19 December 2008

ஜே.கே.ரித்திஷைப் போல நீங்களும் பிரபலமாக வேண்டுமா?
ரித்திஷ்னாலே டெரருடா! - அவர்

தமிழ்நாட்டுக்கே பவருடா!அவர் அள்ளித்தரும் திருமல..

கண்ணால் பாத்தா எரிமல - ஒரு

சண்டனு வந்துபுட்டா .....

டண்ட்டாக்கு டண்ட்டாக்கு டண்ட்டாக்கு...

அவருதான்டா

தருதல..தருதல தருதல தருதல...- நான் எழுதினதுதான்.இப்பூவுலகில் பிறந்திட்ட அனைவருக்குமே ஒரு நாள் பிரபலமாகிட வேண்டும் என்கிற அவலும் ஆசையும் நிச்சயம் இருக்கும் . எனக்கும் உங்களுக்கும் ஏன் இவ்வலையுலகில் வலம் வரும் சகலருக்கும் இருக்கும் . ஆனால் இன்றைய சினிமா நட்சத்திரங்களில் புகழின் உச்சிக்கே சென்றுவிட்ட ஒரு நல்ல நடிகர்,மாமனிதர் , மாமாமனிதர் , தொழிலதிபர் , வாழும் பாரி,ஓரி,காரி,பூரி, இப்படி பல அடைமொழிகளையும் தனக்குத்தானே சூட்டிக்கொண்டு திரையுலகில் யாரும் எட்டாத இடத்தை பிடித்த அண்ணன் ரித்திஷ்குமார் அவர்களைப்போல ஆகவேண்டும் என்பதே இன்றைய இளைஞர்களின் கனவும் லட்சியமும் ஆகும்.

ரித்திஷ்குமார் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி ஒரு சிறந்த மனிதர் , அவரை பின்பற்றி இன்றைய தமிழக இளைஞர்களும் கண்களில் கண்ணாடியும் கலர்கலராய் ஜீன்சும் அணிந்துகொண்டு நம் நாட்டிற்கும் ஏழை மக்களுக்கும் சேவை செய்ய எண்ணி அவரைப்போல ஆகவிழையும் காட்சிகளை இன்றைய தமிழகத்தின் நெருக்கடி மிகுந்த ரங்கநாதன் தெரு , பர்மா பஜார் போன்ற பகுதிகளில் காணலாம் .

ஊர்க்குருவி பருந்தாகுமா இல்லை ஓட்டகம்தான் படி ஏறுமா அது போல யாராலும் அவ்வளவு சுலபமாய் அண்ணன் ரித்திஷ்குமார் அவர்கள் எட்டிய தூரத்தை எட்ட இயலாது . அதற்கு சில வழிமுறைகள் இருக்கிறது . அவை மிகவும் சிக்கலான முறைகள் . மிகுந்த கவனிப்போடும் கையில் குறையாத காசோடும் கண்களில் முட்டையும் கலர்கலராய் சட்டையுமாய் உழைக்கவேண்டும் .

வழிமுறைகள் என்னவென்று பார்ப்போம் :1.முதலில் உடனடியாக ஏதாவது ஒரு உப்புமா கட்சியிலாவது சேர்ந்து கொண்டு அதில் உறுப்பினர் ஆகி விடுங்கள் .

2.மறந்துவிட்டேன் அதறகு முன் எங்காவது டீக்கடையில் கிளாஸ் கழுவவும் .

3.பிறகு எவனாவது இளிச்சவாயனுக்கு பினாமியாக இருக்கவும்

4.அந்த இனா வாயன் எங்காவது தலைமறைவாக இருக்கையில் அந்த சொத்துக்களை உங்கள் பெயருக்கு மாற்றிக்கொள்ளவும் .

5.உடனடியாக ஒரு படம் துவங்கவும் . அதில் கௌரவ வேடத்தில் நடித்து வெள்ளோட்டம் பார்க்கவும் .

6.இப்போது உங்களுக்கே உங்கள் யோக்கியதை தெரிந்திருக்கும் .ஸாரி உங்களுக்கே உங்கள் அழகு தெரிந்துவிடும்

7.மிக பிரபலமான படப்பெயரில் ஒருபிரபல ஆங்கில படத்தின் கதையை அப்படியே சுட்டு புதிய படத்தை தொடங்கவும்...........

8.முதலில் ஜேகேஆர் போல ஆக உங்கள் முகத்தை எப்போதும் பைல்ஸ் வந்த குரங்கைப்போல வைத்துக்கொள்ள வேண்டும் . ( பல் தெரியாமல் சிரிக்கணும் )

9.ஜிகினா வைத்த சட்டைகளையும் ஆரஞ்சு , மஞ்சள் , ரோஜா நிற பேண்ட்களையும் உபயோகிக்கவும்

10.அடிக்கடி மீடியாக்களில் நம் பெயர் வருவது போல எதாவது குரங்கு சேட்டைகளை செய்ய வேண்டும்

11.ஊரில் இருக்கும் ஆட்டோ , பைக்கு, சைக்கிள் , கைவண்டி , குழந்தைகள் நடைவண்டி என பாரபட்சமின்றி எல்லாவற்றிலும் உங்கள் பெயர் அல்லது உங்களது லேட்டஸ்ட் பட விளம்பரம் என உங்கள் சம்பந்தப்பட எந்த கருமத்தையாவது மாதம் 2000 ரூபாய் என பேசி அளித்து விடவும்

12.பத்திரிகையாளர்கள் உங்களை அசிங்கமாக திட்டினால் அதை துடைத்து போட்டுவிட்டு சிரித்தமாதிரி ஒரு படத்திற்கு போஸ் மட்டும் கொடுத்துவிட்டு எஸ் ஆகி விடவும் . பதில் சொல்லாதீர்கள் . அது மாபெரும் காமெடி ஆக்கப்படலாம்.

13.ஆளுங்கட்சிக்கு நிறைய நிதி கொடுக்கவும் , உங்கள் விழாக்களுக்கு அவர்களை அழைத்து சீன் போட உதவும் .

14.உங்கள் ஏரியாவில் நடக்கும் காதுகுத்து , மூக்கு குத்து , பூப்புனித நீராட்டுவிழா என்று எல்லா நிகழ்ச்சிகளிலும் தவறாமல் கலந்து கொள்ளவும் .


15.அந்த நிகழ்ச்சி நடத்துபவரிடம் முன்னாலேயே காசு குடுத்து உங்கள் படத்தை பெரிதாக போட்டு சூறாவளி ஸ்டார் , அதிரிபுதிரி அண்ணன் இது போன்ற அடைமொழியோடு போஸ்டர் அடித்து கொள்ளவும்


16.நிறைய ஏழைகளுக்கு உதவி செய்யவில்லையென்றாலும் ஏழைகளோடு நின்று போட்டோ எடுத்து கொள்ளவும்


17.இது தவிர சினிமாவில் நடிக்கும் போது சில விடயங்களை பின்பற்ற வேண்டும்


அ.காதல் காட்சிகளில் விளக்கெண்ணய் குடித்தமாதிரி முகத்தை வைத்துக்கொள்ளவும்


ஆ.ஆக்சன் காட்சிகளில் இஞ்சிதின்ன டோமர் மாதிரி இருப்பது நல்லது

இ.செண்டிமென்ட் காட்சிகளில் காலைவேளையில் எவ்வளவு முக்கியும் வரவில்லையெனில் எப்படி இருப்பீர்கள் அப்படி ஒரு முகபாவம் அவசியம்


4.வீரவசனம் பேசும்போது முகத்தை உராங்குட்டன் என்னும் விலங்கைபோலிருப்பது உசிதம் (உராங்குட்டனை பார்த்ததில்லையே மேலே படத்தில் பார்க்கவும் )


இதுபோல 45மண்டலங்கள் விடாது செய்து வர எல்லாம் வல்ல இலச்சிமலை ஆத்தா புண்ணியத்தில் நீங்களும் ரித்திஷ்தான்,
PIN குறிப்பு அல்லது எச்சரிக்கை :*இது போன்ற முயற்சியால் விழையும் பின்விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பல்ல ,

*இம்முயற்சியில் உங்களுக்கு மட்டுமல்ல உங்களை சுற்றியுள்ளவர்களுக்கும் பல பேராபத்துகள் நிகழலாம் அதனால் ஜாக்கிரதையாக இருக்கவும்.*இது தவிர நீங்கள் முழுமையான ரித்திஷ்குமார் ஆன பின் குழந்தைகளிடம் தயவு செய்து போய்விடாதீர்கள் குழந்தைகளுக்கு அடுத்த நாளே சீதபேதி,வயிற்றுப்போக்கு போன்ற வியாதிகள் வரலாம்.*அதே போல் ஆடு,மாடுகள் இருக்கும் பகுதிகளுக்கும் செல்லவேண்டாம் . அவைகளின் சாவுக்கு நீங்கள் காரணமாயிருப்பதை கம்பேனி விரும்பாது.(பாவம் அனிமல்ஸ் )ஜே.கே.ரித்திஷ் நாமம் வாழ்க ...... அகிலமெல்லாம் அவர் புகழ் வளர்க...... உங்களுக்குள் இருக்கும் ரித்திஷை வெளிக்கொணருங்கள்.. நீங்களும் பீரோதான் சாரி ஹீரோதான்.. ;-)


இப்பதிவு முழுக்க முழுக்க சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு எழுதியது . நீங்கள் இதை படிக்கும்போது சிரித்திருந்தால், மன்னிக்கவும் அது என் தவறல்ல .

* இப்பதிவு ஏற்கனவே வருத்தப்படாத வாலிபர்சங்கத்தில் வெளியானது . இங்கே மீண்டும் ஒரு முறை மீள் பதிவு செய்யப்படுகிறது .


*****************************
இப்போதைக்கு இவ்ளோதான்பா!!.. :-)
39 comments:

விஜய் ஆனந்த் said...

:-)))...

Anonymous said...

me the first

ஜெகதீசன் said...

:))

Namma Illam said...

நவீன வள்ளல் ஜே.கே.ஆரின் புகழுக்கு களங்கம் விளைவிக்க முயலும் அதிஷாவை அதிரடி நாயகன் ஜேகேஆர் ரசிகர்கள் சார்பாக வ’ண்’மையாக கண்ணடிக்கிறோம்.

Rajes said...

இன்னா நைனா வூட்டுக்கு ஆட்டோ அனுப்பனுமா....

அனைத்துலக அகிலாண்ட நாயகன் ஜே.கே.ர் ரசிகர்கள் சார்பாக இதை வன்மையாக கண்டிப்பதோடு அதிஷா வீட்டு பாத்ரூம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தபடும் என்பதை தெரிவித்துகொள்கிறோம்.

பரிசல்காரன் said...

Where is Rapp, Karki.. and others?

Anonymous said...

பெருவாரியான ரசிகர்கள் மற்றும் மன்ற நிர்வாகிகளுக்கு மன உளைச்சல் ஏற்படுத்திய காரணத்திற்காக, உங்கள் மீது மான(?) நஷ்ட வழக்குப் போடப்படும்.

விளைவுகளைச் சந்திக்கத் தயாராகுங்கள்.

Anonymous said...

நல்ல காமெடி. நீங்கள் சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு எழுதி இருந்தாலும் படிப்பவர்கள் சிரித்து கொண்டுதான் படிப்பார்கள். வாழ்த்துக்கள்.

மணிகண்டன் said...

என்னோட வைப் வவா சங்கத்துல இந்த பதிவ ரொம்ப விரும்பி படிச்சுட்டு சொன்னாங்க. ஆனாலும் அந்த பதிவுல இருந்த அகிலாண்ட நாயகன் படம் தான் சூப்பர்.

வால்பையன் said...

தருதல என்பதன் சரியான அர்த்தம் என்ன?
எங்கள் ஊர் பக்கம் திட்ட மட்டுமே அதை பயன்படுத்துகிறார்கள்,
அப்படியானால் நீங்கள் எங்கள் தலைவரை திட்டுகிறீர்களா?

ராப், ச்சின்னபையன், கார்க்கி எல்லோரும் ஓடியாங்க!

வால்பையன் said...

// அவரை பின்பற்றி இன்றைய தமிழக இளைஞர்களும் கண்களில் கண்ணாடியும் கலர்கலராய் ஜீன்சும் அணிந்துகொண்டு//

கொஞ்சம் காலத்தை திரும்பி பார்க்க வேண்டுகிறேன்.
எம்.ஜி.ஆருகும் இப்படி தான் அரசியல் வாழ்க்கை ஆரம்பமானது.

புரட்சி தலைவரின் உண்மையான வாரிசான எங்கள் அண்ணன் ஜே.கே.ஆரை வஞ்ச புகழ்ச்சி செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன்

வால்பையன் said...

//முதலில் உடனடியாக ஏதாவது ஒரு உப்புமா கட்சியிலாவது சேர்ந்து கொண்டு அதில் உறுப்பினர் ஆகி விடுங்கள் .//

அப்படியானால் அண்ணன் ஜே.கே.ஆர் இப்போது ஆதரிக்கும் கட்சி உப்புமா கட்சியா?

வால்பையன் said...

இது மூள்பதிவு தானே!

வால்பையன் said...

//நிறைய ஏழைகளுக்கு உதவி செய்யவில்லையென்றாலும் ஏழைகளோடு நின்று போட்டோ எடுத்து கொள்ளவும்
//

அதாவது இன்றைய அர்சியல்வாதிகளை அப்படியே காப்பி அடிக்க வேண்டும் சரியா?

வால்பையன் said...

ஆமாம், இது வா.வா சங்கத்தில் எழுதியது

Unknown said...

நன்றி விஜய்ஆனந்த்

நன்றி அனானி

நன்றி ஜெ பார் ஜெகதீசன்

Unknown said...

தமிழ்ப்பிரியனின் என் மீதான தனிமனித தாக்குதலை கண்டித்து நானும் கண்ணடிக்கிறேன்..

Unknown said...

நீங்களும் ஆட்டோல வருவீங்களா
ராஜேஷ்

வரதுக்குமுன்னால சொல்லுங்க சமைக்கணும்ல

Unknown said...

வாங்க பரிசல் அண்ணே..

ராப்,கார்க்கிலாம் இங்கிட்டு வரமாட்டாங்க... நான் யாருக்கும் பின்னூட்டம் போடறதில்லல!

Unknown said...

வேலன் அண்ணே ரெடியாகிட்டோம் கெளப்புங்கள்

Unknown said...

நன்றி மோகனச்சாரல்..

நன்றி மணிகண்டன்.. பாருங்க தாய்மார்கள் ஆதரவுலாம் நமக்கு இருக்கு..

Unknown said...

வாங்க வால்

தருதல என்பது கோவை வட்டார வழக்கில் திட்டுதான்

நான் அப்படி பாடவில்லை..

அவர் தரும்தலைவர்னு சுறுக்கமா பாடினேன்..

நன்றி

Anonymous said...

sir very superb

Karthik said...

:))

Sanjai Gandhi said...

//தருதல..தருதல தருதல தருதல...//

அசீத்து ரசிகர் மன்றம் சார்பாக இதை மிக வன்மையாக கண்டிக்கிறென். :))

ஆ.சுதா said...

ஒரு தனிநபரை நேருக்கு நேரா குறிப்பிட்டு இப்படி '______' எழுதரது கொஞ்சம் ஓவரா இல்லியா?..
இருந்தாலு.....ம் இது நல்லாத்தா இருக்கு.

அவரும் இதபத்தி ஒன்னும் வருத்தப்பட மாட்டாரு ஏன்னா 'இதனாலும் பாப்புலர் ஆகலாம் இல்லியா'

Subha said...

:))...what a man:))..
http://entamilulagam.blogspot.com

ஊர்சுற்றி said...

//இப்பதிவு முழுக்க முழுக்க சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு எழுதியது . நீங்கள் இதை படிக்கும்போது சிரித்திருந்தால்... .//

இதப்படிக்கும் போது எப்படி சிரிக்காம இருக்க முடியும்? :)

selventhiran said...

ரித்தீஷ். எத்தனையோ நடிகர்களைத் தந்திருக்கும் கோடம்பாக்கத்திற்கு ஒரு புதிய வரவு. விஜய டி. ராஜேந்தர் என்ற பெயரை தமிழ் ஊடகங்கள் எப்படி மிகவும் கேலிக்குறியதாக்கி இருக்கிறார்களோ அதைப்போலவே கேலிக்குறியப் பொருளாக்கப்பட்ட நாயகன்.

ஒரு சாமான்யனின் கதையான 'கானல் நீர்' என்ற கதையில் யதார்த்தமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்த இவரை தமிழ் சினிமா ரசிகர்களும், விமர்சகர்களும், ஊடகங்களும் முற்றாகத் தவிர்த்தனர். அப்படம் பெரும் தோல்வியைத் தழுவியது. பெரும் தோல்விகளுக்குப் பின் காணாமல் போய்விட்ட நடிகர்கள் எத்தனையோ பேரை கோடம்பாக்கம் கண்டிருக்கிறது. ஆனால் தன்னை ஒரு பராக்கிரமசாலியாக முன்னிறுத்தி பஞ்ச் டயலாக்குகளோடும் பாடல்களோடும் அதிரடி சண்டைக்காட்சிகளோடும் அவர் நடித்து வெளியான நாயகன் எனும் மசாலா படம் பெரு வெற்றி பெற்றிருக்கிறது.
இப்படத்திற்கு பூஜை போட்ட நாளிழிலிருந்தே ஜே. கே. ரித்தீஷ் மீதான மீடியாக்களின் கிண்டல் துவங்கி விட்டது. அவர் மவுண்ட் ரோட்டில் ஹோர்டிங் வைத்தது, எளியோர்க்கு உதவியது, நமக்கு நாமே மாமே மன்றங்கள் அமைத்தது, சினிமாத்துறையின் உள் விவகாரங்களில் தலையிட்டது, அவ்விவகாரத்தில் பாரதிராஜாவிடம் மன்னிப்புக் கேட்டது, மூக்கை அறுவைச் சிகிட்சை செய்தது என அவரது ஒவ்வொரு செய்கைகளும் கேலி செய்யப்பட்டது. அந்தப் பெயரைக் கேட்டாலே மக்கள் சிரிக்கும் அளவிற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அலைகள் வந்து அடித்துவிட்டுப் போகட்டுமே... பாறைகள் என்ன பதிலா சொல்கிறது என அவரும் பேசாதிருந்து விட்டார்.

சற்று அழகற்ற, மாநிறம் கொண்ட, கொஞ்சம் குள்ளமாக, பருத்த மூக்கு உடையவன் ஹீரோ ஆகக் கூடாது என்று இருக்கிறதா? அப்படியென்றால் அழகு, நல்ல உடற்கட்டு, சிவந்த நிறம், நடனம் ஆடும் திறன் இருப்பவன் மட்டும்தான் ஹீரோ ஆகவேண்டுமா. நிஜ வாழ்க்கையில் கதாபாத்திரங்கள் இப்படித்தான் இருக்கிறதா? அஜீத்தும் சூர்யாவும் ஏதாவது நலத்திட்டங்கள் செய்தால் புகழும் மீடியா, ஜே. கே. ரித்தீஷ்
யாருக்காவது உதவினால் மட்டும் 'ஸ்டண்ட்' , 'பப்ளிசிட்டி' என்று இகழ்வது ஏன்? த்ரிஷாவின் நற்பணி மன்றம் தலைப்புச் செய்தி ஆகிறது ஆனால் ஜே. கே. ரித்தீஷீக்கு ரசிகர் மன்றம் என்றால் ஏன் காமெடியாக்குகிறீர்கள்?

நடனம் ஆடத்தெரியாத பாக்கியராஜ் வெள்ளிவிழா நாயகன் ஆகவில்லையா? கரடு முரடானத் தோற்றம் கொண்ட ராஜ்கிரணின் வீட்டு வாசலில் தயாரிப்பாளர்கள் பணப்பெட்டிகளோடு தவம் கிடந்ததை இவர்கள் அறியாதவர்களா? எலும்புத் தோலுமான தனுஷ் கோடிகளில் சம்பளம் வாங்கும் ஹீரோவானது தெரியாதா? ஜே. கே. ரித்தீஷை ஊடகங்கள் விமர்சிப்பது கொடிய நுண்ணரசியல். நாம் தமிழர்கள். நமது பூர்வீக நிறமும் அடையாளமும் கொண்டவர் ஜே. கே. ரித்தீஷ். அவரைக் கேலி செய்வது மொத்த அழகற்றவர்களையும் கேலி செய்யும் நிற அரசியல். ஜே. கே. ரித்தீஷ் மீதானக் கேலியை அனுமதிப்பதும், அவைகளைப் படித்து நாம் சிரிப்பதும் நம்மை நாமே கேலி செய்வது போலத்தான். அழகானவன் தான் ஹீரோ என்றால் ஐரோப்பியனை அழைத்து வாருங்கள். நம் எல்லோரையும் விட அவர்கள்தான் சிகப்பு.
- பிரதியங்காரக மாசானமுத்து
வங்கி கணக்கு எண்: 000987654321 / ஐசிஐசிஐ வங்கி / ராம்நகர் கிளை

Sanjai Gandhi said...

//அழகானவன் தான் ஹீரோ என்றால் ஐரோப்பியனை அழைத்து வாருங்கள். நம் எல்லோரையும் விட அவர்கள்தான் சிகப்பு.//

செல்வேந்திரன், உங்க விளக்கம் எல்லாம் ரொம்ப நல்லா தான் இருந்தது. ஆனால் அழகு என்றால் அதிக சிவப்பு தான் என்று சொல்லி ஒரு போடு போட்டிருகிங்க பாருங்க. சாரி சார்.. இதை தவிர்த்திருந்தால் உங்கள் கருத்து சீரியசாய் எடுத்துக் கொள்ள வேண்டியதே..

உடல் மற்றும் முக அமைப்பை நிறத்தை வைத்து அழகை எடைபோடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது தான்.

Unknown said...

வாங்க செல்வேந்திரன் நல்லா சொன்னீங்க

நான் கூட இந்த பதிவ சீரியஸாதான் எழுதினேன்.. அதப்பாத்து ஊரே சிரிக்குது..

ஏதோ எனக்காகவும் ரித்திஷுக்காகவும் பேச நீங்க ஒருத்தராவது இருக்கீங்களே

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இப்போதுதான் இந்தப் பதிவைப் படித்தேன். செல்வேந்திரன் சொல்வதை ஆமோதிக்கிறேன். பைல்ஸ் வந்த குரங்கு, உராங்குட்டான், யோக்கியதை - இல்லையில்லை அழகு தெரிந்துவிடும் என்பதெல்லாம் நகைச்சுவையாக இல்லை. புண்படுத்துவதாகவே இருக்கிறது. :(

Anonymous said...

இப்போதுதான் இந்தப் பதிவைப் படித்தேன். செல்வேந்திரன் சொல்வதை ஆமோதிக்கிறேன். பைல்ஸ் வந்த குரங்கு, உராங்குட்டான், யோக்கியதை - இல்லையில்லை அழகு தெரிந்துவிடும் என்பதெல்லாம் நகைச்சுவையாக இல்லை. புண்படுத்துவதாகவே இருக்கிறது. :(

aamaa kurangukkum urang utanukkum remba vethanai tharum enpathal naanum kandikkureen. ab

Anonymous said...

this is my first visit to your blog.
i think, i will be a regular visiter of your blog.

nice post.keep it up this style.

vijay [no..no..ilayathalapathi illai. saadha vijaythaan]

Anonymous said...

ஆக ரித்திஷ் மாதிரி தமிழ்நாட்டு ஆசாமிகள்லாம் தமிழ் சினிமாவ நினைக்கப்படாது! கேரளா ஆர்யா, வட இந்திய மாதவன் இல்லன்னா மற்ற பிராமன பசங்க, இவங்கல்லாம்தான் தமிழ் ஹீரோவாகனும் அதுதான் நியாயம். ரசினி எப்பிடி உதறுனலும் அது ஸ்டைலு, ரித்திஷ் உதறுனா டொமறு. காதல் காட்சிகளை பொறுத்தவரை தொடக்கப்படங்களில் இளையதளபதி(இயக்குனர் மகன்), சூர்யா(நடிகர் மகன்) என்ன வாழ்ந்தாங்க? இந்த ஆள் ரித்திஷ் ஒரு அரசியல்வாதி பேரன், தமிழ்நாட்டுக்காரன். அவர் நடிப்பு லட்சணதை பேசுங்க, நியாயம். அந்தாள் பணக்காரனுங்க செல்வேந்திரன், அவன் ஏழைகளுக்கு காசு கொடுத்து பேர் வாங்க முயசி செய்றான், அது அவன் சாமார்த்தியம். இங்க எந்த நடிகன் தொடக்க காலங்கள்ல சக தொழில்நுட்ப கலைஞகர்கள் சங்கங்களுக்கு உதவி செஞ்சான்? சம்பாரிச்சதுக்குப்பறமாவது செஞ்சானா? உதவி செய்யறத பாராட்டலாமே! அத விட்டுட்டு டீ கடைல வெலை செஞ்சான், எவன் ஊட்லர்ந்தோ சூட்கேஸ் திருடிட்டு வந்துட்டான்...... ஏன், ஏன் இந்த கொலைவெறி? நண்டுகயா நாமெல்லாம் தமிழ் நண்டுக, அடுத்த மாநிலத்தானுக்கு உயிறு, ஆட்சி எல்லாம் கொடுப்போம்! நம்மளுன்னா உடனே ஒரு ஆப்பு ரெடி பண்ண வேண்டியதுதான்! தமிழ்நாட்டுல நடிகையே இல்லைம்பனுங்க, ஆனா ஒரே ஒரு திரிஷா மாமி எங்கிருந்தோ வந்துரும்! தமிழ்ல பாடகியே இல்லைம்பானுங்க, ஆனா எங்கிருந்தோ ஒரு அனுராதா ஷிராம் மாமி வந்துரும். உங்க விகடன் தொடங்கி எல்லா பத்திரிக்கையும் இத நியாயப்படுத்துவீங்க! நடத்துங்க, நடத்துங்க!

Anonymous said...

ஆக ரித்திஷ் மாதிரி தமிழ்நாட்டு ஆசாமிகள்லாம் தமிழ் சினிமாவ நினைக்கப்படாது! கேரளா ஆர்யா, வட இந்திய மாதவன் இல்லன்னா மற்ற பிராமன பசங்க, இவங்கல்லாம்தான் தமிழ் ஹீரோவாகனும் அதுதான் நியாயம். ரசினி எப்பிடி உதறுனலும் அது ஸ்டைலு, ரித்திஷ் உதறுனா டொமறு. காதல் காட்சிகளை பொறுத்தவரை தொடக்கப்படங்களில் இளையதளபதி(இயக்குனர் மகன்), சூர்யா(நடிகர் மகன்) என்ன வாழ்ந்தாங்க? இந்த ஆள் ரித்திஷ் ஒரு அரசியல்வாதி பேரன், தமிழ்நாட்டுக்காரன். அவர் நடிப்பு லட்சணதை பேசுங்க, நியாயம். அந்தாள் பணக்காரனுங்க ஆதிஷா, அவன் ஏழைகளுக்கு காசு கொடுத்து பேர் வாங்க முயசி செய்றான், அது அவன் சாமார்த்தியம். இங்க எந்த நடிகன் தொடக்க காலங்கள்ல சக தொழில்நுட்ப கலைஞகர்கள் சங்கங்களுக்கு உதவி செஞ்சான்? சம்பாரிச்சதுக்குப்பறமாவது செஞ்சானா? உதவி செய்யறத பாராட்டலாமே! அத விட்டுட்டு டீ கடைல வெலை செஞ்சான், எவன் ஊட்லர்ந்தோ சூட்கேஸ் திருடிட்டு வந்துட்டான்...... ஏன், ஏன் இந்த கொலைவெறி? நண்டுகயா நாமெல்லாம் தமிழ் நண்டுக, அடுத்த மாநிலத்தானுக்கு உயிறு, ஆட்சி எல்லாம் கொடுப்போம்! நம்மளுன்னா உடனே ஒரு ஆப்பு ரெடி பண்ண வேண்டியதுதான்! தமிழ்நாட்டுல நடிகையே இல்லைம்பனுங்க, ஆனா ஒரே ஒரு திரிஷா மாமி எங்கிருந்தோ வந்துரும்! தமிழ்ல பாடகியே இல்லைம்பானுங்க, ஆனா எங்கிருந்தோ ஒரு அனுராதா ஷிராம் மாமி வந்துரும். உங்க விகடன் தொடங்கி எல்லா பத்திரிக்கையும் இத நியாயப்படுத்துவீங்க! நடத்துங்க, நடத்துங்க!

Anonymous said...

திரு. வினோத் அவர்களுக்கு, அருகருகே உங்கள் வலைப்பக்கதையும், திரு. செல்வேந்திரன் பக்கத்தையும் திறந்து வைதிருந்ததாலும், உங்கள் ரித்திஷ் பதிவு அதிக வருத்தத்தை ஏற்படுத்தியதாலும், வேதனையொடு என் பதிவை உள்ளிடுகையில், அது திரு. செல்வேந்திரனுக்கானது என்று பதிந்து விட்டேன். தவறு! அது முழுமையாக உங்களுக்கானதே! தயவு செய்து தமிழர்களாய் வாயில் வந்தபடியெல்லாம் வசைபாடும் முன் சிந்தியுங்கள். இசைவாயின், பதிப்பியுங்கள்!!

Unknown said...

அனானி நண்பருக்கு..

நீங்கள் எதிர்மறை கருத்து தெரிவித்தாலும் பெயரோடு தெரிவித்திருந்தால் மகிழ்ந்திருப்பேன்.

தங்களது கருத்துக்கு மிக்க நன்றி.

ரித்திஷ்குமாரால் உங்களுக்கு தமிழ்நாட்டு நடிகர்கள் மேல் ஏற்பட்ட அளவிட இயலாத அன்புக்கு என் பதிவு காரணமாய் இருந்ததை நினைத்து மகிழ்ச்சியே..

Anonymous said...

Very Interesting!
Thank You!