இன்பக்கதைகள் இன்ஃபினிட்டி......(3) - ஆபாசப்பெயர்கள்

>> 11 December 2008

ஆபாசப்பெயர்கள்:-



அலை ஓயாமல் அடித்துக்கொண்டிருக்கும் மெரினா பீச் , அதன் பீச்சாங்கை பக்கமாகஇருக்கும் குப்பத்துக்கு அருகில் இருந்த ஒரு படகுக்கு பின்னால் மறைவாக இருவர். அவன் கையில் மணல் , அவள் கையிலும் மணல் , மணலோடு உதிர்ந்த சில வார்த்தைகள்.

''வினோ நீ என்ன எவ்ளோ லவ் பண்ற? ''

''இன்ஃபினிட்டி அளவு ''

''உனக்கு என்னை எவ்ளோ புடிக்கும்?''

''இன்ஃபினிட்டி அளவு''

''எனக்காக என்னவேணா செய்வியா!!?''

''கட்டாயம் என்னவேணா செஞ்சுகிட்டே இருப்பேன் , உன்னை......சாரி உனக்கு செய்யாம வேற யாருக்குடா செய்யப்போறேன் ''

''ச்சீ லூசு!! நான் சீரியஸா கேக்கறேன் ''

''நானும் சீரியஸாதான் சொன்னேன்டி ''

''சொல்லுடா!! என்ன வேணா செய்வியா? ''

''ம்ம் செய்றேன் சாகமட்டும் சொல்லாத!! ப்ளீஸ் நான் வீட்டுக்கு ஒரே பையன்''

''நீ இனிமே மோனிகிட்ட பேசாத !''

''ஏன்டி அவ என்னோட பெஸ்ட் பிரண்டுமா!!''

''அவ நோட்டுல இன்னைக்குத்தான் பார்த்தேன் MONIV MONIV னு ஆயிரம் வாட்டி எழுதிருந்தா!!''

''அதென்ன MONIV !! அதுக்கு நான் ஏன் பேசக்கூடாது''

''ம்ம் MONIV இத ரிவர்ஸ்ல படிடா! ''

''VINOM , ஐ...................அட இதப்பார்ரா.. இப்படி படிச்சா மோனி அப்படிக்கா படிச்சா வினோ இன்னா கிரியேட்டிவிட்டி ரியலி வி சுட் அப்ரிசியேட் திஸ்மா, "

''டேய் ப்ளீஸ் , அதப்பாரு எவ்ளோ ஆபாசமா இருக்கு... உன்னை மட்டுமில்ல உன் பேரக்கூட யாரோடயும் சேத்துவச்சு பாக்கமாட்டேன்டா .. அவ உன்னை லவ்பண்றானு நினைக்கிறேன் அவகிட்ட பேசாதடா ப்ளீஸ்!! ''


''என்னடா செல்லம்மா இப்படி சொல்லிட்ட.. எவ்ளவோ பண்றோம் இதபண்ணமாட்டமா.. என்ன ஃபிகருக்காக பிரண்ட கட் பண்றமேனு நினைச்சாத்தான் கஷ்டமாருக்கு , பரவால்லவிடு உனக்காகத்தானே ''

சோனியாவுக்கு பெருமிதமாக இருந்ததிருக்கவேண்டும்.


********************************



அலை ஓயாமல் அடித்துக்கொண்டிருக்கும் திருவான்மியூர் பீச் , அதன் மண்டிக்கிடக்கும் மறைவான புதர் பக்கமாக இருவர். ஒருவன் கையில் அவள் , ஒருத்தி கையில் அவன் கை , அங்கே சிதறியதில் பொறுக்கிய சில வார்த்தைகள்.

''வினோ நீ என்ன எவ்ளோ லவ் பண்ற ''

''நிறைய நிறைய ''

''உனக்கு என்னை எவ்ளோ புடிக்கும்''

''நிறைய நிறைய''
''நிறைய நிறையனா எவ்ளோ ''
''ம்ம்ம்ம் இவ்ளோ ''
''ச்சீ ராஸ்கல் அங்கல்லாம் தொடாத ''
''ஓஓ அங்க வேணாமா.. ஓகே ஓகே புரியுது புரியுது.. இங்கயா இங்கயா இங்கயா ''
''சும்மா இருடா.. நாயி !! எனக்காக என்னவேணா செய்வியா!!''
''கட்டாயம் என்னவேணா செஞ்சுகிட்டே இருப்பேன் , உன்னை......சாரி உனக்கு செய்யாம வேற யாருக்குடா செய்யப்போறேன் ''
''ச்சீ பைத்தியம் !! நான் சீரியஸா கேக்கறேன் ''

''நானும் சீரியஸாதான் சொன்னேன்டி ''

''சொல்லுடா!! என்ன வேணா செய்வியா ''

''ம்ம் செய்றேன் சாகமட்டும் சொல்லாத!! ப்ளீஸ் நான் வீட்டுக்கு ஒரே பையன்''

''நீ இனிமே சோனிகிட்ட பேசாத ''

''டேய் அவ என்னோட பெஸ்ட் பிரண்டுடா ''

''அவ ஸ்கூட்டில இன்னைக்குத்தான் பார்த்தேன் SONIV LOVE னு பெரிசா எழுதிருந்தா!!''

''அதென்ன SONIV !! அதுக்கு நான் ஏன் பேசக்கூடாது''

''ம்ம் SONIV இத ரிவர்ஸ்ல படிடா! ''

''VINOS , ஐ...........அட இதப்பார்ரா.. இப்படி படிச்சா சோனி அப்படிக்கா படிச்சா வினோ இன்னா கிரியேட்டிவிட்டி ரியலி வி சுட் அப்ரிசியேட் திஸ் எபர்ட்மா, "

''டேய் ப்ளீஸ் , அதுப்பாரு எவ்ளோ ஆபாசமா இருக்கு...சிரிக்கிரியே...... உன்னை மட்டுமில்ல உன் பேரக்கூட யாரோடயும் சேத்துவச்சு பாக்கமாட்டேன்டா .. அவ உன்னை லவ்பண்றானு நினைக்கிறேன் அவகிட்ட பேசாதடா ப்ளீஸ்!! ''

''என்னடா செல்லம்மா இப்படி சொல்லிட்ட.. எவ்ளவோ பண்றோம் இதபண்ணமாட்டமா.. என்ன ஃபிகருக்காக பிரண்ட கட் பண்றமேனு நினைச்சாத்தான் கஷ்டமாருக்கு , பரவால்ல விடு , உனக்குத்தான ''

''ச்சீ சும்மா இருடா ... ''

மோனிகாவுக்கு உலகிலேயே தான்தான் மிகப்பெரிய அதிர்ஷ்டக்காரி என்ற நினைப்பு , வினோவின் உதட்டிலிட்ட முத்தத்தின் அழுத்தத்தில் தெரிந்திருக்கும்.

*******************************


*******************************

தொடரும் இன்பம்...

27 கருத்துக்கள்:

கும்க்கி December 11, 2008 11:11 AM  

வந்துட்டம்ல....

அதிரை ஜமால் December 11, 2008 11:17 AM  

\'வினோ நீ என்ன எவ்ளோ லவ் பண்ற? ''

''இன்ஃபினிட்டி அளவு ''

''உனக்கு என்னை எவ்ளோ புடிக்கும்?''

''இன்ஃபினிட்டி அளவு''\\

அருமை.

அதிரை ஜமால் December 11, 2008 11:18 AM  

\\உன்னை மட்டுமில்ல உன் பேரக்கூட யாரோடயும் சேத்துவச்சு பாக்கமாட்டேன்டா \\

எந்த உயிராலும் முடியாதது.

அதிரை ஜமால் December 11, 2008 11:23 AM  

\\அட இதப்பார்ரா.. இப்படி படிச்சா சோனி அப்படிக்கா படிச்சா வினோ இன்னா கிரியேட்டிவிட்டி ரியலி வி சுட் அப்ரிசியேட் திஸ் எபர்ட்மா\\

அட இதப்பார்ரா ...

அங்கேயும் இங்கேயுமா

அதிரை ஜமால் December 11, 2008 11:24 AM  

\\என்னடா செல்லம்மா இப்படி சொல்லிட்ட.. எவ்ளவோ பண்றோம் இதபண்ணமாட்டமா.. என்ன ஃபிகருக்காக பிரண்ட கட் பண்றமேனு நினைச்சாத்தான் கஷ்டமாருக்கு , பரவால்ல விடு , உனக்குத்தான\\

இன்னா சொல்றது.

நான் அவனில்லை.

VIKNESHWARAN December 11, 2008 12:23 PM  

ங்கொய்யாலே...

Anbu December 11, 2008 1:05 PM  

hello sir is very super

தமிழ் பிரியன் December 11, 2008 1:17 PM  

ஒன்னுமே இல்லியேய்யா? இன்பினிட்டி எங்கயா இருக்கு.. :(

ஜ்யோவ்ராம் சுந்தர் December 11, 2008 1:26 PM  

இந்தக் கதையில் துரோகம் சரிவரப் பதிவாகவில்லை. அப்படியில்லாதபோது இது வெறும் ஒரு பக்கக் கதையாகிவிடும் அபாயமிருக்கிறது.

மணிகண்டன் December 11, 2008 4:23 PM  

இதில் எங்கே வந்தது துரோகம் சுந்தர் ? இது வேறு வினோ. அது வேறு வினோ.

புரியாத கதைக்கு ஒரு பக்க கதை எவ்வளவோ மேல்.

charumathi December 11, 2008 4:24 PM  

atisha, you should not moni and soni...only charumathi.

ஜ்யோவ்ராம் சுந்தர் December 11, 2008 5:05 PM  

மணிகண்டன், கூல்!

என்னது ரெண்டும் வேற வேற வினோவா.. எனக்குத்தான் கதையைப் படிக்கத் தெரியலை போலிருக்கு :) ரெண்டும் வேற வேற ஆளுங்க என்றால் ஒரே மாதிரியான சம்பாஷணைகள் கதைக்குத் தேவையேயில்லையே...

கே.ரவிஷங்கர் December 11, 2008 5:35 PM  

அதிஷா,

out of box திங்கிங் இருந்தால் இதை
இரண்டு வெவ்வேறு கதைகளாகப் பார்க்கலாம்.

ஒரே கதை என்றால் இரண்டாவது கதை தேவையில்லை என்று நினைக்கிறேன் .

முதல் கதையின் முடிவில் கிழ் வருமாறு போட்டிருக்கலாம்:-

சோனியா கேட்ட மாதிரியே மோனிகாவும் கேட்டாள்.

"இன்னைக்குத்தான் பார்த்தேன் SONIV LOVE னு பெரிசா எழுதிருந்தா!!''

வினோ உடனே CLRL + C அழுத்தி மனதில் உள்ள ''டேய் ப்ளீஸ்...................................உனக்காகத்தானே' வரை காபி செய்து பிறகு CTRL + V செய்து அவளிடம் வைத்தான்.

கதை தலைப்பு காபி அண்ட் பேஸ்ட்

ஜ்யோவ்ராம் சுந்தர் December 11, 2008 5:46 PM  

ரவிஷங்கர், அப்படிப் படிக்கவேண்டுமானால், அதற்கான ஸ்பேஸ் கதையில் இருக்கணும்.

1. இது ஒரு நேரடியான கதை
2. ஒருவன் ஒரே மாதிரிப் பேசிப் பழகி இரண்டு பெண்களை (அவர்கள் நண்பர்கள்) ஏமாற்றுகிறான். இதில் அவன் உபயோகிக்கும் உத்தி ஒரே மாதிரியானது என்பதுதான் இதில் இருக்கும் சிறுகதைக்கான முரண்.

simple :)

மணிகண்டன் December 11, 2008 6:13 PM  

******* ரெண்டும் வேற வேற ஆளுங்க என்றால் ஒரே மாதிரியான சம்பாஷணைகள் கதைக்குத் தேவையேயில்லையே. ********

அதிஷா, ஒரு பட்டர்ப்ளை பறக்கற மாதிரி ஒரு படம் போட்டுடுங்க. அப்பவாது சுந்தர் மாதிரி மக்களுக்கு இந்த கதைல நீங்க விளக்கி உள்ள chaos theory புரியாதான்னு பாப்போம்.

தாமிரா December 11, 2008 7:23 PM  

யோவ்.. நல்லா எழுதுறய்யா.. குல்மா கதைகள் எல்லாம்.. !

வால்பையன் December 11, 2008 7:43 PM  

இன்ஃபினிட்டி என்றால் என்ன?

அது கெட்ட வார்த்தை இல்லையே!

நானும் என் கேர்ள் பிரண்டுகிட்ட சொல்லனும் அதான் கேக்குறேன்

சென்ஷி December 11, 2008 9:45 PM  

இன்ஃபினிட்டி அளவு பிடிச்சுருக்குது சரி.. காதலிகளும் லிஸ்டும் இன்ஃபினிட்டியா இருக்கும் போலருக்குதே :))

செந்தழல் ரவி December 12, 2008 12:07 AM  

இந்த 'வினோ' ப்ப்பயலுக்கு இவ்ளோ அதிஷ் டமா ?

ஹும் !!!

Ravee (இரவீ ) December 12, 2008 3:28 AM  

ஆதிஷா,
இதெல்லாம் மோனிகாவும், சோனியாவும் மாமல்லபுர கடற்கரையில் உங்களிடம் பகிர்ந்து கொண்டதா?

ஜ்யோவ்ராம் சுந்தர் December 12, 2008 10:18 AM  

மணிகண்டன், என்னது இந்தக் கதைல கேயாஸ் தியரி வேறயா???
ஐயையோ, தெரியாம வந்து மாட்டிகிட்டேன் போலிருக்கே :)

மணிகண்டன் December 12, 2008 3:41 PM  

************ ஐயையோ, தெரியாம வந்து மாட்டிகிட்டேன் போலிருக்கே *******

தெரியாம இல்ல. பொழுது போகாம !!

ஜ்யோவ்ராம் சுந்தர் December 12, 2008 3:49 PM  

கொசுத் தொல்லைகளைப் பற்றி ஒரே கதையில் இரண்டு கதைகளை ஆரம்பித்து கேயாஸ் தியரியில் முடித்து எழுதியிருக்கிறேன். முடிந்தால் படிக்கவும் :)

Post a Comment

  © Blogger template Simple n' Sweet by Ourblogtemplates.com 2009

Back to TOP