05 October 2008

சென்னை வலைப்பதிவர் சந்திப்பும் சில சுவாரஸ்யங்களும்......
கடந்த சனிக்கிழமை (04-10-2008) அன்று சென்னை மெரீனா கடற்கரையில் பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அனைவரும் அறிந்ததே . அன்றைய தினம் பல பணிகளுக்கிடையே அங்கே நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சக பதிவர்களுக்கு நன்றி . இக்கூட்டத்தில் பல புதிய பதிவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தது மிகவும் மகிழ்ச்சியை அளித்தது . ஆவலுடன் கலந்து கொண்டு பல மூத்தப்பதிவர்களும் கலந்து கொண்டது கூடுதல் மகிழ்ச்சி .

இச்சந்திப்பில் இடம் பெற்ற பதிவர்களும் அவர்கள் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களும் உங்களுக்காக :

பாலபாரதி :

பதிவர்களால் தல என்று அன்போடு அழைக்கப்படும் இவர் திருமணத்திற்கு பிறகு 10 வயது குறைந்தது போல இருக்கிறார் . சந்திப்பில் டிஷர்ட் ஜீன்ஸ் எல்லாம் அணிந்து கொண்டு ஒரு மூத்தப்பதிவர் என்கிற எந்த பாகுபாடுமின்றி அனைவரிடமும் தானக முன் வந்து தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார் . அது தவிர இங்கு நடந்த பொது இட புகைப்பிடிப்பது பற்றிய விவாதத்தில் கலந்து கொண்டு மிக சூடாகப் பேசி அனைவரையும் கவர்ந்தார் .

ஞானி :

நமது சக பதிவர்கள் அடிக்கடி விவாதிக்க வாராவாரம் பல விடயங்களை தன் ஓபக்கங்களால் எழுதி வரும் ஞானியை பற்றி நான் கூறுவது சூரியனுக்கு டார்ச் அடித்தது போல் ஆகி விடும் . பதிவர் சந்திப்புக்கு எதிர்பாராத விதமாக வந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் . அவரிடம் பல பதிவர்களும் பலவித கேள்விகணைகளை தொடுக்க தான் ஒரு பார்வையாளனாக சக பதிவராக இந்த சந்திப்புக்கு வந்ததாக கூறி மேலும் ஆச்சர்யப்படுத்தினார். அக்டோபர் 2 ஆம் தேதி அவர் தனது வலைப்பூவை தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . (இப்போ அவரும் வலைப்பதிவராகிட்டாருங்கோ .. .ஜீனியர்தான் அதனால யார்வேணா அவர ராகிங் பண்ணலாம் ) சில அவசர காரணங்களால் சில நிமிடங்களிலேயே அவர் கிளம்பிவிட்டாலும் , நம்மைப் போன்ற வலைப்பதிவர்களை மதித்து அவர் இச்சந்திப்பில் கலந்து கொண்டதில் எனக்கு மட்டுமல்ல அனைவருக்குமே மிக மகிழ்ச்சியாக இருந்திருக்கும் . ( பாருங்கையா எழுத்தாளர்கள்லாம் நம்மள திரும்பி பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க )

டோண்டு ராகவன் :

வயதிலும் , வலையுலக அனுபவத்திலும் மூத்த பதிவர் , இச்சந்திப்பு முழுவதுமே மிக உற்சாகமாக காணப்பட்டார் , அங்கே நடந்த அனைத்து நிகழ்வுகளையும் தனது டைரியில் குறித்துக்கொண்டார் .

பொட்டீகடை :

இவருக்காகத்தான் முதலில் சந்திப்பு நடத்த உத்தேசித்து சிலபல சிக்கல்களால் சந்திப்பு முடிவதற்கு அரைமணிநேரம் முன்புதான் வந்து சேர்ந்தார் . ஆஸ்திரேலியாவில் இருந்து ஆஸ்திரேலிய உடையிலேயே சந்திப்பில் கலந்து கொண்டது விழாவை மேலும் சிறப்பிப்பதாய் இருந்தது . எல்லா பதிவர்களுக்கும் ஐஸ் வாங்கி தந்து சந்திப்பை மேலும் குளிர்வித்தார் .

ஜ்யோவ்ராம்சுந்தர் :

நமது காமக்கதை புகழ் சுந்தர் அண்ணா என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன் . பணி முடிந்து அப்படியே வந்துவிட்டார் போலும் மிக டிப்டாப்பாக வந்திருந்தார் . பல விடயங்கள் குறித்தும் சக பதிவர்களிடமும் பேசியபடியே இருந்தார்.

சுகுணாதிவாகர் :

இவரது பதிவுகள் போலவே இவரும் மிக நல்ல மனிதர் . சந்திப்பு முழுவதும் பல இலக்கிய விவாதங்களில் ஈடுபட்டிருந்தார் . என்னால் சரியாக இவரை கவனிக்க இயலவில்லை ( இலக்கியத்திற்கும் நமக்கும்தான் பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரமாயிற்றே )

ரோசாவசந்த் :

நான் கடந்த வருடங்களில் இவரது எழுத்துக்களை வாசித்திருக்கிறேன் , ஆனால் நேரில் அப்படியே எதிர்மறையாய் மிக மென்மையானவராக இருக்கிறார் .( அமுல் பேபி போல ) அனைத்து பதிவர்களிடமும் தானே முன் வந்து பேசியபடி இருந்தார் .

கென் :

கென் என் நண்பன் , எனக்காகவே இச்சந்திப்பிற்கு வந்ததாக கூறினார் , அவரது சித்தப்பா வராத குறையை அவரது மகன் மற்றும் மூன்றாம் சிஷயர் வந்து நிவர்த்தி செய்தார் , இவர் அவரது சித்தப்பாவிற்கு நேரெதிர் ஆள் யாரிடமும் அதிகமாக பேசாமல் அமைதியாக மற்றவர் பேசுவதை கவனித்தபடி இருந்தார் .

மருத்துவர் புருனோ :

நம்ம மருத்துவருக்கு சந்திப்பு என்றால் அல்வா சாப்பிடுவது போல எத்தனை பணி இருந்தாலும் கட்டாயம் சந்திப்புகளில் கலந்து கொள்ளும் சிலரில் ஒருவர் . புகைப்பிடித்தல் தடை குறித்து விவாதம் எழுகையில் அருமையான ஒரு கருத்தை முன்வைத்தார் , சிகரெட்டை காண்டத்துடன் ஒப்பிட்டு , அது குறித்து தனி பதிவு விரைவில் இட எண்ணியுள்ளேன் . ( ஆள் எப்போதும் போல முக மலர்ச்சியுடன் அனைவரிடமும் நட்பு பாராட்டினார் )

அருட்பெருங்கோ :

இவரைப்பற்றி அதிகம் நான் சொல்லத்தேவையில்லை , மிக நல்ல மனிதர் , மிக அமைதி , அவரது எழுத்துக்களையும் பெயரையும் வைத்து 45 வயதில் ஒருவரை எதிர்பார்த்தேன் ஆனால் அவரோ மிக இளமையாய் 27 வயது மதிக்கத்தக்கவராய் இருந்தது பெரும் அதிர்ச்சி .

ஆழியுரான் :

இவர் ஒரு பழைய பதிவர் , சிலபல பொது சேவைகளில் தற்சமயம் ஈடுபடுவதால் பதிவுகள் எழுதுவதில்லை . இவரும் எல்லா சந்திப்புகளிலும் முடிந்த வரை கலந்து கொள்பவர் .

ஜிம்ஷா :

தினமும் பல அதிரடி பதிவுகளால் அடிக்கடி சூடான இடுகைகளை ஆக்கிரமிப்பவர் , சந்திப்புக்கு மிகத்தாமதமாக வந்தார் அது தவிர யாரிடமும் பேசாமல் அனைவரது நடவடிக்கைகளையும் வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தார் . தொப்பி கண்ணாடி என அசத்தலாக இருந்தார் .

ஜிங்காரோ ஜமீன் :


பதிவர் ஜிங்காரோ ஜமீன் , பல பதிவர் சந்திப்புகளில் கலந்து கொண்டு புகழ்பெற்றவர் . பதிவுகள் மட்டும் எழுதமாட்டார் . கும்மி மக்களோடு சந்திப்பு முழுதும் ஐக்கியாமாகியிருந்தார் . அவரோடு அளவளாவ அத்துனை வாய்ப்பு கிட்டவில்லை . கிட்டியிருந்தால் கலாய்த்து மகிழ்ந்திருப்பேன்
வடகரைவேலன் :

கோவையிலிருந்து நமது பதிவர் சந்திப்பிற்க்காக இந்த சென்னை வந்த ஒரே பதிவர் இவர் . சந்திப்பில் கலந்து கொண்டு சிறப்பித்த அவருக்கு என் நன்றிகள்.

தாமிரா :

சமீபகாலமாக வலையுலகில் தங்கமணிகள் பற்றி பதிவுகளால் வலையுலகில் சிலபல புரட்சிகள் செய்து வருபவர் . புகைப்படத்தில் பார்ப்பதைவிட நேரில் ஆள் அழகாக இருக்கிறார் . சினிமாவில் நுழைவதை விட டிவி மெகா சீரியல்களில் கதநாயகன் வேடத்திற்கு பொருத்தமாக இருப்பார். சந்திப்பு முடிவதற்கு முன்னே ஓடிவிட முயன்றார் .(தங்கமணி டிரபிளாக இருக்கலாம் )

கார்க்கி ;

சமீபகாலமாக சிலபல அதிரடி பதிவுகளால் கலக்குபவர் , இளமைதுள்ளலுடன் சந்திப்பு முழுவதுமே காணப்பட்டார் . ( அவர் என்னை போலவே மஞ்சள் சட்டையும் நீல பேண்டும் அணிந்து வந்து என்னை வியப்பில் ஆழ்த்தினார்...... இன்னாங்கடா கலரு என்று நீங்கள் எண்ணுவது புரிகிறது ... )

குப்பன் _ யாகூ ;

யாகூவின் சாட் ரூம்களில் கபடி ஆடிக்கொண்டிருந்தவர் சமீபகாலமாக தமிழ்வலையுலகிலும் கலக்குகிறார் . சந்திப்பு அறிவித்த நாளில் இருந்து ஆல்கஹால் மறுப்புகொள்கையுடன் இருந்தவர் . ஆனால் ஏனோ பாதி சந்திப்பில் சொல்லாமல் கொள்ளாமல் மாயமாகினார் .

ஊர் சுற்றி - ஜோன்சன் :

சந்திப்பு முழுதுமே மிக அமைதியாக காணப்பட்டார் . அனைத்து பதிவர்களிடமும் ஆரம்ப தயக்கம் இருப்பினும் பின் சுதாரித்து அனைவரிடமும் கலகலப்பாக இருந்தார்.

பாலசந்தர் :

உலகம்.நெட் தளத்தின் பங்களிப்பாளரான இவர் தனியாகவும் தனக்கென ஒரு வலைப்பூவை வைத்துள்ளார் . பார்க்க ஆரம்பகால விஜயகாந்த் போல இருந்தாலும் மிக அமைதி . தனது டிஷர்ட்டில் தமிழ்வலைப்பதிவர் என எழுதி வந்து அனைவரையும் கவர்ந்தார்.

சரவணன் :

நம்மில் மிகமிக புதிய பதிவர் , திரைப்படத்துறையில் உதவி இயக்குனராக பணியாற்றும் இவர் தனது பணிகளுக்கு நடுவே சந்திப்பின் பாதியில்தான் வந்தார் .

சென் :

இவரும் ஒரு புதிய பதிவர் சமீபத்தில் தான் தனது வலைபதிவை தொடங்கியிருந்தார் . அனைவரிடமும் நிறைய பேசி நட்பு பாராட்டினார் . நிறைய புகைப்படங்கள் எடுத்தார் . அதை என்ன செய்தார் என்று தெரியவில்லை.

வினோத் ( அக்னிபார்வை ) ;

மேலும் ஒரு மிகப்புதியப்பதிவர் , சந்திப்புக்கு வந்த புதிய பதிவர்களில் அதிகம் விவாதங்களில் கலந்து கொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் .

வரவணையான் :

இவரும் மிகப்புதிய பதிவர் , இவரும் பொட்டீகடையாரும் ஒன்றாகவே வந்தனர் . அனைவரையும் மாறிமாறி படமெடுத்தபடி இருந்தார் . சந்திப்பு முடிந்ததும் சில பதிவர்களுக்கு சரக்கு வாங்கிதந்து நட்பு பாராட்டியதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .


வெண்பூ தனது மகனின் உடல்நிலை சரி இல்லாததால் வர இயலவில்லை என்று கூறியிருந்தார்.


இவர்கள் தவிர வருவார்கள் என மிகவும் எதிர்பார்த்த புதுகை அப்துல்லா , உண்மைத்தமிழன் , கேபிள் சங்கர் , போன்ற பதிவர்கள் வராதது மிகவும் வருத்தத்தை அளித்தது .


இவர்கள் தவிர அதிஷா,லக்கிலுக்,கடலையூர் செல்வம் , முரளிகண்ணன் போன்ற புதிய பதிவர்களும் சின்னத்துரை மற்றும் நர்சிமின் நண்பர் , மேலும் ஒரு வாசகர் இச்சந்திப்பில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


சந்திப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் குச்சி ஐஸ் வாங்கித்தரப்பட்டது . ( திஸ் குச்சி ஐஸ் ஈஸ் ஸ்பான்சர்டு பை பொட்டிகடை)


சாருநிவேதிதா குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டது , என்னை பொருத்தவரை இந்த சந்திப்புக்கு அவரது வலைபக்கத்திலும் விளம்பரம் கொடுத்து உதவியதாகவே கருதுகிறேன் . ( சாரு மிக்க நன்றி ; )


சந்திப்பு 6 மணிக்கு என அறிவித்து விட்டு நானும் லக்கியும் 5 மணிக்கே பீச்சுக்கு வந்து கொண்டிருக்கையில் லக்கியின் பைக் பஞ்சராகியது , அதனால் நாங்கள் பீச்சை அடைய 6.10 ஆகிவிட்டது , பல புதிய பதிவர்களும் ஒருவரை ஒருவர் அறியாது அது வரை ஆங்காங்கே அலைந்து கொண்டிருந்தனராம்.


எங்களது பைக் பஞ்சரான இடம் சென்னையின் மிக முக்கிய கல்லூரியான எத்திராஜ் கல்லூரியின் வாசலில் , அதுவும் அந்த கல்லூரி முடிந்து பெண்கள் வெளியேறும் நேரம் , நல்ல நேரத்திலும் கெட்ட நேரம் .


கடற்கரையில் பல பதிவர்களும் பதுங்கி பதுங்கி தம் அடித்தது வேடிக்கையாக இருந்தது . ( அன்னைக்கினு பாத்துதான் யாரோ வி.ஐ.பி வரணுமா பீச்சு பூரா ஒரே போலிஸ்.


புதுப்பதிவர்கள் ஒவ்வொருவராக வருவதும் அவர்களை அலைப்பேசியில் பிடித்து சந்திப்பில் விடுவதுமாக இருந்ததால் என்னால் யாரிடமும் சரியாக பேசக்கூட இயலவில்லை . அதனால் அங்கே என்ன பேசப்பட்டது என்று தெரியவில்லை. ( இந்த பதிவில் உங்கள் பெயர் விடுபட்டிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும் இந்த வரலாற்று சிறப்புமிக்க பதிவில் உங்கள் பெயரையும் சேர்த்துக்கொள்கிறேன் )


பதிவர் சந்திப்பு புகைப்படங்கள் இங்கே...


http://picasaweb.google.co.in/asksen.ashok/BloggerSMeet?authkey=lODgj2cQiJ0#


____________________________________________________________________________________


அவ்ளோதான்பா. ;-)


____________________________________________________________________________________26 comments:

கோவி.கண்ணன் said...

//சுட்டப்படம்//

அதிஷா,

உங்க சுட்டப்படம் ஒரு வினாடி கண்ணையே சுட்டுவிட்டது....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

துளசி கோபால் said...

வரவணையான் புதிய பதிவரா?

ஐய்யய்யோ......
சொந்த செலவில் சூனியம் வச்சுக்கறதுக்குச் சொந்தக்காரர் ஆச்சே:-)

விவரங்களுக்கு நன்றி அதிஷா.

Ŝ₤Ω..™ said...

//நிறைய புகைப்படங்கள் எடுத்தார் . அதை என்ன செய்தார் என்று தெரியவில்லை.//
உங்க லொள்ளுக்கு அளவே இல்லயா?? உங்க பதிவிலேயே நான் அனுப்பின picasa link குறிப்பிட்டுவிட்டு, இப்படி என்ன செய்தார் என்று தெரியல நு எழுதிருக்கீங்களே??

அய்யா.. ராசா.. அது நான் எடுத்த நிழற்படங்கள் தானுங்கோ... எந்த கோயில வேணும்னாலும் சத்தியம் பண்ணுவேன்..

மேலும்.. உங்க வழிகாட்டுதலின் படி, நானும் வலைத்தளம் பதிவு செய்திவிட்டேன்.. www.sensiblesen.com

ஜோசப் பால்ராஜ் said...

//உங்க லொள்ளுக்கு அளவே இல்லயா?? உங்க பதிவிலேயே நான் அனுப்பின picasa link குறிப்பிட்டுவிட்டு, இப்படி என்ன செய்தார் என்று தெரியல நு எழுதிருக்கீங்களே?? //

இதை நான் வழிமொழிகிறேன்.

மேலும் உங்கள் வழிகாட்டுதலின்படி வலைத்தளம் அமைத்த செந்திலின் வழிகாட்டுதலின் படி நானும் வலைதளம் அமைத்துவிட்டேன். www.maraneri.com

Ramesh said...

Nice! Thanks for pictures.

அங்கு வந்து கலந்த மாதிரி ஒரு பீலிங்!

g said...

என்னே ஆச்சு. என் பேரையே காணோம்?

பரிசல்காரன் said...

வழக்கமான அதிஷா பாணி எழுத்து! மிக மிக ரசித்தேன் ரைட்டர்!

பரிசல்காரன் said...

//அதிஷா,லக்கிலுக்,கடலையூர் செல்வம் , முரளிகண்ணன் போன்ற புதிய பதிவர்களும் //

இவர்கள் யாரென்று ஏதேனும் குறிப்பிட்டிருந்தால் கொஞ்சம் தெரிந்திருக்கும்.

Ganesan said...

good posting athisha, written in siple mode about all pathivarkal.
congrats

கார்க்கிபவா said...

கலக்கல் அதிஷா.. நம்மள மாதிரி யூத்துங்க போடுற கலர யாராவது கிண்டல் பண்ணுவாங்களா?

Ŝ₤Ω..™ said...

எல்லாரும் அந்த விடயத்தை குறிப்பிடவே இல்லை..
அதிஷா மற்றும் கார்க்கி இருவரின் Tசட்டை வண்ணங்கள் கருப்பொருளாகி ஒரு பேச்சு வந்தது.. M.G.ற். மற்றும் தெலுங்கு திரைபடங்களில் வரும் கதாநாயகர்களோடு உங்களை ஒப்பீடு செய்யவில்லை என்றாலும், அவங்களை ஞாபகப்படுத்தியது..

அக்னி பார்வை said...

என்ன கொடுமை அதிஷா இது, என் பைக்கும் அடிகடி அங்கு தன் பஞ்சர் ஆகும்....
அங்கு என்ன ஆயிற்று என்று தனி பதிவை எதிர்பார்க்கலாமா?.( நீங்கள் அடிக்கடி அழக்குரிபெழுடும் அழகர், அன்றைக்கு ஹீரோ (தெலுங்கு பட ஹீரோ ) மாதிரி வேறு இருந்தீர்கல்) பஞ்சர் ஆனா இடம் வேறு எதிராஜ் கல்லூரி.....

கலக்கிறிங்க அதிஷா ..

அக்னி பார்வை said...

அந்த வெப்சைட் உருவாக்கம் தங்க மலை ரகசியத்தை என்னக்கும் சொல்லுங்க தல...
ஒன்னு மெயில் அனுப்புங்க (thiruvinod4u@gmail.com)இல்ல போன் பண்ணி சொல்லுங்க (9940644162)

Anonymous said...

u r noted

http://charuonline.com/oct08/PadiPiti1.html

Anonymous said...

வரவணையான் :

இவரும் மிகப்புதிய பதிவர் ,//
மொக்கைப் பதிவர் விடுதலை அமைப்பின் தெற்காசிய பொறுப்பாளர் - "தமிழ்மன குடிதா(டா)ங்கி" வரவனையானை புதிய அதிலும் மிகப்புதிய பதிவர் என அவமதித்ததை கண்டிக்கிறோம்.

http://koluvithaluvi.blogspot.com/2007/04/mpva.html

Anonymous said...

Welldone Athisha. It is really nice to read your article and felt as if I was there with you. Keep it up. Raghavan, Nigeria

rapp said...

ஞானி வேறு ஒரு எழுத்தாளர், கோவயைச் சேர்ந்தவர்னு நினைக்கறேன். அதனால், ஓ பக்கங்கள்/தீம்தரிகிட ஞாநி சாரை இப்படிக் குறிப்பிடவும்

narsim said...

தல.. நானும் வந்திருந்தேன்..

கலக்கல் நடை..அதிஷா..

நர்சிம்

புருனோ Bruno said...

//புகைப்பிடித்தல் தடை குறித்து விவாதம் எழுகையில் அருமையான ஒரு கருத்தை முன்வைத்தார் , சிகரெட்டை காண்டத்துடன் ஒப்பிட்டு , அது குறித்து தனி பதிவு விரைவில் இட எண்ணியுள்ளேன்.//

கேள்வி : சிகரெட்ரை ஏன் விற்கிறார்கள். விற்பனையை தடை பண்ண வேண்டியது தானே

நான் சொன்னது : ஆணுறை (காண்டம்) கூடத்தான் கடையில் விற்கிறார்கள். அது அறைக்குள் பயன் படுத்தம் பொதுவில் பயன்படுத்த அல்ல

அது போல் வெண்குழல் வத்தியையும் அறைக்குள் பயன்படுத்த தடை கிடையாது. பொது இடங்களில் பயன்படுத்தத்தான் தடை !!!

சின்னப் பையன் said...

I called you representing JK.Rithish sangam....:-)))

Cable சங்கர் said...

//இவர்கள் தவிர வருவார்கள் என மிகவும் எதிர்பார்த்த புதுகை அப்துல்லா , உண்மைத்தமிழன் , கேபிள் சங்கர் , போன்ற பதிவர்கள் வராதது மிகவும் வருத்தத்தை அளித்தது .//

ரொம்ப சாரி அதிஷா.. அன்னைக்கு வரணும்னு ரொம்பவே முயற்சி செஞ்சேன்..முடியல.. என் தயாரிப்பாளருடன் பேசிக் கொண்டிருந்தால் அங்கிருந்து கழட்டிக்கிட்டு வர முடியல. அதனால தான் உங்க நினப்புல சனிக்கிழமை ஓரு பதிவ போட்டுட்டேன்..http://cablesankar.blogspot.com/2008/10/blog-post_04.html உங்களையும், பரிசலையும், லக்கியையும், நிச்சயமாய் மீட் செய்யணும்.. அதிஷா.. அது சரி நீங்க டிசைனரா?

Thamira said...

புகைப்படத்தில் பார்ப்பதைவிட நேரில் ஆள் அழகாக இருக்கிறார் .// ஹி..ஹி.. தேங்ஸுபா.! நீதான் கலாய்த்தல் திலகமாச்சே.. நா நம்புறேன்.

வால்பையன் said...

அழகான விரிவுரை!
நேரில் பார்ப்பது போல் இருந்தது
நன்றி

வால்பையன் said...

டாக்டர் புருனோவின் பதில் நச்

VB2010 said...

அதிஷா ....

நீங்க அந்த போட்டோவில் கண்ணை முடியிருப்பது பெரிய topic ஆயிட்டு போல .... இந்தாங்க நான் கண்ணை முடலைன்னு பெருமையாய் சொல்லி கொள்ளுங்கள்...
நம்ம blog இல் பார்த்துகோங்க .....
vellainila.blogspot.com

Unknown said...

எல்லாஞ் சரி சாமியோவ்...சட்ட கலரையும்,பேரையும் போட்டாதான் சாமி எங்களபோல குருவிக்காரங்களுக்கு புரியும்..