10 November 2008

சென்னை பதிவர்கள் சந்திப்பு - 15.11.2008என் இனிய வலைத்தமிழ் மக்களே,..

உங்கள் பாசத்திற்குரிய அதிஷா மீண்டும் மெரினா பீச்சின் சுண்டல் பாக்கட்களுடனும் மாங்காய் கீத்துக்களுடனும் வந்திருக்கிறேன்.. ( டே நாயே மேட்டர சொல்லு என்று நீங்கள் கேட்பது புரிகிறது ) .

வெகு நாட்களாக சென்னையில் பதிவர்சந்திப்பு நடத்தலாமென ஒரு யோசனை இருந்தாலும் , அதற்கு சரியான நேரம் வாய்க்க காத்திருந்தோம் . ஏனென்றால் பல புதியபதிவர்கள் மற்றும் பிரபல பதிவர்கள் ஒரு சந்திப்பை எதிர்நோக்கி இருப்பது தெரிகிறது . விரைவிர் பிரமாண்டமான பதிவர்பட்டறை அதி விரைவில் நடக்க இருக்கும் சூழலில் , இப்பதிவர் சந்திப்பு மிக முக்கியத்துவம் பெருகிறது .

அதனால் இந்த வார இறுதியில் சென்னையில் ஒரு மாபெரும் பதிவர் சந்திப்பை நடத்த பல மூத்த பதிவர்களின்(அது யாருனுலாம் கேட்டா வீட்டிற்கு ஆட்டோ வரும் ) ஆலோசனைப்படி முடிவு செய்யப்பட்டுள்ளது . இந்த சந்திப்பில் பழம்பெரும் பதிவர் '' பாரி அரசு ''( வரும்போது பழம் கொண்டு வரவும் பெற்றுக்கொள்வார் ) . இவர் சிங்கப்பூரிலிருந்து எழுதிவரும் பதிவர் . நம்மை காண அங்கிருந்து வந்திருக்கிறார்.

இது தவிர நண்பரும் பிரபல பதிவர் மற்றும் எழுத்தாளருமான திரு.பரிசல்காரன் அவர்களும் கலந்து கொள்ள இருக்கிறார் .

மேற்ச்சொன்ன பதிவர்கள் தவிர இன்னும் பல பிரபல பதிவர்கள் மற்றும் சில எழுத்தாளர்களும் கலந்து கொள்ளுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது .
இச்சந்திப்பில் அனைத்து பதிவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . புதிய பதிவர்கள் தயக்கமின்றி இச்சந்திப்பில் கலந்து கொண்டு பதிவுகள் குறித்த சந்தேகங்களை கேட்டு பயன்பெறலாம் .

பதிவர்கள் தவிர பதிவுலக வாசகர்களும் கலந்துகொண்டு தங்கள் மனம் விரும்பும் பதிவர்களை நேரில் சந்தித்து உரையாற்ற இது ஒரு பெரிய வாய்ப்பாக அமையும் .

இதுதவிர இச்சந்திப்பில் இதுதான் பேசவேண்டும் என்கிற எந்த விடயமும் குறிப்பாக இல்லை , எது வேண்டுமானாலும் பேசலாம் , விவாதிக்கலாம் .

சந்திப்பு குறித்த விபரங்கள் :

சந்திப்பு தேதி : 15-11-2008 சனிக்கிழமை

நேரம் : மாலை 5.30 லிருந்து - 8.30 வரை (அல்லது அதற்கு முன்பும் முடியலாம் )

இடம் : மெரினா பீச் காந்திசிலை பின்புறம் உள்ள தண்ணீரில்லாத குட்டை அருகில் .
*இச்சந்திப்பு அனைவருக்குமான சந்திப்பு அதனால் யார்வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.
வாங்க மக்கா மெரினாவில் சந்திக்கலாம்...

34 comments:

முரளிகண்ணன் said...

படத்துக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இல்லையே?

நிழல் said...

நிச்சயமாக சந்திப்போம்

புருனோ Bruno said...

உள்ளேன் ஐயா

மணிகண்டன் said...

சாரு நிவேதிதாவ கூப்பிடாச்சா ? இல்லாட்டி சொல்லுங்க நான் ரஜினி அங்கிள் ஒரு முறை கூப்பிட்டு வைக்கறேன்.

Anonymous said...

நாங்க வரது ரொம்ப கஷ்டம். அதனால, எல்லாரும் சேர்ந்து நல்லா பேசிட்டு, விவரமா (விவகாரமா இல்லங்க) பதிவு போடுங்க. அதை படிச்சு மனசை தேத்திக்கிறோம். (வேறு என்ன பண்ண .. பெரு மூச்சு விட்டுகிட்டே.. படிக்க வேண்டியதுதான்).. என் ஜாய் பண்ணுங்கப்பு...இராகவன், நைஜிரியா

Pot"tea" kadai said...

enjoy your maangaa paththai & sundal...

paartingga ethukkuna sundallukku pathil sunda kanji vaangi koduththuda porel..

:)

E-kalappai bejaar pannuthu!!!

Anonymous said...

மெரினாவை விட்டால் இடமே கிடைக்காதா?? :)

ராமய்யா... said...

உள்ளேன் அய்யா....

சிறப்பு விருந்தினராக அமேரிக்க ஜனாதிபதி ஒபாமாவை கூப்பிட்டா நல்லா இருக்கும்...

ஹி ஹி ஹி...

ராம்..

லக்கிலுக் said...

பதிவர் இட்லிவடையும் பதிவர் சந்திப்புக்கு வர ஆவலாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளதாக இட்லிவடைக்கு நெருக்கமான ஒரு பதிவர் அவருக்கு நெருக்கமான ஒருவரிடம் கூறியிருக்கிறார். அந்த நெருக்கத்துக்கு நெருக்கத்துக்கு நான் நெருக்கம் என்பதால் இச்செய்தி என்னை வந்து சேர்ந்திருக்கிறது.

எனவே இ.வ.வையும் எதிர்பார்க்கலாம் :-)

அருண் said...

ஒபாமாவ invite பண்ணுங்கப்பா.

நையாண்டி நைனா said...

/*படத்துக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இல்லையே?*/

அப்படியெல்லாம் நீங்க சொல்ல கூடாது...
அவர்,
'ஜட்டி' கதைகளில் வரும் கதாநாயகன் ...

நையாண்டி நைனா said...

/*இந்த சந்திப்பில் பழம்பெரும் பதிவர் '' பாரி அரசு ''( வரும்போது பழம் கொண்டு வரவும் பெற்றுக்கொள்வார் ) .*/

இதில் தவறு உள்ளது..
சொல்லில் தவறு இல்லை...
பொருளில் தான் தவறு உள்ளது...

பழம் பெரும் பதிவர் என்றால், நாம் தானே பழம் கொடுக்க வேண்டும் அவர் தானே பெற வேண்டும்... அப்போ தானே அவர் பழம் பெரும் பதிவர் ஆவார்.

தமிழன்-கறுப்பி... said...

TEST

தமிழன்-கறுப்பி... said...

ஒரு டிக்கெட் எடுத்து குடுத்தா வந்திடறேன்...

அக்னி பார்வை said...

அடடா... அன்னிக்கி நம்ம சனாதிபதியோட ஒரு சின்ன மீட்டிங்..

சரி cancel பண்ணிட்றேன்..

அக்னி பார்வை said...

ஆமா லக்கிலுக் என்ன சொல்றாரு சப்பிட இட்லிவடை வங்கி கொடுக்க்றார?

Thamira said...

போன தடவை மாதிரி கழட்டி வுட்டுட்டு நீங்க மட்டும் மான்ஹாட்டன் போற மாதிரி பிளான் இருந்தா..... நா வரலை ஆட்டத்துக்கு.! (சும்மா.. லுலுலாயிக்கு.. பரிசல் வேற வர்றாரு, மாலை வாங்கி வச்சுக்குங்கப்பு)

ஜிங்காரோ ஜமீன் said...

உள்ளேன் ஐயா

Anonymous said...

சந்திப்பு இனிதே நடைபெற என் வாழ்த்துக்கள்.

Unknown said...

இந்த முறை கண்டிப்பாக சுண்டல் வாங்க வந்துவிடுகிறேன்..,
8 மணிக்கு அப்பாலிக்கா ஒன்னுமே இல்லையா?

narsim said...

உள்ளேன் ஐயா..

நர்சிம்

குட்டிபிசாசு said...

நானும் சேர்ந்துக்கிறேன்.

பரிசல்காரன் said...

//முரளிகண்ணன் said...

படத்துக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இல்லையே?
//

யாரு சொன்னது. குழந்தை மனசோட இருக்கற நான் வர்றேன்ல. அதுதான் இந்தப்படத்தை சிம்பாலிக்கா போட்டிருக்காரு அதிஷா!

எல்லாரையும் சந்திக்க மிக ஆவலாக உள்ளேன்.

அதிஷா.. ஏன்யா எனக்கு சுட்டி குடுக்கல? வந்து வெச்சுக்கறேன்.

யோசிப்பவர் said...

ஞாயிறாக இருந்தால் வசதியாக இருக்கும். கலந்து கொள்ள முயல்கிறேன்.

SK said...

கலந்துகன்னும்ன்னு தான் ஆச ஆனா எங்கத்த்த வர்றது ..................
சரி அடுத்த தடவ பாத்துக்குவோம்.........
சந்திப்பு முடிஞ்சதுக்கு அப்புறம் நல்ல விவரமா சொல்லுபா அதிஷா .....
நாங்க எல்லாம் படிச்சே சந்தோஷ பட்டுக்றோம் ................................

குப்பன்.யாஹூ said...

திரைப்பட பாடல் ஆசிரியர் தாமரை வருவதாக கேள்வி பட்டேன், உண்மையா.

குப்பன்_யாஹூ

CA Venkatesh Krishnan said...

அடடா. பதிவர் சந்திப்பை எதிர் நோக்கி இருந்த நான் அதில் கலந்து கொள்ள முடியாத சூழ் நிலை.

அன்றுதான் வெளியூர் செல்கிறேன்.

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம். - எனக்கு

பெஸ்ட் ஆஃப் லக் - கலந்து கொள்பவர்களுக்கு

அத்திரி said...

நாங்களும் வந்திருவோம்ல...

Vadielan R said...

நானும் கட்டாயம் கலந்து கொள்கிறேன்

சபைக்கூட்டம் கூடட்டும் சபையில் அந்தபுர அழகிகள் உண்டு அல்(ல)வா

வால்பையன் said...

வாழ்த்துக்கள் நண்பரே!

Anonymous said...

சந்திப்பு இனிதே நடைபெற என் வாழ்த்துக்கள்.

Ŝ₤Ω..™ said...

என்னண்னே இப்படி செஞ்சிபுட்டீங்க????
இந்த வாரம் ஒரு வேலையா ஊருக்கு போகனுமே... பரிசல் வேற வர்ராருன்னு சொல்லறீங்க...
நான் ரொம்ப சோகமா ஆய்ட்டேன் போங்க...

நான் எங்க இருந்தாலும்.. என் மனசு மெரீனாவயும் பதிவர்களையும் தான் சுத்திட்டு இருக்கும்..
போன முறை போலவே தாமிரா சீக்கிரம் போய்டுவாரு.. அதுக்குள்ள அவர படம் பிடிச்சிடுங்க..
மூத்த பதிவர்.. பத்திரிக்கையாளர்.. லொள்ளு சபா நாயகர்.. யாரயாவது அழைப்பதா இருந்தால், முறையாக அழைப்பு அனுப்புங்க.. அப்புறம் அவரு பொலம்பி பொலம்பியே சென்னையில வெக்க தாங்காது..

Muhammad Ismail .H, PHD., said...

தகவலுக்கு நன்றி அதிஷா. எப்பாடு பட்டவது வர முயற்சிக்கின்றேன் (இறைவன் நாடினால்). அது சரி எப்போது உங்களின் செல்லிட பேசி ( Cell Phone ) எண்ணை ஏர்செல்லில் இருந்து வோடபோனுக்கு மாற்றினீர்கள் ? தற்போதைய எண்ணையும் ஒருங்கிணைந்த ஆழிப்பேரலை கண்காணிப்பு சேவையின்(www.ina.ina/itws/) தகவல் தளத்தில் இணைத்து விட்டேன்.

with care and love,
Muhammad Ismail .H, PHD,

ஊர்சுற்றி said...

அதிஷா அண்ணே,

இப்படி ஆகிப்போச்சே.
கொஞ்சநாள் இந்த பக்கம் வராம, உங்களையெல்லாம் படிக்காம....

இந்த சந்திப்பு நடக்கும் போதுதான் இதப் படிக்கிற சந்தர்ப்பம் கிடைக்கணுமா?!!!