04 November 2008

ஒரு கேரளஅழகியும் ஒரு ரயில்பயண விபரீதமும்....
இன்னும் ரெண்டு நிமிடம்தான் இருந்தது அந்த டிரெயினை பிடிக்க , ஒரு கையில் சரவணாஸ்டோர்ஸ் பை. அது நிறைய விளையாட்டு சாமான் , இன்னொரு கையில் சூட்கேஸ் , இரண்டையும் தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு ஒடினேன் .

வண்டி எண் 6704 சென்னையிலிருந்து மங்களூர் வரை செல்லும் விரைவுவண்டி 3ஆவது பிளாட்பாரத்தில் இருந்து உடனடியாக புறப்படும் என இந்த அறிவில்லாத அறிவிப்பாளர் வேறு ஒலிப்பெருக்கியில் அலறினாள் . அறிவுகெட்டவளே இன்னும் ஒரு ஐந்து நிமிடம் பொறுடி என்று முனகியபடியே ஓடினேன் .

மனது திக்கு திக்கு என்று அடிக்க , காலையில் போட்ட பேர் அண்டு லவ்லி முகத்தில் வியர்வையில் என் அழகை அழிந்து அழித்துகொண்டிருந்தது , ஸ்போர்ட்ஸ் பர்பூயும் வேறு வியர்வையில் கரைகிறது , கடுப்பாய் இருந்தது , ஆசையாசையாய் போட்டுக்கொண்டது , வீணாய்ப்போகிறதே என்கிற மன உளைச்சல் வேறு . காலையில் குடித்த காபி வேறு எதுக்களிக்கிறது.

அப்படா ஒரு வழியாய் ஜி7 பெட்டியை பார்த்துவிட்டேன் , நிம்மதி பெருமூச்சு விட மூச்சை உறிஞ்சினால் அதற்குள் வண்டி கிளம்பி விட்டது . வண்டி நகர நகர அதில் ஏறி , 25 ஆம் எண்ணை தேடினேன் , அதில் ஒரு அழகிய யுவதி அல்லது டக்கர் ஃபிகர் அல்லது செம மாலு அமர்ந்திருந்தது அல்லது அமர்ந்திருந்தாள் . (என்ன தவம் செய்தேன் ) . அவளை பார்த்ததுமே தெரிந்து போனது மலையாளி தான் என்று . அவளை பார்த்த சில விநாடிகளில் அதை ஊகித்து கொண்டேன் .

அட நீங்கள் வேறு முகத்தை பார்த்துதான் தெரிந்துகொண்டேன் , நீங்கள் நினைப்பது போல் அல்ல , நெற்றியில் சந்தனமும் , ஈரத்தலையில் போட்ட தேங்காய் எண்ணையும் காட்டிக்கொடுத்தது .

அவளை பார்த்ததும் , அவளது இருக்கைக்கு மேலே வலது மூலையில் இருந்து சிறிய இடத்தில் எனது இரண்டு பெரிய பைகளையும் வைத்துவிட்டு , விறுவிறுவென பாத்ரூம் சென்று முகத்தை அழகாக்க முயன்றேன் . பல முறை முயன்றும் தோல்விதான் , இந்த வழுக்கை வேறு எவ்வளவோ முயன்றும் மறைய மாட்டேன்கிறது . ஒரு வழியாய் சுமாராய் (நிஜமாகவே சுமாராய் ) அழகாகினேன் .

அந்த கோச்சில் மொத்தமாய் பத்துபேர்தான் இருந்தனர் . சிறப்புரயில் என்பதால் யாருக்கும் தெரியவில்லை போல .

''எக்யூஸ்மீ .. தி இஸ் மை சீட் '' என்று புன்னகைத்தேன் .
''ஓஓ ஸாரி , ப்ளீஸ் '' என்று எழுந்து எதிர் பக்கத்தில் அமர்ந்தாள் .

''ஆர் யூ கோயிங் டூ மங்களூர் ''

''ம்ம் '' என்றபடி ஜன்னலை முறைத்தாள் .
அதற்குள் ஒரு 50 வயது மதிக்கத்தக்க பெரியவர் வந்து அவள் பக்கத்தில் அமர அவளோ அச்சா இயாளு என ஏதோ மலையாளத்தில் கூற அவர் என்னைப்பார்த்து புன்னகைத்தார் . எனக்கு ஒரு புண்ணாக்கும் புரியவில்லை . அந்தாள் கட்டாயம் அவள் அப்பனாகத்தான் இருக்கவேண்டுமென தீர்மானித்துக்கொண்டேன் . மலையாளீஸ் கிட்ட எப்படி பேசறது , எனக்கு இங்கிலீசு கூட சுமார்தான் .
ஸோ நான் எப்போதும் போல ஆனந்த விகடனை பிரித்து படிப்பதுபோல திறந்து வைத்துவிட்டு அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன் , நல்ல உடல்வாகு , அழகிய சிரிப்பு , சிரித்தால் குழிவிழும் கன்னம் , மூக்குத்தி , காதில் ஜிமிக்கி , பியூட்டி பார்லருக்கு போகிறவள் போல மேலுதடுக்கு மேல் பூனை முடிகள் இல்லை , புருவத்தை வேறு செம்மையாக்கி செமயாய் இருந்தாள் . அவளது அப்பாவை வைத்துக்கொண்டே அவளை அதிகம் ரசிக்க மனம் இடம் தரவில்லை , பார்ரா உனக்கும் வயசாகி ஒன்பொண்ணோட இதே மாதிரி போறப்ப ஒம்பொண்ண எவனாவது இப்படி சைட் அடிப்பான் என்று மனது பயமுறுத்தியது . புத்தகத்தில்(ஆமா ஆனந்த விகடன்தான் ) மூழ்கினேன் , எனது நண்பனின் கவிதை வந்திருந்தது .
எச்சில் காய்ந்திடாத முத்தத்தின்
ஈரமாய்
உறக்கத்தின் ஆழ்நிலையில் ஊட்டிய‌
உணவாய்
புணர்தலின் முடிவிலான இயக்கத்தின்
நனைதலாய்
தூரலிட்டுப் போயிருக்கிறது
ள்
ளி
வு

ழை

ஒரு எழவும் புரியவில்லை , வெளியில் மழைவேறு . கொஞ்சம்கூட புரியாத மாதிரி எழுதினாதான் கவிதையோ என நண்பனை நாலு நல்ல வார்த்தையில் வைந்தேன் . இவனோடெல்லாம் எப்படி நான் நட்பு வைத்திருக்கிறேன் என எண்ணிக்கொண்டேன் . மனசாட்சி தடுத்தாலும் நடுநடுவே அந்த கேரளத்து பைங்கிளியாளை காணத்தவறவில்லை .
''எக்ஸ்க்யூஸ்மீ !! ஈஸ் திஸ் ஜி7 '' ஜெயம் ரவியை நினைவுபடுத்தும் தோற்றம் கொண்ட ஒருவன் என்னிடம் கேட்க , நிமிர்ந்து பார்த்தால் ஆள் 6.2 இருப்பான்போல , MBA - MASTER OF BAD HABITS என்ற வாசகத்துடன் டிஷர்ட்டும் லெவி ஜீன்ஸுமாய் மிக மேன்லியாக இருந்தான் . நான் முறைத்தபடியே
''எஸ் '' என்றேன் . அழகான ஆண்களை கண்டாலே வயிற்றுக்குள் எரிமலை .
''ஐஆம் 24 '' என்றபடியே எனது விளையாட்டு சாமான் பையை உள்ளே வைத்து தள்ளி அவனது பேக்பேக்கை திணித்தான் . எனக்கு அவனது அழகின் எரிச்சல் வேறு இதில் விளையாட்டு சாமானை உள்ளே அழுத்தியதில் கோபம் தலைக்கேறியது , திட்டிவிட்டேன் .

''சாரி சார் எனக்கு தெரியாது அதான் . மன்னிச்சிருங்க ப்ளீஸ் '' என்று கெஞ்சினான் . எனக்கு ஹாஹாஹா என சிரிக வேண்டும் போலிருந்தது . பின்னே அவனை ஜெயித்துவிட்டோம் என்கிற மமதை இருக்காதா ! ! அதுவும் இதை பார்த்துக்கொண்டிருந்த அந்த கன்னிமான் என்னை பார்த்து சிரித்தால் வராத பின்னே .

வண்டி மிக மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது , இந்த வேகத்தில் போனால் கோவையை அடைய எப்படியும் 10 மணி நேரம் ஆகிவிடும் போலிருந்தது .

''சார் வணக்கம் , நீங்க மங்களூரா !! '' ஜெயம் ரவி , அவள் அப்பாவிடம் கொக்கி போட்டான் .

''ஆமா சார் , நீங்க?'' ... அடப்பாவி நீங்க தமிழ்தெரிஞ்ச மலையாளியா என்று மனம் கொந்தளித்தது.

''நானும் அங்கதான் போறேன் , இது உங்க பொண்ணா சார் ''

''ஆமா சார் , தீபாவளிக்கு அவங்க பாட்டி வீட்டுக்கு கொண்டு போய் விடப்போறேன் ''

எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது , அந்த வித்தையெல்லாம் ஏன் எனக்கு கைவர மாட்டேன்கிறது என என்னை நானே திட்டியபடி ஆனந்தவிகடனில் கண்ணையும் அவர்களது பேச்சில் காதையும் வைத்திருந்தேன் .

''சார் நீங்க பெரம்பூரா '' தூண்டில் மேலும் தொடர்ந்தது . ஆண்டவா அவளுக்கு அவனை பிடிக்காமல் போகட்டுமே.

''ஆமா சார் எப்படி கண்டுபுடிச்சீங்க ''

''சார் நீங்க அங்க ரயில்வேஸ்டேஷன் பக்கத்தில டீக்கடை வச்சிருக்கீங்களே , நான் பாத்திருக்கேன் சார் ''

'' அட ஆமா சார் ,''

''நேத்து நைட்டு சென்னை ஃபுல்லா செம டிராபிக் சார் , நைட் பிளைட்ட மிஸ்பண்ணிட்டேன் ''

அவர்கள் ரெண்டு பேரும் பேசும் போது இவளுக்கு என்ன வந்தது , அவளுமா அவனுடன் பேச வேண்டும்

''ஆமாங்க நான் கூட காலேஜ்லருந்து வரப்போ ரொம்ப லேட் ஆகிருச்சு , கத்திப்பாரால மாட்டிகிட்டேன் ''

இவளுக்கு என்ன பெரியவங்க பேசும் போது இடையில் பேச்சு வேண்டி கிடக்கு . அதிகப்பிரசங்கி .

''அட எந்த காலேஜ்,.... எஸ் ஆர் எம்மா''

''ஆமாங்க .. எப்படி கண்டுபுடிச்சீங்க ''

''சும்மா ஒரு கெஸ் பண்ணேங்க '' என்று புன்னகைத்தான் . சிரிக்கும் போது மேலும் அழகாய் இருந்து தொலைத்தது அந்த ராஸ்கலின் முகம் . அதற்கு நடுவில் அவளது அப்பா , சாப்பாடு வாங்க கிளம்பினார் . இப்போதுதான் போக வேண்டுமா.. அவன் அவளிடம் மிக ஜாலியாக சங்கோஜமில்லாமல் கண்டதையெல்லாம் பேசினான் வழிந்தான் . பெண்களென்றால் ஏன்தான் இப்படி அலைகிறார்களோ . ஊர் உலகத்தில் பெண்களா இல்லை . ச்சீ என்ன உலகமடா இது .

அப்பா திரும்பி வந்தார் . '' என்ன தம்பி சாப்படறீங்களா '' என்று ஒரு வடையை திணித்தார் அவன் கைகளில் , அந்த அல்பமும் அதை வாங்கி தின்றது . ''தம்பீ எங்க வேலை செய்றீங்க ''

''நான் ஒரு மார்க்கெட்டிங் எக்ஸுகியூட்டிவ் சார் , அப்புறம் கதாசிரியர் ''

என்னது இந்த நாய் கதை எழுதறவனா , கிழிந்தது லம்பாடி லுங்கி , அதை அவன் சொன்னதும் அப்பனுக்கும் மகளுக்கும் தான் என்ன ஒரு மலர்ச்சி , அவள் ஆர்வமாய் ,

'' நீங்க கதைலாம் எழுதுவீங்களா , உங்க கதைலாம் எதுல வருது ''

'' குமுதம், விகடன்ல வரும் , அப்புறம் சினிமாக்கும் கதை எழுதறேன் ,அப்புறம் கோமதிஆன்லைன்.கோம்னு ஒரு வெப்சைட் கூட இருக்கு , இந்த வாரம் விகடன்ல பாக்கலையா காயாத காயங்கள்னு ஒரு கதை வந்திருக்குமே ''

''ஆமாங்க நான் படிச்சேன் , சிம்ப்ளீ சூப்பர்ப் , நீங்கதான் அந்த கோமதியா , நான் பொண்ணுனு நினைச்சேன் '' இவள் அவனிடம் வழிய துவங்கியிருந்தாள் .

'' தம்பீ , கதைலாம் எப்படி எழுதறீங்க , உங்க கதைலாம் நானும் படிச்சிருக்கேன் , ரொம்ப இயல்பா இருக்கும் , உங்களோட முத்தத்தின் முத்தம் கதை படிச்சி கதறி அழுதிருக்கேன் ''

எனக்கு பற்றி கொண்டு வந்தது , ______________ ( கெட்ட வார்த்தை ) இவன் கதைலாம் அஞ்சுகாசுக்கு தேறாது இவன இப்படி புகழறானுங்களே என்று எரிச்சலாய் இருந்தது , அதனால் பாத்ரூமில் சென்று மறைவாய் ஜன்னலுக்கு புகை போவது போல ஒரு தம்மை போட்ட பின்தான் எரிச்சல் குறைந்தது . நான் தம்மடிக்கும் கேப்பில் அந்த டாபர் நன்கு பழகியிருந்தது .
''சார் கதை எழுதறது ரொம்ப ஈஸி , இதோ பாருங்க இப்போ நாம பேசறதையே ஒரு கதையாக்கிரலாம் ''

''எப்படிங்க '' அதிகப்பிரசங்கி முந்திக்கொண்டு கேட்டது , கண்கள் விரிய , அடடா அந்த கண்களுக்குத்தான் என்ன ஒரு அழகு .

''இதோ உங்களாட்டம் ஒரு பேமிலி , அவங்கள ரயில்ல மீட் பண்ற ஒரு வழிப்போக்கன் ,, அவன் இவங்களோட நல்லா பழகறான் , இதோ இப்போ நான் சொல்ற மாதிரி கதை பத்திலாம் சொல்றான் , அவன் வாங்கி தர பிஸ்கட்ட வாங்கி அவங்க சாப்பிடறாங்க , சாப்பிட்டவங்களுக்கு ஒன்னும் ஆகல ஆனா அந்த கதாசிரியனோட பொருளலாம் காணம போயிடுது அவன் மயங்கி கிடக்கறான் , ஊரு வருது அவங்க கூட வந்த பேமிலய காணல ''

''அடேங்கப்பா சூப்பர் தம்பி , கதை அதுல ஒரு கருத்து , அதுவும் டிரெயினில தெரியாதவங்க குடுக்கறத சாப்பிடக்கூடாதுனு ''

இதெல்லாம் ஒரு கதை இதற்கு ஒரு சூப்பர் வேறு , நல்ல வேளை அதற்குள் சேலம் வந்திருந்தது , இவனே போய் மூவருக்கும் காபியும் பிஸ்கட்டும் வாங்கிவந்தான் , அவர்களோ என்னங்க நீங்க நீங்களே பிஸ்கடு குடுத்து ஏமாத்தற கதை சொல்லிட்டு வாங்கி தரீங்க வேணாங்க என்று மறுக்க , இவனோ சிரித்து விட்டு சார் குடிங்கசார் நானே சொல்லிட்டு நானே பண்ணுவேனா என்று கெஞ்சி அவளிடம் கொஞ்சி அதை கையில் திணித்தான் , என்னை பார்த்தவன் இளக்காரமாய் ஒரு பிஸ்கட்டை எடுத்து என்னிடம் நீட்டி '' சார் , ஒரு பிஸ்கட் சாப்பிடுங்க '' என்றான் , நான் வெறுப்பாய் வேண்டாம் என்றேன் , அவனோ விடாது சார் ப்ளீஸ் ப்ளீஸ் என்று கெஞ்சினான் ,

அதற்குள் அந்த பெண் வேறு '' எடுத்துக்கோங்க '' என்று ஒரு மெல்லிய புன்னகையுடன் கூற அதையும் அவளது புன்னகையையும் எடுத்துக்கொண்டேன் , அவளது உதட்டின் கீழே ஒட்டியிருந்த பாலின் ஆடை அத்தனை அழகாய் இருந்தது . கடித்து தின்ன வேண்டும் போலிருந்தது அந்த பாலாடையை , அதனிடத்திலிருந்தே .

அவன் மேலும் பேசிக்கொண்டே வந்தான் , அவளிடம் நான் ஒருவன் இருக்கிறேன் என்பது கூட கவனிக்காமல் டிரெயின் பற்றிய ஒரு செக்ஸ் ஜோக் வேறு , அவள் தந்தை இல்லாத போது பேசி போன் நம்பர்(பர்சனல் மொபைல்நம்பராம் கூட வாங்கி விட்டான் . எனக்கு மனம் கொந்தளித்து கொப்புளித்தது . பாவி பாவி என்று வைந்து கொண்டே வந்தேன் மனதுக்குள் ,

வண்டி ஈரோட்டை தாண்டியபோது , மெல்லிய உறக்கம் வர கண்ணயர்ந்தேன் .

'' கோவை சந்திப்பு உங்களை அன்புடன் வரவேற்கிறது , கோயம்புத்தூர் ஜங்சன் ஆப் கா சுவாகத் ஹை , வெல்கம் டூ கோயம்புத்தூர் ஜங்சன் '' அதே அறிவில்லாத அறிவிப்பாளர் , கோவை ரயில் நிலையத்தில் என் தூக்கம் கலைத்தாள் .
விழித்து பார்த்தாள் , அவர்கள் இருவரும் ஆழ்ந்து உறங்கியபடியிருக்க , அவர்களது பெட்டியையும் அந்த கன்னிமானின் காதிலிருந்த ஜிமிக்கியையும் காணவில்லை , கழுத்திலிருந்த செயினையும் காணவில்லை , மோதிரம் இல்லை , நகையில்லாமல் கூட அழகாகத்தான் இருந்தாள் . அவர்களது பெட்டி இல்லை , எனது பெட்டி இருந்தது , சரவணா ஸ்டோர்ஸ் பை இருந்தது , வண்டி கிளம்ப துவங்கியிருந்தது , ஒடும் வண்டியிலிருந்து இரண்டு கைகளிலும் பைகளுடன் குதித்து இறங்கினேன் . அப்படா ஊர் வந்துவிட்டதென . நாளை தீபாவளி .

கோவை காற்றுதான் எத்தனை சுகமானது . இதமாய் குளிர்ச்சியாய் இருந்தது . ஹாஹாஹா என்று சிரிக்க வேண்டும் போலிருந்தது .

32 comments:

coolzkarthi said...

ஹா ஹா ஹா....டாப் டக்கர்...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

யாருங்க திருடிட்டு போனாங்க....

Starjan (ஸ்டார்ஜன்) said...

superb comedy

Starjan (ஸ்டார்ஜன்) said...

superb comedy

Anonymous said...

நீங்க ஜொல்லு விட்டீங்க. அவன் அள்ளீட்டான்.

Thamira said...

கத நல்லாருந்தது தல.. (லவுட்டிக்கிட்டு வந்தது நீங்க இல்லையே.. அப்புறம் போற போக்குல கென்னை வேற தாக்கிப்புட்டிங்க..)

ஆட்காட்டி said...

இருவருமே தங்களுக்கு தேவையானதை அள்ளிக்கிட்டாங்க.

விலெகா said...

அருமை!

Anonymous said...

பாஸு! உங்க பர்ஸ் போனதப் பத்தி போன்ல சொல்லிப் புலம்புனீங்க, இங்க சொல்லவேயில்லையே? ;)

Unknown said...

வெளையாட்டு சாமானையாவது வெச்சுட்டு போனானே முண்டம்...

ஆங் அப்புறம் அந்த வெளாட்டு சாமானை எல்லாம் குழந்தைகளுக்கு கொடுத்தீங்களா ?

ஜோசப் பால்ராஜ் said...

அன்பே சிவம் யூகி சேது மாதிரியில்ல ஒருத்தன் வந்து ஆட்டையப் போட்ருக்கான்?? கதை நல்லாருக்கு அதிஷா.

கோவி.கண்ணன் said...

அடிமனதின் தாழ்வுணர்சிகளை அழகாக படம் பிடித்துக் காட்டி இருக்கிறீர்கள். மூன்றாம் கோணத்தில் எழுதப்பட்ட விதம் மிகவும் ரசிக்கும் படி அமைந்தது.

குசும்பன் said...

முதல் கண்டனம் தலைப்புக்கு தகுந்த படம் இல்லை:(((

குசும்பன் said...

அருமையாக இருக்கிறது, எல்லோருக்கு இதுபோல் ஒரு அனுபவம் இருக்கும், மடக்க நினைக்கும் பிகரை வேறு ஒருவன் போகிற போக்கில் தட்டிக்கிட்டு போகும் பொழுது வரும் கோவம்...

சூப்பரா இருக்கு!!!

குசும்பன் said...

//"ஒரு கேரளஅழகியும் ஒரு ரயில்பயண விபரீதமும்...."//

இந்த மலையாள பட போஸ்டர் பார்த்துதான் ஏமாந்து போறோம்..அட்லீஸ்ட் கதையிலாவது....ம்ம்ம்ம் ஒன்னும் சொல்வதுக்கு இல்லை.

தலைப்புக்கு ஏற்ற ஒரு இது இல்லை:))))

குசும்பன் said...

கோவி.கண்ணன் said...
அடிமனதின் தாழ்வுணர்சிகளை அழகாக படம் பிடித்துக் காட்டி இருக்கிறீர்கள். மூன்றாம் கோணத்தில் எழுதப்பட்ட விதம் மிகவும் ரசிக்கும் படி அமைந்தது.//

டாப் ஆங்கிளில் இருந்தும் எழுத சொல்லுங்க:))ரொம்ப அருமையாக இருக்கும்:)))

VIKNESHWARAN ADAKKALAM said...

கதை சொல்லி கதையாக்கிட்டான்... :))

கதை நன்கு உள்ளது... வாழ்த்துகள் அதிஷா...

புருனோ Bruno said...

அசத்தல்

ராஜ நடராஜன் said...

:)))) மட்டும் போட்டுக்குறேன்

Unknown said...

ஆஹா...ஓஹோ.....
ஹி ...ஹி..ஹி.
ம்ம்...
அ?

Ken said...

"ஒரு எழவும் புரியவில்லை , வெளியில் மழைவேறு . கொஞ்சம்கூட புரியாத மாதிரி எழுதினாதான் கவிதையோ என நண்பனை நாலு நல்ல வார்த்தையில் வைந்தேன் . இவனோடெல்லாம் எப்படி நான் நட்பு வைத்திருக்கிறேன் என எண்ணிக்கொண்டேன் "

அடப்பாவிகளா இரு நான் அய்யனார்கிட்ட சொல்லி உனக்கே உனக்கா ஒரு கவிதை எழுத சொல்ரேன் :)

கோவி.கண்ணன் said...

//டாப் ஆங்கிளில் இருந்தும் எழுத சொல்லுங்க:))ரொம்ப அருமையாக இருக்கும்:)))//

சரவணவேலு,

உன் தலையில் உலகம் தெரியும் போது சொல்லு, உன்னைய நாயகனாக வைத்து ஒரு சிறுகதை எழுதச் சொல்லிடுவோம், அல்லது நானே எழுதிடுறேன்.
:)

மணிகண்டன் said...

எந்த ஆதிஷா உங்களுக்கு பொருந்தும் ? அது என்ன கதைல வரும் எல்லா ஆம்பள பாத்திரமும் நீங்களே ! இது எல்லாம் கொஞ்சம் ஓவரு.

Raj said...

ஒரு கேரள அழகி படம் கூட கிடைக்கல்லியா உங்களுக்கு.

narsim said...

அதிஷா..

பகடி உங்கள் பலம் என்பதை மற்றுமொருமுறை நிரூபித்துள்ளீர்கள்... கூடவே கோர்வையான நடை.. கலக்கல்..

மூன்றாவது கோணம் என்ற தளம் வித்யாசம்.. முடிவின் முடிவை அவரவர் முடிவிற்கே விட்டதும் வித்தியாச முடிவு

நர்சிம்

வெண்பூ said...

கொஞ்சம் இழுவை நடை, அதிக நீளம், யூகிக்க முடிகிற முடிவு.. உங்கள் முந்தைய கதைகளுடன் ஒப்பிடும்போது இது சுமார்தான் அதிஷா.. ஆனால் பின்னூட்டங்களை படித்தால் அனைவரும் பாராட்டுகிறார்கள்.. அனேகமா நீங்க இலக்கியவாதி ஆகிட்டீங்கன்னு நெனக்கிறேன்.. :)))

வால்பையன் said...

கதை நல்லாருக்கு
ஆனால் ஒரு சந்தேகம்
இதில் கதை சொல்லி யார்?
அவன் தான் திருடனா?
இல்லை அப்பாவியா?

நாடோடிப் பையன் said...

One of the best short stories I have recently read.
Keep it up.
You are in my favorites now.

Anonymous said...

இவரு பெட்டி மட்டும் காணமே போகாதாம்லே?
நல்லா விடுராங்கடா ரீலு!

Anonymous said...

என்ன ஒய்!!!! தீபாவளி முந்தின நாள் லைன் போட்ட கிழிஞ்ச டவ்செர் போட்டு மங்களூர் எக்ச்பிரசிலிருந்து இறங்கியது .நீயா ????................ அவனா நீ ??????????????????


மாமு

Bee'morgan said...

ஹா ஹா.. அருமை.. :)
நெசமாவே நடந்த மாதிரி ஒரு வயித்தெரிச்சல் தென்படுதே.. :P

Anonymous said...

Superb Story. I really Love your style of writing!!! Your style resembles "Pushpa Thangathurai" (???). Just Joking!!! lol