09 October 2008

வாசகர்கடிதம் - 10-10-2008

நமது வலைப்பூவின் வாசகர் மற்றும் விரைவில் தானும் ஒரு வலைப்பூவை துவங்கவிருக்கும் திரு.ரவிஷங்கர் அவர்கள் அனுப்பிய கடிதம் உங்கள் பார்வைக்கு . இதுவரை வந்த கடிதங்களிலேயே இக்கடிதம் மிகசுவாரசியமாக இருந்ததால் இதை இங்கே பதிகிறேன் .கடிதம் :

_____________________

அன்புள்ளஅதிஷா ,

உங்கள் கதைகளை படித்தேன். (காலமும்காதலும்,கேள்விகளில்லா விடைகள்,இறுதிமுத்தம்,படிக்கக்கூடாத குட்டிக்கதைகள், சில்க்,ஷகிலா,நமீதா மற்றும் கிருஷ்ணப்பிள்ளை). அதை பற்றிய என் எண்ணங்கள்.

வாழ்கையை கூர்ந்து கவனிக்கிறிரீகள்.கதை கரு நன்றாக இருக்கிறது .சில வரிகள் அற்புதம். வயது மீறியா அனுபவம். ஆனால் அதை கதைக்கு கொண்டு வரும்போது, முரசொலி கலைஞர், கண்ணாதாசன் /நா.பா./அகிலன் நடிகர் எஸ்.எஸ்.ஆர் இவர்களை கூட்டிகொண்டு வர கூடாது. மற்றும் காவிய தமிழ் கண்டிப்பாக மறக்க படவேண்டும். காவிய தமிழ் எழுதினால் கதை நீர்த்து போய் விடும் .

ராமராஜன் உடையில், அதே விக்கில்,லிப்ஸ்டிக் பூசிய உதட்டோடு பிஸ்சா சென்டெரில் ஒருவனை பார்த்தால் எப்படி இருக்கும் ?

நாம் இருப்பது .2008..... முரசொலி கலைஞர் பாணியில் கதை இருக்கிறது. "பராசக்தி" சிவாஜி வசனம் இருக்கிறது. புரட்சி நடிகர் எஸ்.எஸ்.ஆர் பேசுகிறார் . கண்ணாதாசன் /நா.பா./அகிலன் போல வருணனை . . .தானாக உணர்ச்சிகள் வாசகனிடத்தில் எழ வேண்டும் . உணர்ச்சியை "புஸ்க் புஸ்க் " என்று காத்து அடித்து ஏற்றுகிறீர்கள். உப்பி போய் வெடிக்கிறது . காட்சி தளங்களும் கதை சொல்ல வேண்டும். இது சுவிஸேஷ கூட்டம் இல்லை.

கோனார் நோட்ஸ் போடக்கூடாது . பிரசார நெடி அடிக்க கூடாது சுருங்க சொல்லணும் .மெலோட்ராமா கூடாது .பாலசந்தர் காலம் முடிந்து இப்போது பருத்தி வீரன் காலம். வார்த்தைகளை தலைகாணியில் பஞ்சு அடைப்பது போல் கதையில் அடைக்கிறீர்கள். செயற்கைததனம் . Romanticise செய்யாக்கூடாது. தெரியாமல் செய்ய வேண்டும்.

. காலம் போக போக பக்குவம் வரும் .விடலைத்தனம் போகும் . நிறைய படிக்க வேண்டும் .படித்தல் மட்டும் போதாது. உள் வாங்க வேண்டும் .


நீங்கள் படிக்க வேண்டியது : சிறு கதை: "தனுமை" வண்ணதாசன் “செண்பகபூ" தி .ஜா. "நாற்காலி" கி.ரா. "அப்பாவும் ..." மா.வே.சிவகுமார் “கடவுளும் கந்தசுவாமி பிள்ளையும்” (பு.பித்தன் ) ம்ற்றும் பிரபஞ்சன் கதைகள் ..


கண்டிப்பாக "தனுமை" படிக்க வேண்டும்

பார்க்க வேண்டியது: “படங்கள்: கலாட்டா கல்யாணம் , அவள் அப்படித்தான் ,Monsoon Wedding ,( மெலிதான நகைச்சுவை) சோப்பு சீப்பு கண்ணாடி (வித்தியாசமான கதை). Gandhi movie.


வாழ்த்துக்கள்

கே.ரவிசங்கர்
___________________________

கடிதம் அனுப்பிய திரு.ரவிஷங்கர் அவர்களுக்கு நன்றி.
_____________________________________________________________________________________
அவ்ளோதான்பா ;-(
____________________________________________________________________________________

16 comments:

Cable சங்கர் said...

:(-;)_????

VIKNESHWARAN ADAKKALAM said...

:)

Ramesh said...

மிக நல்ல பதிவு வாழ்த்துக்கள் ..
'நெல்லுக் கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடி
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் -தொல்லுலகில்
நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லோருக்கும் பெய்யும் மழை!''--அவ்வையார்

ARV Loshan said...

இப்ப என்ன சொல்ல வர்றீங்க?

ARV Loshan said...

இப்ப என்ன சொல்ல வர்றீங்க?

ARV Loshan said...

இப்ப என்ன சொல்ல வர்றீங்க?

Namma Illam said...

நல்ல அறிவுரைகள் அதிஷா! ஒரு உண்மையான பார்வையாளராக இருந்து வரக் கூடிய கருத்துக்கள் எனும் போது பரிசீலணை செய்ய வேண்டியவை

Unknown said...

நல்லாத்தான் சொல்றாரு நச்னு

Unknown said...

sujatha வின் திரைகதை எழுவது எப்படி யும் படித்து விடவும் ...அடபோங்கப்பா...இன்னும் கொஞ்ச நாள்ல பாலகுமாரனுக்கே அட்வைஸ் பண்ணுவாரு எங்க அதிஷா

பரிசல்காரன் said...

இப்பத்தான் நிம்மதியா இருக்கு!

பரிசல்காரன் said...

ஒரு புது ட்ரெண்டைப் புடிச்சீட்ட்ங்க.. அதாவது வாரம் ஒரு மெயிலை பப்ளிக்குக்கு சமர்ப்பணம் பண்றீங்க!

சபாஷூ!

Unknown said...

நன்றி! நன்றி!நன்றி! ஆதிஷா! நன்றி!
உஙகள் ரசிகர்களின் விசில் பறக்கிறது.
மேட்டருக்கு வருவோம்.

“நெல்லுக் கிறைத்த” என்று ஒரு மூத்த குடிமகன்(11% ) “கமெண்ட்” போட்டிருகிறார். நெல்=அதிஷா ,நீர்=ரவிஷங்கர், புல்=ரசிகர்கள். சரியா? Formulaவை சரி பார்க்கவும்.

“இப்ப என்ன சொல்ல வர்றீங்க?” இவர்க்கு கோனார் நோட்ஸ்
விரைவில்.

“(-;)_???? ‘ என்கிறார் ஒருவர். மூத்த குடிமகனனை விட ஒரு படி
மேல்.

நல்ல ரசிகர்களும் + விசில் அடிச்சான்களும் இருக்கிறார்க்ள்.
அதிஷாவிற்கு
”தானாக உணர்ச்சிகள் வாசகனிடத்தில் எழ வேண்டும்” என்று சொல்லியிருந்தேன். ஈரம் காய்வதற்குள்” கோனார் நோட்ஸ்”
போட்டு விட்டீர்கள் என் கட்டுரைக்கு. ”ஹைலைட் ”
”அண்டெர் லைன்” கூடாது.அவர்களே இந்த ”ஹைலைட்”
”அண்டெர் லைன்” சொல்ல வேண்டும்.”அஹா... அஹா...”
என்று கன்னத்தில் போட்டு அவர்களையும் போட வைக்கிறீகள்.
மகா தப்பு. “Influence” ஆகி விடுவர்கள்.

கே.ரவி(ஷ)சங்கர்

பொய்யன் said...

There is no grammer or patternise in literature. ravishankar's view is not original but tuted. Athisha ...u are u. ur style is ur style. ok. got it?

பரிசல்காரன் said...

//பொய்யன் said...

There is no grammer or patternise in literature. ravishankar's view is not original but tuted. Athisha ...u are u. ur style is ur style. ok. got it//

கன்னாபின்னான்னு வழிமொழியறேன்!

Unknown said...

அன்புள்ள பொயயன் & பரிசல்காரன்,

தவறாக சொல்கிறீற்கள். I am not tutored. If I go on vomiting whatever I mugged from tutoring என்னுடைய சாயம் ஆறு நாளில் வெளுத்துவிடும். Based on my wide
experience as reader and writer of short/long stories in commercial magazines, I suggested something for Athisha.

சுஜாதா சொன்னது “ ஒரு சாதாரண குழாய்ச் சண்டையை இலக்கிய நிலைக்கு உயர்த்துவது அதை எழுதுபவனின் நடை, சொல்லும் விதம்,காட்சிகளை வாசிப்பவர்க்கு அறிமுகப்படுத்தும் திற்மை..”இதோ
பார் வாழ்வின் அபத்தம் ” இதோ பார் வாழ்வின் சந்தோஷம்” கதைக்கு
உள்ளே வந்து “மைக்” பிடித்தால். கதை Documentary ஆகி விடும்.”

தயவு செய்து கருத்து சொல்லவும்

கே.ரவிஷங்கர்

Subash said...

ஃஃஒரு புது ட்ரெண்டைப் புடிச்சீட்ட்ங்க.. அதாவது வாரம் ஒரு மெயிலை பப்ளிக்குக்கு சமர்ப்பணம் பண்றீங்க!

சபாஷூ!ஃஃ

ஹிஹிஹி