17 December 2008

ஞாநியின் அஜாலும் குஜாலும்....!


( ஞாநி வரைந்த ஓவியம் )

அஜால் குஜால் தெரியும்.... அடிதடியோடு குலாவுதல் என்றால் என்னவென்று தெரியுமா? .


அது இன்னாங்கடா அடிதடியோடு குலவுதலென்று கேட்பவர்கள் நேற்று கிழக்கு பதிப்பகத்தில் நடந்த மொட்டைமாடிக்கூட்டத்திற்கு வந்திருந்தால் புரிந்திருக்கும் . சமீபகாலமாக அடிதடியோடு குலவுதல் போன்ற காரியங்களுக்கு பத்ரி தனது மொட்டைமாடியை நம்மை போன்ற வெகுஜன வாசகர்களுக்கு தாரைவார்த்திருக்கிறார் . சில மாதங்களுக்கு முன் சாருநிவேதிதாவை ஒரு மொட்டைமாடிப் பொதுக்கூட்டத்துக்கு அழைத்திருந்தார் . அவரும் அக்கூட்டத்தில் கலந்துகொண்டு வலைப்பதிவர்களின் டுபுரித்தனத்தை கட்டுடைத்து சர்ச்சையை கிளப்பியிருந்தது அனைவரும் அறிந்ததே . அதன்பிறகு அந்த பிரச்சனையில் வலையுலகம் பற்றியெறியவில்லை என்றாலும் சாரு சில காலத்திற்காவது தமிழ்மண சூடான இடுகைகளில் இடம்பிடித்திருந்தார் . ( இப்போதும் பிடிக்கிறார் அது வேறு கதா ) .


நேற்று கிழக்குப்பதிப்பகத்தில் நடந்த மொட்டைமாடிக்கூட்டத்தில் சர்ச்சைநாயகர் ஊருக்கே ஓ போடும் மூத்தபத்திரிக்கையாளர் ஞாநி கலந்துகொண்டார் . இக்கூட்டம் மும்பை கலவரம் குறித்த ஞாநியின் கருத்துக்களை அறியும் வண்ணம் ஏற்பாடாகியிருந்தது.
ஞாநி கூட்டத்தின் ஆரம்பத்திலேயே மும்பை கலவரம் குறித்து தான் தனது ஓ பக்கங்கள் மற்றும் தனது ஆங்கில இணையப்பக்கத்திலும் எழுதியிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார் . அதற்கு மேல் சொல்ல எதுவும் இல்லை என்றும் கூறினார். இருந்தாலும் டிவி ஊடகங்களின் பொறுப்பினைமை குறித்தும் பேசினார் . இது தவிர பல ஊடகங்கள் பெரிதாக கண்டுகொள்ளாத ஆனால் மிக முக்கியமான சில விடயங்களையும் பகிர்ந்து கொண்டார்.

மும்பை கலவரத்தின் போது சத்ரபதி சிவாஜி ரயில்நிலையத்தில் தீவிரவாதிகள் புகுந்து கொண்டு தாக்குதல் நடத்தியபோது , அவர்கள் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த கேட்டின் வழியே உள்ளே நுழையும் மெட்ரோ ரயில் பயணிகளை ரயில்நிலைய அறிவிப்பாளர் சாதுரியமாக அந்த வழி அடைக்கப்பட்டதாக கூறி திருப்பி விட்டதால் பெருமளவு சாவு தடுக்கப்பட்டது . இதன்மூலாம் தீவிரவாதிகள் தாக்குதல் என்று கூறி தேவையில்லாத பரபரப்பை தவிர்த்தார் . அதைக்குறித்து எந்த தொ.கா ஊடகமும் பேசவில்லை என்றும் கூறினார் . அதற்கான காரணமாக ஊடகங்களின் பார்வையாளர் யார் என்பதும் மிக முக்கியமான ஒன்றாகவும் தெரிவித்தார் .


இதைத்தவிர கடைசியாக மாட்டிக்கொண்ட தீவிரவாதியை பிடித்தபோது , கையில் எந்த ஆயுதமும் இல்லாமல் தன் மார்பால் தீவிரவாதியின் கையிலிருந்து துப்பாக்கியை பிடித்துக்கொண்டு தனது இன்னுயிரை நீத்த ஒரு சப்இன்ஸ்பெக்டர் குறித்தும் கூறினார் . தாஜ் மற்றும் டாடா ஹோட்டல்கள் குறித்த விபரங்கள் போலீஸைவிட தீவிரவாதிகளுக்கு நன்றாகத் தெரிந்திருந்ததே , சில கமாண்டோ மற்றும் போலீஸ்காரர்கள் இறந்துபோக காரணமாயிருந்தது என்றும் தெரிவித்தார்.


பேச்சு மும்பை கலவரங்களில் இருந்து மெதுவாக தீவிரவாதம் குறித்த விவாதத்திற்கு நகர்ந்தது . கூட்டத்திலிருந்த ஒருவர் முஸ்லீம் தீவிரவாதம் குறித்து கேள்வியெழுப்பியபோது , ஞாநி இந்தியாவில் முஸ்லீம் தீவிரவாதம் காஷ்மீர் தவிர மற்ற இடங்களில் பரவ முக்கிய காரணம் இந்துக்களின் தீவிரவாதமும் அடக்குமுறையுமே ஆகும் . அது பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னேதான் ஆரம்பித்தது . அதற்கு முன் இந்தியாவில் எங்குமே அல் என்னும் முன்பெயருடன் (அல்உம்மா போல ) எந்த அமைப்பும் இருந்ததில்லை என்றும் கூறினார் . ஒரு இந்துத்துவா நண்பர் மிக ஆவேசமாக இதை மறுத்தார் . டோண்டுவும் இதை மறுத்தார் . காஷ்மீர் தீவிரவாதமே இதற்கு காரணமென்றும் கருத்து தெரிவித்தனர் அவர்கள் இருவரும் .


ஞாநி இதற்கு பதிலளிக்கையில் காஷ்மீர் தீவிரவாத அமைப்புகள் முழுக்க முஸ்லீம் அமைப்புகள் அல்ல என்றும் அவர்கள் குண்டு வைத்தால் கூட தங்கள் மாநிலத்திற்குள்ளேயே வைத்துகொள்வார்கள் என்றும் கூறினார் . பாபர்மசூதி இடிக்கப்பட்டபோது நரசிம்மராவ்தானே ஆட்சியில் இருந்தார் நீங்கள் ஏன் அவரை குறை சொல்வதில்லை என ஒரு கேள்வி எழுப்பப்பட்டது . அதற்கு ஞாநி அவர்தான் இறந்துவிட்டாரே அதனால் கேட்பதில்லை என ஒரே போடாக போட்டார் .


இந்துத்துவா நண்பர் ஞாநியை நீங்கள் ஒரு கம்யூனிஸ்ட் என்றும் சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் கம்யூனிஸ்ட்டுக்குத்தான் வாக்களிப்பேன் என்றும் கூறியதாக குற்றம்சாட்டினார் . ஞாநி இதற்கு அந்த கூட்டம் சென்றவருடம் நடந்தது . அது இந்திய தேர்தல்கள் குறித்த ஒரு கூட்டம். திருவல்லிக்கேணியில் இன்னார் (பெயர் ஞாயபகம் இல்லை ) கலந்து கொண்ட கூட்டத்தில் கூறியது . அதுவும் நான் கம்யூனிஸ்ட்களுக்கு வாக்களிக்க நினைத்தாலும் தான் ஓட்டளிக்கும் தொகுதியில் கம்யூனிஸ்ட்கள் கூட்டணி வைக்கும் திமுகவோ அல்லது அதிமுக உறுப்பினருக்கே ஓட்டளிக்க நேர்கிறது என்றுதான் பேசியதாக கூறினார் . அது போல தான் ஒரு கம்யூனிஸ்ட் அல்ல என்றும் தான் ஒரு மனிதன் அவ்வளவே , கம்யூனிஸ்ட்கள் குறித்து அவர் தனது கட்டுரைகளில் நிறைய முறை விமர்சித்து எழுதியிருக்கிறேன் என்றும் தெரிவித்தார்.


கூட்டத்தில் ஒருவர் நீங்கள் ஏன் ஏழைபிராமணர்கள் குறித்து எழுதுவதில்லை என ஒரு கேள்வியை எழுப்பினார் . அதற்கு பதிலளிக்கையில் தான் ஏழை பிராமணர்கள் குறித்து 1978-79 வாக்கில் முதன்முறையாக பிராமணர்கள் சங்கம் துவக்கப்பட்டது . அப்போது அதுகுறித்து எழுதுகையில் இச்சங்கம் எந்த பிராமணருக்காக போராட இருப்பதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது என தான் கேள்விகேட்டு எழுதியிருந்தமையை தெரிவித்தார் . அது நிச்சயம் இன்றளவும் சர்ச்சைக்குரிய ஒரு கேள்விதான் . தான் ஜாதி என்று பாராமல் எல்லா ஏழைமக்களுக்காவுமே எழுதுகிறேன் என்றும் தெரிவித்தார் .


உங்களை ஒரு பார்ப்பனனாக சில சமயம் மீடியாக்களில் சித்தரிக்கிறார்களே என்று ஒருவர் கேட்டபோது , தான் தற்சமயம் எந்த சாதியையும் மதத்தையும் பின்பற்றுவதில்லை என்றும் தனது எல்லா சான்றிதழ்களிலும் நோ காஸ்ட் மற்றும் நோ ரிலிஜியன் என்றே உள்ளது எனக்கூறினார் . தனது மகனது பள்ளிக்காலத்திலேயே அவனது டி.சியிலும் தான் அவ்வாரு செய்துவிட்டதாகவும் அதற்கான வழிமுறைகளுக்கு இந்திய அரசியல்சட்டத்தில் இடமிருப்பதாகவும் தெரிவித்தார் . அதனால் தான் எந்த சார்பும் அற்றவன் என்றும் தெரிவித்தார் .


இதுதவிர அவரது ஒற்றைரீல் இயக்கத்தின் பிரச்சனைகள் , தீம்தரிகிடவின் தோற்றமும் மறைவும் , ஓ பக்கங்களை ஆவியில் இருந்து குமுதத்தில் எழுத துவங்கியது , இந்தியன் எக்ஸ்பிரஸ் உடனான இவரது பிரச்சனை என இன்னும் பல இதுபோன்ற அதிரடியான கேள்விகளால் அவரை தாக்கினாலும் சளைக்காமல் கிட்டத்தட்ட இரண்டரைமணிநேரம் விடாமல் தண்ணீர் கூட குடிக்காமல் கணீர் கணீரென பேசிக்கொண்டிருந்தார் (மிக நல்ல குரல் ). அவரது ஞாயபகசக்தியும் ஸ்டாமினாவும் வியக்கவைத்தது . பல அரிய தகவல்களையும் தனது விரல்நுனியில் வைத்திருந்து உடனுக்குடன் தெரிவித்தது வியக்கவைத்தது .


அவரை கோபமூட்டும் கேள்விகள் எழுப்பினாலும் சிரித்த முகத்துடனேயே எல்லா கேள்விகளுக்கும் சுவையாக பதிலளித்தார். கூட்டத்தில் பெரும்பாலான கேள்விகளை டோண்டு ஒருவரே கேட்டதால் பலருக்கும் கேள்வி கேட்க நேரமில்லாமல் போனது . டோண்டு அடுத்த முறையாவது அளவான கேள்விகள் கேட்டால் நன்றாக இருக்கும் . மற்ற பார்வையாளர்களுக்கும் வாய்ப்பளிக்கலாம் இல்லையா . டோண்டு தவிர , லக்கிலுக் , அக்னிப்பார்வை , ஹரன்பிரன்னா போன்ற சில தெரிந்த முகங்களும் சுவாரஸ்யமான கேள்விகளை எழுப்பி பீதியை கிளப்பினர் .


பக்கத்தில் அமர்ந்திருந்த ஜிகினா சட்டை நண்பர் திமுக குறித்து ஞாநி ஏதாவது குறை சொல்வார் அவரை ஒரு பிடிபிடித்துவிடாலமென கழுகு போல காத்திருந்தார் . கடைசிவரை திமுக குறித்தும் கருணாநிதி குறித்தும் அதிகம் பேசாமல் பக்கத்து சீட்டு நண்பரை கடுப்படித்தார் . இருந்தும் அவரையும் மீறி இடையில் சன்டிவியின் செய்திகள் பல்டி குறித்து ஒரு குட்டுவைத்தது , சந்து கேப்பில் சைக்கிள் ஓட்டியது போலிருந்தது .


கொஞ்சம் மீறியிருந்தாலும் அடிதடிகள் நடந்திருக்க வாய்ப்புள்ள சிக்கலான பிரச்சனைகள் குறித்து , அதுபோன்ற அஜால்குஜால்கள் எதும் நடக்காமல் மிக பொறுப்பாக பதிலளித்த ஞாநிக்கும் இக்கூட்டத்திற்கு இடம் மற்றும் ஏற்பாடுகள் செய்துகொடுத்த பத்ரிக்கும் நன்றிகள் பல. ...


வரும் நாட்களில் கிழக்குப்பதிப்பகத்தில் இது போல நிறைய கூட்டங்கள் ஏற்பாடு செய்தால் என்னைப்போன்ற இளைஞர்களுக்கு மிகப்பயனுள்ளதாக இருக்கும் .
இக்கூட்டத்தின் முழு ஓலிப்பதிவு இங்கே

34 comments:

அர டிக்கெட்டு ! said...

யார் அந்த ஜிகினா!!!!?????

அர டிக்கெட்டு ! said...

செகன்ட் டைம் டூடே....மீ த பர்ஸ்ட்!!!

அத்திரி said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...

அத்திரி அதுகுறித்தும் ஞாநி தன் கருத்தை கூட்டத்திலேயே பதிவுசெய்திருந்தார்..

அதற்குமுன் கலவரங்கள் மட்டுமே இருந்தன ஆனால் பாபர் மசூதி இடிப்புக்கு பின்தான் தீவிரவாதம் உருவானது என்று.

அத்திரி said...

பெரிய ஆளுங்க கூட எல்லாம் கூட்டம் போட்டு பேசி பெரிய ஆளாயிட்ட நண்பா

சரவணகுமரன் said...

நல்ல கவரேஜ்

மணிகண்டன் said...

கம்யூனிஸ்ட் தலைவர் உயிர் நீத்த கமாண்டோ குடும்பத்த நாயின்னு திட்டனத பத்தி எதாவது சொன்னாரா ?

மணிகண்டன் said...

பாபர் மசூதி இடிப்புனால ஏன் தீவிரவாதம் உருவானதுன்னு சொன்னாரா ?

Anonymous said...

இந்த ஞானசூனியம் ஞானி ஒரு தெளிவான பார்வையோ, நிலைத்தன்மையோ இல்லாத ஒரு வெறும்பயல். ஏதாவது பரபரப்பாக எழுதி காசு பார்ப்பது தான் ஒரே குறிக்கோள்.

தனது இருப்பை தக்க வைத்துக்கொள்வதர்க்காக நேரெதிர் கருத்துகளையோ அல்லது மனிதர்களையோ தாக்கியோ ஆதரித்தோ அவ்வப்போது பிழைப்பு நடத்தும் ஒரு பச்சோந்தி.

அப்துல் கலாமையே குறை கூறி எழுதி அதை விற்று ஈனப்பிழைப்பு நடத்தும் ஒரு நாதாரி.

வினோதன் said...

நல்ல வர்ணனை,
\\ ஜிகினா சட்டை \\
லக்கி லுக்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லா கவர் செய்திருக்கீங்க அதிஷா.

மணிகண்டன் said...

தமிழன்பன் - நீங்க ஒரு நாதாரி என்று மரியாதையோடு தெரிவித்து கொள்கிறேன்.

Unknown said...

ஐ வாண்டு நோ ஹூ ஈஸ் தட் ஜிகினா சட்டை ?????

Unknown said...

\\ கம்யூனிஸ்ட் தலைவர் உயிர் நீத்த கமாண்டோ குடும்பத்த நாயின்னு திட்டனத பத்தி எதாவது சொன்னாரா ? \\

அதற்குண்டான காரணத்தைபத்தி ( உண்மையான)கூட சொன்னாரு

அதுதவிர கூட்டத்தில் ஒருத்தர்... அச்சுதானந்தன்கிட்ட கேள்விகேட்டதே.. எந்த நாயும் வரவேண்டாம்னு அவரு சொன்னாரேனுதான் கேட்டிருக்காரு

Anonymous said...

//அப்துல் கலாமையே குறை கூறி எழுதி...//
என்பதில் வெளிப்படுவது அப்பாவித்தனமாகவும் இருக்கலாம்; தந்திரத்தனமாகவும் இருக்கலாம்.

ஞாநி தீவிரவாதம் பற்றி குமுதத்தில் எழுதியிருந்த கட்டுரை மிகச் சரியானது.

அக்னி பார்வை said...

சூப்பர் கவரேஜ் அதிஷா...அங்கிருந்த விடியோ கேமர இவவ்ளவு துள்ளியமாக கவர் செய்திருக்குமா என்று தெரியவில்லை.....

யரு அந்த ஜிகினா? ..உங்கள கவினிச்சேன் உங பக்கத்துல இருந்த அவரை மிஸ் பன்னிட்டேனே!!

அர டிக்கெட்டு ! said...
This comment has been removed by a blog administrator.
அர டிக்கெட்டு ! said...

:-)

Unknown said...

அரடிக்கெட்டு , அத்திரி மற்றும் மணிகண்டன் பதிவின் நோக்கத்தில் இருந்து விலகி வேறு விவாதத்திற்கு சில பின்னூட்டங்கள் இட்டுச்செல்வதால் அவற்றை நீக்க வேண்டிய கட்டாயம்.

புரிந்துணர்வோடு அதை ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன்

அத்திரி said...

//புரிந்துணர்வோடு அதை ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன்//


அப்படியே நீங்க கலைஞர் மாதிரி, அவருதான் ஏகப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுக்கிட்டு இருக்காரே

மணிகண்டன் said...

***
புரிந்துணர்வோடு அதை ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன்
****

:)-

narsim said...

அங்கு வராத குறையை உங்கள் பதிவு தீர்த்துவிட்டது அதிஷா.. ஆனாலும் ஒரு குறுஞ்செய்தி ஞாபகப்படுத்துதல் செய்திருந்தா வந்திருப்பேனோன்னு தோணுது.. ஜஸ்ட் மிஸ்ஸ்ஸ்

புருனோ Bruno said...

//யார் அந்த ஜிகினா!!!!?????//

தமிழ் வலையுலகின் சூப்பர் ஸ்டார் தான்

Anonymous said...

தமிழன்பன் said...
இந்த ஞானசூனியம் ஞானி ஒரு தெளிவான பார்வையோ, நிலைத்தன்மையோ இல்லாத ஒரு வெறும்பயல். ஏதாவது பரபரப்பாக எழுதி காசு பார்ப்பது தான் ஒரே குறிக்கோள்.

தனது இருப்பை தக்க வைத்துக்கொள்வதர்க்காக நேரெதிர் கருத்துகளையோ அல்லது மனிதர்களையோ தாக்கியோ ஆதரித்தோ அவ்வப்போது பிழைப்பு நடத்தும் ஒரு பச்சோந்தி.

அப்துல் கலாமையே குறை கூறி எழுதி அதை விற்று ஈனப்பிழைப்பு நடத்தும் ஒரு நாதாரி.
..............

ஞாநியை விமர்சிப்பதற்கு தமிழன்பனுக்கு உரிமை இருப்பதுபோல், அப்துல் கலாமை விமர்சிப்பதற்கு ஞாநிக்கு மட்டுமல்ல, அனைவருக்குமை உரிமை இருக்கிறது.

Joe said...

//அவரை கோபமூட்டும் கேள்விகள் எழுப்பினாலும் சிரித்த முகத்துடனேயே எல்லா கேள்விகளுக்கும் சுவையாக பதிலளித்தார்.//

இது உண்மையிலேயே பாராட்டுக்குரிய விஷயம்.

Anonymous said...

I think this gnani is very clever, sometimes too clever for his own good.He manages to create interest about him very easily.He is not a cinema star,he is not a politician,but every other week somebody is discussing and talking about him.
I can't make out him,most of the times he comes out as a person who is very progressive ,liberal minded and a humanitarian.However I am not so sure whether he is a genuine person.does he actually mean what he says?

அர டிக்கெட்டு ! said...

//does he actually mean what he says?//

of course not, he is just a pseudo intellectual who has compromised his values for a value!!!!!

கோவி.கண்ணன் said...

அதிஷா வடகலை ஐயங்கார்,

பயந்து கொண்டே படித்தேன். நிகழ்ச்சியை தெளிவாக எழுதி இருக்கிறீர்கள், ஞானிக்கும் உங்களுக்கும் பாராட்டுகள் !

Sanjai Gandhi said...

//கூட்டத்தில் பெரும்பாலான கேள்விகளை டோண்டு ஒருவரே கேட்டதால் பலருக்கும் கேள்வி கேட்க நேரமில்லாமல் போனது . டோண்டு அடுத்த முறையாவது அளவான கேள்விகள் கேட்டால் நன்றாக இருக்கும் . மற்ற பார்வையாளர்களுக்கும் வாய்ப்பளிக்கலாம் இல்லையா //
ஹிஹி.. நீங்க சுப்பைய்யா வாத்தியார் கலந்துகிட்ட கூட்டங்கள்ல கலந்துகிட்டதில்லையே.. ஹைய்யோ.. ஹய்யோ.. டோண்டு உங்களுக்கு தெய்வமா தெரிஞ்சிருப்பார்.. :)))

Anonymous said...

call me stupid,
but what is the reason for bringing caste name.I mean somebody called you vadakalai Iyenkar.
I have a suspicion you all want to keep the caste system alive and well as long as possible.you people just have this progressive mask and pretension,but underneath you are all supporters of the inhumane csate system.

வால்பையன் said...

//கூட்டத்தில் பெரும்பாலான கேள்விகளை டோண்டு ஒருவரே கேட்டதால் பலருக்கும் கேள்வி கேட்க நேரமில்லாமல் போனது . டோண்டு அடுத்த முறையாவது அளவான கேள்விகள் கேட்டால் நன்றாக இருக்கும் .//


ப்ளாக்கில் பதில் சொல்லி சொல்லி அலுத்து விட்டதால் அங்கே கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார் போல

வால்பையன் said...

யார் யார் அறிவுபூர்வமான!? கேள்விகள் கேட்டது என்று லிஸ்ட் இருக்கா?

தமிழன்-கறுப்பி... said...

நன்றி...

அர டிக்கெட்டு ! said...

பிரதர்..எப்படி இந்த பதிவு தமிழ்மணத்துல இரண்டாவது டைம் வந்திச்சு. பிளீஸ் டெல் மீ...