Pages

04 November 2008

ரஜினிகோந்துவிற்கு தற்குறிதமிழனின் கடிதம் !!பெருமதிப்பிற்கும் பேரன்புக்கும் உரித்தான அண்ணாச்சி ( ஐய்யயோ அது சரத்தா ) , சூப்பர்ஸ்டார் ரஜினிகோந்துக்கு வணக்கம் ,

என்னது கோந்தானு கேக்காதீங்க , கோந்தும் சனியனும்தான் எதுலயாவது ஒட்டிகிச்சுனா விடவேவிடாது , தமிழ்நாட்டோட ஒட்டிகிட்டு அத விடாம புடிச்சுகிட்டு இருக்கறதால அப்படிச் சொன்னேன்.கிகிகி உங்கள போயி சனியன்னு சொல்ல முடியுமா!!

உங்களுக்கு கடிதம் எழுதணும்னு ரொம்ப நாளா ஆசைங்க , ஆனா பாருங்க நீங்க எந்திரன்ல பிஸியாகிட்டீங்க , யார்ரா இவன் நம்மளுக்கு கடுதாசி போடறானு நினைக்காதீங்க , உங்க படத்த மொத நாளே மொத வரிசல 2 ரூபா டிக்கட்ட 20 ரூவாவுக்கு வாங்கி பாத்தவனுங்க , அது மட்டுமில்லாம உங்க கட்டவுட்டுக்கு பாலும் பீரும் ஊத்தி , உங்க மேல வெறி புடிச்சு பல சண்டைலலாம் கலந்துகிட்டு நிறைய விழுப்புண்ணுலாம் வாங்கின ஒரு மட்டமான லோக்கல் ரசிகனுங்க , ஆமாங்க உங்க ரசிகருங்க மன்றத்திலயும் உறுப்பினரா இருந்தேனுங்க முந்தாநாள் வரைக்கும் .

சரி இப்போ எதுக்கு இவ்ளோ அர்ஜன்டா ஒரு கடுதாசினு நீங்க கேக்கறது தெரியுது , அது ஏன்னா இத்தினி நாளா , நீங்களும் அரசியலுக்கு வருவீங்க வருவீங்கனு , புரைக்கு அலையற நாயாட்டம் நாக்க தொங்கப்போட்டுகிட்டு காத்துக்கிட்டு கெடந்தோமுங்க , நாங்களும் கெடந்தோம் கெடந்தோம் .... ம்ம் எங்க பேக்கு பஞ்சரானதுதான் மிச்சம் .

நீங்க 15 வருஷத்துக்கு முன்னால என்ன சொன்னீங்க , முத்து படம் முடியட்டும் சொல்றேன்னீங்க , அப்புறம் அருணாச்சலம் முடியட்டும்னீங்க , அப்பறம் பாபான்னீங்க , அப்புறம் படையப்பானீங்க , அப்புறம் சந்திரமுகி முடியட்டும் பாக்கலாம்னீங்க இதோ முந்தாநாள் எந்திரன் முடியட்டும்ங்கறீங்க , வுட்டா ஒவ்வொரு படம் வரப்பவும் இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி நீங்களும் நல்லா காசு பாத்துட்டீங்க , உங்க நம்பி நாங்களும் உங்க படம் வரும்போதுலாம் , போஸ்டர தின்னு பேதியான கழுதையாட்டம் உங்க மூஞ்சியவே பாத்துக்கிட்டு உக்காந்துருந்தோம் . படம் வரிசை பிழையா இருந்தா மன்னிச்சிருங்க...
நீங்க மட்டும் ஒரு வார்த்தை , தம்பிங்களா எனக்கு அரசியல் தெரியாது , நான் அதுல நுழைய மாட்டேனு ஒரு வார்த்தை சொல்லிட்டா , நாங்கபாட்டுக்கு இருக்கவே இருக்காரு விஜயகோந்து அவருகிட்ட ஒட்டிக்குவம்ல , அத வுட்டுட்டு நான் எப்ப வருவேன் எப்படி வருவேன்னு தெரியாது ஆனா வரப்ப வருவேன்னு 15 வருஷமா சொல்லிட்டு இருக்கீங்க , விட்டா இன்னும் 10 வருஷத்துக்கு அதையே சொல்லிட்டு திரிவீங்க போலருக்கே . எங்களுக்கும் வயசாகுது சாமீ நாங்களும் நாலு காசு சாம்பாதிக்கணும்ல .

என் பிரெண்டு கேட்டான் , ரஜினி அரசியலுக்கு எதுக்கு வரணும்னு நினைக்கிறனு , இங்க இருக்கற மத்த கட்சிலருந்து ஒரு மாற்றம் வேணும் , எம்.ஜி.ஆருக்கு அப்புறம் அந்த மாஸ் உங்க கிட்டதான் இருக்குனும் , நீங்க வந்தாலாவது இந்த லூசு ஜனங்களுக்கு எதுனா செய்ய மாட்டிங்களானு ஒரு ஏக்கம்தானும் , அப்புறம் அவரு அரசியலுக்கு வந்தா நமக்கும் எதுனா வட்டம் மாவட்டம்னு தேரும் நாலு காசுப்பாக்கலாம்லனு சொன்னேன் . அவன் அதுக்கு என்ன பதில் சொன்னான் தெரியுமா உங்களையெல்லாம் செறுப்பால அடிச்சா கூட திருந்த மாட்டீங்கடானு . அது எம்புட்டு நெசம் . அதும் காவேரி பிரச்சனைல நீங்க அடிச்ச கூத்த பாத்து ஊருக்குள்ள அவனவன் _____ ல சிரிக்கறான் .

உங்கள எல்லாரும் கொழப்பவாதி கொழப்பவாதின்றாங்க , நீங்க அப்படிலாம் கெடையாது சாமி , நீங்க ரொம்ப தெளிவாத்தான் இருக்கீங்க , உங்கள நம்பி தேவுடு காத்துகிட்டு கெடக்கற நாங்கதான் மண்ட கொழம்பி போயி , கீழ்பாக்கத்துல அட்மிஷனுக்கு நிக்கறோம் , அதெப்படி புதுசா ஒரு படம் தொடங்கினாலே உங்களுக்கு அரசியல் ஆசை தொபுக்கடீர்னு முளைக்குது . அடடா நம்ம தலைவனோட இந்த படம் நல்லா ஓடும் , அடுத்து அரசியலுக்கு வந்துருவாருனு ஒரு நப்பாசைல நாங்களும் அரும்பாடுபட்டு கைகாசெல்லாம் போட்டு எங்கூரு தியேட்டர்ல ஒரு ஷோவாச்சும் ஓட்டி 200 நாளு 300 நாளுனு கொண்டாடுவோம் , அதுவும் அன்னைக்கு எங்க காசுல ஊருல இருக்கறவங்களுக்கு பிரியாணி வேற ங்கொய்யால . எங்க செலவுல உங்களுக்கு விளம்பரம்!!

நீங்க மயிரா போச்சினு ( அதான் போயிருச்சேனு சொல்லாதீங்க ) படம் முடிஞ்சதும் இமயமலைக்கு எஸ்கேப்பு . இமயமலைக்கு என்ன கருமத்துக்கு போறீங்கனு இன்னும் எவனுக்கும் தெரியாது , தியானம் பண்ணனும்னா அதுக்கு இமயமலைதான் சிறந்த எடம்னு எவன் சொன்னான் .அத எங்க வேணாலும் பண்ணலாமே , அமைதியான இடத்திலதான் தியானம் பண்ணனுமோ ? . ஓஓஓ 2000 வயசு பாபாசி அங்கனத்தான் இருக்கோரோ!! ஒரு வேளை பணக்காரங்களுக்கு சிம்லா,டார்ஜிலிங் மாதிரி உங்களுக்கு இமயமலை போல .

அட உங்க ஆன்மீகமிருக்கே அடடா அத நெனச்சாலே புல்லா அரிக்குதுங்கய்யா , ஆனா ஊனா அந்த சாமி இந்த சாமினு நீங்க மாறி மாறி கும்பிடறதும் , அவங்கள பாலோ பண்ண சொல்லி ரசிகனுங்ககிட்ட சொல்லுறதும் , ஆனா பாருங்க போடறது சாமியார் வேஷம் , முற்றும் துறந்து முனிவர் வேஷம் (நெஜ வாழ்க்கைல ) , ஆனா கோடிக்கணக்கில சொத்து , படத்துக்கு படம் பல கோடி சம்பளம் , தனகு தேவையானத வச்சுக்கிட்டு இல்லாதவனுக்கு குடுக்கறதுதான் உண்மையான ஆன்மீகம்னு இன்னுமா உங்களுக்கு தெரியல . ஏழையோட சிரிப்புல இறைவன காணலாம்னு அண்ணாகூட சொல்லிருக்காருங்க சாமீயோவ் . உங்க பாபா சாமீக்கும் ராகவேந்திரா சாமீக்கும் ரமணமகரிஷிக்கும் எத்தனை கோடி சொத்து இருந்துச்சுங்க சாமீ . சரி நீங்க சம்பாதிக்கறீங்க சொத்து சேக்கறீங்க எனக்கு ஏன் வயித்தெறிச்சல் .

அது சாமீ உங்க படம்னா என்ன குறைஞ்ச செலவுல எடுத்து , கொறஞ்ச வெல டிக்கட்லயா படம் பாக்க முடியுது ? உங்க சம்பளத்திலயே 10 படமெடுத்தறாலம்னு எங்கூரு குப்பன் கூட சொல்றான் . இப்படிலாம் படமெடுத்தா அத வாங்கறவன் அதிக லாபம் வச்சுதான் டிக்கட் விப்பானு கூடவா உங்களுக்கு தெரியாது . எல்லாம் என்னை செறுப்பால அடிக்கணும் வெறிபுடிச்சு போயி 1000ரூபான்னாலும் அம்மா தாலிய அடமானம் வச்சு படம் பாத்தது யார் தப்பு . வீட்டில அரிசி வாங்க காசில்லனாலும் உங்களுக்காக ரசிகர் மன்றம் வச்சு கண்டவங்களுக்கெல்லாம் என் காச குடுத்து துணிமணியும் நோட்டுபுக்கும் வாங்கி குடுத்தன் பாருங்க என்னையெல்லாம் என்ன பண்ணலாம் . கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதைமேல ஊர்வலம் வுட்டாக்கூட திருந்துவனானு தெரியலை .

உங்கள சொல்லி குத்தமில்லை சாமீ , உங்கள நம்பி இத்தினி வருஷமா , எங்க வாழ்க்கைய தொலைச்சு , அஞ்சு பைசாவுக்கு பிரோயசனமில்லாத உங்க மன்றத்தில மயிரு புடுங்கினதுதான் மிச்சம் , இதுக்கு மேலயும் நீங்க அரசியலுக்கு வருவீங்கனு ஒருத்தன் நம்பிட்டு கெடந்தான்னா அவன விட பெரிய்ய கேனா புனா வேற யாரும் இருக்க முடியாது . (கேனாபுனா - கேனபுண்ணாக்கு ) .

அது உங்கள அந்த காலத்திலருந்து ஒரு நடிகனா பாக்காம , எம்.ஜி.ஆராட்டமா ஒரு தலைவனாவே பாத்து தொலைச்சுட்டோமுங்க , நீங்க வந்தாத்தான் தமிழ்நாடு முன்னேறும்னு யாரோ சொன்னாங்கனு நாங்களும் அதையே நம்பிக்கிட்டு திரிஞ்சமுங்க . ஒரு தலைவனுக்கு முடிவெடுக்கற தெறம ரொம்ப முக்கியம் , ஆனா அதுவே உங்க கிட்ட இல்லங்கும்போது உங்களையெல்லாம் தலைவனா நினைக்கவே முடியாதுங்க சாமி . (உங்களவிட கருப்பு எம்சியாரு எவ்ளவோ மேல்... ) , அதும் ஓகேனக்கல் பிரச்சனைல நீங்க அடிச்ச பல்டி அடங்கொங்கமக்கா... பிளைட்டில்லாமயே நீங்க இமயமலைக்கு போயிருக்கலாம்.

நீங்க ஒரு பெரிய நடிகர்தான் சாமீ ஒத்துக்கறோம் , திரைல மட்டுமில்ல நெசத்திலயும் . இல்லாட்டி இத்தனை வருஷமா இத்தனை லட்சம் பேர பைத்தியமாட்டம் உங்க பின்னால திரிய வச்சிருக்க முடியுமா . அரசியலுக்கு வருவனா மாட்டனானு ஒரு விசயத்த மட்டும் வச்சிகிட்டு இத்தின வருஷம் அரசியல் பண்ணின நீங்க ஒரு பெரிய அரசியல்வாதிதான் சாமீ . ஆனாலும் பாருங்க உங்க ரசிகனுங்க எவ்ளோ அடிச்சாலும் வாங்கிப்பாணுங்க ,நாளைக்கே உங்க படம் ரீலிசானா கட்டவுட்டு வச்சு பீரும் பாலும் ஊத்த மட்டும் மறக்கமாட்டாங்க , எந்திரனுக்கு பிறகும் எப்போ அரசியலுக்கு வருவீங்கனு கேப்பான் , அப்பவும் நீங்க அடுத்த படம் 4 வருஷத்தில வந்துடும் அப்புறம் ஆண்டவன் சொல்றான் ரஜினி முடிக்கிறானு மேடை போட்டு பஞ்சு டயலாக் பேசினா கைத்தட்டிட்டு , ஓசி 'பி'ரியாணி தின்னுட்டு , உங்களுக்கு விளக்கு புடிக்க ரெடியாகிடுவான் . நான் சோறு திங்கறவன் சாமீ . என்னால அப்படிலாம் இருக்க முடியாது .

உங்களால ஒரு விசயம் மட்டும் கத்துக்கிட்டோமுங்க , நடிகன நடிகனா பாக்காமா கடவுளாவும் தலைவனாவும் பாத்தா இப்படித்தான் , அவனவன் நான்தான் அடுத்த முதலமைச்சர்னு கெளம்பிருவானுங்க . உங்க பொழப்பு நடிக்கறது.. அது புரியாம நாங்க லூசுத்தனமா உங்க பின்னால வால் புடிச்சிட்டு திரிஞ்சா.. நீங்க வந்துதான் தமிழ்நாடு தழைக்குமுன்னும் பிழைக்குமுன்னும் சொல்லிக்கிட்டு திரிஞ்சா.. என் வீட்டு குண்டால சோறு வந்துருமா...
அவ்ளோதான் சாமி எதோ உங்ககிட்ட சொல்லி அழனும்னு தோனுச்சு சொல்லிட்டேனுங்க . எதாவது தப்பா சொல்லிருந்தா மன்னிச்சுருங்க எனக்கு உங்க அளவுக்கு அரசியல் தெரியாதுங்கோ.... இந்த கடுதாசிகூட நீங்க பேசற மாதிரி குழப்பத்திலயே எழுதினதுதான்.

இப்படிக்கு..

எந்திரன் படம் வந்தால் பொண்டாட்டி தாலிய அடமானம் வச்சாவது பார்க்க துடிக்கும்

மானம் கெட்ட (ஞாபகமறதி ஜாஸ்தி இருக்கற ) , செறுப்பால அடிச்சாலும் திருந்தாத


தற்குறி தமிழ் ரசிகன் .