சேவல் - செம லோக்கல் மாமு....

>> 29 October 2008


சேவல் :

சேவல் சண்டைகள் பார்த்திருக்கிறீர்களா , அதில் இரண்டு சேவல்களை மோத விடுவார்கள் , அவை மோதி கொள்ளும் போது அதில் இருக்கும் மூர்க்கத்தனமும் , வன்முறையும் வேகமும் அந்த சேவல்களுக்கு நடுவில் மட்டுமல்லாது , அதை பார்ப்பவர் மனதிலும் தொற்றிக்கொள்ளும் . அதன் தாக்கம் மிக வன்மையும் வலியும மனதில் பதியும் . இத்தனைக்கும் அச்சேவல்கள் நமதாக இல்லாதிருந்தாலும் அப்படி ஒரு உணர்வு தோன்றும் .
1980களிலும் 75க்கு பிறகும் வெளியான பெரும்பாலான படங்களின் கதைகளிலிருந்து , ஒரு ஒரு பருக்கையாக எடுத்து மொத்தமாக கிண்டி , ஒரு பானையில் அடைத்து 20 வருடங்களுக்கு பிறகு கிடைக்கும் சுண்டகஞ்சி போல வந்திருக்கும் படம் சேவல் . இது சாதாரண சுண்டகஞ்சியாக இல்லாமல் குடும்பத்தோடு அனுபவிக்க வல்ல சுண்டக்கஞ்சியாக கொடுத்ததில் படத்தின் இயக்குனர் ஹரி வெற்றிப்பெற்றுருக்கிறார் என்றே சொல்லவேண்டும் . பி&சி சென்டருக்கு படம் எடுக்க வேண்டுமா கூப்பிடரா ஹரியை என்பது போல படம் வந்திருக்கிறது . பி&சி ரசிகர்களின் நாடித்துடிப்பறிந்து படத்தை எடுத்திருக்கிறார் ஹரி .

குயில்கள் கூவும் கிராமம் , ஒரு வில்லத்தனமான நாட்டமை , போக்கிரியான ஹீரோ , அம்மா இல்லாத அக்ரகாரத்து அழகு ஹீரோயின் , அவளை வளர்த்த பாசக்கார அக்கா , இடையில் காதல் , நாட்டமைக்கு ஹீரோயின் மீது கண் , அதனால் சிக்கல் , அக்காவுக்கு புற்றுநோய் , அதனால் அக்கா புருஷனை கல்யாணம் செய்து தியாகம் செய்யும் ஹீரோயின் , அவளுக்கு சிக்கல்தரும் நாட்டாமை , நாட்டாமையை பழிவாங்கும் ஹீரோ , முடிவில் சுபம் .

இந்த ஒரு பத்தி கதையை வடிவேலுவின் நகைச்சுவை , சிம்ரனின் செண்டிமென்ட் , பரத்தின் துள்ளல் என அழகாக முடிச்சு போட்டு குடும்பத்தோடு பார்க்க தகுந்த வகையில் திரைக்கதை அமைத்திருக்கின்றனர் . படத்தின் முதல் பாதியில் நகைச்சுவை மற்றும் இரண்டாம் பாதியில் செண்டிமென்ட் எனும் வெற்றி பார்முலாவோடு களமிறங்கியிருக்கிறார்கள் .

படத்தின் ஹீரோ பரத் , பரத்துக்கு பிஞ்சுமூஞ்சி , அதை தனது நான்கு நாள் தாடியில் மறைக்க முயல்கிறார் . படம் முழுக்க ஓடுகிறார் , மூன்று குத்தாட்ட பாடல்களில் குத்து குத்தென குத்துகிறார் , இரண்டு சண்டைகளில் அடித்து உதைக்கிறார் , இரண்டு சோகப்பாடலில் அழுகிறார் . படம் முழுக்க பருத்திவீரன் கார்த்தியை காப்பியடித்தது போல உணர்வு .

படத்தின் ஹீரோயின் பூனம் பஜ்வா ( என்ன பேரு!!) படம் முழுக்க வருகிறார் , கதையும் அவரை சுற்றியே பயணிக்கிறது , இளைத்து போன பானு போல இருக்கிறார் . கொஞ்சம் நடிக்கவும் செய்கிறார் . இறுதிக்காட்சியில் மொத்தமாய் தாய்மார்களின் மனதை கொள்ளை கொள்கிறார் . ( கிளைமாக்ஸில் மொட்டை அடித்துக்கொள்கிறார் அது நிஜ மொட்டையா அல்லது கிராபிக்ஸா தெரியவில்லை எப்படி பார்த்தாலும் அழகு!! )

படத்தில் முக்கிய பாத்திரத்தில் சிம்ரன் , நிறைவாக செய்திருக்கிறார் , சிம்ரனுக்கு லேசான தொப்பை ( சிம்முக்கு வயசாகிருச்சோ!! ம்ம் ) .படத்தில் கேன்சர் வந்த பிறகு மேக்கப்பில்லாமல் நடித்திருப்பார் போல படம் பார்த்துக்கொண்டிருந்த தோழர் அதை உறுதி செய்தார்.

வடிவேலு அடிவாங்குவதை வித்தியாசமாக முயற்சித்திருக்கிறார் . சில இடங்களில் குணச்சித்திர நடிப்பில் அசத்துகிறார் . திரையரங்கில் படத்தில் நடித்த மற்ற எந்த நடிகருக்கும் இல்லாத விசில் , வடிவேலு திரையில் தோன்றும் போதெல்லாம் வருகிறது . வடிவேலுவை பார்த்தேலே தாய்மார்கள் சிரிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.

இது தவிர ராஜேஷ்,சவீதா ஆனந்த் , என இன்னும் நிறைய நட்சத்திரங்கள் , படத்தின் ஓட்டத்தில் வந்து வந்து போகின்றனர் .

இசை - இம்சை

ஒளிப்பதிவு மிக அழகாகவும் , படத்தில் இரண்டு சண்டை காட்சிகள் என்றாலும் படம் பார்க்கும் பார்வையாளன் மனதில் படம் நெடுக வன்முறையை ஓட விட்டிருப்பது அருமை . ( ரத்தமே இல்லாமல் வன்முறை )

படத்தின் இறுதிக்காட்சியில் பெரியார் கூறிய கருத்துக்களில் சிலவற்றை(மறுதார மணம் , பார்ப்பனிய எதிர்ப்பு , மூடநம்பிக்கைகள் ) மிக அழகாகவும் நாசூக்காகவும் இணைத்து , பார்வையாளன் மனதில் நச் என பதியவிட்டிருக்கிறார் இயக்குனர் . பெரியாரின் கருத்துக்கள் எப்போதுமே நம்மவர்களுக்கு விளக்கெண்ணெய் குடிப்பது போலத்தான் இருக்கும் , அதே விளக்கெண்ணெய் ட்ரீட்மெண்டை ஒரு சுவையான வாழைபழத்தில் வைத்து கொடுத்த இயக்குனருக்கு சபாஷ் . இது தவிர இது போன்ற ஒரு சர்ச்சைகுரிய விடயத்தை எடுத்துக்கொண்டு தைரியமாக படமாக்கியமைக்கும் இன்னொரு சபாஷ் .

படத்தின் பெரிய மைனஸ் , படத்தின் இரண்டாம் பாதியின் நீளம் , கொஞ்சம் குறைத்திருக்கலாம் , இரண்டாவது அரதப்பழசான செண்டிமென்ட் காட்சிகள் ( உதா ; புற்றுநோய் அதுவும் ரத்தப்புற்று நோய் ) . பாடல்கள் எரிச்சல் . அளவுக்கதிகமான வன்முறை ( ரத்தமே இல்லாமல் வன்முறையை பதியவிட்டிருப்பது , வடிவேலு காமெடியிலும் கூட ) . பரத்தின் நடிப்பு சமயங்களில் எரிச்சலூட்டுகிறது .

சமீபகாலமாக குடும்பத்தோடு பார்க்கவும் கொண்டாடவும் அதிகமாக படங்கள் வருவதில்லை , அந்த குறையை இப்படம் நிவர்த்தி செய்யும் . ( நேற்று தியேட்டரில் பார்த்த தாய்மார்களின் எண்ணிக்கையே அதற்கு சாட்சி ) . இப்படம் பிராமணர்களை நிச்சயம் கவராது .

ஆனால் சாதாரண குடும்பத்து நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களை நிச்சயம் ஈர்க்கும் . (அதாவது பி&சி )

சேவல் - கமர்ஷியல் பிரச்சாரம்.

18 கருத்துக்கள்:

துரை,  October 30, 2008 12:41 PM  

//இப்படம் பிராமணர்களை நிச்சயம் கவராது//

பிராமணர் இல்லை பார்ப்பனர். பெயரளவிலும் அந்தக் கூட்டத்தின் மேலான்மையை ஏற்காதீர்

லக்கிலுக் October 30, 2008 12:57 PM  

வாட் எ கோ இன்சிடெண்ஸ் தோழர்?

தாங்களும் இப்படத்தை கண்டுகளித்தீரா? :-)

வால்பையன் October 30, 2008 1:13 PM  

மேலிருக்கும் படம் நன்றாக இருக்கிறது

வால்பையன் October 30, 2008 1:13 PM  

விமர்சனத்துக்கு ரொம்ப நன்றி

வால்பையன் October 30, 2008 1:14 PM  

ஆனாலும் நான் தொலைக்காட்சியில் போடும் போது தான் பார்ப்பேன்

வெள்ளை நிலா October 30, 2008 1:29 PM  

அது என்ன தகவல் பலகையில் ..

அதிஷாவை கொல்ல அதிஷா முயற்சி... சாக மாட்டேங்கறான் அதிஷா....

Please explain....

வால்பையன் October 30, 2008 1:36 PM  

//அதிஷாவை கொல்ல அதிஷா முயற்சி... சாக மாட்டேங்கறான் அதிஷா....//

இதுவரை நீ என்று கருதிய நீ அழிந்தொழிய நீ அல்லாத நீ தான் நீ

இறக்குவானை நிர்ஷன் October 30, 2008 1:59 PM  

//வால்பையன் said...
மேலிருக்கும் படம் நன்றாக இருக்கிறது
//

ரிப்பீட்டேய்ய்ய்ய்.........
படத்தை க்ளிக் பண்ணினா பெரிதாகுமா???

நந்தா October 30, 2008 4:40 PM  

அதீஷா இது போன்ற படங்களை விமர்சிக்கும் போது அருமை, முயற்சி என்பது போன்ற வார்த்தைகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது.

சேரிஜனங்களை குடிகாரர்களாகவும், சுகாதாரம் அற்றவர்களாகவும் காட்டிய, உயர் வர்க்க சில எழுத்தாளர்களுக்கும், பி & சி சென்டர் ரசிகர்கள் விரும்பும் படம் என்பது போன்ற அடைமொழிகளுக்கும் அதிகம் வித்தியாசம் இல்லை.

முன்னது கருத்தாக்கம். பின்னது ஒப்புதல் வாக்குமூலம்.

தமிழன்...(கறுப்பி...) October 31, 2008 11:05 AM  

படம் பாக்கலாம்கறிங்க..:)

தமிழன்...(கறுப்பி...) October 31, 2008 11:06 AM  

வால்பையன் said...
//அதிஷாவை கொல்ல அதிஷா முயற்சி... சாக மாட்டேங்கறான் அதிஷா....//

இதுவரை நீ என்று கருதிய நீ அழிந்தொழிய நீ அல்லாத நீ தான் நீ
\\

:)
இது புரியலை அண்ணே எனக்கு விளக்கம் பிளீஸ்

தமிழன்...(கறுப்பி...) October 31, 2008 11:08 AM  

\\
படம் பார்த்துக்கொண்டிருந்த தோழர் அதை உறுதி செய்தார்.
\\

அப்ப இது லக்கி அண்ணன் இல்லையா? :)

வெங்கடேஷ்,  October 31, 2008 5:42 PM  

//
லக்கிலுக் said...
வாட் எ கோ இன்சிடெண்ஸ் தோழர்?

தாங்களும் இப்படத்தை கண்டுகளித்தீரா? :-)
//

மறுபடியும் ஆரம்பிச்சிட்டீங்களாய்யா ;-).....

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

வெண்பூ October 31, 2008 10:55 PM  

ரெண்டு பேரும் படம் பாத்துட்டு அந்த ஹீரோயின் காட்டுன காட்டுல கமுந்துட்டீங்க.. கரெக்டா?? :)))))

keerthi November 5, 2008 9:12 AM  

நான் இன்னும் படம் பாக்கல
அந்த ஹீரோயின் அப்படி என்ன காட்டுறாங்க வெண்பூ .........................????????????

நரேஷ் November 5, 2008 12:23 PM  

//படத்தின் இறுதிக்காட்சியில் பெரியார் கூறிய கருத்துக்களில் சிலவற்றை(மறுதார மணம் , பார்ப்பனிய எதிர்ப்பு , மூடநம்பிக்கைகள் ) மிக அழகாகவும் நாசூக்காகவும் இணைத்து , பார்வையாளன் மனதில் நச் என பதியவிட்டிருக்கிறார் இயக்குனர்//

பொதுவாக ஹரி படங்கள் பழமைவாதத்தை வலியுறுத்துவதாகத்தான் இருக்கும். ஆனால் நீங்கள் சொல்வது வித்தியாசமாக இருக்கிறது. நீங்களே நாயகி, அக்காளின் கணவனை திருமணம் செய்து தியாகம் செய்வதாக சொல்கிறீர்கள். அக்காளுக்கு புற்று நோய் வந்தால் அவளுடைய தங்கைதான் தியாகம் செய்ய வேண்டுமா? இதில் பெரியார் கருத்துக்களை வேறு சொல்கிறாரா?

ஆனா ஒன்னு, படம் பூஜை போட்டும் போதே பரத் சேவல் மேல உக்காந்து இருக்கற மாதிரி போஸ்டர் ஒட்டுனாங்க பாருங்க அப்பியே நான் புரிஞ்சுகிட்டேன் படம் எப்படியிருக்கும்னு :)

நரேஷ் November 5, 2008 12:23 PM  

//படத்தின் இறுதிக்காட்சியில் பெரியார் கூறிய கருத்துக்களில் சிலவற்றை(மறுதார மணம் , பார்ப்பனிய எதிர்ப்பு , மூடநம்பிக்கைகள் ) மிக அழகாகவும் நாசூக்காகவும் இணைத்து , பார்வையாளன் மனதில் நச் என பதியவிட்டிருக்கிறார் இயக்குனர்//

பொதுவாக ஹரி படங்கள் பழமைவாதத்தை வலியுறுத்துவதாகத்தான் இருக்கும். ஆனால் நீங்கள் சொல்வது வித்தியாசமாக இருக்கிறது. நீங்களே நாயகி, அக்காளின் கணவனை திருமணம் செய்து தியாகம் செய்வதாக சொல்கிறீர்கள். அக்காளுக்கு புற்று நோய் வந்தால் அவளுடைய தங்கைதான் தியாகம் செய்ய வேண்டுமா? இதில் பெரியார் கருத்துக்களை வேறு சொல்கிறாரா?

ஆனா ஒன்னு, படம் பூஜை போட்டும் போதே பரத் சேவல் மேல உக்காந்து இருக்கற மாதிரி போஸ்டர் ஒட்டுனாங்க பாருங்க அப்பியே நான் புரிஞ்சுகிட்டேன் படம் எப்படியிருக்கும்னு :)

Post a Comment

  © Blogger template Simple n' Sweet by Ourblogtemplates.com 2009

Back to TOP