31 October 2008

ஒபாமாவின் உயிரை காத்த கோவை ஜோதிடர்கள்...!!


பராக் ஒபாமாவை பற்றி நம்மில் பலருக்கும் சமீபகாலமாக நல்ல பரிச்சயம் ஏற்பட்டிருக்கிறது . அவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முண்ணனி போட்டியாளர். அவர் அமெரிக்காவின் அதிபராக அதிக வாய்ப்புள்ளதாக சமீபத்திய கருத்துக்கணிப்புகளும் கூறி வருகிறது . அமெரிக்க அதிபர் தேர்தல் சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் , சில தினங்களுக்கு முன் அவரை சுட்டு கொலை செய்ய முயன்றதாக அமெரிக்காவில் இருவர் கைது செய்யப்பட்டதும் அனைவருக்கும் நினைவிருக்கலாம் . சரி கோவை ஜோதிடர்களுக்கும் ஒபமாவுக்கும் என்ன தொடர்பு என நீங்கள் கேட்பது புரிகிறது .

'' மிரித்யுன்ஜயா யாகம் '' என ஒருவகை யாகம் அல்லது பூசை இருக்கிறது . இது எதிர்பாராத வகையில் ஏற்படும் சாவை அல்லது ஆபத்தை தடுக்கவல்லதாம் . அந்த யாகத்தை பற்றி பின்னர் பார்ப்போம் . அவ்வகை யாகம் ஒன்றை அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஒபாமா அவர்களுக்காக சென்ற வாரம் கோவையில் இருக்கும் ஒரு சிறிய கோவில் ஒன்றில் வைத்து செய்திருக்கிறார்கள் . அது குறித்து நகரில் பலரும் அறிந்து அது குறித்து எள்ளி நகையாடியுள்ளனர் . இது புகழடைய நினைக்கும் சில ஜோதிடர்களின் வெட்டி ஸ்டன்ட் என்றும் சிலர் கூறினர் . ஆனால் அதை பொய்யாக்கும் விதத்தில் இய்யாகம் நடத்தி இரண்டாவது நாளே இருவர் ஒபாமாவை கொல்ல முயன்றதாக கைதானதும் இவ்விடயம் உச்சத்திற்கு சென்றுள்ளது .

இது தற்செயலானதா என இய்யாகத்தை நடத்திய கோவை ஆர்ய வைத்திய பார்மஸியின் இயக்குனர் பிஆர் . கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்ட போது , ஒபாமாவின் ஜாதகத்தை பார்த்து அதில் அவருக்கு தற்சமயம் ஒரு கண்டம் இருந்ததாகவும் அதிலிருந்து அவரை விடுவிக்கவே இய்யாகம் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார் . அதுதவிர அவர் இது போல நமது அரசியல் தலைவர்களின் ஜாதகங்களையும் கண்டறிந்து அதற்கேற்றாற் போல நமது இந்திய அரசாங்கத்தை அமைத்தால் இந்தியா விரைவில் வல்லரசு நாடாகும் எனவும் தெரிவித்துள்ளார் .

மிருத்யுன்ஜெயா யாகம் என்பது என்னவென்று பார்ப்போம் , இவ்வகை யாகம் சிவபெருமானை நோக்கி நடத்தப்படுபவை , இது எதிர்பாராத விபத்து அல்லது நாட்பட்ட நோய் போன்ற ஆபத்துக்களில் இருந்தும் நம்மை காக்க வல்லதாம் . சமஸ்கிருதத்தில் மிருத்யு என்றால் இறப்பு என்றும் ஜெயா என்றால் வெற்றி என்றும் பொருள் . அதாவது சாவை வெற்றி கொள்ள செய்யும் யாகம் என்று பொருள் படும் . பண்டிதர்கள் 1,25,000 முறை யாரை நோக்கி யாகம் நடத்துகிறோமோ அவர் பெயரையும் அவருக்குரிய மந்திரத்தையும் ஒதுவார்கள் . இய்யாகத்தில் துருவா எனப்படும் புல்லையும்(அருகம்புல்), அம்ரிதா எனப்படும் மூலிகையையும் அர்பணிப்பார்கள் .
காக்கை உக்கார பனம் பழம் விழுந்ததாக ஒரு பழமொழி உண்டு , இவ்விடயம் அதைப்போன்றதே , ஓபாமாவை கொல்ல அனுதினமும் அவரது எதிரிகள் முயன்று வருவது அனைவரும் அறிந்த ஒன்று . இந்த ஜோதிடர்கள் தாங்கள் நடத்திய யாகத்தால்தான் அவர் உயிர்தப்பினார் என்று கூறுவது ஏற்கனவே அறியாமை இருளில் மூழ்கி கிடக்கும் நம் மக்களை மேலும் இது போன்ற மூட நம்பிக்கைகளுக்கு அடிமையாக்கும் முயற்சியே . அது தவிர ஒரு சில ஜோதிடர்கள் தங்கள் பெயரை மேலும் புகழடைய செய்யவும் இது போல செய்யலாம் . இப்படி யாகம் நடத்தி ஒருவரது உயிரை காப்பாற்றிக்கொள்ளலாம் என்னும் பட்சத்தில் நாட்டில் எதற்கு இத்தனை மருத்துவமனைகள் இராணுவம் மற்றும் காவல்துறையும் , மணி ஆட்டுவதற்கா? .

ஒபாமாவை காப்பாற்றியது சி.ஐ.ஏ வும் எப்.பி.ஐயும் , அதைவிடுத்து எங்கோ அமெரிக்காவில் இருக்கும் ஒருவர் உயிர் பிழைத்தது இங்கு நடத்திய யாகத்தால்தான் என்பது கேலிக்கூத்தாக இல்லையா . நம் நாட்டில் அனுதினமும் ஆயிரம் ஆயிரம் மக்கள் தேவையற்ற குண்டு வெடிப்பால் இறந்து கொண்டிருக்கின்றனர் . நேற்று கூட அஸஸாமில் 15 நிமிடங்களில் 18 குண்டுவெடிப்புக்கள் அதில் இறந்துபோகும் குழந்தைகள் . இப்படி லட்சக்கணக்கில் அப்பாவியாய் இறந்து போகும் மக்களுக்காக யாகம் நடத்துவதுதானே .

இதையெல்லாம் விட்டுவிட்டு வெறும் புகழுக்காக ஜோதிடம் என்னும் ஒரு கலையை பயன்படுத்தி புகழடைய நினைக்கும் சராசரி ஜோதிடர்களின் ஏமாற்று வேலையே இந்த யாகம் ,___ ,____ , எல்லாமே . ஓபாமாவிற்கு இருக்கும் மத ( இந்து மத ) நம்பிக்கையை பயன்படுத்தி அவரிடம் தங்களை முன்னிறுத்தும் முயற்சியாகவே நமது கோவை ஜோதிடர்களின் முயற்சி இருக்கிறது .


செய்தி உதவி : டெக்கான் குரோனிக்கிள் . நன்றி
படம் உதவி - கூகிள்

13 comments:

Ramesh said...

;-)

Super Diwali Pattasu!

Where did you get that picture?

தமிழன்-கறுப்பி... said...

:)

லக்கிலுக் said...

தோழர் தாங்கள் போட்ட படத்தில் இருப்பது ஒரிஜினல் சூ இல்லை. அது 3டிஎஸ் மேக்ஸ் போன்ற சாஃப்ட்வேரில் உருவாக்கப்பட்ட பொம்மை சூ.

தோழர்கள் யாரும் இதைப் பார்த்து கிளர்ச்சி அடைந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்த உண்மையை சொல்ல வேண்டியிருக்கிறது.

Namma Illam said...

:)
படத்துக்கு :)))

வால்பையன் said...

படம் நல்லாருக்கே
இப்படி தான் ஒபாமாவுக்கு ஆதரவு பிடிக்கிராங்களா

வால்பையன் said...

பட்டர்ஃப்ளை தியரி

இங்கே நடந்த யாகத்தினால் புகை உருவாகி, அது அமெரிக்கா சென்று ஒபாமாவை கொல்ல நினைத்தவர்களுக்கு கண் எரிச்சல் ஏற்ப்படுத்தி இருக்கலாம். அதனால் அவர்கள் செய்த தவறினால் போலீஸில் மாட்டிருக்கலாம்

கோவி.கண்ணன் said...

//லக்கிலுக் said...
தோழர் தாங்கள் போட்ட படத்தில் இருப்பது ஒரிஜினல் சூ இல்லை. அது 3டிஎஸ் மேக்ஸ் போன்ற சாஃப்ட்வேரில் உருவாக்கப்பட்ட பொம்மை சூ.

தோழர்கள் யாரும் இதைப் பார்த்து கிளர்ச்சி அடைந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்த உண்மையை சொல்ல வேண்டியிருக்கிறது.
//

லக்கி ஐயங்கார்,

ரொம்ப முக்கியமான தகவல். எப்படி இதெல்லாம் ?

பரிசல்காரன் said...

தகவல் பலகையில் நீங்கள் எழுதுவது மிகவும் ரசிக்கத்தக்கதாய் இருக்கிறது. வாழ்த்துக்கள் ரைட்டர்!

விலெகா said...

படம் சூப்பரப்பு!ஆனா,அமெரிக்கா ஒபாமா ok ,ஒபாமா பின்லேடன பத்தி எழுதும் போது மட்டும் நல்ல படமா போடுங்க சாமி:‍))))))

முரளிகண்ணன் said...

:-)))))))))))))

Lucky thanks for your caution

Anonymous said...

பட்டர்ஃப்ளை தியரி

இங்கே நடந்த யாகத்தினால் புகை உருவாகி, அது அமெரிக்கா சென்று ஒபாமாவை கொல்ல நினைத்தவர்களுக்கு கண் எரிச்சல் ஏற்ப்படுத்தி இருக்கலாம். அதனால் அவர்கள் செய்த தவறினால் போலீஸில் மாட்டிருக்கலாம்.

Super comment.

Unknown said...

அந்த ஜோசியக் காரங்களை அப்படியே இலங்கைக்கு அனுப்புங்கப்பா.

ஏதாவது யாகம் பண்ணி அங்க போரை நிறுத்த முடியுமா? முடியாது.

வெண்பூ said...

அட நீங்க வேற சுனாமியில சென்னை பாதிக்கப்படாததுக்கு கூட காரணம் ஒரு சாமியார்ன்னு சொல்றவங்களுக்கு இதெல்லாம் ஜுஜுபி..