைத்தளம் மட்டும்தான் மாட்டிருக்கு இன்னும் யார் யார் எழுதினத எங்க எங்க போட்டு யாராரு காசு பாக்கறாங்கனு தெரியல....

அந்த வலைத்தள முகவரி இதானுங்க நீங்களும் போயி பாருங்க உங்க பதிவும் திருடப்பட்டிருக்கலாம் .


இந்த வலைபதிவு புதிதாக ஆரம்பிக்கப்பட்டதாக தெரிகிறது , அதனால் பதிவுகளை பற்றி அதிகம் தெரியாமல் இப்படி செய்திருக்கலாம் , இப்படிப்பட்ட பதிவு திருட்டுக்கள் தடுக்கப்பட வேண்டியவை , இணையத்தில் உலவும் பலரும் இது குறித்து அறிந்திருக்க வேண்டும் , இனி இது போல யாரும் செய்யாதவாரும் தடுக்கப்படவேண்டும் என்பதே அனைவரது ஆவலும் கூட .பதிவுகளுக்கான காப்பிரைட் உரிமைகள் குறித்து விபரம் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவித்தால் சகபதிவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.அதையும் பதிவுடன் இணைக்க ஏதுவாக அமையும்.____________________________________________________________________

அந்த வலைப்பக்கத்தின் படம்.

32 comments:

rapp said...

me the first

rapp said...

அச்சச்சோ இது சீரியஸ் பதிவா.

rapp said...

ஏதாவது செய்யணுங்க

rapp said...

அடடா அங்க எல்லாமே மத்தவங்க எழுதினது மட்டும்தாங்க இருக்கு.

Subash said...

எனக்கு வந்த இரு இமெயில்களை பிளாக்கில் என் பாட்டுக்கு ஏற்றிவிட்டேன். ஆனாலும் ஏதாவதொரு பிளாக் அல்லது வெப்பில் சுடப்பட்டதுதானென்று அறிந்துகொண்டு ஒரிஜினல் பற்றி தெரியாதென குறிப்பிட்டுதான் பதிவிட்டேன்.
அதிலொன்று வெட்டிப்பயல் என்பவரின் பதிவிலிருந்து எடுக்கப்பட்டதுஇ மற்றயது நிலாச்சாரல் எனும் வெப்பிலிருந்து எடுக்கப்பட்டது. புதிதாக பதிவு பக்கம் வந்த எனக்கு இவர்களைப்பற்றி தெரியவில்லை. பின்னர் அந்த பதிவரிடம் இதைப்பற்றி சொல்லிவிட்டு லிங்கும் குடுத்தேன். உண்மையில் அந்த விடயம் என்னை பாதித்தது. பிறகு தமிழ் இமெயில்களை வாசிப்பதோடு நிறுத்திவிடுவேன். ( rss feed reeor ஆல் சில பதிவுகளை நீக்கும்போது பக்கப்பில்லாமல் அந்த பதிவையும் நீக்கிவிட்டேன்)
உண்மையில் அது தவறென தெரிந்தால் இப்படி பண்ணமாட்டார்களென நினைக்கிறேன்.

பரிசல்காரன் said...

அப்படிப் போடு அருவாள!

பரிசல்காரன் said...

உங்களை விட லக்கியோட பல பட விமர்சனம் அங்க இருக்கு தலைவா. அவருதான் பாவம்.

பரிசல்காரன் said...

என்ன கொடுமை இது?

‘திருந்துங்கடா திருட்டு நாய்களா’ன்னு தலைப்பு வைக்கச் சொன்னேனே...

பரிசல்காரன் said...

ஆமா, கேக்கறேன்னு தப்பா நெனைச்சுக்கக் கூடாது..
.
.
.
.
.
.
.
.
கேக்கறதுக்கு கஷ்டமாத்தான் இருக்கு..
.

.
..
.
.

வேணாம்.. ஃபோன்லயே கேக்கறேன்...

பாபு said...

ஆனந்த விகடனில்-உங்கள் பனியன் வாசகங்கள் வந்துள்ளதை படித்தேன்,வாழ்த்துக்கள்

முரளிகண்ணன் said...

இது வேற நடக்குதா?

Anonymous said...

உங்கள் கோபம் புரிகிறது. இதெல்லாம் சகஜம் என்பதே உலகம் உணர்ந்த உண்மை. இதை அதிகம் தோண்டி ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தீர்கள் இருந்தால் உங்கள் காலம்தான் விரயம் ஆகும்.

சுட்டு போடுபவனுக்கு அது மட்டுமே தெரியும். அவன் உங்களை விட பெரிய ஹீரோ ஆகி விட முடியாது. சில நாட்களில் தானாக செத்து விடுவான். அப்படி ஒன்றும் அந்த தளம் பிரபல தளம் அல்ல.

அப்புறம் கடைசியா ஒரு கேள்வி... கோவிச்சுகாதீங்க... நீங்கள் பதிவுகளில் உபயோக படுத்தும் படங்கள் எல்லாம் உங்களுக்கு சொந்தமானதா. இல்லை எனில் அந்த படத்தை எடுத்த இடத்திற்கு நன்றி தெரிவித்து இருக்குறீர்களா ?

ஓர் மாற்று கருத்துகாகத்தான் இதை தெரிவித்தேன்

Take it easy athisha. :)

Unknown said...

இப்பொழுது அதில் நன்றி "அதிஷா" என்று இருக்கிறது :))
ஆனால் லக்கிலுக் பத்தி எதுவுமே இல்லை...அவரும் ஒரு பதிவு போட்டால்தான் நன்றி அறிவிப்பு வரும போல :))

தங்களின் படைப்பு ஆ.வி யில் வந்ததற்கு வாழ்த்துக்கள் :)))

Anonymous said...

ஆதிஷா அவர்களே நான் இந்த வலையுலகிற்கு புதியவன் .
நான் செய்த தவறிற்கு வருந்துகிறேன் .
****மன்னிக்கவும்*****
இப்பொழுது அந்த பதிவுகள் திருதியமைக்கப்பட்டிருக்கும்.
ஒரே நாளில் இத்தனை வாசகர்களுக்கும் என்னுடைய பதிவை பார்க்க செய்ததற்கு என்னுடைய நன்றி
Karthikan:- Honey Tamil

பொய்யன் said...

Nanri Athisannnu ippo antha pathivu adiyila potrukkanuka antha thiruttu kammanaati payaluva. paathela

narsim said...

வாங்க அதிஷா..

விஷேசம் எல்லாம் நல்ல படியா முடிந்ததா??

நர்சிம்

dondu(#11168674346665545885) said...

@சுபாஷ்:
அம்மாதிரி வரும் பதிவிலிருந்து ஏதேனும் ஒரு முழு வாக்கியத்தை நகலெடுத்து கூகள் தேடு பெட்டியில் ஒட்டி க்ளிக்கினால் சம்பந்தப்பட்ட முழு பதிவின் சுட்டி 99% வந்து விடும். பிறகு சுட்டி கொடுப்பதில் என்ன பிரச்சினை?

அன்புட,
டோண்டு ராகவன்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

:(

அதிஷா, இப்ப அந்தப் பக்கம்போய்ப் பார்த்தேன். நன்றி, அதிஷா அப்படின்னு போட்டிருக்காங்க (hyper linkல் பெயரைக் கிளிக்கினால் உங்கள் முகவரி வருவதுபோலச் செய்திருக்காங்க). தகவலுக்காக...

Tech Shankar said...

so, now you become very popular in blog world.

I am very proud about you.

VIKNESHWARAN ADAKKALAM said...

அந்த தளத்தில் இருக்கும் ஜிகுனா வேலைகளை பார்த்தால் அவர் புதியவராக தெரியவில்லையே... நல்ல நிபுணதுவம் இருக்கிறது.

manikandan said...

நல்ல பதிவுகள் எல்லாம் படிக்கறதுக்கு ஒரு திரட்டி மாதிரி இருக்கு அந்த blog. அதை அறிமுகபடுத்தியதுக்கு நன்றி ஆதிஷா !

இதுக்கு எல்லாம் காப்புரிமை ஒத்து வராது ஆதிஷா. நீங்க கேட்ட குறைந்தது உபயம் இப்ப சேத்துட்டாரு.

பதிவு திருட்டுக்கல தடுக்க முடியாது ! உங்களுக்கு ஒரு added popularity தான்.

வெட்டிபையல் ப்லோக் போய் பாருங்க. அவர் ஏதோ copyright பண்ணி வச்சி இருக்காரு ! அது மாதிரி முயற்சி பண்ணி பாருங்க.

ஒரு காலத்துல உங்களோட பதிவு எல்லாம் ஒரு புத்தகமா பிரசுரிக்கற போது எந்த பிரச்சனையும் வராம இருக்கும் ! என்ன சொல்லறீங்க ?

புருனோ Bruno said...

மன்னிக்கவும்

//அப்படி நாம் மிக சிரமப்பட்டு எழுதிய இந்த பதிவுகளை சுட்டு தனது பதிவில் போடுவது தவறில்லை //

தவறு என்பது என் கருத்து

நமது பதிவில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை விவாதிக்க மட்டுமே அதை உபயோகிக்கலாம்.

உதாரணம் : http://athisha.blogspot.com/2008/07/dr.html
http://www.payanangal.in/2008/05/blog-post_20.html

(இது போல் பல உதாரணங்களை அளிக்கலாம்.)

இது போன்ற இடங்களை தவிர பிற இடங்களில் முழு இடுகையையும் வெட்டி ஓட்டுவது ஏற்புடையது அல்ல.

வேண்டுமானால் சுட்டி மட்டும் அளிக்கலாம்

-

இது குறித்து என் பதிவின் அடியில் ஒரு குறிப்பு அளித்துள்ளேன்

-

புருனோ Bruno said...

//உங்கள் கோபம் புரிகிறது. இதெல்லாம் சகஜம் என்பதே உலகம் உணர்ந்த உண்மை. இதை அதிகம் தோண்டி ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தீர்கள் இருந்தால் உங்கள் காலம்தான் விரயம் ஆகும். //

அனானி,

சிலவற்றை தோண்ட வேண்டாம்.

ஆனால் சில விஷ செடிகளின் வேர்களை தோண்டியே ஆக வேண்டும்.

எதை தோண்ட வேண்டும், எதை விட வேண்டும் என்று ஏற்கனவே ஒரு விவாதம் நடந்தது.

வாசித்து உங்கள் கருத்தை கூறவும்

அதில் கூறப்பட்ட முக்கிய விஷயங்கள் ->

இதில் முக்கிய விஷயம். பலரும் இது போன்ற ”வெட்டி ஒட்டும்” வேலைகளை நல்லென்னத்தில் தான் செய்கிறார்கள்.

என்ன செய்யலாம்

ஒரு இடுகை மட்டும் “சுடப்பட்டிருக்கிறதா” அல்லது அனைத்து இடுகைகளும் சுடப்படுகிறாதா என்று பாருங்கள்

ஒரு இடுகை மட்டும் என்றால் - அங்கு ஒரு சிறு மறுமொழி மட்டும் போதும்

அனைத்து இடுகைகளும் சுடப்படுகின்றன என்றால் தான் பிரச்சனை
--
புரிகிறதா

புருனோ Bruno said...

மின்னஞ்சல் செய்பவர்களை “திருடன்” என்ற சொல் மூலம் குறிப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது.

எனக்கு தெரிந்து தொடர் மின்னஞ்சல் செய்பவர்கள் “இது நான் எழுதியது” என்று கூறி அனுப்புவது கிடையாது. “எனக்கு வந்தது. நான் ரசித்தேன். நீங்கள் ரசியுங்கள்” என்றே அனுப்புகிறார்கள்.

மேலும் நான் மேலே கூறிய உதாரணத்தின் படி என் கவிதையை தங்கள் பதிவில் / தளத்தில் எழுதியவர்கள் யாரும் அதை தங்களின் சொந்த முயற்சி என்று கூறவில்லை

அப்படி பட்டவர்களையும் , வேண்டுமென்ற பதிவை திருடுபவர்களையும் (http://labnol.blogspot.com/2006/07/dealing-with-website-plagiarism-when.html) ஒன்றாக கருத வேண்டாமே

Sanjai Gandhi said...

அட நீங்க வேற வினோத்.. விகடன் மாதிரி பத்திரிக்கையே இந்த வேலைய பண்ணுது.. கொஞ்ச நாள் முன்னாடி ( சமீபத்துல ஜுவி ல வந்தது இல்ல) ஆனந்த விகடன்ல குசும்பனோட கார்ட்டூனை திருடி போட்டிருந்தாங்க... அதுல இருந்த குசும்பன் பேரை எடுத்துட்டு விகடன்ல போட்டிருந்தாங்க..

Gopinath said...

Athisa,

neenga oru mukiyamana visayathai sollirukinga. enna poruthavarikum, oru manithanoda karpanaiyin kuzhanthaiya thiruduravangala eppadi padavanganu solla theriyala.. surukkama, avanga periya thappu pannaranga nu sollalam. Ungaloda intha pathive avangalukku nalla ennangala kodutha nallathu.

நாமக்கல் சிபி said...

அதிஷா,

இந்தப் பதிவை இடும் முன்னர் அவருக்கு ஒரு மின்னஞ்சல் செய்தீர்களா?

முதலில் நீங்கள் மின்னஞ்சல் மூலம் அவருக்குத் தெரியப் படுத்தி இருக்கலாம் என்பது எனது கருத்து!

அவரது பின்னூட்டத்தைப் பாருங்கள்.

//ஆதிஷா அவர்களே நான் இந்த வலையுலகிற்கு புதியவன் .
நான் செய்த தவறிற்கு வருந்துகிறேன் .
****மன்னிக்கவும்*****
இப்பொழுது அந்த பதிவுகள் திருதியமைக்கப்பட்டிருக்கும்.
ஒரே நாளில் இத்தனை வாசகர்களுக்கும் என்னுடைய பதிவை பார்க்க செய்ததற்கு என்னுடைய நன்றி
Karthikan:- Honey Tamil//

தவறு என்று புரிந்து கொண்டார் என்று தெரிகிறது! அதற்குப் பிராயச்சித்தமும் செய்திருக்கிறார்.

கார்த்திகன்,

அறியாமல்/புரியாமல் ஆர்வமிகுதியால் செய்யும் பிழைகளுக்கு வருந்தத் தேவை இல்லை!

புரிந்து கொண்டீர்களென்றால் அதுவே போதும்!

Anonymous said...

தயவுசெய்து பிகார் மக்களுக்கு வெள்ள நிவாரண உதவி செய்யவும்.

கவிநயா said...

உங்கள் படைப்புகளை காப்பிரைட் செய்து கொள்ள:
http://creativecommons.org/licenses/

வால்பையன் said...

அங்கே கமென்ட் ஆப்ஷன் இருக்கிறது, அங்கே நமது கேள்விகளை வைப்போம்

Anonymous said...

I just visited, at the end of article I could see "Nandri:Athisha"

With regards
VenkatSatheesh

Unknown said...

அன்பின் அதிஷா,

இப்பொழுது உங்கள் பதிவுகளுக்குமா? :(

எனது 5 பதிவுகள் திருட்டுப் போய்விட்டன. அது பற்றி http://rishanshareef.blogspot.com/2008/07/blog-post.html பதிந்திருக்கிறேன்.

இந்தப் பதிவுத்திருடர்களை என்ன செய்யலாம்?

உங்களுக்கு நிகழ்ந்ததையிட்டு வருந்துகிறேன்.