13 November 2008

சட்டக்கல்லூரி மாணவர்களின் வன்முறை


இந்தியாவின் வருங்கால தூண்களாம் இவர்கள்... இவர்கள் கையில் சட்டத்துறையை கொடுத்தால் நாளை இந்தியாவின் நீதித்துறை என்ன கதியாகும் . இவர்களுக்குள் இத்தனை வன்முறை எங்கிருந்து வந்ததது . பொதுமக்களும் பத்திரிக்கையாளர்களும் போலீசும் பார்த்துக்கொண்டிருக்க ஒரு சக மாணவனை ஈவிரக்கமின்றி அடித்து அம்மாணவன் சுயநினைவின்றி கிடக்கையிலும் கூட அவனை விடாமல் இரும்பு கம்பிகளாலும் உருட்டுக்கட்டைகளாலும் அடிக்கும் அளவுக்கு ஏன் இந்த வன்முறை ... அம்மாணவர்களின் கண்களில்தான் எவ்வளவு வன்மம் ... இதை ஏன் சுற்றி நின்று பார்த்துக்கொண்டிருந்த போலீசும் பார்த்துக்கொண்டிருந்தது , அக்கல்லூரி முதல்வர் அந்நேரத்தில் என்ன செய்து கொண்டிருந்தார் ...

இப்படி பல கேள்விகள் நேற்று தொலைக்காட்சி செய்திகளை பார்க்கையில் மனதில் எழுந்தது , சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களின் இரண்டு பிரிவினரிடையே நடைபெற்ற இந்த வன்முறையில் இரண்டு மாணவர்கள் இன்று உயிருக்கு போராடி வருகின்றனர் , ஒரு மாணவனின் காதறுந்து கிடக்கிறான் .

பொதுவாகவே சட்டக்கல்லூரி மாணவர்களிடையே இது போன்ற கோஷ்டி மோதல்கள் சகஜமாக நடப்பது என்றாலும் நேற்றுதான் முதல்முறையாக அது செய்தி ஊடகங்களின் வழியே வெளி வந்திருக்கிறது .

கடந்த 30 ஆம் தேதி ஒரு முக்கிய தேசிய தலைவரின் பிறந்தநாள் விழாவிற்கு போஸ்டர் ஒட்டும் போது தங்களது கல்லூரியின் பெயரை ( டாக்டர்.அம்பேத்கர் சட்டக்கல்லூரி ) என்று முழுமையாக போடாமல் வெறும் சென்னை சட்டக்கல்லூரி என்று போட்டதாகவும் அதனால் இரண்டாமாண்டு படிக்கும் மாணவர்களுக்கும் மூன்றாம்ஆண்டு மாணவர்களுக்கும் இடையை மோதல் இருந்ததாக கூறப்படுகிறது . இவ்விடயம் நேற்று உச்சத்தை அடைந்து இரண்டாமாண்டு படிக்கும் மாணவர்கள் பலர் நேற்று தேர்வெழுத வந்த மூன்றாமாண்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கின்றனர் . அதில் பல மாணவர்களும் தப்பி ஓடிவிட நான்கு மாணவர்கள் மட்டும் இந்த வெறி கும்பலிடம் மாட்டிக்கொண்டதாக தெரிகிறது . அந்த நால்வரை இரும்புகம்பி,கற்கள்,கத்தி, மண்வெட்டி முதலான ஆயதங்களோடு தாக்கியுள்ளனர் . இச்சம்பவம் நடக்கையில் இப்படி ஒரு பிரச்சனை இன்று ஏற்படுமென தெரிந்து அங்கு வந்திருந்த போலீசார் அந்த மோதலை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது , அதிர்ச்சயளித்தது .

ஆனால் பொதுவாகவே சட்டக்கல்லூரிகளில் நடக்கும் இது போன்ற பிரச்சனைகளில் தலையிடும் போலீசார் மீதே பிரச்சனையை திசைதிருப்பி விடும் மாணவர்கள் நம் சட்டக்கல்லூரி மாணவர்கள் . இப்பிரச்சனையில் போலீசார் நுழைந்து அதை தடுக்க முயன்றிருந்தால் நமது பத்திரிக்கையாளர்களும் போலீசார் மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் என்று செய்தியை மாற்றியிருப்பார்கள் . சட்டக்கல்லூரி மாணவர்களை அடித்தால் நமது வழக்கறிஞர்களும் ஐயகோ என முறையிட்டு நீதிமன்ற வாயிலில் கொடி பிடித்து உட்கார்ந்து கொள்வர் .

இரண்டாவது இப்பிரச்சனை சாதீயரீதியிலான மோதலாகவும் இருக்கிறது . மாணவர்களிடையே எப்படி பரவியது இச்சாதிவெறி . இன்று சட்டக்கல்லூரிகளில் பயிலும் பெரும்பாலான மாணக்கர்கள் தென்தமிழகத்தை சேர்ந்தவர்களும் ஆதிதிராவிட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருமே ஆவர் . இவர்களில் பலருக்கு பின்னும் பல சாதீய அமைப்புகளின் பின்புலம் இருப்பது அதிர்ச்சியான தகவல் .

நேற்று உண்டான மோதல் கூட ஆதிதிராவிட மாணவர் விடுதியில் தங்கிப்படிக்கின்ற மாணவர்களாலேயே நடத்தப்பட்டதாக தெரிகிறது . இப்பிரச்சனை மேலும் வலுவடையும் பட்சத்தில் இது சாதிப்பிரச்சனையாகவும் உருவாகலாம் . தென்தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்று சாதிக்கலவரங்கள் நடைபெறுகிறதென்றால் அதற்கு அவர்களது அறியாமையும் படிப்பறிவின்மையுமே காரணமாக கருதலாம் . ஆனால் இன்று சட்ட கல்லூரியில் பயிலும் இம்மாணவர்களிடையே நிலவும் இச்சண்டைகளும் மோதல்களும் இச்சாதிக்கலவரங்களின் காரணிகளின் ஆணிவேர் வேறெதுவோ என எண்ணத்தூண்டுகிறது .

நாளைய வழக்கறிஞர்களாக ஆக இருக்கும் இம்மாணவர்கள் இப்படி சட்டத்தை சிறிதும் மதிக்காமல் , போலீஸ் மற்றும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் ஒரு சக மாணவனை இது போல அடித்து நொறுக்குவதை காணும் போது , நமது நீதித்துறையின் எதிர்காலத்தை நினைத்து பார்த்தாலே இருள் சூழ்கிறது .

நமது அரசு இப்படிப்பட்ட பிரச்சனைகளில் தலையிடாமல் மெத்தனமாக இத்தனை ஆண்டுகளாகவும் இருந்து வந்திருக்கிறது . என்றாவது ஒரு நாள் இது போன்ற பிரச்சனையால் ஒரு உயிரிழப்பு ஏற்படும் வரை அது தொடருமோ என்றே தோன்றுகிறது . நமது ஊடகங்களும் கூட உயிரிழப்பு என்ற ஒன்று ஏற்படாதவரை இது போன்ற பிரச்சனைகளை கண்டு கொள்வதே இல்லை . ராகிங் பிரச்சனையிலும் கும்பகோணம் பிரச்சனையிலும் உயிரிழப்புகள் ஏற்ப்பட்ட பிறகே நம் அரசு இதை தடுக்க முன்வந்தது . இப்பிரச்சனையிலாவது இது போன்ற ஒரு சாவு நிகழ்வதற்கு முன் இப்பிரச்சனையில் தமிழகஅரசு தலையிட்டு தீர்வு காணவேண்டும். கல்லூரிகளின் விதிமுறைகள்

இந்நிகழ்வை வேடிக்கைப்பார்த்துகொண்டிருந்த போலீசுக்குத்தான் _______ என்றால் பொதுமக்களாவது கண்முன்னே நிகழும் கொடூரத்தை தடுக்க முயன்றிருக்கலாம் . எது நடந்தாலும் அதை கூடி நின்று சுற்றிப்பார்த்துவிட்டு நகர்ந்து செல்லும் மக்களும் கொஞ்சம் மாறவேண்டும் . சாதீகள் இல்லா சமுதாயம் அமையும் வரை இது போன்ற சாதீய வன்முறைகளும் கலவரங்களும் இருந்து கொண்டுதானிருக்குமோ ...?

22 comments:

செந்தழல் ரவி said...

வருங்கால நீதிபதிகளை பற்றியா போஸ்ட் போடுற ?

உனக்கு களிதாண்டி...

:)))))))))))))

முரளிகண்ணன் said...

அரசு,சட்ட அமைச்சர், காவல்துறை எல்லாமும் நாக்கை பிடிங்கிக்கொண்டு செத்துவிடலாம்

KaveriGanesh said...

wellsaid adisha,

if police entering to the college , the whole thing will be changed by the media.
in police team itself , they dont like law students and lawyers.
they have previous experince towards lawyers and law students, ie why they are mere spectators yesterday.

atichikitu savungda.

enthe engg college la eppti nadakuthu, summa parithapa padathirkal about law college students.

kaveri ganesh

bala said...

நெத்தி அடி.
என் மனதில் உள்ளதை சொல்லி விட்டீர்கள்.
வழக்கறிங்கர்கள்,மக்களுக்கு நல்லா உறைக்கனும்

Rajaraman said...

நாம் இந்த செந்தமிழ் நாட்டில் தான் இருக்கிறோமா இல்லை நமீபியா அல்லது எத்தியோப்பியா போல் ஏதாவது நாட்டில் இருக்கிறோமா என்று சந்தேகம் வருகிறது. ஆமாம் இங்கு அரசாங்கம், போலீஸ் இவையெல்லாம் இருக்கின்றனவா. இந்த நிலையில் நாம் சிங்கள காடயரை காய்ந்து கொண்டு இருக்கிறோம்.

வண்ணத்துபூச்சியார் said...

கொடுமையிலும் கொடுமை.. மனித பண்பே இல்லாதவர்கள் எப்படி நீதியை நிலை நாட்டுவார்கள். கேஸ் போட்டவனை போட்டு தள்ளிட்டு போயிட்டேருப்பானுங்க போல...

வடிவேலன் .ஆர் said...

இந்தியாவின் எதிர்காலம் மாணவர்கள் கையில் சொன்னவர் இன்று மிகவும் வேதனை அடைந்திருப்பார் முன்னாள் ஜனாதிபதி.

நல்ல பதிவு

குசும்பன் said...

எக்ஸ் கூயுஸ் மீ உங்க் அட்ரெஸ் பிளீஸ்:)

உருட்டு கட்டைகளோடு ஆட்கள் வருகிறார்கள்!

குசும்பன் said...

//உயிரிழப்பு ஏற்படும் வரை அது தொடருமோ என்றே தோன்றுகிறது . நமது ஊடகங்களும் கூட உயிரிழப்பு என்ற ஒன்று ஏற்படாதவரை இது போன்ற பிரச்சனைகளை கண்டு கொள்வதே இல்லை . //

அப்ப தமிழக மீனவர்கள் செத்து செத்து விளையாடுகிறார்களா?

Ramesh said...

Why it happens in TN always?

I remember one few years ago!

narsim said...

பார்த்த பாதிப்பில் இருந்து இன்னும் மீளமுடியவில்லை!

வால்பையன் said...

//இப்பிரச்சனையில் போலீசார் நுழைந்து அதை தடுக்க முயன்றிருந்தால் நமது பத்திரிக்கையாளர்களும் போலீசார் மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் என்று செய்தியை மாற்றியிருப்பார்கள் . சட்டக்கல்லூரி மாணவர்களை அடித்தால் நமது வழக்கறிஞர்களும் ஐயகோ என முறையிட்டு நீதிமன்ற வாயிலில் கொடி பிடித்து உட்கார்ந்து கொள்வர் .//

யோசிக்கவேண்டிய விசயம் தான்.
நம் காவல்துறைக்கு அரசியவாதிகளுக்கு சலாம் போட மட்டுமே உரிமை அளிக்கப்பட்டிறுக்கிறது

sahul said...

தங்கள் உரிமைக்காக அமைதியான முறையில் போராடும் மக்கள் மீது வேண்டுமானால் தடியடி என்ற பெயரில் கொலை வெறி தாக்குதல் நடத்துவார்கள்
துப்பில்லாத போலீஸ்கார......

நானும் ஒருவன் said...

எது நடந்தாலும் அதை கூடி நின்று சுற்றிப்பார்த்துவிட்டு நகர்ந்து செல்லும் மக்களும் கொஞ்சம் மாறவேண்டும் . "

என்ன செய்யனும்னு சொல்ல வர்றீங்க? இந்த காட்டு மிராண்டிகளோடு சன்டைப் போட்டு இன்னொரு காட்டு மிராண்டிய காப்பாத்துனுமா? அடிவாங்கியவன் என்ன ஒன்னும் தெரியாத பப்பாவா? நிச்சயம் அவனின் ஏதோ ஒரு வெறிச்செயல்தான் இந்த நாய்களை அப்படி அடிக்கனுனு தோண வச்சிருக்கு. இன்னைக்கு இப்படி ஒரு போஸ்ட் போட்டூட்டு நாளைக்கு டவுசர் கிழியும் பதிவுக்கு நீங்க போய்டுவிங்க. இவனுக கிட்ட சன்டை போட்டட்துக்கு மக்கள் போலிஸ் ஸ்டேஷனுக்கு அலயனும். அவனோட ஆட்கள் கண்ட நேரத்தில் எங்க வீட்டுக்கு வந்து தொல்லை பண்ணுவாங்க. அவனவன் தலைவலி அவனுக்கு. இது மாதிரி பல‌ தடவை கொதிச்சிருப்பிங்க. ஆனா அது ரெண்டு நாள்ல மாறலையா? அது மாதிரிதான் இதுவும்.

Anonymous said...

போலீஸ் ஏதாவது நடடிக்கை எடுத்தால் இந்த வக்கீல் நா--ள் போலீஸ் அராஜகம் என்று சொல்வார்கள் ,

நல்லது தான் , இவர்களது லச்சணம் மக்களுக்கு போய் சேர்ந்தது

D.R.Ashok said...

இதில் narsimmin நிலை தான் எனக்கும்

மிகவும் கண்டிக்கவும் தண்டிக்கவும் வேண்டிய விஷயம். எதிர்காலத்தில் மாணவரிடைய இப்படி எந்த வன்முறையும் நடக்கவேகூடாது

விலெகா said...

அவர்கள் மேல் தவறொன்றும் இல்லை,ஏனென்றால் சட்டத்தை அவர்கள் கையில் எடுத்துள்ளார்கள்(சட்டம்=தடி):-))))

Anonymous said...

PARPANA ARAJAGAM OLIGA

muthu said...

ஒருத்தன் கத்தி எடுத்துக்கொண்டு பாய்வதும்., அவனை இழுத்துப்போட்டு மற்ற சிலர் சரமாரியாக தாக்குவதும்.. அதுவும் சென்னையின் பிரதான இடத்தில், சட்டக்கல்லூரி வளாகத்தின்..

அடி வாங்கியவன் மேல் பச்சாதாபம் வந்தாலும், அவனும் கத்தியை எடுத்துக்கொண்டு அடுத்தவன் மேல் பாய்ந்துள்ளான் என நினைக்கும் போது அவனையும் ஒரு மாணவனாக பார்க்க முடியவில்லை..

வேடிக்கை பார்த்த சட்டக்கல்லூரி மாணவர்கள்.. அடத்தூ நீங்களாடா படித்து முடித்து சட்டத்தை காப்பற்ற போகின்றீர்கள்?

காவல்துறை - கைக்கட்டி வேடிக்கை பார்த்த உங்களுக்கு மக்கள் ரத்தம் சிந்தி உழைத்து கொடுகும் வரியில் இருந்து சம்பளம் வாங்க கைக்கூசவில்லை?? த்தூ

வளைத்து வளைத்து போட்டோ எடுத்த பத்திரிக்கைதுறையே - நாளை காலை முதல் பக்கத்துக்கு நல்ல கலர் போட்டோ கிடைத்தது என்று எடுத்து தள்ளி, படம் வரைந்து பாகம் குறித்த உங்களுக்கு , உங்கள் பத்திரிக்கைக்கு கிடைக்கும் பரபரப்பை விட அந்த சம்பவம் மலிதாகிவிட்டதா?? நீங்கள் சமுதாயத்தின் நாண்கு தூண்களில் ஒரு தூண் என்றூ சொல்லிக்க வெக்கமாயில்லயா?

புருனோ Bruno said...

// நமது ஊடகங்களும் கூட உயிரிழப்பு என்ற ஒன்று ஏற்படாதவரை இது போன்ற பிரச்சனைகளை கண்டு கொள்வதே இல்லை . ராகிங் பிரச்சனையிலும் கும்பகோணம் பிரச்சனையிலும் உயிரிழப்புகள் ஏற்ப்பட்ட பிறகே நம் அரசு இதை தடுக்க முன்வந்தது . இப்பிரச்சனையிலாவது இது போன்ற ஒரு சாவு நிகழ்வதற்கு முன் இப்பிரச்சனையில் தமிழகஅரசு தலையிட்டு தீர்வு காணவேண்டும். //

சரிகா ஷாவை விட்டு விட்டீட்கள் :(

அதே போல் மற்றொரு பிரச்சனை

தி நகர் கடைகளில் தீ விபத்து

கும்க்கி said...

:-((

மு.வேலன் said...

நாய்களுக்கும் இவர்களுக்கும் ஒரு வேறுபாடும் இல்லை. நாய்ச்சண்டையை விட கேவலம்.