18 September 2008

காலமும் காதலும் காதலின் காலனும் - சிறுகதை

காலமும் காதலும் காதலின் காலனும் -


காலம் நம்மை எப்போதும் நாம் விரும்பும் இடத்திற்கு அழைத்து செல்வதில்லை . காலத்தின் ஓட்டமோ கால்களின் ஓட்டமோ எதுவாயினும் அது அழைத்துச் செல்வதென்னவோ நாம் விரும்பாத இடத்திற்கே . காலமும் காலனும் நாம் நினைத்தபடி இருப்பதில்லை .

அவனையும் அவளையும் அது அப்படித்தான் அழைத்துச்சென்றிருக்கிறது , அவள் பூப்பெய்தி இருபது வருடங்களுக்குள் எத்தனை பேர் எத்தனை விதமாய் அத்தனையையும் எப்படித்தான் பொருத்துக் கொண்டதோ அந்த உடல் ,

காமத்தில் நகக்கீரல்களும் வலியும் அழகானாதாம் யாரோ ஆணாதிக்க கிழட்டு கவிஞன் பாடிச் சென்ற வரிகளின் அர்த்தம் அவளிதுவரை உணர்ந்ததில்லை , அவள் மேல் விழுகின்ற நகக்கீரல்களும் அவள் மேல் விழுகின்ற உடல்கள் தரும் எடையின் வலியும் அவளுக்கு என்றுமே சுகமாய் இருந்திருக்க வாய்ப்பில்லை , அதை ஒரு ஆணால் மட்டுமல்ல கணவனுடன் காமத்தில் கரைகண்ட எந்த குடும்ப பெண்டிரும் உணர இயலாத உயிரின் வலியது .

காதோரம் நரையும் முகமெல்லாம் மஞ்சளும் உதட்டில் சாயமும் தலையில் மல்லிகையும் சோம்பிய உடலும் கரைபடிந்த பற்களுமாய் அவளை எங்கும் காணலாம் . அவள் நம்மை சுற்றி எப்போதும் அலைபவள் . அதற்கென பிறக்காவிட்டாலும் அதற்காய் தயாராக்கப்பட்டவள் , கல்வியின்றி கலவி மட்டும் பயின்றவள் , இப்பெண்கள் பூப்படையாமலிருந்தாள் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் , காம மிருகங்கள் அப்போதும் புணர காத்திருக்கும் வாசலில் .

அவளை அவன் முதன் முதலில் பார்த்தது அந்த சாந்தி திரையரங்க பேருந்து நிருத்ததில் , தினமும் காலையில் ஒன்பது மணிக்கு பேருந்தில் ஏறி பத்து மணிக்கு அலுவலகம் சென்று ஆறு மணிக்கு மீண்டும் பேருந்தில் அடைக்கலமாகி மீண்டும் வீட்டை அடையும் நகரத்தின் கோடி இயந்திரங்களில் அவனும் ஒருவன் , பேருந்து நிலையத்தை ஒட்டிய அந்த நடைபாதை சுரங்க பாதையில் நின்ற படி போவோர் வருவோரை கண்களால் அழைத்து காசு பார்க்கும் அவள் இவனை அப்படி என்றுமே பார்த்ததில்லை , இவனுக்கு அதுவே அவள் மேல் மையல் வர காரணமாயிருந்தது .

அவனுக்கு அவள் மேல் ஏற்பட்ட அது , காதலா? காமமா? அல்லது மையலா? புயலா? எதுவோ ஒன்று மையம் கொண்டு அவனை தாக்கியிருந்தது .

காசு கொடுத்து காமம் தேடுபவன் என்ன காதலுடனா காமம் கொள்வான் , அவளை பூப்போல் புணர , அவன் காதலிக்க தொடங்கிய போதிருந்த அந்த காகிதப்பூ பலரது கைகளாலும் கசக்கப்பட்டு வாடியிருந்தது இப்போது , அவன் அவளது உடல் அவனுக்கொரு பொருட்டாய் இருந்ததில்லை , இவனும் ஒரு நாள் வாயைவிட்டு சொன்னான் உன் மேல் எனக்கு காதல் என்று , அவளால் பேச இயலாமல் எதோ தடுத்தது , பிறகு சரியென்றாள் . காதலித்தாள் .

பெரியாரென்றான் பகுத்தறிவென்றான் , அம்பேத்கரென்றான் , காதலென்றான் , அன்பென்றான் , கதை சொன்னான் , இதமாய் முத்தம் தந்தான் , இதயத்தில் நீ என்றான் , கடல் காட்டி முத்தமிட்டான் , காந்தி சிலையோரம் காற்றோடு கவிதை சொன்னான் , குடும்பம் பற்றி கவலையில்லை தனக்கு குடும்பமே இல்லையென்றான் , குழந்தைகள் வேண்டுமென்றான் , குடும்பத்தலைவியாய் ஆக்குவேனென்றான் , மடியில் படுக்கவைத்து பாடி மகிழ்வித்தான் , காதோரம் கிசுகிசுத்து அவளை கற்பனையில் மிதக்கவிட்டான்.

ஊருக்கு ஒதுக்குபுறமாய் யாருமில்லா தனிமையான விடுதியின் அறையில் அவனது தோளில் சாய்ந்து கொண்டு என்னை கல்யாணம் செய்து கொள்வாயா என்றாள் , செய்வேன் என்றான் ஒற்றை வார்த்தையில் , அவள் மனதில் இனம் புரியாத ஒரு பயம் எப்போதும் இருந்தது , அவனுக்கு நம் உடல் மட்டும்தான் தேவை என்பதைப்போல , அவளது ஆண்களின் உலகம் துரோகிகளின் உலகம் , இவனை காதலிக்க தொடங்கியதிலிருந்து தொழிலுக்கும் போக இயலாமல் சாப்பாட்டிற்கும் மற்றதுக்கும் இவனை நம்பி அவன் தரும் சொற்பத்தில் இன்பம் கண்டு இன்று அவனுக்கு தன்னையே முழுமையாய் தரப்போகும் வேளையில் இப்படியொரு எண்ணம் அவள் மனதில் பாலில் ஒரு துளி விஷமாய் , அவன் சந்தேகமா என்றான் , இல்லை என்பது போல மறுத்தவளின் கண்களில் கண்ணீர் தன் சோகங்கள் தீர்ந்ததாய் . அவள் தனது உள்ளத்தை முழுமையாய் தந்தாள் , காமம் இல்லா உலகத்தில் வாழ்வதாய் , வெறிநாயாய் மேலே பாய்ந்து பிரண்டும் காமமில்லா உலகத்தில் வாழ்வதாய்....

காமம் முற்றி காதல் ஆகும் கண்களின் உலகத்தில் இவன் காதல் முற்றி காமமானது , அவனும் புணர்ந்தான் காதல் கிழிய புணர்ந்தான் ஆணுறை கிழியாமல் .

கதவு தட்டும் ஓசை கேட்க திறந்தால் காவலன் அவள் காதலின் காலன் , அவன்கள் தப்புவதும் அவள்கள் சிக்குவதும் நம் நாட்டில் காலம்காலமாய் நடப்பதுதானே , காலம் இருவரையும் வெவ்வேறு பாதைகளில் அழைத்து சென்றது .

பல வருடங்களுக்கு பிறகு அதே சாந்தி திரையரங்க பேருந்துநிறுத்தம் , வருவோர் போவோரை கண்களால் அளந்த படி அவள் , காதோரம் நரைத்து விட்ட முடியை சரி செய்தபடி , நான் கேட்டேன் அவனை அதன்பிறகு நீங்கள் பார்க்கவில்லையா என்று , சிரித்தாள் , சதை கேட்கும் அவளிடம் கதை கேட்கும் பைத்தியம் போல் என்னை பார்த்தாள் .

பிரிதொரு நாள் அதே அவன் அதே அவள் , அவனுடன் அவனின் அவளும் , இவன் இருவராய் , அவள் ஒருத்தியாய் , அவன் வாழ்க்கையின் தேடலில் தீவிரமாய் அடுத்த பேருந்துக்காய் இவளை பார்க்காதது போல தனது பணப்பையை இருகப்பிடித்தபடி நிற்க , அவளும் அவனை பார்க்காதது போல அவளின் இன்றைய அவனாய் ஒரு பிச்சைகாரனிடம் பேரம் பேசியபடி , அவளுக்கு அவனது முகம் அருவருப்பாய் அவனுக்கும் அவளது முகம் அப்படியேவும் .

அவன் தினமும் வெறுப்புடனும் இன்பமில்லாமலும் இயந்திரம் போல் வாழ்க்கையையும் அவனின் அவளையும் காதலையும் புணர்ந்தபடி காதலையும் காலத்தையும் அவளையும் மறந்தவனாய் ,

அவள் எச்சில் பண்டமாய் தெருவோர நாய்களின் பசிக்குணவாய் வாயோரம் வழியும் புகையிலையினை துடைத்து கொண்டு பேரம் பேசிய படி இன்றும் நாளையும் நாளை மறுநாளும் அதற்கடுத்த நாளும் அடுத்த நாளும் ஓயும் வரை , இவர்களில் யார் இதற்கெல்லாம் காரணம் என புரியாமல் இவையெல்லாம் எதற்கு என தெரியாமல் கதை புரியாத நான் .

____________________________________________________________________

பட உதவி - மின்னஞ்சல் நண்பர்.

27 comments:

பரிசல்காரன் said...

நல்லா எழுதியிருக்கீங்க அதிஷா!

பரிசல்காரன் said...

கொஞ்சம் முயற்சி பண்ணினா, எங்கள மாதிரி ஆசாமிகள்கிட்டேர்ந்து விலகி, வேறுதளத்தில் பயணிக்கும் திறனும், வேகமும் உங்கள் வசமாகும்!

பரிசல்காரன் said...

ஒரு நாள் முழுவதுமா உங்கூட இருந்தேனேப்பா, இதப்பத்தியெல்லாம் சொல்லவே இல்லையே நீ?

:-(

narsim said...

மிக நேர்த்தியான பதிவு..

தொடருங்கள்..

நர்சிம்

Subash said...

உங்கள் வழமையான நடையிலிருந்து வித்தியாசமாக எழுதியுள்ளீர்கள்.
சிறப்பாகவுள்ளது.

Namma Illam said...

நல்லா எழுதி இருக்கீங்க... உணர்வுகளை எழுத்தில் கொண்டு வருவது கடினமான ஒன்று.. அது உங்களுக்கு வருது.. :)

VIKNESHWARAN ADAKKALAM said...

அதிஷா உங்கள் எழுத்துப் படிவங்களில் பி.ந தெரிகிறது. ஒளிமயமான இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறீர்கள்.

நிதர்சனமான கதை. கலக்கலாக இருக்கிறது. வாழ்த்துக்கள் அதிஷா...

VIKNESHWARAN ADAKKALAM said...

// பரிசல்காரன் said...
கொஞ்சம் முயற்சி பண்ணினா, எங்கள மாதிரி ஆசாமிகள்கிட்டேர்ந்து விலகி, வேறுதளத்தில் பயணிக்கும் திறனும், வேகமும் உங்கள் வசமாகும்!//

யோவ் பரிசலு அவை அடக்கமா? ஒவ்வொரு பதிவிலும் அடிச்சி அடுறிங்க சொல்ல வந்துட்டாரு இவரு ஆசாமியாம்.

அதிஷா அப்பவே சொன்னாரு, உங்கள பத்தி... உண்மையா அந்த 'மேட்டரு'?

Tech Shankar said...

வித்தியாசமான பரிமாணத்தில் உங்கள் எழுத்தாக்கம் அமைந்துள்ளது. வாழ்த்துக்கள்.

உங்கள் பதிவைப் பிரதிபலிக்கக் கூடிய ஒரு குறும்படத்தை

http://sfintamil.blogspot.com/2008/09/mounam-short-film-by-kollywoodtoday.html

பொதிந்துள்ளேன். நேரமிருப்பின் காணுங்கள்.

கோவி.கண்ணன் said...

ஜ்யோராம் சுந்தர் கதையில் இருந்து தப்பி வந்த கேரக்டர் மாதிரி இருக்கு 'அவள்'

:)

நல்லா இருக்கு, பின்னவீனத்துவ முயற்சியா ?

anujanya said...

உங்கள் எழுத்து நடை இதில் சற்று வித்தியாசப்படுகிறது. நல்லா இருக்கு.

அனுஜன்யா

வால்பையன் said...

//கொஞ்சம் முயற்சி பண்ணினா, எங்கள மாதிரி ஆசாமிகள்கிட்டேர்ந்து விலகி, வேறுதளத்தில் பயணிக்கும் திறனும், வேகமும் உங்கள் வசமாகும்!//

பரிசல்கிட்ட புடிச்சதே இந்த உண்மையை சொல்ற பழக்கம் தான்,
கேட்டுக்கப்பா அதிஷா விலகனும்மமா

முரளிகண்ணன் said...

அதிஷா, அறிவியல் கதை போட்டியின் பொழுதே நினைத்தேன். உங்களுக்குள் ஒரு கதைசொல்லி இருக்கிறான் என்று.

Anonymous said...

//வால்பையன் said...
//கொஞ்சம் முயற்சி பண்ணினா, எங்கள மாதிரி ஆசாமிகள்கிட்டேர்ந்து விலகி, வேறுதளத்தில் பயணிக்கும் திறனும், வேகமும் உங்கள் வசமாகும்!//

பரிசல்கிட்ட புடிச்சதே இந்த உண்மையை சொல்ற பழக்கம் தான்,
கேட்டுக்கப்பா அதிஷா விலகனும்மமா
//

யாராவது ரெண்டு பேரை சிண்டு முடிச்சி வேடிக்கை பாக்குறதே இந்த ஆளுக்கு பொழைப்பாயிருக்கு. இந்த பொழைப்புக்கு எங்கேயாவது போய் நாண்டுக்கிட்டு..

வெண்பூ said...

அற்புதமாக‌ எழுதுகிறீர்கள் அதிஷா... ஒரு தேர்ந்த எழுத்தாளர் போல் தனித்தன்மையுடன் இருக்கிறது உங்கள் எழுத்து. மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

Unknown said...

நன்றி பரிசல் அண்ணா

நன்றி நர்சிம்

நன்றி சுபாஷ்

Unknown said...

நன்றி தமிழ்பிரியன்

நன்றி விக்கி

நன்றி தமிழ்நெஞ்சம்

Unknown said...

நன்றி கோவி அண்ணா

நன்றி அனுஜன்யா

நன்றி வால்பையன்

Unknown said...

நன்றி முரளி அண்ணா

நன்றி உட்டாலக்கடி தமிழன்

நன்றி வெண்பூ

புதுகை.அப்துல்லா said...

என்ன மாதிரி மொக்கச்சாமிக்கெல்லாம் இதப் படிக்கிறதுக்கே தனி அறிவு வேணும். போய்ட்டு வர்றேன் அண்ணே. இனிமே எங்க கூட சேராதீங்க :)))))

MSK / Saravana said...

உங்கள் வழமையான நடையிலிருந்து வித்தியாசமாக எழுதியுள்ளீர்கள்.
சிறப்பாகவுள்ளது.
:)

Anonymous said...

சூப்பர் அதிஷா. வித்தியாசமாக இருந்தது.

Anonymous said...

kaadhal padam remake mathari irrukae,

manikandan said...

இத விட கடினமான நடைல நான் ஒரு சிறுகதை படிச்சது இல்ல ஆதிஷா. உங்களோட சினிமா விமர்சனம், நகைச்சுவை பதிவுகளுக்கு எல்லாம் ஒரு எளிதான நடைல தான எழுதறீங்க. அருமையா இருக்கே ! அப்புறம் என்ன ? அவலங்கள தமிழ்ல எளிதான நடைல சொல்ல முகத்துல அறையரா மாதிரி சொல்ல முடியாதா ? உங்களால முடியும்ன்னு தான் நினைக்கிறேன்.

மத்தவங்க கமெண்ட் எல்லாம் படிச்சா, ஒருவேள தவறு என்கிட்ட தானோ என்னவோன்னு தோன்றுகிறது. இருந்தாலும் சொல்லனும்ன்னு தோணிச்சு... சொல்லிட்டேன். உங்க நண்பரோட திரைப்படம் போகும் பொது கேட்டு பாருங்க. அவர் என்ன சொல்றாருன்னு !

King... said...

!!!

SurveySan said...

நல்லா வந்திருக்கு.

SelvamJilla said...

Hi, You can promote your Short films on http://shortfundly.com . check it out