20 September 2008

குருவி குசேலனை விஞ்சிய பந்தயம் - ( தமிழ்மக்களை தாக்க வந்துள்ள அடுத்த சுனாமி )


நீண்ட கால தயாரிப்புக்கு பின் மிகச்சிரமத்திற்கிடையே நேற்று வெளியான பந்தயம் திரைப்படத்தை நண்பர் ஒருவரின் மிகுந்த ஆவலாலும் , ரசிகன்,விஷ்ணு போன்ற கருத்தாளமிக்க அற்புதமான திரைப்படங்களினால் SA சந்திரசேகர் ( சேகரன்) மீதான அபிமானத்தாலும் இப்படத்தை காண நேர்ந்தது . எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி ஒரு உலகசினிமாவை பார்ப்பது போன்ற மனநிலையுடன் படத்திற்கு சென்றதால் வெகுவாக ரசிக்க முடிந்தது .( படத்தை தவிர படம் பார்க்க வந்தோரது சேட்டைகளையும் , திரையரங்க நிகழ்வுகளையும் )


படத்தின் துவக்கம் இதுவரை எந்த சினிமாவிலும் கண்டிராதது என்றெல்லாம் கூறும் அளவுக்கு இல்லையென்றாலும் புதுமையானது , ஒரு பள்ளிக்கூட மாணவன் எதையெல்லாம் செய்யக்கூடாதோ அதையெல்லாம் செய்யும் ஒரு சிறுவன் , ( இதில் அவன் டொக்டர் விஜயின் ரசிகன் என்று புலம்பல் இல்லை இல்லை சவடால் வேறு ) , தலைநகரம் படத்தில் வடிவேலுவிற்கு கொடுத்த பில்டப் ஒப்பனிங்கைவிட கொஞ்சம் அதிகமாக பிரகாஷ் ராஜிற்கு அவரது காலை காட்டி காட்சியை தொடங்குகையில் நம் மனதில் வடிவேலுதான் வரப்போகிறாரோ என்கிற எதிர்பார்ப்பு .


இப்படி தொடங்கும் படம் போக போக வேகம் பிடித்து மிக வேகமாகி அங்கங்கே சீட்டுகளுக்குள் புகுந்து திரையரங்கத்தை விட்டே ஒடி மூச்சு வாங்கி நம் மண்டையில் இருக்கும் பாதி ரோமத்தையும் பிடுங்கியபடி இறுதியில் சுபமாக முடிகிறது . படத்தின் கதை பேரரசுவின் முந்தைய படங்களுக்கே செல்போனில் சவா(டா)ல் விடும் வகையில் கேவலமாக இருக்கிறது , திரைக்கதையில் கன்னாபின்னாவென்று முடிச்சுகள் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் எங்கள் வீட்டு நாய்க்குட்டி கூட அடுத்து என்ன நடக்கப்போகிறதென்று கூறிவிடும் அளவுக்கு காட்சியமைப்பு .


படத்தின் பெரும்பாலான காட்சிகளை பிரகாஷ்ராஜ் ஆக்கிரமித்திருக்கிறார் , நிறைய கத்துகிறார் , கோபப்படுகிறார் , சவால் விடுகிறார் , ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடுகிறார் , அருவாளால் தலைகளை கொய்கிறார் , கடைசியில் சாகிறார் , நடுவில் கில்லி பட பாணியில் நகைக்கவைக்கிறார் .


படத்தின் ஹீரோ நிதின் சத்தியா , இதே மாதிரி இன்னும் ஒரு படம் நடித்தால் தமிழகத்தின் முதல்வர்கள் பட்டியலில் இடம்பிடித்து விடுவார் . நடிப்பு என்ன விலை என்று கேட்குமளவிற்கு நடித்திருக்கிறார் . சத்தம் போடாதே படத்தில் சத்தமில்லாமல் பட்டையை கிளப்பியவரை இப்படத்தில் கீச்சுகுரலில் கத்தி கத்தி பஞ்ச் டயலாக் பேச வைத்து அழகு பார்த்திருக்கிறார் படத்தின் இயக்குனர் . பார்க்க பரிதாபகரமாக இருக்கிறது .


படத்தில் நாயகி ? எப்போதும் போல வந்து போகிறார் , பாடல்களில் ஆடுகிறார் , அழுகிறார் .


இது தவிர டாக்டர் விஜய் இரண்டு காட்சிகளில் வருகிறார் , சிரிக்கிறார் , முதல் காட்சியில் குழந்தைகளுக்கு அறிவுரை கூறுகிறார் , இரண்டாவது காட்சியில் அரசியல்வாதிகளுக்கு அறிவுரை கூறுகிறார் , நல்ல காமெடி !!! படத்தின் மிக சிறந்த நகைச்சுவை காட்சி '( இந்த வருடத்தின் மிகச்சிறந்த நகைச்சுவைக்கூட )


படத்தில் ராதிகா ஒரு டுவிஸ்டுக்காக படம் பூராவும் அரசி சீரியல் மேக்கப்பிலேயே வந்து அதே கெட்டப்பபில் அதே போல அழுகிறார் கடைசியில் கொலை செய்கிறார் . சரத்குமார் வாழ்க சமக வாழ்க


அசத்தபோவது யாருவில் அசத்திய இருவரும் மானாட மயிலாடவில் அசத்தும் கணேசும் பல இடங்களில் படத்திலிருந்து கொஞ்சம் ரிலீப் . நல்ல நகைச்சுவை நடிகர்களாக வரலாம்.


பாடல்கள் விஜய் ஆண்டனி யா ? ( போட்ட பால்களில் ரெண்டு சிலோன் மனோகரின் பாடல்களை ரீமிக்ஸ் பண்ணியிருக்கிறார் , மற்றவை இரைச்சல் , பிண்ணனி அதை விட இரைச்சல் , சமயங்களில் ஷகிலா படம் பார்க்கும் உணர்வு )


இயக்குனர் SAC க்கு ரொம்ப வயதாகிவிட்டது , கோடம்பாக்கத்தில் பல ஆயிரம் திறமைவாய்ந்த இளைஞர்கள் பட வாய்ப்புக்காக பசியும் பட்டினியுமாய் , எதை செய்தாவது முன்னுக்கு வர வேண்டும் என போராடிக்கொண்டிருக்கிறார்கள் , 30 வருடங்களுக்கு முன்னால் SACக்கு யாரோ வாய்ப்பு கொடுத்து இன்று இந்த அளவுக்கு தனக்கு தானே தியேட்டர் வாசலில் போஸ்டர் அடித்து கொள்ளும் அளவுக்கு வளர்த்து விட்டதை நினைத்து பார்த்து வாய்ப்பு வழங்கி தமிழ்திரையுலகத்திற்கு இன்னுமொரு நல்ல இயக்குனரை தரலாம் , அதை விடுத்து 1940 களில் வெளியான திரைப்படங்களின் கதையை பேரரசு போன்ற இயக்குனர்களின் உதவியுடன் இப்படி மிக மோசமாக எடுத்து ஏற்கனவே தனது சமீபத்திய முந்தைய படங்களினால் கழட்டப்பட்ட டவுசரை மேலும் கழட்டிக்கொள்வது அழகல்ல . (அவரது சட்டம் ஒரு இருட்டறையும் நான் சிகப்பு மனிதனும் யாராலும் மறக்க இயலாதது ) . ( புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் , நீங்கள் ஓய்வெடுங்கள் , உங்களுக்குள் விழித்துக் கொண்டிருந்த அந்த சமூகத்தின் மீது கோபம் கொண்ட கண்கள் சிவந்த அந்த இளைஞன் செத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது )


குருவி , குசேலன்,காளை,பழனி போன்ற மிக நல்ல படங்களுடன் ஓப்பிடுகையில் இப்படம் மிக மோசமானது என்பதில் துளியும் சந்தேகமில்லை .


படத்தின் இயக்குனர் இது போல நாலு படங்களை எடுத்தால் டி.ஆர் தமிழ்திரையுலகத்தில் விட்டு சென்ற இடத்தை நிரப்பலாம் . ( டி.ஆர் தற்காலிக விடுமுறையில் சென்றுள்ளார் )


வலியின்றி தற்கொலை செய்து கொள்ள விரும்புவோர்க்கு இப்படத்தை கட்டாயம் பரிந்துரைக்கலாம்


படத்தின் முதல் பாதி சஞ்சலக்கா மீதி பாதி மஞ்சலக்கா ( சஞ்சலக்கா மற்றும் மஞ்சலக்கா குறித்து அறிய என்னை தொடர்பு கொள்ளுங்கள் எனது மின்னஞ்சல் முகவரி dhoniv@gmail.com )


மார்க் : படத்திற்கு மார்க் போடலாம் பாடத்துக்கு மார்க் போடலாமா ?
மொத்தத்தில் பந்தயம் படம் அல்ல நல்ல பாடம்.... ( இனிமே படத்துக்கு போவியா )

23 comments:

narsim said...

பாவம்யா..

இருந்தாலும் ...

பார்த்தவங்களும் பாவம்தான்.

முரளிகண்ணன் said...

கார்ட்டூன் சூப்பர்

லக்கிலுக் said...

வாட் எ கோ இன்சிடெண்ஸ்?

நீங்களும் படம் பார்த்தீர்களா தோழர்?

நான் கிருஷ்ணவேணியில் பார்த்தேன். இருபது ரூபாய்க்கே பால்கனி. மேலும் 5 ரூபாய் கொடுத்தால் ஆபரேட்டர் ரூமிலேயே சீட்டு தருவதாக சொன்னார்கள்.

கிருஷ்ணவேணி தியேட்டர் வாசலில் இருந்து வடக்கு நோக்கி 45 டிகிரி தலையை உயர்த்தி பார்த்தோமானால் லேடிஸ் ஆஸ்டல் ஃபிகர்களை சைட் அடிக்கலாம். நான் சைட்டு அடித்தபோது பத்து ஃபிகர்கள் இருந்தார்கள்.

narsim said...

இதில் ஒரு நுண்ணரசியல்(???!!) இருப்பதாக எனக்குப் படுகிறது..

நரேன் .. நல்லா வர்றமாதிரி சித்திரம் பேசுதடியில் தெரிந்தவுடன் " நெஞ்சிருக்கும்வரை" (?)னு ஒருபடத்துல ஹீரோவா போட்டு காலிபண்ணப்பாத்தார் விஜயின் அப்பா..

இப்பொழுது கொஞ்சம் ஓரளவு வளர்ந்துகொண்டிருக்கும் இவரையும் ஒரே அடி என உங்கள் விமர்சனம் சொல்கிறது..

அடுத்து எஸ்.ஏ.சி இயக்கப் போவது ஜெய்யா? பரத்தா?? பார்ப்போம்..

அப்பா விரிக்கிற வலையில விழாதீங்க இளம் ஹீரோக்களே..

நர்சிம்

MSK / Saravana said...

//narsim said...

இதில் ஒரு நுண்ணரசியல்(???!!) இருப்பதாக எனக்குப் படுகிறது..

நரேன் .. நல்லா வர்றமாதிரி சித்திரம் பேசுதடியில் தெரிந்தவுடன் " நெஞ்சிருக்கும்வரை" (?)னு ஒருபடத்துல ஹீரோவா போட்டு காலிபண்ணப்பாத்தார் விஜயின் அப்பா..

இப்பொழுது கொஞ்சம் ஓரளவு வளர்ந்துகொண்டிருக்கும் இவரையும் ஒரே அடி என உங்கள் விமர்சனம் சொல்கிறது..

அடுத்து எஸ்.ஏ.சி இயக்கப் போவது ஜெய்யா? பரத்தா?? பார்ப்போம்..

அப்பா விரிக்கிற வலையில விழாதீங்க இளம் ஹீரோக்களே..//

ரிப்பீட்டு ..

MSK / Saravana said...

//இது தவிர டாக்டர் விஜய் இரண்டு காட்சிகளில் வருகிறார் , சிரிக்கிறார் , முதல் காட்சியில் குழந்தைகளுக்கு அறிவுரை கூறுகிறார் , இரண்டாவது காட்சியில் அரசியல்வாதிகளுக்கு அறிவுரை கூறுகிறார் , நல்ல காமெடி !!! படத்தின் மிக சிறந்த நகைச்சுவை காட்சி '( இந்த வருடத்தின் மிகச்சிறந்த நகைச்சுவைக்கூட )//

டாக்டர காமடியனாவே ஆக்கிட்டீங்களா.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

MSK / Saravana said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க அதிஷா..

/பந்தயம் படம் அல்ல நல்ல பாடம்.... ( இனிமே படத்துக்கு போவியா )/

he. he. he.

AKARAMUDHALVAN said...

//இதில் ஒரு நுண்ணரசியல்(???!!) இருப்பதாக எனக்குப் படுகிறது..

நரேன் .. நல்லா வர்றமாதிரி சித்திரம் பேசுதடியில் தெரிந்தவுடன் " நெஞ்சிருக்கும்வரை" (?)னு ஒருபடத்துல ஹீரோவா போட்டு காலிபண்ணப்பாத்தார் விஜயின் அப்பா..

இப்பொழுது கொஞ்சம் ஓரளவு வளர்ந்துகொண்டிருக்கும் இவரையும் ஒரே அடி என உங்கள் விமர்சனம் சொல்கிறது..

அடுத்து எஸ்.ஏ.சி இயக்கப் போவது ஜெய்யா? பரத்தா?? பார்ப்போம்..

அப்பா விரிக்கிற வலையில விழாதீங்க இளம் ஹீரோக்களே..

நர்சிம்\\

I aggree it remember Surya in Periannaa with Vijayakanth.

Anonymous said...

இதில் ஒரு நுண்ணரசியல்(???!!) இருப்பதாக எனக்குப் படுகிறது..

நரேன் .. நல்லா வர்றமாதிரி சித்திரம் பேசுதடியில் தெரிந்தவுடன் " நெஞ்சிருக்கும்வரை" (?)னு ஒருபடத்துல ஹீரோவா போட்டு காலிபண்ணப்பாத்தார் விஜயின் அப்பா..

இப்பொழுது கொஞ்சம் ஓரளவு வளர்ந்துகொண்டிருக்கும் இவரையும் ஒரே அடி என உங்கள் விமர்சனம் சொல்கிறது..

அடுத்து எஸ்.ஏ.சி இயக்கப் போவது ஜெய்யா? பரத்தா?? பார்ப்போம்..

அப்பா விரிக்கிற வலையில விழாதீங்க இளம் ஹீரோக்களே..

நர்சிம்

i aggree it remember Surya in Periyanna with vijayakanth.

Unknown said...

@நர்சிம்

ஆமாங்க பாவம்தான் படம் பார்த்தவன்,பாக்கபோறவன்,படத்த வாங்கி தியேட்டர்ல போட்டவன்

Unknown said...

நன்றி முரளி அண்ணா

முரளிகண்ணன் said...

\\இயக்குனர் SAC க்கு ரொம்ப வயதாகிவிட்டது , கோடம்பாக்கத்தில் பல ஆயிரம் திறமைவாய்ந்த இளைஞர்கள் பட வாய்ப்புக்காக பசியும் பட்டினியுமாய் , எதை செய்தாவது முன்னுக்கு வர வேண்டும் என போராடிக்கொண்டிருக்கிறார்கள் , 30 வருடங்களுக்கு முன்னால் SACக்கு யாரோ வாய்ப்பு கொடுத்து இன்று இந்த அளவுக்கு தனக்கு தானே தியேட்டர் வாசலில் போஸ்டர் அடித்து கொள்ளும் அளவுக்கு வளர்த்து விட்டதை நினைத்து பார்த்து வாய்ப்பு வழங்கி தமிழ்திரையுலகத்திற்கு இன்னுமொரு நல்ல இயக்குனரை தரலாம் \\

அதிஷா அனல்ஷா

Blogger said...

பந்தயம் ட்ரைலெர் பார்த்த யாரும் படம் பார்க்க மாட்டார்கள்..
//படத்தின் இயக்குனர் இது போல நாலு படங்களை எடுத்தால் டி.ஆர் தமிழ்திரையுலகத்தில் விட்டு சென்ற இடத்தை நிரப்பலாம் . ( டி.ஆர் தற்காலிக விடுமுறையில் சென்றுள்ளார் )

நச் கமெண்ட்!!

அகநாழிகை said...

பந்தயம் விஜய்க்கும் அவரோட அப்பா சந்திரசெகருக்கும்தான். யார் யாரெல்லாம் தலைய தூக்கரான்களோ அவனுங்கள தலையெடுக்க விடாம பன்றதுல ரெண்டு பேருக்கும் பந்தயம். யூத் படத்த யூத் எடுத்தா பரவாயில்ல. இவ்வளோ படம் எடுத்து அனுபவம்னு சொல்லிக்கிரவரு ஏன் 'wednesday' மாதிரியான படங்கள எடுக்கக்கூடாது ! சட்டியில இருந்தாதான அகப்பையில வரும். இந்த படத்த தைரியமா போய் பார்த்துட்டு வந்த உங்களுக்கு 'துணிச்சல்காரன்' என்ற பட்டத்தா தரேன்.
ரொம்பாதான் தெகிரியம் நீங்க, போங்க ! சொல்லவே... பயமா இருக்கு.

விஜய் ஆனந்த் said...

:-))))...

விமர்சனம் கலக்கல்!!!

வெண்பூ said...

சொந்த செலவுல சூனியம் வெச்சிகிட்டு இப்ப குத்துதே குடையுதேன்னா எப்படி? :))))

அதிஷா, கார்ட்டூன் உங்கள் கைவண்ணமா? அருமை...

பரிசல்காரன் said...

..அதிஷா அனல்ஷா..//

அபாரம் முரளிஜி!

Subash said...

கலக்கல் விமர்சனம்
:)

Anonymous said...

//இப்படி தொடங்கும் படம் போக போக வேகம் பிடித்து மிக வேகமாகி அங்கங்கே சீட்டுகளுக்குள் புகுந்து திரையரங்கத்தை விட்டே ஒடி மூச்சு வாங்கி நம் மண்டையில் இருக்கும் பாதி ரோமத்தையும் பிடுங்கியபடி இறுதியில் சுபமாக முடிகிறது //

அதிஷா, இன்னும் சிரிச்சுகிட்டே இருக்கேன்.

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

//நம் மண்டையில் இருக்கும் பாதி ரோமத்தையும்//
இப்படிதானா பாதியாய் கொறஞ்சது ?

சந்திரசேகர் இயக்குகிற படத்தைஎல்லாம பார்க்கிறது ?

ஏன் அதிஷா இந்த விஷபரிட்சை ?

உங்களை நினைச்சால் பாவமாய் இருக்கு !

முழுப்படத்தையும் பார்த்தீர்களா?

Unknown said...

ஹூம் ...இருந்த முடியில் பாதிய புடுங்கிட்டாங்களா? அய்யோ பாவம்.. உங்களுக்கு ஏன் இந்த விஷபரீட்சை?(பதிவ படிக்கறவங்கள எப்பாடு பட்டேனும் காப்பாத்தனுங்கற நல்ல எண்ணத்தில் இந்த கஷ்டம் படக்கூடாது சாமி.)

Anonymous said...

அதிஷ்சா! போன்ற தைரியசாலிகளால் தான்
என்னை மாதிரி ஒய்வெடுக்க தியேட்டர் செல்லும் மாக்கள் பிழைத்துப் போய்விடுகிறார்கள்.

நன்றிங்க!!!

Dr.'S.A.C'.Viajy vaazhka....!

இவரு என்னைக்கி கல(ழ)கம் உண்டு பண்ணப் போறாரோ?

இராஜா-பெங்களூர்ரூ

குடுகுடுப்பை said...

பதிவுலக விமர்சனம் படிக்கிறதோட நிறுத்திக்கனும் போல இருக்கு