05 December 2008

இன்பக்கதைகள் இன்ஃபினிட்டி......(2) - கங்கைகரைத்தோட்டம்.... கன்னிப்பெண்கள் கூட்டம்முத்தமும் இன்பினிட்டிதான் ; -

ஜில்லென்று இருந்தது அந்த அறை . வெள்ளை ஓளி அறை முழுதும் பரவிக்கிடந்தது. படுக்கையில் நிர்வாணமாய் நான். என்னை சுற்றி வெள்ளை ஆடை தரித்த தேவதைகள். என்னை ஏக்கத்தோடு பார்த்திருக்க, நான் வெட்கத்தில் முகம் சிவந்து கிடக்கிறேன் நிர்வாணமாய் . என் மேல் ஒரு வயலட் நிறத்தில் மின்னும் போர்வை , வெல்வட்டாகவோ பட்டாகவோ இருக்கவேண்டும் . மிருதுவாக இருந்தது . என் உடல் அதைவிட மிருதுவாய் .

ஏகாந்தம் என்றால் என்னவென்று எனக்கு தெரிந்திராத வேளை அது . இவர்களெல்லாம் யார் எப்படி இங்கே வந்தேன் . எல்லா தேவதைகளும் அழகாய் இருப்பதேன் . புரியவில்லை . இதையெல்லாம் கேட்கும் நிலையில் நான் இல்லை . தேவதைகளெல்லாம் ஆடை தரித்திருக்க நான் மட்டும் நிர்வாணமாய் . கிளுகிளுப்பாய் உணர்ந்தேன் .

கோடி முறை விடாமல் புணர்ந்ததை போன்ற சோர்வு மனம் முழுக்க . உடல் முழுக்க ஒரு புத்துணர்ச்சி . அதில் ஒருத்தி குறுகிய உதட்டுக்காரி என் காது மடல்களை தடவுகிறாள் .அவள் விரல்கள் ஏன் குளிர்ச்சியாய் இருக்கிறது . இன்னொருத்தி மலையாளியாய் இருக்கவேண்டும் எனது கால்விரல்களை தன் இதழ்களால் முத்தமிடுகிறாள். உடல் சில்லிட்டு மயிர்க்கால்கள் குத்திநிற்கின்றன . குறுகுறுப்பு . அங்கிருந்த அத்தனை பேர் முகத்திலும் அளவிட முடியாத மகிழ்ச்சி , ஒரு தேவதூதனை கண்டது போல களிப்பு .

என் அடிவயிற்றை ஒருத்தி பிசைகிறாள் . அவளை அடுத்தவளோ , அவளுக்கு பதினாறு வயதுதான் இருக்க வேண்டும் , என்னருகில் படுத்துக்கொண்டு என் உச்சந்தலையில் முத்தமிடுகிறாள் . அவளது இளம் மார்பு என் இடதுகையில் அழுந்தியபடியிருந்தது . என் கண்களும் உதடும் அதை நோக்கியே . இந்த பெண்களின் ஸ்பரிசம்தான் எத்தனை மென்மையாய் இருக்கிறது . ஒரு மலரை தொடுவது போல் அல்லவா என்னை தொடுகின்றனர் . எனக்கு மட்டும் மனதில் ஏன் ஒரு வன்முறை குடிகொண்டிருக்கிறது .

இது நிச்சயம் கனவல்ல , நிஜம் , உண்மை , இதோ என்னை அந்த குண்டுப்பெண் கன்னங்களை கிள்ளுகையில் வலிக்கிறதே . அவள் முகத்தில் எத்தனை மலர்ச்சி ,அவள் என்னை பார்த்து பெருமூச்செறிகையில் அவள் மார்புகள் விம்முவது அழகாய் இருக்கிறதே .

சென்னையின் லட்சக்கணக்கான பெண்களை பார்த்து எத்தனை நாள் பெருமூச்சு விட்டிருக்கிறேன் , ஒரு கோடி பேர் வாழும் இச்சென்னையில் எனக்கென்று ஒரு துணையாய் ஒரு பெண்ணில்லையே என்று எத்தனை இரவுகளை தனியாய் தொலைத்திருக்கிறேன் .

கடைசியாய் நான் சென்னை தி.கேணியில் நம்ம ஜட்ஜ் வீட்டு வாசலில் சாக்கடை அள்ளிக்கொண்டல்லவா இருந்தேன் . அங்கே ஒரு குப்பைலாரி பிரேக் பிடிக்காமல் என் மீது மோதியதே . ஆஆஆ நான் இறந்துவிட்டேனா? , இது சொர்க்கமா ? , இங்கெப்படி வந்தேன் . யார் இவர்கள் . எனக்கு மண்டையே வெடித்துவிடும் போலிருந்தது . ஆனால் வலிக்கவில்லை .

அதற்குள் ஒரு அரைகிழடு என்னை அவள் கைகளால் அணைத்தபடி அவள் முகத்தை என்னருகில் கொண்டு வந்து ச்செல்லமாக ''உன் பேர் என்னடா..... '' என்றபடி என் உதட்டில் முத்தமிட்டாள் . ஒரு வித வெண்ணையின் நாற்றம் . குமட்டியது .

நான் வாயைத்திறந்து பேச விழைந்தேன் வாயில் '' குவா........குவா........குவா'' தான் வந்தது . சத்தமாக ,இன்னும் சத்தமாக , வீரியத்துடன் . பல முறை முயன்றும் அதுவே .

அவள் '' ஏன்னா பாருங்கோ , இவன் அழறதை , ஏன்டா வினோ அழற... அழாதேடே.. சிண்டு '' என்றாள் . அவள் முத்தமிட்டாள் , இன்னொருத்தி முத்தமிட்டாள் , ஒரு கிழவன் முத்தமிட்டான் , ஐயயோ நம்ம ஜட்ஜ்ய்யா அவருமா... வீட்டுக்கு உள்ளேயே விடமாட்டாரே , அட கச்சேரி பண்றவர் அவருமா , இன்னும் நிறைய பேர் முத்தமிட்டனர் , முத்தமிட்டபடியே இருந்தனர் .

நான் கத்திக்கத்தி உறங்கிப்போனேன். அப்போதும் நிற்கவில்லை முத்தம் கொடுப்பது .

இச் இச் இச் இச்...... தூக்கத்திலும் கேட்டுக்கொண்டே இருந்தது . தருவது பெருவது இரண்டிலும் இன்பினிட்டி அது .


******************

தொடரும் இன்பம் ................
படம் - பிகாசோவின் தி கிஸ் . (கூகிளில் சுட்டது )

28 comments:

ஜெகதீசன் said...

:))

கார்க்கிபவா said...

உங்க வலைல ரெண்டு ஹிட்கவுண்டர் இருக்கு. ஒன்னு 10 பேர் ஆன்லைன் காட்டுது. இன்னொன்னு 17பேர் ஆன்லைன் காட்டுது. எப்படி ரைட்டர்?

சென்ஷி said...

அதிஷா கலக்கல் வர்ணனைகள்.. :))

சென்ஷி said...

//கார்க்கி said...
உங்க வலைல ரெண்டு ஹிட்கவுண்டர் இருக்கு. ஒன்னு 10 பேர் ஆன்லைன் காட்டுது. இன்னொன்னு 17பேர் ஆன்லைன் காட்டுது. எப்படி ரைட்டர்?
//

மகராசன் படத்துல கமல் டயலாக்குத்தான் ஞாபகத்துக்கு வருது..

ஒரிஜினல் ஐடியில வர்றவங்களுக்கும் அனானி ஐடிக்காரங்களுக்கும் தனித்தனியா வச்சிருக்காரோ என்னமோ :)))

Unknown said...

வாங்க ஜெகதீசன் வருகைக்கு நன்றி

___________________________________

வாங்க கார்க்கி...

அதுக்கு காரணம் தெரியல ... புதுக்கவுண்டர் போட்டேன் அது சரியா வேலை செய்ய மாட்டேங்குது.

தங்கள் மேலான வருகைக்கு நன்றி மூத்த பதிவரே

கதை மொக்கையா இருந்தா....

இப்படிலாம் பின்னூட்டம் போட்டு வெறுப்பேத்துவீங்களோ...

;-))))

Anonymous said...

\\ ஒரு அரைகிழடு என்னை அவள் கைகளால் அணைத்தபடி அவள் முகத்தை என்னருகில் கொண்டு வந்து ச்செல்லமாக ''உன் பேர் என்னடா..... '' என்றபடி என் உதட்டில் முத்தமிட்டாள் . \\

இது மட்டும் உங்களுக்கு உண்மையிலேயே மீண்டும் மீண்டும் நடக்க வாழ்த்துகிறேன்....

VIKNESHWARAN ADAKKALAM said...

ஐயர் ஆத்துல பிறந்துட்டேலா அம்பி... சேமமா இருங்கோ...

மணிகண்டன் said...

பொறக்கும் போதே இப்படியா ?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

பிஞ்சுல பழுத்த பார்ட்டி தெரியும்.. இது பொறக்கும்போதே பழுத்திருச்சு போல :)

ஆனாலும், செத்துச் செத்துப் பிறக்கும் இந்த விளையாட்டு நல்லாத்தான் இருக்கு :)

அத்திரி said...

நல்லயிருக்குப்பா ...................???????????????//

மணிகண்டன் said...

இதுக்கு தான் நர்ஸ் எல்லாருக்கும் வெள்ளை டிரஸ் கொடுக்கராங்களா ?

மணிகண்டன் said...

**** பிஞ்சுல பழுத்த பார்ட்டி தெரியும்.. இது பொறக்கும்போதே பழுத்திருச்சு போல :) *****

பழம் பழுது அழுகி போய், அதுலேந்து வந்த கொட்டை இது

மணிகண்டன் said...

***** ஆனாலும், செத்துச் செத்துப் பிறக்கும் இந்த விளையாட்டு நல்லாத்தான் இருக்கு *****

ஆமாம். நம்ப கற்பனை கூட சென்னைலயே தேங்கிடுதே !

மணிகண்டன் said...

***** உங்க வலைல ரெண்டு ஹிட்கவுண்டர் இருக்கு. ஒன்னு 10 பேர் ஆன்லைன் காட்டுது. இன்னொன்னு 17பேர் ஆன்லைன் காட்டுது. எப்படி ரைட்டர்? ****

27 பேர் இருக்காங்கன்னு அர்த்தம்.

வால்பையன் said...

//கங்கைகரைத்தோட்டம்.... கன்னிப்பெண்கள் கூட்டம்
//

அங்க மட்டும் அப்படி என்ன ஸ்பெஷல்?

வால்பையன் said...

//முத்தமும் இன்பினிட்டிதான் ; -//

இன்பினிட்டி என்றால் என்ன என்று விளக்கமாக சொல்ல முடியுமா?

வால்பையன் said...

//படுக்கையில் நிர்வாணமாய் நான்.//

அந்த வெள்ளை எலி ஸாரி ஒளி பயத்துல இருட்டாயிருக்குமே!

வால்பையன் said...

//இது நிச்சயம் கனவல்ல , நிஜம் , உண்மை //

ஆனாலும் பேராசை அதிஷா உங்களுக்கு

Anonymous said...

Padam podureenga....

வால்பையன் said...

அட மறுபிறவி கதையா
ஆனாலும் இதில் இரண்டு சமாச்சாரங்கள் ஒழிந்துள்ளது.
இன்று உங்கள் அடிமனதின் பெண்கள் மேல் உள்ள ஆசைகள்,
மற்றொன்று, மேல் தட்டு மக்கள் என்ன தான் பிற்படுத்தபட்ட மக்களை ஒதுக்கினாலும் அவர்களது கடவுள் மற்றும் மறுபிறப்பு நம்பிக்கையை வைத்து கொண்டு நான் மீண்டும் உன் வீட்டிலேயே பிறப்பேன் என்று எச்சரித்திருப்பது.

நல்ல நடை.

Anonymous said...

நல்லாயிருக்கு அதிஷா! 'இச்'சிறுகதை.

முரளிகண்ணன் said...

இதில இருக்கிற பின் நவீனத்துவ கூறை யாரும் இதுவரை சுட்டிக்காட்டலையே ஏன்?

பரிசல்காரன் said...

யோவ்.. சும்மா சொல்லல. சூப்பர் தீம்யா... ஒரு குட்டியூண்டு கதையில உலக தத்துவங்களையெல்லாம் அடக்கீட்டியேய்யா.. ப்பா! ச்சான்ஸே இல்ல!!!

பரிசல்காரன் said...

//
மகராசன் படத்துல கமல் டயலாக்குத்தான் ஞாபகத்துக்கு வருது..//

என்னங்காணும் அது? நேக்கு நெனவில்லையே...

வெண்பூ said...

கலக்குங்க அதிஷா... நல்லா வித்தியாசமா இருக்கு.. அடுத்த கதைக்காக காத்திருக்கிறேன்..

நித்யன் said...

எல்லை தாண்டாமல் விளையாடும் கிளுகிளுப்புக் கதை, கிறுகிறுப்பை ஏற்படுத்தியது நிஜம்தான். பலவாறு பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்பட்ட உத்தியாயினும் எழுதப்பட்ட வகையில் மிகச்சிறப்பே...

தொடர்ந்து வாசிக்கும்
அன்பு நித்யகுமாரன்

Unknown said...

அதிஷா,

நல்லா இருக்கு.”மாய யதார்த்த வாதம்’?

ராமய்யா... said...

Athisha..

Nalla irukku aanaa illa...

but pirappu irappu..

Good Combination...