23 September 2008

பருத்திவீரனை விட சிறந்த படமா '' தாரே ஜமீன் பர் '' - ஒரு ஆஸ்கர் பயணம்


அண்மையில் ஆஸ்கருக்கு இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட படமான தாரே ஜமீன் பர் திரைப்படம் குறித்து இயக்குனர் அமீரிடம் டெக்கான் குரோனிக்கிள் நிருபர்கள் கேட்ட போது அவர் இந்தியாவிலிருந்து ஆஸ்கருக்கு அனுப்பப்படும் திரைப்படங்கள் பெரும்பாலும் வடநாட்டு படங்களாகவும் இந்தி படங்களாக இருப்பதாகவும் , அவர் கூறினார் . மேலும் அவர் கூறுகையில் தனது பருத்திவீரன் போன்ற படங்கள் இந்தியாவின் கலச்சாரம் மற்றும் பண்பாட்டை வெளிப்படுத்துவதாக இருப்பதாகவும் தாரே ஜமீன் பர் திரைப்பட்டதோடு தனது திரைப்படம் எவ்விதத்திலும் சளைத்ததல்ல என்றும் கூறியிருந்தார் . இவ்விரு படங்களின் இயக்குனர்களின் பெயர்களும் அமீர் என்பது இக்கட்டுரைக்கு மேலும் அழகூட்டுவதாய் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது . நமது கட்டுரை அமீரின் பேட்டி குறித்த விவாதத்தை பற்றியதல்ல , அவ்விரு படங்கள் பற்றியது என்பதை முன்பே கூறிவிடுவது நல்லது .

பருத்திவீரன் படமும் தா.ஜ.ப படமும் இரு வேறு தளங்களில் வெவ்வேறு கதைகள் மற்றும் கருத்துக்களங்களையும் அடிப்படையாக் கொண்ட திரைப்படங்கள் , இதில் இவ்விரண்டு படங்களையும் ஒப்பிடுவதே தவறான ஒரு விடயமாகும் , அதனால் இப்படங்களை ஓப்பிடாமல் அது குறித்தான கண்ணோட்டத்தை மட்டும் பார்க்கலாம் .


பருத்திவீரன் திரைப்படம் தென்னிந்தியாவின் பெரும்பாலான கிராமவாசிகளின் இருண்ட பக்கத்தை பதிவு செய்யும் படமாகவும் , அவர்களது வாழ்க்கையை ரத்தமும் சதையுமாக பதிவிடப்பட்ட படமாகவே அறியப்படுகிறது , அப்படமும் அப்படியே . படம் முழுக்க விரவியிருந்த ஒரு கிராம இளைஞனின் ஊதாரித்தனமும் முரட்டுத்தனமும் வன்முறையும் படிப்பறிவுமின்றி இன்று தமிழ்நாட்டில் மட்டுமல்ல எல்லா தென்னியந்திய கிராமங்களிலும் நாம் சகஜமாக பார்க்கக் கூடிய பல இளைஞர்களின் வாழ்க்கையையும் , அதனூடே செல்லும் ஒரு காதலையும் கிளைமாக்ஸ் தவிர மிக இயல்பாகவும் படோடோபமில்லாமலும் பதிந்த படம் பருத்திவீரன். இப்படத்தில் அந்த கிளைமாக்ஸ் வன்முறையை தவிர்த்து வேறு எந்த விதத்திலும் குறை சொல்ல இயலாது . இப்படம் இந்தியாவின் கிராமத்து வாழ்க்கை குறித்த ஒரு நல்ல பதிவு .


தாரே ஜமீன் பர் திரைப்படம் ஒரு பாடங்களை புரிந்துகொள்வதில் குறைப்பாடுள்ள ( DYSLEXIC என்னும் ஒரு வகை குறைபாடு ) ஒரு சிறுவன் எப்படி தனது குடும்பம் மற்றும் சமூகத்தை எதிர்கொள்கிறான் , அவனது மனநிலை மற்றும் அவனது குறைக்கான நிரந்தர தீர்வென்ன என்பதையும் குழந்தைகள் முதல் வயதான தாத்தா வரை அனைவரையும் மிகையில்லா திரைக்கதையாலும் அச்சிறுவனின் இயல்பான நடிப்பாற்றலாலும் ரசிக்க வைத்த திரைப்படம் .

இவ்விரு படங்களும் இது போல வெவ்வேறு உணர்வுகளை பிரதிபலிக்க கூடியவை , இருப்பினும் நான் கவனித்த விடயங்கள் ,

பருத்திவீரன் படம் கொண்டாட்டங்களோடு தொடங்கி , காதலோடு பயணமாகி வெறுமையில் முடியும் வகைத்திரைப்படம் .

தாரே ஜமீன் பர் திரைப்படமும் ஒரு குழந்தையின் குரும்புடன் தொடங்கி பின் அக்குழந்தையின் இருளில் நகர்ந்து பின் கொண்டாட்டத்தில் முடியும் வகைப்படம் .

இவ்விரு படங்களின் முடிவிலும் ஒரு சாதாரண ரசிகனின் கண்களில் கண்ணீரை கட்டாயம் நம்மால் காண இயலும் . பருத்திவீரனில் வெறுமையால் உண்டாகும் கண்ணீர் தாரேஜமீன் பரில் மகிழ்ச்சியாலும் உற்சாகத்தாலும் நம் வீட்டு குழந்தையின் வெற்றியில் உண்டாகும் களிப்பால் ஏற்படும் இன்பத்தால் கண்களில் பெருகும் கண்ணீர்.

இவ்விருபடங்களிலும் காணக்கிடைக்கும் இன்னொரு விடயம் இந்தியா குறித்த இவ்விரு படங்களும் பதிவு செய்துள்ள விடயங்கள் , அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் இந்தியாவை இன்னும் காட்டுமிராண்டிகளின் நாடாகவே பார்க்கும் பழக்கம் இருந்துவருவது தவிர்க்க இயலாத உண்மை , பருத்திவீரன் படத்தின் தவறு அதுதான் அப்படத்தில் இந்திய இளைஞர்களை பிரதிபலிப்பதாக அப்பட நாயகனின் பாத்திரபடைப்பு அமைந்து விட வாய்ப்புண்டு ( இது எனது சொந்தக்கருத்தே ) , ஆனால் தாரே ஜமீன் பர் திரைப்படத்தில் இப்படி ஒரு பிரச்சனை இல்லை . அதற்காக பருத்திவீரன் திரைப்படம் மோசமான படமல்ல அது உண்மையை உணர்வு பூர்வமாக உரக்கச் சொன்ன ஒரு திரைப்படம் , ஆனால் தாரே ஜமீன் பரின் குட்டி பையனின் சிரிப்பில் பருத்திவீரன் தோற்றுத்தான் போகிறான் , எப்போதும் குழந்தைகளின் சிரிப்புக்கும் கண்ணீருக்கும் சக்தி அதிகமல்லவா!!

ஆஸ்கர் பரிந்துரைப்பிலும் அந்த களிப்பின் கண்ணீரும் இந்தியா குறித்த அன்னிய பார்வைக்கு நமது படைப்புகளின் ஆக்கமும் இங்கே இவ்விரு படங்களின் ஆஸ்கர் தரத்தை நிர்ணயித்ததாக எண்ணுகிறேன் . அமெரிக்கர்களால் நிச்சயம் நம் பருத்திவீரன் படத்தின் மண் வாசனையையும் அக்கதையின் வலி மற்றும் வேதனையை உணர இயலுமா என்பது கேள்விக்குறியே , ஆனால் தாரே ஜமீன் பர் திரைப்படம் ஒரு பொதுவான விடயத்தை அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் படைக்கப்பட்டுள்ளதும் அப்படத்தின் இன்னொரு பலம் அதுதவிர படம் மேல்தட்டு மக்களின் வாழ்க்கையினூடே பயணிப்பது இன்னுமொரு பலம் .

இவையெல்லாவற்றையும் விட ஆஸ்கர் குறித்தும் அதன் நடுவர்கள் குறித்தும் நன்கு அறிந்த அமீர்கானின் ( அமீர்கான் ஏற்கனவே லகான் படத்தை பிறமொழி படங்களுக்கான சிறந்த படத்திற்கான விருதுக்காக முதல் ஐந்து இடம் வரை கொண்டு சென்றவர் ) படமென்பதால் இப்படம் ஆஸ்கரை வெல்லத் தேவையான வேலைகளை ( மார்க்கெட்டிங் மற்றும் நடுவர்களை படத்தை முழுவதுமாக காணவைப்பது ) இம்முறை மிகச்சரியாக செய்து பல ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் ஆஸ்கர் கனவை பூர்த்தி செய்வார் என்று கட்டாயம் எதிர்பார்க்கலாம் .

இதுதவிர ஆஸ்கரில் இதுவரை வெற்றி பெற்ற படங்களில் பல படங்களும் மனம் மற்றும் உடல் குறைபாடுகள் உள்ளவர்களை பற்றிய படங்களாகவும் மிக பிரமாண்டமான படங்களாகவும் இருந்திருக்கிறது , இது போன்ற படங்களின் வெற்றி பெரும் வாய்ப்பு மிக அதிகம் என்பது ஆஸ்கரில் இது வரை வென்ற படங்களின் பட்டியல் அறிந்தோர்க்கு நன்கு தெரியும , உதாரணமாக ரெயின் மேன் , பாரஸ்ட் கம்ப் மற்றும் ஏ பியுட்டிபுல் மைன்ட் போன்ற திரைப்படங்கள் ,இப்படங்களின் நாயகன் அல்லது நாயகன் சார்ந்த பாத்திரம் மனம் சார்ந்த குறைபாடுள்ளவர்களை பற்றியது , ஆதலால் நம்மூரில் தயாரான தாரே ஜமீன் பர் திரைப்படமும் வெற்றி பெற அதிக வாய்ப்பிருப்பதாகவே நான் கருதுகிறேன் .

பல வருடங்களாக நம்மூர் கமலஹாசனும் ஆஸ்கருக்காக போராடி வரும் இவ்வேளையில் வட இந்திய தயாரிப்பு , தென்னிந்திய தயாரிப்பு என்ற பாகுபாடின்றி நம் இந்திய தயாரிப்பான இப்படம் ஆஸ்கரில் வெற்றி பெற்றால் அது நிச்சயம் இந்திய கலைத்துறைக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறேன் .

ஆஸ்கரின் முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ள இப்படம் இனிவரும் சுற்றுகளிலும் அனைவரையும் கவர்ந்து ஆஸ்கரை வெல்லும் என்பதில் நம்பிக்கை எப்போதையும் விட இம்முறை மிக அதிகமாய் இருப்பதே அப்படத்தின் வெற்றிக்கு சாட்சி .
_____________________________________________________________________________________

அடுத்த வருட சிறந்த பிற மொழி படத்திற்கான ஆஸ்கர் விருதை தாரே ஜமீன் பர் திரைப்படம் வெல்ல அதிஷா மற்றும் அனைத்து தமிழ் வலையுல நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்கள் .
_____________________________________________________________________________________

32 comments:

Anonymous said...

நமக்கு நாமே பின்னூட்ட அனானித்தனம்

உண்மைத்தமிழன் said...

தம்பி

நல்ல பதிவு. ஒப்பீட்டளவில் உனது கருத்தை உண்மையாக வெளிப்படையாக வைத்திருக்கிறாய்.. சந்தோஷம்..

நானும் உன் கருத்தோடு ஒத்துப் போகிறேன்.. பருத்தி வீரனைவிடவும் தாரே ஜமீன் பர் ஒரு படி மேலேதான் இருக்கிறது. ஆஸ்கர் தேர்வுக்குத் தகுதியானத் திரைப்படம்தான்..

ஆஸ்கார் அவார்டின் பரப்புதலில் இருக்கின்ற ஒரே பிரச்சினை வோட்டளிக்கும் தகுதியுள்ள அனைவரையும் படத்தைப் பார்க்க வைக்க வேண்டும். ஆங்கிலப் படமாகவே இருந்தாலும்கூட கதைச்சுருக்கத்தையும், வெளியில் உலா வரும் தகவல்களையும் மட்டுமே கேட்டுவிட்டு ஓட்டுப் போடும் அங்கத்தினர்கள்தான் பெருகியிருப்பதாக செய்திகள் சொல்கின்றன.

அப்படியிருக்கும் போது ந்தப் படத்தைப் பார்க்க வைத்து ஓட்டளிக்க வைத்து ஜெயிப்பது என்பது நிச்சயம் அமீர்கானுக்கு ஒரு சவால்தான்.

Anonymous said...

ஆஸ்கர் வாங்கினால் தான் இந்திய கலைத்துறைக்குப் பெருமையா என்ன?

பருத்திவீரன் போன்ற படங்கள் தமிழ்திரைத்துறைக்கு ஆஸ்கருக்கும் மேலே !

Unknown said...

சரியான சீர்நோக்கில் ப.வீ.யை விட தா.ஜ.ப. மேல் நிலையில் இருக்கிறது என்பது சரியே.
ப.வீ.கிராமத்து வாழ்க்கையைப் பதிவு செய்தாலும் எந்த சமூகப் பாதிப்பையும் தொடாத படம்.அது ஒரு காதலும்,அதன் தோல்வியும் பற்றியது மட்டுமே.

ஆனால் தாஜப. ஒரு பொதுப் பிரச்னையைத் தொடுகிறது;அது குழந்தைகள் பற்றியது எனும் போது உள்ளத்தைத் தொடும் வாய்ப்புகள் அதிகம்-எனவே நீங்கள் சொல்வது போல ஆஸ்கரில் சிறந்த வெளிநாட்டுப் படப் பிரிவில் நுழையும் வாய்ப்புகள் அதிகம் என்றே நினைக்கிறேன்.

அதிலும் இறுதிக் காட்சியின் நடுவர் பெண்மணியும்,சிறுவனும்,ஆமீரும் கலக்கலாக நடித்திருந்தார்கள்..

பவீ.னில் இறுதிக் காட்சி பாலியல் வன்முறையும் அது சார்ந்த அவலமும்..அது ஆரோக்கிய சமூகக் கூறு அல்ல..

எனவே...

Anonymous said...

There is a tamil film called 'My Magic' also in Oscar race.

Tech Shankar said...

வாழ்த்துக்கள்.

☀நான் ஆதவன்☀ said...

அனைத்து விதத்திலும் ப.வீ விட தா.ஜ.ப பர் முன்னிலையில் இருப்பதை மொழிப் பாகுபாடு இல்லாமல் ஒத்துப்போவது நேர்மையானது. இதில் தென்னிந்தியப் படம் வடமொழிப் படம் என்று பிரித்துப் பேசுவது துரதிஷ்டவசமானது.

லக்கிலுக் said...

//படம் முழுக்க விரவியிருந்த ஒரு கிராம இளைஞனின் ஊதாரித்தனமும் முரட்டுத்தனமும் வன்முறையும் படிப்பறிவுமின்றி இன்று தமிழ்நாட்டில் மட்டுமல்ல எல்லா தென்னியந்திய கிராமங்களிலும் நாம் சகஜமாக பார்க்கக் கூடிய பல இளைஞர்களின் வாழ்க்கையையும் , அதனூடே செல்லும் ஒரு காதலையும் கிளைமாக்ஸ் தவிர மிக இயல்பாகவும் படோடோபமில்லாமலும் பதிந்த படம் பருத்திவீரன்.//

புல் ஸ்டாப் வைத்து வாக்கியங்களை எளிமையாக எழுத பழகிக்கொள்ளவும். பல்லு உடைகிறது :-(

பருத்திவீரனும் ஆஸ்கருக்கு செல்ல தகுதியானது என்பது என் கருத்து. ஜீன்ஸ் மாதிரி குப்பைகள் கூட இதற்கு முன்னால் தமிழில் இருந்து ஆஸ்கருக்கு சென்றபோது பருத்திவீரனுக்கு என்ன குறைச்சல்?

manikandan said...

தாரே ஜமீன் பர் - ஒன்னும் அந்த அளவு நல்ல படம் இல்ல. கதைக்கரு அருமையானது. ஆனா presentation கொஞ்சம் சொதப்பல் தான். (என்னோட பார்வைல ) குட்டி பையன் நடிப்பு அபாரம்.

பருத்தி வீரன் - தென்னிந்திய கிராமம் எல்லாத்துலையும் இது மாதிரி ஒருத்தன் சுத்திக்கிட்டு இருக்கற மாதிரி எழுதி இருக்கறத வன்மையா கண்டிக்கறேன்.

படம் கொடுத்து இருந்த விதம் அருமை தான்.

இந்த ரெண்டு படத்துல ஒன்னு தான் போகனும்னா நான் பருத்தி வீரன் தான் செலக்ட் பண்ணுவேன்.

ஆனா ஆஸ்கார் ஜெயிக்கற வாய்ப்பு வச்சி பாத்தா, தாரே ஜமீன் பர் எவ்வளவோ மேல். (நீங்க சொன்ன காரணம் தான் )

Cable சங்கர் said...

நிச்சயமாய் பருத்திவீரனைவிட, தாரே ஜமீன் பர் திரைப்படம் ஆஸ்கருக்கு சரியான படம் தான். என் ஓட்டு அமீருக்கே (ஹீ.ஹி.. இந்தி அமீருக்கு)

~பாண்டியன் said...

அதிஷா,

ஆஸ்கர் மட்டும் தான் வேண்டும் என்றால் அதுக்கு நாம் பருத்தி வீரனைத் தான் அனுப்பி இருக்க வேண்டும். அதுக்குக் காரணம் - நீங்கள் ஏற்கனவே சொல்லி இருப்பது தான்.
(அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் இந்தியாவை இன்னும் காட்டுமிராண்டிகளின் நாடாகவே பார்க்கும் பழக்கம் இருந்துவருவது தவிர்க்க இயலாத உண்மை). இதில் ”பழக்கம்” என்ற வார்த்தைக்குப் பதில் அரசியல், வண்மம் என இன்னும் நிறைய போட்டுக் கொள்ளலாம்.

இந்தியா போன்ற கீழை நாடுகளைப் பற்றி அப்படிப்பட்ட ஒரு எண்ணத்தைப் பரப்பவே அவர்கள் விரும்புகிறார்கள்.

உங்களுக்குத் தெரியுமா? பருத்திவீரன் படம் பெர்லின் படவிழாவில் விருது பெற்ற பிரிவு - தங்கள் நாட்டு கலாச்சாரத்தை சிறப்பாகக் காட்டும் பிரிவு. பருத்திவீரன் படக் காட்சிகள் மட்டும் தான் நமது சிறந்த கலாச்சாரமா?

நான் என்ன நிணைக்கிறேன் என்றால், பாம்பு பிடித்தல், பன்றி மேய்த்தல், மெலிந்த யானை அதோடு அதை விட மெலிந்த யானைப்பாகன் போன்ற ஏதாவது ஒரு காட்சி மற்றும் ஒரு மெல்லிய சோகக்கதை இருந்தால் போதும் ஏதோ ஒரு பிரிவில் விருது கிடைக்க.

மற்றபடி, இரண்டுமே எனக்கு மிகவும் பிடித்த படங்கள்.


பாண்டியன்

பினாத்தல் சுரேஷ் said...

தலைப்பு பார்த்தவுடனே கோபம்தான் வந்தது - இதென்ன ஆப்பிளையும் ஆரஞ்சையும் ஒப்பிட முயற்சி என்று.

என் அளவில் தாரே ஜமீன் பர் சில நட்சத்திரங்களை அதிகமாக வாங்கி இருக்கிறது. பருத்திவீரன் கலைஞர் டிவியில் பார்க்கும்போது சில குறைகள் தென்பட்டதும் காரணம்.

Anonymous said...

http://www.variety.com/review/VE1117935724.html?categoryid=31&cs=1

வால்பையன் said...

நான் பருத்தி வீரனை விட தாரே ஜமீன் பர் படமே தகுதியானதாக நினைக்கிறேன்!
இது என் கருத்து மட்டுமே

துரை said...

//***
வட இந்திய தயாரிப்பு , தென்னிந்திய தயாரிப்பு என்ற பாகுபாடின்றி நம் இந்திய தயாரிப்பான இப்படம் ஆஸ்கரில் வெற்றி பெற்றால் அது நிச்சயம் இந்திய கலைத்துறைக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறேன்
***//

இப்படியே சொல்லிகிட்டு இருந்தா நாளைக்கு நம்ம தமிழுக்குனு ஓரு அடையாளமே இல்லாம போயிரும், இந்தி படம் விருது வாங்கினா நம்ம மொழிக்கு என்ன இலாபம் என்னமோ வட்ட வட்டம் நம்மதான் ஆஸ்கார் விருது வாங்குற மாதிரி இந்த தடவ இந்திக்கு விட்டுகொடுக்கிறதுக்கு, தாயும் பிள்ளையாயிருந்தாலும் வாயும் வயிரும் வேறுங்கிற மாதிரி, என்னதான் இந்தியாவாயிருந்தாலும் மொழி என்பது வேறுதான், இந்தியானு நாமதான் மார்தட்டிகனும் அவன் அப்படி நம்மளை இந்தியா என்று நினைத்திருந்தால் அவன் நம் இன மக்களை இலங்கை இரக்கம் இல்லாமல் கொன்று குவிக்கும் போது அதை தடுத்திருப்பான் தடுக்காவிட்டாலும் பராயில்லை மாறாக இலங்கை அரசுக்கு துனையாக அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்தன இது ஏதோ இன்று நேற்று நடப்பதல்ல நேரு காலத்தில் தொடங்கி இன்று மன்மோகன்சிங் வரைக்கும் சொல்லியாச்சி இந்திய அரசு ஒரு துளிகூட செவிசாய்த்தது கிடையாது, தமிழகத்துக்கு தரவேண்டிய நியாயமான தண்ணிரைகூட தர இந்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை, சேது சமுத்திர திட்டதிற்க்காக ஒரு மணல் திட்டை உடைக்க நினைத்தால் உடனே மதம் என்ற பெயரால் நடுவன அரசும், வடநாட்டு மதவெறியர்களும் அந்த திட்டத்தை தடுக்கிறார்கள், அங்கே இலங்கையில் தமிழர்கள் செத்தால் கவலையில்லை ஆனால் அந்த உயிர் அற்ற ஒன்றுக்கும் உதவாத மண் பாலத்திற்கு கொடுக்கும் மரியாதையை நம் மக்கள் மேல் காட்டியிருந்தால் நல்லாயிருந்திருக்கும். இப்படி நாம் இந்தியா என்று சொல்லிகொள்வதால் தான் நாம் இன்னமும் வடநாட்டவர்களுக்கு அடிமையாக இருக்கிறோம் எப்படி என்றால் பல வகையில் சொல்லலாம் உதாரணமாக நமக்கு பிடிக்காத ஒன்றை நம்மேல் திணிக்கிறார்களே அதுதான் அடிமை எ-டு இயிராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய நம் தமிழ் மொழி இன்று ரூபாய் தாள்களில் பத்தோடு பதினொன்றாக கிடக்கிறது(இதை மக்கள் விரும்பினாலும்(அறியாமை) விரும்பாவிட்டாலும்(அடிமை) அது திணிக்கிபட்டதே), ரூபாய் தாள்களில் மட்டும் அல்ல விமான அறிவிப்புகளில், இரயில் நிலையங்களில், தபால் துறைகளில், பாங்குகளில், ப்பேன் கார்டுகளில், பாஸ்போர்டில் etc
இது எல்லாம் எப்படி நிறைவேறியது, ஒன்று நம்முடைய அறியாமை இல்லை மெத்தனம் இல்லை அடிமை மோகம்
இப்படியே போய்கொண்டிருந்தால் நமக்கும் நம் மொழிக்கும் அடையாளம் இல்லாமல் போய்விடும்

Thamira said...

பினாத்தல் சொல்வதைப்போல நானும் இதென்ன தேவையில்லாத வேலை என்றுதான் முதலில் நினைத்தேன். இருப்பினும் நான் நினைத்ததைப்போல‌ல்லாமல் பதிவு அழகாக இருந்தது.

Bleachingpowder said...

பருத்திவீரனை விட தாரே ஜமின் பர் தான் ஆஸ்கர் தேர்விற்கு சரியான படம் என்று ப்ளிச்சிங் பவுடர் அடிச்சு சொல்றான்

Anonymous said...

ஒப்பீட்டளவில், பருத்திவீரனைவிட தாரே ஜமீன் பர் எங்கேயோ போய் நிற்கிறது. கல் தோன்றி மண் தோன்றாக்காலத்தையும், முறத்தால் புலியை விரட்டிய தமிழ்ச்சியையும் இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் சொல்லிக்கொண்டிருப்போம்.

நாம் இருப்பது தமிழ்த்தீவு அல்ல. இந்தியர்களாக நினைத்துக்கொள்ளும் தமிழர்களுக்கு பிறமொழிகள் மீது தீராத காழ்ப்புணர்ச்சி ஏன் வருகிறது? நம் மொழி மீது பாசம் தேவை தான். ஆனால் தமிழ்நாட்டைக்கடந்தும் விரிந்த உலகமொன்று இருக்கிறது. அதை மதிக்கக் கற்றுக்கொள்வோம். மாற்றான் தோட்டத்து மல்லிகையையும் பாராட்டச்சொன்னான் ஒரு தமிழன்.

தமிழ்நாட்டில் ஒரு சாரார் கமலுக்கோ வேறு தமிழ் நடிகருக்கோ ஆஸ்கார் வாங்கிக்கொடுத்தே தீர்வது என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறார்கள். அது சாத்தியமில்லை. அமெரிக்கப்படங்களைத்தவிர, வேற்றுமொழிக்கு ஒரே ஒரு பரிசுதான் உண்டு. கமல் ஹாலிவுட் போய் ஒரு ஆங்கிலப்படத்தில் நடித்து, அது விருதுக்கு தகுதியானால் மட்டுமே அது சாத்தியம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

தாரே ஜமீன் பர்
/
/
/

/

/

/

/
பருத்திவீரன்

tamilraja said...

இந்தியாவை இன்னும் காட்டுமிராண்டிகளின் நாடாகவே பார்க்கும் பழக்கம் இருந்துவருவது தவிர்க்க இயலாத உண்மை , பருத்திவீரன் படத்தின் தவறு அதுதான்
/
/
/
/ இது முழுக்க ,முழுக்க உண்மை அதிஷா !

ஆனால் உலகம் முழுதும் இந்தியர்கள் பற்றிய மதிப்பீடு உடல் ரீதியாக பலகீனமானவர்கள் என்ற கருத்திலேயே இருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை !

ஒருவேளை ஆஸ்காருக்கு பருத்திவீரன் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தால் ,திரையிடப்பட்டு இருந்தால் நிச்சயம் பரிசு கிடைத்து இருக்கும் !

நம் அமீருக்கு ஆஸ்கார் லாபி பண்ண தெரியாமல் இருக்கலாம்,அமீர்கானுக்கு அது எளிது உண்மைதான்
"தாரே ஜமீன்பர் " விரல் விட்டு என்ன கூடிய அளவுக்கு இருக்கும் மனப்பிரச்சினை அதில் நேயத்துடன் அணுகிய ஒரு ஆசிரியனின் கதை (நானும் ஐந்து தடவை பார்த்தேன் ,பருத்தி வீரன் இரு முறைதான்)இந்த கதை வெள்ளையர்களுக்கு புதியதில்லை
ஆனால் பருத்திவீரன் புதுசாக இருக்கும்!
இந்த நவீன யுகத்திலும் இந்தியாவின் ஏழ்மை அந்த படத்தில் தெரிந்தாலும், பலதடவை ஆங்கிலேயர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்த தமிழ் மக்களின் வீரம் பதிவு செய்யப்பட்டு இருக்கும் என்பதும் உண்மை !

Anonymous said...

இரு படங்களையும் ஒப்பிட முடியாது என நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.

Anonymous said...

//படம் முழுக்க விரவியிருந்த ஒரு கிராம இளைஞனின் ஊதாரித்தனமும் முரட்டுத்தனமும் வன்முறையும் படிப்பறிவுமின்றி இன்று தமிழ்நாட்டில் மட்டுமல்ல எல்லா தென்னியந்திய கிராமங்களிலும் நாம் சகஜமாக பார்க்கக் கூடிய பல இளைஞர்களின் வாழ்க்கையையும் , அதனூடே செல்லும் ஒரு காதலையும் கிளைமாக்ஸ் தவிர மிக இயல்பாகவும் படோடோபமில்லாமலும் பதிந்த படம் பருத்திவீரன்.//

புல் ஸ்டாப் வைத்து வாக்கியங்களை எளிமையாக எழுத பழகிக்கொள்ளவும். பல்லு உடைகிறது :-( //

வழிமொழிகிறேன்

தாமிரபரணி said...

//***
ஒப்பீட்டளவில், பருத்திவீரனைவிட தாரே ஜமீன் பர் எங்கேயோ போய் நிற்கிறது.
***//
எங்க போய் நிற்குதுனு சொன்னா நல்லாயிருக்கும்

//***
கல் தோன்றி மண் தோன்றாக்காலத்தையும், முறத்தால் புலியை விரட்டிய தமிழ்ச்சியையும் இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் சொல்லிக்கொண்டிருப்போம்
***//
அக்கா எத்தனை காலமா உலகத்தில் இருக்கிங்கனு சொல்ல முடியுமா? அப்படி பார்த்தா காலங்காலமா எதற்கு பைபில், குரான், பகவத் கீதைனு எதற்கு படிக்க வேண்டும், எதற்காக வருடாவருடம் அதே தேசிய கொடிய பறக்கவிட்டு, தேசிய பாடல் என்கின்ற பெயரில் ஒரு ஒப்பாரி வேற. ஒரு மாறுதலுக்காக ஒரு குத்துபாட்டு போட்டு ஆடுவோமா

//***
நாம் இருப்பது தமிழ்த்தீவு அல்ல
***//
உண்மை! எற்றுகொள்கிறேன், அதேபோல்
நாம் இருப்பது இ(ஹி)ந்தியா என்னும் தீவு அல்ல,
//***
இந்தியர்களாக நினைத்துக்கொள்ளும் தமிழர்களுக்கு பிறமொழிகள் மீது தீராத காழ்ப்புணர்ச்சி ஏன் வருகிறது?
***//
இ(ஹி)ந்தியாவில் ஹிந்தி மட்டும் மொழி அல்ல, தமிழும் இந்திய மொழிதான் அப்படியிருக்க ஹிந்தி மொழிக்கு மட்டும் என் இவ்வளவு மரியாதை,முக்கியத்துவம்?
நான் தாரே ஜமின் பார் படத்தை ஆஸ்கார் விருதுக்கு அனுப்ப வேண்டாம் என்று சொல்லவில்லையே, எதற்காக எங்கள் பருத்திவீரனை அனுப்பவில்லை என்றுதான் கேட்கிறேன்?
இது எப்படி காழ்ப்புணர்ச்சி ஆகும்? எங்கள் மொழிக்குரிய உரிமையை நாங்கள் கேட்காமல் பக்கத்துநாடான இலங்கை வந்தா கேட்ப்பான்
இரண்டு படங்ளையும் அனுப்புவோம் அவன் முடிவு செய்யட்டும்
நடுவில் இவன்க யாரு நம்மை தடுக்க,தேர்வு எழுதினால்தான் தெரியும் அவன் வெற்றி பெருவானா இல்லையா என்று? ஒரு நாட்டிற்கு ஒரு படம்தான் அனுப்பலாம் என்பதெல்லாம் ஒரு மொழி உள்ள நாட்டிற்குதான் பொருந்தும், ஆதலால் இதை மறுபரிசிலனை செய்ய வேண்டும், இந்தியா என்னும் மாயையில் நாம் நம் மொழியை அடகு வைத்தது விட்டோம்
நம்ம தமிழ்நாட்டைபோல உள்ள பல நாடுகள் தங்கள் மொழியே வெளிச்சத்தில் கொண்டுவரும் வேளையில் நாம் இன்னமும் இந்தி மொழிக்கு பின்னாடி நின்று கொண்டு நம் மொழியை கொன்று கொண்டிருக்கிறோம்,இந்த இலட்சணத்தில் எல்லாரும் இந்தி படத்துக்கு ஆதரவு வேற, இந்த இந்தி மொழியால் பல மொழி அழிந்ததுதான் மிச்சம், அவன்க மொழி எல்லாம் சமற்கிருதத்தில் இருந்து வந்தது என்பதால் அவர்களுக்கு அது ஒரு பெரிய வருத்தமாக இருக்காது ஆனால் நம் மொழி அப்படி இல்லையே
மொழி என்பதில் பரஸ்பர அன்பு இருக்க வேண்டும் இந்தி படங்களை நம்மர்கள் பார்கிறார்கள் அதுபோல அவர்களும் நம் மொழியை பார்க்க வேண்டும்(இது எப்படி சாத்தியமாகும் என்று கேட்கலாம் நம்மவர்கள் எப்படி இந்தி புரியவில்லை என்றாலும் இந்தியா என்கின்ற உணர்வாள் பார்கிறார்கள் அதுபோல தமிழ் படங்களை அவர்கள் ஏன் பார்க்க கூடாது)
இங்கு பலபேர் தாரே ஜமின் பார்த்ததாக சொன்னார்கள் ஆனால் இதே நம்ம பருத்திவீரன் படங்களை எத்தனை பேர் பார்த்திருப்பார்கள்? இதனால்ல அவன் மொழி படம்தான் பாப்புலர் ஆகும், உன் மொழி மன்னிக்கனும் நம் தமிழ் படத்தை நாமும் பரிந்துறைப்பதில்லை அவனும் எந்த காலத்திலும் பரிந்துறைக்க போவதில்லை பின்பு எப்படிதான் நம் மொழி பாப்புலர் ஆகும்
//***
மாற்றான் தோட்டத்து மல்லிகையையும் பாராட்டச்சொன்னான் ஒரு தமிழன்.
***//
மதியாதார் தலைவாசல் மிதிக்கவேண்டாம் சொன்னதும் ஒரு தமிழச்சிதான்

Anonymous said...

ஒப்பிட்டு பார்ப்பதை தயவுசெய்து நிறுத்துங்கள். இரண்டு படங்களும் வெவ்வேறு பரிமாணங்கள். ஹிந்தி படம் மட்டுமே இந்தியப் படம் என்று சொல்வார்கள். நமது படைப்புக்களை தெனிந்திய படம் என்றுதான் சொல்வார்கள்...உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்..

என்னுடையத் தேர்வு பருத்திவீரன்தான்

tamilraja said...

தாரே ஜமீன் பர் படத்துக்கு
சிலதகவல்கள் தேவைப்பட்டபோது அவை ஆங்கில நாவல்கள் மூலம்தான் பெறப்பட்டன்
ஆகையால் தான் அது நிராகரிக்கப்படலாம் என்றேன் ஏன் என்றால் ஆஸ்கார் விதிமுறைகள் அப்படி
ஆனால் பருத்தி வீரன் வேறு பரிணாமம் எழுதினால் நிறைய எழுத வேண்டி வரும் பின் ஒரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்
மேலும் தமிழ் மொழி உணர்வால் நாம் மற்ற மொழிகளை
வெறுக்கிறோம் என்பது ஏற்க கூடிய தல்ல!!


தாமிர பரணியின் கருத்துக்களோடு ஒத்து போகிறேன்!

SurveySan said...

இரண்டுமே ரொம்ப அருமையான படம்.
ஒண்ணுக்கு ஒண்ணு சளைத்ததல்ல.

///அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் இந்தியாவை இன்னும் காட்டுமிராண்டிகளின் நாடாகவே பார்க்கும் பழக்கம் இருந்துவருவது தவிர்க்க இயலாத உண்மை ///

இந்த ஒரு காரணத்துக்கே, தா.ஜ.ப, ஆஸ்காருக்குச் செல்வதை வரவேற்க வேண்டும்.

ஆனா, இந்தியாவின் உண்மை முகம், ப.வீ இளைஞ்சன் என்றாலும், its about time we get some good publicity for brand India.

இரான் பத்தி, பெரிய அபிப்ராயம் இருந்ததில்லை எனக்கு.
ஆனா, அவங்க படமெல்லாம் பாத்தப்பரம், அவர்களின் மேல் பெரிய ஈர்ப்பே வந்துடுச்சு.

நம்ம நாட்டுக்கும், அதெல்லாம் தேவை.
எவ்வளவு நாள்தான், கலகட்டா குப்பையும், கங்கைக்கரை காட்டுமிராண்டி சாமியாரையும், இந்தியாவின் முகமா காட்டிக்கிட்டு இருக்கரது?

Anonymous said...

தாரே ஜமீன் பர் - பொதுவான் ஓர் உலகம் தழுவிய பிரச்சனையை, கை
யாளவேண்டிய முறையை, அழகாக சொன்ன படம். இது இந்தியப்படம் அல்ல. இந்தியாவில் எடுக்கப்பட்ட படம்.

பருத்திவீரன் - இந்திய(தமிழ்) வாழ்க்கையை சித்தரித்த படம். இந்தியப் படம்.

என் ஓட்டு பருத்திவீரனுக்கே !

Anonymous said...

//பருத்திவீரன் கலைஞர் டிவியில் பார்க்கும்போது சில குறைகள் தென்பட்டதும் காரணம்.//

மொக்கை: ஜெயா டிவியில் பார்க்கும் போது குறைகள் தென்படுவது குறையலாம் ;o)

narsim said...

அதிஷா..

மிக நல்ல கண்ணோட்டம்.. நல்ல பகுப்பாய்வு.. சரியான பதிவு...


நர்சிம்

dheepan said...

i would choose Taree Zameen Par

Iravanan said...

Anbin Adeesha

Thangalin padiyai paarvaieda mudindadai munnitu romba magizchi..

Paruthiveearan enna maadiriyaana padam???...

Oru porukki, lorry driver kootituvaara Vibachara pengaludan palavandamaga udaluravu kolavadu..Thanakku ediraanavargalin udaluruppai vetuvadu...china vayasileye porampoka vazaruvadu eda namadu kiraamathu kalaacharam?????

oru pennudan kaadal eatpatavudan ella pizaigaulum mannika padanuma enna..?

Ameerkhanudya padathudan oppida enda padathukku enna thagudi erukku...petrorgalukku thangalin kuzandaigal patri theriyada oru vidayathai eduthu adai dairiyamaga kooriya oru padathuda enda padathai (paruthiveeran) oppida ennal mudiyavillai...

Nandri
Ijith

sweet said...

kamal oscar? ash car vaangauvaan. oscar ellam mudiyadhu

since he don't have stuff